2012ல் மொபைல் உலகம்

சென்ற ஆண்டில் பல வியத்தகு மாற்றங்கள், மொபைல் உலகில் ஏற்பட்டன.
ஆண்ட்ராய்ட் இயக்கமும் சாம்சங் நிறுவனமும் மக்களிடையே பிரபலமாயின.
ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையும், அதற்கான சாதனங்களைத் தயாரித்த கூட்டாளியான
சாம்சங் நிறுவனமும், ஆப்பிள் மற்றும் ஐபோனை, அடுத்த நிலைக்குத் தள்ளின.
மொபைல் உலகில், மைக்ரோசாப்ட்,நோக்கியா மற்றும் ரிசர்ச் இன் மோஷன் ஆகிய
நிறுவனங்கள் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் உறுதியான விற்பனைச்
சந்தையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த இயலவில்லை. இந்த நிகழ்வுகளுக்கான
கூடுதல் தகவல்களை இங்கு காணலாம்.


1. ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தை முழுமையாக வென்ற ஆண்ட்ராய்ட்:

ஸ்மார்ட் போன் இயக்கத்தில், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிலையான இடம்
பிடிக்கும் என்ற சந்தேகம், 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தது. இந்த
சந்தேகங்களை உடைத்தெறிந்து, ஆண்ட்ராய்ட் தன்னை முதல் இடத்தில்
மட்டுமில்லாமல், பெரும்பான்மையான ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இடம்
பிடித்தது. 2012 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், உலக அளவில் 75%
ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டமே இடம் பெற்றிருந்தது.
அமெரிக்காவில் ஐபோன் பயன்பாடு பெரிய அளவில் இருந்தாலும், உலக நாடுகளை
மொத்தமாகப் பார்க்கையில், ஐ.ஓ.எஸ். சிஸ்டம் கொண்ட போன்கள் 14.9 சதவிகிதமே
இருந்தன.
2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து, மிக வேகமாக
முன்னேறி, ஆண்ட்ராய்ட் முதல் இடத்தைப் பிடித்தது. பன்னாட்டளவில்,
ஆண்ட்ராய்ட் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் அதிகம் உள்ளது சீனாவில்தான். 78
கோடியே 60 லட்சம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் இங்கு பயன்படுத்தப்
படுகின்றன. அமெரிக்காவில் மட்டும்தான் ஆப்பிள் இதற்குச் சரியான போட்டியை
இன்னும் தந்து கொண்டுள்ளது.

2. விண்டோஸ் மொபைல்:

மைக்ரோசாப்ட், மொபைல் உலகிலும் தன் பங்கினைப் பெரிய அளவில் பெற்றிட
திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இந்தப் பிரிவில் இதுவரை பெற முடியாமல்
போனதை, விண்டோஸ் போன் 8 பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறது.
விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நவம்பரில் வெளியானது.
கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களுக்கான விண்டோஸ் 8
வெளியாகி சில நாட்களில் இது வெளியானது. என்றாவது ஒரு நாள், மொபைல்
போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டமும்
இணைந்த சிஸ்டமாக உருவாகும். எச்.டி.சி., நோக்கியா, சாம்சங் ஆகியவை
விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் மொபைல் போன்களை உருவாக்கித்
தருவதால், ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் மூன்றாவது இடத்தினை மைக்ரோசாப்ட்
விரைவில் பிடிக்க இயலும்.

3. நோக்கியாவைத் தள்ளிய சாம்சங்:

ஏற்கனவே ஸ்மார்ட் போன் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்த சாம்சங்,
தற்போது மொபைல் போன் விற்பனையிலும் நோக்கியாவை இரண்டாவது இடத்திற்கு
ஒதுக்கி, முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏறத்தாழ 14 ஆண்டுகள், இந்த
வகையில் முதல் இடத்தை நோக்கியா கொண்டிருந்தது. இப்போது உலக அளவில்
சாம்சங் நிறுவன போன்கள் அதிகம் விற்பனையாகிறது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf