Reason for Divorce | விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்

புகைப்பிடிப்பதால் எப்படி உடலை மெதுவாகவும், அமைதியாகவும் பாதிக்கிறதோ, அதேப் போல் திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை வெளிக்கொணர்வதால், திருமண வாழ்வும் விவாகரத்தில் முடிகிறது.  விவாகரத்து எளிதில் ஏற்பட காரணம் ஒருவரின் குணங்கள் தான்.   எனவே மண வாழ்வைக் கெடுக்கும் குணங்களை முற்றிலும் தவிர்த்தால், நிச்சயம் திருமணத்திற்கு பின் நல்ல வாழ்க்கையை வாழலாம். 

நிறைய மக்கள் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணம் நாமில்லை, மற்றவர்கள் தான் என்று கருதுகின்றனர். உண்மையில் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணமான குணங்கள் ஒருவரது மனதில் தான் உள்ளன. அது தான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும் வார்த்தைகள், கோபம், அகங்காரம் போன்றவை. 
இத்தகைய குணங்கள் தம்பதியருக்குள் இருந்தால், நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை அடையும். எனவே திருமண வாழ்வை. விவாகரத்து என்ற நிலைமைக்கு கொண்டு வரும் குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.

கீழே உள்ள குணங்கள் ஏதேனும் உங்களிடம் இருந்தால் அதைப் படித்து தெரிந்து கொண்டு, அத்தகையவற்றை மனதில் இருந்து நீக்கி, சந்தோஷமான மண வாழ்க்கையை வாழுங்கள். 

எப்போதுமே தம்பதியருக்குள் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. இது தான் மண வாழ்விற்கு முதல் எதிரி. 

சந்தேகம் என்பது ஒரு நோய். அந்த நோய் ஒருமுறை வந்தால், அதனை குணப்படுத்த முடியாது. எனவே சந்தேகம் என்ற நோயை மனதில் வராமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் கணவருக்கு மனைவி மீதும், மனைவிக்கு கணவர் மீதும் நம்பிக்கை வேண்டும். 

தம்பதிகள் இருவரும் எப்போதும் மனம் விட்டு பேச வேண்டும். அதைவிட்டு எப்போதும் வீட்டில் அமைதியுடன், அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தால், அதுவே இருவரின் மண வாழ்விற்கு முற்றுபுள்ளி வைத்துவிடும். 

இன்றைய காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், இருவராலும் சரியாக பார்த்து பேச நேரம் கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க முடியாத அளவு நேரம் கிடைக்காமல் போனால், பின் சந்தோஷமான மண வாழ்விற்கே ஆபத்து ஏற்படும். 

இருவருக்கும் இடையில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால், அதை அப்பொழுதே பேசி சரிசெய்து கொள்ள வேண்டும். அதைவிட்டு, அதனைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால், அதுவே துணைக்கு வெறுப்பை ஏற்படுத்தி, பிரிவை உண்டாக்கும். 

துணை ஏதேனும் தவறு செய்து விட்டால், அப்போது அதனால் ஏற்படும் கோபத்தை அவரிடம் காண்பிக்கும் போது, அவர் மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும். அதைவிட்டு, அவர் மனம் புண்படும் படியாகவோ அல்லது அசிங்கப்படுத்தும் படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட விளைவை உண்டாக்கும். மேலும் கோபத்தினால் பேசும் பேச்சை பார்த்து பேச வேண்டும். அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின் அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற முடியாது. ஆகவே இத்தகைய குணத்தை அறவே தவிர்க்க வேண்டும். 

இருவருக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையில் மூன்றாம் நபரை குறுக்கிட வைக்க வேண்டாம். ஏனெனில் அவ்வாறு குறுக்கிட வைத்தால், சிறு பிரச்சனை கூட பெரிதாகிவிடும். பின் அதுவே விவாகரத்து வரை முடியும். ஆகவே எதுவாக இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க வேண்டும். 

சிலர் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். அவ்வாறு காதல் திருமணம் செய்யும் போது, வேறு மதத்தினரையோ அல்லது நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால், அப்போது சில நேரங்களில கலாச்சார பிரச்சனை ஏற்படும். எனவே இவ்வாறான திருமணம் செய்து கொண்டவர்கள், திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால், எந்த பிரச்சனையும் இருக்காது. 

அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும், அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் உண்டான கோபத்தை வீட்டில் துணையிடம் வெளிப்படுத்தக் கூடாது. ஒருசில நேரங்களில் துணை நிச்சயம் புரிந்து கொண்டு நடப்பார்கள். ஆனால் அதுவே தொடர்ந்தால், பின் பிரிவை சந்திக்க நேரிடும்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf