உடலே உன்னை ஆராதிக்கிறேன்

உடல் நலம் சரியாக இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய முடியும். முன்னோரின் வாழ்க்கையில், அவர்களது உணவே, மருந்தாக இருந்தது. இன்றைய உலகில் எதற்கும் அவசரம். சரியான, சத்தான உணவை பெரும்பாலானோர் எடுத்துக்கொள்வதில்லை. உடல்நலம் பற்றி அக்கறை காட்டுவதே இல்லை. நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 

"அதிக ரத்த அழுத்தம்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. உடலில் ரத்த அழுத்தம் அதிகரிப்பது மாரடைப்பு, பக்கவாதம், கிட்னி செயலிழத்தல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது. ரத்த அழுதத்தத்தை கட்டுப்படுத்தாமல் விட்டால், பார்வை குறைபாடு, இருதய செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உலகளவில் மூன்று இளைஞர்களில் ஒருவர் அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்காவில் நடுத்தர நாடுகளில் 40 சதவீத இளைஞர்களுக்கு இந்த பாதிப்பு உள்ளது. இது கட்டுப்படுத்தக்கூடியது.

என்ன செய்வது:

உப்பு பயன்படுத்துவதை குறைப்பது, சரியான அளவில் உணவு எடுத்துக்கொள்வது, ஆல்கஹால், புகையிலை பயன்படுத்தாமல் இருப்பது, உடல் எடையை சீராக வைத்தல், தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை மூலம் இதை கட்டுப்படுத்தலாம்.

ஜப்பானில் தொழில் வளர்ச்சியை போல, சுகாதார வசதியும் சிறப்பாக உள்ளது. இதற்கு, உலகிலேயே மக்களின் வாழ்நாள் அதிகம் உள்ள நாடு ஜப்பான் என்பதே சாட்சி. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், சுகாதார வசதி குறைவு. என்னதான் அரசு சுகாதார திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், அது அனைவரையும் சென்று சேர்வதில்லை. நகரங்களில், போதிய சுகாதார வசதிகள் உள்ளன. கிராமங்களின் நிலை பரிதாபம்.குழந்தை பிரசவம், தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்தல், அவசர சிகிச்சை போன்ற பிரச்னைகளுக்கு சுகாதார மையங்கள் தவிர்க்க முடியாதவை. 10 கி.மீ., தூரத்துக்கு, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். சுற்றுச்சூழல், நீர், காற்று போன்றவற்றை, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.முயற்சி செய்யலாம்

உடல் நலனை சீராக வைக்க சில வழிகள்:

அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். 

எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும். 

சரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். காலை உணவு அவசியம்.

சத்தான காய்கறிகள், பழங்கள், பயறு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

"பாஸ்ட் புட்' ÷ பான்றவற்றை தவிர்க்க வேண்டும். இது உடலுக்கு ஆற்றலை கொடுப்பதில்லை. 

உடல் எடையை சீராக வைத்திருங்கள். உயரத்துக்கு ஏற்ற எடை அவசியம். 

வேலையின் போது, சீரான இடைவெளியில் ஓய்வு அவசியம். 

உடற்பயிற்சி செய்வது, பாதி நோய்களிலிருந்து விடுதலை அளிக்கும். தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். 

மனிதனின் ஆயுளை குறைக்கும், மது, சிகரெட் பழக்கத்தை அறவே விட்டு விடுங்கள். 

கோபத்தை குறைத்து மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

முதுகுவலி - காரணங்களும், தீர்வுகளும் :

தற்போதைய எந்திரமயமான வாழ்க்கை முறையினால், உடலில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அதில் முக்கியமானது முதுகு வலி. அலுவலக நேரம் முழுவதும் கம்ப்யூட்டர் முன் அமர்கிறோம். வீட்டிலிருக்கும் நேரத்திலும், அமர்ந்து கொண்டே "டிவி' பார்க்கிறோம். உடற்பயிற்சி செய்ய நேரமே ஒதுக்குவதில்லை. இதனால் உடலின் தசைகள் வலுவிழக்கின்றன.

உடலின் எடையை முதுகெலும்புதான் தாங்குகிறது. குறிப்பாக அடி முதுகில் அனைத்து எடையும் குவிகிறது. முறையற்ற உணவுப்பழக்கம், சத்தில்லாத உணவு, தொடர்ந்து பயணம், திடீரென தீவிரமாக வேலை செய்வது, அதிக எடை தூக்குதல் போன்ற பல காரணங்களால் முதுகுவலி ஏற்படுகிறது. 

முறையற்ற வாழ்க்கை முறையினால், பல்வேறு முதுகுப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. வயது ஆக ஆக, முதுகின் பிரச்னை அதிகரிக்கும். அடி முதுகுவலியை கவனத்தில் கொள்ளாவிட்டால், பல சிக்கல்களை உருவாக்கும். முதுகெலும்பு இடமாற்றம், கீழே இறங்குதல் போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. 

இதனால் அமருவது, நிற்பது, நடப்பதில் கூட சிரமம் ஏற்படும். முதுகெலும்பு அடுக்கில் உள்ள எலும்புகள் இடம் மாறுவது, ஒரு வகை நோய். இதனால் தீவிர வலி, முதுகு, கால்களில் உணர்வின்மை ஆகியவை ஏற்படும்.முதுகெலுப்பு இருக்குமிடத்தை விட்டு சற்று கீழே இறங்குதல் மற்றொரு வகை பிரச்னை. இதில் முதுகெலும்பில் உள்ள தசைகள் கிழிவதால், வீக்கம் உண்டாகிறது. 

வயதாகும் போது, முதுகெலும்பின் வளைவு, நெகிழ்வு, அதிர்ச்சியை தாங்கக் கூடிய தன்மை ஆகியவை குறையும். இதனால் வயதானவர்களுக்கு கண்டிப்பாக முதுகுப் பிரச்னை இருக்கும்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf