Business'es That you can do from home:- சிறந்த 10 தொழில்கள்

 ”வீட்லதான் சும்மா இருக்கேன்” என்று அங்கலாப்பவர்கள்தான் பலபேர்.  தங்களுக்குள் இருக்கும் திறமைகளையும், ஆர்வத்தையும் சற்று அலசி யோசித்தாலே சும்மா இருக்கும் நேரத்தில் பயனுள்ள வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும்.  அப்படி வீட்டில் இருந்த படியே செய்யச்சிறந்த பத்து தொழில்கள் பற்றிப் பார்க்கலாம்.

1. உணவு உபசரிப்பு

உங்கள் சமையல் கை ருசி பாராட்டப்படுகிறதா... யோசிக்காமல் இந்த உணவு உபசரிப்பில் இறங்கிவிடுங்கள்.  அருகில் பாச்சிலர் மேன்ஷனோ, லேடீஸ் ஆஸ்ட்லோ இருந்தால்.. வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு உணவு செய்து தந்து லாபம் பெறலாம்.  பின்னே... உணவை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன?

2,புகைப்படமெடுத்தல்

புகைப்படமெடுத்தல் சிலருக்கு ஆர்வமாக இருக்கும், இன்னும் சிலருக்கு ஹாபியாக இருக்கலாம், ஆனால் இதை ஒரு தொழிலாகவும் எடுத்துக் கொள்ள தகுதியானதே..  சரியான கருவியும், புகைப்படம் மற்றும் அந்தக் கருவி குறித்த செயல்பாடுகள் பற்றிய சில அடிப்படைகளை தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.  இந்தக்கலையில் பெயரெடுத்தவிட்டால், உங்களுக்கு ஆஃபர்கள் வந்துகொண்டே இருக்கும், 

3,செல்லப் பிராணிகள் ஸ்டோர்ஸ்

ஏற்றத்தாழ்வு இல்லாமல் பலரும் செல்லப்பிரானிகள் வளர்க்கிறார்கள்.  இதுதான் சூட்சும்ம்.  செல்லப்பிரானிகளுக்குத்  தேவையான உணவு,மருந்து, ஷாம்பு... என அனைத்தையும் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம். 

அருகில் உள்ள வெட்டினரி ஆஸ்பத்திரியுடன் ஒரு டை அப் வைத்துக் கொண்டீர்களானால் பிசினஸ் வெகு சீக்கிரம் பிரபலமாகிவிடும்.  பிராணிகள் வளர்ப்பவர்கள் மட்டுமல்ல பிராணிகளும் பழக்கமாகிவிடும்

4,திருமண வடிவமைப்பு

மாப்பிள்ளை அழைப்பில் இருந்து, கட்டுசாதக்கூடை வரையான திருமணத்திற்கான சகல வேலைகளைகளையும் வடிவமைத்து நிகழ்த்திக்காட்டுவது,  இது ஆண்களுக்கு மட்டுமே ஆனது என்றகாலம் மலையேறிவிட்டது,  புதுமையும், வேகமும், செயல்திறனும், நல்லுறவும் இருந்தால் போதுமானது,  ஒரு ஃபங்ஷன் முடித்துக்கொடுத்தால் லாபம் லட்சங்களில் நிற்கும்.

5,வெப் பேஸ்டு வணிகம்

கம்ப்யூட்டரின் உதவியோடு வெப் சார்ந்த விஷயங்களில், வெப் டிசைனராகவோ, வெப் டெவலப்பராகவோ தொழில் துவங்கலாம்.  கம்ப்யூட்டர், இண்டர்நெட், ஸ்கேனர், பிரன்டர் என கட்டமைப்பிற்கு சில ஆயிரங்கள் தேவைப்படும்.  அதை விட முக்கியமாகத் தேவைப்படுவது, விடா முயற்சியுடன் கூடிய ஆர்வம் தான்.  எல்லாம் கூடி வந்தால் உங்கள் பிசினஸ் ஜெட் வேகத்தில் பயணிக்கும் இந்த வணிகத்தில்

6,தோட்டம்

பூக்கள் மீதும், புற்கள் மீதும் ஒரே அளவு பாசம் கொண்டவர்களும், செடி கொடிகள் மீது விருப்பம் கொண்டவர்களும், வீட்டிலேயே தோட்டம் போடலாம், அதோடு அதை பிசினஸாகவும் மாற்றலாம்.  சிறு செடிகளை பதியம் போட்டு, நாற்றுகளாக்கி நர்சரி போல் அமைத்து விற்பனை செய்யலாம். ஹார்டிகல்சர் தெரிந்திருந்தால் பக்கத்து அலுவலகங்களில் அவுட் சோர்ஸ் முறையில் அவர்களது தோட்டத்தை பராமறித்தும் பணம் பார்க்கலாம். மணம் வீசும் தொழில் என்பது இதுதான்.

7,ஆன்லைன் வர்த்தகம்

தனிமைப்பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற துறை இந்த ஆன்லைன் வர்த்தகம்.  பங்குச்சந்தை பற்றியும் அதன் போக்கு குறித்தும் அலசுபவர்களுக்கு ஏற்ற துறை.  வீட்டில் ஒரு கம்ப்யூட்டரும், வங்கியில் பணமும் இருந்து, ஆன்லைன் வர்த்தகம் குறித்து சிறிது அறிவும் இருந்தால், நீங்கள் தான் எஜமானர்.  ஜமாக்கலாம்.

8,ரியல் எஸ்டேட் கன்சல்டன்சி

மேலே சொன்னவகையருக்கு நேர் எதிரானது இந்தத்துறை.  அலைய அஞ்சாதவர்களுக்கும், எந்த ஏரியாவில் நிலத்தின் மதிப்பு உயரும் என்பதை கணிக்கத் தெரிந்தவர்களுக்கும் இது பணம்தரும் சுரங்கமான தொழில். வீட்டு வாடகை- போக்கியம்- விற்பனை முதலியவற்றிக்கு கையை காட்டிவிடுவதிலேயே  பெர்சன்டேஜ் கமிஷன் பணம்பெறலாம்.

9,மார்க்கெட்டிங் கன்சல்டன்சி

ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் பணி புரிந்திருந்து, தற்போது வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த மார்க்கெட்டிங் கன்சல்டன்சி மிகவும் ஏற்றது.  முதுலில் தெரிந்தவர்களிடமிருந்து துவங்கி, உங்களது ஆலோசனைகளை தொடரலாம். உங்களுக்கு ஆர்வமும் பேச்சுத்திறனும் இருப்பின் இதில் பெரிதாய் வளர முடியும்.

10,ஆட்டோமோடீவ் பாகங்கள்

இன்றைக்கு கார் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கார் வைத்திருப்போருக்கும் மோட்டார் கார் குறித்து முழுமையாகத் தெரியாது, இந்நிலையில் கார் பாகங்கள் பற்றியும் அதன் உதிரிபாகங்களின் சிறு டீலர்ஷிப் எடுக்கலாம்.  இந்த மார்க்கெட்டிங் துறை தயாரிப்பாளருக்கும் பயனாளிக்கும் பாலமாக இருப்பதோடு, உத்தரவாதமான லாபத்தை தரக்கூடியதுமாகும்.
    
 -உங்கள் சாய்ஸ் எதுவாக இருந்தாலும், ஆர்வமும், திட்டமிடுதலும் இருந்தால் நிச்சயம் பிசினஸ் சக்சஸாகவே இருக்கும்

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf