அழகாக ஜொலிக்க விரும்புகிறீர்களா? |

ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள்.

ஆறு, ஏழு மணி நேரம் தூக்கம் அவசியம். (செல்போனை நோண்டிக் கொண்டிருப்பது, சீரியல்களில் மூழ்கிவிடுவதை தவிர்த்தாலே தூங்க நேரம் கிடைக்கும். நன்றாக தூக்கமும் வரும்.)

நார்ச்சத்து உணவுகள் அதிகமாக உட்கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகளைச் சமைக்காமல் சாலட் செய்து சாப்பிடவும்.

தினமும் இருமுறை குளிக்க வேண்டும். எத்தனை அசதியாக, சோம்பலாக இருந்தாலும் படுக்கைக்குச் செல்லும் முன் குளித்துவிட்டுப் படுக்கவும்.

உடலுக்கும் தலைமுடிக்கும் தொடர்ந்து ஒழுங்காக எண்ணை தேய்க்கவும். அழகு சாதன பொருட்களை உபயோகித்தால் அவை மருத்துவத்தன்மையும், (ஹெர்பல்), இயற்கை தன்மையும் மிகுந்ததாக இருக்க வேண்டும்.

பழங்கள் நிறையச் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி கண்டிப்பாகச் செய்ய வேண்டும். ஒல்லியான, ஆரோக்கியமான உடல்வாகு வேண்டுமென்றால் அதற்காக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

படுக்கச் செல்லும் முன் ஒரு கிளாஸ் பால் குடியுங்கள். கால்சியம் கிடைக்கும். மேனி மெருகு பெறும்.

கூடிய வரை காலநிலைக்கு ஏற்ப உடையணிய வேண்டும். மிக அதிக வெப்பம், மிக அதிகமான குளிர் இரண்டுமே சருமத்தில் அதிகம் படக்கூடாது.

வறுத்த, பொரித்த, மணமூட்டப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம்.

நள்ளிரவு வரை கண் விழிக்கக் கூடாது.

ரசாயனங்கள் கலந்த பானங்கள், உணவுகள் வயிற்றுக்கும், காஸ்மெடிக்ஸ் வகைகள் சருமத்துக்கும் கேடு விளைவிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்கலாம்.

ரோஜா இதழ்களை அரைத்து அதில் வேக வைக்காத உருளைக் கிழங்கை துருவிப்போட்டு, அரை எலுமிச்சையைப் பிழிந்து குளிர்சாதன பெட்டியில் 20 நிமிடங்கள் வைத்து எடுத்து கண்களின் கீழே தடவி வந்தால் `கருவளையம்' மறைத்துவிடும். சிலருக்கு கண்களின் வெளிப்பகுதியில் சுருக்கங்கள் இருக்கும். இதை `க்ரோபீட்' என்பார்கள். மேற்கண்ட கலவையை பூசிவந்தால் அதுவும் காணாமல் போய்விடும்.

முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமென்றால் இளமையில் கொஞ்சம் கஷ்டப்படுங்கள் என்று சொல்வார்கள். அழகை விரும்பினாலும் அப்படித்தான். கொஞ்சம் கஷ்டப்பட்டு சில முயற்சிகளை செய்யத்தான் வேண்டும். செய்து பாருங்களேன்!

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf