Heart Transplantation: இதய மாற்று சிகிச்சை

பைபாஸ், ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சையை விட, மாற்று இதய சிகிச்சை மிகவும் சுலபமானது. ஏனெனில், இதில் இதயத்தையே மாற்றி வைத்து, தைத்து விடுகிறோம்; சட்டை பாக்கெட் வைத்து தைப்பது போல ஓபன் ஹார்ட் சிகிச்சையை விட, பைபாஸ் மிகவும் சுலபமான அறுவை சிகிச்சை. இன்று, சென்னையில் இந்த பைபாஸ் சர்ஜரி, 10 மருத்துவமனைகளில், விரைவீக்கம், குடல் இறக்க சிகிச்சை போல, எளிமையாகி விட்டது.

இந்த பைபாஸ் சர்ஜரி பிரபலமாக காரணம், நடுத்தர வயதினர், குடும்ப தலைவன், தலைவிக்கு வருகிறது. மரண பயத்தில், ஆஞ்சியோகிராம் செய்து, ஸ்டென்ட் அல்லது அடைப்பை, "பைபாஸ்' செய்து விடுகின்றனர். இவ்வளவு பிரபலத்திற்கு காரணம், பெரும்பாலான மருத்துவமனை, கார்பரேட், தனியார் டிரஸ்ட்டில் பல கோடிகளை போட்டு, கோடிகளை எடுக்க வேண்டும் என்பது தான். மருத்துவமனை கட்டமைப்பு, ஊழியர்கள், டாக்டர், நர்ஸ், கருவிகள் என்ற பலவற்றிற்கு ஏற்படும் மாதாந்திர செலவு, வட்டியை கட்ட, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தான், நுகர்வோர் ஆகின்றனர்; மருத்துவமனை, வியாபார நிறுவனங்களாகின்றன; டாக்டர்கள், டெக்னிஷியன்களாகின்றனர்.

ஓபன் ஹார்ட் சர்ஜரி, சற்று சிக்கலான அறுவை சிகிச்சை. இது, நிதானமாக, ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். ஏனெனில், இங்கு இதயத்தை பிளந்து, உள்ளே வால்வை "ரிப்பேர்' செய்வதும், வால்வை மாற்றுவதும், ஓட்டையை அடைப்பதும் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், இதயத்திலுள்ள தசைகள் சில நேரங்களில் பழுதடையும்; பைபாசை விட சிக்கல். பைபாஸ், ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சையை விட, மாற்று இதய சிகிச்சை மிகவும் சுலபமானது. ஏனெனில், இதில் இதயத்தையே மாற்றி வைத்து, தைத்து விடுகிறோம்; சட்டை பாக்கெட் வைத்து தைப்பது போல. இதய மாற்று சிகிச்சையில், இதயத்தை கிழிப்பது கிடையாது. இதயத்தின் மேல் பைபாஸ் செய்வது போலவும் கிடையாது. வாகனத்திற்கு, புதிய ஸ்டெப்னி டயரை பொருத்தி, சரி பார்ப்பது போல தான். ஆனால், பின்விளைவுகள், மாற்று இதயம் பொருத்திய பிறகு தான். பின் விளைவுகளைச் சீராக்க மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன.

இதய மாற்று சிகிச்சையின் வெற்றி?

மாற்று சிகிச்சைக்கு பிறகு, 85 சதவீதம் பேர், ஓராண்டும், 80 சதவீதம் பேர் மூன்றாண்டும், 70 சதவீதம் பேர் ஐந்தாண்டும் வாழ்ந்துள்ளனர்.
நீண்ட ஆண்டு காலம் வாழ்ந்தவர்கள்:

*அமெரிக்காவின் டோனி ஜஸ்மான்: இதய மாற்று சிகிச்சை செய்து, 31 ஆண்டுகள் வாழ்ந்தார். 20 வயதில், வைரஸ் நிமோனியா வந்து, இதனால், இதயமும் பாதிக்கப்பட்டு, 1979ல், மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. ஆக., 2009ல், புற்றுநோயால் இறந்தார்.

*கெல்லி பெர்க்கின்ஸ் என்ற பெண்மணி, வைரல் காய்ச்சலால், இதயம் பாதிக்கப்பட்டு, இதய மாற்று சிகிச்சை செய்து, கிளிமஞ்சாரோ மலை, மட்டகாம் மலை என்ற மலைகளை நடந்து வென்றவர்.

*ஆஸ்திரேலியாவின் பயோ கூல் என்ற பெண்மணி, 14 வயதில் மாற்று இதயம் பெற்றவர். இவருக்கு, வைரஸ் மயோகார்டைட்டிஸ். இன்று, சமூகப் பணியாற்றி வருகிறார்.

* நம் நாட்டில், அறுவை சிகிச்சை செலவு, 35 லட்ச ரூபாய் மற்றும் மருத்துவ செலவு மாதத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய். இவ்வளவும் செய்து கொண்டு வாழ, ஏழை இந்திய நாட்டில், யார் முன்வருவர்? இவ்வளவு பணம், மனைவி, மக்களுக்கு உபயோகப்பட்டால் போதும் என்று நினைத்து, அறுவை சிகிச்சை செய்து கொள்ள பெரும்பாலோர் முன் வருவதில்லை.

Thanks - டாக்டர் எஸ்.எஸ். அர்த்தநாரி | இதய ஊடுருவு சிகிச்சை நிபுணர்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf