Chrome browser tips in tamil :- குரோம் பிரவுசர் டிப்ஸ்


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பல பிழையான குறியீடுகள் காரணமாக, அதன் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாகச் சில ஆண்டுகளாகவே இருந்து வந்தது.

இதனால், பல பயனாளர்கள் <a href="https://www.google.com/intl/en/chrome/browser/">குரோம் பிரவுசருக்கு</a> மாறத் தொடங்கினர். இன்று பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் பிரவுசராக குரோம் உள்ளது.

அதில் விரைவாகவும் எளிதாகவும் பயன் பெறும் வகையிலான சில டிப்ஸ்கள் இங்கு வழங்கப்படுகின்றன.

இணைய தளம் ஒன்றைத் திறந்தவுடன், அதில் உள்ள வீடியோக்களும் மற்ற ப்ளாஷ் பைல்களும் தாமாக இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட வேண்டுமா? குரோம் பிரவுசரின் அட்ரஸ் பாரில் chrome://settings/content என டைப் செய்து கிடைக்கும் தளம் செல்லவும். இங்கு கீழாகச் சென்றால், "Plugins” என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதில் "Click to play.” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அனைத்து மல்ட்டி மீடியா பைல்களும் அதன் நிலை மறைக்கப்பட்ட (grayedout) பெட்டிகளாகத் தோற்றமளிக்கும். இதில் கிளிக் செய்தால் இவை இயக்கப்படும். சில குறிப்பிட்ட தளங்கள் தாமாக இயக்கப்படக் கூடாது என முடிவு எடுக்க விரும்பினால், "Manage exceptions” என்ற பட்டன் அழுத்தி அவற்றைத் தரலாம்.

பிரவுசரில் உள்ள டேப்களை விண்டோவின் உள்ளும் வெளியேயுமாக இழுத்து அமைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இன்னொரு ஷார்ட்கட் வழியும் உள்ளது. டேப் ஒன்றின் தலைப்பு பெட்டியின் நடுவே கிளிக் செய்தால், (பிரவுசர் விண்டோவின் மேல் பகுதியில்) அந்த டேப் மூடப்படும்.

நடுப்பகுதியைக் கொண்டு கிளிக் செய்வது குரோம் பிரவுசரில் பல செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. லிங்க் ஒன்றில் இவ்வாறு கிளிக் செய்திடுகையில், அந்த லிங்க்குடன் தொடர்பு உள்ள தளம் புதிய டேப்பில் பின்புலமாகத் திறக்கப்படும். இதன் மூலம், எந்த தலையீடும் இன்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்திலேயே செயல்படலாம். லிங்க் மட்டுமின்றி, கீழ்விரி மெனு பட்டியலில் உள்ளவற்றிலும் இதே போல நடுப்பகுதியில் கிளிக் செய்து புதிய செயல்பாட்டினைக் கொள்ளலாம். நீங்கள் நடுப்பகுதி கிளிக் செய்திட விரும்பவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். Ctrl கீ அழுத்தியவாறு, லெப்ட் கிளிக் செய்தால், இதே செயல்பாடு மேற்கொள்ளப்படும். இதே நிலையில், ஷிப்ட் கீ அழுத்தி, லெப்ட் கிளிக் மேற்கொண்டால், டேப்பிற்குப் பதிலாக, புதிய விண்டோவில் குறிப்பிட்ட தளம் திறக்கப்படும்.

இன்னொரு அட்ரஸ் பார் குறிப்பினையும் இங்கு பார்க்கலாம். இதில் தேடல் சொற்கள் அல்லது இணைய முகவரியினை டைப் செய்த பின்னர், Alt+Enter கீகளை அழுத்தினால், தேடலுக்கான முடிவுகள், புதிய டேப்பில் தரப்படும். நீங்கள் இருக்கும் பக்கத்தில் கிடைக்காது.

ஒன்றுக்கு மேற்பட்ட டேப்களை நகர்த்தவோ அல்லது மூடவோ விரும்பினால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, இணைய தளப் பக்கங்களைக் காட்டும் டேப்களில் கிளிக் செய்தால் போதும். அவை அனைத்தும் தேர்ந்தெடுக் கப்படும். பின்னர் இவற்றை மொத்தமாக, புதிய விண்டோவிற்கு இழுத்துச் செல்லலாம். அல்லது Ctrl+W கீகளை அழுத்தி மூடிவிடலாம்.

தவறுதலாக டேப் ஒன்றினை மூடிவிட்டீர்களா? Ctrl+Shift+T என்ற கீகளை அழுத்தினால், அவை மீண்டும் கிடைக்கும். மீண்டும் தொடர்ந்து இந்த கீகளை அழுத்தினால், ஏற்கனவே மூடப்பட்ட இணைய தளப் பக்கங்கள், பின் நிகழ்விலிருந்து வரிசையாகக் கிடைக்கும்.

Ctrl+H என்ற கீகளை அழுத்தி எப்போதும் உங்களுடைய பிரவுசிங் நடவடிக்கைகளைக் (browsing history) காணலாம். ஏதேனும் ஒரு டேப்பில் உள்ள இணைய தளத்தில் பார்த்த முந்தைய பக்கங்களையும் காணலாம். இதற்கு பிரவுசரின் மேல் இடது பக்கம் உள்ள Back பட்டனை அழுத்திப் பிடித்தவாறு அதனைக் கிளிக் செய்திட வேண்டும். டிப்ஸ் 3 மற்றும் 4ல் குறிப்பிட்ட கண்ட்ரோல் + நடு கிளிக் அல்லது ஷிப்ட்+ க்ளிக் இங்கேயும் செயல்படும். இதன் மூலம், பழைய லிங்க் ஒன்றை புதிய டேப் அல்லது விண்டோவில் திறக்கலாம்.

இணைய தளப் பக்கத்தில் உள்ள டெக்ஸ்ட் ஒன்றினை ஹை லைட் செய்தால், அதன் பின்னர், அதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு அதனைத் தேடி அறிவதற்கான விருப்பக் குறி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டில், லிங்க்காக இல்லாமல், இணைய தள முகவரி ஒன்று இருந்தால், அதனை காப்பி/பேஸ்ட் செய்திடாமல், பெறும் வழி கிடைக்கும்.

டெக்ஸ்ட் ஹைலைட் செய்து, அதனை அப்படியே அட்ரஸ் பாருக்கு இழுத்துச் சென்று புதிய தேடல் அல்லது இணைய உலாவினை மேற்கொள்ளலாம்.

தேர்ந்தெடுத்த இணைய முகவரி டெக்ஸ்ட்டை அப்படியே இழுத்துச் சென்று பிரவுசரின் மேலாக இழுத்துச் சென்று, அதாவது வலது கோடியில் இருக்கும் டேப்பிற்கு அருகே, விட்டால், புதிய டேப்பில் அது காட்டப்படும்.

தேடல் சொற்களை குரோம் பிரவுசரில் அமைக்கையில், மாறா நிலையில், அது கூகுள் தேடல் டூலை பெற்று தேடுகிறது. இதற்குப் பதிலாக, நீங்கள் Amazon அல்லது YouTube தளங்களில் தேட வேண்டும் என எண்ணினால், அந்த தேடல் தளத்தின் பெயரை டைப் செய்து, பின்னர் டேப் கீயை ஒரு முறை அழுத்தியபின், தேடலுக்கான சொற்களை டைப் செய்திடலாம். வேறு சர்ச் இஞ்சின்களைப் பயன்படுத்த எண்ணினால், அட்ரஸ் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் "Edit search engines.” என்பதனைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விரும்பும் சர்ச் இஞ்சின் பெயர்களை அமைக்கலாம். நீங்கள் அமைக்கும் தேடல் தளங்களுக்கு கீ போர்டில் ஷார்ட் கட் கீகளை அமைக்கும் வசதியும் இங்கு கிடைக்கும்.

உங்கள் கூகுள் ட்ரைவில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பைல்களை, குரோம் பிரவுசரின் அட்ரஸ் பாரில் இருந்தே நேரடியாகத் தேடிப் பெறலாம். மேலே சொன்ன வகையில் "Edit search engines” என்ற மெனுவினைத் தேடிப் பெறவும். இங்கு புதிய சர்ச் இஞ்சினாக "Google Drive” என அமைக்கவும். இதற்கான இணைய முகவரியாக, http://drive.google.com/?hl=en&amp; tab=bo#search/%s என டைப் செய்திடவும். பின்னர் Done என்ற பட்டனை அழுத்தினால், ட்ரைவ் உங்களுக்குக் கிடைக்கும். ஷார்ட்கட் கீயாக "gd” எனக் கூட அமைக்கலாம். இவ்வாறு அமைத்த பின்னர், அட்ரஸ் பாரில் "gd” என டைப் செய்தால், நேரடியாக கூகுள் ட்ரைவில் உங்கள் பக்கத்திற்குச் செல்வீர்கள்.

மேலே டிப்ஸ் 12ல் தந்துள்ளதனை, Gmail தளத்திற்கும் அமைக்கலாம். மேலே கூறியபடி சென்று, "Gmail,” என டைப் செய்திடவும். இதற்கான ஷார்ட் கட் கீகளாக gm என அமைக்கவும். அடுத்து இணைய முகவரியாக, https://mail.google.com/mail/ca/u/0/#search/%s என அமைக்கவும்.

உங்களுடைய புக்மார்க்குகளைத் தேடிப் பெறவும் ஒரு ஷார்ட்கட் வழி உள்ளது. இதற்கு குரோம் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திட வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இதன் பெயர் Holmes. இதனை இன்ஸ்டால் செய்தவுடன், அட்ரஸ் பாரில் ஒரு ஆஸ்டெரிக் (*) அடையாளம் ஒன்றை டைப் செய்து, பின் டேப் ஒருமுறை தட்டி, அடுத்து நீங்கள் காணவிரும்பும் புக்மார்க் சார்ந்த சொற்கள் எதனையேனும் டைப் செய்து, அதனைப் பெறலாம்.

நீங்கள் அமைத்துள்ள குரோம் புக்மார்க் அனைத்தையும் பெற எண்ணினால், Ctrl+Shift+B என்ற கீகளை அழுத்தினால், புக்மார்க் பார் காட்டப்படும். மீண்டும் அழுத்த, பிரவுசரைப் பார்ப்பீர்கள்.

Ctrl+Shift+D கீகளை அழுத்தினால், திறந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தளங்களும் புக்மார்க்காக ஒரு தனி போல்டரில் சேவ் ஆகும். மீண்டும் அவை அனைத்தையும் திறக்க, போல்டரில் ரைட் கிளிக் செய்து, "Open all bookmarks in new window.” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf