Venture Capital in tamil :- வென்ச்சர் கேபிட்டல்

உங்களிடம் பிரமாதமான பிஸினஸ் ஐடியா இருக்கிறதா? அந்த பிஸினஸை எப்படி நடத்தி வெற்றி காண முடியும் என்கிற வழியும் தெரிந்திருக்கிறதா? யெஸ் எனில் உங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டை செய்யத் தயாராக இருக்கின்றன வென்ச்சர் கேபிட்டல் நிறுவனங்கள்.

பொதுவாக, எந்த வகையான தொழில்களிலும் இந்த வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு செய்துவிட மாட்டார்கள். ஓரளவுக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட தொழிலாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் முதலீடு செய்வார்கள். உதாரணமாக, ஊறுகாய் தயாரிக்கப் போகிறேன் என்றால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு எதுவும் தராது.

ஆனால், பயோ டெக்னாலஜி தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஊறுகாய் தயாரித்து, அதை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறேன் என்று சொன்னால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் உங்கள் தொழிலில் முதலீடு செய்தாலும் செய்யலாம்.

வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டு களில் பாசிட்டிவ்-ஆன விஷயம், முதலீட்டுக்கு ஒரு வரம்பே இருக்காது. ஒரு கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை எடுத்த எடுப்பிலேயே போடுவார்கள். இந்த முதலீட்டுக்கு வட்டி எதுவும் தரத் தேவையில்லை என்பது இன்னும் விசேஷம். ஆனால், தொழில் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட்டு விகிதாசாரப்படி பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பது கண்டிஷன்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வென்ச்சர் ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட், ஐ.எஃப்.சி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் ஃபண்ட்ஸ், எஸ்.ஐ.டி.பி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் லிமிடெட் என பல நிறுவனங்கள் இருக்கின்றன. எனினும், நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் பெரிய அளவில் புதுமைகள் எதுவும் இல்லாத வழக்கமான தொழில் எனில் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகளின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டாம்.

மற்றவர்கள் கொடுக்கும் கடனை வைத்துத்தான் தொழில் நடத்த முடியும் என்று நினைக்கிறவர்களுக்குத்தான் இதெல்லாம். கையில் பணமிருக்கு. இப்போதைக்கு கடனே தேவை இல்லை! என்று நினைப்பவர்கள் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை! நீங்கள் நேரடியாக தொழிலை ஆரம்பித்துவிடலாம்! பெஸ்ட் ஆஃப் லக்!

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf