பாடலாசிரியரின் அனுமதி பெற வேண்டும்

சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்த் திரைப்படங்க ளுக்கு தமிழில் பெயர் வைப்பதற்கு நமது திரைத் துரையினர் திக்கு முக்காடி வேறு வழியின்றி ஆங்கிலத்தில் பெயர்களைத் தலைப்புக்களாக வைத்த‍னர். 

தமிழில் பெயர் இருக்கும் தமிழ்த்தி ரைப்படங்களுக்கு தமிழக அரசு விதிக்கும் கேளிக்கை வரியி னை ரத்து செய்வ தாக கடந்த ஆட்சியில் கருணாநிதி அவர்கள் ஆணையிட்டார். பிறகு பார்த்தால், எங்கிருந்துதான் தமிழில் பெயர் கள் கிடைக்குமோ தெரியவில்லை. 

அந்தளவிறக்கு தமிழில் திரைப்படங்களுக்கு பெயர் வைத்து வெளி யிட்டு வருகிறார்கள்.
இதில் திரைப்படங்களுக்கு பெயர் வைக்கும், பழைய அல்ல‍து புதிய திரைப்பாடல் ஒன்றின் பல்ல‍வியை அதாவது முதல் வரியினையே அப்ப‍டியே வைத்து விடுகிறார்கள். இது இன்று நேற்ற‍ல்ல‍ பல ஆண்டுக ளாக நடைபெற்றுவருகிறது. 

ஒரு பாடலுக்கு பல்ல‍ வி அமைக்கும் போது அப்பாடலாசிரியர் எவ்வ‍ளவு சிரமத்திற்கு இடையில் அதாவது இசையமைப்பாளரது மெட்டோ டுபொருந்தவேண்டும். அதுமட்டுமா எதுகை மோனை போன்ற வை வர வேண்டும். 

மேலும் பாடல்வரி அத் திரைப்படத்தில் வரும் கதாநாயகன் அல்ல‍து கதாநாயகிக்கு ஏற்றார்போல் இருக்க‍ வேண்டும்.இவை அத்த‍னையு ம் ஒரு சேர வரும்போது இயக்குநருக் கு திருப்தி இருக்காது அதனால் இயக் குரையும் திருப்தி படுத்த அவருக்கு ஏற்றார்போல் சில வார்த்தைகளை அமைக்க‍ வேண்டும்.



ஆக இத்த‍னை சிரமங்களு க்கு இடையே ஒரு பாடல் உருவாகி வருகிறது.ஆனால், பலர் தமிழ்த்திரைப்படங்களுக் கு நோகாமல் ஏதேனும் ஒரு பாடலில் வரும் பல்லவியின் முதல் வரியினை எடு த்து வைத்து இதுதான் இந்த திரைப்படத் திற்கு ஏற்ற‍ தலைப்பு என்று வைத்து, அந்த பெ யரிலேயே திரைப்படத்தின் படப்பிடிப் பை முடித்து, திரைப்படத்தையும் வெளியி டுகிறார்கள்.

திரைப்படத்திற்கு பாடலின் முதல் வரியி னை பெயராக வைப்ப‍து தவறு என்று நான் சொல்ல‍வில் லை. எத்த‍னையோ சிரமங்களுக்கு மத்தியில் ஒரு பாடலாசிரிய ர், தனது கற்பனைக்குதிரைத் தட்டிவிட்டு எழுதிய அந்த முதல் வரியினை அப்பாடல் ஆசிரியரின் அனுமதி பெறாமல் திரைப்படங்களுக்கு அப்பாடலின் முத ல் வரியினை வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்றே எனக்கு தெரியவில்லை.

இனியாவது, ஒரு திரைப்படத்திற்கு ஒ ரு பாடலின் முதல் வரியினை வைப்ப‍ தாக இருந்தால் அந்த பாடல் ஆசிரியரி ன் அனுமதி பெற்ற‍ பின்பே திரைப்படங் களுக்குபெயர் வைக்க‍வேண்டும். ஒரு வேளை அந்த பாடல் ஆசிரியர் இறந்து போனாலோ அவரது மனைவியோ அல் ல‍து மகன் அல்ல‍து மகளிடமோ அனுமதி பெற வேண்டும்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf