Calves management in Dairy Farm: கன்று குட்டிகளை பராமரித்தல்

0 comments
கன்று குட்டிகளை பராமரித்தல்




புதிதாக பிறந்த கன்றை மிகவும் கவனமுடன் பாதுகாக்க வேண்டும்.

தொப்புள் கொடியை கூர்மையான கத்தி கொண்டு வெட்ட வேண்டும். அதே சமயத்தில் நோய் தொற்று தாக்காமல் இருக்க அயேடின் சாராயக் கரைசல் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

கன்றிற்கு சீம்பாலை (சீம்பால்) கண்டிப்பாக தரவேண்டும்.

கன்று பிறந்த 30 நமிடத்தில் முலைப்பாலூட்ட வேண்டும். கன்று மிகவும்  தளர்ந்த நிலையில் இருந்தால் பால் குடிக்க உதவ வேண்டும்.

கன்று பிறந்த உடனே முலைப்பால் குடிக்க மறுத்தால் பிறகு அதை குடிக்க வைப்பதற்காக முலைப்பாலை பக்கெட்டில் சேமிக்க வேண்டும்.

கன்று பிறந்த 2 மாதத்திற்கு அதை தனியாக வறண்ட சுத்தமான மற்றும் நல்ல காற்றோட்டம் உள்ள பகுதியில் பராமரிக்க வேண்டும்.

அதிகபடியான சீதோஷ்ண நிலையிலிருந்து கன்றை பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். அதுவும் முதல் 2மாத கன்றை நன்கு பராமரிக்க வேண்டும்.

கன்றுகளை அதன் பரிமாண அடிப்படையில் வகைப்படுத்த வேண்டும்.

கன்றுகளுக்கு தடுப்பு மருந்துகளை தர வெண்டும்.

கன்று பிறந்த 4-5 நாட்களுக்குள் அதற்கு கொம்பு வெட்டி சீர் செய்ய வேண்டும். வளர வளர அதை கையாளுவது சுலபமாக இருக்கும்.

தேவைக்கு அதிகமாக வளர்க்க முடியாத கன்றுகளை அப்புறப்படுத்தி விட வேண்டும்.

குறிப்பாக காளை கன்றுகளை ஏதேனும் தனிப்பட்ட காரணத்திற்காக பராமரிக்க வேண்டியிருந்தால் பராமரிக்கவும்.

பசு கன்றுகளை தகுந்த முறையில் வளர்க்க வேண்டும்.

Milking in Dairy Farm: கால்நடைகளிடம் பால் கறத்தல்

0 comments
கால்நடைகளிடம் பால் கறத்தல்





பால் கறத்தல்
கால்நடைகளிடம் பால் கறத்தல்
 ஒரு நாளைக்கு 2-3 முறை பால் கறத்தல் வேண்டும்.

பால் கறக்க குறிப்பிட்ட நேரத்தை தேர் செய்ய வேண்டும்.

ஒரு முறை பால் கறப்பதற்கு எட்டு நிமிடங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கூடுமானவரை வழக்கமாக பால் கறப்பவரே பால் கறக்க வேண்டும்.

பால் கறக்க சுத்தமான இடத்தை பயன்படுத்த வேண்டும்.

மாட்டின் மடி மற்றும் காம்புகளை கிருமிகளை தடுக்கும் மருந்து கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

பால் கறப்பதற்கு முன் மிதமான சூடான தண்ணீர் கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

பால் கறப்பவருக்கு ஏதேனும் தொற்று நோய் இருந்தால், நோய் கிருமிகளை தடுக்கும் மருந்துகளை கொண்டு அவருடைய கைகளை ஒவ்வொருமுறை பால் கறக்கும் போதும் சுத்தப்படுத்த வேண்டும்.

பால் கறப்பதற்கு முழுகைகளை பயன்படுத்தி வேகமாகவும், முழுமையாகவும் காம்புகளை உருவி கறக்க வேண்டும்.

நோய் வாய்ப்பட்ட பசு / எருதுவின் பால் கறப்பதற்கு முன் நோய் பரவாமல்  இருக்க தடுப்பு மருந்து அளித்த பிறகே பால் கறக்க வேண்டும்.

Feed Management in Dairy Farm: கறவை மாடுகளுக்கான உணவளித்தல்

0 comments
கறவை மாடுகளுக்கான உணவளித்தல்

கறவை மாடு
கறவை மாடுகளுக்கான உணவளித்தல்

 கறவை மாடுகளுக்கான தீவனம் சிறந்ததாக இருக்க வேண்டும்.

ஒரு நாளிற்கு போதுமான அளவில் பசுந் தீவனம் வழங்க வேண்டும்.

கூடுமானவரை நம் நிலத்தில் வளரக்கூடிய பசுந்தீவனம் அல்லது எங்கு கிடைக்குமோ அங்கிருந்து பெற்று தரவேண்டும்.

பசுந்தீவனத்தை அதனுடைய சரியான வளர்ச்சியில் வெட்ட வேண்டும். மேய்ச்சல் தீனி வழங்குவதற்கு முன் நார் உணவான நெல் பதர்களை வழங்க வேண்டும்.

தானியங்களை நொறுக்கி அடர் தீவனமாக வழங்க வேண்டும்.

எண்ணெய் புண்ணாக்கு கரகப்பாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்க வேண்டும்.

ஈரமாக்கப்பட்ட அடர் தீவனத்தை உணவளித்தலுக்கு முன் வழங்க வேண்டும். போதுமான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் தரவேண்டும்.

கனிம கலவையுடன் போதுமான அடர் உணவுகள் தாது உப்புகளையும் தரவேண்டும். போதுமான மற்றும் சுத்தமான நீர் வழங்க வேண்டும்.

How to start a Dairy Farm in Tamil: How to Choose Cattle Feed - பால் பண்ணை கால்நடைகளை தேர்ந்தெடுக்கும் முறை

0 comments
பால் பண்ணை கால்நடைகளை தேர்ந்தெடுக்கும் முறை
பால் பண்ணை கால்நடைகளை
 தேர்ந்தெடுக்கும் முறை

 வங்கி கடன் கிடைத்தவுடன் தகுந்த கால்நடை வளர்ப்பவரிடமிருந்தோ அல்லது அருகிலுள்ள கால்நடை சந்தையிலோ கால்நடைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

பால் பண்ணை கால்நடைகளை தேர்ந்தெடுக்கும் முறை:

வங்கியின் தொழில்நுட்ப அலுவலரின் உதவியால் ஆரோக்யமான மற்றும்  அதிகபடியான பால் தரும் கால்நடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். கால்நடை மருத்துவர்/ கால்நடை வளர்ப்பு பராமரிப்பவர் மாநில அரசு/வட்டார.
புதிதாக இரண்டாவது/மூன்றாவது கன்றுகுட்டி ஈன்ற பசுவை தேர்ந்தெடுத்து வாங்க வேண்டும்.
வாங்குவதற்கு முன் கறவை மாட்டின் பால் வளம் மற்றும்  மூன்று முறை பால் கறக்கும் திறன் உடையதா என நன்கு ஆராய்ந்தறிந்து வாங்க வேண்டும்.
புதிதாக  வாங்கிய கறவை மாட்டை அடையாளம் காண்பதற்கு தகுந்த அடையாளக் குறியிட வேண்டம். (காது குத்தல் (அ) பச்சை குத்துதல்)
புதிதாக வாங்கப்பட்ட கறவை மாட்டுக்கு நோய் தடுப்பு மருந்து வழங்க வேண்டும்.
புதிதாக வாங்கப்பட்ட கறவை மாட்டை முதல் இரண்டு வாரத்திற்கு தனி கவனம் செலுத்தி பார்க்க வேண்டும். பிறகு அதை மற்ற மாடுகளுடன் ஒன்றாக சேர்க்கலாம்.
குறைந்த பட்ச பொருளாதால வளத்திலேயே இரண்டு பால் தரும் கறவை மாடுகளை வாங்க வேண்டும்.
வாங்கக்கூடிய இரண்டாவது கறவை மாடு/ கறவை மாடு தொகுப்பு முதலில் வாங்கிய கால்நடைகளுக்கு 5-6 மாதம் கழித்து வாங்க வேண்டும்.
பருவகாலத்திற்கேற்ப வளாப்பவரிடமிருந்து எருமை மாடுகளை ஜீலை-பிப்ரவரி மாதங்களில் வாங்க வேண்டும்
இரண்டாவதாக வாங்கப்படும் கால்நடையானது ஏற்கனவே உள்ள கால்நடையின் பால் வளம் வற்றும் போது அல்லது குறையும் போது வாங்கினால் தொடர்ந்து பாலின் உற்பத்தி சீராக இருக்கும். மேலும் இது தொடர் வருமானத்திற்கும், பால் வற்றிய மாட்டினை பராமரிப்பதற்கும் உதவியாக இருக்கும்.
பால் வளம் குன்றிய கால்நடையை ஆராய்ந்து அதற்கு பதிலான கால்நடையை வாங்க வேண்டும்.
தரம் குறைந்த மாட்டை அது 6-7 முறை கன்று ஈன்ற பிறகு நீக்கி விட வேண்டும்

How to start a Dairy Farm in Tamil: Dairy Farm Housing: பால் பண்ணை வீட்டமைப்பு:

0 comments


பால் பண்ணை வீட்டமைப்பு :


கால்நடை வளர்ப்பிற்கான கூடாரம் ஈரப்பதம் இன்றி வறட்சியாக அமைக்க வேண்டும்.

அடைமழை போன்ற பெரு மழையின் போது நீர் தேங்கி நிற்கும் பகுதிகளை கூடாரம் அமைக்க தவிர்க்க வேண்டும்.



பால் பண்ணை சுவர்கள் 1.5 x 2 மீ உயரம் இருக்க வேண்டும்.

பால் பண்ணை கூடாரத்தின் சுவர்கள் ஈரம் கசியாத வண்ணம் பூசியிருக்க வேண்டும்.
இதன் கூரை 3-4 மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.

பால் பண்ணை மாட்டு தொழுவம் சிறந்த காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும்.

பால் பண்ணை தரை சரியான /கடினமான, வழுக்காத, சிறந்த முறையாக (3 செ.மீ) நீர் வடிய கூடிய முறையில் எளிதில் உலரும் படியாகவும் சரிவாக அமைக்க வேண்டும்.

வளர்க்கப்படும் கால்நடைகள் நிற்கும் இடமானது 0.25மீ அளவில் சரியான அகன்ற வடிகால் வசதியுடன் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு கால்நடைக்குமான இடைவெளி 2x1.05 மீ ஆகும்.

கால்நடைகளுக்கான தீனி தொட்டி 1.05 மீட்டர் இடத்திலும் அதன் முன் உயரம் 0.5 மீ மற்றும் அதன் ஆழம் 0.25 மீட்டர் அளவிலும் இருக்க வேண்டும்.

பால் பண்ணை தீவனத் தொட்டி , தண்ணீர் தொட்டி, வடிகால் வசதி மற்றும் சுவர்கள் இவைகள் யாவும் எளிதில் தூய்மை படுத்தும் வண்ணம் அமைக்க வேண்டும்.

ஒவ்வொரு கால்நடைக்கும்மான இடைவெளி 5- 10 ச.மீட்டர் அளவில் ஒதுக்கீட செய்ய வேண்டும்.

வெயில் காலங்களில் முறையான நிழல் மற்றும் குளிர்ந்த நீரை கால்நடைகளுக்கு அளிக்க வேண்டும்.

குளிர்காலத்தில் இரவு நேரத்திலும், மழையிலும் கால்நடைகளை வீட்டிற்குள் பராமரிக்க வேண்டும்.

நாள்தோறும் கால்நடைகளுக்கு தனித்தனி  கிடைப்படி ஓதுக்க வேண்டும்.
பால் பண்ணை கூடாரம் சுகாதார முறையில் பராமரிக்க வேண்டும்.

வெளிப்புற ஒட்டுண்ணிகளான (பேன், ஈக்கள் ) இவற்றிலிருந்து காக்க சுவர்களுக்கு மாலத்தியான அல்லது காப்பர் சல்பேட் தெளிக்க வேண்டும்.

கால்நடைகளின் சிறுநீர் சிறு குழிகளில் சேகரிக்கப்பட்டு பின் அதை பாசனக் கால்வாயில் சேர்க்க வேண்டும்.

கால்நடைகளின் சாணம் மற்றும் சிறுநீரை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். சாண எரிவாயு கலனை சிறந்த முறையில் அமைக்க வேண்டும்.

சாண எரிவாயு கலன் என்பது சாணத்துடன் பண்ணை கழிவுகள் கால்நடை கழிவுகளை சேர்த்து தயாரிப்பதாகும்.

கால்நடைகளுக்குத் தேவையான இடைவெளி ஒதுக்க வேண்டும்.

How to start a Dairy Farm in Tamil: பால் பண்ணை துவங்க வழி முறைகள்

0 comments
பால் பண்ணை என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் வேளாண் தொழிலாளர்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய ஒரு முக்கிய உப தொழிலாகும். கால்நடைகளினால் கிடைக்கும் எரு உரம் மூலம் இயற்கை உரம் தயாரிக்கவும், மண்ணை வளப்படுத்தவும், பயிர்கள் நன்கு வளரவும் உதவுகிறது.

பால் பண்ணை
பால் பண்ணை

கால்நடைகளின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் சாண எரிவாயு வீட்டு உபயோகத்திற்கு எரிபொருளாக மட்டுமின்றி கிணற்றிலிருந்து நீர் இறைக்க தேவைப்படும் இன்ஜீன்களுக்கும் எரிபொருளாக பயன்படுகிறது.

வேளாண்மையின் உபரி பொருள்களான உப பொருள்களே கால்நடைகளுக்கான இலாபகரமான தீவனமாக அமைகிறது. பெரும்பாலும் பால் பண்ணை செயல்பாடுகளுக்கும், போக்குவரத்துக்கும், அதிக அளவில் எருதுகள் பயன்படுகின்றன. ஆரம்பத்திலிருந்தே வேளாண்மை சார் தொழில்களில் , பெரும்பாலான வேலைவாய்ப்பும், இலாபம் ஈட்டக்கூடிய தொழிலாக பால் பண்ணை அமைகிறது. பால் பண்ணை வருடம் முழுவதும் வேலைவாய்ப்பை வழங்குகிறது. பால் பண்ணை மூலம் முக்கியமாக சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள், நிலமற்ற தொழிலாளர்களும் பயனடைகின்றனர்.

இரண்டு கறவை மாடுகளினால் ஒரு விவசாயிக்கு  ஒரு வருடத்திற்கு  கிடைக்கும் மொத்த உபரி தொகை 12,000 ரூபாய்.  இரண்டு கறவை மாடுகளை வாங்குவதற்கு தேவைப்படும் முதலீடு தொகை ரூ.18,223/- அதன் பிறகு வருடத்திற்கு திருப்பி செலுத்த வேண்டிய வட்டியுடன் கூடிய கடன் தொகை ரூ.4,294/- ஆனால் விவசாயிக்கு கிடைக்கும் நிகர லாபம் தோராயமாக ரூ.6000 – 9000.

இதற்கு தேவையான மாதிரி திட்டம்  இணைக்கப்பட்டுள்ளது .

கால்நடைகளின் தரம், பராமரிக்கப்படும் முறை, விற்பனை திறன் இவற்றைப் பொருத்தே கிடைக்கக்கூடிய வருமானம் அதிகரிக்கும்.

உலக வங்கி கணக்கின்படி இந்தியாவில் 75% 940 மில்லியன் மக்களில் 5.87 மில்லியன் கிராமம், 145 மில்லியன் ஹெக்டேரில் விவசாய நிலம். சராசரியாக பண்ணை அளவு 1.66 ஹெக்டேர். அதில் 70 மில்லியன் கிராம வீடு, 42%  2 ஹெக்டேர் வரையிலும் மற்றும் 37% நிலமற்ற வீட்டார்.

இந்த நிலமற்ற சிறு விவசாயி தங்களுடைய உடைமையில் 53% கால்நடை வளர்ப்பு மற்றும் 51% அதனுடைய பால் உற்பத்தியாகும். பால் உற்பத்தியில் இந்த சிறு / நடுத்தர விவசாயி மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பால் தேவை அதிகமாக உள்ள நகர பகுதிகளிலும் பால் பண்ணை ஒரு முக்கிய லாபகரமான தொழிலாக மேற்கொள்ளப்படுகிறது.

2001-02.ம்  வருடத்தின் மொத்த பால் உற்பத்தி 84.6 மில்லியன் மெட்ரிக் டன்ஸ். ஒரு நாளைக்கு 226 கிராம்  இந்த உற்பத்தி, ஒரு நாளைக்கு ஒரு நபருக்கான பால் தேவையின் அளவு 226 கிராம், ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பால் பரிந்துரைக்கப்படும்அளவு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கான அளவு 250 கிராம்.

பேராற்றல் வாய்ந்த நோக்கம்/செயலாற்றலின் மூலம் பால் உற்பத்தயை அதிகரிக்க வேண்டும். 3 வருட காலத்தில் கறவை மாடுகள் மற்றும் எருதுகளின் எண்ணிக்கை முறையே 62.6 மில்லியன் மற்றும் 42.4 மில்லியன்

மத்திய மற்றும் மாநில அரசு பால் உற்பத்தியை பெருக்குவதற்கு நிதி உதவிகளை செய்து வருகிறது. 9வது ஐந்தாண்டு திட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.2345 கோடி.


பால் பண்ணை பால் உற்பத்திக்கான பொதுவாக வழங்கப்படும் பயிற்சி:

விவசாயிகள்:

பால் பண்ணையின் அதிகப்படியான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த நாகரிக மற்றும் சிறந்த அறிவியல் கொள்கைகள் மற்றும் பயிற்சிகளை பயன்படுத்த வேண்டும். பெரும்பாரும் பயன்படுத்தப்படும் வேறு சில பயிற்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Dairy Farm Housing - பால் பண்ணை வீட்டமைப்பு

How to Choose Cattle Feed - பால் பண்ணை கால்நடைகளை தேர்ந்தெடுக்கும் முறை

Feed Management in Dairy Farm: கறவை மாடுகளுக்கான உணவளித்தல்

Milking in Dairy Farm: கால்நடைகளிடம் பால் கறத்தல்

Dairy Farm Disease Management in Tamil: நோய்க்கு எதிரான தடுப்பு முறைகள்

Management of Breeding/Conceived Cow's in Dairy Farm: கறவை மாடுகளின் இனப்பெருக்க & கருவுற்றகால பராமரிப்பு

Calves management in Dairy Farm: கன்று குட்டிகளை பராமரித்தல்

Selling Milk from Dairy Farm: பால் விற்பனை செய்தல்
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf