Special Mutton Biryani: ஸ்பெஷல் மட்டன் பிரியாணி

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
அரிசி - 1/2 கிலோ
தயிர் - 1 கப்
மிளகாய்த்தூள், தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம், தக்காளி - 200 கிராம்
புதினா இலை - 1/2 கட்டு
பட்டை, லவங்கம், ஏலக்காய் - தலா 2
சோம்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்முறை

மட்டனை சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் பொடியாக நறுக்கவும், பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும்.

அரிசியை வேகவைத்து வடித்துக் கொள்ளவும். கொதிக்கும் சமயம் இரண்டு ஏலக்காயை உரித்துப் போடவும்.

வாய் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, புதினா இலை, பச்சை மிளகாய், தயிர் இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

இதனுடன் மட்டன், மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து நீர் ஊற்றவும்.

மட்டன் வெந்த பிறகு, சாதத்தின் மேல் மட்டன் மசாலா கலவை ஒரு லேயர் போடவும். பிறகு சாதம், மட்டன் மசாலா கலவை, இப்படி சேர்த்து மேலே தம் கட்டி 20-லிருந்து 25 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.

அதன்பிறகு எடுத்து கிளறினால், சாதம் பொலபொலவென்று உதிரியாக இருக்கும் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி பிரியாணி ரெடி.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf