Narendira Modi's 10 Commandments: நரேந்திரமோடி அறிவித்துள்ள 10 முக்கிய திட்டங்கள்

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில், முக்கியமான 10 திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பின், இது குறித்து அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என டில்லி தகவல்கள் கூறுகின்றன. பிரதமராக பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே நரேந்திரமோடி பரபரப்பாக செயலாற்ற துவங்கிவிட்டார்.

தனது தேர்தல் பிரசாரத்தின் போது, நாட்டு மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தாரோ, அதை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

முதற்கட்டமாக, தனது செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அமைச்சரவையை அமைத்துள்ளார். அடுத்ததாக, தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டிற்கு மிக முக்கிய தேவையான திட்டங்களை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

நரேந்திரமோடி அறிவித்துள்ள 10 முக்கிய திட்டங்கள்

1. அதிகாரத்துவத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துதல்

 2. புதுமையான யோசனைகளை வரவேற்பதுடன், அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்ற அதிகாரம் அளித்தல்.

3. கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் மற்றும் சாலைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை.

4. அரசின் இணைய ஏலத்தில் வெளிப்படை தன்மையை ஊக்குவித்தல்.

5. அமைச்சகங்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை களைய புதிய அமைப்பு.

6. அரசு நிர்வாகத்தில், மக்கள் தொடர்பான விஷயங்களுக்கு தனி அமைப்பு.

7. பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை.

8. உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் சீரமைக்க நடவடிக்கை.

9. சரியான கால இடைவெளியில் கொள்கைகளை அமல்படுத்த நடவடிக்கை. 

10. அரசு கொள்கைகள், நிலைத்தன்மை மற்றும் நிலைநிறுத்தும் திறன் கொண்டதாக இருக்க ஏற்பாடு.

இந்த 10 கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என, தனது அமைச்சரவை சகாக்களை நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமரின் முதன்மை செயலாளர் நிரிபேந்திர மிஸ்ரா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 'புதிய பிரதமரின் தலைமையில், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் பொருட்டு. புதிய பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன,' என்றார்.

Thanks to Dinamalar and you can read more about நரேந்திரமோடி அறிவித்துள்ள 10 முக்கிய திட்டங்கள் at http://www.dinamalar.com/news_detail.asp?id=986331

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf