Be Active at Workplace: சுறுசுறுப்பாக வேலை செய்ய ஒரு சில வழிகள்!

நம்முடைய பணியிடங்களில் சரியாக வேலை செய்ய முடியாமல் இருப்பதற்கு இரவில் சரியான தூக்கம் இல்லாமை, சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளாமை , உடற்பயிற்சிகளை தவிர்ப்பது போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. இதனால் மன உளைச்சல், மன அழுத்தம், அதிக கோபம், போன்ற பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள்.

இங்கே நீங்கள் ஒரு பணியிடத்தில் சுறுசுறுப்பாக இருக்கவும் , உங்கள் உடல் நலத்தை பேணவும் உதவும் சில குறிப்புகள் கொடுக்க முயற்சிக்கிறோம்.

நல்ல தூக்கம்: இரவில் நல்ல தூக்கம் இல்லாவிட்டால் மறு நாள் உங்கள் வேளைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.ஒரு நாளைக்கு குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும். இரவில் சீக்கிரமே உறங்கி அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்வது நாள் முழுவதும் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும்.

ஆரோக்கியமான காலை உணவு: உங்களுடைய நாளை சிறப்பாக அமைக்க நல்ல ஆரோக்கியமான காலை உணவு அவசியம். ஆற்றல் அளவை அதிகரிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானிய உணவுகள் (ஓட்ஸ் கஞ்சி அல்லது ரொட்டி ), புரத சத்துக்கள் நிறைந்த முட்டை, குறைந்த கொழுப்பு சத்துக்கள் அடங்கிய தயிர், மற்றும் வைட்டமின் சி நிறைந்த (ஆரஞ்சு அல்லது சிட்ரஸ் பழங்கள்) போன்றவைகளை உட்கொள்ளுங்கள். காலை உணவை தவிர்ப்பது பிற்காலத்தில் மிகப்பெரிய உடல் நோய்களுக்கு உள்ளாக்கும் என்பதை கவனத்தில் கொள்க.

நடக்க வேண்டும்: உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் வேலை செய்வதால் முதுகு வலி, சோம்பல் போன்றவை ஏற்படும். அதோடு உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்படாது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அலுவலகத்தில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நடப்பது சிறந்தது. இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக அமைந்து உடலுக்கு புத்துணர்வு ஏற்படும்.

தண்ணீர் குடிக்க வேண்டும்: நீண்ட நேரம் வேலை செய்வதால் உடலில் அதிக அளவு நீர் சத்து செலவாகிறது. அதை பூர்த்தி செய்ய தேவையான அளவு உடலுக்கு நீர் செலுத்துவது அவசியம். குடிநீர் உங்கள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும். விரும்பினால் தண்ணீருடன் சத்துள்ள பழ சாறுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

சூரிய ஒளி: சூரிய ஒளி உங்கள் உடலின் வெப்ப நிலையை இயற்கையாக சீராக்க உதவுகிறது. இதனால் மதிய வேளைகளில் சூரிய ஒளியில் சிறிது நேரம் நடப்பது சிறந்தது.

மதிய உணவு: அதிக கொழுப்பு அடங்கிய உணவு பொருட்கள் மதிய வேளையில் தூக்கம் வர காரணமாக அமையும். ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் மிக்க கோதுமை, ரொட்டி, சாலட் போன்ற உணவுகளை உட்கொள்வது சிறந்தது.

உரையாடல்: எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்காமல் நண்பர்களிடம் சிறுது நேரம் உரையாட வேண்டும். இதனால் உடலுக்கு தெம்பு ஏற்படும்.

மேலே கூறப்பட்ட அனைத்தையும் ஒரு நாள் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் நாள் அற்புதமாக, அமைதியாக அமைய இந்த வழிகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf