Romance ragasiyangal: Start loving oh people of the world - ரொமான்ஸ் ரகசியங்கள்: காதல் செய்வீர் உலகத்தீரே

Romance ragasiyangal: Start loving oh people of the world - ரொமான்ஸ் ரகசியங்கள்: காதல் செய்வீர் உலகத்தீரே

பருவங்களில் இனிமையானது வசந்தகாலம் என்பார்கள். மனிதனுடைய வாழ்க்கையையும் பருவங்களாகப் பிரித்தால், அதில் வசந்தகாலம் என்பதும் ஒரு பகுதியாக இருக்கும். அதுதான் காதல் செய்யும் பருவம்.

வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி சிறகசைப்பது, உலகமே சங்கீதமயமாக ஒலிப்பது, நகரம் மழையில் நனைந்து அழகாகப் பூத்திருப்பது, மன வானில் பறப்பது... இதெல்லாம் காதல் செய்யும் பருவத்தில் தோன்றும் கவித்துவமான எண்ணங்கள்.

காதல்... எப்போது, எதனால் ஏற்படுகிறது என்பதற்குத் தீர்மானமான வரையறைகள் இல்லை. கண்ணும் கண்ணும் நோக்கும்போதும், வார்த்தைகளால் கலந்து உரையாடும்போதும், நண்பர்களாகப் பழகும்போதும்... காதல் எப்போது வேண்டுமானாலும் பூக்கலாம்.

நிறைய ஜோடிகளிடம், 'உங்களுக்குக் காதல் மலர்ந்த கதையைச் சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்கிறேன். உறையூரைச் சேர்ந்த சந்திரசேகரின் அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது.

அவர் கல்லூரியில் படிக்கும்போது கூடப் படிக்கும் விமலாவைக் காதலித்திருக்கிறார். அந்தப் பெண் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சந்துருவுக்குத் தூது போனது, விமலாவின் தோழி அருணா. அவர், காதல் கடிதத்தை விமலாவிடம் கொடுக்க, ''அந்த ஆளுக்கு ஏற்கெனவே இதயம் வீக் (சந்துரு சிறு வயதில் இருந்தே ஹார்ட் பேஷன்ட்).

அவரை லவ் பண்ண எனக்கு என்ன பைத்தியமா? அவரை முதல்ல ஒழுங்கா ட்ரீட்மென்ட் எடுக்கச் சொல்லு'' என்று கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டாள். இதை அருணா சந்துருவிடம் சொல்ல, மனமுடைந்தவன் விஷம் குடித்துவிட்டான்.

நண்பர்கள் பதறிப்போய் ஆஸ்பத்திரியில் சேர்க்க, கூடவே இருந்து கவனித்துக் கொண்டாள் அருணா. அவனுக்காகக் கடவுளிடம் மனமுருகி பிரார்த்தித்தாள். மருந்து, உணவுகளை வேளாவேளைக்குக் கொடுத்து தாயுணர்வுடன் கவனித்துக் கொண்டாள்.

''உன்னுடைய தீவிரமான காதலை விமலா புரிந்து கொள்ளவில்லையே...'' என்று அவனிடம் அழுதாள். அப்போதுதான் சந்துருவிடம் அந்த மாற்றம் நிகழ்ந்தது. தனக்குக் கிடைக்காத ஒரு பெண்ணுக் காக ஏங்கி வாழ்க்கையையே வீண் செய்வது என்னவொரு முட்டாள்தனம் என்று தோன்றியது. அருகேயே இருக்கும் அருணாவின் கவனிப்பு அவனுக்கு ஒரு புது உலகத்தைக் காட்டியது. இவளைப் போன்ற பெண்ணைக் கவனிக்காமல் போனோமே என்று மனம் வருந்தியவன், சற்றும் தாமதிக்காமல், ''நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?'' என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.

Romance ragasiyangal: Start loving oh people of the world - ரொமான்ஸ் ரகசியங்கள்: காதல் செய்வீர் உலகத்தீரே

சந்துருவின் காதல் உள்ளத்தைப் பற்றி நன்கு அறிந்த அருணாவுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ''என்னைக் கடைசி வரை விட்டுப் பிரியாமல் காப்பாற்றினால்... உங்களை மணம் புரியத் தயார்’' என்றாள் அவள். இருவரின் வாழ்க்கையிலும் வசந்தகாலம் எனும் பருவம் தென்றலாக வீச ஆரம்பித்தது.


விரைவில் குணமடைந்த சந்துருவுக்கு வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்பட, நன்றாகப் படித்து ஒரு வேலையில் சேர்ந்தான். அருணாவும் ஆசிரியை பணியில் சேர்ந்தாள். இருவரும் திருமணம் செய்தார்கள். மணியான இரு குழந்தைகளோடு... இன்று மிக நல்ல நிலைமையில் காதல் சற்றும் குறையாமல் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

காதல் என்பது யார் மீதும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வரலாம். அந்தக் காதலின் உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்வதும், அதை அழகாகப் பயன்படுத்திக் கொள்வதும்தான் அடிப்படையான 'ரொமான்ஸ் ரகசியம்' என்பதற்கு, சந்துரு - அருணா... ஓர் அழகு உதாரணம்!


தியாகம், வீரம், சோகம், உருக்கம், சந்தோஷம், தன்னம்பிக்கை, அன்பு, காமம் எல்லாம் நிறைந்த அற்புதம்தான் காதல். அதனால்தான் பாரதி உணர்ச்சி மிகுதியுற்று இப்படிப் பாடிக் கூத்தாடினான்....

காதலினால் மானுடர்க்கு கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்
காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம்,
கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்;
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

Join in our mailing list for more articles like this Romance ragasiyangal: Start loving oh people of the world - ரொமான்ஸ் ரகசியங்கள்: காதல் செய்வீர் உலகத்தீரே.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf