வாழைத்தண்டில் இவ்ளோ இருக்கா?

0 comments

`பாஸ்ட் புட்' கலாசாரத்திற்கு மாறிவிட்ட இன்றைய மனிதர்கள் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதன்விளைவு... சிறுநீரக சம்பந்தப்பட்ட பல நோய்களின் வருகை அதிகரித்து விட்டது.

பொதுவாக சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சினைகளைத்
தோற்றுவிக்கிறது. அதில் ஒன்று... சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது.

அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தேக்கப்பட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.

வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. அதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வாழைத்தண்டு மேலும் பல நன்மைகளையும் மனிதனுக்கு தருகின்றது. அவை...

வாழைத்தண்டு நார்ச்சத்து கொண்ட உணவு என்பதால் அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம்.

உடலைக் குளிர்ச்சி அடைய வைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு இருப்பதால் கோடை காலத்திலும் இதை உணவாக பயன்படுத்தலாம். வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும். மேலும், மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்களும் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

Eat Potato to Reduce Pressure: உருளைக்கிழங்கு சாப்பிட்டா பிரஷர் குறையுமாம்

0 comments
உருளைக்கிழங்கு என்று சொன்னாலே நம்மில் பலருக்கு ஞாபகம் வருவது மொறுமொறு சிப்ஸ். நொறுக்குத்தீனிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்சிற்கு தனி இடம் உண்டு. குழந்தைகள், இளைஞர்களை கவர விதவிதமான ருசிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

அதேநேரத்தில் உருளைக்கிழங்கு என்றாலே, `ஐயோ' என்று அலறுபவர்களும் உண்டு. கேஸ் டிரபிள், உடல் பருமன், கொழுப்பு போன்ற பிரச்சனைகளை நினைத்து உருளைக்கிழங்கை கண்டு ஒதுங்குபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால், `நீங்கள் நினைப்பது தவறு. உருளைக்கிழங்குக்கு ரத்த அழுத்தத்தை குறைக்கும் அசாத்திய திறனுண்டு' என்று ஆய்வாளர்கள் அடித்துச்சொல்கிறார்கள்.

ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வேளை உருளைக்கிழங்குகளை உணவில் சேர்த்துகொள்வதால் உடல் எடை அதிகரிப்பதில்லை, மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அமெரிக்காவைச்சேர்ந்த ஜோய் வின்சன் என்ற நிபுணர் தலைமையிலான குழு இதுதொடர்பான ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வுக்காக கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கை பயன்படுத்தினார்கள். எண்ணை இன்றி மைக்ரோ வேவ் அடுப்பு மூலம் சமைத்தனர். இதை ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிப்புள்ள நபர்களுக்கு கொடுத்தனர். தினமும் 2 வீதம் 2 மாத காலம் இந்த உருளைக்கிழங்கு கொடுத்து வந்தனர்.

பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது, அத்துடன் அவர்களில் யாருக்கும் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் சரி, ரத்தக்கொதிப்பை குறைக்குமளவுக்கு உருளைக்கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?

பைடோ கெமிக்கல் (Phytochemicals) என்று அழைக்கப்படும் தாவரம் சார்ந்த சில வேதிப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் உருளைக்கிழங்கில் அதிகமாக இருக்கின்றன. இவையே உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கின்றன.

உருளைக்கிழங்கு பிரென்ஞ்சு பிரை, சிப்ஸ் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைப்பதால், ரத்த கொதிப்பை குறைக்கவல்ல வேதிப்பொருட்களும், பைடோ கெமிக்கல்ஸ்களும் அழிக்கப்பட்டுவிடுகின்றன. எனவே, சிப்சில் எஞ்சியிருப்பது உருளைக்கிழங்கின் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தாதுக்கள் மட்டுமே என்று சிப்ஸ் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் வின்சன்.

இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு என்பதால், `ம்ம்ம்.... நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்' என்று நீங்கள் புலம்பவேண்டாம். ஏனென்றால், வெள்ளை மற்றும் கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு இரண்டுக்கும் ஒரே திறன்தான் இருக்குமென்று உறுதியாக நம்புகிறார் இந்த ஆய்வை நடத்திய ஜோய் வின்சன்.

இனிமே பிரஷர் குறைய தைரியமா உருளைக்கிழங்கு சாப்பிடலாம்! நன்றி-தினத்தந்தி

Kerala Recipes: மலபார் மீன் குழம்பு

0 comments
மலபார் மீன் குழம்பு தேவையானவை:

கடல் மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 200 கிராம்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தேங்காய் எண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

அரைக்க

தேங்காய் - 1 மூடி
சீரகம் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2

தாளிக்க

சீரகம், கறிவேப்பிலை - சிறிதளவு

மலபார் மீன் குழம்பு செய்முறை:

மீனைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கவும்.

ஒரு சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

தொடர்ந்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த் தூள், அரைத்த மசாலா, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கொதிக்கும்போது மீனை ஒவ்வொன்றாக எடுத்துப் போடவும். மீன் வெந்த பிறகு குழம்பை இறக்கிவிடவும்.

குறிப்பு

இந்த கேரள மீன் குழம்பிற்கு தேங்காய் எண்ணெய், தேங்காய் மசாலா சேர்ப்பதால் தனி ருசி உண்டு.

Tamil Recipes: Kalgandyu Vadai- கல்கண்டு வடை

0 comments
கல்கண்டு வடை தேவையானவை:

உளுந்தம்பருப்பு - 1/2 கிலோ
கல்கண்டு - 1/2 கிலோ
உப்பு - 2 சிட்டிகை
ஏலக்காய் - 6
ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு
கல்கண்டு வடை செய்முறை:

உளுந்தம் பருப்பை நன்றாகக் களைந்து ஊறவைத்து ஊறிய தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு கல் உரலிலோ, கிரைண்டரிலோ போட்டு அரைக்கவும்.
அவ்வப்போது சிறிது சிறிதாக கல்கண்டை சேர்த்து அரைக்க வேண்டும். தண்ணீர் சிறிது கூட சேர்க்கக்கூடாது. கல்கண்டிலிருந்து வரும் நீரே உளுந்தை அரைப்பதற்கு போதுமானதாக இருக்கும்.
மாவை கெட்டியாக அரைத்து, உப்பு சிறிது சேர்த்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து ரீபைண்ட் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறுசிறு வடைகளாக (நடுவில் ஓட்டை செய்து) தட்டிப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு
அடுப்பை நிதானமாகவே எரிய விடவும். மாலை நேர டிபனுக்கு ஏற்ற இந்த கல்கண்டு வடை சூடாக சாப்பிட மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த இனிப்பு கல்கண்டு வடை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

 

'இலங்கையின் கொலைக்களங்கள்' - ஆவணப் படம் | Sri Lanka's Killing Fields - Film |

0 comments
இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரின் இறுதிக்கட்ட நிகழ்வுகளின் பதிவுகள் சிலவற்றை உள்ளடக்கிய பிரிட்டனின் 'சேனல் 4'-ன் ஆவணப் படம் Sri Lanka's Killing Fields வெளியாகியுள்ளது. (வீடியோ - கீழே)

'இலங்கையின் கொலைக்களங்கள்' (Sri Lanka's Killing Fields) எனப் பெயரிடப்பட்ட இந்த 50 நிமிட ஆவணப் படம் Sri Lanka's Killing Fields, போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த ஆவணப் படத்தை போலியானது என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

(சேனல் 4 வலைத்தளத்தில் Sri Lanka's Killing Fields ஆவணப் படத்தை காண... http://www.channel4.com/programmes/sri-lankas-killing-fields/4od#3200170)

சேனல் 4 வலைத்தளத்தில் இந்த ஆவணப் படம் Sri Lanka's Killing Fields பொதுமக்களின் பார்வைக்காக புதன்கிழமை தொடங்கி ஆறு நாட்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களை படையினர் துன்புறுத்தும் காட்சிகள், சரணடைந்த சாமானியர்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள், பொதுமக்கள் தங்குமிடங்கள் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்கள், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள், அந்தப் பெண்புலிகளைக் கொல்லும் கொடூரங்கள், நிர்வாணமாக நிறுத்தப்பட்டு தமிழ்க் கைதிகள் சுட்டு வீழ்த்தப்படும் நிகழ்வுகள்...

இப்படி இலங்கை ராணுவத்தினரின் போர்க் குற்றங்களை முற்றிலும் துகிலுரிக்கும்படியாக உள்ள இந்த ஆவணப் படம் Sri Lanka's Killing Fields இதோ...


Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf