எப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்?

மோட்டார் வாகன நம்பர் பிளேட்கள் என்ன அளவில் இருக்க வேண்டும் என்பது குறித்து, போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் கூறியதாவது: டூ-வீலர், கார், கனரக வாகனம், லாரிகள், பஸ் உள்ளிட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்களில், தங்களுக்கு பிடித்த அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் உருவப்படம் பதிப்பது, பெயர்கள் எழுதுவது மற்றும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறி எண்களை பல்வேறு கோணங்களில் எழுதுவது அதிகரித்துள்ளது. வாகனங்கள் மூலம் அசம்பாவிதங்கள் நடந்தால், அதை கண்டறியவே, அரசு சார்பில், வாகன பதிவு எண் கொடுக்கப்படுகிறது. ஆனால், சிலர் வாகனங்களில் மாநில குறியீட்டு எண் குறிப்பிடாமல், தாங்கள் கொடுக்கும் நான்கு எண்களை மட்டும் பதிவு செய்து இயக்குகின்றனர். இதனால், வட்டார போக்குவரத்துறை மற்றும் போலீஸ்துறைக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. வாகன பதிவு எண்களை, நம்பர் பிளேட்களில், அரசு விதிமுறைபடி எழுத வேண்டும்.

வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்களின் பிளேட்கள் மஞ்சள் பின்புறத்தில், கறுப்பு நிறத்தில் எண்கள் இருக்க வேண்டும்.

சொந்த வாகனங்களில், வெள்ளை பின்புறத்தில் கருப்பு நிறத்தில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.
பிளேட் அளவு: * டூ-வீலர் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் முன்புறம் நம்பர் பிளேட்டின் அளவு 285 மி.மீ., நீளமும், 45 மி.மீ., உயரமும், பின்புறம் 200 மி.மீ., நீளம், 100 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும்.

கார் மற்றும் இதர வாகன நம்பர் பிளேட்டின் பின்புறம் 500 மி.மீ., நீளமும், 120 மி.மீ., உயரமும், முன்புறம் 340 மி.மீ., நீளமும், 200 மி.மீ., உயரம் இருக்க வேண்டும்.

நடுத்தர மற்றும் கனரக வாகனத்தின் நம்பர் பிளேட் 340 மி.மீ., நீளமும், 200 மி.மீ., உயரமும் இருக்க வேண்டும்.
எழுத்துக்கள் அளவு: * 70 சி.சிக்கு கீழ் உள்ள டூ-வீலர் நம்பர் பிளேட் முன்புறம் எழுத்துக்கள் 15 மி.மீ., உயரத்தில், 2.5 மி.மீ தடிமன் மற்றும் இடைவெளியும், பின்புறம், 35 மி.மீ., உயரத்தில், 7 மி.மீ., தடிமன் மற்றும் 5 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.

70 சி.சிக்கு மேல் உள்ள டூவீலரில், முன்புறம் 30 மி.மீ., உயரத்தில், 5 மி.மீ., தடிமன் மற்றும் இடைவெளியும், பின்புறத்தில் 40 மி.மீ., உயரத்தில், 7 மி.மீ., தடிமன் மற்றும் 5 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும்.

மூன்று சக்கர வாகனத்தில் 35 மி.மீ., உயரமும், 7 மி.மீ., தடிமன், 5 மி.மீ., இடைவெளி இருக்க வேண்டும். இதர வாகனங்களில் 65 மி.மீ., உயரமும், 10 மி.மீ., தடிமன் மற்றும் 10 மி.மீ., இடைவெளியில் எழுத்துக்கள் இருக்க வேண்டும். இதை மீறும் பட்சத்தில் மோட்டார் வாகன சட்டம் 53ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf