How to wear makeup and look cute with glasses! | கண்ணாடி அணிந்த பெண்களும் அழகாக தெரியலாம்

0 comments
Wear makeup and look cute with glasses!
How to wear makeup and look cute with glasses 

கம்ப்யூட்டரில் அதிக நேரமாக வேலை செய்பவர்கள் கண் கண்ணாடியை பலர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வில் கண் கண்ணாடி அன்றாட வாழ்க்கையில் அவசியமான பொருளாக மாறிவிட்டது. 

Women Wearing Spectacles Looks beautiful: கண்ணாடி அணிந்த பெண்களும் அழகாக தெரியலாம்.


தற்போது பல விதமான மாடல்களில் கண்ணாடியின் பிரேம் சின்னதாக, சிக்கென கவர்ச்சியாக வந்துவிட்டது. அதனால், கண்ணாடி அணியும் பெண்கள், மேக்கப் போடுவது முக்கியமானதாக மாறிவிட்டது. முகத்தின் அழகைப் மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள்.

கண்ணாடி அணிந்த பெண்களும் அழகாக தெரியலாம், கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-அப் போட வேண்டும் என்று சில டிப்ஸ்:



நீங்கள் முதலில் ஆரம்பிக்க வேண்டியது உங்கள் புருவத்தில் இருந்துதான். உங்கள் புருவம் சீர்படுத்தப்பட்டுள்ளதா என்பதை கவனியுங்கள். உங்கள் கண்ணாடி உங்கள் புருவத்துடன் போட்டி போட வேண்டிய அவசியமில்லை. உங்கள் புருவங்களை சரியான அளவில் வைத்திட தொழில் ரீதியான வல்லுனரை சீரான முறையில் சந்தியுங்கள்.

இந்த வகையில் உங்கள் கண்களுக்கான மேக்கப் அலங்கரிக்கப்படும். நல்ல முறையில் ப்ரைமரை பயன்படுத்த வேண்டும். இதனால், கண்ணாடி அணிந்திருக்கும் உங்களின் கண்கள் கறை இல்லாமல் சரியாக இருக்கும். கண்இமை, ரோமங்களை சுருட்டிவிடுங்கள்.

உங்கள் பணியை திறம்பட செய்து முடித்திட அடிப்படை கர்லர் ஒன்றே போதும். இதனால், கண்ணாடி அணிந்திருக்கும் பெண்களுக்கு மேக்கப் சிறப்பாக அமையும். பெண்கள் ஐ-ஷேடோவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், உங்கள் கண்ணாடி பின்புறத்தை நசநசவென ஆக்கிவிடும்.

நல்ல ஐ-லைனரை பயன்படுத்துங்கள். பூனை கண் வடிவம் அல்லது இறக்கை வடிவம் போன்ற பல விதமான வடிவங்களை முயற்சித்து பாருங்கள். கண்ணாடி அணிந்திருக்கும் உங்களுக்கு, இதில் ஏதாவது ஒன்று ஒத்துப்போய், உங்கள் கண்ணுக்கு அழகு சேர்க்கும். நீங்கள் அணிந்திருக்கும் கண்ணாடி வகை உங்கள் கண்களை சிறியதாக காட்டுமா அல்லது பெரிதாக காட்டுமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கண்ணாடி அணிந்திருக்கும் நீங்கள் கண்களுக்கு மேக்அப் செய்யும்போது, உங்கள் கண்கள் சிறியதாக தெரிந்தால் கண்களை சுற்றி ஐ-லைனரை பயன்படுத்துங்கள். ஒருவேளை, கண்கள் பெரியதாக தெரிந்தால் அளவுக்கு அதிகமாக ஐ-லைனரை பயன்படுத்தாதீர்கள்.

அதனை லேசாக போட்டு கண்களை சின்னதாகவும், மென்மையானதாகவும் காட்டுங்கள். உடனடி அழகு மற்றும் அடர்த்தியான தோற்றத்தை பெற சிவப்பு, பிங்க் போன்ற அடர்த்தியான நிறங்களை கொண்ட லிப்ஸ்டிக்கை பயன்படுத்துங்கள்.

கண்ணாடி அணிந்தவர்களுக்கு உங்கள் முக தோற்றத்தை உயர்த்தி காட்டும். கன்னங்களுக்கு பிங்க் நிற ப்ளஷரை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்.கண்கள் பெரியதாக தெரிந்தால் அளவுக்கு அதிகமாக ஐ-லைனரை பயன்படுத்தாதீர்கள். அதனை லேசாக போட்டு கண்களை சின்னதாகவும், மென்மையானதாகவும் காட்டுங்கள்.

Subscripe to our mailing list for more articles like Women Wearing Spectacles Looks beautiful: கண்ணாடி அணிந்த பெண்களும் அழகாக தெரியலாம்

Dreams about Feature Husband: வருங்கால கணவர்

0 comments
வருங்கால கணவரைப் பற்றிய கனவு எல்லா பெண்களுக்கும் இருக்கவேண்டும். வயதுக்கு வந்த சில வருடங்களில் அந்த கனவு தானாகவே வந்துவிடும்.

இருபது வயதைத் தொட்ட பின்பும் அப்படி ஒரு கனவு வரவில்லை என்றால் அதை மனநிலை, உடல் நிலை கோளாறு என்கிறார்கள் மருத்துவர்கள். அந்தந்த வயதுக்கேற்ற கனவுகள் அவ்வப்போது வரவேண்டும். அந்த கனவுகள் பெண்களை திருமணம் செய்து கொள்ள பக்குவப்படுத்தும்.

ஒரு பெண் வாழும் சூழ்நிலைக்கேற்ப அவள் கனவுகள் வித்தியாசப்படும். ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் ஒரு பெண் பணக்கார கணவர் வேண் டும் என கனவு காணலாம். கொடுமை யான சூழ்நிலையில் வாழும் பெண் தனக்கு அன்பான, ஆதரவான கண வர் கிடைப்பதுபோல் கனவு காண லாம். இப்படி பெண்கள் காணும் கனவுகள் பலவிதம்.

அந்த கனவுகள் ஒருபோதும் எல்லை மீறியதாக இருந்துவிடக்கூடாது. ஏன் என்றால் எல்லோ ருடைய வாழ்க்கை யிலும், எல்லா கனவுகளும் நிறை வேறும் என்று சொல்வதற்கில்லை.

எவ்வளவு கனவுகள், கற்பனைகள் இருந்தாலும் திருமணம் ஆன பின்பு, உடனடியாக நிஜ உலகத்திற்கு வந்து விடவேண்டும். நிஜம் கண் முன் வரும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெண்களுக்கு கட்டா யம் வேண்டும். நிஜங்களை கனவுக ளோடு ஒப்பிட்டு பார்த்து மனம் பேத லித்து நிற்பது வாழ்க்கைக்கு உதவாது. நிஜங்களை ஏற்றுக்கொண்டு வாழும்போதுதான் பெண்கள் வெற்றிகரமானவர்களாக மாறுகிறார்கள்.

திரை உலகில் கனவு கன்னியாக வலம் வரும் நட்சத்திரத்திற்கு கூட நிஜவாழ்க்கை என்பது கனவுகளுக்கு மாறாகத்தான் அமைகிறது. கனவு வேறு வாழ்க்கை வேறு என்ற உண்மையை அவர்கள் உணர்ந்துகொள்ளும்போது வாழ்க்கை கசக்கிறது. அந்த கசப்பில் இருந்து விடுபட்டு வாழ்க்கையை இனிமையாக்கி கொள்வதில் தான் வாழ்க்கையின் சுவா ரசியம் அடங்கி இருக்கிறது. கனவை நினைத்து நிஜத்தை அழித்து கொள்ள நினைப்பவர் களுக்கு வாழ்க்கையே கனவாகி விடுகிறது.

இன்றைய பெண்களுக்கு அவர்களது வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளும் உரிமை தரப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள அவர்கள் காணும் கனவுகள் ஓரளவுதான் பயன்படும். அவர்களது அறிவும், அனுபவங்களும், பக்குவப்பட்டவர்களின் அறிவுரைகளுமே முழுமையாக பயன்படும்.

இந்த உலகம் மிகப் பெரியது. அதனால் சில பெண்கள் தங்களது கனவு கதாநாயகனை தேடித்தேடி களைத்துப்போகிறார்கள். அப்படியே காலத்தையும் கடத்தி வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கனவுகளுக்கு கொடுக்கும் முக்கியத் துவத்தை குறைக்கவேண்டும். நிஜவாழ்க்கைக்குள் தங்களை முன்நிறுத்தி, தங்கள் நிஜ கதாநாயகனை தேடத் தொடங்கவேண்டும்.

இன்று தெருவிற்கு தெரு திருமணத்தகவல் மையங்கள் உருவாகிவிட்டன. அங்கெல்லாம் சென்று, பெண்கள் தங்கள் கனவு கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கிறார்கள். சில திரு மண தகவல் மையங்களோ, பெண்களின் எல்லைமீறிய கனவுகளை தெரிந்துகொண்டு, அதற்கு தக்கபடி பொய் முகம் கொண்ட இளைஞர்களை அறிமுகப்படுத்துகிறார்கள். மிகைப்படுத்தப்பட்ட பொய்களைக்கூறி அவர்களுடைய கனவு கதாநாயகன்போல் `மேக்கப்' போட்டு அந்த பெண்கள் முன்பு நிறுத்துகிறார்கள்.

அந்த பெண்களும் `ஆஹா.. இவர்தான் நம் கனவு நாயகன்' என்று முடிவு செய்து, அவசர கதியில் திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள்.

சிறிது காலத்தில் உண்மையை உணரும்போது பெருத்த ஏமாற்றம் அடைகிறார்கள். அந்த ஏமாற்றம் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடுகிறது.

இன்றைய பல விவாகரத்துகளுக்கு இந்த கனவுகளே காரணமாக இருக்கிறது. நிறை வேறாத ஆசைகள் நெஞ்சின் அடித்தளத்தில் பாரமாக அழுத்தும்போது நிஜங்களின் உயர்வை மனம் ஏற்க மறுக்கிறது. விளைவு கருத்து வேற்றுமை ஆகிறது. இருமனம் ஒரு மனமானால் கருத்துகள் ஒன்றுபடும். ஆனால் அதற்கு இந்த கனவுகள் ஒத்துழைப் பதில்லை!

கனவுகள் தேவைதான். ஆனால் அந்த கனவுகளுக்கு, நிஜங்களை ஏற்றுக்கொள்ள மறுக் கும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. கனவுகளுக்கு கற்பனைகள் மட்டும் போதுமானது. ஆனால் நிஜங்களுக்கு அனுபவ அறிவும், ஆன்ம பலமும் தேவை. நிஜங்கள் நம் கண் முன்னே நிற்கும்போது கனவுகள் எங்கிருந்தோ எட்டிப்பார்த்து நம்மை கேலி செய்யும். இதனால் ஏற்படும் ஏமாற்றம் மனதில் வெறுப்பையும், சோர்வையும் உண்டாக்கும்.

சில பெண்கள் நிழலை நிஜமாக்கி தங்கள் கனவு இலக்கை அடைய முற்படுவார்கள். கல்வியறிவில்லாத கணவனை மகாகவி காளிதாசனாக்கியது அப்படிப்பட்ட ஒரு பெண் ணின் கனவுதான். இது நிஜத்தை அப்படியே இருப்பது போலவே ஏற்றுக்கொண்டு கனவை நிஜமாக்கி வாழ்க்கையை சாதனையாக்கி காட்டும் கனவு. உள்ளங்கை அளவு உண்மையை உலகளாவிய வெற்றியாக மாற்றி காட்டும் உன்னதம் இருவர் கனவிலும் இருந்தால் அவர்கள் வாழ்க்கை பிரகாசமாகிவிடும். இந்த சாதனையை புரிய துணை நின்றதும் கனவு தான். அவரவர் மனநிலையை பொறுத்து ``கனவுகள்'' செயல்படுகிறது. வருங்காலத்தை வளமாக்குவதும் கனவுதான். வாழ்க்கையை கேள்வி குறியாக்குவதும் கனவுதான்.

சிந்தித்து செயல்படவும், வாழ்க்கையை திட்டமிடவும் கனவுகள் கைகொடுக்கின்றன. லட்சியங்களை உருவாக்கும் கனவு நம்முடன் வருபவர்களை வளப்படுத்தி எதிர்காலத்தை ஒளிமயமாக்குகிறது. வருங்கால கணவரை பற்றிய கனவு காண்பது தவறில்லை. அது இருவரின் வருங்காலத்தையும் வளமாக்கும் விதமான கனவாக இருத்தல் வேண்டும். சுயநலமான கனவுகள் பெரும் சுமையாகவும், பகையாகவும் உருவெடுத்து விடும்.

Motivational Quote | do what you are afraid to do

0 comments
A quote on do what you are afraid to do and a wallpaer also we have here for the quote do what you are afraid to do.

The famous do what you are afraid to doQuote

It was a high counsel that I once heard given to a young person,
 "Always do what you are afraid to do." -Ralph Waldo Emerson
Motivational Quotes
Motivational Quotes

Watch this

do what you are afraid to do type of a motivational video

.



If you do have any quotes on do what you are afraid to do type please share it with us or pin it in our pinboard http://pinterest.com/pin/253820128968982438/

How to Do Gram Flour Facial: கடலை மாவு பேஷியல்

0 comments
கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குறைந்து காணப்படும். இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பங்கறை பொருட்களே போதுமானது. எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்ற பொருட்களை உபயோகப்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

கடலைமாவு மஞ்சள் பேஸ்ட்

தொன்று தொட்ட முதியோர் காலத்திலிருந்து பாரம்பரியப் பொருனாக பயன்படுத்தப்படும் பொருள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும், சரும ஆரோக்கியத்திற்கும் அழகு தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் 2ஸ்பூன் கடலைமாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.

வழுவழுப்புக்கு கடலைமாவு பேஷியல்

அழகை பேணிக்காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது கடலைமாவு. கடலைமாவானது பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும். இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என்று இருக்கும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம்.

ரோஸ் வாட்டர் கடலைமாவு

இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்றாக முகத்தில் பூசவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும்.

பருக்கள் நீங்க

கடலை பருப்பு 1 டீஸ்பூன். ஒரு மிளகு இவற்றை எடுத்த ஒரு டீஸ்பூன் பாலில் ஊறவையுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் முல்தானி மட்டி பவுடரைச் சேர்த்து கலக்குங்கள். பிறகு இதை முகத்தில் "பேக் ஆகப் போட்டு, உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ்வேண்டும். பருக்கள் இருந்த படிப்படியாக மறைந்து போகும்.

பிசுபிசுப்பான சருமத்திற்கு

சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முகம் பொழிவுபெறும்.

டல் முகம் பொலிவாக

தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு "பேக்" போட்டு ஐந்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

Brinjal Will give us Immense Immunity: உடலுக்கு வலிமை தரும் கத்தரிக்காய்

0 comments
நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன. கத்தரிக்காய் காய்கறியாக பாவிக்கப்பட்டாலும் உண்மையில் இது பழ வகையைச் சார்ந்ததாகும். இது வெள்ளை, ஊதா, கறுப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றது. மேலும் இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், நிறைந்துள்ளது. வைட்டமின் அதிகமாக இருப்பதால் நாக்கில் ஏற்படும் அலர்ஜியினைப் போக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது.

முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும்  ஒன்றாகும். தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் 'ஏ'யும், வைட்டமின் 'சி'யும் குறைவாகவே உள்ளன.

இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் 'பி' தக்க அளவில் உள்ளது. இதனால்  நாம் சாப்பிடும்  மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக்  கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் 'பி' பயன்படுகிறது. பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது  முதலியவையும் தடுக்கப்படுகிறது.

முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் 'ஏ' அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும்  அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட  இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.

கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக்  குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது  நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.

மற்றவர்கள்  மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து  சிதைந்து  சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும். வீட்டில் நன்கு உரமிட்டு  வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்.

Jauntice: மஞ்சள் காமாலை வந்தால்…

0 comments
கல்லீரல் மற்றும் மண்ணீரலில் ஏற்படும் பாதிப்புதான்... மஞ்சள் காமாலை. இது, வைரஸ் கிருமியின் தாக்குதலால் ஏற்படுகிறது.

பிறந்த குழந்தைக்கும்கூட மஞ்சள் காமாலை வர வாய்ப்பு உள்ளது. அது சில நாட்களில் சரியாகி விடும்.

மஞ்சள் காமாலை வந்தால் கல்லீரல், மண்ணீரலோடு மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

பொதுவாக மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு பசி எடுக்காது, கடுமையான காய்ச்சல் இருக்கும். சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சினை மற்றும் சிறுநீர் மஞ்சளாக வெளியேறுதல், கண் மற்றும் உடல் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற பிரச்சினைகள் உருவாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டால் 3 மாதங்கள் வரை பத்திய சாப்பாடு சாப்பிட வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை : மசாலா வகைகள், கார உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சமையலில் அதிக எண்ணெய் பயன்படுத்தக்கூடாது.

மஞ்சள் காமாலை வந்து 5 மாதங்கள் வரை அசைவ உணவுகளை தொடக்கூடாது. முட்டையில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.

அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகளையும் விலக்கி வைக்கவும். மாவுச் சத்து உள்ள உணவுகள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் 3 இளநீர் குடிக்க வேண்டும். மோர், முட்டையின் வெள்ளைக் கரு தினமும் சாப்பிடலாம். காய்ச்சல் ஏற்பட்டால் அதற்கு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் உணவுகளை சாப்பிடுவதே நல்லது.

Solution to Migraine: ஒற்றைத் தலைவலி எளிதில் உண்டு தீர்வு!

0 comments
மனிதனை பாடாய்படுத்தும் நோய்களுள் ஒன்று... ஒற்றைத் தலைவலி. பெரும்பாலும் அதிகமான மன அழுத்தம் காரணமாகவே இது வருகிறது.என்றாலும், குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாமை, அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் காரணமாகவும் இது வரலாம்.

இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல் வலி, கண் மங்குதல் மற்றும் வயிறு பிரச்சினைகளை ஒற்றைத் தலைவலி வரும் ஒருவர் சந்திக்க நேரிடுகிறது.

ஒற்றைத் தலைவலி தீர எளிய வழிமுறைகள் உள்ளன. அவை...

எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்தலாம்.

முட்டைக்கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதைக்கொண்டு தலையின் மீது ஒத்தடம் தரலாம். முட்டைக்கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டி பயன்படுத்துங்கள்.

குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டலாம். பின் கைகளையும் கால்களையும் சுடுநீரில் விடவும்.

10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.

வாசனை எண்ணெயால் தலைக்கு ஒற்றடம் தரலாம். தேய்த்தும் விடலாம்.

இவை தவிர, முன்னெச்சரிக்கையாக இருந்தும் ஒற்றைத் தலைவலி வருவதை தவிர்க்கலாம்.

புகை மற்றும் மது தலைவலியை தூண்டக் கூடியவை என்பதால் அவற்றை தவிர்த்திடுங்கள்.

மேலும், வெயிலில் அலைவது, காரமான உணவு வகைகளை உட்கொள்வது, வயிறு முட்ட சாப்பிடுவது, தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை கொள்வது போன்றவற்றை தவிர்த்து வந்தாலும் ஒற்றைத் தலைவலி நம்மை நெருங்காது.

Life Changing Friendship: வாழ்வை மாற்றும் `நட்பு’!

0 comments
`ஒரு நல்ல நண்பன் இருந்தாலும் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்' - ஆங்கிலப் பழமொழி.

`அன்பாக இரு`. அனைத்து மதங்களின் போதனை இது. அன்புடன் இருப்பது என்பது பொறுப்புடன் கூடிய ஒரு முடிவு. இன்றைய நட்புகளை எடை போட்டால் பெருமூச்சுதான் பெரிதாய் வரும். `உல்லாசத்துக்காக ஒன்று சேர்ந்தவையே நட்பாக இருக்கின்றன' என்ற ஒருவரின் விமர்சனம் இன்றைய நட்புலகத்துக்கு வெகுவாகப் பொருந்தும்.

இன்று பெரும்பாலானவர்களின் அன்பு பாரபட்சம் பார்த்தே ஏற்படுகிறது. தேவையானபோது தொடர்பு கொள்வதும், தேவைக்காக பழகுவதும், கூடிப் பொழுதுபோக்குவதுமே நட்பென்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிஜத்தில் அது நட்புமல்ல, அன்புமல்ல, வெறும் சுயநலமே!

"பிறரைப் பார்த்து நீ புன்னகைப்பது கூட ஒரு அறச்செயல்'' என்று நபிகள் நாயகம் சொல்கிறார். ஆனால் வாய்விட்டுச் சிரித்தாலோ, அனைவரிடமும் சிரித்துப் பழகினாலோ சமூக வழக்கில் தப்பாய்ப் பார்க்கும் கண்ணோட்டம் பரவி இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாமே வலியவந்து எல்லோரிடமும் சிரித்துப் பழகி தொடர்ந்து அன்புறவில் ஈடுபடுவது சாத்தியமற்ற ஒன்றுதான். இருந்தாலும் நாம் எத்தனை பேருடன் நட்புறவுடன் இருக்கிறோமோ, அதுவே நாம் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்ததற்கான அடையாளம்.

`என்னை நேசிப்பவரை நான் நேசிப்பேன், எனக்கு உதவி செய்தவருக்கு நான் உதவி செய்வேன்' என்பதுவே பலரின் எழுதப்படாத அன்பு இலக்கணம். பழிக்குப் பழி என்பதற்கும், இதற்கும் வித்தியாசமே இல்லை.

"மற்ற எல்லோருமே வெளியே செல்லும்போது உள்ளே வருபவன் தான் உண்மையான நண்பன்'' என்று அறிஞர் டாக்டர் பில் மெக்கிராவ் சொல்வார். ஆமாம், உங்களிடம் எதைஎதையோ எதிர்பார்த்துப் பழகியவர்கள் எல்லாம் உங்களிடம் ஏதுமில்லை என்று அறிந்து விலகிச் செல்லும்போது, உங்களுடன் கரம் கோர்க்க, உங்களின் துயர் போக்க வருபவனே உண்மையான நண்பன் ஆவான். இதைத்தான் "இடுக்கண் களைவதே நட்பு'' என்று வள்ளுவர் இலக்கணப்படுத்துகிறார்.

நீங்கள் நட்பு நிறைந்தவரா? என்பதை சோதிக்க உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள்...

என்னிடம் எதுவுமே சரியில்லை என்கிறபோதும் அணுகிப் பேசும் நண்பனை பெற்றிருக்கிறேனா?

ஒத்துப்போகாத விஷயங்களின்போது அவனுக்கு தனித்தன்மை இருப்பதை ஆமோதிக்கிறேனா?

வருத்தத்தில் இருக்கும் நண்பனின் சூழலை சமாளிக்க எனக்குத் தெரிந்திருக்கிறதா?

நண்பனின் சில பழக்கங்கள் பிடிக்காதபோது அதைப்பற்றி அவனிடம் வெளிப்படையாக பேசுகிறேனா?

தேவையென்றால் நண்பனிடம் தயக்கமின்றி உதவி கேட்கிறேனா? உதவிக்கு நன்றி கூறுகிறேனா?

நண்பனின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நடக்கிறேனா?

நண்பன் ஒரு புதிய நண்பனைச் சந்திக்கும்போது, நம் நட்புக்கு இடையூறு வந்துவிட்டது என்று எண்ணுகிறேனா?

கடைசி இரு கேள்விகளைத் தவிர மற்ற கேள்விகளுக்கு `ஆம்' என்ற பதில் வராவிட்டால் நீங்கள் உண்மையான நண்பனை அடையவோ, உண்மையான நண்பனாக மாறவோ இன்னும் நிறைய பயணிக்க வேண்டும்.

உங்கள் நட்புறவை பரிசீலிக்க விரும்பினால் உங்கள் வாழ்வின் முக்கியமான 3 உறவுகளை பட்டியலிடுங்கள். அவர்கள் ஏன் உங்களுக்கு முக்கியமானவர்கள்? அவர்களுக்கு அந்த விசேஷ இடத்தைப் பெற்றுத் தந்த குணங்கள் என்ன? அவர்களின் கஷ்டங்களைப் போக்க நான் என்ன செய்ய தயாராக இருக்கிறேன்? என்று பட்டியலிடுங்கள். அவர்களின் சிறப்பு குணங்கள் உங்களுக்கு ஏற்படவும், அதே குணத்துடன் பிறருடன் நேசமாகப் பழகவும் முயற்சி செய்யுங்கள்.

ஒருவரோடு ஒருவருக்கு உள்ள உறவில் மட்டுமே நாம் முழுமையாக நாமாக இருக்கிறோம். நாமிலிருந்து பிரிந்த `நான்' அழிந்து விடும். அப்படியென்றால் நட்பு எப்படி இருக்க வேண்டும் என்று கேட்கிறீர்களா? முகம் மலர பேசுவதல்ல, அகம் மலர பழகுவதே நட்பு என்கிறார் வள்ளுவர். ஒருவனுக்கு எப்படிப்பட்ட நண்பன் தேவை என்பதை ஆங்கிலக் கவிதை ஒன்று இப்படி வரையறுக்கிறது...

"தன் மனத்தை அப்படியே வெளிப்படுத்த முடிந்தவன்;

எப்போது வாயை மூட வேண்டும் என்று அறிந்தவன்;

அன்புடன் உணவையும், நல்ல நகைச்சுவைகளையும், சூரிய அஸ்தமனத்தையும் பகிர்ந்து கொள்பவன்;

உங்களுடன் பெரியவனாகவோ, சிறியவனாகவோ நடிக்காமல் தோழமையுடன் இருப்பவன்;

நீங்கள் நீங்களாகவே இருக்க அனுமதிப்பவன் எவனோ அப்படிப்பட்ட நண்பனே உங்களுக்குத் தேவை''

நட்பு பேணுங்கள் நல்லவையெல்லாம் கூடும்!

Food Control Will save Brain: மூளையைக் காக்கும் உணவுக் கட்டுப்பாடு

0 comments
குறைவாகச் சாப்பிடுவது, மூளையை இளமையோடு வைத்திருக்கும் என்கிறார்கள், இத்தாலி விஞ்ஞானிகள்.

கட்டுப்பாடான உணவு முறையால் நடைபெறும் ஒரு மூலக்கூறுச் செயல்பாடு, மூளை முதுமை அடைவதில் இருந்து காப்பாற்றுகிறது என்கிறார்கள் இவர்கள்.

இதுதொடர்பாக அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், எலிகள் மீது செய்யப்பட்ட ஆய்வு ஒன்று விவரிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, எலிகள் வழக்கமாகச் சாப்பிடும் உணவு அளவில் 70 சதவீதம் மட்டுமே அவற்றுக்கு வழங்கப்பட்டது. கலோரி குறைந்த அந்த உணவு, சி.ஆர்.ஈ.பி.1 என்ற புரத மூலக்கூறைத் தூண்டுவதும், அதன் மூலம், மூளையின் ஆயுள் நீட்டிப்பு மற்றும் நல்ல செயல்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு ஜீன்களை செயல்படச் செய்வதும் விஞ்ஞானிகளால் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

``எங்களின் நோக்கமே, சி.ஆர்.ஈ.பி.1-ஐ செயல்படச் செய்வதற்கான வழியைக் கண்டுபிடிப்பதுதான். உதாரணமாக, ஏதாவது மருந்தின் மூலம் அதைச் சாதிக்கலாம் என்று நினைக்கிறோம். அதன் மூலம், கட்டுப்பாடான உணவுமுறை இன்றியே மூளையை இளமையாக வைத்திருக்கலாம்'' என்கிறார், இந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான ரோமைச் சேர்ந்த விஞ்ஞானி கியாவாம்பட்டிஸ்டா பானி.

கட்டுப்பாடான உணவு முறைக்கு உட்படுத்தப்படும் எலிகளுக்கு நல்ல நினைவுத்திறன், குறைவான ஆக்ரோஷம், அல்சைமர் என்ற ஞாபகமறதி வியாதி ஏற்படுவது தவிர்ப்பு போன்ற அம்சங்கள் காணப்படுவதை ஏற்கனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்
திருக்கின்றனர்.

இதற்கிடையில், உணவுமுறை தொடர்பான மற்றொரு கண்டுபிடிப்பையும் விஞ்ஞானிகள் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதாவது, கணையப் புற்றுநோய் ஏற்படாமல் தவிர்க்க விரும்புவோர், செலினியம், நிக்கல் செறிந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.

இதுதொடர்பான புதிய ஆய்வில், உடம்பில் செலினியம், நிக்கல் தடயம் அதிகமாகக் காணப்படும்போது அது அபாயகரமான கணையப் புற்றுநோயைத் தடுக்கிறது. அந்த நோய்க்கு எதிராக இவை ஒரு தடுப்புக் கவசம் போலச் செயல்படுகின்றன என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.

Food which improves the Impotence: `வாரிசு’ வருவதை தடுக்கும் உணவு

0 comments
`உடல் பருமன் என்பது ஒரு அழகியல் சார்ந்த சாதாரண பிரச்சினைதானே. அதனால் பெரிதாக என்ன ஆகிவிட போகிறது, சமாளித்துக்கொள்ளலாம்' என்றே பலரும் நினைத்தனர். ஆனால், `உடல் பருமன் வெறும் அழகியல் சார்ந்த பிரச்சினையல்ல. அதனால் இதய நோய்கள் ஏற்படும்' என்ற கருத்தை முன்வைத்து அதிர்ச்சியூட்டியது அறிவியல்.

`அட, அப்படியா? சரி சரி, இனி நன்றாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை பராமரித்துக்கொள்வோம்' என்று சுதாரித்த மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது! அது, உடல் பருமன் அல்லது தொப்பையால் `டிமென்சியா' என்னும் மூளைக்கோளாறு ஏற்படக்கூடும் என்னும் ஆய்வு முடிவு.

ஆக, இதுவரை உடல் பருமனால் ஒருவரின் இதயமும், மூளையும் பாதிக்கப்பட்டு நோய்கள் உண்டாகும் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது, ஒருவர் உடல் பருமனாக இருந்தால் அது அவருடைய ஆரோக்கியத்தை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக, அவருடைய பல சந்ததிகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும் என்கிறது ஒரு
ஆய்வுச்செய்தி.

அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவினை உண்டுவந்த எலிகளின் குட்டிகள் `இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்' என்னும் சர்க்கரை நோய் தொடர்பான குறைபாட்டுடன் பிறந்தன. இதற்கு காரணம் ஆண் எலிகளின் `விந்தணுக் களே' என்கிறார்கள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழக ஆய்வாளர்களான மரியா ஆல்சன் டீக் மற்றும் மிஷ்ஷெலி லேன் இருவரும்.

அது சரி, அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுக் கும், விந்தணுக்களுக்கும் என்ன தொடர்பு?

உணவுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள் மரபணு செயல்பாடுகள் மற்றும் புரத உற்பத்தியை கட்டுப்படுத்தும் வேதியல் மாற்றங்கள் மூலம் ஒருவருடைய டி.என்.ஏ.வில் பதிந்துபோகிறது என்கிறது மூலக்கூறு அறிவியல். இந்த உயிரியல் நிகழ்வுக்கு `எபிஜெனடிக் மாற்றங்கள்' என்று பெயர்.

ஆனால், விந்தணுவில் இருக்கும் டி.என்.ஏ, விந்தணு மற்றும் கருமுட்டையின் சங்கமத்திற்கும் முன்பும், பின்பும் பல மாற்றங்களுக்கு உட்படுவதால், டி.என்.ஏ.வில் பதிந்துபோகும் பாதிப்புகள் எல்லாம் அழிக்கப்பபட்டு டி.என்.ஏ. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று இதுவரை நம்பப்பட்டது.

`இல்லை, இந்த கூற்று முற்றிலும் தவறானது. விந்தணுவின் சில பகுதிகளில்
டி.என்.ஏ.வில் பதியும் பாதிப்புகள் மாறாமல் அப்படியே இருக்கின்றன' என்கிறது மரியா மற்றும் மிஷ்ஷெலி ஆகியோரின் ஆய்வு முடிவுகள்.

இதனை உறுதிசெய்ய, ஆரோக்கியமான உணவு மற்றும் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவு இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட எலிகளுக்கு கொடுக்கப்பட்டது. இவ்விரு பிரிவு எலிகளின் விந்தணுக்களில் எபிஜெனடிக் மாற்றங்களை உண்டாக்கும் (புரத உற்பத்தியை நிறுத்தும்) திறனுள்ள மரபுப்பொருளான `மைக்ரோ ஆர்.என்.ஏ.' இருக்கின்றனவா என்பது பரிசோதிக்கப்பட்டது.

பரிசோதனைக்கு பின்னர், அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு கொடுக்கப்பட்ட எலிகளின் விந்தணுக்களில் 21 மைக்ரோ ஆர்.என்.ஏ.க்கள் வித்தியாசமாக செயல்படுவது கண்டறியப்பட்டது. இந்த 21 மைக்ரோ ஆர்.என்.ஏ.க்கள் சிசு, விந்தணு வளர்ச்சி மற்றும் உணவு செரிமான கோளாறுகள் தொடர்பானவை என்பது குறிப்பிடத்தக்கது.

எலிகளின் விதைப்பையை சுற்றியுள்ள கொழுப்பு படிவமே விந்தணுக்களை பாதிக்கும் எபிஜெனடிக் மாற்றங்களுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்கிறார் ஆய்வாளர் மரியா ஆல்சன் டீக்.

இதன் மூலம் அதிக கொழுப்புச் சத்துள்ள உணவு ஒருவரின் விந்தணுக்களை பாதிப்பதால் அவருடைய சந்ததிகள் ஆரோக்கிய குறைபாடுகளுடன் பிறக்கிறார்கள் என்னும் அறிவியல் உண்மை நிரூபிக்கப்படுகிறது.

இம்மாதிரியான குறைபாடுகளை தவிர்க்க, இனிவரும் காலங்களில் செயற்கை கருத்தரிக்கும் முறைகளின்போது விந்தணுக்களில் தேவையற்ற எபிஜெனடிக் மாற்றங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பரிசோதிக்க முடியும். அப்படி இருக்கும் பட்சத்தில் மருந்து சிகிச்சைகள் மூலம் அவற்றை அகற்றவும் முடியும் என்கிறார் ஆய்வாளர் டீக்!

முனைவர் பத்மஹரி

Save the Lungs: நுரையீரலை பாதுகாப்பது அவசியம்

0 comments
நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது.காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம்.

நம் சுவாசத்தை சீராக வைத்திருக்கும் நுரையீரலில், நோய் தாக்காமல் இருக்க, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியம்.நுரையீரல் பாதிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சளி, நிமோனியா, காசநோய், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் ஏற்படுகிறது. இத்துடன் பஞ்சு, குவாரி, சிமென்ட் உள்ளிட்ட தொழிலில் பணிபுரிவோருக்கும் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அதிகம் தாக்குகின்றன.

நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதிக்கப்படுகிறது. இதயம் தொடர்பான பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க நுரையீரலை 
பாதுகாப்பது மிக மிக முக்கியம்.

நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகள்:

இருமல், சளி, மூச்சு திணறல், நெஞ்சு வலி, இருமலுடன் ரத்தம் வருதல், இளைப்பு போன்றவை நுரையீரல் பாதிப்புக்கான அறிகுறிகளாகும்.

இரண்டு வாரங்கள் தொடர்ந்து இருமல் இருந்தால் காசநோய் அல்லது ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. இவ்வாறான நிலையில், மருத்துவரை அணுகி சளி மற்றும் எக்ஸ்-ரே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்; எவ்வித நோய் தாக்கப்பட்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்து அதற்கான சிகிச்சையை தொடரவேண்டும்.

பனிக்காலத்தில் வறண்ட காற்றை சுவாசிக்கும்போது நுரையீரல் பாதிக்கப்படும் என்பதால், இக்காலங்களில் வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. பஞ்சு, குவாரி, சிமென்ட் உள்ளிட்ட தூசி நிறைந்த இடங்களில் பணியாற்றும் போது, முகத்துக்கு, "மாஸ்க்' அணிந்து கொள்ள வேண்டும்.

சிகிச்சை முறைகள்

நுரையீரல் பாதிப்புக்கு, இரண்டு முறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பரிசோதனையில், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், ரிலீவர் மருந்தும், பாதிப்பு முற்றிய நிலையில் இருந்தால், "கன்ட்ரோலர்' மருந்தும் அளிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளை, மருத்துவரின் பரிந்துரைப்படி பயன்படுத்த வேண்டும்; பரிசோதிக்கும் மருத்துவருக்குத்தான் நோயின் தன்மை மற்றும் அதன் தாக்கத்தின் அளவு தெரியும்.

குளிர்காலத்தில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளில், 50 சதவீதம் பேர், சுவாசம் மற்றும் நுரையீரல் சார்ந்த பாதிப்புகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளவே வருகின்றனர். சுவாசக்குழாய் மற்றும் நுரையீரலில் முக்கியமாக குளிர் மற்றும் பனி காலங்களில், சாதாரண அலர்ஜியான, சளி முதல் நிமோனியா காய்ச்சல் வரை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே நுரையீரல் பாதிப்புள்ளவர்களுக்கு, இக்காலங்களில் அந்நோயின் தன்மை தீவிரமடைய அதிக வாய்ப்புள்ளது.
அலர்ஜி என்பது ஒவ்வாமையாகும். இது ஒருவருக்கு பலவிதமாக வெளிப்படுகிறது. முக்கியமாக, இந்த ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சுவாச குழாய் சம்பந்தமான பிரச்னை அதிகம் காணப்படுகிறது. குளிர்ந்த காற்று, தூசு ஆகியவற்றை சுவாசிக்கும்போது அவர்களுக்கு தும்மல், மூக்கில் நீர் வழிதல், கண்களில் அரிப்பு, மூக்கடைப்பு உள்ளிட்ட பிரச்னைகள் வர வாய்ப்புள்ளது. இது "அலர்ஜிக் ரைனைட்டிஸ்' என்றழைக்கப்படுகிறது. இந்த பிரச்னைகளுக்கு, ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை தற்காலிகமாகவோ அல்லது நோயின் தன்மைக்கேற்ப தொடர்ச்சியாகவோ கொடுத்து, கட்டுக்குள் கொண்டு வரலாம். இந்த ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகளை மாத்திரைகள் மூலமோ அல்லது,"ஸ்பிரே' மருந்து வகையிலோ மருத்துவரின் அறிவுரைப்படி எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பிரச்னை வரும்முன் காக்கும் வகையில், ஒவ்வொருவரும் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள், "ஹெல்மெட்' அணிந்து செல்வதன் மூலம், இந்நோயின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது.ஒவ்வாமையின் மற்றொரு வெளிப்பாடு காசநோய் மற்றும் ஆஸ்துமா. காசநோய் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு குளிர்காலத்தில் நோயின் தாக்கம் அதிகமாக வாய்ப்புள்ளது. இவர்களுக்கு, வறட்டு இருமல் (குறிப்பாக இரவில்), மூச்சிரைப்பு, நெஞ்சில் பாரம் போன்ற தொந்தரவுகள் அதிகம் காணப்படும்; குளிர்காலத்தில் காற்றில் நிலவும் வறண்ட ஈரப்பதம், வைரஸ் இன்பெக்ஷன்(புளூ காய்ச்சல்)போன்றவையே இதற்கு முக்கிய காரணம்.

ஆஸ்துமா பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குளிர்காலத்தில் நோயின் தன்மை தீவிரமாகும் முன்பே, மருத்துவரை அணுகி நோய் வராமல் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். தொடர்ந்து, "இன்ஹேலர்' பயன்படுத்த வேண்டும்.
காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்படி மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளவேண்டும். காசநோய் தொற்றுநோய் என்பதால் இந்நோய் பாதிப்புக்குள்ளானோர் இருமல், தும்மல் வரும்போது துணியால் வாய் மற்றும் மூக்கு பகுதியை மறைத்துக் கொண்டால், அருகில் இருப்பவருக்கு பரவாமல் தடுக்கலாம்.

"இன்ஹேலர்' எடுத்துக் கொள்வதில், மக்களிடையே தயக்கமும், சந்தேகமும் உள்ளது. முக்கியமாக, இவற்றால் பக்கவிளைவுகள் ஏற்படுமோ அல்லது இந்த மருந்துக்கு அடிமையாகி விடுவோமோ என்ற அச்சமும் தயக்கமும் உள்ளது."இன்ஹேலரால்' எவ்வித பக்கவிளைவும் வராது.நுரையீரல் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் முதல் அனைத்து வயதுடையவர்களும் சர்க்கரை, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களும் குளிர்காலம் துவங்கும்முன்பே புளூ தடுப்பூசி எடுத்துக் கொண்டால், நிமோனியா என்ற நுரையீரல் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Thanks - டாக்டர். எஸ்.கீர்த்திவாசன்,
நுரையீரல் சிகிச்சைத் துறைத் தலைவர்(பொறுப்பு),
கோவை அரசு மருத்துவமனை.

Blood Creating Leaves: ரத்தம் உற்பத்தி செய்யும் கொடிபசலை, சிறுபசலை கீரைகள்

0 comments
எண்ணற்ற சத்துக்களும் சுவையும் நிறைந்த கொடி பசலை தரையோடு கொத்து கொத்தாக சிறு செடி போல வளரும் இதுவும் பசலை வகையைச் சேர்ந்த்துதான். இலங்கையில் அதிகம் பயிரிடப்பட்ட இந்த கீரை தற்போது இந்தியாவில் அதிகம் பயிரிடப்படுகிறது. இந்த இலையுடன் தண்டையும் சமைத்து சாப்பிடலாம். இரண்டிலும் நீர்ச்சத்து அதிகம் காணப்படுகிறது.

கொடி பசலைக்கீரையில் வைட்டமின் ஏ,பி, போன்ற உயிர்ச்சத்துக்களும், சுண்ணாம்பு, இரும்புச்சத்துக்களும், காணப்படுகின்றன. இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள ரத்தம் சுத்தமாகும். புதிய ரத்தம் விருத்தியாகும். மலச்சிக்கல் நீங்கும்.

சிறுபசலைக்கீரை

பசலைக்கீரையில் ஒன்றான சிறுபசலைக்கீரை தரையோடு தரையாக படர்ந்த இருக்கும். குளிர்ச்சியான இடத்திலும், காய்ந்த இடத்திலும் கூட இந்த பசலைக்கொடி படர்ந்திருக்கும். இதன் இலை எள்ளின் உருவத்தில் உருண்டு,திரண்டு, வெந்தயம் அளவில் பருமனாக இருக்கும். இலையும், கொடியும் சிவந்த நிறத்துடன் இருக்கும்.

சிறுபசலைக்கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டாக சமைத்து உண்ணலாம். இது தேகத்துக்கு நல்ல பலத்தை தரக்கூடியது. மலச்சிக்கல் உள்ளவர்கள் பசலைக்கீரையை சாப்பிட இளகி குணமாகும். பாலுணர்வை தூண்டக்கூடிய சக்தி இந்த கீரைக்கு உண்டு.

நீர்கடுப்பு குணமாகும்

உஷ்ணம் காரணமாக சிறுநீர் சிவந்து அடிக்கடி இறங்குவது உண்டு. இந்த சமயம் சிறுநீர் துவாரத்தில் எரிச்சல் ஏற்படும். இதை நிறுத்த தரைப்பசலைக்கீரையை மூன்று வேளை சமைத்து சாப்பிட நீர்சுருக்கு குணமடையும்.

உஷ்ணம் காரணமாக வெட்டை, வெள்ளை ஒழுக்கு ஏற்பட்டு சிறுநீர் துவாரத்தில் சதா வெண்ணிறமான நீர் கசிந்து கொண்டிருக்கும். இந்த குறைபாடு உள்ளவர்கள் தரைப்பசலைக்கீரையை மூன்று நாட்கள் சமைத்து சாப்பிட குணமாகும். இது அதிக குளிர்ச்சி தரக்கூடியது என்பதால் சீதாள தேகம் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது. சளி, கபம் இருக்கும் போது கீரையை சாப்பிட்டால் அதிகமாகும்

Lotus Kasayam: உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த வெண் தாமரை கஷாயம்

0 comments
தாமரை மலர்களை இறைவனுக்குரிய ஆசனமாக புராணங்கள் சித்தரிக்கின்றன. கல்வியின் நாயகி சரஸ்வதி வெண்தாமரை மலரிலும், செல்வத்தின் நாயகி செந்தாமரை மலரிலும் வீற்றிருப்பதாக கூறப்படுகிறது. தாமரை மலர்கள் தன்னிகரற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. தாமரை மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. தாமரை மலர்களில் லினோலிக் அமிலம், புரோட்டீன், பாஸ்பரஸ், இரும்புசத்து, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி போன்றவை காணப்படுகின்றன.

செந்தாமரை, வெண்தாமரை என இருவகை தாமரை மலர்கள் இருந்தாலும் வெண்தாமரையே அதிக அளவில் மருத்துவத்திற்குப் பயன் படுத்தப்படுகிறது.

மூளை வளர்ச்சி

உடல் ஆரோக்கியத்திற்கு வெண்தாமரைக்குடிநீர் மிகவும் ஏற்றது. மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து வெண்தாமரைப் பூ கஷாயம் குடித்து வர மூளை வளர்ச்சியடையும். இதயம் தொடர்புடைய எண்ணற்ற நோய்களை போக்க வெண்தாமரைப் பூ கஷாயம் ஏற்றது. தினம் மூன்று வேளை வெண்தாமரை பூ கஷாயம் சாப்பிட ஜன்னி நோய் குணமாகும்.

கண்பார்வை தெளிவு

வெண்தாமரைப்பூ,இலை,தண்டு, கிழங்கு ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து எடுத்து அதனை நன்றாக சாறுபிழிந்து முக்கால்கிலோ நல்லெண்ணையில் கலந்து அடுப்பில் கொதிக்கவைக்கவும். நன்றாக கொதித்த உடன் அதனை இறக்கி ஆறவைத்து காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைக்கவும். தினமும் இதனை தலைக்கு தேய்த்து ஊறவைத்து குளித்துவர மங்கிய கண்பார்வை தெளிவுறும்.

உயர் ரத்த அழுத்தம்

வெண்தாமரைப்பூக்களைப் காயப்போட்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். தினசரி 5 டீஸ்பூன் பொடியை ஒன்றரை டம்ளர் நீரில் போட்டு அடுப்பில் வைத்து சுண்டக் காய்ச்சவேண்டும். அதனை வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு தடவை சாப்பிட உயர் ரத்த அழுத்தம் சீராகும்.

கூந்தல் தைலம்

தாமரைப்பூ ,அதிமதுரம்,நெல்லிக்காய், மருதாணிஇலை ஆகியவற்றை சமஅளவு எடுத்து பால்விட்டு அரைத்து உருட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயை பாத்திரத்தில் விட்டு இந்த உருண்டையை அதில் போட்டு காய்ச்சி வடித்து எடுக்கவும். இந்த தைலத்தை தினமும் தலையில் பூசி வர இளநரை மறையும், கூந்தல் உதிர்வது நின்றுவிடும்.

இருதயநோய் போக்கும்

செந்தாமரை இதழ்களை எடுத்து வெயிலில் உலர்த்தி 300 கிராம் எடை எடுத்து ஒரு சட்டியில் போட்டு அதில் மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி மூடிவைத்து விடவும். இந்த கஷாயத்தை தினமும் அரை டம்ளர் அளவு எடுத்து அதில் ஒரு தேக்கரண்டியளவு தேன்விட்டு 21 குடித்து வர இருதய நோய் குணமடையும்.

இருமல் போக்கும் நீர்

தினமும் செந்தாமரை இதழை ஒரு கைப்பிடியளவு எடுத்து அதனை பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு அதனை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குடித்து வர வறட்டு இருமல் குணமடையும்.

Jasmine Flowers Medicinal Effect: மலரும் மருத்துவமும் மல்லிகை

0 comments
மலர்களில் மணம் மட்டும்தான் உண்டு என்று நினைப்பவர்களா நீங்கள். அப்படியென்றால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.  மணத்தோடும் மருத்துவ குணமும் சேர்ந்தவை தான் மல்லிகை மலர்கள்.

இதனால்தான் நம் முன்னோர்கள் இறைவனை பூஜிக்கும் பொருளாக மலர்களை பயன்படுத்தினர்.
மலர்கள் மனதிற்கு அமைதியையும், சாந்தத்தையும்  கொடுக்கிறது.  அதுபோல் மருத்துவத்திற்கும் பயன்படுகிறது.  இதை மலர் மருத்துவம் என்கின்றனர்.  தற்போது உலகெங்கும் மலர் மருத்துவம் பிரசித்திப்பெற்று வருகிறது.

இங்கிலாந்தில் டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவர் M.ஆ.ஆ.கு. ஐ.கீ.இ.க, M.கீ.இ.கு படிப்புகளைப் படித்துவிட்டு சில காலம் ஆங்கில மருத்துவராக பணிபுரிந்தார்.  அப்போது ஆங்கில மருந்துகளால் சில நோய்கள் குணப்படாமலும், பக்க விளைவுகளை உண்டுபண்ணியும் வந்ததால் ஹோமியோபதி மருத்துவம் பயின்றார்.  பெரும்பாலான நோய்களுக்கு முக்கியக் காரணம் மனமே என்பதை உணர்ந்து அதற்கு மருந்து கண்டு பிடித்தால் நோய்களைக் குணப் படுத்தலாம் என்று முடிவு செய்து இதற்காக மரப் பட்டை, இலைகள், கனிகள், விதைகள், காய்கள், பூக்கள் என பல வகைகளைச் சேகரித்து பரிசோதனை செய்தார்.  அப்போது பிராய்ட் என்ற மனோதத்துவ அறிஞர் எழுதிய நூல்களில் மனதை செம்மைப்படுத்த மலர்களின் பங்கு பற்றி இருப்பதை அறிந்த அவர் 38 வகையான மலர்களைத் தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்ததில், அவை பல வகைகளில் மனிதனின் மனதை மாற்றி உள்ளத்திற்கு புத்துணர்வு கொடுக்கின்றன  என்பதை உணர்ந்தார்.  அதனால் நோய்கள் குணம் ஆவதையும் உணர்ந்தார்.  இப்படி உருவானதுதான் மலர் மருத்துவம்.  ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் சித்தர்கள் மலர்களின் மருத்துவப் பயன்களை கண்டறிந்துள்ளனர் என்பதைப் பார்க்கும்போது உலகின் ஆதி மருத்துவம்தான் நம் இந்திய மருத்துவம் என்பது நமக்கு புரிய வரும்.

இந்த வகையில் மல்லிகை மலரின் மருத்துவக் குணங்கள் பற்றி  சித்தர்கள் கூறுவது என்ன என்று பார்ப்போம்.

மல்லிகையை புருன்றி, இருவாட்சி, கொடிமல்லிகை, அனங்கம், மாலதி என பல பெயர்களில் அழைக்கின்றனர்.

மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும்.  அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே.  மல்லிகை நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  வாசனை திரவியங்களுக்கு அதிகம் பயன்படுத்துவதால் மிகுந்த பொருளாதாரத்தை ஈட்டித் தருகிறது.

மல்லிகைப் பூவை நம் இந்தியப் பெண்கள் தலையில் சூடிக்கொள்வார்கள்.  காரணம் மல்லிகைப்பூவானது மணத்தைக் கொடுப்பதுடன் உடல் சூட்டையும் தணித்து மன ஆறுதலையும் அளிக்கிறது.

மல்லிகைப் பூவிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத் தேய்த்துக் குளித்து வந்தால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.   சரும எரிச்சல் நீங்கும். சரும பாதிப்புகளைப் போக்கும்.

கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.  கண் பார்வை நரம்புகளில் வறட்சித் தன்மையைப் போக்கி பார்வையை தெளிவாக்கும்.  கண் எரிச்சல், பார்வைக் கோளாறுகள் நீங்கும். பித்தத்தை தணித்து சீராக்கும்.

தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது.
ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு.

மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.

உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும்.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள்.  இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.

தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.

உலர்ந்த மல்லிகைப்பூ - 5 கிராம்

கறிவேப்பிலை -10 இலை

எடுத்து காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.

மல்லிகை மணத்திற்கு மட்டுமல்ல, மருத்துவத்திற்கும் என்பதை புரிந்து அதனைப் பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோம்.

Remedies by Neem Flowers: பித்தம், வாதம், கபம் நீக்கும் வேப்பம் பூக்கள் - காது வலிக்கும் அரு மருந்து!

0 comments
கண்ணுக்கு எதிரே கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கும் மூலிகை வேம்பு. காற்று மண்டலத்தை சுத்தம் செய்து நம் நோய்களைத் தீர்க்கும் கற்பக மரம். வேப்பமரத்தின் இலைகளும், பூக்களும், கனிகளும் மருத்துவகுணம் மிக்கவையே. வேப்பம்பட்டை, நீரிழிவுக்கு சிறந்த மருந்து. உடம்பில் ஏற்படும் சன்னி கண்ட நோய்களுக்கு வேப்ப எண்ணெயில் சிறிது கற்பூரம் சேர்த்து சூடாக்கி தலை உச்சியில் தேய்க்க சன்னி தீரும். அம்மை கண்டவர்களைச் சுற்றி வேப்பிலை கொத்துகளை போட்டு வைத்தால் இலைகளின் வாசனையால் நோயின் வேகம் தணியும். கிருமியும் அண்டாது.

தென்னிந்திய சமையலில் வேப்பம்பூக்களுக்கு முக்கிய பங்குண்டு. தமிழ்நாட்டில் சித்திரை வருடப்பிறப்பன்றும், ஆந்திரா, கர்நாடகாவில் யுகாதி அன்றும் வேப்பம்பூவை ரசம் வைத்தும், பச்சடியாகவும் உட்கொள்கின்றனர். மலர்கள் கடுமையான வயிற்று வலியையும் போக்கும் குணம் கொண்டவை.

மூன்று நோய்களுக்கு மருந்து

பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று நோய்களையும் சமன்படுத்த வேப்பம்பூ பயன்படுகிறது. ஒரு கைப்பிடியளவு வேப்பம்பூவை எடுத்து உலர்த்தி பொடி செய்து கால் டம்ளர் நீரில் சிறிது தூளைக் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம், வாதம், கபம் சமனப்படும்.

வேப்பம்பூவை நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வற்றல்குழம்பு, மிளகுரசம் தயார் செய்யும்போது சிறிது வேப்பம்பூவைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர வயிறு உப்பிசம்,பித்தம், வாதம் தொடர்புடைய நோய்கள் நீங்கும். கல்லீசரல் பாதுகாக்கப்படும்.

வேப்பம்பூ பொடியில் தேன் கலந்து தினம் 2 வேளை வீதம் மூன்று நாட்கள் உட்கொண்டு வந்தால் பித்தம் காரணமாக எற்படும் வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம், போன்ற தொல்லைகள் நீங்கும். உலர்ந்த வேப்பம்பூவை கறிவேப்பிலையோடு துவையலாக்கி சாப்பிட, பித்தம் தொடர்பான சகல பிணிகளும் நிவர்த்தியாகும்.

உடல் பருமன் குறையும்

வேப்பம்பூவை தண்ணீரில் ஊறவைத்து அதனை குடித்து வர உடல் பருமன் குறையும். இது அல்சரையும் குணமாக்கும். உடலை வலுவாக்குவதில் வேப்பம்பூக்களின் பங்கு முக்கியமானது. தினம் இருவேளை வேப்பம்பூ பொடியை சாப்பிட முறைக்காய்ச்சல் நீங்கும்.

வேப்பம் பூவை வாட்டி தலையில் கட்டி வைத்தால் தலையில் உள்ள பேன், ஈறு, பொடுகு முதலியவை தீரும். இதை தலையின் உச்சியில் வைத்துக் கட்டினால் தலைபாரம் நீங்கி சுகமாக இருப்பதோடு கூந்தலும் செழித்து வளரும்.

சருமநோய்கள் நீங்கும்

வேப்பம்பூவைக் காய்ச்சி, இந்த கஷாயத்துடன் நெல்லிக்காய் சாற்றையும், தேனையும் கலந்து உட்கொண்டால் சரும நோய்கள் நீங்கும். வேப்பம் பூவையும், எள்ளையும் அரைத்துக் கட்டினால் கொடிய கட்டிகளும் உடனே உடைந்துவிடும். வேப்பம்பூ கஷாயத்தை சிறிதளவு காலையிலும், மாலையிலும் குடிக்கச் செய்தால் குழந்தைகளின் வயிற்றுக் கோளாறுகள் அகன்று வயிறு சுத்தப்படும்.

காதுகோளாறுகளுக்கு மருந்து

வேப்பம்பூவை பறித்து வந்து அதை கொதிக்கும் நீரில் போட்டு அதிலிருந்து வரும் ஆவியை காது வலியாக உட்செல்லும்படி தலையை வைத்திருந்தால் காதுவலி, காது இரைச்சல், சீழ் வடிதல், யாவும் நீங்கி காது நன்கு கேட்கும்.

Color Says Your Love Nature: காதலை சொல்லும் `கலர்’

0 comments
`கலர் சைக்காலஜி`, இப்போது இளைஞர்கள் மத்தியில் பிரபலம். பல்வேறு நிறங்களை பெண் அல்லது ஆணிடம் காட்டி, `அவைகளில் எந்த நிறம் பிடிக்கிறது?` என்று கேட்கிறார்கள். அவர் தனது விருப்பமான நிறத்தை சொன்னதும், அவருடைய காதல் மற்றும் தாம்பத்ய ஆர்வத்தை அதிரடியாகக் கூறி அசத்துகிறார்கள்.



உங்களுக்கு எந்த நிறம் பிடிக்கும், அதற்கேற்றபடி உங்கள் காதல் உணர்வு எப்படி இருக்கும் இங்கே பாருங்கள்.

சிவப்பு:

இவர்கள் காதல் உணர்வில் புலி. கற்பனையில் நினைப்பதை எல்லாம் காதலில் நிறைவேற்ற துடிப்பார்கள். இவர்கள் ஆசைப்பட்ட பெண்ணை (அல்லது ஆணை) அடையாமல் விடமாட்டார்கள். அளவிட முடியாத ஆசைகளைக் கொண்டிருப்பார்கள். இவர் விரும்பும் ஜோடிக்கும் பிடித்த நிறம் சிவப்பு என்றால், இவர்கள் வாழ்க்கையை திகட்ட திகட்ட அனுபவிப்பார்கள். ஆனால் காதல் விஷயத்தில் இவர்களின் பிடிவாத குணம், சில நேரங்களில் மிகப்பெரிய சிக்கலை உருவாக்கிவிடும்.

மஞ்சள்:

இவர்களது காதல் ஆசைகள் அளவுக்கு மீறியதாக இருக்கும். அத்தனை ஆசைகளையும் இவர்களது காதல் இணையால் நிறைவேற்ற முடியாது. சில நேரங்களில் `இப்படியுமா ஆசைப்படுவீர்கள் சே..` என்று சொல்லும்படி ஆகிவிடும். காதலுக்காக உயிரைக்கூட கொடுப்பேன் என்பார்கள். ஆனால் பர்சில் இருக்கும் பணத்தைக்கூட செலவழிக்க யோசிப் பார்கள். அதனால் இந்த நிற மனிதர்களின் காதலுக்கு ஜோடி கிடைப்பது கஷ்டம். ஆனால் இவர்கள் அறிவாளியாகவும், கொள்கையில் பிடிப்பு கொண்டவர்களாகவும் இருப்பதால் கல்யாண வாழ்க்கை என்று வந்துவிட்டால், தனது ஜோடியை எல்லா விதத்திலும் சந்தோஷப்படுத்துவார்கள்.

பிங்க்:

கணக்கற்ற காதல் கனவுகள் கொண்டவர்களாக இருப்பார்கள். தினமும் இரண்டு மூன்று பேரையாவது காதல் பார்வை பார்த்து ரசிப்பார்கள். காதல் விஷயங்களை படிப்பதிலும், அதை செயல்படுத்திப்பார்த்து உண்மையா, பொய்யா என்று கண்டறிவதிலும் மெனக் கெடுவார்கள். தங்கள் காதல் இணையை ரொம்பவும் புகழ்ந்து, கனவு காணவைத்து தான் நினைப்பதை சாதிக்க முயற்சிப்பார்கள். இவர்களை அவ்வளவு எளிதாக நம்பிவிடக்கூடாது. ஏன்என்றால் கொள்கை, கோட்பாடு, நம்பிக்கை இவர்களிடம் குறைவாக இருக்கும். பிங்க் நிறத்தை விரும்பும் பெண்கள் தனித்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள். ஆண்களை எளிதில் நம்பி ஏமாந்துவிடமாட்டார்கள்.

பர்பிள்:

சுயநலவாதிகள். காதல் என்றாலும், கல்யாணம் என்றாலும் தனது எதிர்காலத்திற்கு அதன் மூலம் எவ்வளவு கிடைக்கும் என்று கணக்கு போடுவார்கள். அதனால் இவர்கள் எளிதாக காதல் வலையில் விழமாட்டார்கள். கல்யாணத்திற்கு பெண் பார்த்தாலும் அவளிடம் தனி யாகப் பேசி தன் எதிர்பார்ப்புகளை எல்லாம் `டன்` கணக்கில் கொட்டுவார்கள். அதைக் கேட்டு அதிர்ந்துபோகும் பெண், `அவரோடு தன்னால் வாழ்க்கை நடத்த முடியாது` என்று கூறிவிடுவாள். அதனால் இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு காதல் மட்டுமல்ல, கல்யாணமும் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கும்.



ஆரஞ்ச்:

காதல் இவர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. அதற்கு போய் யாராவது நேரத்தை செலவிடுவார்களா என்று தத்துவம் பேசுவார்கள். கடவுள் நம்பிக்கை இவர்களிடம் அதிகம் இருப்பதால், யாராவது காதல் தூதுவிட்டாலும் தத்துவம் பேசி விரட்டிவிடுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் ஆண்களை, பெண்கள் சாமியார் என்பார்கள்.

கறுப்பு:

இவர்கள் இறுக்கமான மனிதர்களாக இருப்பார்கள். மனம்விட்டுப்பேச மாட்டார்கள். அதனால் இவர் காதல் பார்வை பார்த்தாலும், எதிர்பாலினம் நம்பிக்கை கொள்ளாமல் நழுவிச்சென்றுவிடும். மன அழுத்தம் இவர்களிடம் அதிகம் உண்டு. அதை தீர்க்க சரியான மருந்து தாம்பத்ய உறவு கொள்வதுதான் என்று நம்புவதால் விரைவில் திருமணம் முடிக்க ஆசைப்படுவார்கள். காதல் இவர்களுக்கு பெரும்பாலும் கைகூடாது.

பச்சை:

பச்சையை விரும்பும் பெண்களிடம் காதல் உணர்வு அதிகம் இருக்கும். காதலரே கணவர் ஆனாலும் காலம் முழுக்க அவரோடு காதல் கொள்ள துடிப்பார்கள். முத்த மழையில் குளிப்பாட்டிவிடுவார்கள். இந்த நிறத்தை விரும்பும் பெண்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிவது கடினம். இவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். காதல் உணர்வுகளையும் எளிதாக வெளிப்படுத்தமாட்டார்கள்.

நீலம்:

இந்த நிறத்தை விரும்புகிறவர்களிடம் காதல் உணர்வு அதிக மிருக்கும். பெண் என்றால் நாலைந்து ஆண்களை ஆராய்ந்து, இறுதியில் அதில் ஒருவரை தேர்வு செய்து காதலிப்பார்கள். `தாம்பத்ய' விஷயத்திலும் இவர்கள் புதுமை விரும்பிகளாக இருப்பார்கள். நீல நிறத்திற்குரிய ஆண்களிடமும் இதே இயல்புகள் இருக்கும்.

வெள்ளை:

இதனை விரும்பும் ஆண்களைப் பார்த்தாலே பெண்கள் நாசூக்காக நழுவிப்போய் விடுவார்கள். `காதலாவது கத்தரிக்காயாவது..' என்று எப்போதும் காதலுக்கு எதிராகவே பேசுவார்கள். காதலிப்பவர்களை தூற்றவும் செய்வார்கள். ஆனால் குடும்ப வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

Herbal Medicine to Stop Blood Vomiting: ரத்த வாந்தியை கட்டுப்படுத்தும் அருமருந்து – துத்திப்பூ!

0 comments
பட்டாம்பூச்சிகள் பறந்து அமரும் துத்திப்பூக்கள் காணும் இடமெங்கும் கண்ணுக்கு இதமாய் மலர்ந்து சிரிக்கும். குப்பை மேடுகள், சாலையோரங்கள் என பல இடங்களிலும் வளர்ந்துள்ள துத்திச் செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணமுடையவை. ரத்தம் தொடர்புடைய நோய்களை போக்கி நெஞ்சுக்கு இதம் தரும்.

ஆண்மை பெருகும்

துத்திப்பூக்களைச் சேகரித்து துவரம்பருப்புடன் கூட்டாகச் சமைத்து கடைந்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் ரத்தம், சிறுநீரில் ரத்தம் எதுவாயினும் குணமாகும். ஆண்மை பெருகும்.

இரைப்பு நோய்

துத்திப்பூக்களைச் சேகரித்து, காம்பு நீக்கி நிழலில் காயவைத்து சூரணம் தயார் செய்து சமஅளவு சர்க்கரை கலந்து அரை தேக்கரண்டியளவு சூரணத்தை காலை, மாலை பாலில் பருக இரைப்பு மறையும். காசம் என்ற எலும்புருக்கி நோய் நீங்கும்.

மூலநோய் கட்டுப்படும்

ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பறித்து பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வர மூலநோய் கட்டுப்படும்.

ரத்தவாத்தி நீங்கும்

அரைக் கைப்பிடியளவு துத்திப் பூக்களை சேகரித்து ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி 4 மணிக்கொரு முறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.

Heart Attack-Stroke without Pain: வலியின்றி வரும் மாரடைப்பு

0 comments
வயது அதிகரிக்க அதிகரிக்க மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. நம் நாட்டில் பிறந்ததினாலேயே ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு, மரபு முறை, மாவுச் சத்து அதிகமுள்ள அரிசி போன்ற உணவு மற்றும் தேவையான உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை காரணங்களாக இருக்கலாம். ஆனால் இன்னமும் இவை ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்படவில்லை.

மாரடைப்பு ஏற்படுவதை எவ்வாறு கண்டறிவது?
மூன்று இரத்தக் குழாய்கள் வழியாக இதயத்திற்கு இரத்தம் செல்கிறது. வயது ஆக ஆக இரத்தக் குழாய்கள் சுருங்குகின்றன. அக்குழாய்களுள் கொழுப்பு சேர்வதால் இரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.
நடுத்தர வயதில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் நெஞ்சில் கடுமையான வலி ஏற்படும். அது பரவலாக இருக்கும். இடது தோள்பட்டை மற்றும் இடது கை உள்புறம் பரவும். பின்பு வலதுகை மற்றும் முதுகிற்கும் வலி பரவிச் செல்லும். நெஞ்சில் ஏற்பட்ட வலி கழுத்து பக்கவாட்டிலும், தாடைக்கும் செல்லும். இத்தோடு உடம்பு சில்லென்று வியர்த்துக் கொட்டும். மயக்கமும், வாந்தியும் ஏற்படலாம். இத்தகைய அறிகுறிகள், முதுமைக்காலத்தில், ஒருசிலருக்கு மட்டுமே இப்படி இருக்கும். பலருக்கோ, நோயின் அறிகுறிகள் மாறுபட்டுக் காணப்படும். அதாவது நெஞ்சில் வலி ஏதுமின்றி உடல் சோர்வு, களைப்பு, மூச்சு வாங்குதல், மயக்கம், கீழே விழுதல், பக்கவாதம் போன்றவையே மாரடைப்பின் அறிகுறிகளாய்த் தோன்றும்.
மேலும் சிலருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் ஏதுமின்றி மறைந்திருக்கும். இவர்களுக்கு நெஞ்சு வலியோ அல்லது மாரடைப்பைச் சார்ந்த எந்தவிதத் தொல்லைகளுமே இருக்காது. ஆனால், ஈ.ஸி.ஜி.யில் மாரடைப்பு ஏற்பட்டது தெரியவரும். இதை சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்று கூறுவோம். முக்கியமாக நீண்ட காலம் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அறிவுத்திறன் வீழ்ச்சியினால் மூளை பாதிக்கப்பட்டவர்களுக்கு சைலன்ட் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு மிக அதிகம்.

மாரடைப்பினால் ஏற்படும் தொல்லைகள் என்ன?
வயதான காலத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டால் அது வாயுத் தொல்லை என்று அலட்சியப்படுத்தி விடுகிறார்கள். அதனால் சிகிச்சையில் காலதாமதம் ஏற்பட்டு மரணம் அடைய வாய்ப்புள்ளது. இதைத் தவிர இதயம் வலிமையிழத்தல், இதய ஓட்டம் மாறுபடுதல், நுரையீரலில் நீர்க்கோத்தல் போன்ற தொல்லைகள் வர வாய்ப்புண்டு. இரத்த ஓட்டம் திடீரென்று மற்ற உறுப்புகளுக்குக் குறைந்தால் பக்கவாதம் மற்றும் சிறுநீரகக் கோளாறு போன்றவையும் அதிகம் வரும். நெஞ்சுப் பகுதியில் இனம்புரியாத ஒரு வேதனை ஏற்பட்டால் காலம் தாழ்த்தாது டாக்டரிடம் சென்று இ.ஸி.ஜி. இரத்தப் பரிசோதனை மற்றும் தேவைப்பட்டால் எக்கோ போன்ற பரிசோதனைகள் செய்து கொண்டு தேவையான சிகிச்சை பெற வேண்டும்.

என்ன சிகிச்சை?: மருந்தா? ஆஞ்சியோ பிளாஸ்டியா? பைபாஸ் சர்ஜரியா?
சுமார் 70 - 80 வயது தாண்டிய முதியவர்களுக்கு மாரடைப்பிற்குப் பின்பு நெஞ்சு வலியோ மூச்சு வாங்குவதோ இல்லையென்றால் மருந்துகள் மூலமாகவே நல்ல பலன் கிடைக்கும்.
சுமார் 60-70 வயதுள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் பி.பி., கொழுப்புச்சத்து போன்றவற்றோடு அடிக்கடி நெஞ்சில் வலியும் ஏற்படுமேயானால் அவர்களுக்கு ஆஞ்சியா பிளாஸ்டி சிகிச்சை முறை தேவைப்படும். ஆஞ்சியோகிராம் என்பது கை அல்லது காலில் உள்ள ஒரு இரத்தக் குழாயின் வழியாக மருந்ததைச் செலுத்தி, இருதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாயின் ஏற்பட்டுள்ள அடைப்புகள் பற்றி அறியும் ஒரு பரிசோதனை.
இந்தப் பரிசோதனை மூலம் இரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தால் அதை ஆஞ்சியோகிராம் செய்யும் முறை போலவே அடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஒரு பலூனை விரிவடையச் செய்து அடைப்பு நீக்கப்படும். மறுபடியும் அடைப்பு வராமல் இருக்க, அந்த இடத்தில் ஊதுகுழல் போன்ற ஒரு சிறு குழாயைப் பொருத்தி விடுவார்கள். இரத்தக் குழாயிலுள்ள அடைப்பு விரிவு செய்யப்பட்டு இரத்தம் ஒரே சீராக ஓட வழி செய்யப்படுகிறது. ஒரே சீராக ஓட வழி செய்யப்படுகிறது. ஆஞ்சியோ பிளாஸ்டி முறையில் மயக்கமோ, தையலோ கிடையாது. இச்சிகிச்சையின் மூலம் மாரடைப்பின் தொல்லையின்றி பல ஆண்டுகள் நலமாக வாழ முடியும். ஆனால் டாக்டரின் ஆலோசனைப்படி 6-12 மாதங்களுக்கு ஒரு முறை டாக்டரிடம் சென்று மறுபரி சோதனை செய்து அதற்குத் தக்கவாறு மருந்துகளைச் சாப்பிடுவது அவசியம்.

பைபாஸ் சர்ஜரி:
இருதய பைபாஸ் சர்ஜரி என்பது நவீன அறுவை சிகிச்சை முறை. ஆஞ்சியோ கிராம் பரிசோதனை மூலம் ஒருவருக்கு இருதய இரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால், இருதயத்துக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படும். இதற்கு காலிலுள்ள இரத்தக் குழாயை எடுத்து இருதய இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொருத்தி, இரத்த ஓட்டம் மாற்று வழியில் சீராகச் செல்ல அறுவை சிகிச்சை செய்யப்படும். முதுமைக் காலத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வயது ஒரு தடை இல்லை. எப்பொழுதும் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும், சுமார் 60 வயதுள்ள ஒரு பெண்மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவர் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து இரண்டு இரத்தக் குழாய்களுக்கு மேல் அடைப்பு இபுருந்தால் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்வது அவசியம். ஏனென்றால் நேரமின்மை மற்றும் வேலை பளுவினால் ஒழுங்கான உணவுக் கட்டுப்பாடு முறையோ அல்லது தவறாமல் உடற்பயிற்சியோ அவரால் செய்ய முடியாது. இவர் அறுவை சிகிச்சையின் மூலம் சுமார் 10-15 ஆண்டுகள் வரை முன்பு இருந்ததைப் போலவே ஆரோக்கியமாக வாழ முடியும்.
ஆகையால் வயதான காலத்தில் மாரடைப்புக்கு மருந்தா? ஆஞ்சியோ பிளாஸ்டியா அல்லது பைபாஸ் சர்ஜரியா என்பதை அந்தந்த நோயாளியின் நோயின் தன்மை, வயது, அவருக்கு இருக்கும் பிற நோய்கள், அவரது வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொறுத்தே முடிவெடுக்க முடியும்.

மாரடைப்பு யாருக்கெல்லாம் வரும்?
மாரடைப்பு எல்லோருக்கும் வருவதில்லை. குடும்பத்தில் (இரத்த சம்பந்தப்பட்ட உறவு) யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டு இருந்தால், நீரிழிவு நோய், பி.பி., இரத்தத்தில் கொழுப்புச் சத்து மற்றும் எடை அதிகம் உள்ளவர்களுக்கும், மது அருந்துபவர்களுக்கும், உடல் உழைப்பு இல்லாதவர்கள், பதற்ற ஆசாமிகள், புகைபிடிப்பவர்கள் போன்றோருக்கு மாரடைப்பு வர வாய்ப்பு அதிகம் உள்ளது. மேற்கண்ட தொல்லைகளுக்கு தக்க சிகிச்சை எடுத்துக் கொள்வதுடன் தினமும் செய்யும் உடற்பயிற்சி, நார்ச்சத்து அதிகம் உள்ள ஆரோக்கியமான உணவு மற்றும் தியானம் போன்றவை மூலம் மாரடைப்பு வராமல் தடுக்க முடியும்.

டாக்டர். வி.எஸ். நடராஜன், மூப்பியல் மருத்துவர்.
டாக்டர் பி.ஸி.ராய் தேசிய விருது பெற்ற இவர், முதியோர்களின் மறதிக்கு சிறப்பு சிகிச்சையளிக்க நினைவாற்றல் மையம் அமைத்து அதற்கு தக்க சிகிச்சை அளித்து வருகிறார்.

Don't be size Zero!: ஆபத்தாகும் `சைஸ் ஜீரோ’ உடல்வாகு

0 comments
எல்லாப் பெண்களுக்குமே எப்போதும் ஸ்லிம் சைஸ் ஜீரோ ஆக இருக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால், சிலநேரங்களில் எக்குதப்பாக எடை கூடிவிடுவார்கள்.இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே கூடாது. அவர்களது உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும். இப்படி உடல் எடை குறைவாக இருக்கும் பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அதிர வைக்கிறார்கள் மருத்துவர்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் காரணம்...

இன்றைய பெண்கள், `சைஸ் ஜீரோ' என்கிற குறைவான எடை அளவில் தங்களது உடலை வைத்துக்கொள்ள விரும்புகிறார்கள். அப்போதுதான், தாங்கள் `ஸ்லிம்' ஆக இருக்க முடியும் என்று நினைக்கிறார்கள். இதற்காக கடுமையான டயட்டில் இருக்கிறார்கள். நான் `டயட்'டில் இருக்கிறேன்... என்று சொல்வதைக்கூட இன்றைய பெண்கள் பேஷனாக கருதுகிறார்கள்.

பெரும்பாலும், இன்றைய தலைமுறை இளம்பெண்கள் பேஷன் ஷோக்களில் `கேட் வாக்' வரும் மாடல் அழகிகளைப் பார்த்துதான் `சைஸ் ஜீரோ' உடல் எடையைப் பெற முயற்சி செய்கிறார்கள்.

இப்படி ஸ்லிம் உடல்வாகுக்கு ஆசைப்பட்டு கண்டபடி `டயட்'டில் இருக்கப்போய் சில பெண்கள் எலும்பும் தோலுமாக மாறிப்போய் விடுகிறார்கள். இந்த திடீர் உடல் எடை குறைப்பு அவர்களை உடல் ரீதியான பல தொந்தரவுகளுக்கு ஆளாக்குவதுடன் அவர்களது அழகையும் பாழாக்கிவிடுகிறது.

இது ஒருபுறம் என்றால், திருமணத்திற்குப் பிறகு இப்படி எலும்பும் தோலுமாக காட்சி தரும் மெலிந்த பெண்கள் கருத்தரிப்பதிலும் பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. காரணம், மெலிந்த உடல் வாகுடன் கூடிய பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சரியாக சுரப்பதில்லை என்பதுதான். இதனால் அவர்கள் கருத்தரிப்பதும் சிரமமாகிவிடுகிறது.

அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் ரிச்சர்ட் ஷெர்பான் இதுபற்றி கூறும்போது, "நான் இதுவரையில் சுமார் 2,500 பேருக்கு செயற்கை முறையில் கருத்தரிப்பு சிகிச்சையை செய்துள்ளேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஒல்லியான உடல்வாகு கொண்டவர்கள். என்னுடைய அனுபவத்தில் `சைஸ் ஜீரோ' உடல்வாகு பெண்கள்தான் கருத்தரிப்பதில் நிறைய சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அதேசமயம், குண்டாக இருப்பவர்கள், அதிலும் அளவுக்கு அதிகமான உடல் எடையில் இருப்பவர்களுக்கு கூட பெரும்பாலும் இந்தப் பிரச்சினை வருவதில்லை'' என்றார் அவர்.

நீங்களும் சைஸ் ஜீரோ உடல்வாகை பெற முயற்சிக்கும் பெண் என்றால், இப்போதே உஷாராகிவிடுங்கள்...!

Diseases on Rainy Season: மழைக்காலத்தில் பரவும் நோய்கள்

0 comments
மலேரியா கிருமி

பாரசைட் என்ற கிருமிகள், மலேரியா ஏற்படுத்தும். அவை

*பிளாஸ்மோடியம் (P Plasmodium)
*பால்ஸிபாரம் (P falciparum)
*வைவாக்ஸ் (P.vivax)
*ஓவலே(P. ovale)
*மலேரியே (P.malariae)
*நோலெசி (P.knowlesi)
பரவும் முறை: பெண் கொசுவால் பரவும் (Female Anophels mosquitoes)

அறிகுறிகள்: ரத்த சோகை, மலத்தில் ரத்தம், நடுக்கம், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி வருவது போன்ற உணர்வு, வியர்த்தல், கோமா.

உறுதிப்படுத்தும் அறிகுறிகள்: மேற்சொன்னவை சுழற்சி முறையில் உருவாதல், திடீர் சளியும் தொடர்ந்து ஏற்படும் நடுக்கம், காய்ச்சல், வேர்த்தல் இரு நாட்களுக்கு ஒரு முறை, 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும்.

விளைவுகள்: ரத்த சோகை, மூளை தொற்றுநோய், ஈரல் பாதிப்பு, மூளைக்காய்ச்சல், நுரையீரலில் நீர்த்தேக்கத்தால் மூச்சிரைப்பு, சுவாசத் தடை, மண்ணீரலீல் சிதைவு ஏற்பட்டு ரத்தக் கசிவு ஏற்படும்.

தடுப்பு முறைகள்: உடல் முழுவதும் மூடும்படியான உடைகளை அணியவும். இந்நோய் பரவிய பகுதியில், நீங்கள் பயணிக்க நேரிட்டால், கொசு துரப்பான் களைப் பயன்படுத்தவும்.

டெங்கு காய்ச்சல்: கிருமி ஏடிஸ் எஜிப்டி (அஞுஞீஞுண் அஞுஞ்தூணீtடி)

பரவும் முறை : கொசுக்களால் மட்டும் பரவும்

அறிகுறிகள்: திடீரென்று அதிக காய்ச்சல் (104 - 105) / கடுமையான காய்ச்சல் நோய் தொற்றிய 4 முதல் 7 நாள் பிறகு தெரியும். 2 முதல் 5 நாளில், காய்ச்சல் கண்டவுடன் சிவப்புப் புள்ளிகள் உடம்பெல்லாம் தெரியும். தோலரிப்பு, மயக்கம், தலைவலி, மூட்டுவலி, தசைவலி, வாந்தி, டூதூட்ணீடணணிஞீஞு வீக்கம்.

விளைவுகள்: வலிப்பு, உடலில் நீர் வற்றிவிடுதல்

தடுப்பு முறைகள்:

*முழுமையாக உடை அணிதல்
* கொசு ஒழிப்பான்களையும், கொசு வலைகளைப் பயன்படுத்தி கொசுக்களை வரவிடாமல் தடுக்கவேண்டும்

மஞ்சள் காய்ச்சல்:

கிருமி ப்ளாவி வைரஸ் (ஊடூச்திடி திடிணூதண்)

பரவும் முறை : தொற்று நோய்க் கொசுக்களால் மட்டும் பரவும். இதில், மூன்று நிலைகள் உள்ளன.

ஆரம்ப நிலை : தலைவலி, உடல்தசை மட்டும் மூட்டுகளில் வலி, காய்ச்சல், முகத்தில் சிவப்புத்தன்மை, பசியின்மை, வாந்தி, மஞ்சள் காமாலை பொதுவானது. இந்த அறிகுறிகள் உடனே மறைந்து விடும் வாய்ப்பு உண்டு.

ஆற்றல் குறையான கால அளவு நிலை : 3 - 4 நாட்களில் காய்ச்சலும் மற்ற அறிகுறிகளும் மறைந்து போகும். இதனால், மக்கள் பலர் சுகமாகிவிடுவர். ஆனால் சிலர், அபாயமான மூன்றாம் நிலையை, 24 மணி நேரத்தில் மயக்க நிலையை அடைவர்.
அதி மயக்க நிலையின் கால நிலை பல உறுப்புகளின் செயலிழப்பு, இதயம், ஈரல், சிறுநீரகம், ரத்தக்கசிவு, மூளையில் ரத்தக்கசிவு, மூளை செயலிழத்தல் ஏற்படலாம்.

அறிகுறிகள்: தாறுமாறான இதய துடிப்பு (அணூணூடதூtடட்டிச்ணூ) ரத்தக் கசிவு, சிறுநீர் கழித்தல் குறைந்து விடும், மனப்பதற்றம், வாந்தி, உடல்தசை வலி, காய்ச்சல், தலைவலி, மஞ்சள் காமாலை, தசைவலி, கண்கள் சிவத்தல், மற்றும் கோமா நிலையை கூட அடையலாம்.

விளைவுகள்: கோமா, இறப்பு

தடுப்பு முறைகள்:

* மஞ்சள் காய்ச்சல் பரவியுள்ள பகுதியில் நீங்கள் பயணிக்க நேரிட்டால், கொசு துரப்பான்களைப் (Mணிண்ணுதடிtணி ணூஞுணீஞுடூடூச்ணtண்) பயன்படுத்தவும்.
*உடல் முழுவதும் மூடும்படியான உடைகளை அணியவும்.
* தடுப்பு ஊசி - தோலுக்கடியில் (குஇ) ஃடிதிஞு ச்ttஞுணதிச்tஞுஞீ திடிணூதண் (17 ஈ குtணூச்டிண)
சிகிச்சை முறை நோய்க்கேற்ற சிகிச்சையை, உரிய மருத்துவரை ஆலோசித்து, உடனே சிகிச்சை மேற்கொள்ளுதல் நலம் பயக்கும்.

குறுகிய கால தடுப்பு முறைகள்

* குளோரின் கலந்த நீர், காய்ச்சிக் குடித்தல்.
* ஹெப்படைடிஸ் அ வைரஸ் (ஏஅங) தடுப்பு ஊசி
* மலேரியா தடுப்பு முறை
* காய்ச்சலின் அறிகுறி கண்டவுடன், உங்கள் மருத்துவர். மூலம்கண்டறிந்து, உடன் சிகிச்சை மேற்கொள்ளுதல்.

முக்கிய குறிப்புகள்
* இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது.
* சாலைகளில், வீடுகளின் வெளிப் புறத் தில், எச்சில் துப்புவதைத் தவிர்க்கவும்.
* வீட்டிற்குள் வந்தவுடன், கை, கால்களைச் சுத்தமாகக் கழுவவும்.
* பழைய, மீதமான உணவை குளிர் பெட்டியில் வைத்து, மீண்டும் சூடு படுத்தி உண்ணக் கூடாது.
* வீட்டிற்கு அருகில் உள்ள, நீர்த் தேக்கங் களை அப்புறப்படுத்தவும்.

- டாக்டர். அர்த்தநாரி பிரபுராஜ்
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf