Aloevera and Skin: கற்றாழை-சருமப் பளபளப்புக்கு அரு மருந்து

தோலையும் பாதுகாக்க பண்டைய காலம் தொட்டே பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு இயற்கை பொருள் கற்றாழை. எகிப்திய அழகி கிளியோபாட்ரா, தனது கவர்ச்சிக்கு கற்றாழையே காரணம் என்று குறிப்பிட்டுக்கிறார்.வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகம் வளரும் இந்த கற்றாழை பல பருவங்கள் வாழக் கூடிய குறுஞ்செடி வகையைச் சார்ந்தது. இலைகள் தரையினை ஒட்டி ரோஜா இதழ்கள் போன்று கொத்தாக காணப்படும். சதைப்பற்று மிக்க இலைகள் மருத்துவப்பயன் கொண்டவை.

வசீகரத் தோற்றத்திற்கு

- இலைகளில் காணப்படும் ஜெல் இயற்கை முக அழகு கிரீமாக பயன்படுகிறது. தோலினை பளபளப்பாக்குவதில் இந்த இந்ந ஜெல் முக்கிய பங்கு வகிக்கிறது. ரசாயனம் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதை விட இந்த கற்றாழை ஜெல்லை பயன் படுத்துவதால் முகப்பொலிவு கூடும்.
- இது வகையான சருமத்திலும் பயன்படுத்தலாம். தோல் இருக்கத்திற்கு சுகமளிக்கும் அருமருந்து.
- இலையின் சோறு டை தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. தலையில் ஏற்படும் பொடுகு, தொல்லைகளை நீக்குகிறது.
- இலைகளில் காணப்படும் ஜெல் போன்ற பொருளில் ஆலோக்டின் B எனப்படும் வேதிப்பொருள் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியினை தூண்டுகிறது.

தீப்புண்களை குணமாக்க

- கற்றாழை ஜெல்லில் காயங்களை குணப்படுத்தும் பண்புகள் உள்ளதாக அமெரிக்கா மற்றும் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளன.
- தீப்புண், சிராய்ப்புப் புண்கள், சூரிய ஒளியின் தாக்கம், ஆகியவற்றிர்க்கு முதலுதவி செய்வதில் பயன்படுகிறது.
- இலையினை உடைத்தால் வெளியேறும் ஜெல்லினை புண்கள் மீது தடவினால் அது காயங்களின் மீது ஒரு படலம் போல படர்ந்து புண்களை விரைவில் ஆற்றுகிறது.
- இது வகையான சருமத்திலும் பயன்படுத்தலாம். தோல் இருக்கத்திற்கு சுகமளிக்கும் அருமருந்து.
வயிற்று உபாதைகளுக்கு

- பெப்டிக் அல்சர், மற்றும் எரிச்சல் தரும் வயிற்று வலியினை குணப்படுத்துவதில் கற்றாழைக்கு முக்கிய பங்குண்டு.
- கற்றாழை இலையின் அடிப்பகுதியில் கிடைக்கும் மஞ்சள் வண்ண சாறு சேகரிக்கப்பட்டு உலர்த்தப்படுகிறது. இதனை 'ஆலோ கசப்பு" என்ற மருந்துப்பொருளாக பயன்படுத்தலாம்.
- இதில் உள்ள ஆந்ரோகுயின்கள் மலமிளக்கி பண்பினை கொண்டவை, பெருங்குடலை சுருங்கவைத்து மலம் வெளியேற உதவுகின்றன.
- ஒரு சில துளி உட்கொண்டால் ஜீரணத்தினை தூண்டும்.
- இந்திய மருத்துவத்தில் பேதி மருந்தாகவும், மாதவிடாய் திருத்தும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf