Color Says Your Love Nature: காதலை சொல்லும் `கலர்’

`கலர் சைக்காலஜி`, இப்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலம். பல்வேறு நிறங்களை பெண் அல்லது ஆணிடம் காட்டி, `அவைகளில் எந்த நிறம் பிடிக்கிறது?` என்று கேட்கிறார்கள். அவர் தனது விருப்பமான நிறத்தை சொன்னதும், அவருடைய காதல் மற்றும் தாம்பத்ய ஆர்வத்தை அதிரடியாகக் கூறி அசத்துகிறார்கள்.



உங்களுக்கு எந்த நிறம் பிடிக்கும், அதற்கேற்றபடி உங்கள் காதல் உணர்வு எப்படி இருக்கும் இங்கே பாருங்கள்.

சிவப்பு:

இவர்கள் காதல் உணர்வில் புலி. கற்பனையில் நினைப்பதை எல்லாம் காதலில் நிறைவேற்ற துடிப்பார்கள். இவர்கள் ஆசைப்பட்ட பெண்ணை (அல்லது ஆணை) அடையாமல் விடமாட்டார்கள். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும்.

மஞ்சள்:

இவர்களது காதல் ஆசைகள் அளவுக்கு மீறியதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. சில நேரங்களில் `இப்படியுமா ஆசைப்படுவீர்கள் சே..` என்று சொல்லும்படி ஆகிவிடும். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப் பார்கள். அதனால் இந்த நிற மனிதர்களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். ஆனால் இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்துவிட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள்.

பிங்க்:

கணக்கற்ற காதல் கனவுகள் கொண்டவர்களாக இருப்பார்கள். தினமும் இரண்டு மூன்று பேரையாவது காதல் பார்வை பார்த்து ரசிப்பார்கள். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக் கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள். இவர்களை அவ்வளவு எளிதாக நம்பிவிடக்கூடாது. ஏன்என்றால் கொள்கை, கோட்பாடு, நம்பிக்கை இவர்களிடம் குறைவாக இருக்கும். பிங்க் நிறத்தை விரும்பும் பெண்கள் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆண்களை எளிதில் நம்பி ஏமாந்துவிடமாட்டார்கள்.

பர்பிள்:

சுயநலவாதிகள். காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடுவார்கள். அதனால் இவர்கள் எளிதாக காதல் வலையில் விழமாட்டார்கள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனி யாகப் பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் `டன்` கணக்கில் கொட்டுவார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோகும் பெண், `அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது` என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும்.



ஆரஞ்ச்:

காதல் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. அதற்கு போய் யாராவது நேரத்தை செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். கடவுள் நம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருப்பதால், யாராவது காதல் தூதுவிட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள்.

கறுப்பு:

இவர்கள் இறுக்கமான மனிதர்களாக இருப்பார்கள். மனம்விட்டுப்பேச மாட்டார்கள். அதனால் இவர் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. அதை தீர்க்க சரியான மருந்து தாம்பத்ய உறவு கொள்வதுதான் என்று நம்புவதால் விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது.

பச்சை:

பச்சையை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வு அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டிவிடுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள்.

நீலம்:

இந்த நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிக மிருக்கும். பெண் என்றால் நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். `தாம்பத்ய' விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும்.

வெள்ளை:

இதனை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். `காதலாவது கத்தரிக்காயாவது..' என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf