FDI, Retails and Anna Hazare: இந்தியா மீண்டும் அடிமைநாடாக மாறவிடலாமா? : அன்னா ஹசாரே

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு முறை அமல்படுத்தப்படும் பட்சத்தில், இந்தியா மீண்டும் அடிமைநாடாக மாறும் வாய்ப்பு உள்ளதாக காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் ரா‌லேகான் சித்தியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது, இந்த முறையின் மூலம், நாடு மீண்டும் அந்நிய சக்திகளிடம் அ‌டிமையாகும் நிலை வருமே தவிர, நாட்டின் வளர்ச்சிக்கு ஒருபோதும் இம்முறை வழிவகுக்காது. விவசாயிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டமாக இந்த திட்டம் அமையும் என்று மத்திய அரசு கூறுவது நகைப்புக்குரியதாக உள்ளது.

இம்முறையை ஆதரிக்கும் கட்சிகள் மற்றும் ஆட்சியாளர்கள், 150 ஆண்டுகளாக அடிமையில் திளைத்த இந்திய நாடு, மீண்டும் அடிமைநாடாக மாற விரும்புகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏற்கனவே, இங்கு செயல்பட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் குடிநீர் ஆதாரம் மற்றும் சுற்றுப்புற சூழ்நிலைகளை பாழ்படுத்திவிட்டன. இதனால், நாட்டின் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சியை காரணம் காட்டி, அந்நிய முதலீட்டை சில்லரை வணிகத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது. முதலில், இங்குள்ள மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்திய பின், நாட்டின் வளர்ச்சி குறித்து மத்திய அரசு கவலைப்படட்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையிலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்வை தடுத்து நிறுத்தாத மத்திய அரசு, சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்‌டை அனுமதிப்பதன் மூலம், விவசாயிகள் வளமான வாழ்வை பெறுவார்கள் என்று எண்ணுவது மற்றும் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf