இறால் கபாப் |
இறால் கபாப்: தேவையானவை
இறால் - 1/2 கிலோ
கடலை மாவு - 1/2 ஆழாக்கு
அரிசி மாவு - 1 கையளவு
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - பொரிப்பதற்கு
ஆப்ப சோடா - 1 சிட்டிகை
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
இறால் கபாப் செய்முறை:
இறாலை தோல், குடல் நீக்கி சுத்தம் செய்யவும்.
கடலை மாவு, அரிசி மாவு, ஆப்ப சோடா, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள்தூள், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையில் சுத்தம் செய்த இறாலை முக்கி மாவில் தோய்த்து காய வைத்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இறால் கபாப் தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
No comments :
Post a Comment