How Sleep Occurs: தூக்கம் ஏன் ஏற்படுகிறது

தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று பல விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை நடத்தி, தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.
நம் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் அடக்கி ஆள்வது மூளை. நரம்பு மண்டலத்தில் முக்கிய உறுப்பும் மூளையே. நம் உடலின் உள்ளும், புறமும் ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நரம்புகளின் வழியே மூளைக்குச் செல்கின்றன.நமது உடலின் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் பகுதி இருப்பதாக ஒரு சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். சிலரோ, நரம்புக் கூட்டுப் பகுதிகளில் எதிர்ப்பு ஏற்பட்டு, செய்திகள் விரைவாகச் செல்வதற்குத் தடை ஏற்படுவதால் தூக்கம் வருகிறது என்கின்றனர்.

இன்னும் சில விஞ்ஞானிகள், நாம் தினசரி செய்யும் வேலையின் திறனால் சேகரிக்கப்படும் கழிவுப்பொருட்களாகிய லேக்டிக் அமிலம் போன்ற உணர்ச்சியூட்டும் பொருட்கள் வெளியேற்றப்படுவதற்கு ஏற்பட்டுள்ள பழக்கம்தான் தூக்கமாகும் என்கின்றனர். இதையே நாம், களைப்பினால் தூங்கினோம் என்று சொல்கிறோம்.நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகளின் இடையே உள்ள இணைப்புகள் தடைப்படுவதால் தூக்கம் வருகிறது என்று சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மூளையின் ஹைப்போதலாமஸ் பகுதியே தூக் கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எனவே இது தூக்கத்தை உண்டாக்கும் ஓர் எந்திரமாகும் என்று ஒரு சிலர் கூறுகின்றனர்.தூக்கம், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் அவசியமானது என்பதை நிரூபிக்க விஸ்கான்சின் மருத்துவப் பல்கலைக்கழகம் முதலில் விலங்குகள் மீது சோதனை நடத்தியது. அச்சோதனையில் தெரியவந்த உண்மை, தொடர்ந்து தூக்கம் இல்லையென்றால் விலங்குகள் இறந்துவிடும். விலங்குகளால் தூக்கமில்லாமல் அதிகபட்சம் 7 முதல் 30 நாட்கள் வரைதான் உயிர்வாழ முடியும்.

மனிதர்களுக்கும் தூக்கம் மிகவும் அவசியம். இல்லாவிட்டால் நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மனிதன் அன்றாடம் 8 மணி நேரமாவது நன்றாகத் தூங்க வேண்டும் என்று கண்டுபிடித்துக் கூறப்பட்டுள்ளது.குழந்தைகள் உடல் வளர்ச்சிக்கும், செல்கள் புதுப்பிக்கப்படுவதற்கும் அதிக நேரம் தூங்க வேண்டும். மூளைக்கு வேலை கொடுப்பவர்கள், உடலுக்கு வேலை கொடுப்பவர்களை விட சற்றுக் குறைவாகத் தூங்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf