மாப்பு வச்சுட்டாங்கய்யா ஆப்பு! இந்த வசனம் வடிவேலுக்கு எதிராகவே திரும்பி இருப்பது காலத்தின் கோலம். தேர்தல் முடிவிற்கு முன்பு வரை ஆடாத ஆட்டம்! பேசாத பேச்சு! என்று கட்டுக்குள் அடங்காத காளையாக இருந்தவர் நிலை தேர்தல் முடிவிற்குப் பிறகு பரிதாபமாகி விட்டது. திமுகவை விட பலரின் பார்வை இவரின் மீதே சென்றுள்ளது இது எங்கு எதிரொலித்ததோ இல்லையோ facebook ட்விட்டர் போன்ற சமூகத்தளங்களில் அதிகம் எதிரொலித்தது. | Thanks - பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது! கருடா சவுக்கியமா!…. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே! கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது. கவியரசர் எழுதிய பாடல் காலங்கடந்தும் காட்சிகள் மாறியும் இன்றும் பல விஷயங்களுக்குப் பொருந்தி வருவது அதிசயம்.
“கூட்டம் சேர்த்தவன் எல்லாம் ஜெயித்தது கிடையாது” என்பது எவ்வளவு உண்மை. தனக்குக் கூடிய கூட்டம், சன், கலைஞர் தொலைக்காட்சிகள் கொடுத்த முக்கியத்துவம், அழகிரி கலைஞரின் நெருக்கம் என்று கிடைத்த புகழ் போதை வடிவேலுவின் கண்ணை மறைத்து விட்டது. இதனால் ஏற்ப்பட்ட போதை எதை வேண்டும் என்றாலும் பேச அவருக்குத் தைரியம் கொடுத்து விட்டது.கேப்டன் தண்ணி அடிக்கிறார் என்று மேடைக்கு மேடைக்கு மேடை முழங்கிய இவர் மட்டும் என்ன நன்னாரி சர்பத் குடித்துக்கொண்டு இருப்பவரா! எந்த தைரியத்தில் இவர் இப்படிப்பேசினார். என்னமோ கட்சிக்காரர்கள் எல்லோரும் ரோஸ்மில்க் மட்டுமே குடிப்பது போல கேப்டனை இஷ்டத்திற்கும் குடிகாரன் லூசு பீசு என்று அநாகரீகமாக பேசியதை மக்கள் ரசிக்கிறார்கள் என்று நினைத்து மிகக் கேவலமாக நடந்து கொண்டதிற்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளார்கள். தற்போது வடிவேலுக்குப் புரிந்து இருக்கும் தன் பேச்சை மக்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள் என்று.
ரஜினி விசயத்திலேயே “மே 13 காட்சிகள் மாறும் அப்ப வைத்துக்குறேன்” என்று கூறியவர் ஆச்சே! உண்மை தான்… காட்சிகளும் மாறியது இவரது நிலையும் மாறி விட்டது.இவர் ஆணவமாக நடந்து கொண்டதையும் ஆபாசமாக பேசியதையும் கண்டு எவ்வளவு பேர் கடுப்பில் இருந்து இருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்தவுடன் சமூகத்தளங்களில் தெரிந்தது. அதிலும் facebook ல் வடிவேலுவை பஞ்சர் ஆக்கி விட்டார்கள். தற்போது வடிவேல் காமெடியைப் தொலைக்காட்சிகளில் பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது அந்த அளவிற்கு வெறுப்பாகி விட்டது.
தேர்தல் முடிவிற்கு முன்னர் வடிவேலு தான் இந்தத்தேர்தலில் நிஜ ஹீரோ என்று அனைவரும் புகழ்ந்தார்கள். திமுகவின் வெற்றிக்கு வடிவேல் பேசிய பேச்சே முக்கியக்காரணமாக இருக்கும் என்று பலர் கூறினார்கள் ஆனால் தேர்தல் முடிவிற்க்குப்பிறகு இந்த ஒரு மாத ஹீரோ மறுபடியும் காமெடியன் பொறுப்பையே ஏற்றுக்கொண்டார். இத்தேர்தலில் திமுகவையே காலி செய்து எதிர்க்கட்சி தலைவராக உதவிய கைப்புள்ளை வடிவேலுவிற்கு கேப்டன் நன்றி கூற வேண்டும் தற்போது வடிவேலுவை நினைத்தால் சிப்பு சிப்பா வருது. கடைசியாக தன்னைப்பற்றி வடிவேல் பேசிய கீழ்த்தரமான பேச்சிற்கு எந்த ஒரு பதிலும் தராமல் தேர்தல் முடிவின் மூலம் பதில் தந்த கேப்டன் தி கிரேட் 
வடிவேலுவை மையப்படுத்தி ஏகப்பட்ட படங்கள் facebook ல் உலா வந்தன அதில் சில படங்களை உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன். சில படங்களை நாகரீகம் கருதி தவிர்த்துள்ளேன்.


No comments :
Post a Comment