Be Cool in Summer: கோடையில் `கூல்’ ஆகலாம்!

கோடை காலம் வந்தாலும்தான் வந்தது, எல்லா இடங்களிலும் அக்னி நட்சத்திர தகிப்பு மக்களை பாடாய்படுத்துகிறது. அதில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்படியென்றால், தர்ப்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். கோடையை கூல் ஆக்கிவிடலாம்.

தர்பூசணி : தாகத்தைத் தணிக்கும் தர்ப்பூசணிக்கு பசியை போக்கும் சக்தியும் உண்டு. வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும்.

ஆரஞ்சு : பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும், பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் உதவுவது இது. ஒருவர் தொடர்ந்து ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் அவரது வாய் சுத்தமாகிறது. காய்ச்சலுக்கும் இது அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.

காய்ச்சலின்போது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் உடலுக்குத் தெம்பு அதிகரிக்கும். அதோடு, செரிமானத்தைச் சரியாக்கி, பசியைத் தூண்டும். குடல்களின் பாதையில் தொற்று நேராமல் பராமரிக்கும். குடல்களின் இயக்கத்திற்கு வலுச் சேர்க்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் குமட்டலுக்கு ஆரஞ்சு சிறந்த மருந்து. செரிக்காத உணவால், வயிற்றில் பொருமலுடன் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறை குடிக்க உடனடி நிவாரணம் கிடைக்கும். ஜலதோஷம் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிப்பது நல்லது.

சாத்துக்குடி : குளிர்ச்சியான இனிப்பு சுவை கொண்ட சாத்துக்குடி தாகத்தைத் தணிக்கக் கூடியது. வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப்பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு இது உதவுகிறது. வயிற்றில் அமிலத்தன்மை சேர்வதை இதில் உள்ள காரத்தன்மை குறைத்து, வயிறு எரிச்சலைக் கட்டுப் படுத்துகிறது. நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஆற்றல் இதில் நிறைய உள்ளது.

சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடி பழச்சாற்றை வெந்நீரில் கலந்து அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது.

வெள்ளரிக்காய் : வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகை உண்டு. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியை தருகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது. வெள்ளரியில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்கள் இதை சாப்பிடுவது நல்லது. வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் அதிகப் பலன்கள் கிட்டும். நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களும் இதை சாப்பிடுவது நல்லது

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf