Clothing Tips: How to preserve Silk Sarees- பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்

பண்டிகை சீசன். பட்டுப் புடவை கட்ட வாய்ப்பு அதிகம் இருக்கும். உடுத்தின பிறகு அவற்றை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்...

பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்பதையும், அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது.

துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும்படி போடுவது நல்லது.
 
பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ, மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.

புதிதாக வாங்கும் பட்டுப் புடவைகளை, ஒரு ஆண்டுக்குள் துவைக்க வேண்டியது அவசியம். முதலில் துவைக்கும் போது, சோப்பு போடாமல், நல்ல தண்ணீரில், உடல் பகுதியைத் தனியாகவும், பார்டர் பகுதியைத் தனியாகவும் அலச வேண்டும்.
பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விட, கையால் துவைப்பதே மேல்.
பட்டுப் புடவைகளை, காற்று புகாத பாலிதின் கவர்களில் வைப்பது நல்லதல்ல; துணிப் பையில் போட்டு வைப்பது தான் நல்லது.
பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டைகளை, பட்டுப் புடவை களின் மேல் போட்டு வைக்கக் கூடாது. பட்டுப் புடவைகள் கெட்டுப் போக, அது ஒரு காரணமாக அமைகிறது.
ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவைக்க வேண்டும் என்பதில்லை. உடுத்திய பின் காற்று படும் இடத்தில் புடவையை வைத்து, பின் இஸ்திரி செய்தால் போதும்.
ஒரு படி தண்ணீரில், ஒரு தேக்கரண்டி கிளிசரினை கலந்து, பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால், சுருங்காமல், இழைகள் விலகாமல் இருக்கும்.
பட்டுப் புடவை எண்ணெய் கறை இருந்தால், சந்தனத்தை கறையின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து, அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf