Mobile Banking in india: மொபைல் பேங்கிங்

இந்தியாவில் உள்ள வங்கிகள் தங்களின் சேவைகளை மொபைல் மூலமாக அளிப்பதில், அதிலும் குறிப்பாக எஸ் எம் எஸ் (குறுஞ்செய்தி)மூலம் கொடுப்பதில் முனைப்புடன் செயல்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் பணப்பரிமாற்ற விபரங்கள் & அக்கவுண்ட் விபரங்களை அறிதல் போன்றவற்றுக்காக வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.

இச்சேவையைப் பெறுவதற்கான சேவைக்கட்டணம் வங்கிக்கு வங்கி மாறுபடும். சில வங்கிகள் இச்சேவையை இலவசமாகவும், சில வங்கிகள் வருடாந்திர கட்டணத்தை வசூலித்தும் அளிக்கின்றன. ஆனால் வங்கிகளின் மொபைல் வழிச் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு ஆகும் மொபைல் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சில வங்கிகள் தனிப்பட்ட ஒரு மென்பொருளை ஒவ்வொருவருடைய கைபேசியிலும் (மொபைல் போனில்)உட்செலுத்தி தனி நபர் மொபைல் பேங்கிங் சேவையை அளிக்கத் துவங்கி உள்ளன. ஆனால் ஜிபிஆர்எஸ் வசதி கொண்ட செல்போன்களில் மட்டுமே இது சாத்தியம். ஆனால், இம்முறையைச் செயல்படுத்துவது மிகவும் சுலபம். வங்கிகளின் இந்த புதிய முறையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.

மொபைல் பேங்கிங் - அறிந்திருக்க வேண்டிய தகவல்கள்

உங்கள் மொபைல்போன் மூலம், ஒரு நாளில் ரூ.5000 வரைப் பணப்பரிமாற்றமும், ரூ 10,000 வரை வர்த்தகப் பரிமாற்றங்களிலும் நீங்கள் ஈடுபடலாம்.உரிமம் பெற்ற, நெறிபடுத்தப்பட்ட வங்கிகள் மற்றும் இந்தியாவில் செயல்படும் வங்கிகள் அனைத்தும் தங்கள் கிளைகள் மூலமாகவோ அல்லது வர்த்தக செயலர்கள் மூலமாகவோ மொபைல் பேங்கிங் சேவையை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

வங்கியில் கணக்கு வைத்திருப்போர், வங்கியின் மூலம் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு பெற்றவர்கள், இச்சேவைகளைப் பெறலாம்.
தற்சமயம், மொபைல் பேங்கிங் சேவை உள்நாட்டு பணப்பரிமாற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.மொபைல் பேங்கிங் சேவையில், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைகள் வங்கிகளின் குறை தீர்ப்பாளர்கள் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.

சேவையைப் பயன்படுத்தும்போது உங்களுக்கு உள்ள பொறுப்புகள், கடமைகள் மற்றும் இடர்பாடுகளைப் பற்றி வங்கிகள் உங்களுக்கு சொல்லவேண்டும்.இச்சேவையைப் பெறும் முன், பணப்பரிமாற்றத்திற்கான கட்டணங்கள், மாதம்/ஆண்டு சந்தா விவரங்களை கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

மொபைல் போன் கொண்டு நடைபெறும் பணபரிமாற்றங்கள் அனைத்துமே வங்கி அலுவலர் மூலமாகவே நிகழ்கிறது என்பதை உணருங்கள்.மொபைல் பேங்கிங் சேவையைப் பெற்றபின் உங்கள் மொபைல்போனை நண்பரிடமோ அல்லது பிறரிடமோ கொடுக்காதீர்.
உங்கள் மொபைல் போன் தொலைந்துவிட்டால் உடனே உங்கள் வங்கிக்கு அதனைத் தெரியப்படுத்துங்கள்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf