How to improve the speed of FireFox: பயர்பாக்ஸ் நம் வசமாக

0 comments
பயர்பாக்ஸ் பிரவுசரின் வேகத்தை அதிகப்படுத்த ஒன்றுக்கு மேற்பட்டவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டது போல செயல்படவும்.

network.http.pipelining: இங்கே true என மாற்றவும்.

network.http.proxy.pipelining: இங்கே true என மாற்றவும்.

network.http.pipelining.maxrequests: இங்கே 8 என மாற்றவும். அடுத்து maxconnections என்பதனைத் தேடிப் பெறவும். இதில் 

network.http.maxconnections என்பதைப் பெறுவீர்கள். இதனை 96 என மாற்றவும். அடுத்து கிடைக்கும் 

network.http.maxconnectionsperserver என்பதில் மதிப்பை 32 என மாற்றவும்.

Aakash tablet, The Global indian tablet Aakash (Ubislate)

2 comments
Aakash tablet, the well proclaimed low-cost Aakash tablet from india to the world is now open for prebooking,Aakash tablet which will be manufactured in india by datawind will be prebooked and availabile from january 2012.

Aakash tablet features Android 2.2 where as advanced version of Aakash tablet features Android 2.3

Complete Aakash tablet PC specifcation

SpecificationsAakash (Ubislate7)Ubislate7+ (The upgraded version of Aakash)
AvailabilitySold OutLate January
PricingRs.2,500Rs.2,999
MicroprocessorArm11 – 366MhzCortex A8 – 700 Mhz
Battery2100 mAh3200 mAh
Operating SystemAndroid 2.2Android 2.3
NetworkWiFiWiFi & GPRS (SIM & Phone functionality)

Availability of Aakash tablet pc.



SpecificationsAakash (Ubislate7)Ubislate7+ (The upgraded version of Aakash)
AvailabilitySold OutLate January
Prebook nowAakash tablet Pre booking link



Offical details of Aakash tablet

Hardware in Aakash tablet:

Processor: Connexant with Graphics accelerator & HD Video processor

Memory : 256MB RAM / Storage (Internal): 2GB Flash

Storage (External): 2GB to 32GB Supported

Peripherals: 2 Standard USB port

Display and Resolution: 7 display with 800x480 pixel resolution

Software in Aakash tablet

OS: Android 2.2

Document Rendering

Supported Document formats: DOC, DOCX, PPT, PPTX, XLS, XLSX, ODT, ODP

PDF viewer, Text editor

Multimedia and Image Display

Image viewer supported formats: PNG, JPG, BMP and GIF

Supported audio formats: MP3, AAC, AC3, WAV, WMA

Supported video formats: MPEG2, MPEG4, AVI, FLV

Communication and Internet in Aakash tablet

Web browser - Standards Compliance: xHTML 1.1 compliant, JavaScript 1.8 compliant

Separate application for online YouTube video

Safety and other standards compliance

CE certification / RoHS certification



Watch about Aakash tablet

Here is the Aakash tablet support toll free no 1800-180-2180. and offical Aakash tablet page is http://www.aakashtablet.com/.

Does G-Mail Information's are Stolen: ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா?

0 comments
மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள்.ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது 'Last account activity' என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது.

கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும�¯ , அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது. வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி. முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப் பட்டிருந்தால், அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக் கின்றன.

இதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Details என்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.
இந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில் (பிரவுசர், மொபைல் போன், பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது. இந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை (யூசர் நேம், பாஸ்வேர்ட்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் மொபைல் போன் வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் மொபைல் போன் வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் அக்கவுண்ட் திருடு போயுள்ளது என அறியலாம்.

அடுத்ததாக, Location (IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை அணுகிய பத்து ஐ.பி. முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான ஐ.பி. முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால், உடனடியாக உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டினை மாற்றுவது நல்லது.
உங்களுடைய ஐ.பி. முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா? என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி. முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும். எடுத்துக்காட்டாக, 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் �® �ரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன் படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும். அதே போல, மொபைல் போன் வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.

ஒரே நேரத்தில், இருவேறு கம்ப்யூட்டர் களில், இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் அக்கவுண்ட்டினை அணுகினால், அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.
தகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று, உஷார் ஆகலாமே? என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து அக்கவுண்ட் பார்க்கப்பட்டதாக இருந்தால், அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.

நம் அக்கவுண்ட் தகவல்கள் திருடப் பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால், பாஸ்வேர்ட் மாற்றுவதுடன், கூகுள் http://www.google.com/help/security/ என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின் பற்றவும்.நான் அடிக்கடி கம்ப்யூட்டர், இணைய இணைப்பு, மொபைல் போன் ஆகியவற்றை மாற்றி என் ஜிமெயில் தளத்தினை அணுகுகிறேன். எனவே இது போலக் காட்டப்படும் எச்சரிக்கை பட்டியல் எனக்குத் தேவையில்லை என்று கருதுகிறீர்களா? அப்படியானால், இந்த வசதி இயங்குவதை நிறுத்திவிடலாம். இந்த பட்டியலின் கீழாக இதற்கான வசதி தரப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ஆப்ஷன் தெரிவித்து ஒரு வாரம் கழித்தே இந்த வசதி நிறுத்தப்படும்.

MIcrosoft Mango: இந்தியாவில் மைக்ரோசாப்ட் மாங்கோ

0 comments
விண்டோஸ் மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை MIcrosoft Mango மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் இந்தியாவில் அறிமுகப் படுத்தியது. இதற்கு குறியீட்டுப் பெயராக "மாங்கோ' MIcrosoft Mango என மைக்ரோசாப்ட் பெயரிட்டி ருந்தது. இந்த சிஸ்டம் வெளிநாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர் இந்தியாவிற்கு வந்துள்ளது.

விண்டோஸ் மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் "மாங்கோ' MIcrosoft Mango தரும் இன்டர்பேஸ் மிக எளிதானதாகவும், பயனாளர் விரைவாகப் பயன்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது. இதனை ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தலாம். இதில் வழக்கமான ஐகான்களுக்குப் பதிலாக, ஓடுகள் போல அப்ளிகேஷன்கள் காட்டப் படும். போனில் புதியதாக இணைக்கப் படும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் இசை பைல்களுக்கும் இதே போல ஓடுகள் பாணியில் ஐகான்களை உருவாக்கலாம்.

இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், மொபைல் போனுக்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 தரப்பட்டுள்ளது. எனவே, பயனாளர்கள், பெர்சனல் கம்ப்யூட்டரில் பெறும் இணைய தேடல் அனுபவத்தினை இதில் பெறலாம். அத்துடன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்கலாம். வேர்ட், எக்ஸெல், ஒன் நோட் மற்றும் பவர்பாய்ண்ட் அப்ளிகேஷன்களின் மொபைல் பதிப்பு இதில் தரப்பட்டுள்ளது.

இந்த சிஸ்டம் மூலம் விண்டோஸ் லைவ் ஸ்கை ட்ரைவினை பயனாளர்கள் எளிதாக அணுக முடியும். இதனால், தங்கள் பைல்களை ஸ்கை ட்ரைவில் சேவ் செய்து வைக்க முடியும். மேலும் ஆபீஸ் 365 மற்றும் ஷேர் பாய்ண்ட் தளங்களுடன் இணைக்கவும் இயலும்.

சமூக இணைய வலைத் தளங்களுக்கு நேரடி இணைப்பு தரப்பட்டுள்ளது. டெக்ஸ்ட் மற்றும் இந்த தளங்களுடன் ஒரே நேரத்தில் இயங்க முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட இமெயில் இன் பாக்ஸ்களை அமைத்து இயக்க முடியும். வாய்ஸ் டு டெக்ஸ்ட் மற்றும் டெக்ஸ்ட் டு வாய்ஸ் இருப்பதால், கரங்களைப் பயன்படுத்தாமல் செயல்பட முடியும்.

பிங் தொடர்பு கொண்டு ஒரு முகவரியைத் தேட முடியும். நாம் செல்ல வேண்டிய திசைகளை அறிய முடியும். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென ஏறத்தாழ 33,000 அப்ளிகேஷன்கள் தயாரிக்கப்பட்டு இணைய தளத்தில் கிடைத்து வருகின்றன.ஸ்மார்ட் போன் சந்தையில் தன் பங்கினை இழந்து வரும் நோக்கியா நிறுவனம், விண்டோஸ் சிஸ்டம் மூலம் அதனைப் பெற்றுவிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் அதற்கான ஸ்மார்ட் போனை இன்னும் முடிவு செய்யவில்லை.

இந்நிலையில், எச்.டி.சி. (ரேடார் மொபைல் போன் - விலை ரூ.23,990) மற்றும் ஏசர் (அல்லக்ரோ மொபைல் - விலைரூ.16,000 என்ற அளவில் இருக்கலாம்.)நிறுவனங்கள், விண்டோஸ் மாங்கோ ஆப்பரேட்டிங் MIcrosoft Mango சிஸ்டத்துடன் கூடிய மொபைல் போன்களை, இந்த சிஸ்டம் அறிமுகப் படுத்தும்போதே விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது. சாம்சங் தன் ஆம்னியா டபிள்யூ ஸ்மார்ட் போனை விண்டோஸ் சிஸ்டத்துடன் ஏற்கனவே கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி வருகின்றன. இதற்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் என எடுத்துக் கொண்டால், நோக்கியாவின் சிம்பியன் 68% பங்கினைக் கொண்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் படா 15%, ஆண்ட்ராய்ட் 10% கொண்டுள்ளன. மாங்கோ சிஸ்டத்தினால் MIcrosoft Mango, இந்நிலை தலை கீழாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

Free Audio & Video Convertor's: இலவச ஆடியோ/வீடியோ மாற்றிகள்

0 comments
இலவச புதிய புரோகிராம்கள் இணையத்தில் பதியப்படுகையில், அவற்றில் ஒரு கண் வைத்து பயன்படுத்திப் பார்ப்பது என் பழக்கம். அந்த வகையில் சென்ற வாரம் தரப்பட்ட இரண்டு புரோகிராம்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளன. இன்ஸ்டால் செய்திடவும், இயக்கவும் மிக எளிதாகவும் உள்ளன. வேகமாகவும் செயல்படுகின்றன.

ஆடியோ பைல்கள் பல பார்மட்களில் இணையத்தில் கிடைக்கின்றன. வெளியேயும் உருவாக்கப்பட்டு நம்மை அடைகின்றன. MP3, WMA, WAVE, FLAC, AAC, M4A, and மற்றும் OGG எனப் பல பார்மட்டுகளில் இவை உள்ளன. இவற்றில் சிலவற்றை மட்டுமே சில கம்ப்யூட்டர்களில் இயக்க முடியும். பெரும்பாலான ஆடியோ இயக்கும் புரோகிராம்கள், அனைத்தையும் இயக்கு வதில்லை. எனவே தான் அவற்றின் மீது கிளிக் செய்தவுடன், விண்டோஸ் இதனை இயக்க புரோகிராமà � ஒன்றை இணையத்தில் தேடவா என்று கேட்கும். இந்தச் சூழ்நிலையில் இது போன்ற ஆடியோ பார்மட் மாற்றும் புரோகிராம்கள் நமக்குத் தேவையாய் உள்ளன.

இந்த இலவச ஆடியோ கன்வர்டர் புரோகிராமினைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://www.freemake.com/free_audio_converter/. மேலே குறிப்பிட்ட அனைத்து பார்மட்களையும் இந்த புரோகிராம் கையாண்டு, நமக்குத் தேவையான பார்மட்டில் மாற்றித் தருகிறது.இதே போல பல வீடியோ பார்மட் பைல்களில் இருந்து, ஆடியோவினை மட்டும் பிரித்தெடுத்து, நாம் குறிப்பிடும் பைல் பார்மட்டில் தருகிறது. FLV மற்றும் MPEG பார்மட் பைல்களில் இந்த சோதனையை நடத்திய போது சிறப்பாக இயங்கியதனை உறுதி செய்திட முடிந்தது.

பார்மட் மாற்றிய ஆடியோ பைல்களை ஐ-ட்யூன் வகையில் வேண்டும் என விரும்பினாலும், அப்படியே மாற்றிக் கொள்ளலாம். ஐ-போன், ஐ-பாட் ஆகிய சாதனங்கள் இயக்கும் வகையிலான பார்மட்களிலும் மாற்றிக் கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆடியோ பைல்களை இணைக்கலாம்.

இதே நிறுவனம் வீடியோ பார்மட்களை மாற்றித் தரும் வீடியோ கன்வர்டர் புரோகிராமினையும் (Freemake Video Converter.) கொண்டுள்ளது. இதுவும் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் கொண்டு சிறப்பாக இயங்குகிறது. இந்த புரோகிராம் http://www.freemake.com/free_video _converter/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. , AVI, MP4, MKV, WMV, MPG, 3GP, 3G2, SWF, FLV, TOD, AVCHD, MOV, DV, RM, QT, TS, MTS ஆகிய பார்மட் வீடியோக்களை இது கையாள்கிறது. டிவிடிக்களில் இருந்து வீடியோ பைல்களைப் பிரித்து தனி பைலாக்கித் தருகிறது. YouTube, Facebook, MTV, Vimeo, Dailymotion, ComedyCentral போன்ற 50 க்கும் மேற்பட்ட இணைய தளங்களிலிருந்து கிடைக்கும் வீடியோ பைல்களை மாற்றித் தருகிறது.
 
இந்த புரோகிராமினைப் பயன்படுத்தி, வீடியோ, போட்டோ ஸ்லைட் ‌ஷோ, எம்பி3 ஆகிய பைல்களை யு-ட்யூப் தளத்திற்கு அப்லோட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் எம்பி3 பைல்களைக் கொண்டு இந்த புரோகிராம் மூலம் ஸ்லைட் ஷோக்களை உருவாக்கலாம். பல வீடியோ பைல்களை இணைக்கலாம்.
இந்த ஒரு வீடியோ கன்வர்டர் புரோகிராம் தான், CUDA மற்றும் DXVA ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களையும் பயன்படுத்துவதாக, இதனைத் தயாரித்து வழங்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த இரண்டு புரோகிராம்களும் விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்குகின்றன.

விண்டோஸ் 8 | Windows 8 In Tamil

0 comments
விண்டோஸ் 8 குறித்து சென்ற இரண்டு வாரங்களில் பல தகவல்கள் தரப்பட்டன.

மைக்ரோசாப்ட் தொடர்ந்து ஏதேனும் புதிய செய்திகளை, விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து வழங்கிக் கொண்டுள்ளது. அவற்றில் சில:

பல மானிட்டர் வசதி: கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோரில், சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை வைத்துப் பயன்படுத்துவார்கள். இந்த பயன்பாடு பல வசதிகளைத் தரும். ஒருவர் இயக்க, பலர் கவனிக்க வேண்டிய செயல்பாடுகள், கற்றுத் தருவதற்கான வழிகளை மேற் கொள்ளுதல் போன்றவற்றிற்கு இது உறுதுணையாக இருக்கும். ஆனால், இதில் ஒரு சில இழப்புகளும் இருந்தன. குறிப்பாக கம்ப்யூட்டருக்கான நேரடி இணைப்பு பெற்ற மானிட்டர் தவிர, மற்றவற்றில் டாஸ்க் பார் கிடைக்காது. இந்த குறை இப்போது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீக்கப் பட்டுள்ளது. கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ள அனைத்து மானிட்டர்களிலும், டாஸ்க் பார் தெரியும்படி அமைக்கப் பட்டுள்ளது. "Multiple Display" என்ற புதிய பிரிவு, "Taskbar Properties" டயலாக் பாக்ஸில் தரப்படுகிறது. இவற்றின் மூலம் மற்ற மானிட்டர்களில் டாஸ்க் பார் காட்டப்படும் எனத் தெரிகிறது. ஆனால் அனைத்து செயல்படும் ஐகான்களும் காட்டப்படுமா, அல்லது அடிப்படையில் முதலில் தோன்றும் ஐகான்கள் மட்டும் கிடைக்குமா என இனிமேல் தான் தெரிய வரும்.

Useful Website for Students | பயனுள்ள நான்கு இணைய தளங்கள்

0 comments

Useful Website for Students பயனுள்ள நான்கு இணைய தளங்கள் 
 
Useful Website for Students, மாணவர்கள் தங்களது கல்வித்திறனை வளர்த்துக்கொள்ள பல இணைய தளங்கள் உதவுகின்றன. கீழே உள்ள இணைய தளங்கள் மாணவர்களுக்கு மட்டுமல்ல? Useful Website for Students பெரியவர்களுக்கும் உதவும். 

1 . MEDTROPOLIS.COM the first Useful Website for Students , நம் உடலில் உள்ள பாகங்கள் எவை அவற்றின் பிரிவுகள், அவற்றின் தொழிற்பாடுகள் என்பவற்றை அனிமேஷன் மற்றும் படங்கள் வாயிலாக விளக்குகிறது இந்த தளம் . இந்த தளம் ஸ்பானிய மற்றும் ஆங்கில மொழிகளில் தகவலை தருவதால் முதலில் மொழியினை தெரிவு செய்து உடல் பாகங்கள் ஒவ்வொன்றாக கற்றுகொள்ள முடியும் . 

2. QUOTEDP.COM is the second Useful Website for Students இந்த தளத்தில் உலக புகழ்பெற்ற அறிஞர்களின் பொன்மொழிகள், தத்துவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 

3. SCIENCEHACK.COM is the third Useful Website for Students இது ஓர் வீடியோ தளமாகும். இங்கு கணிதம் , இரசாயனவியல் , கணணி என மேலும் பல தலைப்புக்களில் வீடியோக்கள் தரப்பட்டுள்ளன. 

4. GOASKALISE.COM is the fourth Useful Website for Students கொலம்பிய பல்கலை கழகத்தால் நடத்தப்படும் இணையத்தளமாகும். இங்கு உடல் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ குறிப்புக்களை கற்றுகொள்ள முடியும்.  உங்கள் சந்தேகங்களை வினாக்களாக அனுப்பி பதில் பெறலாம் .

Value Added Services- Mobile Company's Day Looting | நம்மிடமிருந்து கோடிகளைச் சுருட்டும் டெலிகாம் நிறுவனங்கள்!

0 comments
37,00,80,000 ரூபாய் சுருட்டல்!

சுருட்டியது யார்?

செல்போன் சேவை தரும் நிறுவனங்கள்.

சுருட்டியது யாரிடமிருந்து?

செல்போன் பயன்படுத்தும் நம்மிடமிருந்து.

நிஜமாகவா என்று அதிர்ச்சி அடைபவர்களுக்கு ஒரு கேள்வி. VAS என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? தெரியாவிட்டாலும் பரவாயில்லை. VAS என்ற பெயரில் உங்களுக்கே தெரியாமல் அவ்வப்போது பணம் திருடப்படுகிறது என்ற உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

Value Added Service என்பதின் சுருக்கமே VAS.

மாதம் இருபது ரூபாயில் இருந்து தினமும் இருபது ரூபாய் வரை பணம் கறக்கும் இந்த வசதிகளைப் பற்றி நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

 உங்களுக்கு ஃபோன் செய்யும்போது குறிப்பிட்ட பாடலை காலர் டியுனாக ஒலிக்க விடுவது, தூங்கி எழுந்தவுடன் ராசிபலன் சொல்வது, காதல் டிப்ஸ் கொடுப்பது, மருத்துவ ஆலோசனை சொல்வது, கிரிக்கெட் ஸ்கோர் சொல்வது, டிராபிக் ஜாம் என அலறுவது உட்பட ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கட்டணம்.

இப்படி பல சேவைகள் இருப்பதும், அதற்க்கென்று தனித்தனி கட்டணங்கள் இருப்பதும் தவறில்லை. ஆனால் இந்த சேவைகளை நீங்கள் கேட்காமலேயே, உங்கள் தலையில் கட்டி, உங்களிடம் சொல்லாமலேயே, பணத்தையும் எடுத்துக் கொள்வதில்தான் புத்திசாலித்தனமான சுருட்டல் துவங்குகிறது.

இராஜபாளையத்தை அடுத்துள்ள சொக்கநாதன் புத்தூர் என்ற சின்ன கிராமத்திலிருந்து என் சித்தப்பா சென்னை வந்தார். வேட்டி மடிப்புக்குள் செல்போன் வைத்திருக்கும் அவரை மொபைலில் அழைத்தபோது, லேட்டஸ்ட் பாடல் காலர் டியுனாக ஒலித்தது. அவரிடம் எப்படி இந்தப் பாட்டை காலர் டியுனா வச்சீங்க என்றேன். அவ்வளவுதான் பொங்கிவிட்டார்.

அட நீ வேறப்பா..இந்த பச்சை பட்டனை அமுக்கினா பேசலாம். சிவப்பு பட்டனை அழுத்தினா கட் பண்ணலாம். இதுதான் எனக்குத் தெரியும். என்கிட்ட போய் இந்த பாட்டு எப்படி வந்ததுன்னு கேட்டா எனக்கு எபபடித் தெரியும்? நான் இந்தப் பாட்டையெல்லாம் கேக்கறதே இல்ல. ஆனா அப்பப்போ பாட்டு மாறிக்கிட்டே இருக்கு. திடீர் திடீர்னு 30 ரூபா போயிடுது. இத எப்படி தடுக்கறதுப்பா என்றார் பரிதாபமாக..

கடந்த வாரம் ஐதராபாத் செல்ல வேண்டியிருந்தது. புறப்படும் முன் எனது மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். 98ரூபாய்க்கு ஏதோ பாக்கேஜ் இருக்கிறது, ஒரு மாதம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்கள். நானும் பணத்தை கட்டிவிட்டு, எப்போது ஆக்டிவேட் ஆகும் என்றேன். ஈஸி ரீசார்ஜ் செய்தாச்சு சார். நீங்க உங்க போனில் என்னைக்கு செட்டப் செய்கிறீர்களோ, அன்றிலிருந்து ஒரு மாதம் வேலிடிட்டி என்றார்கள். காரில்தான் பயணம். உடன் வந்த நண்பர் டாட்டா கார்ட் இணைப்புடன் லேப்டாப் கொண்டு வந்திருந்ததால், நான் எனது ஃபோனில் இன்டர்நெட்டை ஆக்டிவேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லாது போயிற்று.

பயணமெல்லாம் முடிந்து திடீரென மொபைல் இன்டர்நெட்டுக்கு பணம் கட்டியது ஞாபகம் வந்தது. உடனே கஸ்டமர் கேர் ஆலோசனையின் படி இன்டர்நெட்டை ஆக்டிவேட் செய்தேன். செய்தவுடனேயே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இன்னும் ஒரு நாள்தான் வேலிடிட்டி இருக்கிறது என்றது ஒரு குரல். உடனே இன்டர்நெட் ரீசார்ஜ் செய்த கடையை தொடர்பு கொண்டேன். கடைக்காரரோ கூலாக, ரீ சார்ஜ் செய்த அன்றிலிருந்து ஒரு மாதம் கணக்கு சார். வாங்கின அன்னைக்கே ஆக்டிவேட் செய்து பயன்படுத்தாதது உங்க தப்பு என்றார். சிறிய வாக்குவாதத்திற்குப் பின் கஸ்டமர் கேரிடம் பேசிக் கொள்ளுங்கள் என்றார். சொன்னால் நம்ப மாட்டீர்கள், அரை நாள் முயற்சித்தால், ஒரே ஒரு முறைதான் கஸ்டமர் கேர் நபரை லைனில் பிடிக்க முடிகிறது. எனது 98 ரூபாய் போயே போச்.

குமார் என்கிற சேல்ஸ் மேனேஜர். ஊர் ஊராக பயணம் செய்பவர். ஊரிலிருந்தால் மோட்டர் பைக்கிலேயே சுற்றுபவர்.  இனி மிஸ்டு கால் பற்றி கவலைப் படவேண்டாம். மிஸ்டு கால் நம்பர்கள் எல்லாம் உங்களுக்கு எஸ்எம்எஸ்ஆக வரும் சேவை ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி வந்ததாம். நாம் கேட்காமலேயே இந்த சேவை நமக்கு வந்தது எப்படி என்று குழம்பிய நண்பர், பேலன்ஸ் செய்திருக்கிறார். 30 ரூபாய் அபேஸ் ஆகியிருந்ததாம். எரிச்சலடைந்த குமார், திரும்பத் திரும்ப கஸ்டமர் கேரை தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டாராம். பலன் ஏதுமில்லை. மாதம் 30 ரூபாய் அவருடைய மொபைலில் இருந்து கரைந்து கொண்டே இருக்கிறது.

2005ல் இருந்து இந்த புற வழி சுருட்டல் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அப்போதெல்லாம் ஏதாவது ஒரு சேவை 3 மாதத்துக்கு இலவசம் என்பார்கள். இலவசம் தானே என்று நீங்களும் 3 மாதமும் பயன்படுத்துவீர்கள். நான்காவது மாதம், உங்கள் அக்கவுண்டிலிருந்து அந்த சேவைக்காக பணம் உங்களைக் கேட்காமலேயே உருவப்பட்டுவிடும். இதை நீங்கள் கண்டுபிடித்து கேட்டால் உருவுதல் நிற்கும். இல்லையென்றால் துளித் துளியாக உங்கள் பணத்தை சுரண்டுவார்கள்.

செல்போன் சேவை நிறுவனங்களின் இது போன்ற அராஜகங்களை எல்லாம் கட்டுக்குள் வைக்கத்தான் TRAI (Telecom Regulatory Authority of India) என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. இலவசமாக ஒரு சேவையை சில காலம் வழங்கிவிட்டு, வாடிக்கையாளரின் சம்மதத்தை கேட்காமலேயே திடீரென பணம் வசூலிப்பது கூடாது என்று ஒரு கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. ஆனால் செல்போன் சேவை கொள்ளையர்கள் அசரவில்லை. இந்த சேவை வேண்டாம். இதற்கு நான் பணம் கட்ட மாட்டேன் என்று வாடிக்கையாளர்கள் SMS அனுப்பினால் பணம் பிடுங்கப்படமாட்டாது என்று புத்திசாலித்தனமாக பதில் சொன்னார்கள்.

ஒரு பெரிய செல்போன் சேவை நிறுவனத்தின் பெரிய பொறுப்பில் இருந்த நண்பர் ஒருவர் (பெயரை வெளியிடக் கூடாது என்ற நிபந்தனையுடன்) கூறிய தகவல் என்ன தெரியுமா? கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வாடிக்கையாளர்களிடம் அவர்கள் கேட்காமலேயே பணத்தை உருவிக் கொண்டு, ஒரு சேவையை திணிக்கிறோம். இதை கவனித்துவிட்டு, எனக்கு வேண்டாம் என்று எங்களை அணுகுபவர்கள் 200-300 பேர்களே. அவர்களிலும் 50-60 பேர்தான் எங்களுடைய எல்லா இழுத்தடிப்புக்கும் அசராமல், தங்கள் பணத்தை வாபஸ் பெறுகிறார்கள். மற்றவர்கள் அலுத்துப் போய் விட்டுவிடுகிறார்கள் என்றார். ஒரு இலட்சம் பேரிடம், அவர்களின் சம்மதம் இன்றி மாதம் 30 ரூபாய் உருவப்பட்டால் அதற்குப் பெயர் சேவையா? கொள்ளையா?

TRAI சர்வ வல்லமை பொருந்தியதாக கூறப்பட்டாலும், அவ்வப்போது சில அறிக்கைகளுடன் நின்றுவிடுகிறது. செல்போன் சேவை நிறுவனங்களின் இந்த அராஜக பணச் சுருட்டலை கண்டும் காணாதது போலத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. தங்கள் மேல் திணிக்கப்படும் இந்த சேவை தேவை இல்லை என்று வாடிக்கையாளர்கள் SMS அனுப்ப வேண்டியதில்லை, என்று ஒரு திருத்தம் கொண்டு வந்தது. ஆனால் கில்லாடி கிரிமினல் செல்போன் நிறுவனங்கள், அதற்கும் ஒரு சால்ஜாப்பு கண்டுபிடித்தன. நாங்கள் வாடிக்கையாளருக்கு போன் செய்தோம். அவர் ஆமாம் என்றார். அதனால்தான் இந்த சேவையைத் தந்தோம் என்று புதுக்கதை சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களோ, எங்களுக்கு எந்த போனும் வரவில்லை என்றார்கள். சிலரோ போன் வந்தது, நான் வேண்டாம் என்றேன். ஆனாலும் எனக்கு அந்த சேவை திணிக்கப்பட்டு பணம் உருவப்பட்டுவிட்டது என்றார்கள்.

வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டதாக கூறிக் கொள்ளும் செல்போன் நிறுவனங்கள், அவற்றை பதிவு செய்து வைப்பது இல்லை.  வேண்டுமென்றே அவை இப்படிச் செயல்படுவதால்  இவற்றை சரி பார்க்கவும் வழியில்லை. எனவே TRAI மீண்டும் தன் கட்டுப்பாடுகளை இறுக்கியது. இனிமேல் ஏதாவது சேவையை ஒரு வாடிக்கையாளருக்கு தந்தால், SMS, Email அல்லது Fax வழியாக எழுத்து பூர்வமாக சம்மதம் பெற வேண்டும். சம்மதம் தரும்போது சேவை பற்றிய முழு விபரங்களையும், கட்டணம் உட்பட அனைத்தையும் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.  SMS மற்றும் Email மூலமாக Acknowledgement பெற வேண்டும். எனறு புது விதிகளை உருவாக்கியது. ஆனால் செல்போன் சேவை நிறுவனங்கள் இந்த விதிகள் எதையும் கடைபிடிப்பதாகத் தெரியவில்லை. TRAIக்கு அஞ்சுவதாகத் தெரியவில்லை.

ஒரு காய்கறி எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் மாதம் 4000 ரூபாய் சொற்ப வருமானத்திற்கு, காய்கறிகளை சுத்தம் செய்யும் வேலையில் உள்ள கவிதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவருடைய மொபைல் போனிலிருந்து தினமும் 20 ரூபாய் போய்க் கொண்டே இருந்ததாம். நண்பர்கள் யாரோ விளையாடுகிறார்கள் என்று அசட்டையாக இருந்தவர், பாதிச் சம்பளம் வெட்டியாக கரைவதை உணர்ந்தவுடன், விஷயம் தெரிந்த பக்கத்துவீட்டுக் காரரிடம் விசாரிக்கச் சொல்லியிருக்கிறார். அவர் விசாரித்து தெரிந்து கொண்டது என்ன தெரியுமா? கல்பனா GPRS வேண்டுமென்று கேட்டுக் கொண்டாராம். அதனால் தினமும் 20 ரூபாய் பிடித்துக் கொண்டார்களாம். GPRSனா என்ன என்று கேட்கும் அந்த பரிதாபப் பெண்ணை போல பணம் பறிகொடுப்பவர்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கான பேர்.

தினமும் பூ விற்று பிழைப்பு நடத்தும் ஜெயாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

அண்ணா கொஞ்சம் இத இன்னான்னு பாரேன். யாரோ ஒரு பொண்ணு போன் பண்ணுச்சு. இங்கிலீஷ்ல இன்னா பேசுச்சுன்னே புரியல. நான் கட் பண்ணிட்டேன். இப்போ இன்னாடான்னா, 30 ரூபாய் பூடுச்சு என்றாள். போனை வாங்கிப் பார்த்தால் அதில் ஒரு SMS வந்திருந்தது. அதாவது தினசரி மெடிக்கல் டிப்ஸ் தருவதற்க்காக 30 ரூபாய் வசூலிக்கப்பட்டுவிட்டதாம். ஆங்கிலம் தெரியாத ஒரு பெண்ணிடம், ஆங்கிலத்தில் பேசி பணத்தை உருவும் இந்த அராஜகத்துக்கு என்ன பெயர்?

மொபைல் வைத்திருக்கும் அனைவருக்கும், இது போல பணத்தை பறிகொடுத்த சம்பவம் ஒன்றாவது இருக்கும். நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் இந்தப் பாடலை உங்கள் காலர் டியூனாக்க விரும்பினால், ஸ்டார் பட்டனை அழுத்துங்கள், என்ற குரலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். நான் தான் ஸ்டார் பட்டனை அழுத்தவே இல்லையே. அப்புறம் எப்படி இந்தப் பாட்டு வந்துச்சு. எனக்கு 30 ரூபா போயிடுச்சே என்று புலம்புபம் இலட்சக் கணக்கானவர்களின் குரலை எங்காவது கேட்டிருக்கிறீர்களா? இது பற்றி எழுதப் போகிறேன் என்றவுடன் இது போல பல புலம்பல்களைக் கேட்டேன்.

 TRAI இது குறித்தும் ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்தது. ஸ்டார் பட்டனை அழுத்தியதாலேயே வாடிக்கையாளர் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்று அர்த்தமில்லை. வாடிக்கையாளரிடம் பேசி, அவரை SMS. Email அல்லது Fax வழியாக சம்மதம் பெற வேண்டும் என்று கூறியது. 2009ல் வெளிவந்த இந்த கட்டுப்பாட்டுக்கு எந்த செல்போன் சேவை நிறுவனமும் மதிப்பளிக்கவில்லை.

 அதுவும் இந்த ஸ்டார் பட்டன் விவகாரம் வாடிக்கையாளருக்கே மிகத் தாமதமாகத்தான் தெரியவருகிறது. அவருக்கு ஃபோன் செய்யும் யாராவது, பாட்டு மாறியது பற்றி சொன்னால் மட்டுமே அவருக்குத் தெரியும். அதுவரையில் அவருக்கு பணம் பறிபோனதே தெரியாது. தெரியவரும்போது, அந்த சேவை ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்திருப்பதால், அந்த தொகையை திரும்பப் பெற்றதாக ஒரு உதாரணம் கூட கிடையாது.

வாடிக்கையாளர் புகார் தந்தால் ஒரு மாதத்துக்குள் அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சேவை நிறுவனத்தின் மேல் தவறு இருந்தால், அடுத்த இரண்டு மாதத்துக்குள் பிரச்சனையை தீர்க்க வேண்டும். TRAIயின் இந்த விதி முறைகளை மேலோட்டமாகப் பார்த்தால் சேவை நிறுவனங்கள் தப்ப முடியாது என்பது போலத் தோன்றும். ஆனால், அடுத்த வரியை படித்தால் உங்களுக்கு நம்பிக்கையே போய்விடும். அதாவது சேவை நிறுவனங்கள் இந்த நடவடிக்கைகளை குறித்த காலத்துக்குள் எடுக்கத் தவறினால், அவர்களுக்கு அபராதமோ, தண்டனையோ எதுவுமே கிடையாது, என்பது தான் அது. அதாவது TRAI என்பது அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே என்று செல்போன் சேவை நிறுவனங்களைப் பார்த்து சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறது. அதற்கு மேல் எதையும் செய்வதற்கு TRAIக்கு அதிகாரமில்லை.

 மொபைல் சேவை நிறுவனங்களின் இந்த அராஜக போக்கால் எவ்வளவு பணம் சுருட்டப்படுகிறது என்பது பற்றி ஒரு சிறிய புள்ளி விபரம் பார்ப்போம். ஒரு சேவையை வழங்குவதற்கு முன்னால் உங்களிடம் அதற்க்கான அனுமதி பெற்ப்படுகிறதா? என்ற கேள்வியுடன், இந்தியா முழுவதும் மாநிலம் வாரியாக ஒரு புள்ளிவிபரக் கணக்கு எடுக்கப்பட்டது. அதன்படி 23.89% சதவிகித மக்களிடம், அவர்களின் அனுமதி இல்லாமலேயே சேவை(VAS) வழங்கப்பட்டு பணமும் சுரண்டப்படுகிறது. அதாவது 18504000 நபர்களிடம எந்த அனுமதியும் இன்றி குறைந்தது ஆளுக்கு 20 ரூபாய் உருவப்படுகிறது. கணக்கிட்டால் பகீர் என்றிருக்கும்.  18504000 x 20 = 37,00,80,000 ரூபாய்.

 
இந்த கூட்டுக் கொள்ளையில் Airtel, Aircel, Idea, Vodfone உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களுக்கும் பங்கு உண்டு. இவர்களை தட்டிக் கேட்க வேண்டிய TRAI அமைப்பு, அவ்வப்போது சில சட்ட திட்டங்களை கூறிவிட்டு, வேடிக்கை பார்க்கிறது.

 
இதில் பெரிய நகைச்சுவை என்னவென்றால், கடந்த ஆண்டு (2010) TRAI அமைப்பால் 3285 புகார்கள் பெறப்பட்டு அவை சம்பந்தப்பட்ட செல்போன் சேவை நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக, பாராளுமன்றத்தில் திரு.சச்சின் பைலட்(Minister of State for Communications and Information Technology) கூறினார். 771 மில்லியன் மக்களில் எத்தனை பேருக்கு TRAI என்ற அமைப்பு தெரியும். கரிசல்காட்டு விவசாயிக்கும், காய்கறியும், பூவும் விற்றுப் பிழைக்கும் சாதாரணர்களுக்கும் பணம் பறிபோனதே தெரியவில்லை.அவர்கள் TRAIக்கு இமெயில் அனுப்பி புகார் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பது அபத்தம். எனவே நமது அரசாங்கம் இந்த பணச் சுருட்டலை தடுக்க, கடுமையான சட்ட திட்டங்கள் வகுத்து, செல்போன் சேவை நிறுவனங்களை அடக்கி வைக்க வேண்டும்.


அது வரையில் வாடிக்கையாளர்களாகிய நாம்தான் விழிப்புடன் இருந்து, ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டும். செல்போன் சேவை என்ற பெயரில் கொள்ளையடிப்பவர்கள் பற்றிய விழிப்புணர்வை பரப்ப வேண்டும்.

Apple and Twitter | Era of new Social Revolution on the Way

0 comments
Apple and Twitter, the new social revolution is on the way. at the launch of a new operating system, iOS 5, for iPhone, iPad and iPod touch devices, Apple said that they will have deep rooted integration of Twitter in these devices. Now the Apple and Twitter Owners of these devices will be able to share tweets, photos, videos and more from all applications by signing-in only once on the device.

It is pretty surprising that Apple chose Twitter over the more popular Facebook ie Apple and Twitter to power such applications.What could be the reasons? for this Apple and Twitter Facebook has more than twice the number of users than Twitter but has a very strong user connect agenda which could have clashed with Apple's want of control over its systems Apple and Twitter. Twitter, on the other hand, is a more subtle way to connect and could be built as an underlying technology easily.

Also, Facebook has an investment from Microsoft and Microsoft has deep rooted Facebook integration in its Windows Phone 7 devices, both these are big enough reasons for Apple to be looking for alternatives thats why Apple and Twitter And finally, failed talks over Apple's collaboration with Facebook for an iTunes based social networking service 'Ping' would not have helped the cause.

From Twitter's perspective it is a total win-win. They get to be on one of the most famous mobile platforms, across devices. Not only will it add to the number of Twitter users, but give its brand a much needed boost too.

Thanks : http://gadgets.ndtv.com/shownews.aspx?id=GADEN20110177233&Sec=NEWS&from=NDTV
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf