Curvy hip's for ladies: பெண்கள் அழகான உடலமைப்பைப் பெற முடியும்

கொடி போல் இடை என்பது சில பெண்களுக்கு எட்டாக்கனிதான். பலர் குனிந்து, கால் விரல்களைத் தொட முடியாத அளவுக்கு தொப்பை விழுந்து  நடப்பதற்கே கஷ்டப்படுகின்றனர்.

முறையற்ற உணவுப்பழக்கமும், சரியான உடற்பயிற்சியின்மையும்தான் இதற்குக் காரணம்.

''நேரம் கிடைக்கும்போதெல்லாம், வீட்டிலிருந்தபடியே சின்ன சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்து பெண்கள் அழகான உடலமைப்பைப் பெற முடியும்'' என்கிறார் 'ஃபிட்னெஸ் ஹப்’ உடற்பயிற்சி மையத்தின் உரிமையாளர் சாரதி. அப்படி சில எளிய பயிற்சிகள் இவை...

க்ரஞ்சஸ் (CRUNCHES)

தரையில் நேராகப் படுத்துக்கொண்டு இரண்டு கைகளையும் தலையின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும்.



பிறகு மெதுவாக கால்களை மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது தலை மற்றும் உடலின் மேற்பகுதியை நேராக முன் நோக்கி எழுந்து, திரும்பவும் பழைய நிலைக்கு வர வேண்டும்.

இதுபோல், 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: மேல் வயிறும் கீழ் வயிறும் சுருங்கி விரிவதனால், கொழுப்பு கரையும்.

பைசைக்கிள் க்ரஞ்சஸ் (BICYCLE CRUNCHES)

தரையில் நேராகப் படுத்து கைகளை மடக்கி தலைக்கு அடியில் வைத்துக்கொள்ள வேண்டும்.



கால்களை மடங்கிய நிலையில் தரையில் பதிக்க வேண்டும். இப்போது வலது கால் முட்டியும், இடது கை முட்டியும் தொடும் வகையில் உடலை  மேலே உயர்த்த வேண்டும்.

ஓரிரு விநாடிகளில் பழைய நிலைக்குத் திரும்பி,  இடது கால், வலது கைக்கு அதேபோல் செய்ய வேண்டும்.  இதுபோல் 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: நடு வயிற்றுப் பகுதி மற்றும் கீழ் வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.

லெக் ரெய்சஸ் (LEG RAISES)

நாற்காலியில் அமர்ந்துகொண்டு கால்களை ஒன்றாகச் சேர்த்துவைத்து, மேலே நேராக உயர்த்தி, பிறகு மெதுவாக கீழே இறக்க வேண்டும். இதுபோல் 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.



பலன்கள்:: அடி வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு மற்றும் சதைப் பகுதி குறையும்.

சிட்டிங் ட்விஸ்டர் (SITTING TWISTER)

நாற்காலியில் நேராக அமர்ந்துகொண்டு கால்களை அகட்டிவைத்துக்கொள்ளவும்.

ஒரு கம்பை, தோள்பட்டைக்கு மேலாக வைத்துக்கொண்டு இரண்டு கைகளையும் தோள்களுக்கு நேராக நீட்டிவைக்க வேண்டும். இந்த நிலையிலேயே,  வலது மற்றும் இடது புறமாகத் திரும்ப வேண்டும். இந்த பயிற்சியை 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:தொடை, இடுப்புப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.


சைடு டம்பிள்ஸ் (SIDE DUMBBELL)  

தரையில் நேராக நின்றுகொண்டு ஒரு கையை சல்யூட் அடிப்பது போல் நெற்றியிலும், மற்றொரு கையில் கனமான ஒரு பொருளையும் வைத்துக்கொண்டு, இடது மற்றும் வலது புறமாக மாறி மாறி சாய வேண்டும். இந்த பயிற்சி 15-20 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: தொடை, இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்.


ஹைபர் எக்ஸ்டென்ஷன் (HYPER EXTENSION)

தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு கைகள் இரண்டையும் தலையின் பின்புறம் வைத்துக்கொள்ள வேண்டும்.


இரண்டு கால்களையும், தலையையும் தரையில் இருந்து சற்று மேலே உயர்த்த வேண்டும். உடல் எடை வயிற்றில் தாங்கியபடி பார்ப்பதற்கு படகு போல் இருக்கும்.

இதை 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: முதுகுத் தசைகள் வலு பெறும். வயிற்றுப் பகுதியில் உள்ள தேவை இல்லாத கொழுப்பு கரையும்.

Thanks: Vikatan

Subscribe to our mailing list for more articles like Curvy hip's for ladies: பெண்கள் அழகான உடலமைப்பைப் பெற முடியும்

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf