Grabber Screenshot Program | கிராப்பர் – ஸ்கிரீன் ஷாட் புரோகிராம்

தேவைப்படும் திரைக் காட்சிப் பகுதிகளை மட்டும் காப்பி செய்து, காப்பி
செய்யப்பட்ட பகுதிகளைத் தேவையான இடத்தில் ஒட்டிக் கொள்ளும் வசதியையும்,
மேலும் பல கூடுதல் வசதிகளையும் தருகிறது கிராப்பர் என்னும் ஸ்கிரீன் ஷாட்
புரோகிராம்.
திரைக் காட்சிகளை அப்படியே படமாகக் கொள்ள, நாம் பிரிண்ட் ஸ்கிரீன் கீ
அழுத்தி, பின் இமேஜ் புரோகிராம் ஒன்றைத் திறந்து அதில் பேஸ்ட்
செய்கிறோம். அதன் பின்னர், அதில் தேவைப்படும் பகுதியைத் தேர்ந்தெடுத்து,
காப்பி செய்து, மீண்டும் தனியாகப் பேஸ்ட் செய்து, பைலாக உருவாக்கு
கிறோம். பின்னர், இந்த பைலை தேவைப் படும் இன்னொரு டாகுமெண்ட் அல்லது பட
பைலில் ஒட்டி பயன்படுத்துகிறோம்.

இந்த செயல்பாட்டினை மிக எளிதாக மேற்கொள்ளும் வகையில்
நமக்குக் கிடைக் கும் புரோகிராம் கிராப்பர் (Cropper). இதனை பிரையன்
ஸ்காட் (Brian Scott) என்பவர் வடிவமைத்து வழங்கியுள்ளார்.
http://cropper. codeplex.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இந்த
புரோகிராம் கிடைக்கிறது. மிக எளிதாக இந்த தளத்திலிருந்து கிராப்பர்
புரோகிராமினை தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ளலாம். இதனை
இன்ஸ்டால் செய்கையில் blocked என்ற செய்தி கிடைத்தாலும், "run anyway"
என்பதனை அழுத்தி செட் அப் செய்திடலாம். இதில் எந்த விதமான வைரஸ் அல்லது
மால்வேர் தொகுப்பும் இல்லை எனப் பயன்படுத்தியவர்கள் கூறி உள்ளனர்.

இன்ஸ்டால் செய்து, புரோகிராம் பட்டியலிலிருந்து இதனைத் தேர்ந்தெடுத்து
கிளிக் செய்தவுடன், டாஸ்க் பாரில் இதற்கான ஐகான், சிறிய கூட்டல்
குறியுடன் பெட்டி ஒன்றுடன் காட்சி அளிக்கும். இதில் டபுள் கிளிக்
செய்தால், கிராப்பர் இயங்கத் தொடங்கும். இப்போது, கிராப்பர் ஒரு சிறிய
பாக்ஸை உங்களுக்குக் காட்டும். இதில் மவுஸின் இடது பட்டனை அழுத்தியவாறே,
பாக்ஸை இழுத்துச் செல்லலாம். அதில் தரப்பட்டி ருக்கும் பட்டன்களை
அழுத்தில், பாக்ஸை சிறியதாகவோ, பெரியதாகவோ மாற்றிக் கொள்ளலாம்.

திரையில் எந்த இடத்தில் உள்ள காட்சி அல்லது டெக்ஸ்ட் தேவையோ அங்கு
இழுத்துச் சென்று, பின்னர் என்டர் அழுத்தினால், அந்த பாக்ஸ் அமையும்
இடத்தில் காட்டப்படுவது ஸ்கிரீன் ஷாட்டாக எடுக்கப்பட்டு பைலாக
மாற்றப்பட்டு, My Documents டைரக்டரியின் கீழ் Cropper Captures என்ற
போல்டரில் சேவ் செய்யப்படும்.

இந்த அவுட்புட் வழியை வேறு வகையில் மாற்ற வேண்டும் எனில், கிராப்பர்
பாக்ஸ் உள்ளாக ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் என்பதில் கிளிக்
செய்திடவும். பின்னர் கிடைக்கும் பட்டியலில் இருந்து தேவை யானதைத்
தேர்ந்தெடுக்க வேண்டும். கீழே காட்டியுள்ளபடி ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.

BMP:

பிட்மேப் இமேஜாக ஸ்கிரீன் ஷாட் தேவை எனில், இதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
இது பழைய இமேஜ் பார்மட்.

Clipboard:

இதனைத் தேர்ந்தெடுத்தால், குறிப் பிட்ட ஸ்கிரீன் ஷாட் பகுதி கிளிப்
போர்டுக்குச் செல்லும். இதிலிருந்து அதனை நீங்கள் விரும்பும்
புரோகிராமில் பதிந்து இயக்கலாம்.

JPEG:

இது பலரும் பயன்படுத்தும் இமேஜ் பார்மட். இதன் தன்மையை 10% முதல் 100%
வரை இருக்குமாறு அமைத்துக் கொள்ளவும் இதில் ஆப்ஷன் தரப்பட்டுள்ளது.

PNG:

இந்த பார்மட் அமைப்பைத் தற்போது அனைவரும் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
ஜேபெக் பைலின் தன்மை மற்றும் பண்புகள் இதில் உள்ளன. ஜேபெக் அளவில் பரவலாக
இல்லை என்றாலும், இந்த பார்மட் டையும் அதிகமாகப் பயன்படுத்துவோர்
உள்ளனர்.

Printer:

இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தவுடன், பிரிண்டர் டயலாக் பாக்ஸ்
திறக்கப்பட்டு, கிராப்பர் காப்பி செய்த இமேஜ் அச்சடிக்கப்படும்.
இதே மெனுவின் மூலம், நாம் ஸ்கிரீன் ஷாட் போல்டரில் உள்ள மெனுவினைத்
திறந்து இயக்கலாம். கிராப்பர் விண்டோவின் வண்ணத்தினை மாற்றலாம். மேலே
காட்டப்பட்டுள்ள இதன் இணைய தளத்தில் இன்னும் நிறைய குறிப்புகள்
கிடைக்கின்றன.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf