கணையத்தின் காவலன் – சலபாசனம்

சலப என்றால் வெட்டுக்கிளி. இது ஒரு பூச்சியின் பெயர். இந்த ஆசனத்தின்
உச்ச நிலையில் உடல், ஒரு வெட்டுக்கிளியைப் போல தோற்றமளிக்கிறது.

தரை மீது குப்புறப்படுங்க. உள்ளங்கைகள் தரையில் படர்ந்திருக்க வேண்டும்.
அப்ப இந்த நேரத்துல கைகள் ரெண்டுமே தரை மீது உரசியபடி நீட்டியிருக்கும்.
தலையைச் சற்றே தூக்கி, முகவாயை தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
அதே சமயத்துல கால்கள் ரெண்டும் இணைந்து ஒரே நேர்கோடு போல நீட்டி இருக்க
வேண்டும். அப்போது உள்ளங்கால்கள் மேல்நோக்கி அமைந்திருக்கணும். அதாவது
தலை முதல் கால்வரை உடல் ஒரே நேர்கோட்டில் அமைதல் வேண்டும்.

இரு கைகளின் முஷ்டியையும் இடுப்பின் கீழ்ப்பகுதியில் வைத்துக் கொள்ளவும்.
உள்ளங்கால்களை மேல்நோக்கியபடியே, இடுப்பிலிருந்து இரண்டு கால்களையும்
இணைத்தபடியே மேலே தூக்கவும். முகவாய் தரைமீது தொட்டிருக்கவேண்டும்.
மார்பு, கைகள், இடுப்புப் பகுதிவரை தரை மீது படர்ந்தும், இடுப்புக்கீழான
பகுதிகள் உள்ளங்கால்கள் வரை முக்கோணத்தின் ஒரு சாய்வு போல மேல்நோக்கித்
தூக்கியிருக்க வேண்டும். அந்த நிலையில் ஒரு நிமிடம் நீடித்திருக்க
வேண்டும்.

இதுவே சலபாசனம்.

உடல் கீழ்நோக்கிச் செல்லும் போதெல்லாம் மூச்சை வெளியேவிட்டு, மேலே
எழும்போது மூச்சை உள்ளே இழுத்தல் வேண்டும். உச்ச நிலையில் முழங்கால்கள்
நேராக இருக்க வேண்டும். இந்தச் சலபாசனம், புஜங்காசனத்தின் உபரி பலன்களைப்
பூத்தி செய்கிறது.

உடல் இலேசாக, சுறுசுறுப்பானதாக, நன்கு செயல்படக்கூடியதாக ஆகிறது.
புலன்களைக் கட்டுப்படுத்துகிறது.

மலச்சிக்கல், வாயுத் தொல்லை, நீரிழிவு, இடுப்பு வலி போன்றவற்றை
எதிர்த்துப் போராடுகிறது. பொதுவாக இடுப்பு, முதுகின் கீழ்பகுதி,
இடுப்பெலும்பு, வயிறு, தொடை, சிறுநீரகம், கால்கள் ஆகியவை ஊக்கம்
பெறுகின்றன. மிக முக்கியமாக கணையம் நன்கு செயல்படுகிறது. அதனாலே இந்த
ஆசனம், கணையத்தின் காவலன் எனப்படுகிறது.

சிறுநீரக் கோளாறுகளால் அவதிப்படுபவர்கள், குடல் வால் மற்றும் அதிக ரத்த
அழுத்தக்காரர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.

No comments :

Post a Comment

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf