அழகு விஷயத்திலும் அசட்டுத்தனமான நம்பிக்கை

காஸ்ட்லியான அழகுசாதனங்கள் மட்டுமே அழகை மேம்படுத்தும்? தவறு.



வெளிப்புறப் பூச்சுகளால் வருகிற அழகு ஒரு அளவுக்கு மட்டும்தான் உதவும். உண்மையான அழகு என்பது உள்ளே போகிற உணவைப் பொறுத்து அமைவது. அதனால் அழகுசாதனங்களுக்கு செலவழிக்கிற பணத்தை காய்கறிகள், பழங்களுக்குக் கொடுத்தால் நாளுக்கு நாள் உங்கள் அழகு கூடும். பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு என எல்லா நிறக் காய்கறிகளும் பழங்களும் உங்கள் உணவில் இருக்கட்டும். வீட்டினுள் இருக்கும் போதும், காருக்குள் செல்லும் போதும்,

மேகமூட்டமான நாட்களிலும் சருமத்துக்கு சன் ஸ்கிரீன் தேவையில்லை? தவறு.

வீட்டுக்குள் இருந்தாலும், பூட்டிய அறைக்குள் இருந்தாலும், சன் ஸ்கிரீன் அவசியம்தான். அதே போல சருமத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சூரியனின் யுவி கதிர்கள், மேகமூட்டமான நாட்களிலும் தீவிரமாகவே இருக்கும். அந்த நாட்களில் அவை சருமத்தினுள் இன்னும் வேகமாக ஊடுருவக் கூடியவை. அதனால்தான் ஏசி அறையிலேயே உட்கார்ந்திருப்பவர்களுக்குக் கூட சருமம் கருத்துப் போவதைப் பார்க்கிறோம். ஒரு விஷயம் தெரியுமா? ஏர் ஹோஸ்டஸ் வேலையிலிருப்பவர்கள் யுவி பாதுகாப்புள்ள கிரீமை உபயோகிப்பது அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. உயரத்தில் செல்லச் செல்ல, அந்தக் குளிருக்கும் காற்றுக்கும் சருமம் சுலபமாக பாதிக்கப்பட்டுவிடும்.

பலமுறை சோப் உபயோகித்து முகம் கழுவினால் பருக்களே வராது?

பலமுறை முகம் கழுவுவது நல்லதுதான். ஆனால், சோப் உபயோகித்துக் கழுவினால் சருமத்திலுள்ள இயற்கையான எண்ணெய் பசையானது நீங்கி, சருமம் வறண்டு விடுமே தவிர, பருவை விரட்டாது. காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் சோப் உபயோகித்து முகம் கழுவலாம். மற்ற நேரங்களில் சுத்தமான தண்ணீரில் வெறுமனே கழுவினால் போதும். தவிர்க்க முடியாத நேரங்களில் சோப் ஃப்ரீ ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவலாம்.

தொடர்ந்து நெயில் பாலீஷ் உபயோகித்தால் நகங்கள் மஞ்சளாக மாறும். நகங்களின் ஆரோக்கியம் கெட்டுப் போகும்?

நகங்கள் மஞ்சளாக மாறக் காரணம், சரியான பராமரிப்பின்மை. தரமற்ற நெயில் பாலீஷ் உபயோகித்தாலும் நகங்கள் அப்படி மாறலாம். நெயில் பாலீஷ் பிரியைகள் அவ்வப்போது ஒரு சில நாட்களுக்கு நெயில் பாலீஷ் தடவாமல் நகங்களை அப்படியே விடுவது நல்லதுதான். ஒவ்வொரு முறை நெயில் பாலீஷ் மாற்றும் போதும், நகங்களில் உள்ள பழைய நெயில் பாலீஷை சுத்தம் செய்து விட்டு, முதலில் நகங்களில் பேஸ் கோட் தடவி விட்டு, அதன் மேல் விருப்பமான கலர்களில் நெயில் பாலீஷ் தடவிக் கொள்ளலாம்.

சாக்லெட்டும் கேக்கும் சாப்பிட்டால் பரு வரும்?

சாக்லெட், கேக் போன்ற உணவுகளுக்கும் பருக்களுக்கும் நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. தினசரி 3 லிட்டர் தண்ணீர், நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுகிறவர்களுக்கு சருமம் ஆரோக்கியமாக இருக்கும். எந்த உணவையுமே அளவோடு எடுத்துக் கொள்வதுதானே சிறந்தது? அந்த வகையில் சாக்லெட், கேக் போன்றவற்றையும் அளவோடு உண்பதில் பிரச்னையில்லை.

கூந்தலை அடிக்கடி வெட்டி விட்டால் சீக்கிரமே வளரும்?

வெட்ட வெட்ட வளர்வதற்கு அதென்ன செடியா, மரமா? எல்லோருடைய கூந்தலிலும் வெடித்த நுனிகள் இருக்கும். அவற்றை அவ்வப்போது ட்ரிம் செய்து விடாவிட்டால் கூந்தல் பிளவுபட்டு, அந்த வெடிப்பு கூந்தலின் மேல் பகுதி வரை போகும். ஒரு கட்டத்தில் கூந்தல் பலமிழந்து, உடைந்து உதிரும். இதைத் தவிர்ப்பதற்காகவே அடிக்கடி கூந்தல் நுனிகளை ட்ரிம் செய்து விட வேண்டும். கூந்தல் நுனிகள் ஆரோக்கியமாக இருந்தாலே வளர்ச்சியும் நன்றாக இருக்கும். கண்டிஷனர் கலந்த ஷாம்புவே எப்போதும் கூந்தலுக்குச் சிறந்தது? ஷாம்புவும் கண்டிஷனரும் வேறு வேறு. ஷாம்பு என்பது கூந்தலை சுத்தம் செய்வது. கண்டிஷனர் என்பது கூந்தலை மென்மையாக்குவது. கூந்தலின் மேல்பரப்புக்குப் பாதுகாப்பைத் தருவது. கண்டிஷனர் கலந்த ஷாம்பு என்கிற விளம்பரத்துடன் வரும் தயாரிப்புகளைவிட, இரண்டையும் தனித் தனியே உபயோகிப்பதுதான் சிறந்தது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf