சில்லரை வர்த்தகத்தில் எக்காரணம் கொண்டும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடியாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
‘பன்பொருள் சில்லரை வணிகத்தில் (multi brand retail) அந்நிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருள் சில்லரை வணிகத்தில் (single brand retail) அந்நிய முதலீட்டை 100 சதவீதமும் அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது. இதனால் சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பறிபோகும்’ என்றும் அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையொன்றில் கூறியிருக்கிறார்.
நாட்டில் 40 கோடிப்பேர் இன்னும் வேலைவாய்ப்பு இன்றி தவித்துவரும் வேளையில், 40 கோடி பேர் சில்லரை வர்த்தகத்தைதான் சார்ந்து இருக்கும் நிலையில், அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் சில்லரை வணிகர்கள் தங்களது தொழிலில் இருந்து வெளியேறும் நிலை உருவாகும் எனவும் ஜெயலலிதா எச்சரித்திருக்கிறார்.
தவிரவும் மாநில அரசுகள் எதனையுமே கலந்தாலோசிக்காமல் சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிக்க முடிவு செய்தது அரசின் எதேச்சாதிகாரப் போக்கையே காட்டுவதாக ஜெயலலிதா அவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
எப்படியும் மாநிலத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட தான் அனுமதிக்கப்போவதில்லை எனவும் அவர் கூறியிருக்கிறார்.சர்வதேச உணவுப்பொருள் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது, உற்பத்தியாகும் பொருட்களை சரிவர சேமிக்க வசதிகள் இல்லாமையால் 45 முதல் 50 சதவீதம் வரையிலான உணவுப்பொருள்கள் விற்கப்படாமல் வீணாகிவிடுகிறது என்று மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா நேற்று சனிக்கிழமை சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில், இன்று மத்திய அரசு தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி அனைத்து பத்திரிகைகளிலும் விளம்பரம் செய்திருக்கிறது.ஆனால் தமிழக வர்த்தகர்கள் எவரும் அத்தகைய வாதங்களை ஏற்றுக்கொள்ளவில்லை, தொடர் போராட்டங்களில் இறங்கவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.
மத்திய அரசின் முடிவின்படி பத்து லட்சத்திற்கும் அதிகமான் மக்கட் தொகையுடைய 53 மாநகரங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடலாம், ஆனால் பாரதீய ஜனதா, மதச்சார்பற்ற் ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், இப்போது அ இஅதிமுக, மேலும் காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திரிணாமூல் ஆகியவை கடுமையாக எதிர்ப்பதன் விளைவாக 28 மாநகரங்களில் அம்முடிவை அமல்படுத்தமுடியாமல் போகும் என நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
Home
»
Posts filed under
Indian Retail
மாநில அரசுகளின் விருப்பமே சில்லறை வர்த்தம்
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அந்தந்த மாநிலங்களின் விருப்பமே என்று பிரதமர் அலுவலக இணணயமைச்சர் நாராயணசாமி கூறினார்.
இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரியில் நிருபர்களிடம் கூறுகையில், "நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடுகளைக் கொண்டு வர விவசாயிகள், வியாபாரிகள், மாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.பின்னர், 51 சதவீத அன்னிய நேரடி முலீட்டை சில்லறை வணிகத்தில் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது.இந்த முடிவை பஞ்சாப், மகாராஷ்டிரம், ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்கள் வரவேற்று, எழுத்துப்பூர்வமாகப் பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளன.
சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு மூலம் பல கோடி மூலதனம் இந்தியாவுக்கு வர வாய்ப்புள்ளது. உலகில் உள்ள பெரிய நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு முதலீடு செய்ய முன்வரும். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.அந்நிறுவனங்கள் நம் நாட்டில் குளிர்சாதன வசதிகளைக் கொண்ட கட்டடங்களைக் கட்டி, விவசாய விளை பொருள்களை நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கி, மக்களுக்கு விநியோகம் செய்யும்.
இதுவரை இடைத்தரகர்களால் விவசாயிகளின் விளைபொருள்களுக்குக் குறைந்த விலை கிடைத்து வந்தது.சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு மூலம் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். மேலும், வரும் 3 ஆண்டுகளில் 2 கோடி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தத் திட்டத்தை விரும்பும் மாநிலங்கள் ஏற்கலாம். எந்த மாநிலத்தையும் மத்திய அரசு வற்புறுத்தாது," என்றார் நாராயணசாமி.

Tamil movie songs
எங்கள் G+
விளம்பரதாரர்
வலைப்பூ பெட்டகம்
-
▼
2014
(
109
)
-
▼
August
(
12
)
- Venture Capital in tamil :- வென்ச்சர் கேபிட்டல்
- Poultry Farming:- கோடிகளில் பணம் சம்பாதிக்க கோழி ப...
- TN TET 2014 results
- Business'es That you can do from home:- சிறந்த 10 ...
- Hand Gloves Making:- கையுறை தயாரிப்பு தொழில்
- Microsoft Office 2013:- எம்.எஸ்.ஆபீஸ் 2013
- டெஸ்க்டாப் பகுதியில் சேவ் செய்வதில் உள்ள பிரச்னைக...
- Get 100 GB Storage by Using Bing |
- Heart proplems and T.M.T: இதய ரத்தக்குழாயில் அடைப்...
- கெடுவான், கேடு நினைப்பான் - ஜெயதேவர்
- Chrome browser tips in tamil :- குரோம் பிரவுசர் டி...
- Facebook beats Microsoft and Google: முதல் இடத்தி...
-
▼
August
(
12
)