அரைக்கீரையும் அற்புத குணங்களும்

0 comments

அரைக்கீரை.பொதுவாக ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு. அந்த வகையில், வீடுகளில் அடிக்கடி சமைக்கும் கீரைகளில் ஒன்றான அரைக்கீரையின் அற்புத குணங்களை இப்போது பார்ப்போம்.

இன்றையச் சூழலில் பெரும்பாலானோர் வாயு தொடர்பான பிரச்சனைகளில் அவதிப்படுகிறார்கள். ஆனால், அரைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், வாயு தொடர்பான எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் நம்மை அண்டவிடாமல் பார்த்துக் கொள்ளும்.அரைக்கீரையுடன், பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து புளி சேர்க்காமல் கடைந்து சாப்பிட்டால் வாயு தொடர்பான தொல்லைகள் உடனடியாகத் தீரும்.

கிருமி தொற்றுகளால் ஏற்படும் தொண்டைப்புண், இருமல், சளிப்பிடிப்பு போன்றவற்றிற்கு அரைக்கீரை சிறப்பான மருந்தாகச் செயல்படுகிறது.ஏதாவது ஒரு நோய்க்கு ஆளாகி உடல் பலவீனமாக இருப்பவர்கள் அன்றாடம் உணவில் அரைக்கீரையைச் சேர்த்துக்கொண்டால் உடல் பலம் பெறுவதுடன், இழந்த தெம்பும் திரும்ப வரும்.

காய்ச்சல் காரணமாகவோ, வயிறு கோளாறு காரணமாகவே சில வேளைகளில் நாக்கு அதன் ருசி தன்மையை இழந்துவிடும். அந்த சமயங்களில் அரைக்கீரையுடன் புளி சேர்த்து கடைந்து சாப்பிட்டால் நாக்கு இயல்பான நிலைக்குத் திரும்பும்.இது எல்லாவற்றிற்கும் மேலாக, அரைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது வளம் பெறும். இளம் வயதில் பல்வேறு காரணங்களால் ஆண்மைத் தன்மை இழப்பிற்கு பலர் ஆளாகிறார்கள். அவர்கள், இந்தக் கீரையைத் தொடர்நது சாப்பிடுவதன் மூலம் இழந்த ஆண்மைத் தன்மையை மீண்டும் பெற்றுவிட முடியும்.

We Lost Because of D.M.K- Anbumani Ramdoss | சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவினால்தான் தோற்றோம் - அன்புமணி ராமதாஸ்

0 comments
பாமகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிக்கு அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்தார். அதன் விவரம்:

 தோல்விக்குக் காரணம்? பொதுவாக மக்கள் மாற்றம் வர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதனால் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளனர். 30 ஆண்டு காலமாக மாறிமாறிதான் அரசுகள் வந்து கொண்டிருக்கின்றன. கேரளத்தில் 50 ஆண்டுகளாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது. அதுபோலத்தான் இந்தத் தேர்தலிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுக்கும் மேலாக பல காரணங்கள் உள்ளன.

 விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மின் பற்றாக்குறை, 2ஜி அலைக்கற்றை என்று பல்வேறு காரணங்கள் உள்ளன.

 2ஜி அலைக்கற்றை பிரச்னையை திமுக அமைச்சர்களே சொல்லுகிறார்கள். அதுதான் என் எண்ணமும். இப்படிப்பட்ட காரணத்தால்தான் மக்கள் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

 திமுகவுக்கு எதிரான வாக்குகள்: 2006 தேர்தலில் எந்த அலையும் வீசவில்லை. அது நடுநிலையான தேர்தல். இந்தத் தேர்தலைப் பொருத்தவரை பாமகவுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. திமுகவுக்கு எதிரான வாக்குகள்தான். அதற்கும் மேலாக சொல்லப்போனால் அதிமுகவுக்குச் சாதகமான வாக்குகளும் கிடையாது. ஆளும் கட்சிக்கு (திமுக) எதிரான வாக்குகள்தான்.

 தோல்வி அல்ல சரிவு: இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு தோல்வி என்று சொல்ல முடியாது சரிவு என்றுதான் சொல்ல வேண்டும். வெற்றிபெற்ற அதிமுக கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 90 லட்சம். தோற்ற திமுக கூட்டணி பெற்ற வாக்குகள் ஒரு கோடியே 45 லட்சம். வெறும் 45 லட்சம் வாக்குகள்தான் அதிமுக கூட்டணி அதிகம் பெற்றிருக்கிறது. இதனால் இதைத் தோல்வி என்று சொல்ல முடியாது. சரிவு என்றுதான் சொல்ல வேண்டும்.

 அதேசமயம் இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம். இது எங்களுக்கு எதிரான வாக்குகள் கிடையாது. ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள். அந்த அலையில் நாங்கள் சிக்கிக் கொண்டோம்.

பாமக வாக்கு வங்கியில் சரிவா? 2006 சட்டப்பேரவை தேர்தலில் 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தோம். இப்போது 19 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளோம். 80 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகவே பெற்றுள்ளோம். 2006 தேர்தலில் எந்த அலையும் இல்லாததால் 55 ஆயிரம் வாக்குகள் பெற்றிருந்தாலே வெற்றிபெற முடிந்தது. 2011 - தேர்தலில் 75 ஆயிரம் வாக்குகள் பெற்றும் ஜெயிக்க முடியவில்லை. இதற்குக் காரணம் நடுநிலையாளர்கள் அதிக அளவில் வாக்களித்ததுதான். ஒவ்வொரு தொகுதியிலும் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை கூடுதல் வாக்குகள் பதிவாகி உள்ளன.

தோஞ்சல் கடலைப் பருப்பு குழம்பு | Thonjal Kadalai Paruppu Kulambu- Tamilnadu Recipies

0 comments
தேவையான பொருட்கள்

தோஞ்சல் - 1
கடலைப்பருப்பு - 1 ஆழாக்கு
தேங்காய் - 1
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 6 பல்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1 குழிக் கரண்டி

செய்முறை

* தோஞ்சலைச் சுத்தம் செய்து `கட்' செய்து கொள்ளவும்.

* கடலைப் பருப்பை ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.

* தேங்காய், இஞ்சி, பூண்டு அரைத்துக் கொள்ளவும்.

* குக்கரில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் உரித்த சாம்பார் வெங்காயம், நறுக்கிய தக்காளி இவற்றைச் சேர்த்து வதக்கவும்.

* அதனுடன் தோஞ்சலைச் சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* தொடர்ந்து கடலைப்பருப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து குக்கரில் வேக வைத்து இறக்கவும்.

* சுவையான தோஞ்சல் கடலைப்பருப்பு குழம்பு ரெடி.

Anna University Tirunelveli: 2011, Exam Results Decalred

0 comments
Anna University Tirunelveli has declared the exam results for the examinations of  Anna University Tirunelveli conducted earlier this year for the acadmic year 2010-2011 of the  Anna University Tirunelveli more details can be found from the below given links.


Students can check their  Anna University Tirunelveli exam results in the official link as given here, These are from the direct Anna University Tirunelveli Results server page.



B.E./B.TECH DEGREE RESULTS (REGULATIONS 2007)- Server 1 


B.E./B.TECH DEGREE RESULTS (REGULATIONS 2007)- Server 2 

B.E./B.TECH DEGREE RESULTS (REGULATIONS 2008)- Server 1 

B.E./B.TECH DEGREE RESULTS (REGULATIONS 2008)- Server 2  .


All the best for all the students of Anna University Tirunelveli who are expecting their B.E and B.tech results.

Take the Decisions like a Genius | புத்திசாலித்தனமாக முடிவு எடுக்க வேண்டுமா?

0 comments
புத்திசாலித்தனமாக முடிவு எடுக்க வேண்டுமா?, பிரச்சினை இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும். இதற்கு தீர்வு காண்பதில் தான் ஒருவரது வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த வகையில் பிரச்சினைகளுக்கு புத்திசாலித்தனமாக தீர்வு காண என்ன செய்யலாம் என்று விஞ்ஞானம் ஆலோசனை வழங்குகிறது.

இங்கிலாந்தில் உள்ள மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் இது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்றது. அப்போது ஆழ்ந்த தூக்கத்துக்கும், புத்திசாலித்தனமாக முடிவு எடுப்பதற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு செய்தனர். 54 இளைஞர்களை தேர்வு செய்து அவர்களில் ஒரு பிரிவை நன்றாக தூங்க வைத்து பின்னர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வைத்தனர். மற்றொரு பிரிவினரை தூங்க விடாமல் விழித்திருந்து பிரச்சனைக்கு தீர்வு சொல்லும்படி செய்தனர்.

இதில் நன்றாக தூங்கிய அணியினர் சிறப்பான முறையில் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டனர். தூக்கத்தில் ஏற்படும் உடலியல் மாற்றங்கள், மூளையின் செயல்பாடுகளில் உருவாகும் மாற்றங்கள் காரணமாக ஒருவர் நன்றாக தூங்கிய பின்னர் சிறப்பான முடிவுகளை எடுக்க முடிந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இனி உங்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும், நன்றாக தூங்கி ஓய்வு எடுத்தபின்னர் அதுபற்றி முடிவு எடுங்கள்.

Cause and Treatment for Digestion Problems | குழந்தைக்கு ஜீரணக் கோளாறா? -காரணமும்... நிவாரணமும். |

0 comments
பள்ளிக் குழந்தைகள் பெரும்பாலும் ஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கான காரணத்தையும் நிவாரணத்தையும் இங்கே தருகிறோம்.

காலை உணவு கட்டாயம்

பள்ளி செல்லும் நிறைய குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அல்லது அவசர அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். இந்த இரண்டுமே அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.

காலை உணவுதான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. எனவே காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.

பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் 6 முதல் 7 மணிக்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த நேரத்தில் வயிறு பசிப்பதில்லை என்று குழந்தைகள் சாப்பிடாமல் செல்கிறார்கள். பெற்றோரும் குழந்தை சாப்பிட மறுக்கிறது என்று நினைத்து அவர்கள் சாப்பிடாமல் சென்றாலும் கண்டு கொள்வதில்லை.

உண்மையில் உடலானது குறிப்பிட்ட நேரத்துக்கு பசிக்கத் தொடங்கும். அதேபோல குறிப்பிட்ட நேரத்தில் உணவு கொடுத்து பழக்கம் ஏற்படுத்திவிட்டால் சில நாட்களில் அதே நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும். எனவே குழந்தைகள் காலையில் சாப்பிட மறுத்தாலும் சில நாட்களுக்கு பழக்கம் வருவதற்காக கட்டாயமாக சாப்பிட வைத்தால் பிறகு தானாகவே காலை 7 மணிக்குள் வயிறு பசிக்கத் தொடங்கிவிடும். சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.

நிதானமாக சாப்பிடுதல்

காலையில் ஏதாவது `ஹார்ன்' சத்தம் கேட்டாலே பள்ளி பஸ் வந்துவிட்டதோ என்று எண்ணும் குழந்தைகளும், பெற்றோரும் ஏராளம். அதனால் அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு பள்ளி வாகனத்தைப் பிடிக்க கிளம்பிவிடுகிறார்கள்.

அவசர கோலத்தில் சாப்பிடுவது அஜீரணத்திற்கு காரணமாகிறது. உணவை நன்கு மென்று நிதானமாக சாப்பிடும்போதுதான் ஜீரணம் எளிதாக நடைபெறுகிறது. உணவானது உமிழ் நீருடன் சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம். மீதி செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது வேக வேகமாக சாப்பிடுவதால் எளிதில் அஜீரணம் தொற்றிக் கொள்கிறது.

செலியாக் நோய்

அஜீரணத்தை உருவாக்கும் ஒரு நோய் செலியாக். கோதுமை மற்றும் கோதுமை உணவுகள், பால் மற்றும் பால் உணவுகளில் `குளூட்டன்' என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய் `செலியாக்' எனப்படுகிறது.

இதன் அறிகுறிகளாக அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் கெட்டவாடை வீசும். வயிறு உப்புசம் உருவாகும். இவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும். உடல் எடை குறையும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க அந்த புரதம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்போக்கு

அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. உணவு சாப்பிடும் பழக்கம் மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு ஆகியவை வயிற்றுப்போக்கிற்கு காரணமாகிறது. கோடைகாலங்களில் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோடையில் சுத்தம், சுகாதாரமற்ற பழச்சாறு, பானங்கள் பருகுவது, சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவை வயிற்றுப்போக்கை உருவாக்குகிறது.

பால் மற்றும் பால் உணவுப் பொருட்கள் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். பாரம்பரியமாகவே சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. அவர்கள் பசும்பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். இப்படி பால் ஒத்துக் கொள்ளாத பிரச்சினையை `லாக்டோஸ் இன்டால ரன்ஸ்' என்று குறிப்பிடுவார்கள்.

வயிற்று வலி

நாம் பொதுவாக வயிற்றில் எங்கு வலித்தாலும் வயிற்று வலி என்று சொல்கிறோம். ஆனால் வயிற்றின் ஒவ்வொரு பாகத்தில் ஏற்படும் வலிக்கும் வேறுவேறு காரணங்கள் உண்டு. அதிக பசியாலும், வயிற்று எரிச்சலாலும் தொப்புள் பகுதிக்கு மேல்புறமாக வலிக்கும். காலை உணவு சாப்பிடாவிட்டாலும், அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடு பவர்களுக்கும் மேற்கண்டதுபோலவே வலி ஏற்படும்.

அஜீரண கோளாறாலும் வயிற்று வலி ஏற்படும். பயறு, கோஸ், பீன்ஸ் போன்ற உணவுகள் நைட்ரஜன் சத்து அதிகம் கொண்டவை. இவை அஜீரணத்தை ஏற்படுத்தும்.

காரம் அதிகம் உள்ள உணவுகளை குறைத்துக் கொண்டு, வாயு தொந்தரவு தரும் உணவுகளை தவிர்த்தால் வயிற்று வலியை தவிர்க்கலாம். அஜீரணத்தை தடுக்கலாம்.

துரித உணவுகள்

குழந்தைகளுக்கு பசியின்மை இப்போது அதிகமாக உள்ளது. காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக பசிக்காது. அதேபோல `ஜங் புட்' எனப்படும் உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கும் அதிகம் பசி வராது. துரித உணவுகள் எளிதில் வயிற்றை நிரப்பிவிடும். எனவே வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் சாப்பிட முடியாது. மேலும் ஜீரணத்தை சிதைத்துவிடும். எனவே அஜீரணம் ஏற்படுகிறது.

குழந்தை பசியின்மையாக இருந்தால் பிரச்சினைக்கான காரணத்தை தெரிந்து சரி செய்யப் பாருங்கள். உங்களுக்கு காரணம் தெரியாவிட்டால் மருத்துவரை அணுகுங்கள்.

பெரும்பாலும் குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப்படுத்தாதீர்கள். அவர்கள் அந்த உணவின் ருசிக்கு அடிமைப்பட்டுப் போய்விடுவார் கள். அதனால் வீட்டில் எவ்வளவு ருசியாக உணவு சமைத்தாலும் அதை விரும்பமாட்டார் கள். எனவே எப்போதாவது ஓட்டல் உணவு, எப்போதுமே வீட்டு உணவு என்று பழக்கப் படுத்துங்கள்.

தண்ணீர்

தண்ணீர் பருகுவது பலவித பிரச்சினைகளை தடுக்கும். போதுமான தண்ணீர் பருகா விட்டால் ஜீரணம் பாதிக்கும். ஜீரணம் சரியாக இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் அதிகரித்தால் மலத்தோடு கோடுபோல ரத்தம் வெளியேறும். இது மல துவாரத் தின் கீழ்ப்பகுதி கிழிவதால் ஏற்படுகிறது. இதனால் `ஆனல் பிஷர்' நோய் உண்டாகும்.

தண்ணீர் அதிகம் குடிக்காமல் சாப்பிடுவது, பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடு வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் `டாய்லெட்' செல்லப் பழக்க வேண்டும். பழங்கள், நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சாப்பிட வைக்க வேண்டும்.

அம்மாக்கள் கவனிக்க...

குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படாமல் இருக்க அம்மாக்கள் செய்ய வேண்டியவை:-

* குழந்தைகள் அவசர அவசரமாக உணவு சாப்பிடுவதை தவிர்க்க உதவுங்கள்.
* வாயு தொந்தரவு தரும் உணவுகளை குறைத்துக் கொடுங்கள்.
* குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப் படுத்தாதீர்கள்.
* காரம் மிகுந்த உணவுகளை அதிகம் கொடுக்காதீர்கள்.
* சுத்தம், சுகாதாரம் இல்லாத இடங்களில் குழந்தைகளை சாப்பிட அனுமதிக்காதீர்கள்.
* குழந்தைகளை தினமும் சரியான நேரத்திற்கு சாப்பிட வையுங்கள்.
* நிறைய சத்து கிடைக்கும் என்று எண்ணி அதிகமாக பசும்பால் கொடுப்பது தவறானது என்பதை உணருங்கள்.
* நிறைய தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்துங்கள். குழந்தைகள் தினமும் நான்கு அல்லது ஐந்து தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
* இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட வையுங்கள். சாப்பிட்ட உடன் தூங்கிவிடாமல் கொஞ்ச தூரம் நடந்து செல்ல வைப்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

ராம்லீலா மைதான சம்பவம்: ராம்தேவ் அறக்கட்டளை பதிலளிக்க வேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு

0 comments
தில்லி ராம்லீலா மைதானத்தில் யோகா குரு ராம்தேவின் ஆதரவாளர்கள் நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராம்தேவின் அறக்கட்டளைக்கு உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

 தில்லி ராம்லீலா மைதானத்தில் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் ராம்தேவ் கடந்த ஜூன் 4-ம் தேதி உண்ணாவிரதம் இருந்தார். நள்ளிரவில் மைதானத்துக்குள் நுழைந்த தில்லி போலீஸôர் அங்கிருந்தவர்களை வெளியேற்றினர்.

 இந்த விவகாரத்தை தாமாகவே முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் பி.சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

 ராம்லீலா மைதானத்திலிருந்து ராம்தேவின் ஆதரவாளர்களை வெளியேற்றுவதற்கு போலீஸôர் எந்தவிதமான சக்தியையும் பிரயோகிக்கவில்லை என்று தில்லி போலீஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் யூ.யூ.லலித் வாதிட்டார்.

 இதற்கு ஆதாரமாக சில விடியோ பதிவுகளையும், புகைப்படங்களையும் நீதிமன்றத்தில் அவர் சமர்ப்பித்தார்.

 இவற்றைப் பரிசீலிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், "நீங்கள் அவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறியிருக்கிறீர்கள். இவை தொடர்பாக அவர்களும் பதிலளிக்கட்டும்' என்று தெரிவித்தனர்.

 இதன்படி, ராம்லீலா மைதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளைக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

 முன்னதாக போலீஸôர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், "போலீஸôர் மீது ராம்தேவின் ஆதரவாளர்கள் கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட பிறகே, போலீஸôர் அவர்களை நோக்கி 8 கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர்' என்று கூறப்பட்டிருந்தது.

 ராம்லீலா மைதானத்தில் யோகாசனப் பயிற்சி நடத்துவதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அதை மீறும் வகையில் அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் போலீஸôர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

 இதனிடையே இந்த வழக்கில் தம்மையும் சேர்த்துக்கொள்ளுமாறு வழக்கறிஞர் அஜய் அகர்வால் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

 வழக்கின் விசாரணை வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

30 vagai samayal: 30 வகை திடீர் சமையல் | 30 வகை சமையல் |

0 comments
30 vagai samayal is a series of recipies puplished in aval vikatan, and here below is the complete list of, 30 vagai samayal பக்கோடா (அ) குணுக்கு குழம்பு

தேவையானவை: பக்கோடா (அ) குணுக்கு - 10, புளி - நெல்லிக்காய் அளவு, குழம்பு பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். புளியை சிறிது தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். புளி வாசனை போனதும் குழம்பு பொடி சேர்த்து, மேலும் கொதிக்க வைத்து, பக்கோடாவை (அ) குணுக்கு போட்டு நன்றாகக் கொதித்ததும் இறக்கி... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

வடைகறி

தேவையானவை: வடை - 10, வெங்காயம் - 2, தக்காளி - 1, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், சோம்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி... இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் வடைகளைக் கிள்ளி போடவும். சிறிது நேரம் கொதிக்கவிட்டு... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

 பேல் பூரி

தேவையானவை: மிக்சர், அரிசிப்பொரி - தலா 100 கிராம், வெங்காயம், தக்காளி - தலா 1, ஸ்வீட் சட்னி (பேரீச்சம்பழம் வெல்லம் புளி மூன்றையும் சேர்த்து அரைத்த விழுது), கார சட்னி (கொத்தமல்லி புதினா பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைத்த விழுது), பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

 கோஃப்தா கறி

தேவையானவை: சாதம் - ஒரு பெரிய பவுல், பூசணிக்காய் ஒரு கீற்று (அ) பெங்களூர் கத்திரிக்காய் - பாதி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கோதுமை மாவு, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கிரேவிக்கு: வெங்காயம், தக்காளி - 2 (நறுக்கி அரைத்துக் கொள்ளவும்), கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - தலா கால் டீஸ்பூன்.

செய்முறை: காயைத் துருவிப் பிழிந்து, சாதத்துடன் சேர்க்கவும். இதில் கொத்தமல்லி, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். 

கடாயில் எண்ணெய் விட்டு கிரேவிக்கு கொடுத்துள்ளவற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களை இந்த கிரேவியில் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

 ஈஸி கொத்து பரோட்டா

தேவையானவை: பரோட்டா - 10, வெங்காயம் - 2, தக்காளி - 1, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் உற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, நன்றாக வதக்கவும். இதில் பரோட்டாக்களை பிய்த்துப் போட்டு, தோசை கரண்டியால் கைகளால் கொத்தி கொத்தி எடுத்து, சூடாக பரிமாறவும்.

 காராபூந்தி பச்சடி

தேவையானவை: காராபூந்தி - ஒரு கப், கெட்டி தயிர் - ஒன்றரை கப், கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தயிருடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து, தயிருடன் சேர்க்கவும். பரிமாறுவதற்கு முன் காராபூந்தி சேர்த்துப் பரிமாறவும்.

 அப்பள சமோசா

தேவையானவை: அப்பளம் - 10, காய்கறி பொரியல் - 50 கிராம், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: ஒரு அப்பளத்தை தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து பாதியாக கட் செய்து, ஒரு பாதியின் இரு முனைகளையும் நன்றாக கைகளால் அழுத்தி ஒட்டி கோன் வடிவத்தில் செய்யவும். இதில் காய்கறி பொரியலை வைத்து, ஓரங்களை அழுத்தி ஒட்டிவிடவும். இதேபோல் எல்லாவற்றையும் செய்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

 அப்பள பொடிமாஸ்

தேவையானவை: அப்பளம் - 10, இஞ்சித் துருவல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு பொரியல், நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அப்பளங்களை சிறு சிறு துண்டுகளாக போட்டு பொரித்து, தனியே வைக்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, உருளைக்கிழங்கு பொரியலை சேர்த்துக் கிளறவும். பொரித்த அப்பளத்தை கைகளினால் நொறுக்கி சேர்த்துக் கலந்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

 புலாவ் பக்கோடா

தேவையானவை: புலாவ் (அ) பிரியாணி - ஒரு பவுல், எள் - 3 டேபிள்ஸ்பூன், வறுத்த ரவை, சோள மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புலாவ் (அ) பிரியாணியில் உள்ள கிராம்பு, பிரிஞ்சி இலைகளை எடுத்துவிட்டு, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதித்ததும் ரவையைப் போட்டு மிருதுவாகும்வரை கிளறவும். இதனுடன் அரைத்த புலாவ் கலவை, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எள், சோள மாவு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.

 வெஜிடபிள் ரைஸ் சப்பாத்தி 

தேவையானவை: காய்கறிகள் (சமையலுக்குப் பயன்படுத்தும்போது ஒன்றிரண்டாக எஞ்சுபவை) - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்), சாதம் - ஒரு பவுல், கோதுமை மாவு - 50 கிராம், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சாதத்துடன் கோதுமை மாவு, கரம் மசாலாத்தூள், உப்பு, காய்கறியை சேர்த்து 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கெட்டியாகப் பிசையவும். இதை தடிமனான சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.

 சப்பாத்தி ஸ்வீட் ரோல்ஸ்

தேவையானவை: சப்பாத்தி - 10, தேங்காய்  துருவல், சர்க்கரை - தலா 100 கிராம், நெய் - சிறிதளவு,

செய்முறை: தேங்காய் துருவலுடன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். ஒவ்வொரு சப்பாத்தியிலும் சிறிது நெய் தடவி, தேங்காய் கலவையை நடுவில் வைத்து, பாய் போல் சுருட்டி பரிமாறவும்.

விருப்பப்பட்டால் சிறிது டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கொள்ளலாம்.

 ரைஸ் வடகம்

தேவையானவை: வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் விழுது (அ) மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், சீரகம் (அ) ஓமம் - ஒரு டீஸ்பூன், சாதம், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து (மிக்ஸியிலும் அரைக்கலாம்) கொள்ளவும். வெயிலில் பிளாஸ்டிக் ஷீட் விரித்து, அரைத்த கலவையை சிறியதாக கிள்ளிப் போட்டு, நன்றாகக் காய வைத்து எடுக்கவும்.

தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்துக் கொள்ள லாம்.

 ரைஸ் டோக்ளா

தேவையானவை: சாதம் - 2 டம்ளர், கோதுமை மாவு - கால் டம்ளர், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சாதத்துடன் கோதுமை மாவு, உப்பு, மிளகாய்த்தூள்  சேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாகப் பிசையவும். இதை ஒரு தட்டில் சப்பாத்தி போல் பரத்தி, ஆவியில் வேக வைக்கவும். நன்றாக ஆறியதும் சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, துண்டுகளின் மேல் ஊற்றி... நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.

 மைசூர்பாகு அல்வா

தேவையானவை: மைசூர்பாகு துண்டுகள் - 10, பால் - 2 டம்ளர், வறுத்த முந்திரி - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். மைசூர்பாகை மிக்ஸியில் ஒரு சுற்றவும். கொதிக்கும் பாலில் பொடித்த மைசூர் பாகை சேர்த்து, சிறிது கெட்டி யானதும் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

 சூப் ரசம்

தேவையானவை: தக்காளி சூப் - 200 மி.லி, மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 1, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - சிறிய உருண்டை, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மிக்ஸியில், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்துப் பொடித்து, புளியைக் கரைத்து ஊற்றி அரைக்கவும். இதனுடன் தக்காளி சூப், உப்பு சேர்த்துக் கலந்து, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். நெய்யில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டவும்.

 சப்பாத்தி - ஆனியன் மசாலா

தேவையானவை: சப்பாத்தி - 4, வெங்காயம், தக்காளி - தலா 1, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், இஞ்சி-பூண்டு விழுது - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு, சிறிது வதங்கியதும், இஞ்சி -பூண்டு விழுது, தக்காளி சேர்க்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி, சப்பாத்திகளைப் பிய்த்துப் போட்டு, நன்றாக வதக்கி இறக்கவும்.

 ரைஸ் வெஜ் ஆம்லெட்

தேவையானவை: நன்றாக மசித்த சாதம் - ஒரு பெரிய பவுல், கடலை மாவு - 75 கிராம், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், புளித்த தயிர் - 100 கிராம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மசித்த சாதத்துடன் கடலை மாவு, புளித்த தயிர், மிளகாய்த்தூள், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து, இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு, கரைத்த மாவை ஊற்றி, மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

 ரைஸ் பக்கோடா

தேவையானவை: சாதம் - ஒரு பவுல், பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன், வெங்காயம் - 2, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு... பொட்டுக் கடலை மாவு, நறுக்கிய வெங் காயம், கொத்தமல்லி, கறிவேப் பிலை, இஞ்சித் துருவல், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்கு பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்த மாவை பக்கோடாக்களாகப் போட்டு பொரித்தெடுக்கவும்.

 புடலங்காய் பச்சடி

தேவையானவை: புடலங்காய் பொரியல் - 3 டேபிள்ஸ்பூன், தயிர் - 150 கிராம், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, கடுகு, எண்ணெய் - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், ஊற வைத்த பயத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: புடலங்காய் பொரியலுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், ஊற வைத்த பயத்தம்பருப்பு, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதை தயிரில் சேர்த்து, எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.

 இடியாப்ப புலாவ்

தேவையானவை: இடியாப்பம் - 6, வெங்காயம், தக்காளி, கிராம்பு - தலா 1, பட்டை - ஒரு சிறிய துண்டு, கீறிய பச்சை மிளகாய் - 2, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து, பச்சை மிளகாயை சேர்க்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, இடியாப்பத்தை சிறிது சிறிதாக பிய்த்துப் போட்டு உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலந்து கிளறி... கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.

 தோசை புளியோதரை

தேவையானவை: தோசை - 6, இன்ஸ்டன்ட் புளியோதரைப் பொடி - 4 டீஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தோசைகளை சிறு சிறு துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தளித்து.... தோசை துண்டுகள், புளியோதரைப் பொடி, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர்

விட்டு கிளறவும். கெட்டியானவுடன் இறக்கவும்.

 இட்லி 65

தேவையானவை: இட்லி - 8 (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி - 3, வெங்காயம் - 1, சோம்பு - கால் டீஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில்எண்ணெய் ஊற்றி காய வைத்து, நறுக்கிய இட்லிகளைப் போட்டு பொரித்து தனியாக வைக்கவும். தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி... தக்காளி விழுது, உப்பு சேர்த்து, கலவை கெட்டியாகும்போது பொரித்த இட்லித் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

 காய்கறி கலவை எரிசேரி

தேவையானவை: விருந்து, விசேஷங்களின்போது அதிகப்படியாக இருக்கும் குழம்பு, ரசம், பொரியல் கலவை, நல்லெண்ணெய், நெய் - தேவையான அளவு.

செய்முறை: எண்ணெய், நெய் தவிர கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக சுண்டியதும் நல்லெண்ணெய், நெய் சேர்த்து மேலும் கொதிக்க வைத்து இறக்கவும்.

இட்லி உப்புமா

தேவையானவை: இட்லி - 10, கடுகு, உளுத்தம்பருப்பு, - தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 3, வேர்க்கடலை, எண்ணெய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இட்லிகளை நன்றாக உதிர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காயந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு உப்பு சேர்க்கவும். உதிர்த்து வைத்துள்ள இட்லிகளை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

 காய்கறி கட்லெட்

தேவையானவை: உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து, தோல் உரித்து, மசிக்கவும்), ஏதேனும் ஒரு பொரியல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), சோள மாவு - ஒரு டீஸ்பூன், பிரெட் துண்டு - 3 (தண்ணீரில் முக்கி, உடனே எடுத்து வைக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பொரியல், மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், உப்பு, பிரெட், சோள மாவு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து  நன்றாகப் பிசைந்து, கட்லெட்டுகளாக செய்யவும். இவற்றை தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.

 உப்புமா பக்கோடா

தேவையானவை: முந்திரித் துண்டுகள் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்புமா, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: உப்புமாவில் முந்திரித் துண்டுகள், மிளகாய்த்தூள் சேர்த்து கரண்டியால் கிளறவும். கடாயில் எண்ணெய் விட்டு காய வைத்து, கிளறி வைத்த கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.

 தால் பான் கேக்

தேவையானவை: வெந்த பருப்பு, கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு - தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: எண்ணெய் தவிர, கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற் றையும் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மூடி போட்டு வேகவிட்டு எடுத்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.

 ஆவக்காய் சாறு ஊறுகாய்

தேவையானவை: மாங்காய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு - அரை டீஸ்பூன், ஆவக்காய் ஊறுகாய் சாறு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, மாங்காயை சேர்த்து சுருள வதக்கி ஆறவிடவும். இதில் ஆவக்காய் ஊறுகாய் சாறு சேர்த்துக் கலக்கவும்.

 உப்புமா அடை

தேவையானவை: உப்புமா - ஒரு பெரிய பவுல், காய்ந்த மிளகாய் - 4, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதில் சுடு நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்கவும். ஊறியதும் உப்புமாவை சேர்த்து அடை பக்குவத்தில் கரைக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய்

விட்டு, பொன்னிற அடைகளாக சுட்டெடுக்கவும்.

 டேஸ்ட்டி ரைஸ்

தேவையானவை: சாதம் - ஒரு பவுல், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், மிளகு, எள், நறுக்கிய பச்சை மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - இரண்டு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, உளுத்தம்பருப்பு, தனியா, மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் எள், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து மேலும் வதக்கி... சாதம், உப்பு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கி, சூடாக பரிமாறவும்.

Most Shocking War Crime Images of Srilanka

0 comments
War Crime Images of Srilanka is here, these images are shocking as we are in the process of colecting more War Crime Images of Srilanka and post it here.

Please dont post bad comments about this War Crime Images of Srilanka, if you do so the comments will be imediatly removed.

Do join us in our facebook page to impose economic sanctions on Sri Lanka

http://www.facebook.com/pages/Impose-Economic-Sanctions-On-Sri-Lanka/174529785939847















'இலங்கையின் கொலைக்களங்கள்' - ஆவணப் படம் | Sri Lanka's Killing Fields - Film |

0 comments
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகளின் பதிவுகள் சிலவற்றை உள்ளடக்கிய பிரிட்டனின் 'சேனல் 4'-ன் ஆவணப் படம் Sri Lanka's Killing Fields வெளியாகியுள்ளது. (வீடியோ - கீழே)

'இலங்கையின் கொலைக்களங்கள்' (Sri Lanka's Killing Fields) எனப் பெயரிடப்பட்ட இந்த 50 நிமிட ஆவணப் படம் Sri Lanka's Killing Fields, போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த ஆவணப் படத்தை போலியானது என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

(சேனல் 4 வலைத்தளத்தில் Sri Lanka's Killing Fields ஆவணப் படத்தை காண... http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170)

சேனல் 4 வலைத்தளத்தில் இந்த ஆவணப் படம் Sri Lanka's Killing Fields பொதுமக்களின் பார்வைக்காக புதன்கிழமை தொடங்கி ஆறு நாட்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களை படையினர் துன்புறுத்தும் காட்சிகள், சரணடைந்த சாமானியர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், பொதுமக்கள் தங்குமிடங்கள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், அந்தப் பெண்புலிகளைக் கொல்லும் கொடூரங்கள், நிர்வாணமாக நிறுத்தப்பட்டு தமிழ்க் கைதிகள் சுட்டு வீழ்த்தப்படும் நிகழ்வுகள்...

இப்படி இலங்கை ராணுவத்தினரின் போர்க் குற்றங்களை முற்றிலும் துகிலுரிக்கும்படியாக உள்ள இந்த ஆவணப் படம் Sri Lanka's Killing Fields இதோ...


'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ - ஜெயலலிதா | Imbose a Economic Ban on Srilanka - Jayalalitha

0 comments
ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தால், புதிய சட்டசபையைப் பூட்டுவார். சமச்சீர்க் கல்வியை நிறுத்துவார். மெட்ரோ ரயிலுக்கு ரெட் சிக்னல் போடுவார். ஐந்து நாட்கள் முட்டை திட்டம் அம்போதான். கலர் டி.வி. காலி. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் காணாமல் போகும். வீடு கட்டும் திட்டம் வீணாய்ப் போகும்...

இவை அனைத்துமே எல்லோரும் கணித்தது. ஆனால், 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று ஜெயலலிதா தீர்மானம் கொண்டுவருவார் என்று தமிழின உணர்வாளர்கள்கூட நினைக்கவில்லை. கடந்த 40 ஆண்டுகளாக 'தமிழினத் தலைவர்’ என்ற பட்டம் தாங்கிய கருணாநிதி செய்யத் தவறியதை, 'பொடா ராணி’ ஜெயலலிதா செய்து காட்டிவிட்டார்.

'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்று சீமான், தமிழ் நயத்துக்காகச் சொன்ன போதுகூடப் பலரும் அவர் மீது சீறிப் பாய்ந்தார்கள். ஆனால், ஜெயலலிதா இன்று கொண்டுவந்து இருக்கும் தீர்மானத் தைப் படித்தவர்களுக்கு, ஏதோ தனி ஈழமே கிடைத்துவிட்ட மகிழ்ச்சி. அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ஜெயலலிதாவால் வெளியேற்றப்பட்ட வைகோ, தி.மு.க-வு டன் கூட்டணியில் இருக்கும் திருமாவள வன், 40 ஆண்டுகளாக ஈழப் பிரச்னைக்கா கத் தன்னை அர்ப்பணித்துவிட்ட பழ.நெடு மாறன் என எல்லோருக்கும் ஜெயலலிதா வின் தீர்மானத்தால், மகிழ்ச்சி.

'இது ஜெயலலிதா நடத்தும் அரசியல் நாடகங்களில் ஒன்று’ என்று தி.மு.க. சார்பு ஈழ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். எத்தனையோ நாடகங்களை நடத்திய கருணாநிதி, இதையும் செய்திருக்கலாமே? ஏன் மறுத்தார்?

கருணாநிதியின் மௌனம்கூட, ஜெயலலிதாவைப் பேசவைத்து இருக்கலாம். எது காரணமாக இருந்தாலும், ஈழப் பிரச்னையை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தி இருக்கிறது ஜெயலலிதாவின் தீர்மானம்!

''தமிழர்களை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது. பரவலாகக் குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங் களின் மீதும், மருத்துவமனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளைச் செய்ய மறுத்தது. போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீதும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது போன்ற கடுமையான, நம்பத் தகுந்த குற்றச் சாட்டுகளை உள்நாட்டுப் போரின்போது இலங்கை அரசு நிகழ்த்தி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது'' என்று குற்றம்சாட்டும் தமிழக அரசின் தீர்மானம், ''இத்தகைய போர்க் குற்றங் களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்ற வாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐ.நா. சபையை இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று பகிரங்கமான கோரிக்கையை வைத்துள்ளது.

2009 மே மாதம் வரை நடந்த கொடுமைகளுக்கு அன்றைய தினம் அஞ்சலி செலுத்தாத தமிழகம்... 16-ம் நாள் கூடப் பதறாத தமிழகம்... சுமார் 750 நாட்கள் கழித்து மாட்சிமை பொருந்திய தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொடுமைக்குக் கண்ணீர் விடும் தீர்மானத் தைக் கொண்டுவந்து இருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் ஓர் உற்சாகத்தைக் கொடுத்து இருக்கிறது. ஆயிரக் கணக்கில் தமிழர்கள் வாழும் அயல்நாடுகளில் அந்நாட்டு அரசுகள் செய்ததைக்கூட, ஆறு கோடிக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழும் தமிழகம் இதுவரை செய்ய வில்லை. இப்போது ஜெயலலிதாவின் தீர்மானம், ஒரு நல்ல தொடக்கத்தைத் தந்துள்ளது.

ஜெயலலிதாவிடம் இருந்து இப்படி ஒரு எதிர்விளைவை ராஜபக்ஷே மட்டும் அல்ல, பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும் கூட எதிர்பார்க்கவில்லை. அந்த அதிர்ச்சியின் காரணமாகத்தான், பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன் உடனடியாக சென்னை வந்து ஜெயலலிதாவைச் சந்தித் தார். இலங்கை அரசுக்கும், இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசுக்கும் இந்தத் தீர்மானம் தீராத தலைவலியைக் கொடுக்கப்போகிறது.

'இலங்கையை முன்னால் விட்டு இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசுதான் பின்னால் நின்று போரை நடத்தியது!’ என்ற குற்றச்சாட்டுக்கு இதுவரை மன்மோகனும் சோனியாவும் மௌனம் சாதிக்கிறார்கள். காங்கிரஸ் அரசு ராணுவ உதவிகளைப் பகிரங்கமாகவே செய்தது. வைகோ வுக்கு பிரதமர் எழுதிய கடிதங்கள் இதற்குச் சான் றாக உள்ளன. 'இந்தியா வுக்கு நன்றி’ என்று கொழும் பில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டு இருந்தன. 'போரில் ஒவ்வொரு நாளும் நடப்பதை இந்தியாவுக்கு நாங்கள் தகவல் தந்துவந்தோம்’ என்றார் இலங்கை ராணுவத் தளபதி. இலங்கை சார்பில் சரத் ஃபொன்சேகா, பஷில் ராஜபக்ஷே, கோத்தபய ராஜபக்ஷே ஆகிய மூவரும்... இந்தியா சார்பில் எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன், விஜய்சிங் ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டு போர்க்காலங் களில் பேசி வந்தார்கள்’ என்று பகிரங்கமாக இலங்கை அரசு அறிவித்தது. இதை எல்லாம் சொல்லும்போது, 'மத்திய அரசுதான் எதையும் செய்யவில்லை என்கிறார்களே’ என்று பொத்தாம் பொதுவாக பதிலைச் சொன்னார் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதி.

''இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும்'' என்றால், அதில் மகிந்தா ராஜபக்ஷேவுடன் சேர்ந்து மத்திய காங்கிரஸ் அரசாங்கமும் சிக்கலாம். ஊழல் வழக்குகளில் சிக்கி மூச்சுத் திணறும் மன்மோகன் தலையில் பெரிய கொட்டுவைத்து உள்ளது தமிழக அரசின் இந்தத் தீர்மானம்.

ஜெயலலிதாவின் கடமைகள் இதோடு முடிந்துவிடவில்லை. தமிழக அரசின் தீர்மானத்தை இந்திய நாடாளுமன்றத்தின் விவாதப் பொருளாக ஆக்கி, அங்கும் இப்படி ஒரு தீர்மானத்தை முன்வைக்க முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், இன அழிப்பு எதிர்ப்புப் போராட்ட வரலாற்றில் அவரது பெயர் பொறிக்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே இடத் தில் கூட்டி ஒரு தீர்மானத்தை முன்மொழிவதும்... அதையே டெல்லியில், பாரதிய ஜனதா, கம்யூனிஸ்ட்டுகள், முலாயம் சிங் மற்றும் லாலு கட்சி எம்.பி-க் களையும் ஒருங்கிணைத்து சுமார் 200-க்கும் மேற்பட்ட எம்.பி-க்களின் வழிமொழிதலுடன் டெல்லி செங்கோட்டைக்குள் எடுத்துச் செல்வதும் ஜெயலலிதாவின் கையில்தான் இருக்கிறது.

ஜெயலலிதா, நினைவாற்ற லில் தேர்ந்தவர். 1983 கால கட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த ஜெயவர்த்தனா இதே போல் தமிழர்களைக் கொன்று தீர்த்தபோது, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கறுப்புச் சட்டை அணிந்து போராடினார். 'ஜெயவர்த்தனாவுக்கு அமெரிக்க அரசுதான் ஆயுத உதவி செய்கிறது’ என்பதைக் கேள்விப் பட்டதும், சென்னயில் இருந்த அமெரிக்கத் தூதரகத்துக்கு எதிராக (12.10.1983) பேரணி நடத்தினார். அன்று, தூதர் விக்டேக்கரிடம் மனுவைக் கொடுத்தவர் அப்போதைய அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயலலிதாதான்.

'மனித உரிமைகள் குறித்து நாள் தோறும் பேசி வருகிற அமெரிக்க அரசு, இலங்கைத் தமிழர் படுகொலைகள் குறித்துக் கண்டனம் தெரிவிக்காதது தவறு. தனது அரசியலுக்கு இலங்கைத் தமிழர் பிரச்னையை அமெரிக்க அரசு ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தக் கூடாது’ என்று தனது தீர்க்கமான குரலில் ஜெயலலிதா அப்போது சொன்னார்.அமெரிக்காவுக்கு அன்று சொன்னதை, இங்குள்ள காங்கிரஸ் அரசுக்கு இப்போது சொல்வாரா ஜெ?

விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இப்போதுதான் சந்திக்கிறது

0 comments
''குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இப்போதுதான் சந்திக்கிறது'' - 'மனோகரா’ படத்துக்காக கருணாநிதியின் பேனா தீட்டிய அதே வசனத்தை, இப்போது கோபாலபுரம், பாட்டியாலா கோர்ட், சி.ஐ.டி. காலனி வீடு, திஹார் ஜெயில் காட்சிகள் நினைவூட்டுகின்றன!

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுப் புகார் படிப்படி யாக முன்னேறி, கனிமொழி வரையில் சிறைக் கதவுகள் திறந்துகொண்டபோது, தி.மு.க. தொண்டன் துடித்தான். அடுத்தபடியாக, தயாநிதி மாறனை மையம்கொண்டு 'தெகல்ஹா' இதழ் கிளப்பிய புயல் வேகம் பெறும் நேரம் இது!

படிப்படியாக திசை மாறி மையம் கொள்ளும் இந்தப் புயலை, ஒரே கட்சியின் வெவ்வேறு முகாம்களில் இருப்பவர்கள் பரஸ்பரம் ரசிக்கும் விதத்தை சாதாரண கோஷ்டி அரசியலாகவோ, குடும்ப அரசியலாகவோ மட்டுமே சொல்லிவிட முடியாது. சரித்திரத் தேர்ச்சிகொண்டவர்கள் இதை 'யதுகுல’ மோதல் போன்றது என்றே வர்ணிக்கிறார்கள்.

பாண்டுவும் திருதராஷ்டிரனும் பெற்ற பிள்ளைகளுக்கு இடையே அரங்கேறிய சகோதரச் சண்டையே... மகாபாரதம். இறுதியில் காந்தாரியின் கோபம் எல்லாம் கிருஷ்ணனின் பக்கம் திரும்பியதாகவும்... 'சூழ்ச்சியால் நீ என் குலத்தை அழித்தாய்... கிருஷ்ணா, உன் குலமும் தமக்குள் அடித்துக்கொண்டு அழியும்’ எனச் சாபம் கொடுத்ததாகவும்... இதனால், மதுராவை ஆண்ட கடைசி மன்னனாக கிருஷ்ணனே ஆனதாகவும் கிளைக் கதைகள் உண்டு!

அப்படி ஒரு நெடுங்கதையின் கிளைக் கதையாகவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையும் சொல்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.

அசைக்க முடியாத ஆளும் கட்சியாய் கோலோச்சி வந்த தி.மு.க, இன்று இழந்திருப்பது அரியாசனத்தை மட்டும் அல்ல... தன் கட்சி யின் ஒட்டுமொத்த இமேஜையும்!

2007 மே 9... தி.மு.க-வில் கருணாநிதிக்கு அடுத்ததாக யாருக்குச் செல்வாக்கு? என்ற கருத்துக் கணிப்பை, 'தினகரன்’ நாளிதழ் கணித்துச் சொன்னது. 74 சதவிகித செல்வாக்கு ஸ்டாலினுக்கும் அழகிரிக்கு 2 சதவிகிதமும் கனிமொழிக்கு 1 சதவிகிதமும் என்றது அந்த சர்வே முடிவு. இதுபோக... மீதி உள்ள சதவிகித எண்ணிக்கை 'மற்றவர்கள்' என்றும் சொன்னது. ''அண்ணன் - தம்பி சண்டையை மூட்டுவது மட்டும் அல்ல இதன் நோக்கம்... அந்த 'மற்றவர்கள்' என்பது தயாநிதி மாறனை மனதில்கொண்டுதான்'' என்று அறிவாலயத்திலும் மதுரையிலும் கொதிப்பு கிளம்பியது.

அந்தக் கணிப்பை ஸ்டாலின் ரசித்தார். அழகிரி வெறுத்தார். கனிமொழியின் நலம் விரும்பிகளும் எரிச்சலானார்கள். இதன் தொடர்ச்சியாக, மதுரை யில் நாளிதழின் அலுவலகம் அடித்து நொறுக்கப் பட்டு கொளுத்தப்பட்டது. மூன்று உயிர்கள் பலியாகின. அன்றைக்கு தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், அன்றைய உள்துறைச் செயலாளர் மாலதிக்கு போன் செய்து மிரட்டியதாக மின்சாரத் துறை அமைச் சர் ஆற்காடு வீராசாமியே பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ''மதுரையில் இவ்வளவு பெரிய சம்பவம் நடக்கிறது. நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா?'' என்று அவர் கேட்டதாக ஆற்காடு வீராசாமி சொன்னார். மகனுக்கும் பேரனுக்குமான மோதலில், மகன் பக்கம் கருணாநிதி நின்றார். மே 13-ம் தேதி தயாநிதி மாறன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய... கோபாலபுர மெகா பாரதம் வேகம் கண்டது!

முரசொலிமாறன் மறைவுக்குப் பிறகு டெல்லி விவகாரங்களைக் கவனித்துக்கொள்ள அவரது குடும்பத்துக்குள் இருந்தே வாரிசை அழைத்து வந்தவர் கருணாநிதிதான். ''தயாநிதி மாறன் தேர்தலில் நிற்கப்போகிறாரா?'' என்று அதற்கு முன் ஆனந்த விகடனுக்கான தனிப் பேட்டியில் கருணாநிதியிடம் கேட்டபோது, ''இல்லை! அண்ணன் கலாநிதியை விட்டுவிட்டு தம்பியை ஏன் கேட்கிறீர்கள்?'' என்று திருப்பிக் கேட்டார் கருணாநிதி. அவரே, பிறகு தயாநிதியை மத்திய சென்னை எம்.பி. ஆக்கினார். அமைச்சரும் ஆக்கினார். அதுவும் கேபினெட் அந்தஸ்து வாங்கிக் கொடுத்தார். அதற்கு விமர்சனங்கள் வந்தபோது வக்காலத்தும் வாங்கினார். ''தயாநிதி அரசியலுக்கு வருவார். இப்படி வளர்வார் என்று நான் எதிர்பார்க்கலே. அவர் ஜூனியர்தான். ஆனால், பார்ப்பனக் குஞ்சாக இருந்தால், திருஞான சம்பந்தன் என்று பாராட்டி இருப்பார்கள். இவன் சூத்திரனுக்குப் பேரன்தானே'' என்பது கருணாநிதி தந்த வாசகங்கள். ஆனால், அது மதுரைச் சம்பவத்துக்குப் பிறகு மொத்தமாகத் திசை மாறிப் போனது.

தயாநிதி கவனித்து வந்த டெல்லி காரியங்களை இனி யார் பார்த்துக்கொள்வது என்ற கேள்வி எழுந்தபோது, ''நம்பிக்கையாக இருக்கணும். இங்கிலீஷ் நல்லாத் தெரியணும். தங்கச்சி கனி இருக்குதே...'’ என்று மு.க.அழகிரிதான் அப்போது எடுத்துக் கொடுத்தார் என்பார்கள். அந்தச் சமயத்தில், ''கனிமொழிக்கு ஏதாவது பதவி கொடுப்பீர்களா?'' என்று கேட்கப்பட்டது. ''காய், கனி ஆகும்போது பார்க்கலாம்'' என்றது மு.க-வின் வாய்ஜாலம். அடுத்த சில வாரங்களில் கனிமொழி மாநிலங்கள் அவை உறுப்பினர் ஆனார். தயாநிதி வகித்து வந்த அதே தொலைத்தொடர்புத் துறை, ஆ.ராசாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது ராசாவுக்கும் தயாநிதிக்கும் இடையே ஓர் அறிக்கைப் போர் நடந்தது. பி.எஸ்.என்.எல். நிறுவனத் துக்கு உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு செய்ததாக தயாநிதி மீது ஆ.ராசா பகிரங்கமாகக் குற்றம் சாட்டி திகிலைக் கிளப்பினார். இன்று '2ஜி’ பற்றிப் பேசுபவர்கள்கூட இதை ஏனோ மறந்துவிட்டார்கள்!

இன்று விஸ்வரூபம் எடுத்து தி.மு.க. குடும்பத்தின் ஒவ்வொரு தலையாகக் கபளீகரம் செய்துவரும் ஸ்பெக்ட்ரம் தொடர்பான அசிங்கங்கள் மெள்ள மெள்ள மீடியாவின் வாசலுக்கு வரத் துவங்கியதும், அந்தக் குடும்ப மோதலுக்குப் பிறகுதான்!

'மீடியாவை வைத்துக்கொண்டுதானே அதிகாரம் செலுத்துகிறார் தயாநிதி. அதையே நாமும் செய்தால் என்ன?’ என்று அழகிரி தரப்பு யோசித்தது. அதன் பிறகுதான் 'கலைஞர் டி.வி.’ உதயம் ஆனது. சுமங்கலி கேபிளுக்குப் பதிலாக இவர்கள் ராயல் கேபிளைத் தொடங்கினார்கள். அதாவது, தயாநிதி மாறனின் இரண்டு பலங் களைப் பலவீனப்படுத்தத் தொடங்கினார்கள்!

டெல்லி குருஷேத்திரத்தைக் களமாக்கி, தி.மு.க. குடும்பம் இரண்டு அணிகளாக நடத்திக்கொண்ட அந்த 'நவீன பாரத' யுத்தத்தில் சூழ்ச்சிகளுக்கு எந்தத் தரப்பிலுமே பஞ்சம் இல்லை. நஷ்டங்களும் அப்படியே!

2008 செப்டம்பர், அக்டோபரில் ஸ்பெக்ட்ரம் டெண்டர்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது. அடுத்த மாதமே, இது மீடியாக்களில் வெளியானது. நவம்பர் 3-ம் தேதி யுனிடெக் நிறுவனத் தலைவர் ரமேஷ் சந்திராவிடம் டெலிபோனில் பேசிய நீரா ராடியா, ''மீடியாக்கள் இந்த விஷயத்தைக் கண்டுபிடித்துவிட்டன. இது சன் டி.வி, ஜெயா டி.வி-யில் வருகிறது. ஸ்வான் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்துகொடுத்து, ஆ.ராசா பயன் அடைந்ததாக அவை சொல்கின்றன. ஜெயா டி.வி-யாவது அ.தி.மு.க-வைச் சேர்ந்தது. ஆனால், சன் டி.வி. மாறன் குரூப்பைச் சேர்ந்தது'' என்று குழப்பம் அடைந்தவராகப் பேசுகிறார். அதாவது, 'தனது பதவியைப் பறித்த தி.மு.க-வைப் பழிவாங்கவே, இந்தச் செய்திகளை தயாநிதி மாறன் லீக் செய்தாரோ’ என்ற அர்த்தத்தில் நீரா ராடியாவின் வாக்குமூலம் பதிவாகி உள்ளது.

மோதலை முடித்துக்கொள்ள இரு தரப்பிலும் மாறி மாறிப் பேச்சுவார்த்தைகள் நடந்து, வெளியி லும் உள்ளேயுமாகப் பல உடன்பாடுகள் ஏற்பட்டு, எல்லோரும் கூடிச் சிரித்து, 'கண்கள் பனிக்க... இதயம் இனிக்க' புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தாலும், மோதல் நெருப்பின் கங்குகள் அணையாமல் உள்ளே கனன்றுகொண்டேதான் இருந்தன.

அது மட்டுமா... நெஞ்சம் இனித்த அந்த தினத் தன்று இரு தரப்பினரும் உள்ளே நுழைவதற்குச் சில நிமிடங்களுக்கு முன் ஒரு விஷயம் நடந்ததாகச் செய்திகள் உண்டு. சமாதான அறிவிப்பு ஸ்தலமான கோபாலபுரத்தில் இருந்து ராஜாத்தி அம்மாளுக்கு போன் செய்த கருணாநிதி, ''அவங்க எல்லாரும் தனியாப் பேசி ஒண்ணு சேர்ந்துட்டாங்க. இது எதுவுமே எனக்குத் தெரியாது!'' என்றாராம். அதாவது, மாறன் சகோதரர்கள் மறுபடி கோபால புரத்துடன் உடன்பாடு கண்டதை சி.ஐ.டி. காலனி ரசிக்கவில்லை!

''தயாநிதி மாறன் மட்டும் அல்ல... அவரை ஆதரிப்பவர்களும் எனக்கு எதிரிகள்தான்'' என்று சொன்ன அழகிரியும், ''நான் என்ன தவறு செய்தேன்? அவரைப்போல் போட்டி வேட்பாளரை நிறுத்தி முன்னாள் சபாநாயகரைத் தோற்கடித்தேனா?'' என்று கேட்ட தயாநிதியும்... கை குலுக்கிக்கொண்டார்கள். ''நீதான் இங்கிலீஷ் நல்லாப் பேசுவியே!'' என்று அழகிரியால் ஆசீர்வாதம் செய்து அழைத்து வரப் பட்ட கனிமொழி, மீண்டும் தனித்துவிடப்பட்டார்.

ஸ்பெக்ட்ரம் புகாரோ, எதிர்க் கட்சிகள் மற்றும் ஊடகங்களால் பலமான அலைவரிசையில் போட்டுத் தாக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் டெல்லி சென்ற கருணாநிதியிடம் ஸ்பெக்ட்ரம் பற்றிக் கேட்கப்பட்டது. ''ஸ்பெக்ட்ரம் விவகாரம் முடிக்கப்பட்டுவிட்டது'' என்றார் அவர். கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பமும் ஒன்றிணை வதால், ஸ்பெக்ட்ரம் விவகாரம் எப்படி முடிக்கப்பட்டுவிடும்?

தொடர்ந்து நடந்ததை நாடு அறியும்!

ஆ.ராசா, கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்தது... தயாளு அம்மாள் கை விலங்கில் இருந்து தப்பினார். ''அந்தக் குடும்பத்துல எல்லாரும் தப்பிட்டாங்க. கனிமொழி மட்டும் என்ன பாவம் செய்தார்? தயாநிதிதான் இது எல்லாத்துக்கும் காரணம்'' என்று சி.ஐ.டி. காலனியில் சோகமும் சீறலுமாகக் கேள்வி ஒலித்தது. இப்போது 'தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன் வாக்குமூலம்' என்று புதிய புயல் வீசும் நிலையில், தி.மு.க. தரப்பு கவனமாக அமைதி காத்துக்கொண்டு இருக்கிறது - அடுத்து நடப்பதை எதிர் நோக்கி!

அலைக்கற்றை விவகாரம் ஆ.ராசா காலத்தில் இருந்து ஆரம்பமான விஷயம் அல்ல. தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த நேரத்திலும் சில முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்று 'தெகல்ஹா’ சொல்ல... அவருடைய பதவி, சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகையை எதிர்நோக்கித் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது. 'குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்படுவதாலேயே ராசா குற்றவாளி ஆகிவிட மாட்டார்’ என்று வக்காலத்து வாங்கிய கருணாநிதி, ''தயாநிதி தனது பிரச்னைகளைத் தானே பார்த்துக் கொள்வார்'' என்று சொன்னதன் உள் அர்த்தம் அந்தக் கனல் ஆறவில்லை என்பதையே காட்டுகிறது.

''ஆ.ராசா, கனிமொழி கைதுக்குக் காரணமே தயாநிதி மாறன்தான்'' என்று சொல்லும் ஒரு தரப்பு தி.மு.க-வினர், ''நாளைக்கு தயாநிதி மாறனுக்குச் சிக்கல் வலுத்தால் அதற்கு ஆ.ராசாவும் கனிமொழி யும்தான் காரணமாக இருப்பார்கள்'’ என்றும் சொல்லத் தவறவில்லை!

கருணாநிதியை, அவர் குடும்பத்து உட்பகையே உறக்கம் இல்லாமல் செய்துவிட்டது. இதில் இருந்து தப்பிக்க மந்திரக்கோல் எதுவும் இப்போதைக்கு அவர் கை வசம் இல்லை. அப்படி ஒன்று இருந்தாலும்... அது இரண்டாக உடைந்துபோனதாகவே சொல்லலாம்.

Thanks : Vikatan

How to Find Random Number For Engineering Counseling in Anna University?

0 comments
Random Number For Engineering Counseling in Anna University, can be found at the official website of the Random Number For Engineering Counseling in Anna University at the anna university website, as given here http://www.annauniv.edu/tnea2011/random.html?param=1308556540893 , More to that all the Random Number For Engineering Counseling in Anna University can be obtained from here by entering the application numbers of the TNEA 2011 acadamic year.

More details about Random Number For Engineering Counseling in Anna University can be found in the below embedded source, of the anna university







All the best for all the students of  Random Number For Engineering Counseling in Anna University, for the TNEA 2011 Admissions.


Avan Ivan Movie Download: Avan Ivan(2011) Tamil Movie, Download & Watch Online Links

0 comments
Avan Ivan Movie Downlo
Avan Ivan Movie Download is on process so do please check back in this blog for more details, as Avan Ivan Movie Download is not hosted by us, we are trying to find the Avan Ivan Movie Download link and update with the latest link.

More to that if any one of you having Avan Ivan Movie Download links, do share, i can reupload it in a compressed format for Avan Ivan Movie Download to others easily download. Heard that Avan Ivan Movie Download is the movie for vishals break through same like vikram.

Will this Avan Ivan Movie Download story line as read from http://tamil.galatta.com/entertainment/review/reviewnews/n/829671076/movie/AvanIvan.html , and wait for the links here.

Bharathiar University Results 2011: BA, B.Com & BSc UG Exam Results decalred by Bharathiar University

0 comments
Bharathiar University Results 2011
Bharathiar University Results 2011 has been declared now by the Bharathiar University Results 2011 team for the students who are waiting for their Bharathiar University Results 2011 for the B.A, B.Sc and B.Com Examinations which was completed by the university Earlier this year, now students can check their results at the below given links.

The Official Bharathiar University Results 2011 page is now displaying the results and you can get the results from this link of the Bharathiar University Results 2011 http://www.b-u.ac.in/results/ and more to that you can directly visit the official website of the Bharathiar University home page http://www.b-u.ac.in to get the results directly.

The Link for Bharathiar University Results 2011 is here,  http://www.b-u.ac.in/results/ is live now and you can get all the exam results for the language and subject papers for the Bharathiar University Results 2011 released exam results.

All the Best for all the students of the Bharathiar University those who are expecting their Bharathiar University Results 2011 by today.

B.A Results Link : http://www.b-u.ac.in/ba2011/index.html

B.Com Results Link : http://www.b-u.ac.in/bcom2011/index.html

B.Sc Results Link : http://www.b-u.ac.in/bsc2011/index.html

Address and Contact details of Bharathiar University Results 2011 ,

Bharathiar University
Coimbatore-641 046. India.
Phone: (91) 422-2428100, 2428108, 2428126, 2422335.
Fax: (91) 422-2422387.
Email: regr@buc.edu.in


மூடல் அபாயத்தை நோக்கி முன்னேறும் இன்ஜினியரிங் கல்லூரிகள் | Tamilnadu Engineering Colleges are heading ahead for Closing |

0 comments
Tamilnadu Engineering Colleges தமிழகத்தில் இந்த ஆண்டு, 65 ஆயிரம் இன்ஜினியரிங் சீட்களுக்கு Tamilnadu Engineering Colleges மேல், காலியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளைப் போலவே, இன்ஜினியரிங் கல்லூரிகளும் Tamilnadu Engineering Colleges மூடல் அபாயத்தை நோக்கி முன்னேறுகின்றன.

மழைக்காலத்தில் முளைக்கும் காளான்கள் போல, தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லூரிகள் Tamilnadu Engineering Colleges முளைத்துக் கொண்டிருக்கின்றன. 2010-11ம் கல்வியாண்டு நிலவரப்படி, நாடு முழுவதும், 3,241 இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. அவற்றில், தமிழகத்தில் மட்டும், 486 கல்லூரிகள், கட்டடம் கட்டி, மாணவர்களுக்காக காத்திருக்கின்றன. அதாவது, நாட்டின் ஒட்டுமொத்த இன்ஜினியரிங் கல்லூரிகளில், 15 சதவீதம் தமிழகத்தில் தான் இருக்கின்றன. இருக்கிற கல்லூரிகளே, கட்டணம் கட்டுவதற்கு மாணவர்கள் இன்றி, ஈயோட்டிக் கொண்டிருக்கும் வேளையில், பெரிய தெரு பிள்ளையார் கோவில் பிரசாதம் மாதிரி, கேட்பவருக்கெல்லாம் புதிய கல்லூரி துவக்க அனுமதி கொடுத்துக் கொண்டிருக்கிறது ஏ.ஐ.சி.டி.இ., இந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் Tamilnadu Engineering Colleges ஏ.ஐ.சி.டி.இ., அனுமதிக்காக காத்திருக்கின்றன. இவற்றில், 18 புதிய கல்லூரிகளுக்கு, இந்த ஆண்டு அனுமதி கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இப்படி, தினம் ஒரு கல்லூரி உருவாவதால், அவற்றின் தரம் கேள்விக்குறியாகிவிடுகிறது. அதனால் தான், நாடு முழுவதும் உள்ள நிகர்நிலை பல்கலைக் கழகங்களின் தரம் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வந்தது. அதில், தரம் குறைந்த பல்கலைகளாக, யு.ஜி.சி.,யால் அடையாளம் காட்டப்பட்டவற்றில், தமிழகம் முதலிடம் பிடித்திருந்தது. அவர்களின் கணிப்புப்படி, 16 பல்கலைகள், தரத்தைப் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல், வெறுமனே கல்லா கட்டிக்கொண்டிருந்தவை. தமிழகத்தில் இப்போது, இரண்டு லட்சம் இன்ஜினியரிங் சீட்கள் இருக்கின்றன. ஆனால், இன்ஜினியரிங் சேர்பவர்களின் ஐந்தாண்டு சராசரியோ, வெறும், 97 ஆயிரம் தான். தொடர்ந்து நான்காண்டுகளாக, சராசரியாக, 20 ஆயிரம் சீட்கள் காலியாகக் கிடக்கின்றன. இது, அரசு ஒதுக்கீட்டு சீட்களின் எண்ணிக்கை தான். நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களைச் சேர்த்தால், காலியிடங்களில் எண்ணிக்கை, 50 ஆயிரத்தைத் தாண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதி மதிப்பெண் குறைக்கப்பட்டதற்குப் பிறகும், இந்த நிலைமை மாறாதது தான். இன்னும் சொல்லப்போனால், மதிப்பெண்கள் குறைக்கப்பட்ட பிறகு, காலியான சீட்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்திருக்கிறது. கடந்த, 2008-09ம் ஆண்டு, இன்ஜினியரிங் கல்லூரிகளில் Tamilnadu Engineering Colleges ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 931 பேர் சேர்ந்தனர். அதிர்ச்சி தரத்தக்க வகையில், 2009-10ம் ஆண்டு இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து, 20 ஆயிரத்து, 74 ஆகக் குறைந்தது. அந்த ஆண்டு மட்டும் மொத்தம், 52 ஆயிரத்து, 371 சீட்கள் காலியாக இருந்தன.

கடந்த ஆண்டு, 2 லட்சத்து, 4,541 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இந்த ஆண்டு, 2.20 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. ஆனால், திக்கித் திணறி ஒரு லட்சத்து, 70 ஆயிரம் விண்ணப்பங்களைத் தான் விற்க முடிந்தது. கடந்த ஆண்டை விட, 34 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாக விற்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, நிச்சயமாக இந்த ஆண்டு, 65 ஆயிரம் சீட்கள் காற்றாடும் என எதிர்பார்க்கலாம். இதே மாதிரி தான், புற்றீசல்கள் போல ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் துவக்கப்பட்டன. என்னமோ, ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கெல்லாம், தங்கத் தாம்பாளத்தில் அரசு வேலை காத்திருப்பது போல, எஸ்.எஸ்.எல்.சி.,யிலும், பிளஸ் 2விலும் நல்ல நல்ல மதிப்பெண் பெற்றவரெல்லாம், ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தனர்.

பயிற்சிக் கல்லூரிக்கான எந்தக் கட்டமைப்பும் இல்லாமல், வெறுமனே நான்கு சுவர்களை மட்டும் கட்டி, பிழைப்பு நடத்தியவர்கள் எல்லாம் உண்டு. அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது, அங்கே, இங்கே நான்கு கம்ப்யூட்டர்களைக் கடன் வாங்கி, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு ஆசிரியர் வேஷம் போட்டு, அதிகாரிகளைக் கவனித்து, அனுமதியைத் தொடர்ந்தவர்கள் ஏராளம். அவற்றின் நிலைமை, தற்போது பல்லிளித்துவிட்டது. 26 ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் உரிமத்தை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை ரத்து செய்துவிட்டது. 54 கல்லூரிகள், "போதுமடா சாமி' என, தாங்களாகவே இழுத்து மூடிவிட்டன.தரம் குறைந்த நிறுவனங்களை அரசு அதிகாரிகள் அனுமதிப்பதும், எந்த முன்யோசனையும் இல்லாத மாணவர்கள், ஏதேனும் ஒரு, "டுபாக்கூர்' கல்லூரியில் சேர்ந்து, எதிர்காலத்தைத் தொலைப்பதும் தான், இதற்கெல்லாம் காரணம். கிடுக்கிப்பிடியை இறுக்காவிட்டால், இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கும் Tamilnadu Engineering Colleges இதே கதி தான் ஏற்படும்.

புகை! உனக்குப் பகை

0 comments

வளர்ந்து வரும் தீமைகளில் புகைத்தல் பழக்கம் என்பது முக்கியமானதாகும். இன்றைய இளைஞர்களைத் தொற்றிக்கொள்ளும் ஆபத்துகளில் இது பிரதானமாகும். கட்டிளம் பருவ இளைஞர்கள் தான் பெரியவனாகி விட்டேன் என்பதற்கான ஒர் அடையாளமாகப் புகைத்தலைக் கருதுகின்றனர். மற்றும் சிலர் தானும் வளர்ந்து சமூகத்தில் ஓர் அங்கம் என்பதன் அடையாளமாகப் புகைத்தலை எடுத்துக்கொள்கின்றனர்.

சினிமா நடிகர்கள் ஊதித் தள்ளுவதை ஒரு ஸ்டைலாகவும், அதை வீரமாகக் காட்டி வருவதால் வளரும் இளைஞர்களிடம் இந்த ஆபத்து விரைவாக ஒட்டிக்கொள்கின்றது. சில இளைஞர்கள் புகையை ஒரு இழு இழுத்து விட்டு, வட்ட வட்டமாக அதை விடும் போது அதில் நமது ஆண்மை உறுதிப்படுத்தப்படுவதாக உணர்கின்றனர்.

நட்புக்காக:
சில இளைஞர்கள் நட்புக்காக இந்த நரக நடத்தையில் மாட்டிக்கொள்கின்றனர். "நண்பன் 'டம்' அடிக்கும் போது சும்மா 'கம்பனி' கொடுப்பதற்காகக் குடிக்கின்றேன்!" என நொண்டிச் சாட்டுக் கூறிக்கொள்கின்றனர். உங்கள் நட்புப் பிரிந்த பின்னர் கூட நட்புக்காக உங்கள் வாயில் வைத்த சிகரட்டைப் பிடித்து, எடுத்துத் தூர எறிய உங்களால் முடியாமல் போய் விடும். எனவே நட்புக்காகவென உங்கள் உடலையும், உள்ளத்தையும், மறுமையையும், பணத்தையும் புகைக்கு இரையாக்க முனையாதீர்கள்!

அறியும் ஆவல்:
பெரியவர்கள் "டம்" அடிக்கும் போது அதைப் பார்க்கும் இளைஞர்களுக்கு அப்படி என்ன அதிலிருக்கின்றது? ஒரு முறை அடித்துத்தான் பார்ப்போமே! என்ற ஓர் ஆர்வம் பிறக்கின்றது. மதுபானத்தையும் சிலர் இப்படித்தான் குடிக்க ஆரம்பிக்கின்றனர். பின்னர் மது அவர்களைக் குடிக்க ஆரம்பித்து விடுகின்றது. பின்னர் அதை விட்டும் கழன்றுகொள்ளும் சக்தி அற்றவர்களாக இவர்கள் மாறி விடுகின்றனர்.

அப்படி என்ன இருக்கின்றது? என்று ஆராயும் நண்பனே! நீ என்ன பெரிய விஞ்ஞானி என்று நினைப்பா உனக்கு? எதையும் அனுபவித்துத்தான் ஆராய வேண்டுமா? விஷத்தைக் குடித்துப் பார்த்து ஆராய்வாயா? சிங்கத்தின் வாயில் தலை விட்டுப் பார்ப்பாயா?

இது தேவையற்ற ஆராய்ச்சி!
முன்னர் இப்படி ஆராயப் போனவர்கள் இன்றைய குடிகாரர்கள்! நாளைய குடிகாரப் பட்டியலில் இடம்பிடிக்கத்தான் இன்று ஒரு "டம்" அடித்துப் பார்ப்போம் என்று அடம்பிடிக்கின்றாயா?

கவிதை வரும்! கற்பனை வரும்!
சிலர், "சிகரெட்டினால்தான் கற்பனை ஊற்றெடுக்கும்! கவிதை வரும்! கற்பனை வளம் கொழிக்கும்!" என்று தமது தவறை நியாயப்படுத்தி, பொய் கூறுவதில் நீ ஏமாந்து விட வேண்டாம்! சிகரெட் பிடித்தால் கவிதை-கற்பனையெல்லாம் வராது; வாயில் நாற்றம் வரும்; நுரையீரலில் நோய் வரும்; புற்றுநோய் வரும்; காசு போகும்; ஆண்மை குறையும். இந்த மாதிரி ஜடங்கள்தான் வரும்-போகுமே தவிர, கற்பனை-கவிதையெல்லாம் வராது! நம்முடைய நாட்டில் எத்தனையோ பெண் எழுத்தாளர்கள் உள்ளனர். அவர்களெல்லாம் "டம்" அடித்துத்தான் கவிதை எழுதுகின்றனரா?

"டம்" அடித்தால் நல்ல எழுத்து வரும்!" என்றும் கூறுவார்கள். யாராவது பரீட்சை மண்டபத்தில் "டம்" அடித்துக்கொண்டு பரீட்சை எழுதுவதைப் பார்த்ததுண்டா?

"டம்" அடித்தால்தான்..
மற்றும் சிலர் இப்படியும் உளருவர்;
"எனக்கு "டம்" அடித்தால்தான் காலையில் காலைக் கடனைக் கூட ஒழுங்காகச் செய்ய முடியும்!" என்பர். இப்படியும் கன்றாவித் தனமாக உளர முடிகின்றதே! என்று ஆச்சரியமாக உள்ளது.

நமது நாட்டுச் சிறுவர்கள் காலையில் மலம் கழிப்பதில்லையா? பெண்கள் மலம் கழிப்பதில்லையா? ஏன்! இப்படிக் கூறுபவனே "டம்"முக்கு அடிமையாகும் முன்னர் மலம் கழித்ததில்லையா? ஒழுங்காக மலம் கழிக்காத சிறுவர்களுக்கு ஒரு "டம்" அடிக்கக் கொடுங்கள்! அனைத்தும் சரியாகி விடும்! என்று கூறும் ஒரு மருத்துவரையாவது நீங்கள் கண்டதுண்டா? மொட்டைத் தலைக்கும், ழுழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்று அர்த்தமற்ற வாதமாக இது தென்படவில்லையா? அல்லது "டம்" அடித்த போதையில்தான் இப்படி இவர்கள் உளறுகின்றனரா என்று புரியவில்லை.

"டம்" அடித்தால் ஆழழன வரும்:
இது சிலரது வரட்டு வாதம். தனது தவறை நியாயப்படுத்த அவர்களாக அடுக்கிக்கொண்டு செல்லும் அசட்டு வாதங்கள்தான் இவை. சரி! ஆழழன வருவதற்காக அடிப்பவன் வீட்டில் இருக்கும் போது தாம்பத்தியத்திற்கான சாத்தியம் இருக்கும் போது மட்டும் தானே புகைக்க வேண்டும். பயணத்தின் போதும், மனைவி பக்கத்தில் இல்லாத போதும் அடிக்கிறானே! அப்போது ஆழழன வந்தால் எங்கே போய் முட்டும் எண்ணம்! இதுவே இது போலிக் காரணம் என்பதைப் புரிய வைக்கப் போதிய சான்றாகும். ஆழழன வருவதற்காக அடிப்பவரின் மனைவிக்கு ஆழழன வர சிகரெட் பிடிக்க அனுமதிப்பாரா? சிகரெட் பிடித்து விட்டு, உனக்கு ஆழழன வந்தாலும் அந்த நேரத்தின் நாற்ற வாயுடன் இல்லறத்திற்கு நுழையும் போது மனைவிக்கு வாந்தி வரப் பார்க்குமே! "சனியன்! எப்ப தொலையுமோ!" என அவள் மனதுக்குள் வெறுத்துக்கொள்வாளே! அதற்கு என்ன செய்வதாம்? சிகரெட் பிடிப்பது ஆண்மையைக் குறைக்கின்றது என்பதுதான் அறிஞர்களின் கூற்றே தவிர, அது ஆண்மையை வளர்க்கும் என்பதல்ல என்பதைக் கவனத்திற்கொள்ளவும்!

அறிவு அற்றவன் செயல்:
"புகைத்தல்" என்பது அறிவற்றவர்களின் செயலாகும். நீங்கள் ஒரு கடைக்குச் சென்று "நாற்றமெடுக்கும் வாடை கிடைக்குமா? அழுகிய பெட்டீஸ் கிடைக்குமா?" என்று கேட்டு வாங்குவீர்களா? ஒருவன், "பழைய பழுதான உணவு உண்டு!" எனக் கூறி அழைத்தால் அதனை உண்டு மகிழ்வீர்களா? அறிவிருந்தால் இதைச் செய்ய மாட்டீர்கள்! ஆனால், சிகரெட் பெட்டியிலேயே "புகைத்தல் உடல் நலத்திற்குக் கேடானது!" என்று எழுதியுள்ளார்கள். அதைக் காசு கொடுத்து வாங்கிக் குடிக்கின்றீர்கள் என்றால் இது அறிவுள்ளவர்களின் வேலையா? புத்தியுள்ள எவரும் இதைச் சரி காண்பார்களா? எனவேதான் "புகைத்தல்" என்பது புத்தியற்றவர்களின் செயல் என்கின்றேன்.

புகைத்தலின் மார்க்க நிலைப்பாடு:
"சிகரெட், பீடி, சுருட்டு என்று அனைத்து வகைப் புகைத்தலும் ஹறாம்!" என்பது இஸ்லாமிய உலக அறிஞர்கள் அனைவரினதும் ஏகோபித்த முடிவாகும்.

நபி(ஸல்) அவர்களது பணிகள் பற்றி அல்லாஹ் கூறும் போது;
"அவர்கள்தான் (எழுத்தறிவற்ற) உம்மி நபியான இத்தூதரைப் பின்பற்றுவார்கள். அவர் குறித்து எழுதப் பட்டிருப்பதைத் தங்களிடமுள்ள தவ்றாத்திலும், இன்ஜீலிலும் கண்டுகொள்வார்கள். அவர் அவர்களுக்கு நன்மையை ஏவித் தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார். தூய்மையானவற்றை அவர்களுக்கு ஆகுமாக்கித் தீயவற்றை அவர்களுக்குத் தடை செய்வார். மேலும் அவர்களது சுமையையும், அவர்கள் மீதிருந்த விலங்குகளையும் அவர்களை விட்டும் நீக்குவார். எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைக் கண்ணியப் படுத்தி, அவருக்கு உதவியும் செய்து, அவருடன் இறக்கப்பட்டிருக்கும் (குர்ஆன் எனும்) ஒளியையும் பின்பற்றுகின்றார்களோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்." (7:157)

நபி(ஸல்) அவர்கள் நல்லவற்றை ஆகுமாக்குவார்கள்; கெட்டவற்றைத் தடுப்பார்கள். புகைத்தல் என்பது ஒரு கெட்ட நடத்தை என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். இந்த வகையில் இது இஸ்லாமிய சட்டவாக்கத்தில் "ஹறாம்" என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றது.

"(நபியே!) மது, சூதாட்டம் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மனிதர்களுக்குச் (சில) பயன்களும் இருக்கின்றன. எனினும், அவ்விரண்டின் பயனை விட அவ்விரண்டின் கேடு மிகப் பெரியதாகும்!" எனக் கூறுவீராக! மேலும், தாம் "எதைச் செலவு செய்வது?" என்றும் உம்மிடம் கேட்கின்றனர். "(தேவைக்குப் போக) மீத முள்ளதை!" எனக் கூறுவீராக! நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறே அல்லாஹ் வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்." (2:219)

மேற்படி வசனம் மதுபானத்தில் சில நன்மைகளும், பெரிய தீமைகளும் இருப்பதாகக் கூறுகின்றது. சில நன்மைகள் இருந்து, அதை விட அதிகத் தீமைகளிருந்தால் அது ஹறாம் என்றிருக்குமானால் தீமைகள் மட்டும் நிறைந்த, எந்த நன்மையுமற்ற சிகரெட்டின் நிலை என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

தற்கொலைக்கு நிகர்:
சிகரெட்டின் நுணியில் நீங்கள் நெருப்பு வைக்கும் போதே அது உங்கள் உயிரிலும், உடலிலும் தீ மூட்டி விடுகின்றது.

இன்று இளவயது மரண விகிதாசாரம் அதிகரித்துச் செல்வதில் சிகரெட்டுக்குக் கூடிய பங்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். வருடாந்தம் இலட்சக்கணக்கானோர் சிகரெட் மூலம் மரணத்தைத் தழுவுகின்றனர்.

ஒரு போட்டி நடத்தப்பட்டது:
ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து அந்தச் சிகரெட் முடியும் போது அதே சிகரெட்டில் இன்னுமொரு சிகரெட்டைப் பற்ற வைக்க வேண்டும். இப்படி "அதிக சிகரெட் பிடிப்பவர்கள் யார்" என்பதுதான் போட்டி. ஒருவர் 18 உம், மற்றவர் 17 உம் பிடித்து முறையே முதலாம், இரண்டாம் இடங்களைப் பிடித்தனர். மற்றவர்கள் இடைநடுவில் தோல்வியை ஏற்றுக்கொண்டனர். இந்தப் போட்டியின் பரிசுகளை வழங்குவதற்கு முன்னரே வெற்றியாளர்கள் இருவருக்கும் சிகரெட் மரணத்தைப் பரிசாக வழங்கி விட்டது. சராசரியாக ஒரு சிகரெட் ஒரு மனிதனது ஆயுளில் 11 செக்கன்களைக் குறைக்கின்றது எனக் கணிப்பீடுகள் கூறுகின்றன. எனவே, புகைத்தல் என்பது தற்கொலைக்குச் சமமானது.

"மேலும், அல்லாஹ்வின் பாதையில் செலவு செய் யுங்கள்! (செலவு செய்யாமல்) அழிவின் பக்கம் உங்கள் கைகளைக் கொண்டு செல்லாதீர்கள்! நன்மையும் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கின்றான்." (2:195)

எனவே, இந்த அடிப்படையிலும் சிகரெட் "ஹறாம்" என்ற வட்டத்திற்குள் வந்து விடுகின்றது.

வீண்-விரயம்:
இஸ்லாம் வீண்-விரயம் செய்வதைத் தடுக்கின்றது. 10 ரூபா பணத்தை எடுத்து எந்த விதத்திலும் நன்மை நல்காத, தீமையைத் தரக் கூடிய சிகரெட்டை வாங்கி ஊதித் தள்ளுவதென்பது மிகப் பெரிய வீண்-விரயமாகும். ஒரு சிகரெட் 10 ரூபா என்று வைத்துக்கொள்வோம். ஒருவன் சராசரியாகக் குறைந்தது ஒரு நாளைக்கு 7 சிகரெட் குடிப்பதாக இருந்தால்..
ஒரு நாளைக்கு " 70 ருபாய்
ஒரு வாரத்துக்கு " 490 ருபாய்
ஒரு மாதத்திற்கு " 2,100 ருபாய்
ஒரு வருடத்திற்கு " 24,200 ருபாய்
பத்து வருடங்களிற்கு " 242,000 ருபாய்
நாற்பது வருடங்களிற்கு " 968,000 ருபாய்

இவ்வாறு பார்க்கும் போது சிகரெட்டின் விலை 40 வருடங்களிற்குக் கூட்டப்படாவிட்டாலும், சிகரெட் குடிப்பவர் குடிக்கும் எண்ணிக்கையைக் கூட்டாவிட்டால் கூட வருடத்திற்குச் சுமார் 242,000 ரூபா சிகரெட்டுக்குச் செலவாகின்றது. தனது பிள்ளையின் படிப்புக்குக் கூட ஒருவன் வருடத்திற்கு 25,000 செலவழிப்பதில்லையே! 10 வருடங்களிற்கு இதே கணக்கு என்று எடுத்துக்கொண்டால் கூட 250,000 அதிகமாகச் செலவாகின்றதே! இது வீண்-விரயமில்லையென்று கூற முடியுமா?

இதே வகையில் இருந்தால் 40 வருடங்களாகின்ற போது 10 இலட்சத்திற்கும் அதிகமாக செலவிடப்படுகின்றதே! இந்த வீண்-விரயத்திற்கு அல்லாஹ்விடம் என்ன பதில் கூறப் போகின்றீர்கள்?

"நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தானின் சகோதரர்களாகவே இருக்கின்றனர். ஷைத்தான் தனது இரட்சகனுக்கு நன்றி கெட்டவனாகவே இருக்கின்றான்." (17:27)

என்ற வசனத்தின் படி சிகரெட் குடிப்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாகின்றனரே! ஷைத்தானின் சகோதரனாக இருக்க உங்களுக்குச் சம்மதமா?

நாளை மறுமையில் ஒவ்வொரு மனிதனதும் பணத்தைத் தான் எப்படிச் சம்பாதித்தேன்? என்றும், எந்த வழியில் செலவழித்தேன்? என்றும் கணக்குக் காட்ட வேண்டும். 40 வருடங்கள் சிகரெட் குடித்த ஒருவன், "பத்து இலட்சம் ரூபாப் பணத்தைப் பற்ற வைத்து ஊதித் தள்ளினேன்!" என்று அல்லாஹ்விடம் கூற முடியுமா? அப்படிக் கூறி விட்டுத் தப்பி விடத்தான் முடியுமா? எனவே, உங்களை அழிக்கும்/உங்கள் பொருளை அழிக்கும் இந்தப் "புகை" எனும் பகைவனுடன் ஏன் இன்னும் உங்களுக்கு நட்புறவு? புகைத்தலைப் பகைத்தல் என்பது மார்க்கக் கடமை என்பதை உணர்ந்து உறுதியான முடிவை எடுங்கள்!

பிறருக்குத் தொல்லை:
"நல்ல முஸ்லிம் யார்?" என நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது, "தன் கையாலோ, நாவாலோ பிறருக்குத் தீங்கிழைக்காதவனே சிறந்த முஸ்லிம்!" என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(புகாரி)

ஒருவன் புகைப்பதால் அவன் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவன் ஊதித் தள்ளும் புகையைச் சுவாசிப்பவர்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றனர். ஒரு கர்ப்பிணி புகைத்தால் அவளது குழந்தையும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றது. வீட்டில் ஊதித் தள்ளும் ஊதாரித் தந்தையர்களால் குழந்தைகள் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்; மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய குழந்தைகள் வெகு விரைவாகப் புகைத்தலுக்கு அடிமையாகின்றனர். சில சிறுசுகள் தந்தை வீசும் பீடி/சிகரெட் துண்டுகளை எடுத்துத் தாமும் ஒரு முறை ஊதிப் பார்த்துக்கொள்கின்றனர். நீங்கள் ஒரு சிறந்த முஸ்லிமாக இருக்க உங்களுக்கு ஆசையில்லையா? அடுத்தவருக்குத் தீங்கிழைக்காத ஒரு சராசரி நல்ல மனிதனாக இருக்க உங்களுக்கு ஆசையில்லையா? பரவாயில்லை! உங்கள் மனைவியைக் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!

பொதுவாகப் பெண்களுக்கும், சிகரெட் குடிக்காதவர்களுக்கும் அந்த நாற்றம் பிடிக்கவே பிடிக்காது. வயிற்றைக் குமட்டிக்கொண்டு வரும். நீங்கள் இல்லறத்தில் ஈடுபடும் போது சிகரெட் நாற்றம் பிடிக்காமல் உங்கள் மனைவி வேண்டா வெறுப்புடன் வாழ்க்கை நடத்தினால் அது எவ்வளவு பெரிய கொடுமை என்று எண்ணிப் பாருங்கள்! வாழ்க்கையில் திருப்தியற்ற இத்தகைய பெண்கள் வேலி தாண்டிய வெள்ளாடுகளாகிப் போனால் அந்தக் குற்றத்தில் உங்கள் நறுமனம் சிகரெட்டினால் கமழும்(?) வாய்க்கும் முக்கிய பங்கிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்!

வெங்காயமும், வெள்ளைப்பூடும்:
வெங்காயம். வெள்ளைப்பூடு. இவையிரண்டும் சிறந்த மருத்துவக் குணங்கொண்டவையாகும். இவற்றை உண்பதை நபி(ஸல்) அவர்கள் அனுமதித்தார்கள். எனினும் இவற்றைப் பச்சையாக உண்டவர், பல் துலக்காமல் பள்ளிக்கு வர வேண்டாம் என நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (புகாரி)

ஏனெனில், வெங்காயம்-வெள்ளைப்பூடு சாப்பிட்டால் வாயில் வாடை வரும். அந்த வாடை அருகில் தொழுபவர்களுக்கு மட்டுமன்றி மலக்குகளுக்குக் கூட அவை வெறுப்பை உண்டுபண்ணுவதாகக் கூறினார்கள். அனுமதிக்கப்பட்ட வெங்காயம்-வெள்ளைப்பூட்டின் நிலையே இதுவென்றால் சிகரெட்டின் நிலை என்னவென்று நிதானமாகச் சிந்தியுங்கள்!

எனவே, புகைக்கும் நண்பர்களே!
புகைக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும் என்று உறுதியாக முடிவு எடுங்கள்! அதில் உறுதியாக இருங்கள்! சிகரெட்டுப் பிடிக்கும் நண்பர்களை விட்டும் கொஞ்சம் ஒதுங்குங்கள்! நீங்கள் சிகரெட் குடிக்கும் நேரங்களில் உங்கள் மனம் விரும்பும் ஏனைய காரியங்களில் ஆர்வம் காட்டுங்கள்! அப்படியும் முடியவில்லையென்றால் ஒரு டொஃபியையோ(மிட்டாய்), சுவிங்கத்தையோ அந்நேரத்தில் வாயில் போட்டுக்கொள்ளுங்கள்! நண்பர்களாகச் சேர்ந்து "டம்" அடித்த இடங்களைத் தவிருங்கள்!

"ரமழான்" – நல்ல வாய்ப்பு:
புகைத்தலை விடுவதற்கு "ரமழான்" நல்ல வாய்ப்பாகும். 14 மணி நேரம் உண்ணாமல், பருகாமல் பயிற்சி எடுக்கின்றோம். இப்படிப் பயிற்சியெடுத்த சிலர் சிகரெட்டை ஒரு கடமை போன்றும், அதைக் கழாச் செய்து விட வேண்டும் என்பது போன்றும் கருதி, நோன்பு திறந்ததிலிருந்து ஸஹர் வரைக்கும் ஊதித் தள்ளிப் பகல் குடிக்காததையும் ஈடு செய்து விடுகின்றனர்.

சிகரெட் குடிப்பதில்லை என நீங்கள் உறுதியான முடிவெடுத்து விட்டால் இஃப்தாருக்குப் பின்னர் சற்று நேரந்தான் நீங்கள் ஓய்வாக இருக்கின்றீர்கள். அந்த நேரத்தில் உறுதியாக இருந்து விட்டால் அதன் பின் கியாமுல்லைல்; அதன் பின் உறக்கம்; விழித்ததும் ஸஹர் என்று காலம் போனால் சிகரெட்டை முழுமையாகக் கைவிட முடியும். நீங்களாக ஏற்படுத்திக்கொண்ட இந்த வீணான செயலை நீங்களேதான் விட வேண்டும். வேறு யாரும் வந்து உங்களுக்கும் சிகரெட்டுக்குமிடையில் பிரிவை ஏற்படுத்த மாட்டார்கள்.

எனவே, புகைத்தலின் தீமையை உணருங்கள்! அதை விட்டு விடுவதாக உறுதியாக முடிவு செய்யுங்கள்! நினைத்தால் முடியாதது எதுவுமில்லை. இந்த நோன்பிலாவது இதை நீங்கள் விட்டு விடவில்லையென்றால் உங்கள் வாழ்வை ஹறாத்தை விட்டும் நீங்கள் காத்துக்கொள்ளவில்லையென்றால் நீங்கள் சிகரெட்டில் வைத்த நெருப்பு நாளை நரக நெருப்பு வரை உங்களைக் கொண்டு சென்று விடலாம் என்பது குறித்து எச்சரிக்கையாக இருங்கள்!

Chanu Sharmila | உண்ணாவிரதப் புரட்சிகளும் ஷர்மிளா சானுவும்! - A Iron lady named Chanu Sharmila |

0 comments

Chanu Sharmila,ஜனநாயக ஆட்சியதிகாரத்தில் ஆயுதமேந்திப் போராடும் போராட்டங்களைவிட உண்ணாவிரதப் போராட்டங்களே அரசுக்கு எதிரான வீரியமான போராட்டமாக இந்தியாவில் கட்டமைக்கப் பட்டுள்ளது. Chanu Sharmila இத்தகைய சத்யாகிரகப் போராட்டங்களே வெற்றியைத் தரும் என்றதொரு மாயையும் Chanu Sharmila  மக்களிடையே ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது.

ஆனால் உண்மை நிலை என்ன?

அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் காதுகளில் ஏழைகள் மற்றும் பலவீனர்களின் குரல்கள் எப்போதுமே விழுவதில்லை. அது சத்யாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி உண்ணாவிரதப் போராட்டங்களாக இருந்தாலும் சரி! Chanu Sharmila அதே சமயம் வெள்ளையும் சொள்ளையுமாக மேல் தட்டினரிடையே வலம் வரும் கோடிகளுக்கு அதிபதிகளானோர் வாயைத் திறந்தாலே அரசுகள் நடுங்குகின்றன. டாட்டாக்களும் அம்பானி, பிர்லாக்களும்தான் உண்மையில் நாட்டை ஆளுகின்றனர் என்ற காம்ரேட்டுகளின் நீண்டக்கால குற்றச்சாட்டுகளை நினைவில் நிறுத்துவது அவசியம்.

இதற்கான சமீபத்திய மிகப் பெரிய உதாரணங்களாக ஊழலுக்கு எதிராக திடீரென குரல் எழுப்பிய, தம் ட்ரஸ்ட் மீதே ஊழல் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ள அன்னா ஹஸாரேவும்( what a useless media child) 1200 கோடிக்கும் மேலாக சொத்துக்களையுடைய நட்சத்திர உண்ணாவிரதப் போராட்ட நாயகனான பாபா ராம் தேவும் (Not equal to Chanu Sharmila) விளங்குகின்றனர்.

ஊழலுக்கு எதிராக இவர்கள் களம் கண்ட ஒரு வார காலத்துக்குள் நாட்டில் நடக்கும் அமளித்துமளி என்ன! மத்திய அமைச்சர்களே வரிசையில் நின்று இவர்களிடம் சமாதானம் பேசுவதென்ன! அவர்களின் முன்னும் பின்னும் தொலைக்காட்சி ஊடகங்களின் நூற்றுக்கணக்கான மின்னும் கேமிராக்களும் மைக்குகளும் வலம் வருவதென்ன! உண்ணாவிரதப் பந்தலில் அமரும் முன்னரே அவர்களின் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை ஏற்றுக் கொண்டதாக அரசுகள் அறிவிப்பதென்ன!

இவையெல்லாம், சத்யாகிரகப் போராட்டங்களில் ஒன்றான உண்ணாவிரதப் போராட்டத்திற்குரிய சக்தி என்றும் அதற்கு அரசுகள் என்றுமே கதிகலங்கி உடனடி நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்பும் மக்களின் காதுகளில் இந்த ஊடகங்களும் அரசுகளும் நன்றாக  பூச்சூடுகின்றன என்பதை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையில் ஏழை மற்றும் வலிமையற்றோரின் சொல் என்றுமே அம்பலமேறியதில்லை என்பதே உண்மை! இல்லையேல் கடந்த 11 ஆண்டுகளாக அரசுக்கு எதிராக, அப்பாவி மக்களுக்கு எதிரான அரசின் அடக்குமுறை சட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளாவை Chanu Sharmila இந்த அரசு கண்டுகொள்ளாதது ஏன்? மின்னும் தொலைக்காட்சி கேமராக்கள் அவரைச் சுற்றி வலம் வராதது ஏன்? ஹஸாரேயும் ராம் தேவும் உண்ணா நோன்பு துவங்குவதாக அறிவித்த 24 மணி நேரத்துக்குள்ளேயே நாட்டின் மத்திய தர வர்க்கத்தில் பெரும்பாலோருக்கு மிகப் பரிச்சயமானோராக அவர்கள் மாறிவிட்ட நிலையில், கடந்த 11 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளாவைக் குறித்து எத்தனை சதவீதம் மக்களுக்குத் தெரியும்?

தெரியாதோர் இப்போது தெரிந்து கொள்வதற்காக ஷர்மிளாவின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்த தகவல் இதோ:

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்புச் சட்டம் (AFSPA) அமல்படுத்தப்பட்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இச்சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரி கடந்த 11 ஆண்டுகளாக ஐரோம் ஷர்மிளா சானு Chanu Sharmila என்ற சமூக சேவகி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

மணிப்பூரின் சில பகுதிகளில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தின்கீழ், சந்தேகப்படும் எவரையும் எவ்வித விசாரணையோ ஆதாரமோ இன்றிச் சுட்டுப் பிடிக்கவோ அல்லது கைது செய்து சிறையில் அடைக்கவோ முடியும். இதனால் ராணுவம் மற்றும் துணை ராணுவ வீரர்களால் பாதிக்கப்படும் அப்பாவிகள்கூட தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஆங்கிலேயனின் அடக்குமுறை ஆட்சியினைவிடவும் கேவலமான அடக்குமுறை கொண்ட இந்தக் காட்டுமிராண்டிச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரியே ஐரோன் ஷர்மிளா கடந்த 11 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

குளுகுளு ஏசி, மினரல் வாட்டர், விலையுயர்ந்த கம்பளம், நூற்றுக்கணக்கான மின் விசிறிகள் முதலான சர்வ வசதிகளும் கொண்ட ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன்கூடிய பந்தலில் உண்ணாவிரதமிருந்த ராம்தேவ், தற்போது ஊடகங்களுக்கு நன்றாக தீனிபோட்டு வருவதால் பிரதமர் முதல் காபினட் அமைச்சர்கள்வரை அவர்மீது அக்கரை செலுத்தி, அவரது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளனர்.

அன்னா ஹசாரே என்ற காந்தியவாதிக்கு இணையாக தன்னைக் காட்டிக்கொண்டுள்ள, ஆயிரத்தின் மடங்கு காசை வீசுவோருக்கு யோகா சொல்லிக்கொடுக்கும் ராம்தேவின் ஓரிரு நாட்கள் உண்ணாவிரதம் அரசியல் மட்டங்களில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் கருப்புப் பணத்திற்கு எதிராகப் போராடுவதாகச் சொல்லிக்கொள்ளும் பாபா ராம்தேவ், முறையற்ற வகையில் திரட்டிய சொத்துக்களின் மதிப்பு ரூ.1200 கோடிக்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

விவசாயிகளின் நிலத்தையே அபகரித்ததாக ஆதாரத்துடன் கூடிய வழக்கும் இவரின் நிறுவனத்திலேயே ஊழியர்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதில்லை என்ற பிரச்சனையும் ஏற்கெனவே நிலுவையிலிருக்கும் நிலையில்தான் ஊழலுக்கு எதிராக இக்கதாநாயகன் களமிறங்கியுள்ளது, நகைப்பின் உச்சக்கட்டம்!

வெளிநாட்டில் முதலீடு செய்துள்ள கருப்புப்பணத்தை தேசிய உடமையாக அறிவிக்க வேண்டும் என்று முழங்கும் ராம்தேவுக்கு வெளிநாடுகளிலும் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன. ரூ.500, ரூ.1000 காகித நாணயங்களைத் தடைசெய்யக்கோரும் ராம்தேவ் சாதாரண யோகா வகுப்புக்கு வசூலிக்கும் குறைந்த நுழைவுக் கட்டணமே ரூ.1000. அனைத்து தொழிலாளர்களுக்கும் சமச்சீரான ஊதியம் வழங்கவேண்டுமென கோரும் இக்கதாநாயகனின் நிறுவனத்தில், முறையாக ஊதியம் வழங்காததற்காகவும் ஊதிய உயர்வுக்காகவும் போராடிய தொழிலாளர்களின் வேலைக்குக் கல்தா! என்னே ஒரு சமூக உணர்வு இக்கதாநாயகனுக்கு!

ஊழலுக்கு எதிராக லோக்பால் சட்ட மசோதாவை நடைமுறைப் படுத்தக்கோரும் காந்தியவாதி அன்னா ஹசாரேயின் தொண்டு நிறுவனத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகி ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் கேலிக்கூத்து ஆக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பணபலம், ஆட்பலம், அதிகார ஆதரவுடன் உண்ணாவிரதப் போராட்ட கதாநாயகர்களாக வலம் வரும் இந்த உத்தமப் புருசர்களுக்கு(!) இடையில், கடந்த 11 ஆண்டுகளாக பலமுறை கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வலுக்கட்டாயமாக குளுக்கோஸ் மூலமாகவும் டியூப் மூலமாகவும்  உணவு உட்செலுத்தப்பட்டு, தன் போராட்டத்தை மழுங்கடித்து இல்லாமலாக்க முயற்சிக்கும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக சாதாரண ஒரு பெண் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு விடிவு கிடைக்குமா?

இவரின் போராட்டம் கடந்த 11 ஆண்டுகளில் உலகில் பல தளங்களில் எதிரொலித்ததன் விளைவாக, கடந்த 2004 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையில் 5 நபர்கள் கொண்ட கமிசனை மத்திய அரசு அமைத்தது. இந்தக் கமிட்டி, ஷர்மிளா சானுவின் Chanu Sharmila உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக, "குறிப்பிட்ட சட்டத்தில் வரம்புமீறல்கள் நடந்துள்ளதாகவும் அச்சட்டம் நீக்கப்பட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்" என அறிக்கை சமர்ப்பித்தது.

எப்போதும் போல், எல்லா கமிசன்களையும் போல் இக்கமிசன் அறிக்கையினையும் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்டு, கார்ப்பரேட் போராட்டக்காரர்களான ராம்தேவ்களின் பின்னால் அரசியல்வாதிகள் சுற்றி வருகின்ற அயோக்கியத்தனம் ஊடகக் காமிராக்களின் ஆசியுடன் சிறப்பாக இங்கு அரங்கேறுகிறது.

அன்னா ஹஸாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும்(!) கார்ப்பரேட் சாமியார் ராம் தேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும்(!) அமைக்கத் தோன்றாத கமிசன் ஷர்மிளாவின் 11 ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்துக்குப் போடப்பட்டதன் மர்மம் என்ன?

விடை மிகத் தெளிவு!

ஹஸாரேயும் ராம் தேவும் கையிலெடுத்தது, நடுத்தர-ஏழை மக்களிடம் அரசின் இமேஜை நிமிடத்தில் தகர்க்க வைக்கும் ஊழல்  விஷயம். இவர்களின் உண்ணாவிரதத்தைத் தொடரவிட்டால், அரசியல்வாதிகளின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படும். அதற்கு ஒப்பவே, ஊடகங்களும் நடுத்தர வர்க்கத்தினரிடையே இவர்களின் போராட்டத்தை மிக வேகமாக கொண்டு சேர்த்தன.

ஆனால், ஷர்மிளாவின் போராட்ட விஷயம் ஒரு குறிப்பிட்டப் பகுதி மக்களுக்கு எதிரான அடக்குமுறை, அட்டூழியத்திற்கு எதிரானதாகும். இது எவ்வகையிலும் இந்தியாவின் பிற மாநில மக்களைப் பாதிக்கப்போவதில்லை. அவ்விஷயத்தை இந்த ஊடகங்கள் கையிலெடுத்தால், அது எந்த அளவுக்கு மக்களிடம் விலைபோகும் என்பது கேள்விக்குறியே!

இதனை உணர்ந்ததாலேயே ஷர்மிளாவின் 11 ஆண்டு போராட்டத்திற்குக் கொடுக்காத முக்கியத்துவத்தை இந்தக் கார்ப்பரேட் போராட்டக்காரர்களுக்கு ஊடகங்களும் கொடுக்கின்றன. அதற்கே இந்த அரசுகளும் செவிசாய்க்கின்றன. எல்லாம் வியாபார மயம்!

அடக்குமுறை சட்டங்கள் மூலம் தினசரி வாழ்வு நசுக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்கு ஆதரவாக இந்த கார்ப்பரேட் சாமியார்களும் காந்தியவியாதிகளும் குரல் கொடுத்துப் பார்க்கட்டுமே பார்க்கலாம்!

இன்றைய காலத்தில் வீடுதோறும் உட்புகுந்துள்ள இணைய வசதியிலுள்ள சமூக தளங்களின் மூலம் தம் கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்கவும் நாட்டு விசேசம் நிமிடங்களில் கைகளில் வந்துசேரும் அளவுக்கு நிலைமை முன்னேறியுள்ள நிலையில், ஊழல் மற்றும் முறைகேட்டுப் பெருச்சாளிகளின் இந்த உண்ணாவிரத நாடகங்களுக்கு மத்தியில் அதற்குக் கூட்டு நிற்கும் ஊடக பாரபட்சத்திற்கு மத்தியில் 11 ஆண்டுகளாக தன் வாழ்க்கையை முதலீடாகக் கொடுத்து போராடி வரும் ஷர்மிளாவின் உண்ணா விரதப்போராட்டம் இனிமேலாவது சமூகத் தளங்களில் ஒலிக்கட்டும்!

ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உண்ணாவிரதம் மற்றும் அமைதியான போராட்டங்களின் மீது இப்போதும் மதிப்பும் மரியாதையும் இருந்தால், மணிப்பூரின் இரும்புப் பெண் மாண்புமிகு ஐரோன் ஷர்மிளா சானுவின் Chanu Sharmila நியாயமான கோரிக்கைக்கும் கொஞ்சம் செவி சாய்த்து அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லட்டும்.

Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf