Puliyodharai recipe Business: உடனடி புளியோதரை மிக்ஸ்!
இந்த அவசர யுகத்தில் அன்றாட உணவுகளும் தப்பவில்லை. காலையில் வேலைக்குக் கிளம்பும் அவசரத்தில் சிலர் காலை உணவையே தவிர்த்துவிடுகிறார்கள்.
இன்னும் சிலர் அதிகம் செலவழித்து ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள். இதுமாதிரியான வர்களின் அவசர தேவைகளுக்காக உடனடி சப்பாத்தி, இடியாப்பம் மற்றும் பொடிவகைகள் வந்துவிட்டன.
என்றாலும், பிடித்தமான குழம்பு மற்றும் தொக்கு வகைகள் இருந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான் பலரது ஏக்கமாக இருக்கிறது.
இந்தத் தொழில்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதில் பெரிய, பெரிய நிறுவனங்கள் ஆர்வமாக இருந்தாலும், தரமாகவும், சுவையாகவும் தந்தால் சிறிய நிறுவனங்களாலும் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
புளிக்குழம்பு, தொக்கு வகைகள், புளிசாத மிக்ஸ், லெமன்சாத மிக்ஸ் போன்றவை சில மாத காலத்துக்கு கெட்டுப்போகாத வகையில் தயாரிக்க முடியும்.
தவிர, இதுபோன்ற உடனடி மிக்ஸ் வகைகள் மக்களிடத்தில் நல்ல வரவேற்பையும் பெற்றுவருவதால், இந்த தொழிலில் கவனம் செலுத்தலாம்.
puliyodharai recipe Business: உடனடி புளியோதரை மிக்ஸ்!
புளியோதரை மிக்ஸ் தயாரிப்பு முறை!
புளி, மிளகாய், வெந்தய பொடி, கடலை பருப்பு, நல்லெண்ணெய் மற்றும் உப்பு இவைகளை தரமானதாக கொள்முதல் செய்ய வேண்டும். புளியை தண்ணீர்விட்டு கரைத்து சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தப் புளிக்கரைசலுடன் தேவையான அளவில் தாளிப்பு பொருட்களைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இதை ஆறவிட்டு காற்று புகாத பாட்டில்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான்.
ஒரு கிலோ புளித்தொக்கு செய்ய 350 கிராம் புளி, 250 கிராம் நல்லெண்ணெய் தேவைப்படும். கடுகு, வெந்தயப்பொடி, மிளகாய், கடலைப்பருப்பு போன்றவை தேவைக்கு ஏற்ப 30 கிராம் முதல் 100 கிராம் வரை தேவைப்படும்.
இயந்திரம்!
புளிக்கரைசல் இயந்திரம், கலவை இயந்திரம், பேக்கிங் இயந்திரம், எடை போடும் இயந்திரம், சீலிங் இயந்திரம். இந்த இயந்திரங்களை ரூ.10 லட்சத்துக்குள் வாங்கிவிடலாம். மின் இணைப்பு மற்றும் இதர உபகரணங்கள் ரூ.2 லட்சம் தேவை. ஆக மொத்தம் ரூ.12 லட்சம் தேவைப்படும்.
முதலீடு in puliyodharai recipe Business: உடனடி புளியோதரை மிக்ஸ்!
நமது பங்கு (5%) : ரூ.60,000
மானியம் (25%) : ரூ.3,00,000
வங்கிக் கடன் (70%) : ரூ.8,40,000
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் அல்லது நீட்ஸ் திட்டத்தின் கீழ் மானியம் மற்றும் வங்கிக் கடன் கிடைக்கும்.
மூலப்பொருள்!
ஒரு கிலோ புளித்தொக்கு உற்பத்தி செய்ய 350 கிராம் புளி தேவை. நாம் தினசரி 1,000 கிலோ வரை உற்பத்தி செய்யலாம். என்றாலும், சராசரியாக 500 கிலோ என கணக்கு வைத்துக்கொள்வோம்.
இதற்கு 175 கிலோ புளி தேவை. தவிர, 125 கிலோ நல்லெண்ணெய்யும், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் மிளகாய்த் தூள், கடலைப்பருப்பு என இதர பொருட்கள் 50 கிலோ தேவை.
ஒரு கிலோ புளி ரூ.50 முதல் 80 வரை சந்தையில் கிடைக்கிறது. தரமான, அதிக புளிப்பு தன்மையுடைய புளியை வாங்க வேண்டும். விலை சராசரியாக ரூ.70 என வைத்துக்கொள்வோம்.
இதற்கு ஆகும் செலவு ரூ.12,250. தரமான நல்லெண்ணெய் ரூ.240 – ரூ.280 வரை கிடைக்கிறது. நாம் ரூ.250 என வைத்துக் கொள்வோம். நமக்கு 125 கிலோ நல்லெண்ணெய் தேவைப்படும். இதற்கு ரூ.31,250 தேவைப்படும்.
இதர பொருட்கள் சந்தை விலைக்கு ஏற்ப ரூ.10,000 என கணக்கு வைத்துக் கொள்ளலாம். மூலப்பொருட்கள் மொத்த செலவு ரூ.53,500. மாதம் 25 வேலை நாட்கள் எனில் மூலப்பொருட்களுக்கன மொத்த செலவு: ரூ.13,37,500.
பேக்கிங்!
உற்பத்திக்குப்பின் பாட்டில்களில் அடைத்து, அதை அட்டை பெட்டிகளில் அடுக்கிதான் விற்பனைக்கு அனுப்ப முடியும். 200 கிராம் கொள்ளளவு கொண்ட பாட்டில் 20 பாட்டில்களாக அடைத்து விற்பனைக்கு அனுப்பலாம். இதன்படி, ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வீதம் பேக்கிங் செலவு ஆகும். நமது ஒரு நாள் உற்பத்தி 500 கிலோ எனில் 2,500 பாட்டில்கள் தேவைப்படும். இதற்கான மாதாந்திர செலவு ரூ.6,25,000.
பணியாளர்கள்: (ரூ)
மேற்பார்வையாளர் 1 : 10,000
திறன் பணியாளர்கள் 4X8000: 32,000
உதவியாளர்கள்: 4X6000 : 24,000
பேக்கிங் பணியாளர்கள் 2X6000: 12,000
மொத்தம் : 78,000
நிர்வாகச் செலவுகள் (ரூ.)
வாடகை: 10,000
மின்சாரம் : 10,000
அலுவலக நிர்வாகம் : 10,000
இயந்திரப் பராமரிப்பு : 10,000
ஏற்று இறக்கு போக்குவரத்து கூலி : 20,000
இதர செலவுகள் : 10,000
வர்த்தக சலுகைகள் : 50,000
மொத்தம் : 1,20,000
நடைமுறை மூலதன செலவுகள்: (ரூ.)
மூலப்பொருட்கள் : 13,37,500
பேக்கிங் : 6,25,000
சம்பளம் : 78,000
நிர்வாகச் செலவுகள் : 1,20,000
மொத்தம் : 21,60,500
நடைமுறை மூலதனத்துக்கு தனியாக கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
விற்பனை வரவு:
உற்பத்திக்குபின் 200 கிராம் பாட்டில் விலை ரூ.40 என விற்பனை செய்யலாம். (இதன் அதிகபட்ச விற்பனை விலை ரூ.45 வரை விற்பனை செய்ய முடியும்.) இதன்படி தயாரிப்புக்குப்பின் ஒரு கிலோ புளியோதரை மிக்ஸின் விலை ரூ.200. நமது ஒருநாள் உற்பத்தி 500 கிலோ என்கிறபோது, நமது தினசரி வரவு ரூ.1,00,000-ஆக இருக்கும். நமது மொத்த உற்பத்தி 12,500 கிலோ. இதன்படி மொத்த விற்பனை வரவு ரூ.25,00,000-ஆக இருக்கும்.
கடன் திருப்பம் மற்றும் வட்டி (ரூ.)
மூலதன திருப்பம் (60 மாதங்கள்) : 14,000
மூலதன கடனுக்கான வட்டி (12.5%) : 8,750
நடைமுறை மூலதன கடனுக்கான வட்டி: 22,500
மொத்தம் : 45,250
மொத்த வரவு : 25,00,000
மொத்த செலவு : 21,60,500
கடன் திருப்பம் மற்றும் வட்டி : 45,250
லாபம் : 2,94,250
நன்றி- நாணயம் விகடன்
Subscribe to our mailing list for more self business and how to start a business articles like this puliyodharai recipe Business: உடனடி புளியோதரை மிக்ஸ்!.

![]() |
Puliyodharai recipe Business |

No comments :
Post a Comment