மூலிகை மருத்துவம்: மு(பு)திய குழந்தைகள்
Meal Maker Masala: மீல்மேக்கர் மசாலா
What is Mullaip Periyar or Mulla Periyaar? : முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை வரலாறு:
மதுரை நாடு என்பது மதுரை மாவட்டம், திருச்சி மாவட்டம், இராமநாதபுரம் மாவட்டம், நெல்லை மாவட்டங்களும், தென்திருவாங்கூர் பகுதியும் அடங்கும். 1529 முதல் 1564 வரை விஸ்வநாத நாயக்கர் ஆட்சி செய்தார். 1572 வரை முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1595 வரை வீரப்ப நாயக்கரும் ஆட்சி செய்தனர். 1601 வரை இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கரும், 1623 வரை முத்துவீரப்ப நாயக்கரும், 1659 வரை திருமலை நாயக்கரும் ஆட்சி செய்தனர். திருமலை நாயக்கர் முதல் இராணி மங்கம்மாள் ஆட்சி வரை ஒவ்வொரு காலகட்டத்தில் திருவாங்கூர் ராஜாக்கள் வரி செலுத்த மறுத்தனர். பின் போரில் தோல்வியுற்று வரி செலுத்தினர்.1790 மார்ச் 6ல் மதுரை மாவட்டம் உதயமானது. ஏப்.5ல் முதல் கலெக்டராக ஏ. மிக்லட் நியமிக்கப்பட்டார். 1798ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி, முல்லை, பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி தண்ணீர் முழுவதையும் மதுரை, இராமநாதபுரம் பகுதிக்கு கொண்டு வர திட்டமிட்டார்.
இதற்காக முத்து இருளப்பபிள்ளை தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். அந்த குழு தங்கி காடுகளை அழித்து, அணை கட்டும் இடத்தை தேர்வு செய்து மதிப்பீடு தயார் செய்தது. நிதி வசதியின்றி திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1807ல் மதுரை கலெக்டர் ஜார்ஸ்பேரிஸ், மேற்கு தொடர்ச்சி மலைக்கு சென்று பெரியாறு அணை கட்ட திட்டமிட்டுள்ள இடத்தை பார்வையிட்டு, ஆய்வு செய்ய மாவட்ட பொறியாளர் ஜேம்ஸ் கார்டுவெல்லுக்கு உத்தரவிட்டார்.ஆனால் 1808ல் நடைமுறைக்கு ஒத்துவராத திட்டம் என கார்டுவெல் அறிக்கை தந்தார். 1837ல் கர்னல் பேபர் சின்னமுல்லையாறு தண்ணீரை மண் அணை மூலம் திருப்பும் பணியில் ஈடுபட்ட போது, வேலையாட்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதாலும், கூலி அதிகம் கேட்டதாலும் பணி நடக்கவில்லை என்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
1867ல் மேஜர் ரைவ்ஸ் என்பவர் தண்ணீரை கிழக்கே திருப்புவதுதான் முக்கிய நோக்கம் என்று 17.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டாலான அறிக்கை சமர்ப்பித்துள்ளார். மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளில் உருவாகி அரபிக்கடலில் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்த பெரியாறு நீரைப் பயன்படுத்த அன்றைய ஆங்கிலேய அரசு முடிவு செய்து அந்தப்பகுதியில் அணை ஒன்றைக் கட்டத் தீர்மானித்தது. பெரியாற்றின் குறுக்கே மண் அணை அமைத்து அந்த ஆற்றின் நீரைக் கிழக்குப் பக்கமாகத் திருப்புவதற்கான வரைவுத் திட்டம் ஒன்றை சுமித் என்கிற ஆங்கிலேயர் தயார் செய்தார். இந்தத் திட்டத்திற்கு தலைமைப் பொறியாளராக இருந்த வாக்கர் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இந்த அணைத் திட்டம் நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 1876 ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டதால் இந்த அணைத்திட்டம் மேலும் காலதாமதம் ஆனது.
ஆங்கிலேய அரசின் ஆணைப்படி மேஜர் ஜான் பென்னிகுயிக் என்பவர் 1882-ல் அணையைக் கட்டுவதற்கான திட்டத்தைத் தயாரித்தார். இத்திட்டத்தின்படி ஆற்றின் அடிப்பகுதியிலிருந்து 155 அடி உயரமும், ஆற்றின் தளத்திற்கு கீழே 18 அடி ஆழமும் அணையின் மேல் 4 அடி அகலத்தில் 5 அடி உயரக் கைப்பிடிச்சுவர் ஒன்றும் கட்ட முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி அணையை அடைத்துத் தேங்கியிருக்கும் தண்ணீரை எதிர்ப்புறத் திசையிலிருந்து வாய்க்கால் வழியே கொண்டு வருவது என்றும் இந்த வாய்க்காலின் நீளம் 6500 அடியாகவும் இதற்கான் தலைமை மதகின் தரை மட்டம் 109 அடி என்றும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் இங்கிருந்து மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்குத் தண்ணீரைக் கொண்டு செல்ல மலையினுள்ளே 5900 அடி வரை சுரங்கம் அமைத்து இதன் வழியே வைரவன் ஆற்றில் கலந்து அப்படியே அதைச் சுருளி ஆற்றில் கலந்து வைகை ஆற்றுடன் இணைக்கத் திட்டமிடப்பட்டது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குக் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் பெரியாறு என்ற ஆறாக ஓடி வீணாகக் கடலில் சென்று கலப்பதைப் பார்த்து இதன் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விட்டால் வறண்டுள்ள நிலங்கள் பயனுள்ள விளைநிலங்களாக மாறிவிடும் என்று திட்டமிட்டார். இதற்கான திட்டத்தை ஆங்கிலேய அரசின் பார்வைக்கு வைத்து அனுமதி பெற்றார். எழுபத்தைந்து இலட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னி குக் தலைமையில் பிரிட்டிஷ் இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இந்தத் திட்டத்திற்கு பணம் ஒதுக்கீடு செய்ய ஆங்கிலேய அரசு மறுத்த நிலையில் கர்னல் பென்னி குக் இங்கிலந்திற்குத் திரும்பிச் சென்று தன் குடும்பச் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வந்து சொந்தமாகவே முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டப்பகுதி நிலங்களுக்குத் தேவையான் தண்ணீர் இன்றும் கிடைத்து வருகிறது.
முல்லை பெரியாறு ஒப்பந்தம்:
முல்லை பெரியாறு அணை கட்டப்படும் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்ததால் அதனுடன் இடம், லாபப்பங்கீடு போன்றவைகளுக்கான பேச்சு வார்த்தை நான்கு ஆண்டுகளாக நடத்தப்பட்டு 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்படி திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு (தற்போதைய கேரளா) சென்னை மாகாணம் (தற்போதைய தமிழ்நாடு) அணையின் 155 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேங்கும் பகுதியான 8000 ஏக்கர் நிலப்பரப்பு மற்றும் அணைகட்டுவதற்கும் பிற பணிகளுக்குமாக 100 ஏக்கர் சேர்த்து 8100 ஏக்கருக்கு குத்தகைப் பணம் செலுத்த வேண்டும் என்பது உட்பட 7 அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழகம் குத்தகைத் தொகையாக 1896ல் இருந்து 1970 வரை ஏக்கருக்கு 5 ரூபாய் என்று கொடுத்து வந்தது. கேரளம், 1970 ஆம் வருடம் அந்த ஒப்பந்தத்தைத் திருத்தி, ஆண்டிற்கு 5 ரூபாய் என்றிருந்த குத்தகைத்தொகையை 30 என மாற்றி, அணையிலும் அதைச் சார்ந்த நீர்ப்பிடிப்பு மற்றும் குளம், குட்டை போன்ற நீர் நிலைகளிலும் மீன் பிடிக்கும் உரிமையும் தமிழகத்திடம் இருந்து எழுதி வாங்கிக் கொண்டது. இவ்வொப்பந்தம் 999 ஆண்டுகளுக்குச் செல்லுபடி ஆகும் என்றும் குறிக்கப்பட்டது. இதன்படி இவ்வணையிலிருந்து 104 அடிக்கு மேலுள்ள நீர் குகை மூலம் வைகைப் படுகைக்கு திருப்பி விடப்பட்டு இப்பகுதி பாசன வசதி பெறுகிறது.
இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு 1887 செப்டம்பர் மாதத்தில் அணை கட்டும் பணி துவங்கப்பட்டது. இந்தப்பகுதி முழுவதும் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்ததால் பொறியாளரான மேஜர் ஜான் பென்னி குயிக் இதற்காக அதிக அளவில் இயந்திரங்களைப் பயன்படுத்த முடிவு செய்தார். இதன்படி சென்னை மாகாணத்தின் கூடலூர் மலைப்பகுதியிலிருந்து தேக்கடி வரையும் அங்கிருந்து அணை கட்டும் பகுதி வரை கம்பிவடப் பாதைகளை அமைத்து அதற்கான பொருட்களைக் கொண்டு சென்றார். இந்த அணையின் கட்டுமானப்பணிகளுக்காக 80 ஆயிரம் டன் சுண்ணாம்புக்கல் பயன்படுத்தப்பட்டது.
இந்த பெரியாறு அணை 1893-ல் 60 அடி உயரத்திற்கும் அதன்பின்பு 1894-ல் 94 அடி உயரத்திற்கும் 1895 டிசம்பர் மாதத்தில் 155 அடியும் கட்டி முடிக்கப்பட்டு கைப்பிடிச் சுவரும் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்ட இந்த அணையை சென்னை மாகாண ஆளுநராக இருந்த வென்லாக் பிரபு திறந்து வைத்தார்.
முல்லை பெரியாறு அணை மின் உற்பத்தி:
1955-ம் ஆண்டு பெரியாறு தண்ணீர் தமிழ்நாட்டில் நுழையும் இடத்தில் மின் உற்பத்தி செய்வதற்கு ஒரு திட்டம் வகுக்கப் பெற்றது. 1970-ம் ஆண்டு கேரளத்துடன் செய்து கொண்ட புது ஒப்பந்தத்தின் படி இங்கு தமிழகம் 140 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையத்தை அமைத்துள்ளது. இது தமிழகத்திற்கு வரும் நீரை கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும்.
அணை பயன்பாடு
இந்த அணையில் இருந்து முல்லை ஆறாக வரும் நீர் தமிழ்நாடு அரசின் தேனி மாவட்டத்தின் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் அளிக்கப் பயன்படுகிறது. இந்த முல்லை ஆற்றின் வழியிலுள்ள கூடலூர், கம்பம், சின்னமனூர், தேனி போன்ற தேனி மாவட்டத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் இடைப்பட்ட பல ஊர்களின் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றுகிறது.
இந்த முல்லை ஆறு தேனி நகருக்குக் கிழக்குப் பகுதியில் வைகை ஆறுடன் கலந்து வைகை அணையின் ஆதாரமாகவும் விளங்குகிறது. இதன் பின்பு மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீரையும், மதுரை மாநகராட்சியின் குடிநீர்த் தேவையையும், ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, சேடப்பட்டிப் பகுதிகளிலுள்ள கிராமங்களுக்கான தனிக் குடிநீர்திட்டம் மூலம் குடிநீர்த் தேவையையும் நிறைவேற்றி வருகிறது.
முல்லை பெரியாறு அணை சிக்கல்
1979ல் மலையாள மனோரமா ஏடு, அணைக்கு ஆபத்து என்று செய்தியை பரப்ப கேரள அரசு அணையின் மொத்த அளவான 152 அடியிலிருந்து 136 அடியாக குறைத்து விட்டது. கேரள மக்களின் அச்சம் போக்கும் பொருட்டு, தமிழகம் அந்த அணையை மேலும் வலுப்படுத்த எல்லா முயற்சிகளையும் செய்த பின் 152 அடி நீரைத் தேக்கலாம் என்று முடிவு செய்யப் பட்டது.
தமிழகம் அணையை வலுப்படுத்திய பின்னும் கேரள அரசு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த ஒத்துக்கொள்ள வில்லை. இந்த சிக்கல் உச்ச நீதி மன்றத்துக்கு சென்றது. உச்ச நீதி மன்றம் வல்லுனர் குழுவை அனுப்பி அணையை ஆராய்ந்து 142 அடி வரை உயர்த்த உத்தரவிட்டது. ஆனால் கேரள அரசு இந்த முல்லை பெரியாறு அணை உத்தரவை ஏற்க மறுக்கிறது.
Why this Negligence Towards Tamils: முல்லைப் பெரியாறு: ஏன் இந்த ஓரவஞ்சனை - தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா?
அணை பலமாக இருக்கிறது என்பதற்கு அதன் நீர்க்கசிவு அளவு ஒரு முக்கிய சான்றாகும். அணையின் நீரை தொடர்ந்து 136 அடிக்குப் பல நாள்கள் தேக்கி வைக்கும்போது, கசியும் நீரின் அளவைத் தொடர்ந்து நாள்தோறும் பதிவு செய்து, அணை இப்போதும் மிக உறுதியாக இருப்பதை மக்களுக்கு உணர்த்துவதுடன் மத்திய அரசுக்கும் நீதிமன்றத்துக்கும் அதைச் சான்றாக காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் கேரள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது. அணை வலுவாக இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டால், நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடிக்கு உயர்த்தும் நியாயத்தைப் பற்றி தமிழகம் பேசக்கூடுமே என்கிற அச்சமும்தான் இவர்களது இப்போதைய கூக்குரலின் பின்புல உண்மை.
இடுக்கியைச் சேர்ந்த முல்லைப் பெரியாறு போராட்டக் குழு, இதுநாள் வரையிலும் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் கூறிவந்தது. இப்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, புதிய அணையைக் கட்டக்கூடாது, பழைய அணையையும் இடிக்க வேண்டும் என்கிறது. இடுக்கி எம்எல்ஏ சாலை மறியல் செய்கிறார். எம்பி-க்களும், கேரள பாசனத் துறை அமைச்சரும் தில்லிக்கு விரைந்துள்ளார்கள். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியுடன் பிரதமரைச் சந்திக்கவுள்ளார்கள்.
புனல் மின்நிலையத்துக்காக கேரள அரசு கட்டியுள்ள இடுக்கி அணைக்கு, போதுமான தண்ணீர் கிடைக்காததால் மின்உற்பத்தி பாதிக்கப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக, முல்லைப் பெரியாறு அணைக்கு கேரளம் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியது என்பதுதான் இந்தப் பிரச்னையின் அடிப்படையே. முல்லைப் பெரியாறு அணை வலுவிழந்துவிட்டதாகக் குற்றச்சாட்டு ஏற்பட்டபோது, வல்லுநர்கள் குழு இந்த அணை பாதுகாப்புடன் இருப்பதைக் கூறியும்கூட, கேரள அரசு வேண்டுமென்றே அச்சம் தெரிவித்தது. மேலும் பல கோடி ரூபாய் செலவில் அணை பலப்படுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அணைக்குச் சேதம் ஏற்படாத வகையில் புதிய தொழில்நுட்பத்தில் அணையைப் பலப்படுத்தினார்கள் என்பதுதான் உண்மை.
நீதிமன்றம் குறிப்பிட்ட அனைத்துப் பாதுகாப்புப் பணிகளையும் செய்து முடித்து, முல்லைப் பெரியாறு பேபி டேம் பகுதியில் மிகச் சிறிய பணியையும் செய்து முடிக்க முற்பட்டபோது, அதை முடித்துவிட்டால் நீதிமன்றம் கூறிய அனைத்தையும் தமிழகம் செய்துவிட்டதாக ஆகிவிடுமே என்று அஞ்சி, கேரள வனத்துறை அதிகாரிகளைக் கொண்டு, அந்தப் பணியைத் தடுத்து வருகிறார்கள் கேரள அரசின் தரப்பினர்.
<h1>கேரளத்தில் தமிழர் நலனுக்கு எதிராகவும் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராகவும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?</h1>
படித்த தமிழர்களே இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ளாத நிலையில், பாமரருக்கு எங்கே புரியும் என்கின்ற நினைப்பைத் தகர்த்தெறிந்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் சங்கம் தயாரித்துள்ள, அரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படம். முல்லைப்பெரியாறு - பிரச்னையும் தீர்வும் என்ற இந்த ஆவணப்படம் காணக் கிடைக்கிறது.
.
இதற்கு மேலாகச் சிறப்பாகவும், தெளிவாகவும், எளிய பாமரனும் புரிந்துகொள்ளும் வகையிலும் இன்னொரு ஆவணப்படம் எடுக்க வேண்டிய அவசியம் தமிழக அரசுக்கு இல்லை. இந்த ஆவணப்படத்தையே அனைத்துத் திரையரங்குகளிலும் திரைப்படத்துக்கு முன்பாக திரையிடக் கட்டாயப்படுத்தலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தனியார் தொலைக்காட்சிகளையும் கட்டாயம் ஒளிபரப்பச் செய்யலாம். செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் கிராமங்களில் திரையிடலாம்.
முல்லைப் பெரியாறு பிரச்னையை வேண்டுமென்றே பெரிதாக்கிக் கேரளம் kerala பீதியைக் கிளப்புவதற்கு அடிப்படைக் காரணம், இடுக்கிக்கு அதிக நீர்வரத்து ஏற்படுத்தி மின்சார உற்பத்தியைக் கூட்ட வேண்டும் என்பதால்தான். தமிழகம் தாங்களே இன்னொரு அணையைக் கட்டி விடுகிறோம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்பதை முன்கூட்டியே தடுப்பதற்காக வேறு அணை கூடாது என்கிற கோஷத்தையும் எழுப்பி விட்டார்கள்.
அங்கே கட்சி மாச்சரியங்களை மறந்து அனைவரும் கைகோத்துத் தமிழகத்துக்கு எதிராக சதி செய்கிறார்கள். இங்கே நான் திமுக, நீ அதிமுக, அவன் தேமுதிக, இவன் மதிமுக, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட், பாஜக என்று தமிழுணர்வே இல்லாமல் அரசியல் ரீதியாகப் பிரிந்து கிடக்கிறோம். கரை வேட்டிகள் அவிழ்த்தெறியப்பட்டால் மட்டுமே தமிழகம் ஒன்றுபடும் சாத்தியம் போலிருக்கிறது.
மத்திய அரசிடம் ஒரு கேள்வி. பல ஆண்டுகளாக இருந்துவரும் உறுதியான அணை உடைந்துவிடும் என்று கேரளம் பயப்படுவதை, அவர்களது உணர்வுகளை மதிக்க முற்படும்போது, நீங்கள் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களின் நியாயமான அச்சத்துக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மட்டும் செவிசாய்க்க மறுப்பதன் ரகசியம்தான் என்ன? மலையாளிகளுக்கு இருக்கும் அச்சமும், பீதியும், தமிழனுக்குக் கிடையாதா? தமிழர்கள் உணர்ச்சியற்ற ஜடங்களா? ஏன் இந்த ஓரவஞ்சனை?
What we Did as Tamilians: பாவம் தமிழன்! பழ. நெடுமாறன்
அணை 999 என்ற முற்றிலும் பொய்யான தகவல்கள் அடங்கிய படத்தை கேரள முதலமைச்சர் தலைமையில் திரையிட்டு அனைத்துக்கட்சித் தலைவர்கள் பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் காட்டியிருக்கிறார்கள்.
அண்மையில் இடுக்கி மாவட்டத்தில் 2.3 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. இதன் விளைவாக முல்லைப் பெரியாறு அணையில் வெடிப்புகள் தோன்றியிருப்பதாகப் பெரும் அபாயக் கூக்குரலை கேரள முதல்வர் உம்மன்சாண்டி எழுப்பி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் புகார் செய்துள்ளார்.
தனி ஒரு மனிதன் பொய் பேசினால் அவனை சமூகம் வெறுத்து ஒதுக்குகிறது. ஆனால் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகத் தொடர்ந்து பொய்மைக் கூப்பாட்டை எழுப்பி வருகிறார்கள். அவர்களுடைய பொய்யுரைக்கு ஊடகங்களும், மத்திய ஆட்சியாளர்களும், ஏன், ஒரு சில நடுநிலையாளர்கள் உள்ளிட்ட பலரும்கூட செவிசாய்க்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியதாக இருக்கிறது.
உண்மைதான் என்ன? 2001-ம் ஆண்டில் இதே இடுக்கி மாவட்டத்தில் 4.8 ரிக்டர் அளவுக்கு நில அதிர்வு ஏற்பட்டது. அப்போதும் இதேபோன்ற கூக்குரலை கேரள அரசும், அரசியல் கட்சிகளும் எழுப்பின. ஆனால், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் அணையை உடனடியாகப் பார்வையிட்டு, இந்த நில அதிர்வால் அணைக்கு எத்தகைய சேதமும் ஏற்படவில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும், அதே ஆண்டு ஜனவரி 20-ம் தேதியன்று மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு ஒன்று இந்த அணையை நன்கு பரிசோதித்து, அணையில் எத்தகைய சிறு அளவு சேதம்கூட ஏற்படவில்லை என திட்டவட்டமாகக் கூறியது.
2001-ம் ஆண்டில் ஏற்பட்ட நில அதிர்வைவிடப் பாதி அளவுக்கும் குறைவான நிலஅதிர்வே இப்போது ஏற்பட்டுள்ளது. ஆனாலும், கேரளத் தலைவர்களின் பொய்மைக்கூப்பாடு ஓயவில்லை.
1963-ம் ஆண்டிலிருந்து கடந்த 48 ஆண்டுகாலத்துக்கும் மேலாக கேரளம் பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. அதை இடித்துவிட்டு புது அணை கட்ட வேண்டும் என்ற கூப்பாட்டை இடைவிடாது எழுப்பிக்கொண்டு இருக்கிறது. அதே ஆண்டு, கேரளத்தின் Kerala புகாரை விசாரிப்பதற்காக மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், பெரியாறு அணைக்கு வந்து தமிழக-கேரளத் தலைமைப் பொறியாளர்கள் முன்னிலையில் அணையை முழுமையாகப் பரிசோதனை செய்து, அணை பலமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
1978-ம் ஆண்டிலிருந்து மூன்று முறை இதே புகாரை கேரளம் எழுப்பி, மத்திய நீர்ப்பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் வந்து பார்வையிட்டு, அணை வலிமையாக இருப்பதை உறுதி செய்தார்கள். எனினும் 12.5 கோடி ரூபாய் செலவில் அணையை மேலும் பலப்படுத்துமாறும், அந்த வேலை முடியும்வரை அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு குறைக்கும்படியும் அறிவுரை கூறியது. அதை தமிழகம் ஏற்றுக்கொண்டு நீர்மட்டத்தைக் குறைத்ததுடன் மராமத்துப் பணிகளையும் தொடங்கியது. ஆனால், அந்தப் பணிகள் முற்றுப் பெறவிடாமல் கேரளம் பல முட்டுக்கட்டைகளைப் போட்டது.
எனவே, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை அமைத்து அணையின் வலிமையைச் சோதிக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையிட்டது. அந்தக் குழுவும் அணையை நேரடியாகப் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதாகவும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்துவதால் அணைக்கு எத்தகைய ஆபத்தும் வராது எனக் கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தது. மேலும், இந்தப் பிரச்னையில் கேரளம் வேண்டுமென்றே பொய்யான காரணங்களைக் கூறி முட்டுக்கட்டை போடும் வகையில் நடந்துகொள்வதாகவும் வல்லுநர் குழுவின் அறிக்கையின் மூலம் தெரிய வருவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் அளித்த இந்தத் திட்டவட்டமான தீர்ப்பை மதிக்காமல் கேரளம் 31-3-2006-ம் ஆண்டு கேரள ஆறுகளின் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி, பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதைத் தடுத்துவிட்டது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழக அரசு வழக்குத் தொடுத்தது.
ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பிரச்னையில் நடுவர் மன்றத் தீர்ப்பைச் செயலற்றதாக்க இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கர்நாடக அரசு கொண்டு வந்தபோது, அச்சட்டம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், கேரள சட்டத்தைக் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில் அதைப்போன்ற தீர்ப்பை அளித்திருக்க வேண்டியதுதான் நியாயமானது.
ஆனால், அதற்குப் பதில் மீண்டும் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்து அணையின் வலிமையைப் பரிசீலனை செய்ய கூறியிருக்கிறது. இதன் விளைவாக வேண்டாத காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
1980-ம் ஆண்டிலிருந்து இன்றுவரை கடந்த 31 ஆண்டுகாலத்துக்கு மேலாக மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் பெரியாறு நீரைக்கொண்டு 2 லட்சம் ஏக்கர் பரப்பளவு நிலம் பாசன வசதிபெற்றது. பாசன வசதி பற்றாக்குறையின் காரணமாக இதில் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசுநிலமாக மாறிவிட்டது. இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86 ஆயிரம் ஏக்கர் ஆகும். ஆற்றுப்பாசன நீரை இழந்து ஆழ்துளை கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53 ஆயிரம் ஏக்கர் ஆகும்.
இதன் விளைவாக விவசாயிகளுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 55.80 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. மின்உற்பத்தியின் இழப்பு ஆண்டுக்கு ரூ.75 கோடியாகும். ஆக மொத்தம் ஆண்டொன்றுக்கு ரூ.130.80 கோடி இழப்பு ஏற்படுகிறது. கடந்த 31 ஆண்டு காலமாக மொத்த இழப்பு 4054.80 கோடியாகும்.
அதே வேளையில் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு அரிசி, பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், ஆடு, மாடு, கோழி, முட்டைகள், பால் போன்றவை அனுப்பப்பட்டு வருகின்றன. கேரளத்தின் இறைச்சித் தேவையில் 90 விழுக்காடு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது என "தினமணி'யின் தலையங்கம் (29-10-11) குறிப்பிடுகிறது. இவை நிறுத்தப்பட்டால் கேரள மக்கள் பசியால் வாடும் நிலைமை ஏற்படும்.
தமிழ்நாட்டில் நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 20 சதவீத மின்சாரம் கேரளத்துக்கு அனுப்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலையாளிகள் எவ்விதத் துன்பமும் இல்லாமல் வாழ்கிறார்கள். மிகப்பெரிய நகைக்கடைகள், நிதிநிறுவனங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றை தமிழகம் முழுவதிலும் நடத்தி ஆதாயம் பெற்று வருகிறார்கள்.
நாள்தோறும் தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு அனுமதிபெற்று அனுப்பப்படும் அரிசியின் அளவு 700 டன் ஆகும். இதை உற்பத்தி செய்ய 511 மில்லியன் கன மீட்டர் நீர் தேவை. நீர்ப் பற்றாக்குறையாக உள்ள தமிழ்நாட்டில் கிடைக்கும் நீரில் உற்பத்தியாகும் அரிசியை நாம் கேரளத்துக்கு வஞ்சகம் இன்றி அனுப்புகிறோம். மற்றும் இங்கிருந்து அனுப்பப்படும் காய்கறி, பழங்கள் மற்றும் உணவுப்பொருள், கால்நடைகள், உண்ணும் தீவனங்கள் ஆகியவை உற்பத்தி செய்யப் பயன்படும் நீர் எல்லாவற்றையும் சேர்த்தால் கேரளம் தமிழ்நாட்டின் நீரை எவ்வளவோ சுரண்டுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு 1,700 கன மீட்டர் நீர் தேவையென விஞ்ஞானிகள் கணக்கிட்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மலையாளிகளுக்கு ஆண்டுக்கு 5,100 மில்லியன் கனமீட்டர் நீர் தேவைப்படுகிறது. ஆனால், இவ்வளவு நீரை நம்மிடமிருந்து பயன்படுத்திக்கொள்ளும் கேரளத்திடம் நாம் பெரியாறு அணை நீரில் கேட்பது 126 மில்லியன் கன மீட்டர் நீர் மட்டுமே. இதைவிட பல நூறு மடங்கு அதிகமான நீரை உறிஞ்சிக் கொள்ளும் கேரளம் நமக்குச் சட்டப்படியும், உச்ச நீதிமன்ற ஆணைப்படியும் உரிமையான நீரை விட்டுத் தர மறுக்கிறது.முல்லைப்பெரியாறு உற்பத்தியாகும் நீர் பிடிப்பு பகுதியின் மொத்தப் பரப்பளவு 601 சதுர கிலோமீட்டர் ஆகும். இதில் தமிழ்நாட்டில் உள்ள நீர் பிடிப்பு பகுதியின் பரப்பளவு 114 சதுர கிலோ மீட்டர் ஆகும். அதாவது, பெரியாற்றில் உற்பத்தியாகி ஓடும் நீரில் 5-ல் ஒருபகுதி நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது. பெரியாற்றில் கிடைக்கும் மொத்த நீர் அளவு 4,867.9 மி.க.மீ. ஆகும். 2021-ம் ஆண்டில் கேரளத்தின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தொழிலுக்கும் தேவையான மொத்த நீர் அளவு 2254 மி.க.மீ. ஆகும். வீணாகக் கடலில் சென்று கலக்கும் நீரின் அளவு 2313 மி.க.மீ. ஆகும். பெரியாறு அணையின் நீர் மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் நமக்குத் தரவேண்டிய நீரின் அளவு வெறும் 126 மி.க.மீ. ஆகும்.
அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு நாம் கேட்கிறோம். ஆனால், கேரளம் பிடிவாதமாக அதற்கும் மறுக்கிறது. தமிழ்நாட்டின் நீர்ப்பிடிப்புப் பகுதியின் பரப்பளவு 2,588 ச.கி.மீ. ஆகும். இதிலிருந்து 2,641 மி.க.மீ. நீர் பாய்ந்தோடி கேரள மாநில நதிகளான பாரதப்புழா, சாலியாறு, சாலக்குடியாறு, பெரியாறு ஆகியவற்றில் கலக்கிறது. இந்த நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அணைகட்டி நீரைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நாம் ஒருபோதும் நினைக்கவில்லை. அவ்வாறு செய்வதற்கு நாம் முனைந்தால் கேரளத்தால் தடுக்க முடியாது.
கடந்த காலத்தில் 1958-ம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த காமராசரும் கேரள முதலமைச்சராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உடன்பாட்டினை செய்துகொண்டார்கள். தமிழ்நாட்டில் உள்ள ஆனைமலையில் உற்பத்தியாகி கேரள மாநிலத்திற்குள் பாய்ந்தோடும் பல நதிகளின் நீரை இருமாநிலங்களுக்கும் பொதுவாக பயன்படும் வகையில் வகுக்கப்பட்ட திட்டமே பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டமாகும்.
இத்திட்டத்துக்கான முழுச் செலவையும் தமிழகம் ஏற்றுக்கொண்டது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு 920 மி.க.மீ. நீர் கிடைக்கிறது. கேரளத்துக்கு 2,641 மி.க.மீ. நீர் கிடைக்கிறது.
அதைப்போல, 1952-ம் ஆண்டில் பெரியாறு அணையில் இருந்து கால்வாய் வழியாக தமிழகத்துக்கு வரும் நீரிலிருந்து மின்உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டது. அத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க கேரள அரசு தயங்கியது. அப்போது இராஜாஜி தமிழக முதலமைச்சராக இருந்தார். எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தியை அழைத்து திருவாங்கூர் கொச்சி அரசின் முதலமைச்சரான பட்டம் தாணுபிள்ளையுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பினார். அவரும் இந்த மின்திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று திரும்பினார்.
காங்கிரஸ்காரர்களான காமராஜரும் இராஜாஜியும், கம்யூனிஸ்டுகளான ஈஎம்எஸ். நம்பூதிரிபாட், பி. இராமமூர்த்தி ஆகியோர் மூலம் இரு மாநிலங்களுக்கும் நன்மை பயக்கும் திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார்கள். ஆனால், இன்று கேரளத்தில் இருக்கும் எந்தக் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், தமிழக நலன்களுக்கு விரோதமாகவே செயல்பட்டு வருகின்றன.பெரியாறு அணை கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. எனவே, அது பயனற்றது என்ற வாதத்தை கேரளம் முன்வைக்கிறது. இந்தியாவில் உள்ள முக்கியமான அணைகளான மேட்டூர் அணை, துங்கபத்திரா அணை, கிருஷ்ணராஜசாகர் அணை போன்றவை கட்டப்பட்டு 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதைப்போல கேரள மாநிலத்தில் உள்ள பல அணைகளும் 80 ஆண்டுகளை தாண்டியவையாகும்.
புதிய அணை கட்ட வேண்டும் என கேரளம் வற்புறுத்துவதற்கு காரணம், முதலாவதாக 999 ஆண்டுகளுக்கு நாம் பெற்றுள்ள உரிமை பறிபோகும். புதிய அணை கட்டப்பட்டால் அதன் மூலம் இடுக்கி அணைக்கு அதிக நீர் கிடைக்கும். அதுவே அவர்களது குறிக்கோள் ஆகும்.
தமிழகத்துக்குத் தரவேண்டிய 126 மி.க.மீ. நீரை கேரளம் புதிய அணையிலிருந்து எதிர்காலத்தில் தருமா என்பது சந்தேகத்திற்கிடமானது. இப்போதுள்ள அணைக்கு கீழே புதிய அணை கட்டப்படுமானால் ஒரு சொட்டு நீர்கூட நமக்கு வராது.பெரியாறு அணை உடைந்தால் கேரளத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 35 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவார்கள் என கேரளம் கூப்பாடு போடுகிறது. இடுக்கி, எர்ணாகுளம் என இரண்டே மாவட்டங்களில் மட்டுமே பெரியாறு ஓடுகிறது. பெரியாறு அணையில் இருந்து 50 கி.மீ. வரை காடுகளின் வழியாக ஆறு ஓடி இடுக்கி அணையை அடைகிறது. அதற்குப் பிறகு 70 கி.மீ. நீர்வழிப்பாதையாகப் பயன்பட்டு அரபிக்கடலை அடைகிறது. இதில் 35 லட்சம் பேர் எங்கே இருக்கிறார்கள்?
மேலும், பெரியாற்றில் பெரியாறு நீர்த்தேக்கத்தைத் தவிர, 16 நீர்த்தேக்கங்களை கேரள அரசு கட்டியிருக்கிறது. இந்த அணைகளில் எல்லாம் நிரம்பி வழிந்த பிறகே நீர் அரபிக்கடலுக்கு நேரடியாகச் செல்லுமே தவிர, மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தாது.புகழ்பெற்ற மலையாள இலக்கிய அறிஞரும் சாகித்திய அகாதெமி விருதுபெற்றவருமான பால் சக்காரியா இந்தப் பிரச்னை குறித்து கூறியதை கீழே தருகிறோம் (ஆனந்தவிகடன் 19-1-2003):
தமிழக கிராமங்களில்தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப் பொருள்கள் கேரளத்துக்கு வருகின்றன. பணப் பயிர்களான தென்னையையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்துதான் வருகிறது.
ஆனால், அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர் கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூடத் தமிழக விவசாயிகளுக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசைக் கண்டனம் செய்கிறேன்.
பெறுவதை எல்லாம் பெற்றுக்கொண்டு கொடுப்பதில் மட்டும் கஞ்சத்தனம் காட்டுகிறார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று ஆங்காங்கு அணைகள் (கேரள அரசியல்வாதிகள்) கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்ததாகப் பேச்சுக்கள்.
இப்போது பவானியின் குறுக்கே அணை கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி, பெரியாறு அணை, பவானி என்று சுற்றி சுற்றித் தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத் திணறச் செய்யும் இவ்வளவு சதிச் செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு அதைக் கொடுப்பது தமிழனின் குணம். பாவம் தமிழன்.
சில்லரை வர்த்தக விஷயத்தில் மத்திய அரசுஆணவம்: ஜெயலலிதா
சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என, மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு, எதிர்க்கட்சிகளும், காங்கிரஸ் அல்லாத மாநிலங்களின் முதல்வர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மத்திய அரசின் ஆணவப் போக்கை கண்டித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது குமுறலை அறிக்கையாக நேற்று வெளியிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று, மத்திய அமைச்சரவை அவசரமாக முடிவு செய்துள்ளது. இந்த முடிவால், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பாரம்பரிய சில்லரை வியாபாரிகளை பாதிக்க வைக்கும். மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும். பார்லிமென்ட் கூட்டம் நடக்கும் போது அங்கு முடிவு எடுக்கவில்லை. ஆனால், அதைச் செய்யாமல் தன்னிச்சையான முடிவு எடுப்பதன் மூலம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆணவப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
4 கோடி பேர் வேலைக்கு அபாயம்: நாட்டில் வேலை வாய்ப்பு இல்லாமல் பலர் தவிக்கின்றனர். மேலும் 4 கோடி பேர், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இவர்கள் தங்களது தொழிலில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் வணிகர்களில் பெரும்பாலானோர் நன்கு படித்தவர்கள் அல்ல. எனவே, அவர்கள் மாற்றுத் தொழிலுக்கு செல்ல முடியாது. வேலைவாய்ப்பு பறிபோகும்.நாட்டில் நிலவும் இரட்டை இலக்க பணவீக்க வீதத்தை கட்டுப்படுத்தவே, அன்னிய முதலீடுகள் நாட்டில் அனுமதிக்கப்படுவதாக காரணம் கற்பிக்கப்படுகிறது. சந்தை பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இது உதவும் என்றும் சொல்லப்படுகிறது.
ஏன் பணவீக்கத்தையும், சந்தைப் பொருளாதாரத்தின் மற்ற பிரச்னைகளையும் கையாள, நம்மிடம் போதிய தொழில் நுட்பமும் திறமையும் கிடையாதா? எனவே, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்து மத்திய அரசு கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஆணவப் போக்கை காட்டுகிறது. சில்லரை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் சில பெரிய வர்த்தக அமைப்புகள், தங்கள் எதிர்கால பணப்புழக்கத்திற்கு வழி தேட கண்டுபிடித்த செயலாகக் கருதலாம்.சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை, தமிழகத்தில் அனுமதிக்க முடியாது; ஏற்றுக்கொள்ளவும் முடியாது. மத்திய அரசு உடனடியாக இம்முடிவை திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
மாயாவதி காட்டம் : லக்னோ: "சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவால், உ.பி., மாநிலத்தில் உள்ள சிறு வியாபாரிகள் எல்லாம், கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்படுவர். இதன் மூலம் உ.பி., மாநிலமே திவாலாகும் சூழ்நிலை உருவாகும். இத்திட்டத்தின் மூலம், ராகுலின் வெளிநாட்டு நண்பர்கள் தான் பலன் அடைவர்' என்று உ.பி., மாநில முதல்வர் மாயாவதி காட்டமாகக் கூறியுள்ளார்.
சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தால், நாட்டின் பொருளாதாரம் சரிவடையும்:
இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சில்லரை வணி்கத்தில், அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். இதனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு இந்த முறையை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சில்லறை வர்த்தகம்: அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள்
2.சில்லறை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்திய சட்டங்களை திருத்தியமைத்து இந்தியாவில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்க , 4 மில்லியன் அமெரிக்க டாலர்களை இடைத்தரவுக்கு செலவு செய்திருக்கிறது.
3.இந்தியாவில் சந்தையைப் பெருக்கிக்கொள்ள டவ் கெமிக்கல்ஸ் நிறுவனமும், தொலைதொடர்பு துறை வர்த்தகத்தில் நுழைய AT & T நிறுவனமும், நிதி சேவைத்துறையில் நுழைய ப்ருடென்சியல் பைனான்சியல் நிறுவனமும், புதிய வங்கிகள் துவங்க மோர்கன் ஸ்டான்லி நிறுவனமும், காப்பீட்டு சட்டங்களையே மாற்றியமைக்க நியூயார்க் லைப் இன்சூரன்ஸ் நிறுவனமும் கோடிக்கணக்கான பணத்தை கொட்டி அமெரிக்க சட்ட இடைத்தரகர்கள்மூலம் காய்களை நகர்த்தி வருகின்றன…
4.இவை மட்டுமல்ல, போயிங், பைசர், இன்டெல், அமெரிக்க ஏரோஸ்பேஸ் நிறுவனம் என ஏராளாமான நிறுவனங்கள் அமெரிக்க இடைத்தரகர்கள் வழியாக, அமெரிக்க அரசின் மூலமாக இந்தியச் சட்டங்களை திருத்தியமைக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள்… அவற்றில் வெற்றியும் பெற்று வருகிறார்கள்…
இவற்றின்மூலமெல்லாம் இந்தியாவை ஆள்வது வெறும் ஜனநாயக(?) அரசல்ல, கார்பொரேட்டுகள் வழிநடத்துகிற ஒரு மக்கள்விரோத அரசுதான் என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம்.
மல்டி பிராண்டு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு
மல்டி பிராண்ட் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், ஒற்றை பிராண்டு சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய முதலீடு என்ற உச்ச வரம்பை நீக்குவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மத்திய அரசின் இந்தக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் இன்று கடும் அமளியில் ஈடுபட்டனர்.ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் முன்வைத்த இந்தப் பிரச்னையில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பிஜேபி உள்ளிட்ட எதிர்கட்சியினர் அனைவருமே ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக, கடும் அமளி நிலவியதால், இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால், அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின.இந்த நிலையில், சில்லறை வர்த்தகத்தில் மத்திய அரசின் கொள்கை முடிவு குறித்து நிருபர்களிடம் விளக்கம் அளித்த மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் ஆனந்த் ஷர்மா, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அதிகரிக்கும் நடவடிக்கையால், முதற்கட்டமாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்களில் 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அதைத் தொடர்ந்து, பெரிய அளவிலான தொழில்கள் மூலம் 50-ல் இருந்து 60 லட்சம் வரை வேலை வாய்ப்பு கிடைக்கும்," என்றார். மேலும், "நாட்டில் அடுத்த மூன்று ஆண்டுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீட்டுக்கு வழிவகுக்கப்படும்," என்றார் ஆனந்த் ஷர்மா.
சில்லறை வர்த்தக்கத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு ஒப்புதல் அளித்த விவகாரத்தால் நாடாளுமன்றம் இன்றும் முடக்கம்
இதேபிரச்னையில் இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சியினரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால், மக்களவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. இதே நிலைதான் மாநிலங்களவையிலும் நீடித்தது.பின்னர், நாடாளுமன்றக் கூட்டம் பிற்பகலில் மீண்டும் தொடங்கியதும் இதே பிரச்னையால் அமளி துமளிகள் அதிகரிக்கவே, இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.இதனால், நாடாளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் முற்றிலும் முடங்கியது.
விலைவாசி உயர்வு, தெலுங்கானா, கறுப்பு பணம் போன்ற விவகாரங்களால் கடந்த வாரம் நாடாளுமன்ற நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. இந்த வாரத்தின் தொடக்கத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு வகை செய்யும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் அளித்தது புயலைக் கிளப்பியுள்ளது.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு கடும் எதிர்ப்பு
ஏற்கெனவே, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை மட்டும் விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 51 சதமாக இருந்ததை, 100 சதமாகவும்உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கேபினட் செயலர் அஜித்குமார் சேத் தலைமையிலான கமிட்டி, சில்லறை வர்த்தகத்தில் பல்பொருள் நிறுவன தயாரிப்புக்கள் விற்பனையில் 51 சதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க பரிந்துரை செய்துள்ளது. அதே நேரத்தில், அது அதிகபட்சமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
தற்போது, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால், அரசின் இந்த முடிவு, இன்று நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தது. அமைச்சரவையின் முடிவு குறித்து, இரு அவைகளிலும் வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.இதுதொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சர்மா, அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதால் அடுத்த மூன்று ஆண்டுகளில், 10 மில்லியன் வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்றும், பில்லியன்கணக்கான முதலீடுகள் வரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகளை விடுவித்து, அவர்களது உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்ய இது முக்கியமான நடவடிக்கை என்று தெரிவித்தார். அரசின் முடிவால், வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தல் துறைகளில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இடதுசாரி மற்றும் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.
திரிணாமூல் காங்கிரஸார் அவையின் மையப்பகுதிக்கு வந்து, முதலில் விவசாயிகளைக் காப்பாற்றுங்கள், அதன் பிறகு சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு பற்றி சிந்திக்கலாம் என்று ஆவேசமாகக் கூறினார்கள்.
வால்மார்ட்
இந்த திட்டத்தின் விளைவாக டெஸ்கோ, வால்மார்ட் போன்ற சர்வதேச சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் இந்தியாவில் கடைகளை ஆரம்பிக்க முடியும்.இதுநாள்வரை இந்த நிறுவனங்கள் மொத்த வியாபாரிகளுக்குத்தான் பொருட்கள் விற்க முடிந்ததே ஒழிய நேரடியாக வாடிக்கையாளர்களிடம் இவர்கள் பொருட்கள் விற்க முடிந்திருக்கவில்லை.இந்த முடிவு ஒரு நிர்வாக முடிவென்பதால், இதனை அறிவிப்பதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் அவசியம் கிடையாது.
கருத்து வேறுபாடுகள்
இந்த திட்டத்தால் இந்தியாவில் வியாபாரப் போட்டி ஏற்படும் அதன் விளைவாக பொருட்களின் விலை குறையும் தரம் உயரும் என்று இந்தியாவில் பணவீக்கமும் விலையேற்றமும் மிக அதிகமாக இருந்துவரும் சூழ்நிலையில் இத்திட்டம் நன்மை தரும் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.
ஆனால் பெரும் சர்வதேச நிறுவனங்கள் போட்டிக்கு வந்தால் இந்தியாவின் சிறிய வர்த்தகர்களும் ஏழை வியாபாரிகளும் பாதிக்கப்படுவார்கள். தமது உற்பத்திப் பொருட்களுக்கு இந்திய விவசாயிகளுக்கு கிடைத்துவந்த விலை மேலும் குறையும் என்று இன்னொரு பக்கத்தில் வாதிடப்படுகிறது.
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடியாது: ஜெயலலிதா
‘பன்பொருள் சில்லரை வணிகத்தில் (multi brand retail) அந்நிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருள் சில்லரை வணிகத்தில் (single brand retail) அந்நிய முதலீட்டை 100 சதவீதமும் அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது. இதனால் சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பறிபோகும்’ என்றும் அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.
நாட்டில் 40 கோடிப்பேர் இன்னும் வேலைவாய்ப்பு இன்றி தவித்துவரும் வேளையில், 40 கோடி பேர் சில்லரை வர்த்தகத்தைதான் சார்ந்து இருக்கும் நிலையில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் சில்லரை வணிகர்கள் தங்களது தொழிலில் இருந்து வெளியேறும் நிலை உருவாகும் எனவும் ஜெயலலிதா எச்சரித்திருக்கிறார்.
தவிரவும் மாநில அரசுகள் எதனையுமே கலந்தாலோசிக்காமல் சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்தது அரசின் எதேச்சாதிகாரப் போக்கையே காட்டுவதாக ஜெயலலிதா அவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
எப்படியும் மாநிலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட தான் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.சர்வதேச உணவுப்பொருள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, உற்பத்தியாகும் பொருட்களை சரிவர சேமிக்க வசதிகள் இல்லாமையால் 45 முதல் 50 சதவீதம் வரையிலான உணவுப்பொருள்கள் விற்கப்படாமல் வீணாகிவிடுகிறது என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று சனிக்கிழமை சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், இன்று மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்திருக்கிறது.ஆனால் தமிழக வர்த்தகர்கள் எவரும் அத்தகைய வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, தொடர் போராட்டங்களில் இறங்கவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.
மத்திய அரசின் முடிவின்படி பத்து லட்சத்திற்கும் அதிகமான் மக்கட் தொகையுடைய 53 மாநகரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடலாம், ஆனால் பாரதீய ஜனதா, மதச்சார்பற்ற் ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், இப்போது அ இஅதிமுக, மேலும் காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திரிணாமூல் ஆகியவை கடுமையாக எதிர்ப்பதன் விளைவாக 28 மாநகரங்களில் அம்முடிவை அமல்படுத்தமுடியாமல் போகும் என நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மாநில அரசுகளின் விருப்பமே சில்லறை வர்த்தம்
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறுகையில், "நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளைக் கொண்டு வர விவசாயிகள், வியாபாரிகள், மாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.பின்னர், 51 சதவீத அன்னிய நேரடி முலீட்டை சில்லறை வணிகத்தில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவை பஞ்சாப், மகாராஷ்டிரம், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் வரவேற்று, எழுத்துப்பூர்வமாகப் பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளன.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு மூலம் பல கோடி மூலதனம் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளது. உலகில் உள்ள பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்ய முன்வரும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.அந்நிறுவனங்கள் நம் நாட்டில் குளிர்சாதன வசதிகளைக் கொண்ட கட்டடங்களைக் கட்டி, விவசாய விளை பொருள்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கி, மக்களுக்கு விநியோகம் செய்யும்.
இதுவரை இடைத்தரகர்களால் விவசாயிகளின் விளைபொருள்களுக்குக் குறைந்த விலை கிடைத்து வந்தது.சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். மேலும், வரும் 3 ஆண்டுகளில் 2 கோடி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத் திட்டத்தை விரும்பும் மாநிலங்கள் ஏற்கலாம். எந்த மாநிலத்தையும் மத்திய அரசு வற்புறுத்தாது," என்றார் நாராயணசாமி.
சில்லறை வர்த்தகம்: நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி
சில்லறை வர்த்தகத்தில், பல்வேறு நிறுவனத் தயாரிப்புக்களை விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டில் 51 சதத்தை அனுமதிக்க இந்திய அமைச்சரவை இன்றிரவு முடிவு செய்திருப்பதாக, அரசு தொலைக்காட்சி நிறுவனமான தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது.
அதன் மூலம், வால்மார்ட், டெஸ்கோ, கேர்ஃபோர் உள்ளிட்ட பன்னாட்டு வணிக நிறுவனங்கள் இந்தியாவின் பெரும் நுகர்வோர் சந்தையில் நுழைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, ஒரு குறிப்பிட்ட தயாரிப்பை மட்டும் விற்பனை செய்ய, அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 51 சதமாக உள்ளது. அது இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் 100 சதமாக உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தூர்தர்ஷன் செய்தி தெரிவிக்கிறது.
ஏற்கெனவே, கேபினட் செயலர் அஜித்குமார் சேத் தலைமையிலான கமிட்டி, சில்லறை வர்த்தகத்தில் பல்பொருள் நிறுவன தயாரிப்புக்கள் விற்பனையில் 51 சதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க பரிந்துரை செய்துள்ளது. அதே நேரத்தில், அது அதிகபட்சமாக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.தற்போது, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால், அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகள் நாளை விளக்கமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tomato Fried Rice: தக்காளி பிரைடு ரைஸ்
Keemaa Podimaas: கீமா பொடிமாஸ் | Keema Recipes
நெத்திலி கிரிஸ்பி வறுவல்: Crispy Nethili Fry
Herbal Boomarang: மூலிகை மருத்துவம்: மூலிகை பூமராங்
SSC Results: Secondary School Certificate October 2011 examination results
SSC (Secondary School Certificate) October 2011 examination results links
http://msbshse.ac.in/ssc2011/res11.htmSSC (Secondary School Certificate) October 2011 examination results links for gradewise
http://www.msbshse.ac.in/newsite/SSGRADE.HTMSSC (Secondary School Certificate) October 2011 examination results links for overall performance
http://www.msbshse.ac.in/newsite/SSOVALL.HTMHere is the official SSC (Secondary School Certificate) October 2011 examination results home page for the results. http://www.msbshse.ac.in/newsite/newhome.html
எகிறும் பணவீக்கம்: என்னதான் தீர்வு?
தொடர்ந்து பல வருடங்களாகப் பணவீக்கம் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஒரு பக்கம் வட்டி விகிதத்தை உயர்த்திக் கொண்டே வருகிறது மத்திய ரிசர்வ் வங்கி. இன்னொரு பக்கம் பணவீக்கத்தை உயர்த்தும் நடவடிக்கையாக பெட்ரோல் போன்ற எரிபொருள்களின் விலையை உயர்த்திக் கொண்டே போகிறது அரசாங்கம். பணவீக்கப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? எப்படி இதை குறைப்பது என சென்னையைச் சேர்ந்த பிரபல ஆடிட்டர் எம்.ஆர்.வெங்கடேஷிடம் கேட்டோம்.
''தற்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்குப் பணவீக்கத்தை எப்படி கட்டுப் படுத்துவது என்று தெரியவில்லை. பொருளாதார நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அதிகாரி களுக்கும் இந்த பிரச்னையை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. பலமுறை வட்டி விகிதத்தை உயர்த்திய பிறகும் பணவீக்கம் குறையவில்லை என்றால், அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்க்காமல் மீண்டும் மீண்டும் வட்டி விகிதங்களை உயர்த்தி என்ன பிரயோஜனம்?
சரி, பணவீக்கத்தைக் குறைக்க ஏன் வட்டி விகிதங் களை உயர்த்த வேண்டும். மக்களிடையே பணம் அதிகமாக இருக்கிறது. அதனால் ஒரு பொருளை எளிதாக வாங்குகிறார்கள். அதிக நபர்கள் ஒரு பொருளுக்குப் போட்டி போடும்போது அதன் விலை உயர்கிறது. பணம் இருக்கும்போது வீடு, கார், வீட்டுக்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவார்கள்.
இந்த சமயத்தில் வட்டி விகிதங்களை உயர்த்தினால், மக்கள் வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உயர்த்தப் படும். அதனால், அவர்கள் தங்களது தேவையை தள்ளிப் போடுவார்கள். கடனுக்கான வட்டி அதிகரிக்கும்போது டெபாசிட்டுக்கான வட்டியும் அதிகரிக்கும். இதனால், கைவசம் இருக்கும் பணத்தை வங்கியில் முதலீடு செய்வார்கள். இதன் காரணமாக பொதுமக்களிடத்தில் பணப்புழக்கம் குறையும். பொருளின் விலையும் குறையும் என்பது பொதுவான லாஜிக்.
இந்த லாஜிக் சில வருடங் களுக்கு முன்பு வரை கச்சிதமாகச் செயல்பட்டது உண்மைதான். ஆனால், இப்போது அந்த டெக்னிக் உதவுகிற மாதிரி தெரியவில்லை. அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்ல முடியும்.
முதலாவது, இன்றிருக்கிற நிலைமையில் நிலம் வாங்கி வீடு கட்டுவது வீண் என்கிற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார் கள். அந்தளவுக்கு நிலம் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. அதனால் ஒரு சதவிகித, இரண்டு சதவிகித உயர்வுக்கு எல்லாம் மக்கள் கவலைப்படுவதில்லை.
இரண்டாவது, பொருட் களின் விலை உயர்வதற்குப் பணப்புழக்கம் மட்டும் காரணமல்ல. பொருட்களின் உற்பத்தி குறைவதும்கூட ஒரு காரணம். இது இல்லாமல் அதிகார வர்க்கம், ஊழல் போன்றவையும் பொருட்களின் விலை ஏறுவதற்குக் காரணமாக இருக்கும்போது வட்டி விகிதத்தை உயர்த்தினால் போதும் என்று நினைப்பது, கேன்சரை குணப்படுத்த பாரசிட்டமால் மருந்தை டாக்டர் எழுதித் தருகிற மாதிரி.
சரி, என்ன செய்தால் இந்த பணவீக்கம் குறையும்?
பெட்ரோல் விலையை அடிக்கடி உயர்த்துவது கூடாது. பெட்ரோல் விலையில் பாதிக்குப் பாதி மத்திய மாநில அரசுகளின் நேரடி மற்றும் மறைமுக வரிகள்தான் இருக்கிறது. ஒன்று, இந்த விலைகளைக் குறைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது மாற்று எரிபொருளையாவது கண்டுபிடிக்க வேண்டும்.
முன்பேர வர்த்தகத்தை (கமாடிட்டி சந்தை) தடுக்க வேண்டும். உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு இந்த வர்த்தகமும் காரணம்.
பொருளாதாரம் பற்றிய அடிப்படை கொள்கைகளை நாம் மாற்ற வேண்டும். இல்லை எனில் பணவீக்கத்தை நம்மால் குறைக்கவே முடியாது.
உலகில் இருக்கும் எந்த பிரதமருக்கும் மன்மோகன் சிங் அளவுக்குப் பொருளாதாரம் தெரியாது. அந்த நாடுகளில் எல்லாம் விலைவாசி கட்டுக்குள் தான் இருக்கிறது. ஆனால், மிகப் பெரிய பொருளாதார மேதை என்று அறியப்பட்ட மன்மோகன் சிங் மட்டும் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார்.
இதற்கு காரணம், பொருளாதார வல்லுநர்கள் என்கிற பெயரில் அவருடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் தான். உதாரணமாக, ''வால் மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவுக்கு கொண்டு வந்தால் இந்தியாவின் பணவீக்கம் குறையும்'' என்கிறார் நிதி அமைச்சகத்துக்கு ஆலோசகராக இருக்கும் கவுசிக் பாசு. வால் மார்ட் இந்தியாவின் நான்கைந்து நகரங்களில் மட்டும் கடை அமைப்பதால் மட்டுமே பணவீக்கம் எப்படி குறையும்? இது மாதிரியானவர்களை மாற்றினால்தான் பணவீக்கம் குறையுமோ என்னமோ?
Thanks: Nanayam Vikatan
Can Females Judge the Males by first Sight and Appearance: பார்த்ததும்… ஆண்களை `கணக்கு’ போட்டுவிட முடியுமா?
`கூர்மையாக உற்றுநோக்கி, உள்ளுணர்வையும், அறிவையும் பயன்படுத்தி சிந்தித்தால், மூன்றே மூன்று நிமிடங்களில் அந்த ஆண் எப்படிப்பட்டவர் என்பதை கணித்து விடலாம்' என்கிறார்கள், சில கில்லாடி பெண்கள்.
`அதெப்படி முடியும்? ஒருவரது குணாதிசயங்கள் அவரது முகத்தில் எழுதியா ஒட்டப்பட்டிருக்கிறது? உள்ளத்தில் அத்தனை தீய எண்ணங்களையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் நல்லவன் போல் நடப்பவர்களை கணிக்க எப்படி மூன்று நிமிடம் போதும்?' என்று கேட்பவர்கள் ஏராளம்.
`நான்கு வருடங்கள் காதலித்தும் அவனது உண்மையான குணத்தை தெரிந்துகொள்ள முடியாமல் ஏமாந்து போனேனே' என்று புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.
புதிதாக நம்மிடம் அறிமுகமாகும் ஒருவரை நாம் ஓரளவு தெரிந்து கொள்ளவே குறைந்தது இரண்டு மாதம் பிடிக்கும். இந்த இரண்டு மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகள் ஓரளவுக்கு நமக்கு அத்துபடியாகும். அவரது விருப்பு-வெறுப்பு என்ன மாதிரியானது என்பதை இந்த காலகட்டத்திற்குள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் அவரை முழுமையாக தெரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். காரணம், ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார்கள்.
சில பெண்கள் சட்டென காதல் வலையில் விழுந்து விடுவார்கள். காரணம் காதலனாக அவளால் அறியப்பட்ட இளைஞன் மார்டனாக, பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றத்தில் நுனிநாக்கில் ஆங்கிலத்தை தவழவிட்டபடி காணப்படுவது தான். நாலு மாத நட்பில் அந்தப் பெண்ணிடம் `அவன் யார்? எந்த ஊர்? பெற்றோர் எங்கிருக்கிறார்கள்? அவன் குடும்ப பின்னணி என்ன?' என்று கேட்டுப் பாருங்கள்.
பாதிக்கேள்விக்கு அந்தப் பெண்ணிடம் விடையிருக்காது. டிப்-டாப்பாக இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் அந்த பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதுவே நட்பு தாண்டி காதல் வரை போகிறது. இந்த காதல் கிளைமாக்சின் உச்சக்கட்டமாக, ஒரு அரையிருட்டு லாட்ஜில் அந்தப்பெண்ணுடனான காதல் நுகர்வோடு அவன் தன்இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு விடுகிறான். அப்படியே புதிய இடம், புதிய சூழலில் அடுத்த விட்டில்பூச்சியை குறி வைக்கத் தொடங்கி விடுகிறான். ஏமாந்த பெண்ணும் மனதுக்குள் அவனை சபித்தபடி பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்காக காத்திருக்கத் தொடங்கி விடுகிறாள்.
நாலு மாதமாகியும் ஒரு பெண்ணால் தன் நேசிப்புக்குரியவன் எப்படிப்பட்டவன் என்பதை கண்டு கொள்ள முடியாமல் போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவனை எப்படி சரியாக கணிக்க முடியும்?
ஆனால் இன்றைய பெண்களில் பலர் புத்திசாலிகள். வலிய நட்புதேடி வரும் இளைஞர்களைக் கூட மிக எளிதில் தங்கள் நட்புக்கூடாரத்தில் அனுமதிப்பதில்லை. அப்படியே அவன்பழக்கவழக்கம் பிடித்தாலும் சில மாதங்கள் டீலில் விட்டு அப்புறமே `ஹாய், ஹலோ'வுக்கு வருகிறார்கள். இந்த காலகட்டத்திற்குள் அவசரம் காட்டும் இளைஞர்கள் தங்கள் இரையில ் சிக்கும் வேறு பெண்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக திரும்பிப் போய்விடுகிறார்கள்.
இப்போது ஆண்களை, பெண்கள் புரிந்துகொள்வதற்கு செல்போன்கள் பெரிய அளவில் உதவுகிறது. இரவு-பகல் பாராமல் அவன் பேசும்போது, அவனது பலவீனங்களில் ஏதாவது ஒன்று கொஞ்சமேனும் வெளிப்பட்டு விடுகிறது. அதில் உஷாராகிவிடும் பெண்கள் அப்படியே அவனை `கட்' செய்துவிடுகிறார்கள்.
மாதக்கணக்கில் பழகியே ஆண்களின் கேரக்டரை கணிக்கமுடியாது போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவரை கணித்து விட முடியும் என்பதை சிறந்த நகைச்சுவையில் ஒன்றாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.
Don't Postpone Marriage: தள்ளிப்போடாதீங்க, கல்யாணத்தை!
படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும்... இளமையைத் தவிர!
15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஆனால் 30, 35 வயதுவரை வாழ்க்கை வசதிக்காக உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுகிறோம்.
நம் நாட்டில் `செக்ஸ்` என்பது கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது. உடலுறவு பற்றி பேசுவது அசிங்கம். திருமணத்திற்கு முன்பு ஆணும், பெண்ணும் இணைவது கலாசார சீர்கேடு என சுழற்றும் சமூக சாட்டைக்கு பயந்து நமது உடலியக்க தேவைகளை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு வாழ்கிறோம். தாமதமான திருமணம் உடல் ரீதியாக வும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை.
காலதாமதமாக திருமணமானவர்களுக்கே அதிகமாக சிசேரியன் பிரசவம் நடக்கிறது. பாட்டி காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்தவர்கள் அறுவைச் சிகிச்சையை அறிந்த தில்லை. அவர்கள் ஆரோக்கியமான வயதில் திருமணம் செய்து கர்ப்பமடைந்தனர். எளிதாக குழந்தை பெற்றுக் கொண்டனர். அதிகமாக சுகப்பிரசவங்களே நடந்தன.
இன்று, இயந்திரங்கள் வேலைகளைச் செய்வதால் இளைய தலைமுறையினர் உடலு ழைப்பை உணர வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. படிப்பு, வேலை, சொந்த காலில் நின்ற பிறகே இல்லறம் என்றெல்லாம் கூறி திருமணத்தை தாமதமாக செய்து கொள்கி றார்கள்.
வயது முதிர்வடையும்போது உடல் வளைந்து கொடுக்கும் தன்மையை இழக்கிறது. இடுப்பெலும்பு வளைந்து கொடுக்கும் வயதைத்தாண்டி திருமணம் செய்துகொள்ளும்போது அநேக பெண்களுக்கு `சிசேரியன்` அவசியமாகி விடுகிறது.
ஆண்கள், தாமதமாக திருமணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தால் தவறான பழக்கம் உடையவர்களாகிறார்கள். அதனால் திருமண சமயத்தில் வீரியம் குறைந்து தந்தையாகும் தகுதியை பலர் இழக்கின்றனர்.
இயற்கை இச்சைகளை தீர்ப்பதற்காக செக்ஸ் புத்தகம், பலான படங்கள், இணைய தள தேடல் என மாற்று வழிகளில் இன்றைய இளைஞர்கள் பயணப்படும் பின்னணியில், தள்ளிப்போடப்படும் அவர்கள் திருமணம் இருக்கிறது. இதனால் தற்காலிக உணர்வுத் தேவைகளை முறைகேடாக அணுகப்போய், அதனால் எயிட்ஸ் அதிகரிப்பு, கள்ளக்காதல் போன்ற கலாசார சீரழிவும் தவிர்க முடியாததாகி விடுகிறது.
அதற்காக இன்றைய காலத்தில் மீண்டும் 15 வயதிற்குள் பால்ய விவாகம் செய்வது சாத்தியமில்லை. ஆனால் இளம் பருவத்தில் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்திற்கு மாற முயற்சிக்கலாம். இன்றைய இளைய தலைமுறை கல்வியில் அதிக அக்கறை காட்டி வருகிறார்கள். நல்ல படிப்பு, அதற்கேற்ற வேலை, கைநிறைய சம்பளம் என்று ஒரு லட்சியத்தை மனதில் பதித்துக்கொண்டு அதை சாதித்தும் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர் கள் படிப்புக்கேற்ற வேலை கிடைத்ததும் அதற்கு மேலும் தள்ளிப்போடாமல் தாமதமின்றி திருமணம் செய்து கொள்வது அவசியம்.
இளம்வயதில் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளின் பெற்றோர் நல்ல ஆரோக்கிய மாக இருப்பார்கள். அதனால் பிறக்கப்போகும் தங்கள் பேரன், பேத்திகளை அவர்கள் தங்கள் பொறுப்பில் பார்த்துக் கொள்வார்கள். இதனால் தலையாய பிரச்சினையான குழந்தை வளர்ப்பது கூட தம்பதிகளுக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. இந்த யதார்த் தம் புரிந்தால் இளம்வயதில் இல்லறமே நல்லறம் என்பது ஆணியடித்த மாதிரி மனதில் பதிவாகி விடும். ஆகவே படிப்பை முடித்ததும் `கையில வேலை...அப்பவே கல்யாணம்' னு வாழ்க்கையில செட்டிலாகப்பாருங்க!
GM Diet in Tamil
உணவுப்பழக்கத்தில் அதிக கவனம் செலுத்தாததுதான் உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணம். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகளை கண்டபடி தின்றுவிட்டு எடை கூடியபிறகு `டயட்' என்ற பெயரில் உணவைக் குறைத்துக் கொள்பவர்கள் ஏராளம். நடைபயணம், ஓட்டம், நீச்சல், விளையாட்டுகள் என்று வேறு சில முயற்சிகளில் இறங்கி எடையைக் குறைக்க ஆசைப்படுபவர்களும் உண்டு. மருந்து மாத்திரைகள், சத்துமாவுகள், பழங்களை சாப்பிட்டு சிலர் பயன் தேடுகிறார்கள்.
எத்தனையோ வழியில், எவ்வளவோ பேர் எடையைக் குறைக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். உடல் எடைப் பிரச்சினை உலகம் முழுவதும் இருக்கிறது. இந்தியாவிலும் எடைகூடியவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். ஆனால் மேற்கத்திய நாடுகளில் குண்டு உடல்காரர்கள் மிகுதி. அவர்களின் பிரச்சினையை குறைக்க அமெரிக்காவில் ஒர ு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவில் உடல் எடையைக் குறைக்க சுலபமான வழியை அறிமுகப்படுத்தினார்கள்.
7 நாட்களுக்கு உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் சுமார் 6 கிலோ வரை எடை குறையும் என்று அந்த ஆய்வு முடிவில் உறுதியளிக்கப்பட்டது. அந்த ஆய்வின்படி முதல்நாள் முழுக்க முழுக்க பழ வர்க்கங்களை மட்டும் உண்ண வேண்டும். ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, மாதுளை, தர்பூசணி, சப்போட்டா என்று எந்தப் பழங்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். தண்ணீர் சத்து நிறைந்த தர்ப்பூசணி மிகவும் நல்லது. ஆனால் வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.
இரண்டாம் நாள் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ருசிக்காக உப்பு, காரம் சேர்த்துக் கொள்ளலாம். வயிறு நிரம்ப சாப்பிடலாம். காலையில் உருளைக்கிழங்கு மட்டும் சாப்பிட வேண்டும். காய்கறிகளை வேக வைத்து சாப்பிடுபவர்கள் எண்ணெய், தேங்காய் சேர்க்கக்கூடாது. மூன்றாவது நாள் பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். அன்றைய தினம் உருளைக்கிழங்கு, வாழைப்பழம் தவிர்க்க வேண்டும்.
நான்காவது நாள் வாழைப்பழமும், பாலும் தான் சாப்பாடு. அதிகபட்சமாக 3 டம்ளர் பாலும், 8 பழங்களும் உண்ணலாம். விரும்பினால் காய்கறி சூப் ஒரு கப் சாப்பிட்டுக் கொள்ளுங்கள். ஐந்தாம் நாள் சிறிதளவு (ஒரு கிண்ணம்) அரிசி சாதம் சேர்க்கலாம். மீதி பசிக்கு பெரிய தக்காளிப் பழங்கள் 6 சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் பசியெடுத்தால் தண்ணீர் தான் குடிக்க வேண்டும். வழக்கத்தைவிட கூடுதலாக 4 டம்ளர் (மொத்தம் 12 டம்ளர்) தண்ணீர் பருக ஆய்வு அறிவுறுத்துகிறது.
ஆறாம் நாள் சிறிது அரிசி சாதமும், மீதிக்கு காய்கறிகளும் சாப்பிடுங்கள். காய்கறிகளை வேக வைத்தோ, பச்சையாகவோ வயிறு நிரம்ப சாப்பிடலாம். ஏழாவது நாள் ஒரு கப் சாதம் - காய்கறிகளுடன், பழ ஜூஸ் பருகுங்கள். மற்ற நாட்களில் பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடக்கூடாது. அவ்வளவுதான் டயட் முடிந்தது. 8-ம்நாள் எடை இயந்திரத்தில் ஏறிப் பாருங்கள். மாற்றம் தெரியும் என்கிறது அந்த ஆய்வு.
இந்த டயட் முறைக்கு வேறு கட்டுப்பாட்டு விதிகள் இல்லை என்பது சிறப்பானது. டீ, காபி சாப்பிடுபவர்கள் பால், சர்க்கரை தவிர்த்து பருகலாம். டீயில் எலுமிச்சை பிழிந்து சாப்பிட்டால் நல்லது தான். எண்ணெய் தவிர்த்து வருவது சிறந்த பலன் தரும். முடியாத பட்சத்தில் ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்துக் கொள்ளலாம். முதல் இரண்டு நாட்களில் சேர்க்கும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு போதிய ஆற்றலை வழங்கும்.
3-வது நாளில் இருந்து கொழுப்பு எரிக்கும் பணி உடலில் நடைபெறுகிறது. அதை நீங்களே உணர முடியும். நான்காம் நாளில் சேர்க்கப்படும் வாழைப்பழம், உடல் இழக்கும் பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. 5-ம் நாள் அதிகப்படியான தண்ணீர் சேர்க்கப்படுவது உடல் உறுப்புகளை சுத்தம் செய்யும். சிறிது அரிசி சாதம் சேர்ப்பதால் 5, 6-வது நாட்களில் உடலுக்கு போதுமான சத்து கிடைக்கிறது. 7-வது நாளில் மாற்றங்களின் பலனை உடல் சுறுசுறுப்பில் இருந்து உணரலாம்.
அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வு மையம் இந்த ஆய்வை மேற்கொண்டது. பிரசித்தி பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், ஆய்வை அங்கீகரித்து தங்கள் ஊழியர்களின் எடை குறைப்பிற்காக கடைப்பிடிக்க வைத்தது. அதற்கு நல்ல பலன் கிடைத்ததால் அது `ஜெனரல் மோட்டார்ஸ் டயட்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் எடை குறைய விரும்புபவர்கள் 3 நாள் இடைவெளிவிட்டு மீண்டும் இதே டயட் முறையை கடைபிடிக்கலாம் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Does Ghee Increases the Cholestral: நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்குமா?
ஆய்வு: ஐம்பத்து ஏழு வயதான ஒருவருக்கு, தோள் மூட்டில் கடுமையான வலி இருந்தது. கைகளை முழுவதுமாக தூக்க முடியவில்லை. அவருடைய உணவு வழக்கத்தில், கொழுப்பற்ற அல்லது மிகக் குறைந்த கொழுப்பே இருந்தது. கறிகாய்களை மிக அதிக அளவிலும், மிளகாய்களை அதிகமாகவும் உண்ணும் பழக்கம் இருந்தது. அவருக்கு ரத்தக் கொழுப்பு மிகவும் அதிகமாக இருந்ததால், நெய்யைச் சேர்க்காமலும், எண்ணெய் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளாமலும், மிகவும் கவனமாக இருந்தார். நவீன மருத்துவத்தில் அவருக்கு ரத்தக் கொழுப்பினைக் குறைக்க, மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் இதுவரையில், அவர் அதை எடுக்கத் தொடங்கவில்லை. அவருடைய நடைமுறைகள் மற்றும் வழக்கங்களை வறண்ட மற்றும் கொழு ப்பு / எண்ணெய் பசையற்ற உணவு, குளிர் சாதன வசதி பொருத்தப்பட்ட அறைகளில் வேலை, (மிளகாய் நிறைந்த) காரமான உணவு, அடிக்கடி பிரயாணம் போன்றவற்றால் வாயு மிகவும் சீற்றமடைந்ததால், தோளில் வலி கடுமையாக இருந்தது. மேற்கூறிய முரணான வழக்கங்களை கைவிடுமாறு அறிவுறுத்தப்பட்டது. சிகிச்சையாய், உட்கொள்ளுவதற்கு நெய் மருந்து பரிந்துரைக்கப்பட்டது. காலை மற்றும் மாலையில், வேளைக்கு 15 ட்டூ கொடுக்கப்பட்டது. நெய் என்ற பெயரைக் கேட்டவுடனேயே அவர் கவலைப்பட்டார். தன்னுடைய ரத்தக் கொழுப்பின் நிலை என்ன ஆகுமோ என பயந்தார். சீற்ற மடைந்த வாயுவினால் பாதிக்கப்பட்ட தோளுக்கு, இதுவே உகந்த மருந்து என்று, திரும்பவும் உறுதிப்படுத்தப்பட்டது.
அடுத்த ஐந்து வாரங்களுக்கு, அவர் நெய் மருந்தை ஒழுங்காக உட்கொண்டார். உணவிலும் நெய் சேர்த்துக் கொண்டார். 5-6 வாரங்களில், ஏறக்குறைய ஒரு கிலோ, நெய் மருந்தாகவும், உணவாகவும் உண்டு முடித்தார். இதற்குள் அவர், ரத்தக் கொழுப்பு அளவினைக் குறித்து மிகுந்த கவலையுடன் இருந்தார். ஃஐகஐஈ ககீOஊஐஃஉ எனும் சோதனையை எடுத்த போது, ஆச்சரியப்படும் வகையில் அவருடைய கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசராய்டு அளவுகள், நெய் மருந்தால் குறைந்ததாகத் தெரிந்தது.
சோதனையின்படி, எல்லா அளவுகளும் விரும்பத்தக்க அளவுகளுக்கு குறைவாகவே உள்ளன. ஏஈஃ சிறு அளவு குறைந்தாலும், விரும்பத்தக்க அளவைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளது. ரத்தக் கொழுப்பு குறைந்தது நெய் மருந்தை உட்கொண்டதால், வாயுவினால் ஏற்பட்ட வலி தீர்ந்ததுடன், ரத்தக் கொழு ப்பும் குறைந்தது. நெய் அனேக சிறந்த குணங்களைக் கொண்டது . நெய் அறிவு, ஞாபக சக்தி, நுண்ணறிவு, ஜீரண சக்தி, பலம், ஆயுள், விந்து, கண்பார்வை இவற்றை அதிகரிக்கும். சிறுவர், முதியோர், மகப்பேறு, உடல் ஒளி, மிருதுத் தன்மை, குரல் இவற்றுக்குச் சிறந்தது. மார்புவலி, உடல் இளைப்பு, அக்கி என்னும் தோல் நோய், ஆயுதம், நெருப்பு இவற்றால் துன்புற்ற உடல் போன்றவற்றுக்கும் சிறந்தது. வாதம், பித்தம், நஞ்சு, மனக்கலக்கம், உடல் வறட்சி, முகத்தில் தெளிவின்மை, காய்ச்சல் ஆகியவற்றை நெய் நீக்கும். நெய் இத்தனை நல்ல குணங்களையுடையது. இவ்வளவு சிறந்ததோர் உணவை, இன்றைய மக்கள், இது ஒரு கொழுப்பு என்று ஒதுக்கி விட்டனர்.
டாக்டர் கிரிஜா
சஞ்சீவனி ஆயுர்வேத மருத்துவ மையம்
sanjeevani foundation @gmail.com
மழைக்காலத்தில் வரும் தொற்று நோய்கள்
கிருமி : சல்மோனெலி டைபி (Salmonilla Typhi) இந்த கிருமி மிகவும் பொதுவானது.
பரவும் முறை: அசுத்தமான உணவு, குளிர்பானங்கள், குடிநீர் வழியே பரவும்.
ஆரம்ப அறிகுறிகள்: காய்ச்சல், பொதுவான மாறுபட்ட உடல் சோர்வு, உடல் நல மாற்றம், வயிற்று வலி, வயிற்றிலும் அல்லது மார்பிலும் சிலருக்கு அரிப்பு தோன்றும். "ரோஸ் ஸ்பாட்' என்றழைக்கப்படும் சிறு சிவப்புப் புள்ளிகளின் தோற்றம், வயிற்றில் குறிப்பிட்ட இடத்தில் பலவீனம், மலத்தில் ரத்தம், குளிர், பதற்றம், நிலையற்ற மனநிலை, தீவிர மயக்க நிலை, மெதுவான சோம்பல் நிலையுடன் சோர்வாகக் காணப்படும், உடலில் சோர்வு மற்றும் தளர்ச்சி, பலவீனம்.
பரிசோதனைகள்: முழுமையான ரத்தப் பரிசோதனை (CBC)
முதல் வாரம் - ரத்த வளர்சோதனை (Blood Culture)
இரண்டாவது வாரம் - ப்ளோரசன்ட் உடல் எதிர்பிகள் (Fluroscent Antibody)
மூன்றாவது வாரம் - ரத்த அணுக்கள் (குறைவுபடும்) (Low Platelet Count)
நான்காவது வாரம் - மலம் வளர் சோதனை (Stool Culture)
விளைவுகள்: குடலில் ரத்தக் கசிவு, குடலில் துளை ஏற்பட்டு ரத்த வெளியேற்றம், சிறுநீரகம் செயலிழத்தல்
தடுப்பு முறைகள்: குடிநீர்க் காய்ச்சிக் குடித்தல், சுகாதாரமான முறையில் உணவு வழங்குதல், கழிவுகளை அப்புறப்படுத்துதல், உடல்நல முறைகளைப் பின்பற்றுதல்.
கிருமி : லெப்டோஸ்பைரா பாக்டீரியா (ஃஞுணீtணிண்ணீடிணூச் ஞச்ஞிtஞுணூடிச்)
பரவும் வழி : அதிக எண்ணிக்கையாக கொறிவிலங்கு (கீணிஞீஞுணtண்) பிராணிகளின் சிறுநீர் மூலம் பரவும்.
அறிகுறிகள் : 4 முதல் அல்லது 14 நாள் அன்று நோயின் அறிகுறி தென்படும்.
முதல்நிலை : (சளிக்காய்ச்சல் (ஊடூத) போல் தென்படும்) வறட்டு இருமல், அதிகமான காய்ச்சல், பயங்கர தலைவலி, உடல் வலி, வாந்தி, பேதி, உடலில் நடுக்கம்.
இரண்டாம் நிலை : மூளை காய்ச்சல், ஈரல் பாதிப்பும், மஞ்சள் காமாலை, சிறுநீரக செயலிழப்பு.
பரிசோதனைகள் / நோயறியும் ஆய்வுகள் : - ரத்த அணtடிஞணிஞீடிஞுண் அறிதல், - முழுமையான ரத்தப் பரிசோதனை (இஆஇ), - பெருமூளைத் தண்டு வட மண்டலம் (இகுஊ ஊடூதிடிஞீ), - ஈரல் செரிமானப் பொருள் வகை அறிதல், - சிறுநீர் சோதனை
விளைவுகள்: - மூளைக் காய்ச்சல், ரத்த கசிவு: ஹெப்படைடிஸ் அ வைரஸ்
ஹெப்படைடிஸ் அ வைரஸ்
கிருமி : ஹெப்படைடிஸ் அ வைரஸ் Hep A.Virus
பரவும் முறை : வெளி உணவகங்களின் மூலம் உணவு உண்பதாலும், அசுத்தமற்ற முறையில் உணவு தயாரிப்பதன் மூலம், மலக்கழிவுகளால் ஏற்படும். சாக்கடை நீர்க் கலப்பினாலோ, கழிவுப் பொருட்களினால் உண்டாகிய காய், கனிகள் உண்பதன் மூலம் பரவ வாய்ப்பு உண்டு. நோய்த் தாக்கப்பட்டவரின் ரத்தம் அல்லது மலம் மூலம் பரவும்.
அறிகுறிகள் : தீவிரமற்ற வைரசு எனினும், அதன் தாக்கம் குறிப்பாக, பெரியவர்களுக்கும் பல மாதங்கள் வரை நீடிக்கும். கருமையான சிறுநீர், மயக்கம், தோலரிப்பு, பசியின்மை, காய்ச்சல், வெளிர் அல்லது வண்ணமில்லா மலம், மஞ்சள் நிறத் தோல், கண்கள் மஞ்சளாகி காமாலை காணப்படும்.
பரிசோதனை: மருத்துவ பரிசோதனையின் போது, ஈரல் வீக்கமும் அதன் பாதிப்பும் மருத்துவர் கண்டறிவார்.
ரத்த பரிசோதனைகள்: ரத்தத்திலுள்ள அகுகூ, அஃகூ அளவுகள் அதிகரித்திருக்கும், ரத்தத்தில் அணtடி ஏஅங காணப்படும், ரத்தத்தில் அணtடி ஏச்தி ணிஞூ ஐஞ்M வகை காணப்படும், ஈரல் செயல் சோதனை.
விளைவுகள்: ஆயிரத்தில் ஒருவருக்கு அச்சுறுத்தும் ஹெப்படைடிஸ் உயிர்க்கு அச்சமூட்டும்.
தடுப்பு முறைகள்: நோய்க் கிருமி பரவாமல் உரிய முறைகளை மேற்கொள்ளல். கைகளைச் சுத்தமாகக் கழுவவும். சுத்தமற்ற நீரையும், உணவையும் தவிர்க்கவும். தடுப்பு ஊசி, இந்நோய் பரவியிருக்கும் இடங்களுக்குச் செல்லுமுன் இந்த தடுப்பு ஊசி போட்டுக் கொண்டால் பாதுகாப்புக் கொடுக்கும். பயணிப்பவர் கடைப்பிடிக்க வேண்டியவை: பால் பொருட்களைத் தவிர்த்தல். பச்சையாகவோ அல்லது குளிரூட்டப்பட்ட இறைச்சி மற்றும் மீனைத் தவிர்க்கவும்.
டாக்டர் பிரபுராஜ்
Cap page Cheese Cola: முட்டைக்கோஸ் சீஸ் கோலா
முட்டைக்கோஸ் சீஸ் கோலா தேவையானவை
முட்டைக்கோஸ் - 100 கிராம்
பன்னீர் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
பச்சை மிளகாய் - 4
பிரெட் துண்டுகள் - 2
எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ரொட்டித் தூள் - 6 ஸ்பூன்
ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு
முட்டைக்கோஸ் சீஸ் கோலா செய்முறை
முட்டைக்கோசையும், பச்சை மிளகாயையும் பொடியாக அரியவும். பன்னீரை துருவிக் கொள்ளவும். உருளைக் கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
முட்டைக்கோசுடன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய், பன்னீர் சேர்த்து பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மசித்துப் போடவும். தொடர்ந்து எலுமிச்சம் பழச்சாறு, தேவையான உப்பு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். உருண்டைகளை ரொட்டித் தூளில் புரட்டி எடுக்கவும்.
வாணலியில் ரீபைண்ட் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இது தக்காளி, சில்லி சாஸுடன் சூடாக சாப்பிட முட்டைக்கோஸ் சீஸ் கோலா மிகவும் சுவையாக இருக்கும்.
ரொமான்ஸ் ரகசியங்கள்! - Romance Ragasiyangal: இரட்டை வாழ்க்கை இம்சை
Romance Ragasiyangal |
முரளி, சுலோச்சனா... அந்த விதி பழகாத தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். சுலோச்சனா, மத்திய அரசுத் துறையில் நல்ல பொறுப்பில் இருப்பவர். கிராமப்புற பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத்தில் அரசாங்கம் தொடங்கிய ஒரு துறையில், கிரியேட்டிவான முறையில் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி நிறைய விருதுகளையும், பதவி உயர்வுகளையும் வாங்கியவர். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு நிம்மதி இல்லை.
தன்னால் இயன்றவரை வீடு, அலுவலகம் என்று இரண்டு பொறுப்புகளை சுலோச்சனா சுமந்தாலும், கணவர் எப்போதும் கரித்துக் கொட்டிக் கொண்டே இருப்பார். தன் அலுவல் தொடர்பாக மேற்கல்வி படித்து அதில் முனைவர் பட்டமும் பெற்றார் சுலோச்சனா. கை நிறைய சம்பளம். எந்நேரமும் அவரிடம் தங்கள் பிரச்னைகளைச் சொல்லி விவாதிக்க வரும் கிராமத்தினரின் கூட்டம், அரசியல்வாதிகள், கலெக்டர் போன்ற உயர் அதிகாரிகள் காட்டும் மரியாதை, அரசு தந்த கார் என்று மிக மரியாதையான ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்தாலும், கணவர் முரளிக்கு அவர் தன் கை மீறிப்போய் விட்டதாக எண்ணம்.
''ரொம்ப படிச்சவனு திமிரு!''
''ஊர்ல எல்லாரும் மதிக்கிறாங்க இல்லை... அதான் என்னைப் போட்டு மிதிக்கிறே.''
''வீட்டை முழுசா பார்த்துக்க வக் கில்லை... உனக்கெல்லாம் ஏன் குடும்பம், புருஷன், புள்ளகுட்டிங்க?''
''போகிற போக்கை பார்த்தா எலெக்ஷன்ல நின்னு மந்திரி ஆயிடுவபோல. அப்புறம் என்னைத் துரத்தி விட்டுட்டு வேற ஆள் பார்த்துப்ப.''
- கணவன் கூசாமல் கொட்டும் இந்தக் கொடும் சொற்களுக்கு, ஆரம்பகாலத்தில் ஒவ்வொன்றுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார் சுலோச்சனா. நாட்கள் செல்லச் செல்ல முரளியின் குரூரமும், வக்கிர சிந்தனையும் அதிகமாகிக் கொண்டே வந்ததால், வெறுத்துப் போய் மௌனம் காக்க ஆரம்பித்தார். அதற்கும் வசை தொடர்ந்தது. 'அம்மாவை உலகமே பாராட்டுகிறதே... அப்பாவுக்கு மட்டும் ஏன் விபரீத சிந்தனை' என்று அவர்களின் குழந்தைகளுக்குப் புரியவே இல்லை... பாவம்தான்.
வெளியுலகில் ஒரு வாழ்க்கை, வீட்டுக்குள் ஒரு நரக வாழ்க்கை என்று சுலோச்சனாவின் இரட்டை நிலை இன்றும் பரிதாபமாகத் தொடர்கிறது. அவர்களுக்குள் காதல் என்கிற வார்த்தையே அடிபட்டுப்போய் பல வருடங்கள் ஆகிறன்றன.
மாறி வரும் இன்றைய சூழலில், தடைகளைத் தாண்டி அலுவலக வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கை இரண்டையும் வெற்றிகரமாக பெண்கள் நடத்திவரும் பெரும் சாதனையை, ஆண்கள் புரிந்துகொண்டே ஆக வேண்டும்.
இந்த விஷயத்தை ஒரு தம்பதிக்கு மட்டுமல்ல, ஊருக்கே... ஏன் உலகுக்கே பிராக்டிகலாக புரிய வைக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம், நேரடியாக இறங்கிய அனுபவத்தை இங்கே சொல்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
''தமிழ்நாட்டின் புதிரன்கோட்டை கிராமத்தில் நடந்திருந்தது ஒரு மௌனப்புரட்சி. ஆயிரக்கணக்கான படிப்பற்ற கிராமத்தவர்களை, மிகவும் குறுகிய காலத்தில், 'என்.ஏ.எஃப்' (NAF) எனப்படும் தேசிய விவசாய ஃபவுண்டேஷன் தன்னுடைய முயற்சியினால் படிப்பறிவு பெற்றவர்களாக மாற்றிஇருந்தது. கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட பாடத் திட்டத்தில், நவீனமுறையில் அளிக்கப்பட்ட பயிற்சி அது.
அதிகாலையில் வெள்ளி முளைக்கும்போது எழுந்திருக்கும் பெண்கள்... வீட்டு வேலை, குழந்தைகளைப் பராமரிப்பது, சமையல் இவற்றுடன் காடு, கழனி என்று வயல்வேலையும் பார்த்துவிட்டு, இரவு கண்களை மூடிப் படுக்கும்போது நிலவு உச்சிக்கு வந்திருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு நேரம் கண்டுபிடித்து எழுத்தறிவிப்பது, சாதாரண விஷயமல்ல. அவர்களுக்கான கல்வியை இரவு நேரத்தில்தான் கொடுக்க முடியும். 'என்.ஏ.எஃப்' அப்படித்தான் செயல்பட்டது.
நான் அங்கே சென்றிருந்தபோது சுமார் 4,200 பேர் இரவு பாடசாலை மூலம் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அதில் 80 சதவிகிதத்தினர் பெண்கள். அந்தச் சுற்றுவட்டார கிராமங்களில் 288 சுய உதவிக் குழுக்களையும் 'என்.ஏ.எஃப்' உருவாக்கியிருந்தது. அவர்களின் மொத்த சேமிப்பு 48 லட்சம் ரூபாயை எட்டியிருந்தது. சுமார் 70 லட்சம் ரூபாய்க்கான தொழில் கடன்களை வழங்கவும் ஏற்பாடு செய்திருந்தது.
கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் ஒரு பெண். அவருடைய கணவர் எனக்கு மாலை அணிவித்து வரவேற்றார். நான் அந்தப் பஞ்சாயத்துத் தலைவியிடம், 'நீங்கள் சுதந்திரமாகச் செயல்பட உங்கள் கணவர் விடுகிறாரா? அல்லது தலையிடுகிறாரா?' என்று கேட்டேன். அந்தக் கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்ல தடுமாறினார்.
நிலைமையைச் சமாளிக்கும்பொருட்டு, 'அவ்வப்போது சில உதவிகளைச் செய்வதுண்டு' என்று பூசி மெழுகினார் கணவர். உண்மையில் அந்தப் பெண்மணியின் வேலைகளில் அவர் தலையிடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது. நம் நாட்டில் பெரும்பான்மையான பெண் பஞ்சாயத்துத் தலைவிகளின் நிலைமை இப்படித்தான் இருக்கிறது.
'இதோ பாருங்கள், நீங்கள் உங்கள் மனைவியைச் சுதந்திரமாக வேலை பார்க்கவிட வேண்டும். அவரால் சிறப்பாகப் பணியாற்ற முடியும். உங்கள் மனைவியின் வேலைகளில் தலையிட மாட்டேன் என்று உங்களால் உறுதி கூற முடியுமா?' என்றேன். அவர் 'நிச்சயமா சார்!' என்றார். சுற்றி நின்றிருந்த பெண்கள் எல்லாம் அதற்குக் கரகோஷம் செய்தார்கள். அந்தக் கரகோஷம், அவர்களும் அப்படிப்பட்ட சுதந்திரத்தையே விரும்புகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டியது. பெண்கள் லீடர்ஷிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால், அதற்கு ஆண்கள் முழுமனதோடு வழிவிட வேண்டும் என்பதே என் எண்ணம்''
- இப்படி எழுதியிருக்கிறார் அப்துல் கலாம்.
பொதுவாழ்க்கையில் மட்டுமல்ல, தனிப்பட்ட மண வாழ்க்கையிலும் இனி ஆண்கள், பெண்களை அடக்கி ஆளாமல் அவர்களின் சுதந்திரத்துக்கும், திறமைக்கும் வழிவிட்டு நடந்தால்... அவர்களின் காதல் வாழ்க்கையும் கடைசி வரை இனிக்கும். இது 21-ம் நூற்றாண்டின் புதிய விதிகளில் ஒன்று.
'காதல் ஒருவனைக் கைபிடித்து, அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து...' என்பது பெண்ணுக்கு மட்டுமில்லை, ஆணுக்கும் பொருந்தும்.
Read More Romance Ragasiyangal articles from here in the given reference.
Carrot Masala Idly: காரட் மசாலா இட்லி
வெங்காயம் (நறுக்கியது) - 1/2 கப்
காரட் (துருவியது) - 1/2 கப்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
கறிமசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
துருவிய சீஸ் - 1/4 கப்
கடுகு, உளுந்தம் பருப்பு - தாளிக்க
பச்சைக் கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வாணலியில் சிறிது எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பை தாளிக்கவும்.
இட்லி தட்டில் குழியில் சிறிது மாவை ஊற்றி அதன் மேல் சிறிதளவு மசாலா கலவையை போட்டு அதற்கு மேல் இன்னும் சிறிதளவு இட்லி மாவு ஊற்றவும். இப்படியே எல்லாக் குழிகளிலும் இட்லி மாவு வார்க்கவும்.
வேக வைத்து எடுத்தால், ருசியான காரட் மசாலா இட்லி `ஸ்டப்டு இட்லி' ரெடி. தேங்காய்ச் சட்னி இந்த இட்லிக்கு ஏற்றது.
கீதா தெய்வசிகாமணி
அரவணைப்புகளையும், முத்தங்களையும் விரும்பும் ஆண்கள்!
இந்த வித்தியாசமான தகவலை ஒரு ஆய்வு முடிவு சொல்லியுள்ளது. இதுவரை இதை உல்டாவாகத்தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் ஆண்களுக்கு செக்ஸ் உறவை விட தங்களது காதலி அல்லது மனைவி தங்களுக்கு அதிக அளவில் முத்தமிடுவதையும், கட்டித் தழுவுவதையும்தான் அதிகம் விரும்புகிறார்களாம்.
அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை அதிக அளவிலான செக்ஸ் உறவையே தங்களது பார்ட்னர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்களாம்.
ஒன்று முதல் 51 ஆண்டு காலம் இணைந்து வாழும் 5 நாடுகளைச் சேர்ந்த 1000 தம்பதிகளை இந்த ஆய்வுக்காக பேட்டி கண்டு அவர்கள் மூலம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஆய்வு முடிவுகளின்படி, திருமணமாகி 15 ஆண்டுகளைப் பூர்த்தி செய்து விட்ட பெண்களுக்கு செக்ஸ் உறவு குறித்த நல்ல அறிவும், ஞானமும் ஏற்படுகிறதாம். இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் செக்ஸ் குறித்த முழுமையான ஞானம் இருப்பதாக தகவல் கூறுகிறது.
செக்ஸில் ஆண்களுக்கு எது அதிகம் பிடிக்கிறது என்ற கேள்விக்கு நிறைய முத்தமுமம், கட்டிப் பிடிப்புகளும்தான் என்று பெரும்பாலான ஆண்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது. அடிக்கடி தங்களை மனைவியர் கட்டிப் பிடிப்பது மிகவும் பிடித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அதேசமயம், முத்தம் மற்றும் கட்டிப்பிடிப்புகளை பெண்கள் அதிகம் பொருட்படுத்துவதில்லையாம். மாறாக, செக்ஸ் உறவுகளுக்கு அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.
என்னதான் கட்டிப்பிடிப்புகளும், முத்தங்களும் அதிகம் பிடித்தமானவையாக இருப்பதாக ஆண்கள் கூறினாலும் கூட செக்ஸ் உறவுகளுக்கும் அவர்கள் முக்கியத்துவம் தருகிறார்களாம். ஆணும் சரி, பெண்ணும் சரி செக்ஸ் உறவு என்பது நிம்மதியான மகிழ்ச்சியைத் தரும் அனுபவமாக அது இருப்பதாக பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு இந்தியாவில் நடத்தப்படவில்லை. எனவே இந்தியர்களின் மன நிலை குறித்த அளவீடாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. இருந்தாலும், நீடித்த மகிழ்ச்சிக்கும், அளவில்லாத நிம்மதிக்கும், செக்ஸ் உறவு மட்டுமல்லாமல், சின்னச் சின்ன முத்தங்கள், அன்பான கட்டித் தழுவல்களும் அவசியம் தேவை என்பது முக்கியமானது.
Suraa poondu Kulambu | சுறா பூண்டு குழம்பு
Are you aged above 40: 40 வயதைக் கடந்த பெண்ணா நீங்கள்? உஷார்!
Diabatese: சர்க்கரை நோய்
சர்க்கரை நோயாளிகளில், மூன்றில் ஒரு பங்கினர், இந்தியாவில் இருந்தாலும்,
சர்க்கரை நோய் குறித்து சரியான புரிதல் ஏற்படவில்லை.
அதிகம் இனிப்பு சாப்பிடுவதால், ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்து விடாது.
ஒருவர் இனிப்பே சாப்பிடுவதில்லை என்பதால், அவருக்கு சர்க்கரை நோய் வராது
என்று சொல்லவும் முடியாது. கணையத்தில் பீட்டா செல்கள் இன்சுலினை
சுரக்காமல் போனால், அல்லது குறைவாக சுரந்தால், அவர் இனிப்பு சாப்பிடாமல்
இருந்தால் கூட, சர்க்கரை நோய் வரும். இன்சுலின் இயல்பாக சுரக்கும் தன்மை
கொண்ட ஒருவர், இனிப்பு
அதிகம் சாப்பிட்டாலும் சர்க்கரை நோய் வராது. ஆனால், அளவுக்கு அதிகமாக
இனிப்பு சாப்பிடுவதால், உடல் எடை அதிகரித்து, அது சர்க்கரை நோய்க்கு
வழிவகுத்து விடும்.
சர்க்கரை நோய் தொற்று நோயா?
சர்க்கரை நோய், தொற்று நோய் என்ற எண்ணம் கொண்டவர்கள் அதிகம் உள்ளனர்.
கணவனுக்கு இருந்தால் மனைவிக்கு சர்க்கரை நோய் தொற்றி விடாது. ஆனால்,
பாரம்பரியத்தில் தாத்தாவுக்கு சர்க்கரை நோய் இருந்தால், பேரனுக்கு
சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.
சர்க்கரை நோயாளிகள் அனைவரும், இன்சுலின் ஊசி எடுத்துக் கொள்ள வேண்டுமா?
முதல் வகை சர்க்கரை நோயாளிகள் (ஜுவனைல் டயாபடிக்), இன்சுலின் ஊசி
இல்லாமல் வாழ முடியாது. ஆனால், இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகள்,
இன்சுலின் ஊசி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. உணவுக் கட்டுப்பாடு,
உடற்பயிற்சியோடு, மாத்திரைகள் எடுக்காமலேயே, சர்க்கரை நோயை
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களும் உண்டு. சர்க்கரை நோயை, 24 மணி
நேரமும், வாரம் முழுவதும், மாதத்தில் முப்பது நாள்களும, ஆண்டு முழுவதும்,
ஆயுட்காலம் வரை, கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ரத்தத்தில்
சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், சர்க்கரை அளவு
கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, மருத்துவரின் அறிவுரைப்படி ரத்தப்
பரிசோதனை செய்து, அதற்கு ஏற்ப சிகிச்சை பெற வேண்டும்.
கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோயால், கண், சிறுநீரகம், கால்
நரம்புகள், ரத்தக் குழாய்கள், இதயம், மூளை மற்றும் உடல் உறுப்புகள்
அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. சில நேரங்களில் மயக்க நிலைக்கு சென்று
விடுவர். சர்க்கரை நோய் ஒரு தொடர் நோய், சில நாள்களுக்குள் அல்லது சில
வாரங்களுக்குள் அல்லது சில ஆண்டுகளில் குணமாகும் நோய் அல்ல. எனவே,
வாழ்நாள் முழுவதும் சிகிச்சை அவசியம்.
இன்சுலினை வாய் வழியாக எடுத்துக் கொள்ள முடியுமா?
முடியாது. இன்சுலினை ஊசி மூலமே எடுத்துக் கொள்ள முடியும். வாய் வழியாக
அல்லது வேறு வழியில் இன்சுலினை உட்கொள்வதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து
நடந்து வருகின்றன. இரண்டாம் வகை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளும்
மாத்திரைகள் இன்சுலின் மாத்திரைகள் அல்ல. அது இன்சுலின் சுரப்பை தூண்டும்
மாத்திரைகள்.
சர்க்கரை நோய் உயிர்க்கொல்லி நோய் அல்ல
தவறு. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் வரை
சர்க்கரை நோயால் ஆபத்தில்லை. ஆனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு
கட்டுக்குள் இல்லாவிட்டால், கண், இதயம், சிறுநீரகம், கால்கள் என எல்லா
உறுப்புகளையும் பாதித்து உயிருக்கு உலை வைத்துவிடும்.
சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது: சர்க்கரை நோயை முழுமையாக
குணப்படுத்த, இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆங்கில மருத்துவம்
அல்லாத பிற மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்துகள் இருப்பதாக
சொல்லப்பட்டாலும், முழுமையாக குணப்படுத்த முடியும் என்பது
நிரூபிக்கப்படவில்லை. சித்த மருத்துவத்தில் உள்ள மதுமேக சூரணம் சர்க்கரை
நோய் நல்ல மருந்து என சொல்லப்பட்டாலு எல்லாம் ஆராய்ச்சி அளவிலேயே உள்ளது.
Tamil movie songs
எங்கள் G+
விளம்பரதாரர்
வலைப்பூ பெட்டகம்
-
▼
2011
(
413
)
-
▼
November
(
59
)
- மூலிகை மருத்துவம்: மு(பு)திய குழந்தைகள்
- Meal Maker Masala: மீல்மேக்கர் மசாலா
- What is Mullaip Periyar or Mulla Periyaar? : முல்ல...
- Why this Negligence Towards Tamils: முல்லைப் பெரிய...
- What we Did as Tamilians: பாவம் தமிழன்! பழ. நெடுமாறன்
- சில்லரை வர்த்தக விஷயத்தில் மத்திய அரசுஆணவம்: ஜெயலலிதா
- சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்...
- சில்லறை வர்த்தகம்: அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள்
- மல்டி பிராண்டு சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி ...
- சில்லறை வர்த்தக்கத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு...
- சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு கடும் எ...
- சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமத...
- மாநில அரசுகளின் விருப்பமே சில்லறை வர்த்தம்
- சில்லறை வர்த்தகம்: நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி
- Tomato Fried Rice: தக்காளி பிரைடு ரைஸ்
- Keemaa Podimaas: கீமா பொடிமாஸ் | Keema Recipes
- நெத்திலி கிரிஸ்பி வறுவல்: Crispy Nethili Fry
- Herbal Boomarang: மூலிகை மருத்துவம்: மூலிகை பூமராங்
- SSC Results: Secondary School Certificate October ...
- எகிறும் பணவீக்கம்: என்னதான் தீர்வு?
- Can Females Judge the Males by first Sight and App...
- Don't Postpone Marriage: தள்ளிப்போடாதீங்க, கல்யாணத...
- GM Diet in Tamil
- Does Ghee Increases the Cholestral: நெய் சாப்பிட்ட...
- மழைக்காலத்தில் வரும் தொற்று நோய்கள்
- Cap page Cheese Cola: முட்டைக்கோஸ் சீஸ் கோலா
- ரொமான்ஸ் ரகசியங்கள்! - Romance Ragasiyangal: இரட்ட...
- Carrot Masala Idly: காரட் மசாலா இட்லி
- அரவணைப்புகளையும், முத்தங்களையும் விரும்பும் ஆண்கள்!
- Suraa poondu Kulambu | சுறா பூண்டு குழம்பு
- Are you aged above 40: 40 வயதைக் கடந்த பெண்ணா நீங்...
- Diabatese: சர்க்கரை நோய்
- Eating Breakfast: காலை உணவு, உடலுக்கு நல்லது!
- பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை
- Be Soothing and Caring: அன்பும் அரவணைப்பும் அவசியம்
- Does Your Baby Eat Well?: உங்க குழந்தை சரியா சாப்ப...
- How to Keep you Husband Loving You?: கணவரை ‘கைக்கு...
- Take care of Your Investment: உங்கள் முதலீடுகளை கண...
- What to Do after Cesarian: சிசேரியனுக்குப் பிறகு க...
- To Keep the Home Clean: வீட்டைச் சுத்தமாக வைத்துக்...
- Crap Masala: நண்டு மசாலா
- Iraal- Semmeen Thithippu | இறால் திதிப்பு
- Relieve from joint Pain: மூட்டுவலி உங்களை அவதிப்பட...
- Dr.A.P.J. Abdul Kalam's Letter: அணு விஞ்ஞானி அப்து...
- 8' Tips to reduce Weight: எடையை குறைக்க எட்டே வழிகள்!
- TET 2011: HP TET 2011 Notification announced by HP...
- Does G-Mail Information's are Stolen: ஜிமெயில் தகவ...
- Cry will give you Good: அழுவதாலும் நன்மை உண்டு!
- Chicken Escoty: கோழிக்கறி எஸ்காட்டி
- Meat Vadai: இறைச்சி வடை
- AIEEE 2012: Application, AIEEE 2012 Online Exam an...
- Male Impotency: ஆண்மைக் குறைவு: புதிய `சர்வே’ தரும...
- உடல் நலத்துக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் ?
- உறவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!
- பக்கோடா குழம்பு
- கம்ப்யூட்டர் கிராஷ்
- Dry Chillie is an Pain Killer: வலிகளைப் போக்கும் வ...
- திருமணத்தால் ஆண்களுக்குத்தான் மகிழ்ச்சி, பெண்களுக்...
- Money in the name of B.Ed Colleges: பி.எட். கல்லூர...
-
▼
November
(
59
)