IIT JEE 2012: IIT Joint Entrance Exam (JEE) 2012 Online Application process, IIT JEE 2012 Offline Application Process

0 comments
IIT JEE 2012
Complete details on IIT JEE 2012 and the IIT Joint Entrance Exam (JEE) 2012 Online Application process, IIT JEE 2012 Offline Application Process is dicussed below.Important details on IIT JEE 2012 and the Application process of IIT JEE 2012 in both online and offline is given below.

IIT JEE 2012 is having two types of registration such as online mode and the offline mode, i.e. physical sale of application forms, will be from November 11, 2011 to December 5, 2011.

All the IIT JEE 2012 Application Process will be active on the IIT JEE website from October 31, 2011 to December 10, 2011

Apart from this you can get all the details about IIT JEE 2012 can be checked in the official website as linked before.More to that our blog is having so many related resources for IIT JEE Application Process and GATE 2012 Application Form details also.

Here is the Application process of IIT JEE 2012,

IIT JEE 2011 Start of Online Application Process: Monday, November 01, 2010
IIT JEE 2011 Closing of Online Application Process: Wednesday, December 15, 2010
IIT JEE 2011 Start of Offline Application Forms Sale: Friday, November 12, 2010
IIT JEE 2011 Close of Offline Application Forms Sale: Wednesday, December 15, 2010
IIT JEE 2011 Last date of receipt completed application form: Monday, December 20, 2010
IIT JEE 2011 Exam Dates: Sunday, April 10 2011
IIT JEE 2011 Results: Wednesday, May 25, 2011
IIT JEE 2011 On-line filling of CHOICES open to ALL the qualified candidates: Monday to Monday, May 30-June 13, 2011
IIT JEE 2011 Medical examination and counseling for qualified PD Candidates (the schedule will be announced on the IIT websites): Wednesday to Friday, June 08-10, 2011
IIT JEE 2011 Counseling for SC/ST/OBC candidates: Wednesday to Friday, June 08-10, 2011
IIT JEE 2011 Architecture/Design Aptitude Test: Friday, June 10, 2011
IIT JEE 2011 Last date of receipt of filled and duly signed choice sheets: Friday, June 17, 2011
IIT JEE 2011 Websites release of course allocation: Monday, June 27, 2011

Source for this IIT JEE Application Process form.

Do check our other IIT JEE 2012 informations and IIT JEE 2012 Application Process in our blog and don't forget to like us and share us.

What is Alzheimer Disease? alzheimerc medicine | அல்சைமர் | அல்சைமர் நோய் பாதிப்பு

0 comments
Alzheimer Disease
மறதி என்ற ஒன்று மட்டும் இல்லையெனில், மனித வாழ்க்கையே நரகமாகிவிடும். அவமானம், சோகம், இழப்பு, வருத்தம் போன்ற துயரங்களை, அவ்வப்போது மறந்து விடுவதால் தான், நம்மால் இயல்பாக வாழ முடிகிறது.அதே சமயம்,எல்லாவற்றையும் மறந்து விட்டாலும், வாழ்க்கை நரகமாகிவிடும். மனைவி, மக்களின் பெயரை மறக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால், அதைவிட கொடுமை என்ன இருக்க முடியும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய், அப்படிப்பட்ட கொடுமையான நோய் தான். சாப்பிட்ட 10 நிமிடம் கழித்து, என்ன சாப்பிட்டோம் என சொல்ல முடியாத பரிதாப நிலை ஏற்படும். மிக மோசமான ஞாபக மறதி நோயே, அல்சைமர் என அழைக்கப்படுகிறது. ஜெர்மன் விஞ்ஞானி அலோஸ் அல்சைமர் இந்த நோயை கண்டுபிடித்ததால், அவரது பெயரால் அல்சைமர் என அழைக்கப்படுகிறது.

அல்சைமர் நோய் பாதிப்பு எந்த வயதில் ஏற்படும்?

பொதுவாக, அல்சைமர் நோய் 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதிக்கும். ஆனால், மிக அரிதாக 30 வயதிலும் வரலாம். பாரம்பரியத்தில் தாத்தா, தந்தை, சகோதரருக்கு அல்சைமர் இருந்தால், குடும்பத்திலுள்ள இளம் வயதினருக்கும் நோய் வர வாய்ப்புண்டு. ஆண்களை விட, பெண்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம்.இந்தியாவில் சராசரி ஆயுள் அதிகரித்து வருவதால், 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு உள்ள பாதிப்புகள் குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை.


அல்சைமர் பாதிப்பு ஏற்பட காரணம் என்ன?

மூளையின் பக்கவாட்டு பகுதி, பாதிக்கப்படுவதால் டிமென்ஷியா எனும் ஞாபக மறதி நோய் வருகிறது. டிமென்ஷியா நோயில் அல்சைமர் ஒரு வகை. அல்சைமர் மறதி நோய் வருவதற்கு, மரபணு குறைபாடு முக்கிய காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு குறைபாடு காரணமாக, மூளையின் பக்கவாட்டு பகுதியிலுள்ள, ரசாயன பொருள் சுரக்காததால், அல்சைமர் ஏற்படுகிறது. குறைந்த படிப்பு படித்தவர்கள், அதிக குண்டாக இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு, அல்சைமர் பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது. உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் ஹார்மோன் மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கு, இந்த நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.

ஞாபக மறதி அல்சைமர் நோயை, முழுமையாக குணப்படுத்தக் கூடியது, குணப்படுத்த முடியாதது என, இரண்டு வகையாக பிரிக்கலாம். வைட்டமின் பி சத்து குறைவு காரணமாக வரும் ஞாபக மறதி நோய், முழுமையாக குணப்படுத்தக் கூடியது. ஆனால், அல்சைமர் மறதி நோயை, முழுவதுமாக குணப்படுத்த முடியாது.

அல்சைமர் அறிகுறிகள் என்ன?

எல்லோருக்கும் மறதி இருப்பது சகஜம் தான். ஆனால், மறதி இருக்கும் எல்லோருக்கும் அல்சைமர் நோய் பாதிப்பு என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. பேச்சில் மாறுபாடு தெரியும், சிலர் திக்கி திக்கி பேசுவர். பெயர்களை மறப்பது, உறவினர், நண்பர்களை யார் என சொல்ல முடியாமல் போய், இறுதியில் தான் யார் என்றே சொல்ல முடியாத நிலை ஏற்படும். பல் துலக்குவது எப்படி என தெரியாமல் போய்விடும். உடை அணிய தெரியாது. வீட்டின் குளியலறை எங்கிருக்கிறது என்பது மறந்து விடும்.

மாய நிலை: சிலருக்கு நோய் முற்றிய நிலையில், இல்லாத ஒன்று, கண் எதிரே இருப்பது போன்று பேசுவர். காதில் ஏதோ சத்தம் ஒலித்து கொண்டிருப்பதை போன்று உணருவர். ஏதோ பிதற்றுவர். மனநோயாளி போல் நடந்து கொள்வர்.

பாதுகாப்பு தேவை: அல்சைமர்  பாதிக்கப்பட்ட பலர், வீட்டிலிருந்து காணாமல் போய்விடுவர். எனவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது அவசியமாகிறது. அவர்களை எங்கும் தனியாக அனுப்பக் கூடாது. அவர்கள் கையில் முகவரி, தொலைபேசி எண் போன்வற்றை எப்போதும் கொடுத்துவிடுவது நல்லது.

அல்சைமர் சிகிச்சை என்ன?:

பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, அல்சைமர் நோய்க்கு சிகிச்சை கிடையாது. ஆனால், இப்போது நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை.

அல்சைமர் தடுக்க வழி என்ன?: 

மூளைக்கு வேலை கொடுத்து, எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம், சோர்வுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கொழுப்பு நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். அல்சைமர் ஒரு நோய் என்றே தெரியாமல், முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு வருவார்கள். ஞாபக மறதி அதிகமாக இருந்தால், ஆரம்ப நிலை யிலேயே டாக்டரிடம் சென்று பரிசோதித்து கொள்வது நல்லது.

டாக்டர் சி. முத்தரசு | நரம்பியல் பேராசிரியர் | ராஜிவ் காந்தி அரசினர் மருத்துவமனை, | சென்னை < நன்றி-தினமலர் | www.dinamalar.com/>

Tamil Jokes: தமிழ நகைச்சுவை

0 comments
ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள்
சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே
நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர்
பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக
இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி,

"இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த
அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?"

"முதலில் செல்வது எனது மனைவி."

"என்ன ஆயிற்று அவருக்கு?"

"எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது"

"இரண்டாவது பிணம்?"

"அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது"

உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், "இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?"

அதற்கு அவர் சொன்னார், "வரிசையில் போய் நில்லுங்கள்"

*
நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது சர்தார். சாப்பிட்ட
பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம்
சொன்னார், "வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால், நீ ரொம்ப
அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த தேங்காய் எண்ணெயை தலைக்கு
தடவினால் உன் தலை முடியும் கருப்பாகி விடும்....." என்று சொல்ல,
குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட
சொல்றீங்க?"

நம் சர்தார்ஜி சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு
டிப்ஸ் கொடுத்தேன்"

*******

இண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம். ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.

சர்தார்ஜி: அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.


காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா
ராமு?
காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன்
பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா?

*******
நீ என்னதான் வீரனா இருந்தாலும் குளிர் அடிச்சா திரும்ப அடிக்க முடியாது.

காசு இருந்தா கால் டாக்சி!! காசு இல்லைன்னா கால் தான் டாக்சி!!!

பல்லு வலின்னா பல்லைப் புடுங்கலாம். ஆனா கண்ணு வலின்னா கண்ணைப் புடுங்க முடியுமா?

இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம். ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது.

பாண்ட் போட்டு முட்டிப்போட முடியும். ஆனா முட்டிப் போட்டு பாண்ட் போட முடியுமா?



யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்

நாலு மணிக்கு எந்திரிச்சு, பிரஷ் பண்ணிட்டு, குளுரா இருந்தாலும் குளிக்கணும். அஞ்சு மணி ஆ‌கி‌விடும்.

அம்மா, அப்பா, அக்கா யாரையாவது எழுப்‌பினா காபியோ டீயோ போட்டுத் தருவாங்க. குடி‌ங்க.

இளையராஜாவோட சாமி பாட்டு வரும். மனச ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. ஆறு மணிக்கு கிளம்புங்க. ஆறரைக்கு யூனிவர்ஸிட்டி போயிரலாம். நீங்கதான் யுனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்!!!

எ‌ன்ன ஐடியா எ‌ப்படி?

*

கடை‌க்கார‌ர்: ம‌ளிக‌ கடை‌யில வேலை பா‌ர்‌‌த்தவனை மரு‌‌ந்து கடை‌யில வேலை‌க்கு வை‌த்தது ரொ‌ம்ப த‌ப்பா போ‌‌ச்சு.
ம‌ற்றவ‌ர்: ஏ‌ன் அ‌ப்படி சொ‌‌ல்‌‌றீ‌ங்க.
கடை‌க்கார‌ர்: எதை எடு‌க்க‌ச் சொ‌ன்னாலு‌ம் எ‌த்தனை ‌கிலோ வே‌ணு‌ம்னு கே‌ட்‌‌கிறா‌‌ன்.

Ilayaraja Wife Passed Away

0 comments
Veteran Music Director Ilayaraja Wife Mrs.rajam Passed Away today at chennai, Ilayaraja Wife Passed Away due to a heart problem, She has been admitted in a private hospital in Chennai but Ilayaraja Wife Passed Away due to a sudden heart Attack agancies said.

May her soul Rest in Peace

தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 61 கடைகளுக்கு இன்று சீல்

0 comments
சென்னை, தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 61 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.

கட்டட விதிமுறைகளை மீறியும், முறையான அனுமதி பெறாமலும் உள்ள கட்டடங்களை கண்காணிப்பதற்கு, குழு ஒன்றை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இதன் தொடர்ச்சியாக, விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சியையும், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தையும் அந்தக் குழு கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில், சென்னையின் முக்கிய வர்த்தகப் பகுதியான தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டபட்ட சுமார் 61 கட்டடங்களுக்கு சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், பல கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிகாரிகளால் சீலிடப்பட்ட கடைகளுள் சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்க மாளிகை, சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடை, ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சின் ஒரு கடை,பாலு ஜுவல்லர்ஸ், ஸ்ரீதேவி கோல்டு கவரிங், ரத்னா ஸ்டோர்ஸ் ஆகியவையும் அடங்கும்.

இந்த அதிரடி நடவடிக்கைக்கு கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தி.நகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கையின் பின்னணி...

கடந்த 2006-ல் மூத்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

அதில், சென்னை நகரின் தியாகராய நகர், பாரிமுனை, மைலாப்பூர் போன்ற இடங்களில் விதிகளை மீறி வணிக வளாகங்கள், அடுக்குமாடி கட்டங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிடக்கோரியும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக, சி.எம்.டி.ஏ. பொறியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவை நியமித்தது.

தியாகராய நகரிலுள்ள பல கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்தது, கண்காணிப்புக் குழுவின் ஆய்வில் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, அவ்வாறு விதிமுறைகள் மீறிய கட்டடங்களை இடிப்பதற்கு 2007-ல் முறைப்படி நோட்டீஸ் அனுப்பி, அவற்றை இடிக்கவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், கட்டடங்களை இடிப்பதை நிறுத்தும் வகையில் முந்தைய ஆட்சியில் அவசர சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. கட்டங்களை இடிக்கும்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் சட்டம் கூறியது.

இதனிடையே, சி.எம்.டி.ஏ. சார்பில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக, விதிமுறைகளை மீறிய கட்டடங்களை இடிக்கும் நடவடிக்கை முடக்கப்பட்டது.

பின்னர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுடன், மாநில அரசின் அவசர சட்டம் காலாவதியானதை அடுத்து இந்த வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டங்களை இடிக்க கடந்த ஜுலை மாதம் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப கண்காணிப்பு குழு உத்தரவிட்டது. அதன்படி, தியாகராய நகரில் விதியை மீறி கட்டப்பட்ட கட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். எனினும், கடந்த மாதம் வரை அடுத்தகட்ட எடுக்கப்படவில்லை. இதற்கு, அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலும் ஒரு காரணம்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதனால், உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், சி.எம்.டி.ஏ.யும், மாநகராட்சியும் இணைந்து இப்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

MIcrosoft Mango: இந்தியாவில் மைக்ரோசாப்ட் மாங்கோ

0 comments
விண்டோஸ் மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை MIcrosoft Mango மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. இதற்கு குறியீட்டுப் பெயராக "மாங்கோ' MIcrosoft Mango என மைக்ரோசாப்ட் பெயரிட்டி ருந்தது. இந்த சிஸ்டம் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்துள்ளது.

விண்டோஸ் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் "மாங்கோ' MIcrosoft Mango தரும் இன்டர்பேஸ் மிக எளிதானதாகவும், பயனாளர் விரைவாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இதனை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலாம். இதில் வழக்கமான ஐகான்களுக்குப் பதிலாக, ஓடுகள் போல அப்ளிகேஷன்கள் காட்டப் படும். போனில் புதியதாக இணைக்கப் படும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இசை பைல்களுக்கும் இதே போல ஓடுகள் பாணியில் ஐகான்களை உருவாக்கலாம்.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மொபைல் போனுக்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 தரப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டரில் பெறும் இணைய தேடல் அனுபவத்தினை இதில் பெறலாம். அத்துடன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்கலாம். வேர்ட், எக்ஸெல், ஒன் நோட் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு இதில் தரப்பட்டுள்ளது.

இந்த சிஸ்டம் மூலம் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவினை பயனாளர்கள் எளிதாக அணுக முடியும். இதனால், தங்கள் பைல்களை ஸ்கை ட்ரைவில் சேவ் செய்து வைக்க முடியும். மேலும் ஆபீஸ் 365 மற்றும் ஷேர் பாய்ண்ட் தளங்களுடன் இணைக்கவும் இயலும்.

சமூக இணைய வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தரப்பட்டுள்ளது. டெக்ஸ்ட் மற்றும் இந்த தளங்களுடன் ஒரே நேரத்தில் இயங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் இன் பாக்ஸ்களை அமைத்து இயக்க முடியும். வாய்ஸ் டு டெக்ஸ்ட் மற்றும் டெக்ஸ்ட் டு வாய்ஸ் இருப்பதால், கரங்களைப் பயன்படுத்தாமல் செயல்பட முடியும்.

பிங் தொடர்பு கொண்டு ஒரு முகவரியைத் தேட முடியும். நாம் செல்ல வேண்டிய திசைகளை அறிய முடியும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஏறத்தாழ 33,000 அப்ளிகேஷன்கள் தயாரிக்கப்பட்டு இணைய தளத்தில் கிடைத்து வருகின்றன.ஸ்மார்ட் போன் சந்தையில் தன் பங்கினை இழந்து வரும் நோக்கியா நிறுவனம், விண்டோஸ் சிஸ்டம் மூலம் அதனைப் பெற்றுவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான ஸ்மார்ட் போனை இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்நிலையில், எச்.டி.சி. (ரேடார் மொபைல் போன் - விலை ரூ.23,990) மற்றும் ஏசர் (அல்லக்ரோ மொபைல் - விலைரூ.16,000 என்ற அளவில் இருக்கலாம்.)நிறுவனங்கள், விண்டோஸ் மாங்கோ ஆப்பரேட்டிங் MIcrosoft Mango சிஸ்டத்துடன் கூடிய மொபைல் போன்களை, இந்த சிஸ்டம் அறிமுகப் படுத்தும்போதே விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. சாம்சங் தன் ஆம்னியா டபிள்யூ ஸ்மார்ட் போனை விண்டோஸ் சிஸ்டத்துடன் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி வருகின்றன. இதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என எடுத்துக் கொண்டால், நோக்கியாவின் சிம்பியன் 68% பங்கினைக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் படா 15%, ஆண்ட்ராய்ட் 10% கொண்டுள்ளன. மாங்கோ சிஸ்டத்தினால் MIcrosoft Mango, இந்நிலை தலை கீழாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

சமையலறை ‘சத்தாக’ இருந்தால் கட்டிலறை ‘கலகலக்கும்’!

0 comments
மனித வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒன்று பாலுணர்வு. இயற்கையாக தோன்றும் இந்த உணர்வை ஆரோக்கியமானதாக மாற்றுவதில்தான் இருக்கிறது மனிதர்களின் வெற்றி. தம்பதியர்களிடையே ஆரோக்கியமான உறவு மேம்பட இந்த பாலுணர்ச்சியே முக்கிய காரணியாக இருக்கிறது. இதனை சிறப்பாக வெளிப்படுத்த நமது சமையலறையே முக்கிய சாதனமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர் வல்லுநர்கள்.

ஒருவரின் ஆரோக்கியம், மகிழ்ச்சி, இளமையை தக்க வைப்பதில் தாம்பத்யத்தின் பங்கு முக்கியமானது என்று தெரிவித்துள்ளார் ஹார்மோன் மற்றும் இளமையியல் சிறப்பு வல்லுநர் சிசில்லா டிரிகியர். லண்டனின் மருத்துவமனை வைத்துள்ள அவர் 25 ஆண்டுகளாக தனது மருத்துவமனைக்கு வந்த தம்பதியர்களை ஆய்வு செய்து இந்த உண்மையை கண்டறிந்ததாக குறிப்பிட்டுள்ளார். தினசரி தாம்பத்ய உறவில் ஈடுபடும் தம்பதியர் இளமையாகவும், ஆரோக்கியமாகவும், உடல் வனப்புடனும், மகிழ்ச்சியாகவும் இருப்பது தெரியவந்ததாக டெய்லி மெயில் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

ஆரோக்கிய தெர்மா மீட்டர்

பாலுணர்ச்சியும், அது தொடர்பான ஆர்வமுமே நமது உடல் நலத்தை அளக்கும் தெர்மா மீட்டர் என்று டிரிகியர் குறிப்பிட்டுள்ளார்.

பாலுணர்ச்சியை தூண்டுவது என்பது அவர்கள் உட்கொள்ளும் உணவு முறையை சார்ந்ததாக இருந்துள்ளது. சத்தான உணவு உடல் நலத்திற்குத் தேவையான ஹார்மோன்களை சிறப்பாக செயல்பட வைப்பது தெரியவந்துள்ளது. அதன் மூலம் பாலுணர்ச்சியை தூண்டுவதற்கான ஹார்மோன்களின் சுரப்பு அதிகரித்தது கண்டறியப்பட்டதாக மருத்துவர் கூறியுள்ளார். இதன் மூலமே தினசரி தாம்பத்ய உறவில் ஈடுபட முடிந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தினசரி உறவு என்பது உடற்பயிற்சி செய்வதைப்போல அவசியமானது என்று கூறும் மருத்துவர், இதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு இழந்த இளமையை மீட்டெடுக்க முடியும் என்கிறார். அதற்கான முக்கியமான மூன்று வழிமுறைகளை அவர் தெரிவித்துள்ளார்.

மூளைக்கு உற்சாகம்

எந்த செயலுமே முதலில் தொடங்குவது மூளையில் இருந்துதான். மனித உறுப்புக்களில் மிகப்பெரிய பாலுணர்ச்சியை தூண்டக்கூடிய ஆர்கன் மூளைதான் என்பதை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனும், ரசாயனமாற்றமும்தான் பாலுணர்வின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்கிறது. அதன் மூலம்தான் உறவின் போது வெளிப்படும் காதல், அளவுகடந்த கற்பனா சக்தியுடன் துணையை கவர மேற்கொள்ளும் சாகசம், அதனால் பெண்கள் அடையும் உச்சநிலை ஆகியவை ஏற்படுகின்றன. இவை எல்லாம் நாம் உண்ணும் உணவில்தான் இருப்பதாக தெரிவிக்கின்றார் மருத்துவர்.

எனவே முதலில் உண்ணும் உணவுமுறையில் அக்கறை கொள்ளவேண்டும். இதன் மூலம் சக்தியானது நரம்புகள் வழியே மூளையை அடைகிறது. சிறப்பாக செயல்பட முடியும் நம்பிக்கை அதிகரிக்கிறது. ஆரோக்கியமான உறவில் ஈடுபட மூளையானது தூண்டுகிறது.

ஹார்மோன்களின் ஒத்துழைப்பு

பாலுணர்ச்சியை தூண்டுவதில் ஹார்மோன்களின் பங்கு அவசியமானது. அவைதான் ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கையை சீராக வைக்க உதவுகிறது. இதில் மூன்று ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஈஸ்ட்ரோஜென். டெஸ்ட்டிரோஜென், ஆகிய ஹார்மோன்கள் சிறப்பாக செயல்படுவதை சரிவிகிதமாக வைப்பதில் மீன், இறைச்சி, ஆகியவற்றில் உள்ள நல்ல கொழுப்புகà ��் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை ஹார்மோன்களை தூண்டி அவற்றை சீரான முறையில் சுரக்கச்செய்கின்றன. புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் அவசியம் என்று தெரிவிக்கிறார் டிரிகியர்.

சக்தியின் ரகசியம்

ஆரோக்கியமான உறவு உடலின் சக்தியையும், உற்சாகத்தையும் அதிகரிக்கும். அதற்கு ஆரோக்கியமான அவசியமான உணவுகள் உதவுகின்றன என்கின்றனர் வல்லுநர்கள். இதன் மூலம் மனித வளர்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோன் (Human Growth Hormone (HGH).) சுரப்பு சீராவதோடு பாலுணர்ச்சியை தூண்டும் ஹார்மோன்கள் சுரப்பினை அதிகரிக்கச்செய்கிறது. தொடர்ச்சியான ஆரோக்கிமான உறவுக்கு புரதச்சத்து நிறைந்த கோழி இறைச்சி, மீன், பன்றி இறைச்சி ஆகியவை உதவுகின்றன என்று கூறுகின்றார் மருத்துவ

Karunaikkizanku Masiyal: கருணைக் கிழங்கு மசியல்

0 comments
கருணைக் கிழங்கு மசியல் தேவையானவை

கருணைக்கிழங்கு - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 2
புளி - நெல்லிக்காய் அளவு
பச்சைமிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
கடுகு, பெருங்காயம் - தாளிக்க
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

கருணைக் கிழங்கு மசியல் செய்முறை:

புளியை ஒரு கப் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். கருணைக் கிழங்கைக் கழுவி நன்றாக வேக வைத்து ஆறிய பிறகு தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பிறகு வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

அவை வதங்கியதும், மசித்த கருணைக்கிழங்கு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து புரட்டி புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் வற்றியதும் சுருள சுருள கிண்டி இறக்கவும்.

கருணைக் கிழங்கு மசியல் குறிப்பு:

எண்ணெய் மிதந்து வருமளவு கிண்ட வேண்டும்.

செரிமானக் கோளாறு, மூலம் நோய் உள்ளவர்களுக்கு ஏற்றது இந்த கருணைக் கிழங்கு மசியல்.

புளித்தண்ணீருக்கு பதில் புளித்த தயிர் சேர்த்தும் செய்யலாம். இந்த மசியல் புளி சேர்த்து தயாரிப்பதால் இரண்டு மூன்று நாட்களுக்குக் கூட நன்றாக இருக்கும்.

கீதா தெய்வசிகாமணி

Don't Worry about Autism: ஆட்டிசம் – வேதனை வேண்டாம்

0 comments
முயன்றால் முடியும் ஏன், எதற்கு, எப்படி என புரியாத நோய்களில், ஆட்டிசமும் (Autisam) ஒன்று. இதை நோய் என சொல்வது சரியாக இருக்காது. இது ஒரு குறைபாடு. மூளையில் ஏற்படும் குறைபாடு. ஆனால், இக்குறைபாட்டை பெரிய அளவில் சரி செய்ய முடியாது என்பது வேதனைக்குரிய விஷயம்.

குழந்தை இப்படி பிறந்துவிட்டதே' என வேதனைப்பட்டு, பல பெற்றோர் தங்கள் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்வதோடு, குழந்தையின் எதிர்காலத்தையும் பாழாக்கி விடுகின்றனர். அதற்கு பதிலாக, விடா முயற்சியுடன் போராடினால் வெற்றி பெற முடியும். வேதனைப்படும் அளவுக்கு ஆட்டிசம் குறைபாடு என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என இனி பார்ப்போம் .

ஆட்டிசம் என்றால் என்ன?

ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடாகும். மூளையின் முக்கிய செயல்பாடுகளாகிய பேச்சு திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கும் நோய். மற்ற குழந்தைகளை போல் பேச முடியாது, நடக்க முடியாது, நாம் யார், எங்கு இருக்கிறோம் என்ற விவரங்கள் தெரியாது. இதனால், அவர்களால் மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கை வாழ முடியாது. ஆட்டிசம் பிறவி குறைபாடாக இருந்தாலும், பிறந்த உடனே கண்டுபிடிக்க முடியாது. 6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும். இதுகுறித்து விழிப்புணர்வு இல்லாததால், பலர் 3 வயதுக்குள் கண்டுபிடிக்க தவறிவிடுகின்றனர். 3 வயதுக்குள் கண்டுபிடித்தால் உரிய பயிற்சி அளித்து, ஓரளவு குறைபாட்டை சரி செய்துவிடலாம். எதனால், ஆட்டிசம் குறைபாடு ஏற்படுகிறது என இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகள் தான் இக்குறைபாட்டால் 4 மடங்கு பாதிக்கப்படுகின்றனர். இதற்கான காரணமும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. 10 ஆயிரம் குழந்தைகளில், 5 பேருக்கு இக்குறைபாடு ஏற்படுகிறது.

அறிகுறிகள்

* யார் முகத்தையும் பார்க்காதிருத்தல்.
* தனியாக இருப்பதை விரும்புதல்.
* காது கேளாது போல் இருத்தல்.
* காரணமின்றி மற்றவர்களை தாக்குதல்.
* அதிக வலியை தாங்கிக் கொள்ளுதல்.
* கை, கால்களை வேகமாக அசைத்து வித்தியாசமாக சத்தம் போடுதல்.
* தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்ளுதல்.
* பேச்சுத்திறன் குறைதல்.
* விரல் சூப்புதல், நகம் கடித்தல்.
* பதட்டநிலை.
* அடம் பிடித்தல்.
மற்ற குழந்தைகளிடம் எப்படி வேறுபடுகின்றனர்?

மற்ற குழந்தைகளைப் போல் அல்லாமல் இக் குழந்தைகளின் பார்வை, கூரையையே வெறித்து பார்ப்பது போல், ஒரே இடத்தில் நிலைத்திருக்கும்.நாம் ஒருவரிடம் பேசும் போது கண்ணைப் பார்த்து பேசுவது போல், ஆட்டிசம் குழந்தைகள் கண்ணைப் பார்த்து பேசாது. கைகளை உதறிக் கொண்டே இருக்கும்.மற்ற குழந்தைகளை நாம் கட்டி அணைப்பது போல், இக்குழந்தை�® �ளை கட்டி பிடித்தால் கோபம் வரும். சில குழந்தைகள் மூர்க்கமாக நடந்து கொள்வர். தண்ணீர் வேண்டும் என்றால் வாய் திறந்து கேட்காமல், சைகை மூலம் கேட்பார்கள். சில குழந்தைகள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். பாத்ரூம் செல்வதற்கு தண்ணீர் வேண்டும் என்பார்கள், தண்ணீர் வேண்டும் என்றால் பாத்ரூம் போக வேண்டும் என்பார்கள். சில குழந்தைகள் தனக்கு தானே பேசிக் கொண்டிருப்பார்கள். வேறு சில குழந்தைகள் திடீரென சிரிக்கும், சில குழந்தைகள் திடீரென அழும். எதற்காக சிரிக்கிறார்கள், எதற்காக அழுகிறார்கள் என தெரியாது. வலி, சிறிய அளவில் இருந்தாலும் "ஓ' என அலறும். சில குழந்தைகள் கடும் வலி இருந்தாலும் வலியை உணர்வதில்லை.

ஆட்டிசம் குறைபாடு இருந்தால் செய்ய வேண்டியது என்ன?

நம் வாழ்வின் அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான், ஆட்டிசம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் முதல் சிகிச்சை. ஆம். இவர்களுக்கு பயிற்சி தான் சிகிச்சை.

எதை கற்றுக் கொடுப்பது:

ஏற்கனவே சொன்னது போல், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட எல்லா குழந்தைகளுக்கும், ஒரே மாதிரியான பிரச்னை இருக்காது. எனவே, நம் குழந்தைக்கு என்ன விதமான குறைபாடு உள்ளது என, முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எது வேண்டும், எது வேண்டாம் என சொல்ல தெரியாது. உதாரணமாக, சிறுநீர் கழிக்க வேண்டும் என, உணர்ந்து சொல்ல தெரியாது. ஒவ்வொர ு குழந்தைக்கும், ஒவ்வொரு விதமான பிரச்னை இருக்கும் என்பதால், எல்லா குழந்தைகளுக்கும் பொதுவான பயிற்சி முறைகளை வகுக்க முடியாது. ஒவ்வொரு குழந்தையையும் சரியாக புரிந்து கொண்டு, அதற்குகேற்ப பயிற்சிகளை வடிவமைக்க வேண்டும். அவர்களது செயல்களால் கோபப்படாமல், அவர்களை புரிந்து கொண்டு, பொறுமையாக பயிற்சி அளிக்க வேண்டும். இக்குழந்தைகள் வேண்டுமென்றே இதை செய்வதாக கருதி, மிரட்டக் கூடாது. இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எக்காரணத்தை கொண்டும் எதற்கும் கட்டாயப்படுத்தக் கூடாது. இவர்களுக்கு முதலில் கல்வி என்பது, அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுப்பது தான்.
ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லிக் கொடுக்கும் போது, அவர்கள் அதைப் புரிந்து கொண்டு அதன்படி நடப்பர். மற்றக் குழந்தைகளை போல் இவர்களால், பாடங்களை படிக்க முடியாது. எனவே இவர்களை, சிறப்பு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கலாம். அங்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் கற்றுக் கொடுப்பது எளிதாக இருக்கும்.
வழக்கமான கல்வி படித்து, மற்றவர்களை போல் வேலைக்கு செல்ல முடியாது என்பதால், இவர்களுக்கு சிறப்பு தொழில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தையல் கற்றுக் கொடுப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கலாம். இக்குழந்தைகள் சில அற்புதத் திறமைகளை கொண்டிருப்பர். அதைக் கண்டுபிடித்து ஊக்கப்படுத்த வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்கான பயிற்சிகளை அளிக்க வேண்டும். வண்ணம் தீட்டுவது, பேனா, பென்சில் கொடுத்து ஏதாவது கிறுக்க செய்வது என, பல்வேறு பயிற்சிகள் மூலம் அவர்களை அன்றாட வாழ்க்கைக்கு தயார் படுத்த வேண்டும்.

உணவு: இக்குழந்தைகளுக்கென தனி உணவு தேவையில்லை என்றாலும், பால், கோதுமை, பிஸ்கட், சாக்லேட், பாஸ்ட்புட் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அரிசி பால் எடுத்து சமைத்து கொடுக்கலாம். முடிந்தளவு அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். மருந்து இல்லை: இந்த நோய்க்கு மருத்துவ சிகிச்சை இல்லை. ஆனால், மூர்க்கத்தனமாக செயல்படும் குழந்தைகளை அமைதிப்படுத்த சில மருந்து கொடுக்கப்படுகின்றன.

பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

இக்குழந்தைகளுக்கு பெற்றோரின் பங்கு முக்கியம். அவர்களால் தான், இக்குழந்தைகளை இயல்பு வாழ்க்கைக்கு அழைத்து வர முடியும். இது ஒரு குறைபாடு என உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை அவமானம் என கருதக் கூடாது. நாம் நம் குழந்தையை ஏற்று, அதற்குரிய முக்கியத்துவம் கொடுத்தால் தான், இச்சமூக மக்களும் மரியாதை கொடுக்க முன் வருவர். நமது இன்ப, துன்பத்தை அவர்களால் உணர முடியாது. ஒரு துயரமான சூழலில் சிரித்துக் கொண்டிருப்பர். இதற்காக, அவர்களை வெறுக்கக் கூடாது. மூளை குறைபாட்டால்தான், அவர்கள் அப்படி இருக்கின்றனர் என புரிந்து கொள்ள வேண்டும். அவர்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள்; அப்போது தான் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குறைந்த எடையுடன் இருந்தால் உஷார் குறைந்த எடையுடன் அல்லது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம். குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகளில், 5 சதவீத குழந்தைகள், ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இயல்பான எடையுடன் பிறக்கும் குழந்தைகளில்,
1 சதவீத குழந்தைகள் ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என, சமீபத்திய ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறைந்த எடையுடனோ அல்லது குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளை பரிசோதிப்பது அவசியம்.

ஸ்ரீதி கண்ணன், ஸ்வயம் சிறப்பு கல்வி மையம், தி.நகர், சென்னை.

Worth of the waste materials from Home: விணாகும் பணத்தின் (பொருட்களின்) மதிப்பு

0 comments
நீங்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவரா? அப்படியானால் உங்களுக்கே தெரியாமல் 150 ரூபாய் குப்பைக்கு போகிறது. அது எப்படியென்று தெரியுமா? நீங்கள் உங்கள் பயன்பாட்டுக்காக வாங்கிய பெர்ப்யூம் அடங்கிய ஈயா கேன், கண்ணாடி பாட்டில்கள், தீர்ந்து போன ரீபிள்கள், டப்பாக்கள் என்று அவை தீர்ந்து போன பிறகு குப்பைக்கு போகிறதே...அது தான் உங்கள் பணம். மறைமுகமாக நீங்கள் உங்கள் பணத்தை குப்பையில் தூக்கி எறிகிறீர்கள்.

சரி...இப்படி காலியான பாட்டில், டப்பா,கண்ணாடி,பாலிதீன், காகிதங்கள் என்று அத்தனையையும் வீட்டின் மூலையில் ஒரு சாக்கில் சேமித்து வைத்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர் கடையில் போட்டால் எனன விலைக்கு போகும் என்று ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். அப்போது தான் தெரியும். இவ்வளவு நாளாக நீஙகள் எவ்வளவு பணத்தை இழந்திருக்கிறீர்கள் என்று!

பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று அரசு தடைவிதித்தாலும், நம் அன்றாட வாழ்வில் பாலிதீன் பைகள் இணைந்து விட்டன. இந்த தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன.

இப்போது இந்த பாலிதீன் பைகளை எல்லாம் ஒன்று சேர்த்து இயந்திரத்தில் போட்டு அரைத்து சிறுசிறு துகள்களாக ஆக்கி,பின்னர் வெப்பத்தில் உருக்கி ரோடு போட பயன்படுத்துகிறார் மதுரையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.

 

இப்போது...நாம் தூக்கி எறியும் இது போன்ற குப்பைகளின் மதிப்பு பற்றி பார்க்கலாம்.

தரமான பாலிதீன் பைகளில் இருந்து பிளாஸ்டிக் ஹோஸ்,பிளாஸ்டிக் டப்பாக்கள் தயாரிக்கிறார்கள். அதாவது சின்டெக்ஸ் தொட்டி போன்றவை தொடங்கி பைப்புகள் வரை தயாரிக்கிறார்கள். நாம் தூக்கி போடும் பாலிதீன் பைகளை இது போன்ற பொருட்கள் தயாரிக்க வாங்கிக் கொள்கிறார்கள். ஆக..பாலிதீன் பைகளை சேர்த்து வைத்தால் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
பிளாஸ்டிக்கில் 'கடக்' பிளாஸ்டிக் என்று ஒரு வகை. அதாவது கையால் உடைத்தால் உடைந்து போகும் ரகம். இது கிலோ ஒன்றுக்கு விலை 4 ரூபாய். இந்த பிளாஸ்டிக்கை இரண்டாம் தர பிளாஸ்டிக் என்கிறார்கள். இந்த வகை பிளாஸ்டிக்குகள் பெயிண்ட் பிரஷ் கைப்பிடி, குடம் தயாரிக்க போகிறது.
நீஙகள் டிவி.மிக்சி என்று பொருட்கள் வாங்கும் போது அட்டையில் சுற்றி பேக்கிங் செய்து வரும். இந்த வகை அட்டை பெட்டிகள் கிலோ 3 ரூபாய்க்கு போகிறது. இந்த அட்டைகள் மீண்டும் புதிய பேக்கிங் அட்டைகள் செய்ய பயன்படுகிறது.
சிகரெட் பெட்டிகள் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலை தருகிறார்கள். இந்த சிகரெட் பெட்டிகளை மறுசுழற்சி செய்து மீண்டும் அட்டைகள், பேப்பர் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.
பிளாஸ்டிக் வயர்களை துண்டுதுண்டாக கிடந்தால் அவற்றையும் குப்பையில் போடுவோம். ஆனால் அவற்றின் உள்ளே உள்ள காப்பர் கம்பியின் விலை கிலோ ரூ.80 க்கு வாங்கிக் கொள்கிறார்கள்.
தேங்காயை எடுத்து சட்னி அரைத்து விட்டு சிரட்டையை தூக்கி எறிந்து விடுவோம். இது போன்ற சிரட்டையின் மதிப்பு 1 டன் ரூ.2500க்கு விலை போகிறது. இந்த சிரட்டையை வைத்து செங்கல் சூளையில் விறகுக்கு பதிலாக செங்கலை சுட பயன்படுத்துகிறார்கள். இது தவிர கொசுவர்த்தி, தயாரிக்கவும் சிரட்டை பயன்படுகிறது.
பால் கவர்கள் கிலோ ரூ.10 முதல் 15 வரை கொடுத்து வாங்கி கொள்கிறார்கள்.
தகரம் கிலோ 4 ரூபாய்க்கும், பழைய இரும்பு கிலோ 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.
வீட்டில் தினமும் டீ தயாரித்து சாப்பிடுகிறீர்களா? வீணாகும் டீத்தூளை அப்படியே சேர்த்து வைத்திருங்கள். இவற்றை வைத்து உரம் தயாரிக்கிறார்கள். காபி தூளிலிருந்தும் தான் இப்படி உரம் தயாரிக்கிறார்கள். ஆக..வீணான இந்த டீ.காபி தூள்களில் விலை 10 கிலோவுக்கு 5 ரூபாய் தருகிறார்கள்.
பெட்பாட்டில் வாங்கி விட்டு தூக்கி போடாதீர்கள். வீணான பெட்பாட்டிலின் விலை கிலோ 8 ரூபாய்.
பழைய வெள்ளை பேப்பர் கிலோ ஒன்றுக்கு 6 முதல் 10 வரை கிடைக்கும்.
அரசு அலுவலகங்களிலிருந்து வரும் பேப்பர் கழிவுகள் மற்றும் பிரிண்டிங் பிரஸ் கழிவுகளிலிருந்து வெள்ளை பேப்பர் கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் பேப்பர்கள் தயாரிக்கிறார்கள்.
அலுமினியம் பாயில் பேப்பர்( உணவு பொருட்களை பார்சல் செய்ய பயன்படுவது) கிலோ 18 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். இதை மறுசுழற்சி செய்து அலுமினிய பேப்பராக மீண்டும் செய்கிறார்கள்.
தலைமுடி கிலோ 1 ரூபாய் முதல் 2 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
நெர்லான் செருப்புகள் கிலோ 8 ரூபாய்க்கு விலை போகிறது.
வீணான டியூப்லைட் ஒன்றுக்கு 1 ரூபாய் விலை நிர்ணயித்து வாங்குகிறார்கள்.
ரப்பர் கழிவுகள்,டயர்களை மறுசுழற்சி செய்து ரப்பர் பொருளாக தயாரிக்கிறார்கள். எனவே வீணான டயர்கள், டியூப்களை வைத்திருங்கள். இவற்றை கிலோ 5 முதல் 10 வரை தருகிறார்கள்.
ஆக...இனி எதையும் வீட்டுக்கு வெளியே தூக்கி போடும் போது ஒரு முறை சிந்தியுங்கள். அது உங்கள் பணம். அப்படியே வைத்திருந்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர்காரரிடம் கொடுங்கள். அவர் உங்களுக்கு ரூபாய் நோட்டுக்களை திருப்பி தருவார். இந்த பழக்கத்தை பார்க்கும் உங்கள் குழந்தைகளும் எதையும் வீணாக்காமல் இருக்க கற்றுக் கொள்வார்கள்.

இத்துடன் ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்தி.

நீங்கள் ஏன் குப்பைகளை வீணாக ரோட்டில் எறியக்கூடாது? பேட்டரி செல், பெயிண்ட் டப்பாக்கள்,பினாயில் பாட்டில், பேனாரீபிள் உள்பட சில கழிவுகளை அபாயகரமான கழிவுகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.காரணம், இவை பூமியில் தூக்கி எறியப்படும் போது, மக்காமல் அப்படியே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும் போது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதாவது பால்பாயிண்ட் பேனாரீபிளில் பாலிவினைல் குளோரடு என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இந்த ரசாயனம் மண்ணை கடுமையாக பாதிக்கிறது. நிலத்தடி நீரை பூமிக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றன.

வீட்டில் ப்யூஸ் ஆன டியூப்லைட்டுகளை குப்பையில் போடும் போது அதை சிறுவர்கள் டமார் என்று கல்லை தூக்கி போட்டு உடைப்பார்கள். இந்த ட்யூப்லைட்டை உடைக்கும் போது வெளிப்படும் பாதரசம் பூமியில் 300 அடி தூரம் வரை போகுமாம்.இந்த பாதரசம் செடி,கொடிகள்,பயிர்கள் வளர பூமியில் இருக்கும் நைட்ரஜன் சத்தை இல்லாமல் ஆக்கி விடுமாம்.

மக்களை பற்றி எதுவும் அக்கறை இல்லாத சில மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிரிஞ்ச் மூலம் ஊசி போட்டு விட்டு அந்த சிரிஞ்சுகளை அப்படியே குப்பையில போடுகிறார்கள். சில மோசமான குணம் கொண்ட தொழில் நபர்கள் இந்த வகையான பிளாஸ்டிகள் சிரிஞ்சுகளை வெப்பத்தில் எரித்து தண்ணீர் குடங்கள் செய்வது தான் கொடுமை.

இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் தற்போது பெய்த மழையில் நகரின் பல சாக்கடைகள் அடைத்துக் கொண்டதால் த்ான் தண்ணீர் முறையாக வெளியேற வழியில்லாமல் இந்த குப்பைகள் அடைத்துக் கொண்டதும் ஒரு காரணம்.

ஆக...இனியாவது குப்பைகளை வீண் என்று தூக்கி எறியும் முன் ஒரு நொடி சிந்திப்ப்போம். இதை உங்கள் வீட்டில் இருந்தே தொடங்குங்கள். நாளை உங்கள் குழந்தை எதையும் வீணாக்க துணியாது. காசின் மதிப்பை எதிர்கால சந்ததிக்கு கற்றுக் கொடுக்க இதுவும் ஒரு ஐடியா!

You are also an Miss Universe: நீங்களும் உலக அழகிதான்…

0 comments
நீங்களும் உலக அழகிதான் :

அழகு என்பது முகத்தில் மட்டுமே இருப்பதாக கருதி அதை மெருகேற்ற பல்வேறு ஒப்பனை சாதனங்களை பயன்படுத்துகிறார்கள். முக அழகு தேவைதான். ஆனால் அது மட்டுமே முழு அழகாகிவிடாது. அதையும் தாண்டி நம் ஆன்மாவை கவரக் கூடிய உள்அழகும் இருக்கிறது. உள் அழகுதான் நமக்குள்ளே நம்மை அழகுப்படுத்தி, அடுத்தவர்களுக்கும் நம்மை அழகாக்கி காட்டுகிறது. அவைகளைப் பற்றி பார்க்கலாம்.

புன்சிரிப்பு:

உங்கள் முகத்தில் எப்போதும் புன் சிரிப்பை தவழ விடுங்கள். அதை மிஞ்சிய அழகு `மேக்அப்' எதுவும் கிடையாது. பெண்களின் புன்சிரிப்பு, மலர்ந்திருக்கும் ரோஜா இதழ்களைப் போன்று மென்மையாக அனைவரையும் வசீகரிக்கக் கூடியது. பெண்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்சினைகளாலோ, வேலைப்பளுவாலோ சிரிப்பை தொலைத்துவிடக்கூடாது. அழகாக இரு�® �்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு பெண்ணும் புன்சிரிப்பை ஒரு பயிற்சியாக முகத்திற்கு தர வேண்டும். நாளடைவில் அது அப்படியே முகத்தில் ஒட்டிக்கொள்ளும். சிரிப்புள்ள முகம் எப்போதும் ஒளிவீசும். ``மேக்அப்'' போடாவிட்டாலும் அந்த முகம் அழகில் ஜொலிக்கும்.

இன்சொல்:

எல்லோருடைய இதயத்திற்கும் இதம் தருவது இன்சொல். இந்த குணம் உங்களிடம் இருந்தால் கோபம் உங்களிடம் வந்து குவியாது. கடுஞ்சொல் உங்களை மட்டுமல்ல, உங்களை சார்ந்தவர்களையும் தாழ்த்திவிடும். இன்சொல் உங்களை மேலும் அழகாக்கிவிடும். பொறுமையான பெண்கள் மற்றவர்களை எளிதில் ஈர்த்து விடுவார்கள். கடுமையான சொற்களை பேசும்போது சற்று கண்ணாடி யை பாருங்கள். உங்கள் முகம் உங்களுக்கே பிடிக்காது. பிறகு எப்படி அடுத்தவர்களுக்கு நீங்கள் அழகாகத் தெரிவீர்கள்?

ஒவ்வொரு பிரச்சினையையும் எதிர்கொண்டு சமாளிக்கும் திறன் உங்களிடம் இருந்தால் சோகம் அண்டாது. அழுகையும் தோன்றாது. அடிக்கடி அழுவது, கண்களில் எப்போதும் நீரை தேக்கி வைத்துக் கொண்டு இருப்பது உங்களை அழகாகக்காட்டாது. அலங்கோலமாக காட்டி விடும்.

பாசிடிவ் திங்கிங்:

வாழ்க்கையில் நம்பிக்கை இருந்தால், எண்ணங்களில் நம்பிக்கை வரும். நம்பிக்கையான எண்ணங்கள்தான் `பாசிடிவ் திங்கிங்'. நம்பிக்கையான எண்ணங்கள் மனதிற்கு மகிழ்ச்சியை தந்து, முகத்திற்கு அழகைத்தரும். முகமே மெருகுபெறும். நம்பிக்கையற்ற எதிர்மறை சிந்தனைகள் உங்களை சோர்வடையச் செய்து வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கச் செய்யும்.

உடை நேர்த்தி:

சரியான உடைகளை தேர்ந்தெடுத்து, அவைகளை நேர்த்தியாக அணிந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அது உங்களை மேலும் அழகாக்கும். உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ற சரியான உடைகளை அணிய தெரிந்துகொள்ளுங்கள். நிறம், உயரம், இவற்றிற்கேற்ற உடைகளை தேர்வு செய்து அணிவதின் மூலம் நீங்கள் ஒரு முழுமையான அழகைப் பெறலாம்.

தன்னம்பிக்கை:

தோல்வி எல்லோருக்கும் உண்டு. உங்களுக்கும் உண்டு. எந்த தோல்வியும் உங்களை பலவீனமாக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி பார்த்துக்கொண்டீர்கள் என்றால் உங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது என்று அர்த்தம். தன்னம்பிக்கை என்பது தீபத்தை போன்றது. அது உங்கள் மனதில் தோன்றும் போது உங்கள் முகம் மட்டுமல்ல, வாழ்க்கையும் பிரகாசிக்கும். அப்போது உங்களுக்குள்ளே நீங்கள் உலக அழகி ஆகி விடுவீர்கள்.

Chicken Varuval: பசுமை கோழி வறுவல்

0 comments
பசுமை கோழி வறுவல்: 

தேவையான பொருட்கள்

கோழிக்கறி - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகாய் - 6
கொத்தமல்லி இலை - 1/2 கட்டு
புதினா - 1/2 கட்டு
தேங்காய் துருவியது - 1/2 மூடி
தயிர் - 1/2 குழிக்கரண்டி
கசகசா - 1 டீஸ்பூன்
உப்பு எண்ணெய் - தேவைக்கேற்ப

பசுமை கோழி வறுவல் தாளிக்க:

சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை, லவங்கம் - தலா 2

பசுமை கோழி வறுவல் செய்முறை:

கோழிக்கறியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். தேங்காய், கசகசாவை அரைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலை, புதினா இலையை விழுதாக்கவும்.

ஒரு கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும், சோம்பு, பட்டை, லவங்கம் இவற்றை தாளிக்கவும்.

பின் நறுக்கிய வெங்காயம், தக்காளி, சிக்கன் இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்க்கவும்.

அரைத்த தேங்காய், புதினா கொத்தமல்லி இலை விழுது இவற்றைச் சேர்த்து போதுமான உப்பு சேர்க்கவும்.

சிக்கன் வெந்ததும், தயிரை ஊற்றி குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து பசுமை கோழி வறுவல் இறக்கவும்.

கறுப்புபணம் குறித்து மத்திய அரசின் நடவடிக்கை என்ன? What is the stand on Illegal Money

0 comments
கறுப்புபணம் குறித்து மத்திய அரசின் நடவடிக்கை என்ன என்பதனை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டால், 6 லட்சம் கிராமங்களுக்கு செலவிடாலம் என பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி கூறினார். ஊழலுக்கு எதிராகவும், கறுப்புபணத்தை மீட்க வலியுறத்தியும், பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி, கடந்த 11-ம் தேதி தனது ரத யாத்திரையை துவக்கினார். இந்நிலையில் தனது ரதயாத்திரை ஒடிசா வந்தடைந்தது.

கட்டாக் நகரில் செய்தியாளர்களிடம் அத்வானி கூறியதாவது: மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கறுப்புபணத்தை மீட்க நடவடிக்கை எடுப்பதாக கூறிவருகிறது. ஆனால் அதற்கான முயற்சியை எடுத்ததாக தெரியவில்லை. தற்போது, சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புபணம் 25 லட்சம் கோடிவரை பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சுவிட்சர்லாந்து அரசுடன் இந்தியர்களின் கறுப்புபணம் குறித்து சட்ட ரீதியான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக மத்திய அரசு கூறிவருகிறது. . மேலும் இந்தியர்களின் கறுப்புப்பணத்தை மீட்டு கொண்டு வந்தால். இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களுக்கு தேவையான, பள்ளி, கல்வி, சுகாதாரம், மின்சாரம் , சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு செலவிடலாம். கறுப்புப்பணம் பதுக்கியவர்களின் ஒவ்வொரு சல்லி காசும் இந்திய கிராமங்களுக்கு ‌‌பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அத்வானி கூறினார்.

கறுப்பு பண விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தற்போதைய நிலை என்ன ? என்ன நடவடிக்கைகள் எடு்த்துள்ளது என்பது குறித்து வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்


Thanks: Dinamalar

தனி ஆவர்த்தனம் தொடரும் : தங்கபாலு | Congress will March Ahead

0 comments
"உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் தனித்தே போட்டியிட்டது என்ற பெருமை காங்கிரசுக்கு மட்டுமே உண்டு. இந்த தனி ஆவர்த்தனம் தொடரும்' என, தமிழக காங்., தலைவர் தங்கபாலு தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் தனித்தே போட்டியிட்டது என்ற பெருமை, காங்கிரசுக்கு மட்டுமே உண்டு. இனி வரும் காலங்களில், காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும். அப்போது தான் கட்சியின் பலத்தை நிரூபிக்க முடியும். ஆளுங்கட்சியான அ.தி.மு.க., ஆண்ட கட்சியான தி.மு.க., ஆகியவை, உள்ளாட்சித் தேர்தலிலும் தங்களோடு சில கட்சிகளை கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தல் களம் இறங்கின.
மற்ற கட்சிகளும், அவரவர் நிலைகளுக்கேற்ப கூட்டணி சேர்ந்துக் கொண்டு போட்டியிட்டன. உள்ளாட்சித் தேர்தல் நல்ல முறையில் நடந்தது. ராஜிவ் கொண்டு வந்த பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும். அரசியலில் வெற்றி தேல்வி சகஜம். தேர்தல் முடிவு குறித்து ஆய்வு செய்ய தமிழக காங்கிரஸ் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் விரைவில் நடக்கவுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலை வைத்து கட்சிகளை எடை போடக் கூடாது. உள்ளாட்சித் தேர்தல் வேறு, சட்டசபை, லோக்சபா தேர்தல் வேறு. மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொண்டு, இந்த தோல்விக்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
இளங்கோவன், யுவராஜா கூறும் குற்றச்சாட்டுகளை பற்றி நான் கவலைப்படவில்லை. சத்தியமூர்த்திபவனில் நடந்த கலவரத்திற்கு யுவராஜா தான் காரணம். அவர் ஒரு வேட்பாளரை மாற்றச் சொன்னதால் அந்த சம்பவம் நடந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர் என்றமுறையில் சோனியாவை கருணாநிதி சந்தித்து பேசியுள்ளார். அதில் விமர்சிக்க ஒன்றுமில்லை. இவ்வாறு தங்கபாலு கூறினார்.

தேமுதிக: தேர்தலில் மக்கள் ஆதரவு கூடுகிறது | Our Stonghold is Growing- D.M.D.K

0 comments
ஒவ்வொரு தேர்தலிலும் தமது கட்சிக்கு வாக்குகள் கூடிக்கொண்டே வருவதாக தேமுதிக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள செய்தியில், 'தமிழ்நாட்டில் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு 863 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இது கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை விட 248 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்று 40 சதவீதம் இடங்களை அதிகம் பெற்றுள்ளது.

தேமுதிக தனித்துப் போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தல்களிலும் தமிழக மக்களின் ஆதரவு பெருகியுள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சுமார் 28 லட்சம் வாக்குகளும், 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சுமார் 31 லட்சம் வாக்குகளும், 2011-ம் ஆண்டு உள்ளாட்சி மன்ற தேர்தலில் 35 லட்சத்து 64 ஆயிரத்து 74 வாக்குகளும் பெற்றுள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு தேர்தலிலும் தமிழக மக்களின் ஆதரவு தேமுதிகவுக்கு கூடிக் கொண்டே வருகிறது என்பது உண்மையாகும்,' என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்: கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்

0 comments

தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2011 முடிவுகள். கட்சிகள் பெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குகளின் விகிதம் (நகர் மற்றும் ஊரகப் பகுதிகள்) - கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினருக்கான பதவிகள் நீங்கலாக.

***
மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்

***
மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சித் தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்

***
அனைத்து மாநகராட்சிகளுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்

***
அனைத்து நகராட்சிகளில் கட்சிகள் பெற்ற உள்ளாட்சித் தேர்தல் வாக்குகளின் விகிதம்

***
அனைத்து பேரூராட்சிகளில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதம்



Thanks : Vikatan , உள்ளாட்சித் தேர்தல் 2011 has shown a respect to the current ruling party and we all tamilians are expecting a good rule from this ADMK party ahead of உள்ளாட்சித் தேர்தல் 2016.

Free Audio & Video Convertor's: இலவச ஆடியோ/வீடியோ மாற்றிகள்

0 comments
இலவச புதிய புரோகிராம்கள் இணையத்தில் பதியப்படுகையில், அவற்றில் ஒரு கண் வைத்து பயன்படுத்திப் பார்ப்பது என் பழக்கம். அந்த வகையில் சென்ற வாரம் தரப்பட்ட இரண்டு புரோகிராம்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இன்ஸ்டால் செய்திடவும், இயக்கவும் மிக எளிதாகவும் உள்ளன. வேகமாகவும் செயல்படுகின்றன.

ஆடியோ பைல்கள் பல பார்மட்களில் இணையத்தில் கிடைக்கின்றன. வெளியேயும் உருவாக்கப்பட்டு நம்மை அடைகின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A, and மற்றும் OGG எனப் பல பார்மட்டுகளில் இவை உள்ளன. இவற்றில் சிலவற்றை மட்டுமே சில கம்ப்யூட்டர்களில் இயக்க முடியும். பெரும்பாலான ஆடியோ இயக்கும் புரோகிராம்கள், அனைத்தையும் இயக்கு வதில்லை. எனவே தான் அவற்றின் மீது கிளிக் செய்தவுடன், விண்டோஸ் இதனை இயக்க புரோகிராமà � ஒன்றை இணையத்தில் தேடவா என்று கேட்கும். இந்தச் சூழ்நிலையில் இது போன்ற ஆடியோ பார்மட் மாற்றும் புரோகிராம்கள் நமக்குத் தேவையாய் உள்ளன.

இந்த இலவச ஆடியோ கன்வர்டர் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://www.freemake.com/free_audio_converter/. மேலே குறிப்பிட்ட அனைத்து பார்மட்களையும் இந்த புரோகிராம் கையாண்டு, நமக்குத் தேவையான பார்மட்டில் மாற்றித் தருகிறது.இதே போல பல வீடியோ பார்மட் பைல்களில் இருந்து, ஆடியோவினை மட்டும் பிரித்தெடுத்து, நாம் குறிப்பிடும் பைல் பார்மட்டில் தருகிறது. FLV மற்றும் MPEG பார்மட் பைல்களில் இந்த சோதனையை நடத்திய போது சிறப்பாக இயங்கியதனை உறுதி செய்திட முடிந்தது.

பார்மட் மாற்றிய ஆடியோ பைல்களை ஐ-ட்யூன் வகையில் வேண்டும் என விரும்பினாலும், அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஐ-போன், ஐ-பாட் ஆகிய சாதனங்கள் இயக்கும் வகையிலான பார்மட்களிலும் மாற்றிக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆடியோ பைல்களை இணைக்கலாம்.

இதே நிறுவனம் வீடியோ பார்மட்களை மாற்றித் தரும் வீடியோ கன்வர்டர் புரோகிராமினையும் (Freemake Video Converter.) கொண்டுள்ளது. இதுவும் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டு சிறப்பாக இயங்குகிறது. இந்த புரோகிராம் http://www.freemake.com/free_video _converter/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. , AVI, MP4, MKV, WMV, MPG, 3GP, 3G2, SWF, FLV, TOD, AVCHD, MOV, DV, RM, QT, TS, MTS ஆகிய பார்மட் வீடியோக்களை இது கையாள்கிறது. டிவிடிக்களில் இருந்து வீடியோ பைல்களைப் பிரித்து தனி பைலாக்கித் தருகிறது. YouTube, Facebook, MTV, Vimeo, Dailymotion, ComedyCentral போன்ற 50 க்கும் மேற்பட்ட இணைய தளங்களிலிருந்து கிடைக்கும் வீடியோ பைல்களை மாற்றித் தருகிறது.
 
இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, வீடியோ, போட்டோ ஸ்லைட் ‌ஷோ, எம்பி3 ஆகிய பைல்களை யு-ட்யூப் தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் எம்பி3 பைல்களைக் கொண்டு இந்த புரோகிராம் மூலம் ஸ்லைட் ஷோக்களை உருவாக்கலாம். பல வீடியோ பைல்களை இணைக்கலாம்.
இந்த ஒரு வீடியோ கன்வர்டர் புரோகிராம் தான், CUDA மற்றும் DXVA ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவதாக, இதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு புரோகிராம்களும் விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குகின்றன.

கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!

0 comments

`சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை' என்பது கிராமத்துப் பழமொழி. இதற்கு மாறாக சென்னை போன்ற பெருநகரங்களில் சிக்கனம் என்றால் என்ன என்று கேட்கும் அளவுக்கு பலரது வாழ்க்கை நிலை உள்ளது.

கையில் கிரிடிட் கார்டு இருந்தால் போதும்... கடைகளில் இருக்கும் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறார்கள். அதில் பாதிக்குமேல் தேவையே இருக்காது. சும்மா இருக்கட்டுமே என்று வாங்கி வீட்டில் அடைத்து விட்டு, மாதக்கடைசியில் அவசர செலவுக்கு கையில் காசில்லாமல் திண்டாடிக் கொண்டி ருப்பார்கள்.

சிக்னமாக வாழ்வதற்கு என்னென்ன வழிமுறைகளை கடைப்பிடிக்கலாம்?

ஏதேனும் ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். உங்களால் வீட்டில் உள்ள துணிகளைத் துவைத்து விட முடியும் என்றால், வாஷிங்மெஷின் தேவையில்லைதான். பக்கத்து வீட்டில் வாங்கி விட்டார்களே அதனால் நாமும் வாங்கி விடுவோம் என்ற வீண் பகட்டுக்காக ஒருபோதும் வாங்காதீர்கள். அதுபோல கையினால் துவைத்த�¯ விடக்கூடிய ஒன்றிரெண்டு துணிகளுக்காக வாஷிங் மிஷினை பயன் படுத்தாதீர்கள். மின்சார செலவு எக்கச்சக்கமாகிவிடும். உங்கள் உடல் உழைப்பும் குறைந்து போகும்.

கூடுமானவரை ஒன்றிரெண்டு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விடும் `யூஸ் அண்ட் த்ரோ' பொருட்களை வாங்கப் பழகிக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, முகச்சவரம் செய்யக் கூடிய ரேசர், எழுத உதவும் பால் பாயிண்ட் பேனா வகைகள். இவை விலை குறைவு. அதிக விலை கொடுத்து ஒரு பொருளை வாங்கி அதை பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஏன்?

நீங்கள் வாங்கும் புத்தகங்களை உங்கள் நண்பர்களுக்கு படிக்கக் கொடுங்கள். அதுபோல் அவர்கள் வாங்கியிருப்பவற்றை நீங்கள் படியுங்கள். இதனால் ஒரே நேரத்தில் எல்லாப் புத்தகங்ளையும் காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை.

உங்கள் குழந்தைகள் உபயோகப்படுத்திய நோட்டுப்புத்தகங்களை பழைய பேப்பர் வாங்குவோரிடம் தூக்கிப்போட்டு விடாதீர்கள். அதில் எழுதாத சில பக்கங்கள் நிச்சயம் இருக்கக்கூடும். அந்த தாள்களை சேகரித்து தினசரி குறிப்புகள் எழுதுவதற்கான குறிப் பேடு தயாரியுங்கள். பால், லாண்டரி போன்ற அன்றாட செலவின கணக்குகளை எழுதி வைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

உங்களுக்கு கிடைக்கும் பரிசுப் பொருட்கள் மீது சுற்றி வைக்கப்பட்டிருக்கும் வண்ணக் காகிதங்களை பத்திரப்படுத்தி வையுங்கள். வேறு யாருக்காவது நீங்கள் பரிசு கொடுக்க நேரும்போது பரிசுப்பொருள் மீது அந்த வண்ணக்காகிதத்தை சுற்றி கொடுக்கலாம்.

கடையில் ஒருசில பொருட்களே வாங்க வேண்டியிருந்தால், அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெரிய பிளாஸ்டிக் கூடையை தூக்காதீர்கள். கூடையில் நிறைய இடம் இருக்கிறதே என்று தேவையில்லாத பொருட்களை வாங்கி கூடையை நிரப்பிக் கொண்டிருப்பீர்கள்.

ரீ-சார்ஜபிள் பேட்டரியோடு, அதை ரீ-சார்ஜ் செய்யும் கருவியையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி பேட்டரி வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

மின்சாரத்தை சேமிப்பது குறித்து வீட்டில் உள்ளவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். தேவையில்லாமல் லைட் எரிவது கூடுதல் யூனிட்டுகளை உங்கள் கணக்கில் சேர்த்து விடும். மின் சிக்கனம் குறித்து அச்சடிக்கப்பட்டுள்ள ஸ்டிக்கரை வீட்டின் சுவிட்ச் போர்டில் ஒட்டி வையுங்கள். எவ்வளவுக்கு எவ்வளவு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ, அவ்வளவுக்கவ்வளவு புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும். உங்கள் வீடும் அதிக சூடு இல்லாமல் இருக்கும்.

உங்கள் வீட்டின் ஜன்னல் மேற்குப்புறமாக இருந்தால் ஏராளமான செடிகொடிகளை வளருங்கள். இது கோடைகால வெப்பத்தை குறைக்கும். வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் செடிகளுக்கு மாலை நேரத்தில் தண்ணீர் ஊற்றுங்கள். பகல் நேரத்தில் ஊற்றினால் விரைவில் சூரிய ஒளியில் தண்ணீர் ஆவியாகி விடும். வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளுக்க�¯ , சமையல் செய்யும்போது கிடைக்கும் மிச்சம் மீதி தண்ணீரை ஊற்றப் பழகிக் கொள்ளுங்கள்.

மாதம் ஒருமுறையாவது ஏர்கண்டிஷன் கருவியில் வைக்கப்பட்டிருக்கும் பில்டர், எலெக்ட்ரானிக் குக்கர், மிக்சி, பிரிஜ் போன்றவற்றை சுத்தமாக துடைத்து வையுங்கள்.

நண்பர்களுக்கு பரிசுகள் வழங்குவதாக இருந்தால் சூரிய வெப்பத்தில் இயங்கக்கூடிய பேட்டரி சார்ஜர், லைட் போன்றவற்றை வழங்குங்கள். அதை பயன்படுத்தவும் சொல்லிக் கொடுங்கள்.

நன்றி - தினத்தந்தி

Mutton Rogan Josh: மட்டன் ரோகன் ஜோஸ்

0 comments
மட்டன் ரோகன் ஜோஸ் தேவையான பொருட்கள் :
ஆட்டு இறைச்சி - 1/2 கிலோ
மிளகு - 2-4
லவங்கம் - 5
கறுப்பு ஏலக்காய் - 4
பட்டை - 1
யோகர்ட் - 1 கப்
சமையல் எண்ணெய் (டால்டா) - 5 டீஸ்பூன்
பிரியாணி இலை - 2
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
இஞ்சி பவுடர் - 1 டீஸ்பூன்
காஷ்மீரி சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
பென்னல் பவுடர் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மட்டன் ரோகன் ஜோஸ் செய்முறை:
இறைச்சியை சுத்தம் செய்து யோகர்ட்டில் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் 5 டீஸ்பூன் டால்டா ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பெருங்காயத்தூள் சேர்க்கவும், தொடர்ந்து மட்டன் துண்டுகளை போட்டு யோகர்ட்டைச் சேர்க்கவும்.
மஞ்சள் தூள், லவங்கம், கறுப்பு ஏலக்காய், மிளகு இவை சேர்த்து சில நிமிடங்கள் வறுக்கவும்.
இதைக் கிளறும்போதே எண்ணெய் தனியே, யோகர்ட் தனியே பதமாக வருவதைக் காணலாம்.
இத்துடன் காஷ்மீரி மிளகாய்த் தூள், சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் கலக்கவும்.
காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்க்கவும். தகுந்த உப்பு சேர்த்து 1/2 நிமிடம் அல்லது ஒரு நிமிடம் கலக்கவும்.
இப்பொழுது கிரேவி திக்காக வந்ததும், சோம்பு பவுடரோடு ஒரு கப் தண்ணீர், இஞ்சி பவுடர் சேர்க்கவும்.
இதை குறைந்த தீயில் 30 நிமிடங்கள் வைத்திருக்கவும். கிரேவி திக்காக வந்ததும் இதைத் தனியே பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றவும்.
மட்டன் ரோகன் ஜோஸ் குறிப்பு:
பொதுவாக ரோகன்ஜோஸ் செய்முறைக்கு ஆட்டு இறைச்சியின் தோள்பகுதியை தேர்ந்தெடுக்கவும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளவு 8 முதல் 10 நபர்கள் சாப்பிடப் போதுமானதாகும்.
காஷ்மீரி மிளகாய்த் தூள் இல்லையென்றால் சாதாரண மிளகாய்த்தூள்உபயோகிக்கலாம். ஆனால் ருசி வேறுபடும்.
இந்த மட்டன் ரோகன்ஜோஸ் நான் பிரெட், பட்டர் சப்பாத்தி இவற்றிற்குத் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
Thanks : செப்' தாமு

How to Avoid Yello Jauntice: மஞ்சள் காமாலை தடுப்பது எப்படி?

0 comments

சரியான நேரத்தில் கண்டுபிடித்து முறையான சிகிச்சை செய்து எடுக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்... மஞ்சள் காமாலை.

இது எப்படி ஒருவரிடம் தொற்றுகிறது?

கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் இந்த நோய் ஏற்பட காரணம். இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலும் `கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ' என்ற வைரசின் தாக்கம்தான் அதிகம் உள்ளது. இந்த வைரஸ் கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது. இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும்.

சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் ஒருவரது உடலுக்குள் நுழைந்து விடுகிறது. ரத்தம் செலுத்தும்போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் அசதி, பசியின்மை, உடல் வலி, சோர்வு, மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தென்படும். கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக காட்சியளிக்கும். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் வெளியாகும்.

மேலும், சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் தோன்றும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க் கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சரி... மஞ்சள் காமாலையை உறுதி செய்வது எப்படி?

ரத்தப் பரிசோதனையின் மூலமே மஞ்சள் காமாலை நோயை உண்டாக்கும் வைரஸ் பற்றி கண்டறிய முடியும். இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல், புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறியலாம். மேலும், கல்லீரலில் முக்கிய என்சைமின் அளவும் அதிகரித்து காணப்படும்.

ரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்ப்பார்கள். அப்போது இந்த நோய் பாதிப்பினால் ஏற்பட்ட கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.

மஞ்சள் காமாலை உறுதியான பிறகு என்ன செய்ய வேண்டும்?

உடனடியாக முறையான சிகிச்சை எடுப்பதோடு பத்தியமும் இருக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையாக குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும். கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாறவும் வாய்ப்பு உள்ளது. மேலும், கல்லீரல் செயல் இழப்பும் ஏற்படலாம்.

கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்படும்போது கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

கர்ப்பிணிகளுக்கு `கல்லீரல் அழற்சி பி வைரசால்' பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைக்கும் தடுப்பூசி போட வேண்டியது முக்கியம். இதற்காக, வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதமும் குழந்தைக்கு கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே, பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும ் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நன்றி-தினத்தந்தி

Idly Manjoorian: இட்லி மஞ்சூரியன்

0 comments
இட்லி மஞ்சூரியன் தேவையானவை

இட்லி - 6
இஞ்சிப்பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை
மிளகாய்த்தூள் - 1/2 சிட்டிகை
கறி மசாலா - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் + நெய் - தேவையான அளவு
 
இட்லி மஞ்சூரியன் செய்முறை
இட்லியை துண்டுகளாக நறுக்கி வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவிட்டு அதில் பொரித்து எடுத்து தனியே வையுங்கள்.

பிறகு வாணலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி வதக்கவும்.

வதங்கியதும் மிளகுத்தூள், சோயா சாஸ், அஜினோமோட்டோ, மிளகாய்த்தூள், கறிமசாலா, உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.

நன்கு வதங்கியதும் பொரித்து வைத்த இட்லி துண்டுகளைப் போட்டு ஒரு கிளறு கிளறி, பச்சைக் கொத்துமல்லி தூவி கிளறி இறக்கி வைக்கவும்.

சூடான இட்லி மஞ்சூரியன் ரெடி.

குறிப்பு

அஜினோமோட்டோ குழந்தைகளுக்கு அதிகம் ஒத்துக்கொள்ளாது. மிகக் குறைந்த அளவே பயன்படுத்தவும்.

கீதா தெய்வசிகாமணி

Injection for malayria: மலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி

0 comments

`முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்' என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். அதையே கொஞ்சம் மாற்றி, `கொசுவால் உருவாகும் மலேரியாவை, கொசுவின் எச்சிலை வைத்தே விரட்டியடிக்க முடியும்' என்று சொல்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள்.

உலக அளவில், ஒவ்வொரு வருடமும் சுமார் 30 கோடி பேர் மலேரியாவால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் சுமார் 10 லட்சம் பேர் மலேரியாவுக்கு பலியாகிறார்கள். மலேரியாவுக்கு தடுப்பூசி இல்லாதது இந்த மரணங்களுக்கு முக்கிய காரணமாகும்.

மலேரியா கொசுக்களால் பரவுகிறது. மலேரியா நோய்க்கிருமி உள்ள கொசு ஒருவரை கடிக்கும்போது, பிளாஸ்மோடியம் (Plasmodium falciparum) என்னும் கிருமியை அது மனித உடலுக்குள் ரத்த ஓட்டத்தின் வழியாக செலுத்தி விடுகிறது. இந்த நோய்க்கிருமி கல்லீரலை அடைந்து, அங்கு தங்கி இருந்து இனப்பெருக்கம் செய்து உடலின் எல்லா பகுதிகளுக்கும் பரவுகிறது. இதனால்தான் மலேரியா காய்ச்சல் உருவாகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவின் சனேரியா (Sanaria) என்னும் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் புதிய மலேரியா தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளனர். இது கொஞ்சம் வித்தியாசமானது.

முதலில் மலேரியா நோயை பரப்பும் கொசுக்களை சோதனைக்கூடத்தில் வளர்த்தனர். பின்னர் கதிரியக்கம் மூலம் அந்த கொசுக்களுக்கு `சிகிச்சை' அளிக்கப்பட்டது. இதனால் அந்த கொசுக்களின் மலேரியா நோய் பரப்பும் தன்மை முற்றிலும் அழிக்கப்பட்டு விடும். பின்னர் அந்த கொசுக்களின் எச்சில் சுரப்பிகளைக்கொண்டு தடுப்பூசி மருந்து தயாரித்தனர்.

இந்த மருந்தை பயன்படுத்தி ஆய்வு செய்ததில், சிலருக்கு மட்டுமே பலன் கிடைத்தது. இதனால் இன்னும் மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை உருவாக்கும் கூடுதல் ஆய்வுக்காக அமெரிக்காவின் தேசிய சுகாதார மையத்தின் உதவியை நாடியது சனேரியா நிறுவனம்.

இதையடுத்து, தேசிய சுகாதார மைய ஆய்வாளர் ராபர்ட் சிடர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வுகள் நடைபெற்றன. அப்போது, சனேரியாவின் புதிய மலேரியா தடுப்பூசியை விலங்குகளின் உடலில் செலுத்தி பரிசோதித்தனர். இந்த ஆய்வின் இறுதியில் சுமார் 71 முதல் 100 சதவீத விலங்குகள் மலேரியாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்திருந்தன.

இதனால் இந்த புதிய தடுப்பூசி மலேரியாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை மனிதர்களிலும் உருவாக்கும் எனும் நம்பிக்கை பிறந்திருக்கிறது. இன்னும் சில மாதங்களில் மனிதர்களிடம் இதுபற்றிய பரிசோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

தற்போது புழக்கத்திலுள்ள பல மலேரியா தடுப்பூசிகள், மலேரியா கிருமியான பிளாஸ்மோடியத்தின் ஒரேயொரு புரதத்திலிருந்தே உருவாக்கப்படுபவை. இவ்வகை தடுப்பூசிகள் மலேரியாவுக்கு எதிரான முழுமையான பாதுகாப்பை அளிப்பதில்லை. மாறாக, நோயின் தீவிரத்தை குறைக்க மட்டுமே உதவுகின்றன.

`இத்தகைய தடுப்பூசிகளுக்கு மத்தியில், ஒரு முழு மலேரியா கிருமியை மொத்தமாக பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய வகை மலேரியா தடுப்பூசிகள் மிகவும் தனித்தன்மை கொண்டவை' என்று நம்பிக்கையூட்டு கிறார் ஆய்வாளர் ராபர்ட்.

Can we postpone the Periods: மாதவிலக்கை தள்ளிப்போடலாமா?

0 comments

பெண்களின் `அந்த மூன்று நாள்' பிரச்சினைகளை, அவர்கள் சிலநேரங்களில் செயற்கையாக தள்ளிப்போட நேரிடுகிறது. அதாவது, திருமணம், திருவிழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்காக அவ்வாறு செய்கிறார்கள்.

இது சரியா, தவறா என்றால், அடிக்கடி அதற்காக மாத்திரை பயன்படுத்துவது தவறுதான் என்கிறார்கள் மருத்துவர்கள். மாதவிலக்கு என்கிற பீரியட்ஸ் மாதம்தோறும் நிகழும் இயற்கையான நிகழ்வு. அதை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஆபத்துதான் என்கிறார்கள் அவர்கள்.

இப்போதெல்லாம் மாதவிடாயைத் தள்ளிப்போட நினைப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் மாத்திரைகளின் பெயரைச் சொல்லி வாங்கி உட்கொள்கிறார்கள். இது உடலைப் பெரிய அளவில் பாதிக்கச் செய்யும். மாதவிடாய் விஷயத்தில் மட்டும் அல்ல, எந்த நோய் பாதிப்பிற்காக மாத்திரை எடுத்துக்கொள்ள நேரிட்டாலும் டாக்டரின் அறிவுரையை அவசியம் கேட்க வேண்டும்.

மாதவிலக்கை தள்ளிப் போடுவதற்காக மருந்து கடைகளில், `புரஜெஸ்ட்டரோன்' கலந்த மாத்திரைகள் கிடைக்கின்றன. மூன்று முதல் ஐந்து நாட்கள்வரை அதனை எடுத்துக் கொள்ளலாம். எந்தவித பக்கவிளைவும் இருக்காது. ஆனாலும், ஒவ்வொருவரின் உடலும் ஏற்றுக்கொள்ளும் விதமாக மாத்திரைகளின் செயல்பாடு அமைவது இல்லை.

இதனால், மாதவிலக்கு தள்ளிப்போக மாத்திரை எடுப்பவர்கள், முதலில் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து கொள்ள வேண்டியது அவசியம். யூட்ரஸின் நிலை, ஏதேனும் பிரச்சினை இருக்கிறதா, வயிற்று வலி, அல்சர், மாதவிடாய் கோளாறு, கர்ப்பப்பை கேன்சர் பாதிப்பு... என எது வேண்டுமானாலும் நம்மை தாக்கி இருக்கலாம். அதுகுறித்து தெரியாமல் மாத்திரைகள�¯ ˆ சாப்பிட்டால், அந்த பாதிப்புகள் இன்னும் அதிகமாகிவிடும்.

மேலும், டாக்டரின் அறிவுரை இல்லாமல் மாதவிலக்கு மாத்திரைகளை உட்கொள்வதால் உடல் எடை கூடுவது, வயிற்றுப் புரட்டல், வாந்தி, வாய்க்கசப்பு உள்ளிட்ட பல பாதிப்புகளும் ஏற்படலாம். சிலருக்கு `மைக்ரேன்` எனப்படும் ஒற்றைத் தலைவலியும் வர வாய்ப்பு இருக்கிறது.

அதோடு, இப்படி மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டு மாதவிலக்கை தள்ளிப் போடும்போது அதன் மாதாந்திர சுழற்சியும் மாறுபடும். ஒருமுறை தள்ளிப் போனால், அடுத்த முறை சரியாகிவிடும் என்று நினைக்கக் கூடாது. அவ்வாறு மாதவிலக்கு முறை தவறி தள்ளிப்போகும்போது, அடுத்த மாதவிடாய் சுழற்சியை உடல் ஏற்றுக் கொள்ளாமல் போகலாம். அப்போது ரத்தப்போக்கு அதிகரிக்கும். உடலின் உஷ்ணமும் அதிகமாகும்.

இந்தியாவில் வலி நிவாரணிக்கும், வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்தே மாத்திரைகளைத் தயாரிக்கும் வழக்கம் இருக்கிறது. அதனால் தங்கள் இஷ்டப்படி மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவது நல்லது அல்ல.

பொதுவாக மாதவிடாய் மாத்திரை, கருத்தடை மாத்திரை அளவுக்கு ஆபத்தை விளைவிக்க கூடியவை இல்லை என்றாலும், சிறு பாதிப்புகள்கூட ஏற்படாத அளவுக்கு நம் உடலைப் பாதுகாப்பது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

நன்றி-முத்துசரம்

Nuclear Trash: கதிரியக்க கதிரியக்கம் மாசுபாடு

0 comments

கதிரியக்கம் என்பது புரோட்டான் (ஆல்பா துணிக்கை) எலக்ட்ரான் (பீட்டா துணிக்கை) மற்றும் காமா (மின் காந்த கதிர்வீச்சு) போன்ற சில அணுக்களில் இருந்து வெளிப்படும் ஒரு வகை ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சாகும். இந்த கதிர்வீச்சு தான் கதிரியக்க மாசுபாட்டிற்கு காரணமாகும் கதிரியக்கமானது. அயனி கதிரியக்கம், அயனியாகà ��க கதிரியக்கம் என இருவகைப்படும். அயனியாக்க கதிரியக்கமானது கிரகிக்கும் அணுக்களை தாக்குகறிது. இவை குறைந்த ஊடுருவும் தன்மையுடையது. அயனி கதிரியக்கமானது அதிக ஊடுருவும் தன்மையுடையது. பெரிய மூலக்கூறு உடைப்பிற்கு இந்த அயன்கதிரியக்கம் காரணமாகும்.

சுரங்கத்தொழில், புளோடோனியம் மற்றும் தோரியத்தின் தூய்விப்பு மற்றும் உற்பத்தி, வெடிக்கத்தக்க மற்றும் அணுஆயுதங்கள், அணு சக்தி நிலையம், எரிபொருள் மற்றும் கதிரியக்க சமதானி உற்பத்தி போன்றவை கதிரியக்கத்திற்கு மனிதனால் உருவாக்கப்படும் ஆதாரங்களாகும்.

பொதுவாக கதிரியக்கத் மூன்று வகைப்படும்: அவை

ஆல்பா துணிக்கை - இவற்றை ஒரு துண்டு காகிதம், மனிதனின் தோல் மூலம் தடுக்கப்படுகிறது.
பீட்டா துணிக்கை - இவை மனிதனின் தோலில் ஊடுருவிச் செல்லும். இதனை ஒரு சிறிய துண்டு கண்ணாடி மற்றும் உலோகம் போன்றவற்றின் மூலம் தடுக்கப்படுகிறது.
காமா கதிர்கள் - இலை மனிதனின் தோல் பாதிக்கப்பட்ட செல்கள் மூலம் ஊடுருவிச் செல்லும் இவை அதிக தொலைதூரத்திற்கு உடுருவும் இவற்றினை அடர்த்தியான பலமான நுண்சேர்பொருளின் (concrete) மூலம் தடுக்கப்படுகிறது.
ஆதாரங்கள் மற்றும் முறைகள் கதிரியக்க மாசுபாட்டிற்கு காரணமாக ஆதாரங்களின் வகைகள் பின்வருமாறு :

அணு சக்தி நிலையம்
அணு ஆயுதம்
போக்குவரத்து
அணுச்சிதைவு அப்புறப்படுத்ததல்
யுரேனியம் சுரங்கத்தொழில்
கதிரியக்க மாசுபாட்டினால் உயிரியலில் தாக்கம் :

கதிரியக்க சமதானியஜன் விளைவானது, கதிரியக்கத்தின் உயிரிகளை பாதிக்கும் தன்மை மற்றும் இவை, உயிரணுக்களை உட்கிரகிக்கும் வெளியேற்றம் தன்மையை பொருத்து இருக்கும். பெரும்பாலும் இந்த கதிரியக்கம் உயிரணுக்களின் ஒரு செல்லை தாக்குகிறது. இதனால் மனிதன் மற்றும் பிற பல செல்களுடைய உயிரணுக்களில் சிக்கல�¯ ˆ ஏற்படுத்துகிறது. ஏனெனில் ஒரு செல் பாதிப்படையும் போது மற்ற செல்களையும் எதிராக தாக்குகிறது. ஒரு மனிதனின் உடலில் உள்ள உறுப்புகளை தோல் குடல் மற்றும் இரத்த நாள செல்களானது மனிதனின் உணர்ச்சி தூண்டுதல் மையமாக உள்ளது.
உயிரியல் மூலக்கூறுகளுடன் கதிரியக்கம் வினைபுரியும் போது அயன்களை உருவாக்குவதால் நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இந்த அயனிகள் முற்றுப்பெறாத அயனிகளாக (free radical) இருந்து, புரதம், சவ்வுகள் மற்றும் நியூக்ளிக் அமிலங்கள் போன்றவற்றை சேதப்படுத்துகிறது. கதிரியக்கமானது டி.என்.ஏவின் தனிப்பட்ட அடிப்பக�¯ �தி (அதாவது தைமின்) அழித்தல் ஒரு புரியிழை உடைப்பு, இருபுரியிழை உடைப்பு, வெவ்வேறு டி.என்.ஏ புரியிழையின் பிணைப்பில் சேதம் போன்றவற்றினால் டி.என.ஏ முற்றிலும் பாதிப்படைகிறது. இதனால் புற்றுநோய் பிறப்பில் கோளாறு மற்றும் இறப்பு போன்றவை ஏற்படுகிறது.

கதிரியக்கம் தாக்கம் மனித உடலில் குறைவாக இருக்கும் பொழுது செல்களிலுள்ள உயிர்வேதியியல் திருத்தம் செய்யும் முறையின் மூலம் அதன் தாக்கத்தை குறைக்கிறது. ஆனால் அணுமின் நிலையம் மற்றும் அணு ஆயுதங்களில் வெளிப்படும் கதிர்கள்ளானது இந்த உயிர் வேதியியல் முறையினால் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனா ல் மக்கள் தொகையில் புற்றுநோய் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அறிவியலறிஞர்களால் கூட இதற்கான நிரந்திர தீர்வை கண்டுபிடிக்க முடியவில்லை
அறிவியல் விஞ்ஞானிகளில் மத்தியில், மனிதனில் தாக்கத்தை ஏற்படுத்தும் கதிரியக்கத்தின் (கறைந்தபட்ச) அளவில் வேறுபட்ட கரத்துக்கள் நிலவி வருகிறது. இதில் சில அறிவியல் விஞ்ஞானிகள் குறைந்தபட்ச அளவுக்கு கீழே கதிரியக்கம் இருந்தாலும் அதாவது நுண்ணிய அளவு இருந்தாலும் உயிரியலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறுகின்றனர். ஆனால் சில விஞ்ஞானிகளின் கருத்து யாதெனில் குறைந்தபட்ச அளவுக்கு கீழே இருந்தால் அவை மனிதனின் உயிரியலில் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்துவதில்லை.

1945 - ல் ரோஸீமா மற்றும் நாகசாகி என்ற பகுதியில் நடந்த அணுகுண்டு வெடிப்பில் ஜோம்ஸ் நீல் மற்றும் அவருடைய ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் அதிக அளவு மக்கள் புற்றுநோய் இரத்த புற்றுநோய் மற்றும் பிற நோய்கள் போன்றவற்றால் பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டது
கதிரியக்க மாசுபாடு சுற்றுப்புறச்சூழலில் ஒரு முக்கிய பிரச்சனையாக கருத்தப்படுகிறது. எனவே கதிர்வீச்சு சம்பந்தப்பட்ட பொருட்கள் மற்றும் அணுமின் நிலையங்களில் செய்யப்படும். செயல்களில் போன்றவற்றின் பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்தி பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கதிரியக்க மாசுபாட்டின் வகைகள் மற்றும் விளைவுகள் :
புறஊதாக் கதிர்கள்: சிற்றலையின் அலைநீளம் 100-300 நேனோமீட்டர் மற்றும் அதிக ஆற்றலானது 260 நேனோமீட்டர் அலை நீளத்தில் இருக்கும் பொழுது டி.என்.ஏ வை பாதிக்கின்றது. இவை கண்விழித்திரையிலுள்ள செல்களை தாக்கும் போது குருட்டுத்தன்மை ஏற்படுகிறது. மேலும் இவை தோலின் வளர்ச்சி செல்களை பாதிக்கிறது. தோலில் கொப்பளங்கள் ஏற்படுதல் மற்றும் தோலில் சிவப்பேறுதல் (தோல் புற்றுநோய்) போன்ற நோய்கள் ஏற்படுகிறது. நம்முடைய தோலில் உள்ள நிறமிகள் புறஊதாக்கதிர்கள் தாக்கத்திலிருந்து பாதுகாக்குகிறது. ஆனால் இந்த நிறமிகளில் பற்றாக்குறை ஏற்படும் போது தோல் உலர்வு நோய் உண்டாகிறது. மேலும் இந்த புறஊதாக்கதிர்கள், புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.

காஸ்மிக் கதிர்கள்:காஸ்மிக் கதிர்களின் கதிர்வீச்சுத் தன்மை 0.001 ஏ ஐ விட குறைவாகும். ஆனால் இதன் ஆற்றல் அதிகமாக இருப்பதால் உயிரணுக்களை எளிதில் தாக்குகிறது. அதிஷ்டவசமாக விண்வெளியின் படை மண்டலத்தில் (stratosphere) இந்த கதிர்வீச்சு சிக்கிக் கொள்வதால் குறைந்த அளவு மட்டும் புவிளை வந்தடைகிறது.

மற்ற கதிர்வீச்சான ஊடுக்கதிர் (x - கதிர்), இவை உயிரணுக்களின் ஊடுருவி செல்வதால் பல்வேறு உயிரணுக்களின் பரிணாம வளர்ச்சியானது குறைகிறது.

கதிர்களின் தாக்கமானது 1909 - ல் யுரேனியம் சுரங்கத் தொழிலாளர்களிடம் ஏற்பட்ட புற்றுநோயின் மூலம் கண்டறியப்பட்டது. உயர்வான மின் நிலையங்களில் பயன்படுத்தும் அல்லது மேம்படுத்தும் பன்மயமி (polyploid) கதிரியக்கத்தை கட்டுப்படுத்தும் ஒருவகை இயக்கமுறையாகும் அணுசக்தி குறையும் பொழுது ஓரகத்தனிமம் (isotopic) I - 132 மற்றும் Sr-90 மூலம் உடனடியாக தாக்குகிறது. கதிரியக்க I -131 ஆனது கேடயச் சுரப்பியுள்ள சாதாரண அயோடின் (I -27) மூலம் செறியை எடுத்துக்கொள்கிறது. இதனால் இரத்த வெள்ளையணுக்கள், எலும்பு பகுதி, மண்ணீரல், நண்நீர்க்கணு போன்றவற்றை தாக்குகிறது.
மேலும் கண் பார்வை கோளாறு, மலட்டுத் தன்மையை அதிகரித்தல், தோல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் கட்டி போன்றவை உருவாகிறது. Sr-90 என்பது கால்சியத்தின் கோளாறு. இவை எலும்புகளை தாக்கி எலும்பு புற்று நோயை உருவாக்குகிறது. வரலாற்று சம்பந்தப்பட்ட எடுத்துக்காட்டாக ஜப்பானின் ஹீரோஸிமா மற்றும் நாகசாகி பகுதியில் 1945ல் ஏற்பட்ட  கதிரியக்க குண்டு வெடிப்பு ஒரு உதாரணமாகும்.

 

சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்

0 comments

சம்பவம் 1:

தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார், அவரது சகோதரி திருபணத்திற்கு, பிரசவம் பார்ப்பதற்காக சிறப்பு படிப்பு பயின்ற பெண் டாக்டர் வந்திருக்கின்றார். அவரை திருமணம் முடிந்த பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுவிட்டு செல்லும்படி நிர்பந்தம் செய்திருக்கின்றார், அதற்கு அப்பெண் மருத்துவர் 'நான் உடனடியாக என் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், அங்கே பிரசவத்திற்காக ஒரு பெண் அட்மிட் ஆகியிருக்கின்றாள் நான் அங்கு சென்று சிசேரியன் செய்ய வேண்டும், நான் போக தாமதமானால் அப்பெண்ணுக்கு சுகப்பிரசம் ஆகிவிடும்' என்றிருக்கின்றார். இதனைக்கேட்ட அந்த நண்பர் அதிர்ச்சியோடு அந்த பெண் டாக்டரை வழி அனுப்பிவைத்துவிட்டார்.

சம்பவம் 2:

தஞ்சையிலுள்ள எனது 'தி ஹெல்த் ரிசோட்' மருத்துவமனைக்கு, திருச்சியைச் சேர்ந்த பிரபல மருத்துவமனையை நிறுவிய டாக்டரும் அவருடைய சக நண்பர்; டாக்டரும் வந்திருந்தனர். நான் அவர்களிடத்தில் சீன மருத்துவத்தின் சிறப்புக்களை விளக்கி சொன்னபோது அதனை ஆச்சரியத்தோடு கேட்டு வியந்தார்கள், வந்திருந்த மற்ற டாக்டர் கூறினார் இதை இறைவன் உலகக்கு வழங்கிய மருத்துவமாகத்தான் இருக்க முடியும், மனிதனால் உருவாக்கியிருக்க முடியாது என்று சொல்லி வியந்தார். பிறகு சுகப்பிரசவத்திற்கான எளிய முறைகள் என்னவென்பதை விளக்கினேன், இதைக் கேட்டவுடன் டாக்டர் அவர்கள் தன் உடன் வந்திருந்த சக டாக்டரிடம் நீங்கள் உங்கள் மனைவியிடம் இதையெல்லாம் சொல்லி கொடுங்கள், ஆனால் சிசேரியனே செய்ய சொல்லுங்கள் அப்போதுதான் அதிக வருமானம் கிடைக்கும் என்று சிரித்துக்கொண்டே கூறினார். அப்போதுதான் எனக்கு தெரிந்தது உடன் வந்திருந்த டாக்டரின் மனைவி (Obstetric Gynaecologist) பிரசவ சம்பந்தமான படிப்பு படித்த பெண் டாக்டர் என்று, மேற்சொன்ன சம்பவங்கள் சில கசப்பான உண்மைகளை நமக்கு உணர்த்தும்.

சுமார் 30, 40 வயது நிரம்பிய பலரை விசாரித்து பாருங்கள், அவர்கள் பெரும்பாலும் சுகப்பிரசவம் ஆனவர்களாகவும் அதிலும் வீட்டிலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். வீட்டிலேயே பிறந்த பலருக்கு, அவர்கள் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள் தமது அக்கம்பக்கத்து வீட்டுகாரர்களே! சில ஊர்களில் படிக்காத வயதான அனுபவமிக்க மூதாட்டிகளே உதவி செய்திருப்பார்கள். இப்படித்தான் பல்லாயிரக்கணக்கான பிரசவங்கள் அன்று கத்தியின் சுவடுயின்றி பிறந்தன. ஆனால் இன்றைய நவீன உலகில் சுகப்பிரசவம் என்பது அறிதான ஒன்றாகிவிட்டது. படிக்காதவர்கள் பாமரர்கள் எல்லாம் சுகப்பிரசவம் செய்தபோது அதிகம் படித்த அறிவாளிகள்(?), வெளிநாடு சென்று சிறப்பு பட்டம் பெற்றவர்கள் எல்லாம் சிசேரியன் அதிகம் செய்கின்றார்களே ஏன்?

உலகெங்கும் உள்ள பலக் கோடிக்கணக்கான உயிரினங்கள் சுகப்பிரசவத்திலேயே பிறக்கின்றன, சிறிய பூச்சியிருந்து பெரிய யானை போன்ற மிருகம் வரை சுகப்பிரசவம் ஏற்படுகின்றபோது மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? டாக்டர்கள் தான் பணத்துக்காக இதை செய்கின்றார்கள் என்றால் மக்களாகிய நாம் ஏன் இதற்காக ஒத்துழைக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம். கர்ப்பிணியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றவுடன் அங்குள்ள அதிகம் படித்த டாக்டர்கள் கர்ப்பிணியின் உறவினரிடம் நிலைமை மோசமாக இருக்கின்றது, சிசேரியன் செய்யாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்ன சொல்கிறீர்கள்? என்று மிரட்டும் போது சிசேரியனுக்கு சம்பதிப்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

டாக்டர்களும் வந்த கணவர் அல்லது உறவினர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டு சட்ட பாதுகாப்போடு சிசேரியன் செய்து தங்களது பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார்கள். சட்டம் ஓர் இருட்டறை என்பது இந்த பிரசவ அறைக்கும் பொருந்தும், பிறந்தாலும் இறந்தாலும் ஒன்றுமே செய்ய முடியாது! காரணம் நாம்தான் கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டோமே.

அப்படியானால் சிசேரியன் தேவையே இல்லையா? என்று கேட்டால் அதற்கு பதில் இடுப்பு எலும்பு யாருக்கு பிறவியிலேயே மிக குறுகலாக இருக்கின்றதோ அவருக்குத்தான் தேவைப்படும். இதுபோன்ற நிலைமை பல ஆயிரத்தில் ஒருவருக்குத்தான் ஏற்படும், சில விபத்துக்கள் ஏற்பட்டாலும் தேவைபடலாம். மற்றபடி எல்லோரும் சுகப்பிரசவம் ஆகக் கூடியவர்களே. தற்போது டாக்டர்கள் தரும் தேவையில்லாத மருந்துகளும் வேறு சில காரணங்களும் சுகபிரசவத்தையே மாற்றுகின்றன.

தேவையில்லாத இரசாயன பொருட்கள்:

கர்ப்பம் ஆனவுடன் டாக்டர்கள் கொடுக்கும் தேவையில்லாத மருந்துகள் உடலின் இயக்கத்தன்மையை மாற்றிவிடுகின்றது. இரும்புச்சத்து மாத்திரைகள் சுகப்பிரசவத்திற்கு முதல் எதிரி, தேவையில்லாமல் கண்ட சத்து மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றார்கள், இயற்கையான முறையில் இந்த சத்துக்களை பெற பல வழிகள் இருக்கும்போது அவற்றை இவர்கள் சொல்லுவதில்லை.

கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் மருந்துகள் (இரசாயன மருந்துகள்) இயற்கையாக பெரும் முறைகள்

கால்சியம் மாத்திரைகள் பால், மோர், பால்கட்டி, முட்டை மஞ்சள் கரு, முளைக்கீரை, வெந்தயக் கீரை, பருப்பு வகைள், கிழங்குகள், எள், கேழ்வரகு, மக்காச்சோளம், கோதுமை, கைகுத்தல் அரிசி, இறைச்சி

இரும்புச் சத்து மாத்திரைகள் பேரீச்சம்பழம், அரைக்கீரை, தண்டுக்கீரை, இறைச்சி, கல்லீரல், முட்டை மஞ்சள் கரு, வெல்லம், பச்சை காய்கறிகள், சுண்டைக்காய், உருளைக்கிழங்கு, கருவேப்பிலை

அயோடின் மீன் எண்ணெய், கடல் மீன்கள், கீரைகள், பழங்கள்
குளோரின் உப்பு, பச்சை கீரைகள், தக்காளி, அன்னாசி பழம், வாழைப்பழம், பேரிச்சம்பழம்.
பாஸ்பரஸ் பால், மோர், முட்டை, வெள்ளரிக்காய், பசலைக்கீரை, கேரட், முள்ளங்கி, இறைச்சி, மீன், கைகுத்தல் அரிசி, எண்ணெய்வித்துக்கள்

மக்னீசியம் பீன்ஸ், பட்டாணி, பருப்புகள். சிறுதானியங்கள்
பொட்டாசியம் வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரைகள்

சோடியம் இது பழங்களைத் தவிர மற்ற எல்லா உணவுகளிலும் கிடைக்கின்றன

குரோமியம், செலினியம், மாங்கனீஸ் எல்லா வகை உணவுகளிலும் குறைவாக இருக்கிறது.

விட்டமின் ஏ (ரெட்டினால்) மீன் எண்ணெய், (காட்லீவர் ஆயில் மற்றும் சார்க் லிவர் ஆயில்) கொழுப்புள்ள கடல் மீன்கள், ஈரல், வெண்ணெய், முட்டை, பால், பச்சை நிற கீரைகள், கேரட், மாம்பழம்

விட்டமின் டீ (கால்சிடெரால்) கொழுப்புள்ள மீன்கள், மீன் எண்ணெய், ஈரல், முட்டை, பால், பால் பெருட்கள், வெண்ணெய், மாலை சூரிய ஒளி

விட்டமின் ஈ (டோகோபெரால்) தாவர எண்ணெய், கோதுமை எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, பச்சைநிறக்கீரைகள், காய்கறிகள், ஆட்டு ஆண் விதைகள், கிட்னி

விட்டமின் கே (ஆன்டி ஹெமரேஜ்) புதிய பச்சை நிறக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தக்காளி, சோயா எண்ணெய்

விட்டமின் பி 1 (தயாமின்) கைகுத்தல் அரிசி, தவிடு, பருப்புவகைகள், கோதுமை, எள், நல்லெண்ணெய், வேர்கடலை, இறைச்சி, பால், முட்டை, ஈரல், ஈஸ்ட்டு

விட்டமின் பி 2 (ரிபோபிளேவின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், கீரைகள், பருப்பு வகைகள், தானியங்கள்

விட்டமின் பி 3 (நியாசின்) ஈரல், இறைச்சி, முட்டை, பால், மீன், இரால், பருப்பு வகைகள், வேர்கடலை, சோளம், கோதுமை

விட்டமின் பி 6 (பைரிடாக்ஸின்) ஈரல், இறைச்சி, மீன், தானியங்கள் (பட்டாணி கடலை)
விட்டமின் போலிக் ஆசிட் ஈரல், முட்டை, கீரைகள்

விட்டமின் பி 12 (சயனகாபாலமைன்) ஈரல், இறைச்சி, முட்டை, பால் (அசைவ உணவுப் பொருட்களில் மட்டுமே பி 12 கிடைக்கின்றன), தாவரங்களில் இவை இல்லை

விட்டமின் சி (அஸ்கார்பிக் ஆசிட்) நெல்லிக்காய், கொய்யாப்பழம், எலுமிச்சை, ஆரஞ்சு, தக்காளி, பருப்புவகைகள், முட்டைகோஸ், முருங்கைக்கீரை, கத்திரிக்காய், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, காலிபிளவர், அமர்நாத்காய், பச்சைநிற கீரைவகைகள், காய்கறிகள், முளை வந்த பட்டாணி

சவுதி அரேபியாவில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த எகிப்து நாட்டைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அவரின் பெண் மருத்துவர் எழுதிக் கொடுத்த இரும்புசத்து மாத்திரைகளை எல்லாம் நிறுத்திவிட செல்லிவிட்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட சொன்னேன். மீண்டும் அந்த பெண் அவரின் பெண் மருத்துவரை சந்தித்தபோது இந்த பேரீச்சம்பழம் விஷயத்தை கூறியிருக்கின்றார்;, அதற்கு அந்த பெண் டாக்டர் 3 பழத்திற்கு மேல் அதிகம் சாப்பிடாதே அது ஆபத்து என்று கூறியிருக்கின்றார், இதனை அந்த எகிப்து நாட்டு பெண் என்னை மீண்டும் சந்தித்தபோது கூறினார்.

தேவையற்ற கட்டுபாடுகள்:

கர்ப்பம் அடைந்தவுடன் எப்போதும் இருப்பது போல் முடிந்த வேலைகளை செய்தாலே போதுமானது, சில டாக்டர்கள் தேவையில்லாமல் கட்டுபாடுகளை விதிப்பது சுகப்பிரசவத்தை பாதிக்கிக்றது. வேலைகள் செய்ய வேண்டாம் என்பது படுக்கையில் அதிகம் ஓய்வெடுக்க சொல்லுவது இதுபோன்ற சில கட்டுப்பாடுகளை கூறி மனரீதியாக அச்சம் கொண்ட நோயாளிகளாக மாற்றிவிடுகின்றார்கள். கிராமங்களில் நாம் பார்த்திருப்போம், கர்ப்பிணி பெண்கள் தலையிலும், இடுப்பிலும் தண்ணீர் சுமந்து செல்வதையும், எத்தனையோ மலைப் பகுதிகளில் பெண்கள் விறகு வெட்டி எடுப்பதையும் அதனை மாலை நேரங்களில் விற்பதற்கு தலையில் சுமந்து எடுத்துச் செல்வதையும். சந்தோஷமான செய்தி என்னவென்றால், அவர்களுக்கு எல்லாம் சுகப்பிரசவம்தான்! காரணம் புரிகின்றதா?

திட்டமிட்ட சதியா?

பல வருடங்களாக பலதரப்பட்ட மக்களிடம் இந்த விஷயம் பேசபட்டு வருகின்றது, மக்கள் தொகையினை கட்டுபடுத்துவதற்காக இவ்வாறு சிசேரியன் செய்கின்றார்கள் என்று, இரண்டாவது முறை சிசேரியன் செய்யும் போதே குடும்பக் கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள், அவர்களுக்கு சில தவறான ஆலோசனைகளை கூறி, அதிகப்பட்சம் மூன்று சிசேரியன் வரை செய்கின்றார்கள், அதற்கு மேல் சிசேரியன் செய்தால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி கட்டாய குடும்ப கட்டுபாடு ஆப்ரேசனையும் செய்து விடுகின்றார்கள்.

சிசேரியன் மோசடிகள்

அதிகபட்சம் மூன்று சிசேரியன் மட்டுமே செய்ய முடியும் என்பதை பல டாக்டர்களும் கிளிபிள்ளை சொல்வதை போல் சொல்வார்கள், நம்நாட்டில் சுய அறிவை அடகுவைத்து மனப்பாடம் செய்து மருத்துவம் பார்ப்பவர்களிடம் வேறு என்ன பதிலை எதிர்பாக்க முடியும்?.

உண்மை தெரிந்தால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். சவுதி அரேபியாவில் நான் பணிபுரியும் மெடிக்கல் கன்சல்டன்ட் மருத்துவமனைக்கு டிரீட்மெண்டுக்காக சவுதி பெண்மணி வந்திருந்தார், அவருக்கு சிகிச்சை அளிக்கும்போது அவரின் உடல் தழும்புகளை வைத்து சில கேள்விகள் கேட்டேன், அதற்கு அவர் ஐந்து சிசேரியனகள்; செய்திருப்பதாக கூறினார், இதை கேட்டவுடன் ஆச்சரியம் அடைந்தேன். என் காதிலும் பல வருடங்களாக மூன்று சிசேரியன்களுக்கு மேல் செய்ய முடியாது என்ற புளித்துபோன வார்த்தைகளை கேட்டு பழகி போனதால் இந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை கொடுத்ததில் வியப்பில்லை.

அந்த பெண்மணி சிகிச்சை முடிந்து போன பிறகு நான் உடனே என் மருத்துவமனையிலிருக்கும் பாலஸ்த்தீனைச் நாட்டைச் சேர்ந்த லேடி டாக்டர் திருமதி மனால் என்பரின் அறைக்கு சென்று அவரிடம் 'ஆச்சரியமான செய்தி ஐந்து சிசேரியன் செய்த சவுதி பெண்மணிக்கு சிகிச்சை அளித்துவிட்டு வருகின்றேன்' என்றேன்.

அவர் உடனே இதில் என்ன ஆச்சரியம் உங்களுக்கு ஒன்பது சிசேரியன் செய்த பெண்மணியை காட்டவா? என்றதும் நான் வியந்தே போனேன், உங்களுக்கும் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அதேபோல் முதல் பிரசவம் சிசேரியன் என்றால் அடுத்த பிரசவமும் சிசேரியன்தான் செய்ய வேண்டும் என்று சொல்வதும் உண்மைக்கு புறம்பானது. சிசேரியன் செய்த பிறகும் அதற்கு அடுத்து சுகபிரசவத்திற்கு எவ்வளவோ வாய்ப்பிருக்கின்றது, எத்தனையோ பேருக்கு இதுபோல் குழந்தை பிறந்திருக்கின்றது.

தேவையில்லாத மருத்துவ செயல்கள்:

விஞ்ஞான வளர்ச்சியை தேவைப்பட்டால் தேவைக்கேற்று பயன்படுத்துவதில் தவறில்லை, ஆனால் இன்றோ அவைகளை பயன்படுத்துவது கட்டாய நடைமுறையாகிவிட்டது.

உதாரணத்திற்கு ஸ்கேன் எடுப்பதை சொல்லலாம். நகர்புறங்களில் ஸ்கேன் எடுக்காத கர்ப்பிணி பெண்கள் கிடையாது என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது, இதனால் தேவையில்லாத பொருளாதார நஷ்டம். தாயிக்கும் குழந்தைக்கும் உடல் நிலையில் தேவையில்லாத பிரச்சனைகள் உருவாகும். தேவையில்லாத ஸ்கேன், டெஸ்டுகள், மருந்துகளை தவிர்ப்பதே சுகப்பிரசவத்தை எளிதாக்கும்.

சிசேரியன் செய்வதால் உண்டாகும் நோய்கள்:

சிசேரியன் செய்யும்போது உடலில் எந்த இடத்தில் ஆப்ரேசன் செய்கின்றார்களோ அதற்கேற்றார்போல் உடலில் புதிய பிரச்சனைகள், பதிய நோய்கள் உண்டாகும்.

தொப்புளிலிருந்து நேர் கீழ்நோக்கி செய்யப்படும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-

மாதவிடாய் கோளாறுகள் (Irregular Menstruction) வெள்ளைப்படுதல் (Leokorrhea) அடிக்கடி நிறுநீர் போகுதல், சிறுநீர் கசிவு, படியேறும்போதும் சிரிக்கும்போதும் சிறுநீர் வெளியேறுதல், கர்பப்பை இறங்குதல், அடிவயிறு வீங்கி போகுதல்.

தொப்புளிலிருந்து 0,5,2,4 இஞ்சு தூரத்தில் வலது அல்லது இடது பக்கம் நேர்கீழ் செய்ய்ப்டும் சிசேரியன்களால் உண்டாகும் நோய்கள்:-

வயிற்றுவலி, அதிகமான மாதவிடாய், குடல் இறக்கம், கட்டிகள் உருவாகுதல், கற்பபை இறங்குதல், சீதபேதி, சிறுநீரக நோய்கள் அதிகமான வெள்ளைப்படுதல், வயிற்று போக்கு, சிறுநீருடன் இரத்தம் வெளியேறுதல், மலச்சிக்கல், குடல் வீக்கம், செரிமான கோளாறு, விலாவலி, தொப்புளிலிருந்து கீழ்பக்கம் இடமிருந்து வலமாக சிசேரியன் செய்யும்பொது மேலே கூறிய இரண்டு பிரிவுகளில் உள்ள நோய்களும் வர வாய்ப்பிருக்கின்றது.

சிசேரியன் செய்த இடத்தை பொருத்து நோய்கள் வரும், இதனால் பல பெண்கள் வாழ்வில் முழு ஆரோக்கியமும் தலைகீழாக மாறிவிடுகின்றது.

சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும்?:

கர்ப்பமானவர்கள் தற்போது என்ன செய்து கொண்டிரிருக்கின்றீர்களோ அதை செய்யாமல் இருந்தாலே போதும். நீங்கள் சாப்பிடும் தேவையில்லாத இரசாயன டானிக்குகள், விட்டமின் மாத்திரைகள் வேறு சில தேவையில்லாத மாத்திரைகள், அவசியமில்லா ஓய்வுகள், வேலை செய்யமல் இருப்பது, அவசியமில்லாத ஸ்கேன், அர்த்தமற்ற பரிசோதனைகள் இவற்றை முதலில் நிறுத்துங்கள்.

கர்ப்பமாக இருக்கும் நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்தால் எப்படி இருப்பீர்களோ? ஒரு இயற்கையான காட்டு பகுதியில் ஆதிவாசி பெண் எப்படி இருப்பாளோ? அதே போன்று இயற்கையான காய்கறி, கீரை, பழங்கள் சாப்பிட்டு தங்களால் இயன்ற வேலைகளை செய்து வந்தாலே போதும் உங்களுக்கு சுகப்பிரசவம்தான்.

ஆதிவாசிகள், குக்கிராமத்தில் வாழும் பெண்கள் இதுபோல பல கோடிக்கணக்கான மக்களும் மருந்து மாத்திரையின்றி இயற்கையான முறையில் சுகமான வாழ்க்கை வாழ்கின்றார்கள், சுகப்பிரசவத்தில் குழந்தைகளை பெற்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களுக்கு ஸ்கேன், விட்டமின் மாத்திரை, டானிக், டெஸ்டு இவையெல்லாம் என்னவென்றே தெரியாது.

இனிப்பு நீரும் இரத்த அழுத்தமும்:

கர்ப்பமாகும் போது ஆரோக்கியமாகயிருந்து அதன் பிறகு தங்கள் உடலில் சர்க்கரை (Diabetic) அதிகமாகியிருக்குமானால் அதற்காக கவலைபட தேவையில்லை, பிரசவம் ஆனவுடன் அது இயல்பு (Normal) நிலைக்கு வந்து விடும். அதேபோல் இரத்த அழுத்தம் (Blood Pressure) இருக்குமானால் அதற்காக பயப்பட தேவையில்லை, உடலில் எங்கோ பிரச்சனையிருக்கின்றது, அதனை சரிசெய்யவே இரத்த அழுத்தம் உண்டாயிருக்கின்றது. இது தேவையான இரத்த அழுத்தம். சம்பந்தப்பட்ட பிரச்சனை உடலில் சரியானவுடன் இரத்த அழுத்தமும் நார்மல் ஆகிவிடும், சரி செய்ய வேண்டியது உடல் பிரச்சனைகளை இரத்த அழுத்தத்தை அல்ல.

வலி இல்லா சுகப்பிரசவத்திற்கு சிகிச்சை அளிக்கும் முறைகள்:

கால் சுண்டுவிரலில் வெளிபக்க ஓரத்தில் நகமும் சதையும் சேருமிடத்தில் கைவிரலினால் அழுத்தி தேய்த்து (மஸாஜ்) விட வேண்டும், பிரசவ நேரம் நெருங்கியவுடன் இதை செய்ய வேண்டும். குழந்தை இக்கட்டான நிலையில் இருந்தால் கூட இதை செய்தால் குழந்தையின் நிலை பிரசவத்திற்கேற்ப சரியாகி சுகப்பிரசவமாகிவிடும். சாதாரண நிலையில் 1 அல்லது 2 நிமிடம் கசக்கி விட்டாலே போதும், பிரசவம் சிரமம் என்று தெரிந்தால் அடிக்கடியும் செய்துவிடலாம். பிரசவ நேரத்தில்தான் இதை செய்ய வேண்டும் மற்ற நேரத்தில் இதை செய்தால் தாய்க்கும் குழந்தைக்கும் ஆபத்து ஏற்படும்.

பிரசவ நேரத்தில் வலி அதிகமாக தெரியமலிருக்க வெளிப்புற கணுக்கால் மூட்டு எலும்பின் மத்திய பாகத்திற்கும் குதிகால் நரம்புக்கும் இடைப்பட்ட பாகத்தின் மத்தியில் உள்ள பகுதியில் விரலால் அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்ய வேண்டும் .

கர்ப்பத்திலிருந்து குழந்தைக்கு நோய் வராமல் தடுக்க:

கணவன், மனைவிக்கு சாதாரண நோய்களோ அல்லது தீராத நோய்களோயிருந்தால் அது கர்பத்திலிருக்கும் குழந்தைக்கு பரவாமல் தடுக்கும் சிகிச்சை சீன மருத்துவத்தில்தான் இருக்கின்றது. படத்தில் உள்ள குறிபபிட்ட இடத்தில் 3வது மாதத்தில் ஒரு முறை, 6வது மாத்தில் ஒருமுறை விரலால் லேசாக அழுத்தம் கொடுப்பதன் மூலம் பெற்றோர்களின் நோய்கள் குழந்தைக்கு பரவாமல் காப்பாற்றிவிடலாம். உட்புற கணுக்கால் மூட்டுக்கம் குதிகால் எலும்புக்கும் இடையில் உள்ள மத்திய பகுதியிலிருந்து நேர் மேலே உங்கள் ஆட்காட்டி விரல் அளவுபடி 5வது இஞ்ச் (cun) அந்த இடம் அமைந்துள்ளது (பார்க்க படம் ).

ஓர் உண்மையை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள், கர்ப்பமாகும் யாரும் தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கண் இப்படி வேண்டும், காது இப்படி வேண்டும், கை இப்படி வேண்டும், முகம் இப்படி வேண்டும் என்று யாரும் முயற்சி செய்வதும் இல்லை, அதற்காக யாரும் இறைவனுக்கு யோசனை சொல்வதும் இல்லை (நவூதுபில்லாஹ்), எல்லாம் இறையருளால் இயற்கையாக நலமாக அமைகின்றது. அதுபோலவே பிரசவமும் சுகமாக அமையும், தேவையில்லாத தொல்லைகள், மருந்துகள் கொடுக்கமலிருந்தாலே போதுமானது. எனவே நாம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து நம்மையும் நம் சந்ததிகளையும் மருந்துகள் மாத்திரைகள் என்னும் கொடிய இரசாயன விஷங்களிலிருந்து காப்பாற்ற முயற்சிப்போம், அதற்காக பாடுபடுவோம்..வெற்றி பெறுவோம்;..இன்ஷா அல்லாஹ்..

நன்றி: http://naturecuredr.com/articles/cesarean.ht

Cancer on Stomach: வயிற்றுப் புற்றுநோய்: உடனடி கவனிப்பு தேவை!

0 comments

வயிற்றுப் புற்றுநோய் வருவதற்கான, முக்கியமான பொதுவான காரணங்கள், வறுத்த உணவுகளையும், மதுபான வகைகளையும் அதிகமாக உட்கொள்ளுதல், புகைபிடித்தல் மற்றும் வயிற்றில் கட்டி வளர்தல் புற்றுநோய் ஏற்படக் காரணங்களாக அமையலாம். வயிற்றில் ஏற்படும் புண்கள், எப்போதாவது அரிதாகப் புற்றுநோயாக மாறக்கூடும்.

வயிற்றில் புற்றுநோய் உள்ள நோயாளிகளின் நோய் எவ்வாறு தெரிய வருகிறது?

இத்தகைய நோயாளிகளைத் தொடக்க நிலையில், அல்லது முற்றிய நிலையில் கண்டறியலாம். தொடக்க நிலையில் இருக்கும் நோயாளிகள், உணவு உட்கொள்ள முடியாமல் இருக்கலாம், மற்றும் உடல் எடை குறையக்கூடும். அடிவயிற்றின் மேல் பகுதியில், பாதிப்பு ஏற்படலாம். இது, உறுதியாக இருக்குமெனக் கூற முடியாது. முற்றிய நிலையிலான நோயாளிகளுக்கு, ரத்தகà � கசிவு ஏற்படலாம். இது, வாந்தி ஏற்படும் நிலையைக் கொண்டு வரலாம், அல்லது மலம் கெட்டியாகக் கறுப்பாக வெளியேறும். உணவுப் பாதையில் அடைப்பு ஏற்படுவதால், வாந்தி ஏற்படலாம். புற்றுநோய், கல்லீரலில் பரவிய நிலையிலும், நோயாளிகள் காணப்படலாம். இது, அரிதாக நுரையீரல் மற்றும் மூளைக்குக் கூடப் பரவலாம்.

வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கு சிறந்த சிகிச்சை எது?

வயிற்றில் ஏற்படும் புற்றுநோய்க்கு, அறுவை சிகிச்சையே சிறந்த சிகிச்சையாகும். ஆனால், நோய் அறுவை சிகிச்சை செய்யத்தக்க நிலையில் இருக்கவேண்டும். நோய் மிகவும் முற்றிய நிலையில் இருக்கக்கூடாது. மேலும், "கீமோதெரபி' மூலம் சிகிச்சை அளிக்கலாம். நோய் அதிக அளவில் பரவியிருந்தால், பின்னர் அறுவை சிகிச்சை கூடச் சாத்தியமாகாத�¯ .

இந்த நோய்களைக் கண்டறிவதற்காகப் பொது வாகச் செய்யப்படும் சோதனைகள் யாவை?

எண்டோஸ்கோபி, அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் ஆகியவை மூலம், அடிவயிறு சோதனை செய்யப்படுகிறது. வயிற்றின் பின்பகுதியில், உணவுக் குழாய், வயிறு, சிறுகுடல் ஆகியவற்றை நாம் காணலாம்.அடிவயிற்றுக்குள் நோய் பரவியிருப்பது பற்றியும், கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றியும், ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அறிந்து கொள்ள, ஸ்கேன் பரிசோதனை உதவும். சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை ஆகியவற்றை மதிப்பீடு செய்ய, ரத்தப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற ஏனைய உடலுறுப்புகளும், சோதனை செய்யப்படுகின்றன.வயிறு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களிடம் ரத்த சோகை ஏன் காணப்படுகிறது? பொதுவாக, ரத்த இழப்பினால் ரத்த சோகை ஏற்படுகிறது. கட்டியின் மேற்பரப்பிலிருந்து ரத்தம் வெளியேறுவதால், இந்த வகை நோயாளிகளிடம் ரத்த சோகை காணப்படுகிறது.நோயாளி சாப்பிட முடியாமலும் போகிறது. வாந்தி எடுத்து விடவும் கூடும். புற்றுநோய், நோயாளிகளின் ஊட்டச்சத்தை உறிஞ்சி விடுகிறது.

சுருக்கம்:

உணவுக்குழாய், வயிறு, சிறுகுடல் சம்பந்தப்பட்ட நோய்களைக் கண்டறிய, எண்டோஸ்கோபி கருவி மூலம் செய்யப்படும் சோதனை சிறந்த பரிசோதனையாகும்.உணவுக்குழாய் சம்பந்தப்பட்ட நோய்க்கான சிகிச்சை, முக்கியமாக மருத்துவ ரீதியில் அமைந்துள்ளது.உணவுப்பாதை சம்பந்தப்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், புகைப்பதும், மது அருந்துவது�® �் அவர்களுடைய நோயின் பாதிப்பை விரைவுபடுத்தும்.

- டாக்டர் விக்ரம்

Tembarature Trash: வெப்பநிலை மாசுபாடு

0 comments

அதிக வெப்ப கழிவு மற்றும் வெப்ப நீரோட்டம் போன்றவற்றின் காரணத்தால் வெப்ப நிலை மாசுபாடு உண்டாகிறது. வெதுவெதுப்பான நீரில் குறைந்த அளவு ஆக்ஸிஜன் உள்ளது. ஆகையால் அங்கக பொருட்களின் மக்கும் திறனானது குறைகிறது. பச்சை பாசியானது நிலப்பச்சை பாசியாக மாறுகிறது. பல விலங்குகளின் இனம்பெருக்கம் பாதிக்கிறது. ஒà ��ு நன்னீர் வகை மீன்களின் முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல் மற்றும் சால்மன் இனத்தின் முட்டையிடுதல் போன்றவை உயர் வெப்பநிலையில் ஏற்படும் போது தோல்வியடைகிறது.

வெப்பநிலை மாசுபாடு என்பது மனிதனின் செயலால் நீரில் ஏற்படும் தட்பவெப்பநிலையின் ஏற்றம் அல்லது இறக்கமாகும். மின் நிலையம் மற்றும் தொழிற்சாலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் நீரினால் வெப்பநிலை மாசுபாடு உண்டாகிறது. இயந்திரங்களின் வெப்பத்தை தனிக்க உதவும் நீரினை வெளியேற்றும் போது நீரிலுள்ள ஆக்ஸிஜனின் அளவு குற�¯ �வு மற்றும் உயர்வாழினங்களை பாதிக்கும் தன்மு பொன்றவற்றால் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. நகர மக்களின் பயன்பாடான சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்திவைக்கப்படும் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது, மேற்பரப்பு நீருடன் கலப்பதால் அதிக தட்பவெப்பநிலையைக் கொண்ட நீருக்கு ஆதாரமாக அமைகிறது.

பொட்ரீரோ உற்பத்தி நிலையம்

வெதுவெதுப்பாக உள்ள ஆற்றுகளில் மிகக் குளிர்ந்த தன்மையுடைய நீர்த்தேக்கத்த வெளியீடும் போது வெப்பநிலை மாசு ஏற்பட காரணமாக அமையும். இதனால் மீன்கள் (அதன் முட்டை மற்றும் கூட்டுப்புழு) ஆற்றின் தன்மை பாதிக்கிறது.

தற்போது இருப்பதை விட இன்னும் வெப்பநிலை மாசுபாடு அதிகமாகும் போது உலகவெப்பமய பாக்கலின் தாக்கம் அதிகரிக்கும். அதிக செயல் பணிகளை உள்ளடக்கிட தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் அதிக வெப்பத்திறனால் வெப்பநிலை மாசுபாடு அதிகரிக்கிறது. இந்த மாசுபாடு ஏற்படுவதற்கான விளக்கம் பின்வருமாறு.

சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாவில் பொட்ரீரோ உற்பத்தி நிலையின் வெப்பமான நீர் வெளியீடு :

உற்பத்திக்கான மூலப் பொருட்கள் (அங்கக மற்றும் இரசாயன பொருள்)
பல்வேறு செயல் முறைகளில் வெவ்வேறு வேதி வினை
அதிக வெப்ப திறனால் உற்பத்தியாகும் பயனற்ற பொருள் (திரவமாக) வெளியேற்றப்படுகிறது
சுற்றுப்புறச்சூழல் முறையின் தட்பவெப்ப நிலையை உயர்த்துதல்
வானிலை ஆராய்ச்சி மையத்தின் மூலம் வானிலை மாற்றத்தினை குறிப்பாக வளிமண்டல தட்பவெப்ப நிலையை அளவீடுகிறது. இந்த அளவீடப்பட்ட வரைபடமானது கடந்த 10 வருடம் அளவின் படி ஒப்பீடப்படுகிறது. இந்த ஒப்பீடானது தற்போது இருக்கும் வெப்பநிலையின் விகிதத்தை கூறுகிறது. இதன் அடிப்படையில் வெப்பநிலையை நிலையாக தக்கவைத்து கொள்ள மேற்கோள் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

ஆதாரங்கள் மற்றும் முறைகள் :

வெப்பநிலை மாசுபாட்டிற்கு காரணமான முக்கிய ஆதாரங்களின் வகைகள் பின்வருமாறு.

மின் நிலையங்களில் தொல்லுயிர் எச்ச எரிபொருட்களின் பயன்பாட்டால் உருவாக்கப்படும் மின்சக்தி
தொழிற்சாலையின் வசதிகளால் குளிர்விக்கப்படும் நீர்
கடற்கரை பகுதிகளில் காட்டழிப்பு
மண்ணரிப்பு
வேளாண்மை ஆதாரங்கள்
சூழலியலில் தாக்கம் - மிதவெப்பமான நீர்

உயர் வெப்ப நிலையானது நீரில் கரையும் ஆக்ஸிஜனின் (DO) தன்மையை குறைக்கிறது. இவ்வாறு ஆக்ஸிஜன் கரையும் தன்மை குறைவதால் மின், நீர் நில வாழிகள் போன்ற உயிரினங்களை பாதிக்கிறது. இவ்வகை உயிரினங்களின் வளர்சிதை மாற்றத்தின் விகிதமானது வெப்பநிலை மாசுபட்டால் அதிகரிக்கும் போது உயிரினங்களுக்கு தேவைப்படும் உணவில் குறைபாடுமà � ஏற்படுகிறது. இதனால் எண்ணிக்கையில் குறைகிறதுஇ சுற்றுப்புறச்சூழலில் மாற்றங்கள் ஏற்படும் போது உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதாவது உயிரினங்களுக்கு தகுந்த சூழலுக்கு இடப்பெயருகிறது. மீன்கள் மிதமான தண்ணீரில் வாழ்கிறது. இவைகள் இடம்பெயருவதில்லை ஆகையால் கிடைக்கும் ஆகாரத்தின் அளவு குறைகிறது. பழைய மற்றும் புதிய சுற்றுப்புறச்சூழலின் இணக்கமான உணவà � சங்கிலியில் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் முடிவாக உயிரியியல் பல்வகை குறைகிறது.

பெறப்பட்ட நீரினால் மீன் இறப்பு

தட்பவெப்பநிலையில் 1-2 டிகிரி செல்சியஸ் அளவு மாற்றங்கள் நிகழும் போது உயிரினங்களின் வளர்சிதை மாற்றத்திலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. மற்ற உயிரியல் அணுக்களும் பாதிக்கிறது. மேலும் சவ்வூடு பரவலுக்கு செல்லும் உயிரணுக்களின் ஊடுருவும் தன்மை, உயிரை புரதத்தின் திரளும் தன்மை, நொதி வளர்ச்சிதைமாற்றம் போன்றவற்றிலு ம் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் இனப்பெருக்கம் மற்றும் இறப்பு விகிதம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.

நீரில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் போது நீரித் தாவரங்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்தும் குறைந்த வாழ்க்கைச் சூழலையும், சிற்றினத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் காணப்படுகிறது. இதனால் இந்த பாசிகள் நீரில் ஆக்ஸிஜனின் அளவை குறைக்கிறது. ஒளிச்சேர்க்கையின் அளவு குறைவதால் தாவரத்தின் அதிக அடர்த்தி தாவரத்தின் சுவாச விகிதத்தை அதிகரிக்கிறது. இது வளமூட்டப்பட்ட நீர் நிலைகளுக்கு ஒத்தாகும். இந்த நீர்நிலைகளில் வேளாண்மை கனிம உரங்கள் பயன்பாட்டால் நீர்மூலக்கூறுகள் மாசுபடுகிறது. அதிக அளவு அதிகரிக்கும் வெப்பநிலையினால் நொதி அமைப்பில் நைட்ரஜன் மற்றும் டைசல்பைடு பிணைப்பு உடைந்து நொதியின் முறையை மாற்றுகிறது. இந்த நொதி மாறுபாட்டுடைய நீர்நிலையங்களில் லிப்பீடுகள் உடையும் திறனற்று இருக்கிறது. இதனால் ஊட்டக்குறையானது ஏற்படுகிறது.

வரையறுக்கப்பட்ட நிலையில் வெதுவெதுப்பான நீரினில் குறைந்தபட்ச அழிவையையும் நீர்நிலவாழினங்களின் உட்கிரக்கும் தன்மை அதிகமாகும் இருக்கும். இந்த நிலையானது பொதுவாக பருவம் சம்பந்தப்பட்ட நீருக்கு பொருத்தும். இதனை வெப்பநிலை செறிவூட்டம் எனலாம். குளிர்காலத்தில் அளவுக்கு அதிகமான வெப்பநிலை இருக்கும் போது நீர் மசுக்களானது மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் வெதுவெதுப்பான நீரினில் இருந்து நீர் பசுக்கள் ஒன்று கூடி கூட்டமாக இருக்கும். ஆனால் மின்நிலையத்தின் வெளியேற்றம் தடுக்கப்படும் போது குளிர்காலத்தில் நீர்பசுக்கள் இறந்துவிடும் நிலை ஏற்பட்டு எண்ணிக்கையானது குறைந்துவிடும்.

வெப்பநிலையானது, நன்னீரில் 700 பாரன்கைட், உப்புநீரில் 800 பாரன்கைட் மற்றும் வெப்பமண்டல பகுதியின் மீன்களில் 850 பாரன்கைட் ஆகும்.

சூழிலியலில் விளைவு - குளிர் நீர்

நீர்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் குளிர் நீரினால் ஆறுகளிலுள்ள மீன்கள் மற்றும் பெரிய முதுகெலும்பற்ற உயிரினங்கள் போன்றவற்றில் மாற்றங்களையும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆறுகள் வெதுவெதுப்பான வெப்பநிலையை உள்ளடக்கிய பகுதியாகும். இதனால் இந்த ஆறுகளில் நிலையான மீன் இனங்கள் மற்றும் குறிப்பிட்ட முதுகெலும்பற்à �± உயிரினங்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தட்பவெப்பநிலையானது நன்னீரில் 500 பாரன்கைட்டுக்கு குறைவாகவும் உப்பு நீரில் 750 பாரன்கைட்டாகவும், வெப்ப மண்டலத்தில் 800 பாரன்கைட்டாகவும் இப்பகுதியில் உள்ளது.

வெப்பநிலை மாசுக்கட்டுப்பாடு :

கஸ்டல் நீப்பர் மின் நிலைய குளிர்விப்பான் கோபுரம், டார்ட்மட், ஜெர்மனி

தொழிற்சாலை கழிவுநீர் :

ஐக்கிய நாடுகளில் வெப்பநிலை மாசுவானது தொழில் சம்பந்தம்பட்டான ஆதாரங்களான மின்நிலையம் பெட்ரோலில் துரிதம், காகித ஆலை, வேதிவினை நிலையம் இரும்பு நிலையம் மற்றும் நுகர் பொருட்கள் போன்றவற்றின் மூலம் ஏற்படுகிறது. இந்த மாசுக்கள் கட்டுப்படுத்தும் வழிகள் பின்வருமாறு.

குளிர்விக்கும் குளம் நீராவி, பரிமாற்றம் மற்றும் கதிரியக்கம் போன்றவற்றினால் மனிதனால் உருவாக்கப்பட்ட குளிர்விக்கும் குளம்
குளிர்விக்கும் கோபுரம் - ஆவியாகும் மற்றும் வெப்ப மாற்று முறையின் மூலம் தேவையற்ற வெப்பத்தை வளிமண்டலத்திற்கு அனுப்புதல்
ஒருங்கிணைந்த வெப்பம் மற்றும் மின்திறன் தொழிற்சாலை வெப்பமாக்குதலின் நோக்கத்திற்கு தேவையற்ற வெப்பத்திறன் மறுசுழற்சி செய்யும் செயல்முறை.
மேலே குறிப்பிட்ட முறைகளின் மூலம் ஒருமுறை குளிர்வித்தல் (OTC) என்ற இயக்கமுறையை கையாளும் போது தட்பவெப்பநிலையானது தேவயான அளவு குறைவதில்லை. எடுத்துக்காட்டாக ஸான் ஃப்ரான்சிஸ்கோவின் பொட்ரீரோ உற்பத்தி நிலையத்தில் OTC முறையை பயன்படுத்தும் போது வெளியேற்றப்படும் திறன் அளவானது சுற்றுப்புறத்திலுள்ள வெப்பநிலையை விட 100 செல்சியஸ் (200 பாரன்கைட்) அதிகமாக இருக்கிறது.

Gloabl Warming: குளோபல் வார்மிங்

0 comments
குளோபல் வார்மிங்  அதாவது பூகோள சூடேற்றம் என்பது சமீப காலமாக உலகளாவிய பிரச்சனையாக முன்னிறுத்தப்பட்டு வருகிறது. Intergovernmental Panel on Climate Change என்ற ஐநா அமைப்பு தனது அறிக்கையில் மனித யத்தனத்தால்தான் இது நிகழ்கிறது என்று அறிவியல் சமூகம் ஒப்புக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. கார்பன் க்ரெடிட் என்று சொல்லப்படும் கார்பன் கடன் திட்டம் விரைவிலேயே அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது. ஜெர்மனி, ஃபிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்த கார்பன் கடன் திட்டத்தில் தீவிரமாக இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுக்குமான கார்பன் கால்தடம் (Carbon Footprint) என்ற கருத்தாக்கத்தை பிரேசில், இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளின் மீது கியோடா ஒப்பந்தம் மூலம் திணிக்கும் முனைப்பில் ஐரோப்பிய நாடுகளும் ஐநா சபையும் முன்னணி வகிக்கின்றன. இதற்காக பல வகையிலும் சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்தபின் பசுமைச்சக்தி (Green energy) அரசின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, பசுமைச்சக்தி துறைகளுக்கும், பொருட்களுக்கும் பல மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களில் இதற்காக தனித்துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பசுமைச்சக்தி தொடர்பான தொடக்க நிலை தொழில்நிறுவனங்களில் பண முதலீடு பெருமளது அதிகரித்துள்ளது. பன்னாட்டு பெரு நிறுவனங்களும், எண்ணெய்க்கம்பெனிகளும்கூட பசுமைச்சக்தியை அதிகரிப்பது பற்றியும், கார்பன் கால்தடத்தைக் குறைப்பது குறித்தும் முனைப்பில் உள்ளதாய் செய்திகள் வருகின்றன. ஆக குளோபல் வார்மிங் என்ற ரயில் வண்டி நகரத் தொடங்கி விட்டது போலத்தான் தெரிகிறது. ஆனால் எதை நோக்கி என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. ஏனெனில் குளோபல் வார்மிங் குறித்த பல ஆதாரக் கேள்விகள் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன.
"என்ன பெருசா குளோபல் வார்மிங், உலகம் சூடாவுது அவ்ளோதான்".
ஒரு சனிக்கிழமை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஸ்பென்ஸர் ப்ளாசா செல்கிறீர்கள். உள்ள போய் அதே பிகர் அதே சமுசா அதே கிசுகிசு என்று பிடிக்காமல், "நான் கார்லயே இருக்கேன் நீங்க போய்ட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு  பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கார் ஜன்னல் மூடியிருப்பதாலும் வெளியே வெயிலாக இருப்பதாலும், கொஞ்ச நேரத்திற்கு பிறகு உள்ளே வேர்த்துக் கொட்டுகிறது அல்லவா. அது தான் குளோபல் வார்மிங்.
கடந்த நூறு ஆண்டுகளில் உலகத்தில் ஆவரேஜ் தட்ப வெட்பம் ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறியிருக்கிறது. ஏன் என்று விஞ்ஞானிகள் இன்னும்  விவாதித்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக உலகம் சூடாவதால், தட்பவெட்ப நிலையில் பலவித மாற்றங்கள் வர வாய்ப்புண்டு. பனிப்பாறைகள் சீக்கிரம் உருகி வெள்ளம் வரலாம், மும்பையை போல நிறைய மழை பெய்யலாம், கடலின் மட்டம் அதிகமாகி மெரினாவில் வாக்கிங் போகிறவர்களை இழுத்துச் செல்லலாம்.  ஆவரேஜ் தட்ப வெட்பம் ஒரு டிகிரி பாரன்ஹீட் எறிய அதே நூறு ஆண்டுகளில் கடல் மட்டம் ஆறு முதல் எட்டு இன்சுகள் உயர்துள்ளன.
உலகம் சூடாகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. அது இயற்கையாக் நிகழ்கிறதா அல்லது மனிதனின் அலட்சியத்தின் விளைவா என்பது தான் விவாதமே. மனிதனால் induce செய்யப்படுவதை Anthropogenic Effect என்கிறார்கள்.
அப்படிப்பட்ட ஒரு ஆன்த்ரோபோஜெனிக் விளைவுதான் க்ரீன் ஹவுஸ் எஃபக்ட்(Green house effect). மேலை நாடுகளில் குளிர் காலத்தில், க்ரீன் ஹவுஸ் என்று ஒரு குட்டிக் கண்ணாடி வீட்டில் செடிகளை வளர்ப்பார்கள். நம் ஊட்டியில் கூட உண்டு. இதற்கு காரணம், கண்ணாடி வீட்டிற்க்குள் சூரியனின் கதிர்கள் பாய்ந்து உள்ளே உள்ள செடிகள், குளிரால் அழியாமல் கதகத என்று இருக்கும். உள்ளே இருந்து வெப்பம் அவ்வளவாக வெளியே போகாது. உலகம் அந்த மாதிரி ஒரு க்ரீன்ஹவுஸ்.
சூரிய கதிர்கள் அட்மாஸ்பியர்(beer அல்ல) முலமாக பாய்கின்றன. அந்த atmosphereல் உள்ள CO2, நைட்ரஸ் ஆக்ஸைட், மீத்தேன் போன்ற சில வாயுக்கள் அந்த கண்ணாடி வீட்டின் கண்ணாடி போல செயல்படுகின்றன. அட்மாஸ்பியர் இல்லாமல் போனால் உலகம் ஒரு அறுபது டிகிரி உஷ்ணம் கம்மியாக இருக்கும். நாம் குளுரில் மாண்டு விடிவோம். உலகத்தின் உள்ளே வரும் அந்த உஷ்ணத்தை உலகம் உள்வாங்கிக் கொள்கிறது. அந்த உஷ்ணம் மீண்டும் எனர்ஜியாக மேலே எழும்புகிறது. அப்படி செல்லும் எனர்ஜியை முழுவதும் வெளியே விடாமல் உலகத்தை கதகத என்று வைத்துக்கொண்டிருகின்றன greenhouse gases.
ஆனால் அட்மாஸ்பியர் கார்பன் டையாக்ஸைட் அதிகமாகி, எந்த உஷ்ணமும் உள்ளே வரலாம் ஆனால் வெளியே போக முடியாமல் போய் விட்டால், ஸ்பென்ஸர் ப்ளாசா கார் போல உலகத்திற்கு வேர்த்துக் கொட்டும். அதுதான் குளோபல் வார்மிங். இதற்க்கெல்லாம் காரணம் நீங்கள்தான். நானும்தான்.
இதை நீங்கள் படிக்கும் போதும், நீங்கள் பாட்டு கேட்கும் போதும், குளோபல் வார்மிங்கை ஆளுக்கு கொஞ்சூண்டு அதிகமாக்கி கொண்டிருக்கிறோம். இது மட்டும் அல்ல, மெகா சீரியல் பார்க்கும் போதும், குளோபல் வார்மிங் கவுண்டர் ஏறிக் கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் தேவையாயிருப்பது மின்சாரம். அவை வருவதோ கரியை எரிப்பதால். க�® �ி மற்றும் எண்ணெய் எரிக்கும் போது அவை இந்த க்ரீன்ஹவுஸ் வாயுக்களை உருவாக்குகின்றன.
50 வருடங்களுக்கு முன் இருந்த இரண்டு பில்லியன் உலக ஜனத்தொகை, 50 வருடங்களில் ஆறு பில்லியனானது என்ற கேள்வி . அதாவது கடந்த 50 வருடங்களில் நாம் 4 பில்லியன் பேர் பிறந்து இந்த உலகத்தின் population pressureஐ அதிகமாக்கி இருக்கிறோம். வேறெப்போதும் இல்லாத அளவுக்கு உலகில் உள்ள நீர் நிலம் ஆகியவற்றை உபயோகித்து வருகிறோம்.
டைம் பத்திரிக்கையும் சமீபத்தில் இந்த உஷ்ணத்தை தணிக்க 51 வழிகள் என்று  நோட்ஸ் போட்டுள்ளது. வீடுகளில் fluorescent bulbs போடுங்கள் என்பதில் ஆரம்பித்து, கார்பன் வரி கட்டுங்கள், ஸிந்தடிக் உடைகளுக்கு பதில் vintage துணிவகைகளை பயன்படுத்துங்கள், உங்கள் மாத பில்களை ஆன்லைனில் செலுத்துவதால் பேப்பர் மிச்சமாகும், ஜன்னல் கதவை திறந்தால் காற்று வரும் ஏசியின் பயன் குறையும், இரண்டு மூன்று பிளைட் பிடித்து சியாட்டலிருந்து நியுயார்க் சென்றால் பெட்ரோல் அதிகமாவதால் ஒரே ப்ளைட்டில் காசதிகமானாலும் செல்லுங்கள், உங்கள் ஊரின் உழவர் சந்தையில் காய்கறி வாங்கினால் மிச்சமாகும் பெட்ரோல் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். முக்கியமாக எல்லா நிறுவனங்களும் தனது தொழிலாளர்கள் ரொம்ப தூரம் பயணம் செய்ய விடாமல் அவர்களின் வீட்டின் அருகிலோ அல்லது வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதை ஊக்குவியுங்கள் என்கிறார்கள். கொஞ்சம் அபத்தமாய் இருந்தாலும் நமக்கு நன்மை இருப்பதால் அப்படி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.

வானவெளியிலே முடிவற்ற கோள்கள் இருக்கையிலே நமது பூமியில் மட்டும் உயிரினங்கள் எப்படி செழிப்பா வாழ முடிகிறது? அதுக்கு முக்கிய பதில் நமது பூமியின் தட்ப வெப்பநிலைதான். இந்த மாதிரி தட்ப வெப்பநிலை இருப்பதால்தான் நமது பூமியின் தண்ணீர் எல்லாம் வற்றி போகாமல் நம் வாழ்வுக்கு வசதியாக இருக்கிறது. நீர் இல்லாத பூமியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதே போல் அளவுக்கு அதிகமாக உலகம் முழுவதும் குளிரா போய் நாங்கள் இங்கே இருக்க முடியாமல் போக முடியாதபடி ஒரு மிதமான தட்ப வெப்பநிலை இருக்கு.
இப்படி நம்ம பூமியின் தட்ப வெப்பநிலை நாங்க வாழகூடிய அளவுக்கு இருக்குதுன்னு பார்த்தா அதுக்கு முக்கிய கரணம் நம்மை சுற்றி இருக்கும் கற்று வெளிதான். ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், கார்பன் டையாக்ஸைட் எனப் பல வாயுக்குள் எல்லாம் கலந்து செய்த கலவை இந்த காற்றுவெளி. இதில கரியமில வாயு மற்றும் சில வாயுக்கள் (கார்பன் டையாக்சைடு, மீத்தேன்)சேர்ந்து சூரியக் கதிர்களால் நம் பூமி சூடு ஆகாமல், மற்றும் அந்த சூடு மொத்தமும் அப்படியே போய்விடாமல் இருக்க உதவுகின்றன. இவை பூமியின் மேற்பரப்பில் இயற்கையாக உருவாகும் தன்மை கொண்டவை. இவை போதிய அளவு வெப்பத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவசம் போல, பூமி உறைந்து போகாமல் பாதுகாக்கின்றன.
இயற்கையாக ஏற்படும் மாற்றங்களினால் காற்றுவெளியில் இந்த வாயுக்களின் சதவிகிதம் மாறுகிறது. அதனால் நம் புவியின் தட்பவெட்ப நிலையும் மாறுகின்றது. பல முறை நீண்ட உறைபனிக்காலமும் (Ice Age) அதன் பின் உண்டாகும் மாற்றங்கள் எல்லாம் இதனால்தான். இது போன்ற சுழற்சி இயற்கையாக ஏற்படுவதுதான். ஆனால் இப்பொழுது மனிதன் அதிக அளவில் நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற, பூமியிலிருந்து எடுக்கப்படும் படிம எரிபொருள்களை பயன்படுத்துவதால் மற்றும் காடுவெளிகளை அழிப்பதாலும் குளிர்சாதனப் பெட்டி, ஏர்கண்டிஷனர் போன்றவற்றில் உபயோகப்படுத்தும் நவீன இரசாயனங்களாலும் காற்றில் நாம் முன் சொன்ன வாயுக்களின் சதவிகிதம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் இன்று பூமியில் சராசரி வெப்பநிலை அதிகமாகிக் கொண்டே போகிறது. இதைத்தான் புவிவெட்பநிலை அதிகரிப்பு எனச் சொல்கின்றனர். இதனால் இன்று என்ன நடக்கிறது? கடந்த நூறு ஆண்டுகளில் நம்ம பூமியின் சராசரி வெப்பம் உயர்ந்திருக்கும் அளவு 0.74 ± 0.18 °C (1.3 ± 0.32 °F). கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் பூமியில் 0.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்து வருவதாக நியூயார்க்கில் உள்ள நாசாவின் கோடார்ட் வளி ஆய்வுக் குழு தலைவர் ஜேம்ஸ் ஹான்சென் தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் க்ரீன்லாந்தில் உரு�® �ிய பனிப்பாறைகளின் அளவு இரு மடங்காகிவிட்டது. இருபதாம் நூற்றாண்டில் கடல் மட்டம் 4 முதல் 8 இஞ்சு வரை உயர்ந்திருக்கிறது. உலகின் பல பகுதிகளில் மழையளவு சராசரிக்கு அதிகமாகவும் மற்ற இடங்களில் குறைவாகவும் பெய்யத் தொடங்கி இருக்கிறது. மலைப்பகுதிகளில் வராத மலேரியா போன்ற நோய்கள் தென்னமெரிக்காவின் ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 7000 அடிக்கு மேல் பரவத் துவங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 300 விதமான செடிவகைகளும் பறவை மிருகங்களும் வெட்பம் தாங்காமல் துருவப் பகுதி நோக்கி நகரத் தொடங்கி விட்டன. (20 ஆம் நூற்றாண்டின் கடைசி 50 ஆண்டுகளில் ஒவ்வொரு பத்தாண்டிலும் 1700 தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சி உயிரினங்கள் சராசரியாக 6.5 கிலோ மீட்டர் துருவ முனைகளை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருப்பதாக நேச்சர் என்ற பத்திரிக்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.)

குளோபல் வார்மிங்குக்கு பங்களிப்பு செய்யும் உலக நாடுகளும் கண்டங்களும்
இயற்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் பல நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும். இதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் அமைவதற்கு முன்பு, பூமி வெப்பம் கட்டுக்குள் இருந்தது. பூமி தாங்கக் கூடிய அளவிலிருந்து 2 முதல் 2.4 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் அதிகரித்தால் ஆபத்து இல்லை. அதற்கு மேல் அதிகரித்தால் ஆபத்து தான்.அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் வாயுக்களைக் கட்டுப்படுத்த, பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும்.
நீர் மின் நிலையங்கள், அணுசக்தி, சூரிய சக்தி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். குறைந்த எரிபொருளில் ஓடும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனித்தனியாக வாகனங்களில் செல்வதை தவிர்த்து ரயில்கள் மற்றும் பஸ்கள் போன்ற வாகனங்களில் செல்ல வேண்டும். பயிர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். பசுமையை அதிகரித்து, காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும். நெல் விளைச்சலில் புதிய யுக்திகளை பயன்படுத்த வேண்டும். கால்நடைகள் வளர்ப்பு மற்றும் எருவை பயன்படுத்தும் முறையை மேம்படுத்த வேண்டும். இதனால் மீத்தேன் வாயு வெளிப்படுவது குறையும். சிறந்த மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை சரியான முறையில் பொருத்த வேண்டும். குளிர்படுத்தவும், வெப்பப்படுத்தவும் சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு பல விஷயங்களை ஐ.நா., வலியுறுத்தியுள்ளது. இவற்றை பின்பற்றுவதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. தங்களின் வாழ்க்கை முறையையும், பொருட்கள் பயன்பாட்டில் மாறுதலையும் ஏற்படுத்தி கொள்வதாக வளர்ந்த நாடுகள் தெரிவித்துள்ளன. உலக மக்கள் தொகையில், 20 சதவீதம் பேரே வளர்ந்த நாடுகளில் உள்ளனர். ஆனால், உலகளவில் 50 சதவீத அளவுக்கு, சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் வாயுக்களை அந்த நாடுகள் தான் வெளிப்படுத்துகின்றன. அந்த நாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால் தான் புவி வெப்பமடைவதை தடுக்க முடியும்.
நன்றி-RADO
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf