Don't Get problem with Drinking: "குடிமகன்'களே! அவதி வேண்டாம்

மாலை ஏழு மணி ஆனால், மனம் அலைபாய்கிறது. அறிவு அதைக் கட்டுப்படுத்த முயன்றாலும், மனம் கேட்க மறுக்கிறது. நேராக, "டாஸ்மாக்' சென்று, ஒயின், விஸ்கி என, ஒரு, "குவார்ட்டர்' ஆவது, முழுங்கினால் தான், உடல் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற நினைப்பு. "பிளேடு' போட வேண்டாம்... விஷயத்திற்கு வாருங்கள்...' என, நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், அடுத்த நாள் தலைவலிக்கு, முழு புட்டி அமிர்தாஞ்சனைத் தேய்த்துக் கொண்டாலும், தலைவலி போகாதே! "குடி'க்கும் உரிமை உங்களுடையதே; அதை யாரும் கட்டுப்படுத்தவில்லை. உங்கள் நினைப்பைச் சற்றே மாற்றிக் கொண்டால், பிரச்னை எழாது என்பதற்கு தான், கீழே உள்ள விளக்கங்கள்.

சாப்பிடுவதற்கு முன், "குடி'த்தால் தான், "கிக்' ஏறும்:

உணவு சாப்பிடும் முன், "பெக்' அடித்தால் தான், "கிக்' ஏறும் என நீங்கள் நினைப்பது உண்மை தான். ஆனால், அளவுக்கு அதிகமாக குடிக்கும்போது, அடுத்த நாள் தலைவலியுடன் சேர்ந்த அரை மயக்கத்தை சமாளிப்பது எப்படி? எனவே, உணவு சாப்பிட்ட பின், மது அருந்துவது நல்லது. இப்படிச் செய்தால், ரத்தத்துடன் மது கலப்பது தாமதப்படும். இதனால், தலைவலி ஏற்படாது. மீண்டும் ஒரு, "ஸ்மால்' அடிக்க வேண்டும் என்ற எண்ணமும் எழாது.

காக்டெய்ல் கிக்'கே தனி பிரதர்:

"காக்டெய்ல்' அருந்தும்போது, ஆல்கஹால் கலப்பு குறையும் என, பெரும்பாலோர் கருதுகின்றனர். இது தவறு. பல வகையான மதுக்களில் காணப்படும், நிறமிகளும், சுவைகூட்டிகளும், உங்கள் ரத்தத்தைப் பதம் பார்த்து விடும். ரத்தத்தில் ஆல்கஹால் வெகு வேகமாகக் கலந்து விடும்.
கவர்ச்சியாய், அடர்நிறத்தில் உள்ள மதுவின், சுவைக்கு ஈடில்லை!

நல்ல நிறம், மணம், சுவை ஆகியவற்றைக் கொண்ட மது வகைகள், அடுத்த நாள் உங்களை அசத்தி விடும்; எழுந்திருக்கவே முடியாது. அதிக சர்க்கரை கொண்ட மது வகைகளுக்கும், "தடா' போடுங்கள். விஸ்கி, ரம், பிராந்தி ஆகியவற்றை விட, வோட்கா, ஜின், மைல்டு பீர் ஆகியவற்றைப் பருகலாம்.

ஒரு காபி குடித்தால், "ஹேங்ஓவர்' வராது:

"ஹேங்ஓவரை' விரட்ட, மீண்டும், ஒரு, "ஸ்மால்' குடிப்பதோ, காபி குடிப்பதோ, வலி நிவாரணி மாத்திரை சாப்பிடுவதோ தவறு. மீண்டும் ஒரு, "ஸ்மால்' குடிப்பது, நீங்கள் மதுவுக்கு அடிமையாக வழி வகுக்கும். காபி குடித்தால், உடலில் நீர்ச் சத்து குறைந்து விடும். வலி நிவாரணி, மிகக் குறைந்த மணி நேரத்திற்கே வேலை செய்யும்.

ஹேங் ஓவரை' விரட்ட, என்ன செய்யலாம்?

எந்த வகை மதுவுமே, நம் வயிற்றில் சென்றதும், "அசிடால்டிஹைடு' ரசாயனமாக மாறுகிறது. இது விஷத்தன்மை கொண்டது. இதனால், அதிக வியர்வை, குமட்டல், வாந்தி, இதயத் துடிப்பு அதிகரித்தல் ஆகியவை ஏற்படும். உடலுக்கு சக்தி கொடுக்கும் குளூக்கோஸ் உற்பத்தியாவதைத் தடுக்கும். இதனால், மெத்தனமான செயல்திறனுடன், உற்சாகம் இழந்து, எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அளவோடு, மது அருந்துவது நல்லது. சற்றே அதிகமானாலும், அடுத்த நாள், "ஹேங்ஓவர்' தான்! உடலில் ஆல்கஹால் அளவு முற்றிலும் குறைந்தவுடன், அதிகமாய் தலைவலி ஏற்படும். இதை விரட்ட, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்; நன்றாக தூங்க வேண்டும். மாற்று வழி ஏதும் இல்லை.

துக்கடா: "சாக்லேட், அன்னாசிப் பழத்துண்டு போன்ற, இனிப்புப் பண்டங்களைச் சாப்பிட்டுக் கொண்டே மது அருந்தினால், குட்டிக் குரங்கு போல குதியாட்டம் போடத் தூண்டும்' என, அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர். இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும்; தவிர்த்து விடுங்கள்.

"ஹைபோகான்ட்ரியாசிஸ்' என்றால் என்ன? என்ன நோய் இது?

உடல் நலத்தைப் பற்றி, வீணாக கற்பனை செய்து, கவலை கொள்வதற்கு, "ஹைபோகான்ட்ரியாசிஸ்' என்று பெயர். இந்த பாதிப்பு கொண்டவர்கள், உடலில் தோன்றும் அறி குறிகள் குறித்து, அளவுக்கு அதிகமாக கற்பனை செய்து, தனக்கு தீவிர நோய் இருப்பதாகக் கருதி, பல மருத்துவர்களிடம் செல்வர். மருத்துவர்கள், ஐயத்தை நீக்கினாலும், மீண்டும் பயம் கொள்வர். இதனால், இவர்கள் மட்டுமின்றி, இவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர்.

என்ன சிகிச்சை?

உடல் மற்றும் பாலியல் ரீதியான பாதிப்பு காரணமாகவோ அல்லது மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காகவோ, "ஹைபோகான்ட்ரியாசிஸ்' மனநிலைக்கு சிலர் தள்ளப்படுகின்றனர். இதோடு, படபடப்பு, மனப் போராட்டம் ஆகியவையும் ஏற்படும். பருவ வயதிலேயே இது ஏற்படக் கூடும். தனக்கு எய்ட்ஸ், புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் ஆகியவை ஏற்பட்டுள்ளதாக, இவர்கள் கற்பனை செய்து கொள்வர். இவர்களுக்கு, மன நல மருத்துவம் தேவை.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf