Kerry Challenges Snowden: அமெரிக்க 'நீதியை' எதிர்கொள்ள ஸ்னோடனுக்கு கெர்ரி சவால்


Edward Snowden
Edward Snowden
எட்வர்ட் ஸ்னோடன் அமெரிக்காவின் என்.பி.சி தொலைக்காட்சி சேனலுக்குக் கொடுத்த பேட்டியில், தன்னை ரஷ்யாவுக்கு தப்பியோடி புகலிடம் தேட வைத்தது அமெரிக்க அரசுதான் என்று கூறியிருந்ததை அடுத்து கெர்ரியின் இந்தக் கருத்துக்கள் வருகின்றன. 

Kerry Challenges Snowden to face the American Judges.

அமெரிக்க உளவுத் தகவல்களை ஊடகங்களுக்குக் கசியவிட்ட, எட்வர்ட் ஸ்னோடன், நீதியின் பிடியிலிருந்து தப்பியோடுபவர் என்று வர்ணித்த அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, அவர் துணிந்து நாடு திரும்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


தொடர்புடைய விடயங்கள் உளவுத் துறை உளவுத் துறை பகுப்பாய்வாளராக இருந்த ஸ்னோடன் கடந்த ஆண்டு பல உளவுத் தகவல்களை வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் பத்திரிகைகளுக்குக் கசியவிட்டு அமெரிக்காவுக்கு சங்கடத்தை உருவாக்கினார்.

இந்த ஆவணங்கள் மூலம், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சி, உலகத் தலைவர்கள் பலரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டது தெரியவந்தது. என்.பி.சிக்கு அளித்த பேட்டியில், ஸ்னோடன், தான் ஒரு பயிற்சி பெற்ற உளவாளிதான்,அமெரிக்கா கூறுவது போல கீழ் மட்டத்தில் பணிபுரியும் ஒரு பகுப்பாய்வாளர் அல்ல என்று கூறியிருந்தார்.

அமெரிக்காவின் சி.ஐ.ஏவுக்கும் தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்கும், வேறு அடையாளத்துடன் வெளிநாடுகளில் தான் பணி புரிந்ததாகவும் அவர் கூறினார். 'தேசபக்தன் நாட்டை விட்டு ஓடுவதா? -கெர்ரி எட்வர்ட் ஸ்னோடன் "குழம்பிப் போயிருக்கிறார்" என்று கூறிய ஜான் கெர்ரி, அவர் அமெரிக்காவுக்கு பெரிய சேதத்தை விளைவித்திருக்கிறார் என்றார்.

" ஒரு தேச பக்தன் நாட்டைவிட்டு ஓடக்கூடாது" என்ற ஜான் கெர்ரி, ஸ்னோடன் அமெரிக்காவுக்கு திரும்ப விரும்பினால், அடுத்த விமானத்தில் இன்றே நாம் அவரை கொண்டு வருவோம் என்றார்.

ஸ்னோடன் அமெரிக்காவை நம்புபவராக இருந்தால், அவர் அமெரிக்க நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஜான் கெர்ரி கூறினார்.

ஸ்னோடன் கடந்த ஆண்டு வெளியிட்ட தகவல்களை அடுத்து , அமெரிக்க உளவு நிறுவனங்கள் தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் முறை பற்றி பொதுத் தளத்தில் பெரும் விவாதம் ஒன்று நடந்தது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நீதிமன்றங்களின் அனுமதி இல்லாமல் தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் குறித்த ஆவணங்களை உளவு நிறுவனங்கள் பெறத் தடை விதிக்க, அமெரிக்க நாடாளுமன்றத்தைக் கோரினார்.

இதையடுத்து அமெரிக்க பிரதிநிதிகள் அவை, கடந்த வாரம், இது போன்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி அதை செனட் அவைக்கு அனுப்பியிருக்கிறது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf