Business Websites in tamil: விற்பனைக்கு கைகொடுக்கும் வியாபார வலைதளம்

Business Websites in tamil: விற்பனைக்கு கைகொடுக்கும் வியாபார வலைதளம்

பிட் நோட்டீஸை விநியோகித்து பிசினஸை வளர்த்தது அந்தக் காலம். சிறு நிறுவனமாக இருந்தாலும் அதை வெப்சைட் (Website) மூலம், அதாவது வலைதளங்களின் மூலம் உலகம் முழுக்கக் கொண்டுசெல்வது இந்தக் காலம்.

வெப்சைட்டை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பிசினஸில் நல்ல லாபம் பார்க்க முடியும் என்கிற நிலையில், நாம் செய்துவரும் தொழிலுக்கான வெப்சைட்டை எப்படித் தொடங்குவது?

ஆரம்பித்தபிறகு அதை எப்படிக் கையாள்வது, வெப்சைட்களின் மூலம் வாடிக்கையாளர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்கிற கேள்விகளுக்கு விரிவான விளக்கம் தந்தார் பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் சமூக வலைதளங் களுக்கான பிரிவின் தலைவர் கே.எஸ்.ராஜசேகர்.

உங்களுக்கென ஒரு வெப்சைட்டை  உருவாக்கும்போது நம்பகமான டொமைன் பதிவாளர்களை அணுக வேண்டும்.

முதலில், வெப்சைட் ஹோஸ்டிங் (தங்களுக்குத் தேவையான வெப்சைட்டை டிசைன் செய்யும் முறை) செய்ய யாஹூ ஸ்மால் பிசினஸ், சென்னை ஆன்லைன் மற்றும் வேர்டுபிரஸ் ஹோஸ்டிங் வலைதளங்களை அணுகலாம்.

பாலமாகச் செயல்படுகின்றன!

''பிசினஸ் வெப்சைட்கள் வியாபாரத்துக்கும் வாடிக்கையாளர் களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுகின்றன.

தொழில் செய்துவருகிறவர்களில் பெரும்பாலானவர்கள் இதுகுறித்த தொழில்நுட்ப அறிவு தங்களுக்கு இல்லை என்பதால் இந்தப்பக்கமே வராமல் இருக்கிறார்கள்.

ஆனால், இன்றைய நிலையில், வெப்சைட் தொடங்குவதற்குப் பெரிய அளவில் டெக்னிக்கல் விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை.
சரியான தேர்வு முக்கியம்!

இந்த வலைதளங்களே டெக்னிக் சார்ந்த அத்தனை விஷயங்களையும் பார்த்துக்கொள்கின்றன. வெப் ஹோஸ்டிங் செய்ய ஒரு மாதத்துக்கு 250 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Business Websites in tamil: விற்பனைக்கு கைகொடுக்கும் வியாபார வலைதளம் வெப்சைட் வடிவமைப்பு செய்யும்முன்

எதற்காக இந்த வெப்சைட் வடிவமைக்கிறோம் (பொருட்களை விற்பதற்காகவா, புதிய வாடிக்கையாளர் களைக் கவர்வதற்காகவா, தொழிலை வளர்த்துக்கொள்வதற்காகவா) என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.

அவரவர்களின் தொழில் சார்ந்த மற்ற வெப்சைட்டைப் பார்த்து எது தேவை, எது தேவையில்லை என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அதன்பின்னர் நமக்கான வெப்சைட்டை  வடிவமைப்பது நல்லது.

வெப்சைட் வடிவமைப்பின்போது

வெப்சைட்டை வடிவமைக்கும் போது டொமைன் பெயரை (உதா: www.tamilnews.com) தேர்வு செய்வதுதான் மிக முக்கியம்.

இந்த டொமைன் பெயர் வாடிக்கையாளர்கள் எளிதில் நினைவில் வைத்திருக்கும்படி, தொழில் சார்ந்த வார்த்தையாக (மக்களிடம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை), ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டு வார்த்தைகள் என்றால் அவை இணைந்தே இருக்க வேண்டும். இரண்டுக்கும் இடையில் சிறப்புக் குறியீடுகளோ எண்களோ இடம்பெறக் கூடாது.

டொமைன் பெயரை தேர்வு செய்து பதிவு செய்ய ஆரம்பக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். டிமாண்ட் கொண்ட டொமைன் பெயர்களுக்கு ஏற்றபடி கட்டணங்கள் மாறுபடலாம்.

டொமைன் பதிவாளர்களைத் தேர்வு செய்யும்போது மிக எச்சரிக்கையுடன், நம்பகமான ஆட்களையே தேர்வு செய்யவேண்டும்.

வெப்சைட்களில் போடும் தகவல்கள் (தமிழ், ஆங்கிலம் எதுவாக இருந்தாலும்) தெளிவாக இருக்க வேண்டும்.

வெப்சைட் குறித்தும், அதனை நிர்வகிப்பவர் குறித்தும், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்த விவரம், சலுகை விவரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை குறித்த விவரம் போன்றவற்றை வலைதளங்களில் தரும்போது வாடிக்கையாளர்களிடமிருந்து முழுமையான நம்பிக்கையைப் பெற முடியும்.

வெப்சைட்களை வடிவமைக்கும் போது, அதிலேயே பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும்படியான 'பே கேட்வே’ (Pay gateway)  ஆப்ஷன் இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்வது அவசியம்.

இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன்களில் வெப்சைட்களைப் பார்க்கிறவர்கள் அதிகம் இருப்பதால், அதற்கேற்றமாதிரி தயார் செய்ய வேண்டும்.

வடிமைக்கும் வலைதளத்தை 5-10 ஆண்டுகள் வரையாவது பதிவு செய்யவேண்டும். இதற்குக் குறைவாகப் பதிவு செய்யும்பட்சத்தில் அந்த வெப்சைட்டின் மீது வாடிக்கையாளர் களும், ரேட்டிங் ஏஜென்சிகளும் நம்பிக்கை இழக்கலாம்.

வெப்சைட் வடிவமைத்தபிறகு..!

வெப்சைட்களை உருவாக்கியபிறகு அதை உடனே 'லோக்கல் லிஸ்ட்டிங் சர்வீஸ்’-க்கு (உதா: கூகுள் லோக்கல், யாஹூ லோக்கல், பிங்க் (Bing)) சென்று பதிவுசெய்ய வேண்டும். அதேபோல கிளாஸிஃபைடு சைட்களிலும் வெப்சைட் பெயர்களைப் பதிவு செய்வது அவசியம்.

லோக்கல் லிஸ்ட்டிங் மற்றும் கிளாஸிஃபைடு சைட்கள்தான் வாடிக்கையாளர்கள் தேடும்போது யார் வெப்சைட்களை லிஸ்ட் செய்திருக்கிறார்களோ, அதையே முதலில் காட்டும்.
புதுமையைத்தான் அனைவரும் விரும்புகின்றனர்.

அடிக்கடி புதிய தகவல்களைக் கொண்டு உங்கள் இணையதளத்தைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பது அவசியம்.  முழுமையாக மாற்றாமல், சிறு  மாற்றங்களைச் செய்தாலே போதும்.

வெப்சைட் உருவாக்கியபிறகு அதைக் கட்டாயம் விளம்பரப்படுத்தியே ஆக வேண்டும். உங்களது பிசினஸ் கார்டுகளில் (விசிட்டிங் கார்டு) அச்சிட்டுக்கொள்வதன் மூலம், வெப்சைட் பெயரில் இ-மெயில் ஐடி-ஐ உருவாக்கிக்கொள்வதன் மூலம், சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துவதன் மூலம் அதைச் சாத்தியப்படுத்தலாம்.

வாடிக்கையாளர் சேவை! Business Websites in tamil: விற்பனைக்கு கைகொடுக்கும் வியாபார வலைதளம்

வெப்சைட் வடிவமைக்கும்போது அதனுள் பிளாக்குகளை அமைத்து, தொழில் சார்ந்த பல தகவல்களை வாடிக்கையாளர்களுக்குத் தரலாம். இந்த பிளாக்குகள் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வாரி வழங்கவேண்டும். தகவல்களை எழுத்து வடிவில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்தும் போடலாம்.

வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள இ-மெயில் ஐடி-யை வெப்சைட்டில் குறிப்பிடச் சொல்லலாம். மெயில் ஐடியை தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதம் ஒருமுறை தங்களின் வெப்சைட்கள் குறித்தும், புதிய தகவல்களை மெயில் மூலமும் அனுப்பி அவர்களைக் கவரலாம்.

இப்போது வெப்சைட்டை பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெப்சைட் நிறுவனத்துடன் பேசும்படியான ஆப்ஷன்கள் வந்துவிட்டன. அந்த வெப்சைட்டில் 'கிளிக் தி கால்’ என்கிற ஆப்ஷன்கள் இருக்கும்பட்சத்தில் அப்போதே வெப்சைட் நிறுவனத்துடன் போனில் உரையாடி, சந்தேகங்களை நிவர்த்திச் செய்து கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளர்கள் காத்திருக்காமல், உடனுக்குடன் பதில் பெறமுடிகிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்!

வெப்சைட் பயனாளர் பெயர் (User Name), பாஸ்வேர்டு (Password)  போன்ற தகவல்களை ரகசியமாக வைத்திருத்தல் அவசியம். கூகுள் அனலடிக்ஸ் (google analytics)   என்ற ஃபைலை உருவாக்கும் வெப்சைட்டுக்குள் இன்ஸ்டால் செய்துவைத்துக் கொண்டால், அந்த வெப்சைட்டுக்கு வரும்

வாடிக்கையாளர் எங்கிருந்து வந்தார், எத்தனை மணிக்கு வெப்சைட்டை பார்வையிட்டார், எந்தப் பக்கத்தைப் பார்வையிட்டார் என்கிற தகவல்களைப் பெற முடியும்.

கூகுள் வெப்மாஸ்டரில்  (Webmaster)  தங்களின் வெப்சைட்டை பதிவு செய்து, பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளலாம்.

கவனிக்கவேண்டிய விஷயங்கள்!

ஒரு வெப்சைட்டின் முகப்புப் பக்கம் வழியாகவே பலரும் நுழைவார்கள். இதனை அமைப்பதில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்.

முகப்புப் பக்கம் லோடு ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டால் பார்ப்பவர்கள் எரிச்சல் அடைவார்கள். தவிர, உங்களைப் பற்றிய தகவல்கள் நேரடியாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எளிமையாக இருப்பது நல்லது!

தளத்தைப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கும் வசதி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும்.

உங்கள் வெப்சைட் உங்களுக்குப் பிடித்த பிரவுஸரில் மட்டுமில்லாமல்,  மற்ற பிரவுஸர்களிலும் சரியாக இயங்க வேண்டும்.

நீங்கள் பதித்துள்ள படங்கள் சரியாக இருக்கின்றனவா, நீங்கள் எதிர்பார்க்கும் தோற்றத்தைத் தருகின்றனவா என்பதை அடிக்கடி நீங்கள் சோதித்து அறியவேண்டும்.

வெவ்வேறு வேகத்தில் இயங்கும் இணைய இணைப்புகளில் இந்தப் படங்கள் எப்படி இறங்கி இயங்கு கின்றன என்று சோதித்துப் பார்க்க வேண்டும்.

அனைவருக்கும் தெரிந்த மொழிகளில் உங்கள் தளத்தை அமைப்பது நல்லது. அப்போதுதான் பார்ப்பவர்கள் அந்த வெப்சைட் தங்களுக்கானது என்பதை உணர்வார்கள்.''

தொழில் செய்கிறவர்கள் இனி இணையம் மூலமும் கலக்கலாமே!

Read more about Increase sales through websites: வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி


No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf