Clean Madurai Campaign! is the first Target of New Government | அதிருது மதுரை! | ச‌ர‌ண்ட‌ர், அரெஸ்ட், அப்ரூவ‌ர் இல்லாட்டி என்க‌வுண்ட‌ர் |

Clean Madurai Campaign
''அ.தி.மு.க. ஆட்சியின் ஆரம்ப அதகளம், மதுரையை  மையம்கொண்டதாகத்தான் இருக்கும்.அதற்கான வேலைகள் ஆரம்பம் ஆகி விட்டன. இந்த பயத்தில்தான், தேர்தல் முடிவுகள் தெரிவதற்கு முன்பே மதுரை தி.மு.க-வினர் சிலர் அ.தி.மு.க. முகாமுக்கு அப்ளிகேஷன் போட்டுவைத்தார்கள். அவர்களைஎல்லாம்வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்த அ.தி.மு.க. தலைமை, அவர்கள் மூலமாகவே மதுரை தி.மு.க-வை ஆட்டிப்படைத்தவர்களின் வண்ட​வாளங்களைக் கறக்கும் திட்டத்தில் இருக்கிறது!'' 
''தேர்தல் நேரத்தில், அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கில் முன் ஜாமீன் வாங்கி இருந்த தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ் பாபு, கடந்த 17-ம் தேதி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்து, பிணை கொடுத்து வெளியில் வந்தாரே... அதுவும் இதன் தொடர்ச்சியா?''
''அட, அதெல்லாம் ஜுஜுபி வழக்கு! சென்னையில் இருந்து  போலீஸ் அதிகாரிகள் குழு ஒன்று, மதுரையில் முகாமிட்டு விசாரணையைத் தொடங்கிவிட்டது. எஸ்.பி. தலைமையில் ஊடுருவி இருக்கும் இவர்கள், மதுரைக்காரர்களின் மகாத்மியங்களைத் தோண்டித் துருவுகிறார்கள். 16-ம் தேதி, ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்ற சில மணி நேரத்திலேயே, மதுரையின் முக்கிய தி.மு.க. பிரமுகர் வீட்டுக்குள் ஆஜரானவர்கள், ஒரு கட்டுமான கம்பெனியின் பெயரைச் சொல்லி, 'இது உங்களுடையதுதானே' என்று கொக்கி போட்டார்களாம். உடனே, 'உங்களை யார் அனுப்பினது? எனக்கும் போலீஸ்ல ஆள் இருக்காங்க. உங்ககிட்ட ஐ.டி. கார்டு இருக்கா?' என்று பழைய பந்தா காட்டினாராம் அந்த நபர். 'மிஸ்டர்... நாங்கள் உங்களை விசாரிக்க வந்து இருக்கிறோம், யார் சொல்லி வந்திருக்கிறோம் என்று கேட்கிற இடத்தில் இப்போ நீ இல்லை!' என்று சொன்ன பிறகும் மடங்கவில்லையாம். 'எந்த கேஸ்ல என்னைய விசாரிக்கிறீங்க?' என்று கேட்டாராம். 'என்ன கேஸ்ல விசாரிக்கலாம்? நாமக்கல் கேஸ் சம்பந்தமா விசாரிக்கலாமா?' என்று வந்தவர்கள் சொல்ல... வியர்த்து விறுவிறுத்துப்​போனாராம் புள்ளி!''

''காலம் மாறிவிட்டதை அவர் அந்த நேரத்தில்தான் உணர்ந்தாராம். அதற்கு மேல் வீறாப்புக் காட்ட முடியாமல், கேட்ட கேள்விகளுக்கு மென்று விழுங்கி பதில் சொன்னாராம். 'நான்கு வருடங்களுக்கு முன்பு, வருடத்துக்கு ஒரு கோடி ரூபாய்க்குக்கூட கான்ட்ராக்ட் எடுக்க முடியாத நிலையில் இருந்த இந்த கம்பெனி, இன்று நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு கான்ட்ராக்ட் வேலைகளை எடுத்துச் செய்யும் அளவுக்கு அசுர வளர்ச்சி கண்டது எப்படி?' என்று துளைத்தார்களாம். கைது உறுதி என்று கலக்கத்தில் இருக்கிறார் பிரமுகர்!''
''வேறு என்ன மாதிரியான வழக்குகள் வருமாம்?'',''கடந்த நான்கு வருடங்களில் மதுரைக்குள் மூன்று தியேட்டர்கள் கை மாறி இருக்கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பத்திரப் பதிவு அலுவலகங்களையும் குத்தகைக்கு எடுத்துக் காரியங்கள் சாதித்து வந்த இன்னொரு தி.மு.க. பிரமுகரும் விசாரணை வளையத்தில் இருக்கிறார். மதுரை மாவட்டப் பத்திரப் பதிவு அலுலகங்களில் செய்திருக்கும் அத்துமீறல்கள் குறித்தும் விசாரிக்கிறார்கள். கட்டடங்கள் இருப்பதை மறைத்து, காலி இடம் என்று காட்டியே மதுரை மாவட்டத்தில் ஏகப்பட்ட சொத்துகள் பத்திரப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கில் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி, தன்னுடைய பாக்கெட்டை நிரப்பி இருக்கிறார் அந்தப் பிரமுகர். இதைத் தோண்டித் துருவிய அதிகாரிகள் கடந்த நான்கு வருடங்களில் மதுரை மாவட்டத்தில்  50 லட்சத்துக்கு மேல் பதிவான சொத்துகள்பற்றிய விவரங்களைக் கேட்டு இருக்கிறார்களாம்.''

''மதுரை தி.மு.க. பிரமுகர் ஒருவரின் குடும்பத்தில் நடந்த தற்கொலைவிவகாரத்தின் மர்மங்களும் தோண்டப்படலாம். தேர்தலுக்கு முன்பாக கூடல் புதூர் ஏரியாவைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் கடத்தப்பட்டு, முக்கிய நபர் ஒருவரின் தோட்டத்தில் சிறை வைக்கப்பட்டார்கள். இது தொடர்பாக, கூடல் புதூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டு, அதற்கு ரசீதும் வழங்கப்பட்டு இருக்கிறது. விவகாரம் வில்லங்கமாவது தெரிந்ததும், மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டு அந்தப் பெண்களை விடுவித்து இருக்கிறார்கள். இந்த விவகாரமும் இப்போது தோண்டப்படுகிறது. கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகள், மதுரையில் நிறையவே குவியப்போகிறதாம். 'ஏராளமான சம்பவங்கள் புகார் தரப்படாமல் அமுக்கப்பட்டன. எனவே, கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பாதிப்புகள் குறித்து அனைவரும் புகார் சொல்லலாம் என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். இந்த புகார்களை வைத்து மதுரையில் தனி கோர்ட் உருவாக்க வேண்டும்' என்று மதுரை வக்கீல்கள் சிலர் சொல்கிறார்கள். சரண்டர், அரெஸ்ட், அப்ரூவர், என்கவுன்ட்டர் எனப் பலரும் பயத்தில் திரிகிறார்கள். இந்நிலையில் நேற்று மதுரை நகரில் உள்ள லாட்ஜுகளுக்குள் போலீஸ்படை புகுந்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ரவுடிகளை சுற்றி வளைத்து கைது செய்தார்கள். இவர்களின் குற்ற ஜாதகத்தை அலசினால் சில தி.மு.க.பிரமுகர்களுக்கும் சிக்கல் ஆரம்பம் ஆகலாம்!''
பி.கு : நீங்க‌ள் ம‌துரை ம‌ற்றும் அத‌ன் சுற்று வ‌ட்டார‌த்தை சேர்ந்த‌ பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர் எனில் த‌ய‌வு செய்து வெளிவ‌ந்து உங்க‌ள் இள‌ந்த‌ உரிமை அனைத்த‌யும் மீட்டெடுங்க‌ள். Thanks : Vikatan

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf