Get Relieve From Nose Block: மூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி

0 comments
மூக்கடைப்பு க்கு முற்றுப்புள்ளி , கழிப்பறை வாடை, நாப்தலின், பினாயில், டாய்லெட் சுத்தம் செய்யும் அமிலம், சோடா உப்பு, அரிசி தவிடு, மழையில் தோன்றும் மண் வாசனை போன்ற பல விஷயங்கள் மூக்கின் ஒவ்வாமைக்கு காரணமாக அமைகின்றன. மூக்கு என்பது சுவாசத்தை சீராக விடுவதற்கு மட்டுமல்ல... மணத்தையும் முகர்ந்து உணர்ந்து கொள்ளத்தான். மோப்ப நரம்பானது மணத்தை மூளைக்கு உணர்த்துகிறது. மூளையின் கட்டுப்பாட்டை மீறி, கபால அறைகளின் சதைப்பகுதிகள் தன்னிச்சையாக இயங்குவதே மூக்கடைப்பாகும். மூக்கின் உட்புறம் இரண்டு பக்க கபால அறைகளின் வாசலில் பாதுகாவலன் போல் அமைந்திருக்கும் சதைப்பகுதியே, நமது சுவாசத்தின் செக்யூரிட்டி. நமது சுவாச மண்டலத்தின் பாதையில் அமைந்துள்ள மோப்ப நரம்புகளை உறுத்தும்படியான குளிர்காற்று, நறுமணம், துர்நாற்றம், புகை, தூசி, பஞ்சு, பூ மகரந்தங்கள், ரோமக்கால்கள், அமில நாற்றம் ஆகியன மூக்கின் உள்ளே நுழைய எத்தனிக்கும்போது, இந்த கபால அறைகள் அவற்றை இறுக்கிப் பிடித்து வெளித்தள்ளுகின்றன. இந்த முயற்சியின் விளைவாக நாம் தும்மவோ, இருமவோ செய்கிறோம் அல்லது மூக்கை வேகமாக சிந்தியோ அல்லது செருமியோ, ஒவ்வாத பொருளையும் மணத்தையும் வெளித்தள்ளிவிடுகிறோம்.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் முகப்பவுடர், சோப், சென்ட், கூந்தல் தைலம், முக அழகு கிரீம், ஊதுபத்தி, சூடம், சாம்பிராணி, தீக்குச்சி, சமையல் கேஸ், புகை, தாளித்த மணம், ஒட்டடை, ஈரத்துணி, நாய், பூனை, ஆடு, மாடு ரோமங்கள், கழிப்பறை வாடை, நாப்தலின், பினாயில், டாய்லெட் சுத்தம் செய்யும் அமிலம், சோடா உப்பு, அரிசி தவிடு, மழையில் தோன்றும் மண் வாசனை போன்ற பல விஷயங்கள் மூக்கின் ஒவ்வாமைக்கு காரணமாக அமைகின்றன. தொடர் ஒவ்வாமை ஏற்படுவதால் நமக்கு பாதுகாவலனாக விளங்கும் சைனஸ் அறைகள், சுவாசப்பாதையையே ஒட்டுமொத்தமாக அடைத்துவிடுகின்றன. நாம் அறிந்தும் அறியாமலும் உணர்ந்துகொள்ளும் ஒவ்வாமையால் நமது கட்டுப்பாட்டுக்கு அடங்காத சைனஸ் அறைகள் மூக்குப்பாதையையும், தொண்டைப் பாதையையும் மூளையையும், கபால அறையையும் நோக்கி வளர்ந்து மூடிவிடுகின்றன.

அடிக்கடி தோன்றும் மூக்கடைப்பினால், ஒவ்வாத பொருள்கள் உள்ளே நுழைந்தாலும், நம்மால் அதை அறிந்து தவிர்க்க முடியாததால் ஒவ்வாமையில் சளி, ஆஸ்துமா ஆகியன ஏற்படுகின்றன. ஆரம்பத்தில் ஒவ்வாத பொருட்களால் ஏற்படும் மூக்கடைப்பு, நாட்கள் செல்லச்செல்ல நுண்கிருமிகள் தங்கி வளர ஏதுவாக மாறிவிடுவதால் தீவிர நிலையில் அறுவை சிகிச்சைக்கு அவசியம் ஏற்படுகிறது. மூக்கடைப்பு உள்ளவர்கள், தங்களுக்கு ஒவ்வாத பொருள்களின் அருகாமையை தவிர்க்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மிளகு, மஞ்சள், சிறிய வெங்காயம், பூண்டு, சிற்றரத்தை, இஞ்சி, சுக்கு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, உப்பு கலந்த வெந்நீரில் வாய் கொப்புளித்தல் ஆகியவை மூலம் மூக்கடைப்பு வராமல் தடுத்துக்கொள்ளலாம். குளிர்ந்த நீர், ஐஸ் கிரீம், கிரீம் பிஸ்கட், சாக்லெட், பாஸ்ட்புட் ஆகியவற்றை தவிர்க்கவும்.

ஒவ்வாமையினால் தோன்றும் பல்வேறு வகையான மூக்கடைப்பு தொல்லைகளை நீக்கும் அற்புத மூலிகை காட்டு லவங்கப்பட்டை.சின்னமோமம் மலபாட்ரம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட லாரேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பட்டைகளே, காட்டு லவங்கப்பட்டை என்றும், பெரிய லவங்கப்பட்டை என்றும் அழைக்கப்படுகிறது.இவை உணவிற்கும், மருந்திற்கும் பெருமளவு பயன்படுகின்றன.

இதன் பட்டைகளிலுள்ள சின்னமால்டிகைடு, யூஜினால் போன்ற ஆவியாகக்கூடிய எண்ணெய் வகைகள் சதை வளர்ச்சியை கட்டுப்படுத்தி, ஒவ்வாமையை நீக்கி, சுவாசத்தை சீர் செய்கின்றன. இவற்றிலுள்ள டைடெர்பின்கள் ஆன்டிஹிஸ்டமைன்களாக செயல்பட்டு, அலர்ஜியை தடுக்கின்றன.காட்டு லவங்கப்பட்டை, தாளிசப்பத்திரி, சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சீரகம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து, சுத்தம் செய்து, இடித்து, பொடித்து, சலித்து 1 முதல் 2 கிராம் அளவு தேன் அல்லது பாலுடன் கலந்து தினமும் 2 முறை சாப்பிட்டு வரலாம். அரை கிராம் காட்டு லவங்கப்பட்டையை பொடித்து, சலித்து தேனுடன் குழப்பி, தினமும் ஒரு வேளை உணவுக்கு பின் சாப்பிட கபம் நன்கு வெளியேறும். மூக்கடைப்பு நீங்கும்.

பிரண்டையின் மருத்துவ குணங்கள் என்ன? எல்லோரும் சாப்பிடலாமா?

பிரண்டையை மேல்தோல் கணு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, புளித்த மோரில் ஒருநாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் மைய இடித்து, வறுத்த மிளகு, சீரகம், எள், ஓமம், மல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, பட்டாணியளவு மாத்திரைகளாகவோ அல்லது உலர்த்தி, பொடியாகவோ எடுத்துக்கொள்ள வேண்டும். 1 முதல் 2 மாத்திரைகள் அல்லது 1 கிராம் பொடி தினமும் ஒரு வேளை சாப்பிட்டுவர பசி உண்டாகும். உணவு நன்கு செரிக்கும். கல்லீரல் பலப்படும். வயிற்றில் தங்கிய காற்று வெளியேறும்.

டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை. 98421 67567 | jeyavenkateshdr@yahoo.com

Clothing Tips: How to preserve Silk Sarees- பட்டுப் புடவை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்

0 comments

பண்டிகை சீசன். பட்டுப் புடவை கட்ட வாய்ப்பு அதிகம் இருக்கும். உடுத்தின பிறகு அவற்றை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடியாக்கள்...

பட்டுத் துணிகளை சோப்பைப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்பதையும், அலசும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்க வேண்டும். அடித்துத் துவைப்பதும் கூடாது.

துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல், நிழலில், காற்றில் படும்படி போடுவது நல்லது.
 
பட்டுப் புடவையை இஸ்திரி செய்யும் போது, அதன் மீது சுத்தமான வெள்ளைத் துணியைப் போட்டோ அல்லது புடவையைத் திருப்பி வைத்தோ, மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.

புதிதாக வாங்கும் பட்டுப் புடவைகளை, ஒரு ஆண்டுக்குள் துவைக்க வேண்டியது அவசியம். முதலில் துவைக்கும் போது, சோப்பு போடாமல், நல்ல தண்ணீரில், உடல் பகுதியைத் தனியாகவும், பார்டர் பகுதியைத் தனியாகவும் அலச வேண்டும்.
பட்டுப் புடவைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைப்பதை விட, கையால் துவைப்பதே மேல்.
பட்டுப் புடவைகளை, காற்று புகாத பாலிதின் கவர்களில் வைப்பது நல்லதல்ல; துணிப் பையில் போட்டு வைப்பது தான் நல்லது.
பூச்சிகளை விரட்டும் நாப்தலின் உருண்டைகளை, பட்டுப் புடவை களின் மேல் போட்டு வைக்கக் கூடாது. பட்டுப் புடவைகள் கெட்டுப் போக, அது ஒரு காரணமாக அமைகிறது.
ஒவ்வொரு முறை உடுத்திய பின்பும், பட்டுப் புடவையைத் துவைக்க வேண்டும் என்பதில்லை. உடுத்திய பின் காற்று படும் இடத்தில் புடவையை வைத்து, பின் இஸ்திரி செய்தால் போதும்.
ஒரு படி தண்ணீரில், ஒரு தேக்கரண்டி கிளிசரினை கலந்து, பட்டுத் துணிகளை அலசி உலர்த்தினால், சுருங்காமல், இழைகள் விலகாமல் இருக்கும்.
பட்டுப் புடவை எண்ணெய் கறை இருந்தால், சந்தனத்தை கறையின் மீது தடவி, சிறிது நேரம் கழித்து, அந்த இடத்தை மட்டும் நீரில் கழுவவும்.

Tamil Recipes: Kalgandyu Vadai- கல்கண்டு வடை

0 comments
கல்கண்டு வடை தேவையானவை:

உளுந்தம்பருப்பு - 1/2 கிலோ
கல்கண்டு - 1/2 கிலோ
உப்பு - 2 சிட்டிகை
ஏலக்காய் - 6
ரீபைண்ட் எண்ணெய் - தேவையான அளவு
கல்கண்டு வடை செய்முறை:

உளுந்தம் பருப்பை நன்றாகக் களைந்து ஊறவைத்து ஊறிய தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு கல் உரலிலோ, கிரைண்டரிலோ போட்டு அரைக்கவும்.
அவ்வப்போது சிறிது சிறிதாக கல்கண்டை சேர்த்து அரைக்க வேண்டும். தண்ணீர் சிறிது கூட சேர்க்கக்கூடாது. கல்கண்டிலிருந்து வரும் நீரே உளுந்தை அரைப்பதற்கு போதுமானதாக இருக்கும்.
மாவை கெட்டியாக அரைத்து, உப்பு சிறிது சேர்த்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து ரீபைண்ட் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறுசிறு வடைகளாக (நடுவில் ஓட்டை செய்து) தட்டிப் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்கவும்.
குறிப்பு
அடுப்பை நிதானமாகவே எரிய விடவும். மாலை நேர டிபனுக்கு ஏற்ற இந்த கல்கண்டு வடை சூடாக சாப்பிட மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த இனிப்பு கல்கண்டு வடை குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

 

Does Drinking is Good to Heart? | இதயத்துக்கு மது நண்பனா, பகைவனா?

0 comments
மது குடிப்பது இதயத்துக்கு நல்லதா?

தினமும், மிகக் குறைந்த அளவில் (30 மி.லி.,) மது குடிப்பது, இதயத்துக்கு நல்லது என்பது உண்மை தான் என்றாலும், டாக்டர்கள் குறிப்பிடும் மிகக் குறைந்த அளவு மதுவோடு, யாரும் நிறுத்துவது இல்லை. மது அதிகமாகக் குடிப்பது, இதயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மதுவில் உள்ள நச்சு, இதயத் தசைகளைப் பாதித்து, இதயத்தின் செயல் திறனை குறைத்துவிடும். மது உடலுக்கு எல்லா வகையிலும் தீங்கு ஏற்படுத்துகிறது. புகைப் பழக்கமும் கெடுதல் என்பது நமக்குப் பாலபாடம். ஆனால், புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தான் வேதனை.
ஆண்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும்
தவறு. மாதவிடாய் காலத்துக்குப் பின், பெண்களுக்கும் மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகம். பாரம்பரிய மரபணு குணாதிசயங்களால், பல பெண்கள் இளம் வயதிலேயே மாரடைப்பு நோய் வருகிறது. மேலும், சிலருக்கு கர்ப்பப்பையோடு சினைப் பைகளும் நீக்கப்படுவதால், அவர்களுக்கும் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்.
எல்லா கொலஸ்ட்ராலும் கேடு ஏற்படுத்துமா?
இல்லை. ரத்தத்தில் எச்.டி.எல்., கொலஸ்ட்ரால், எல்.டி.எல்., கொலஸ்ட்ரால் என, இரு வகை கொலஸ்ட்ரால் உண்டு. இதில், எச்.டி.எல்., கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால் என்றும், எல்.டி.எல்., கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் என்றும் அழைக்கப்படுகிறது. எச்.டி.எல். கொலஸ்ட்ரால் எவ்வளவுக்கு எவ்வளவு ரத்தத்தில் அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மாரடைப்பு அபாயத்தில் இருந்து நாம் தப்பிக்க முடியும். நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க, மாத்திரைகள் இல்லை. ஆனால், உடற்பயிற்சிகள் மூலம் அதிகரிக்க முடியும். கெட்ட குணங்களைக் கொண்ட எல்.டி.எல்., கொலஸ்ட்ரால், ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் அதிரோஸ்க்ளீரோஸினை உருவாக்கும். இந்த கொலஸ்ட்ராலை குறைக்க, மருந்துகள் உள்ளன. சீரான உடற் பயிற்சியும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும்.
"பேஸ் மேக்கரின்' பயன் என்ன?
இதய ரத்த நாளங்களில் அடைப்பு, இதய இயக்க பாதிப்பு, சீரற்ற இதய துடிப்புள்ளவர்களுக்கு, பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்படும். துடிப்பு இயக்கக் கருவி மற்றும் லீட் ஆகியவற்றை, உள்ளடக்கியது இக்கருவி. இதயத்துடன், லீட் இணைக்கப்பட்டிருக்கும். கருவி, இதயத்திற்கு மேல், உடலின் வெளித் தோலுக்கு அடியே பொருத்தப்பட்டிருக்கும்.
 
கவனமாய் இருக்கணும்:
 
பேஸ் மேக்கர் கருவியில் உள்ள பேட்டரி, 5 முதல் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில், பேட்டரியை மாற்றிக் கொள்வதோடு, வேறு சிகிச்சைகளின் போது, இது குறித்து தெரிவிக்க வேண்டும். மின் சாதனங்கள், சக்தி வாய்ந்த காந்தங்கள் அருகே செல்லக் கூடாது. பேஸ் மேக்கர் மீது மொபைல்போனை வைக்கக் கூடாது.
உங்களுக்கு தெரியுமா?:
 
உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம், 60 ஆயிரம் மைல் தூரம். இதயத்தில் இருந்து பம்ப் செய்யப்படும் ரத்தம், இந்த 60 ஆயிரம் மைல் தூரத்தைக் கடக்க எடுத்துக் கொள்ளும் நேரம் 1 நிமிடம். இதயம் ஒரு நிமிடத்துக்கு 72 முறை துடிக்கிறது. ஒரு நாளைக்கு, 7,200 லிட்டர் ரத்தத்தை இதயம் பம்ப் செய்கிறது. நம் உடலில் உள்ள 5 லிட்டர் ரத்தத்தை சுத்தப்படுத்த, இதயம் தொடர்ந்து பம்ப் செய்து கொண்டே இருக்கிறது. இதனால் தான், ரத்தம் உடலில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இயந்திரங்கள் இயங்குவதற்கு மின் விசை தேவை. அதைப்போன்று, இதயமும் உடலில் உள்ள மின் விசை மூலம் தான் இயங்குகிறது. எந்த இயந்திரத்துக்கும் ஓய்வு உண்டு. ஓய்வில்லா இயந்திரம் இதயம்.
பரபரப்பான, பதற்றமான இன்றைய வாழ்க்கைச் சூழல், நமது இதயத்தை நாளுக்கு நாள் பலவீனமாக்கி வருகிறது. மன அழுத்தம் மாரடைப்புக்கு முக்கிய காரணம் என, சமீபத்திய ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. நாம் குண்டாக இல்லை, அதிக கொழுப்பு உள்ள உணவுகளைச் சாப்பிடுவதில்லை. நமக்கு மாரடைப்பு வராது என்று, யாரும் சொல்ல முடியாது. மன அழுத்தத்தால், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, இதய ரத்தக் குழாய்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, மன மகிழ்ச்சி முக்கியம். மாரடைப்பு, 40 வயதைக் கடந்தவர்களுக்குத் தான் வரும் என்ற எண்ணமும் தவிடு பொடியாகி வருகிறது. 25 வயது, 30 வயது இளைஞர்கள் மாரடைப்பு நோய்க்கு பலியாவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில், 4 கோடி பேர் மாரடைப்பால் பாதிக்கப்படுகின்றனர். இதில், மூன்றில் ஒரு பங்கு, ஓரிரு நிமிடங்களிலேயே இறந்துவிடுகின்றனர்.

எதிர்மறை எண்ணங்கள், கோபம்,பொறாமை, ஆவேசம், ஆத்திரம், போன்ற உணர்வுகளால், மூளையில் வெளிப்படும் எண்ண அலைகளை அதிகப்படுத்தி, அதன் விளைவாக, வேண்டாத அட்ரீனலின், கார்டிசால் போன்ற கெட்ட ஹார்மோன்கள் உடலில் அதிகமாகச் சுரந்து, ரத்தத்தில் கலக்கின்றன. இது, ரத்தக் குழாய் அடைப்புக்கு, முக்கிய காரணமாகிறது. நல்ல சிந்தனை, அக மகிழ்ச்சி, மன அமைதி போன்றவற்றால், உடல் சீராக இயங்கும்போது, மூளையின் அலைகள் ஆல்பா நிலையில் செயல்பட்டு, என்டார்பின், செரடோனின், மெலடோனின் போன்ற, நல்ல ஹார்மோன்கள் அதிக அளவில் சுரந்து ரத்தத்தில் கலப்பதால், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுப்பதோடு, ஏற்கனவே ஏற்பட்டிருந்த அடைப்புகளை ஓராண்டில் கரைத்து, பூரண குணமடைய வழி கிடைக்கும்.
 
நன்றி-தினமலர்

சிறுநீரக கல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

0 comments
சிறுநீரக கல் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ,  உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மனித குலத்துக்கு பல்வேறு நோய்களை பரிசாக தந்து கொண்டு இருக்கின்றன.சிறுநீரக கல் பாதிப்புக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.
 
முன்பு 40 வயதுக்கு மேல் ஏற்பட்ட சர்க்கரை நோய் இப்போது குழந்தை பருவத்திலேயே வந்த விடுகிறது.   மன அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சிறுநீரக கல் பாதிப்பு பொதுவாக கோடை காலத்தில்தான் அதிகமாக ஏற்படுகிறது.சிறுநீரக கல் என்பது கால்சியம் மற்றும் யூரிக் அமிலத்தின் கூட்டு கலவை ஆகும்.

சிறுநீரக கல் அறிகுறி இருக்காது:

இந்த கல் கிட்னியில் அதாவது சிறுநீரக பையில் இருக்கும் வரை, அது தோன்றி இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் தெரியாது.
 
சிறுநீரக பாதையில் அது பயணிக்கும்போது தான் குழாயில் அடைப்பு ஏற்பட்டு கடுமையான வலி உண்டாகிறது. சிலரால் அந்த வலியை தாங்க முடியாது. அப்போதுதான், சிறுநீரகத்தில் கல் உருவாகி இருப்பது தெரிய வரும். சிறுநீரக கல்லை அகற்ற இரண்டு விதமான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.சிலருக்கு மருந்து- மாத்திரை மூலம் குணப்படுத்திவிடலாம். சிறுநீரக கல் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதில் புகழ்பெற்ற சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையின் டாக்டர் பாரி கூறியதாவது:-
சென்னை நகரில் சிறுநீரக கல் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்துள்ளது. நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கை முறைகள், நகரத்தில் அதிகரித்துள்ள வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி போன்றவைதான் இதற்கு காரணம்.
 
ஏர்-கண்டிஷன் செய்யப் பட்ட அலுவலகங்களில் நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு, அவர்கள் உணராமலேயே ஆண்டு முழுவதும் சிறுநீரகத்தில் கல் இருந்து வரும். ஏர்-கண்டிஷன் அறையில் இருப்பதால், இவர்களுக்கு தாகம் எடுப்பதில்லை. இதனால் உடலுக்கு தேவையான தண்ணீரை இவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் உடலில் உப்புச் சத்து அதிகரிக்கிறது. இது சிறுநீரக கல் உருவாக வாய்ப்பாகி வருகிறது.
 
 எங்களிடம் வரும் நோயாளிகளில் அதிகமானோர் 25 முதல் 45 வயதினர் ஆவார்கள்.அவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள்.இளம் வயதினர் அதிக உப்புச்சத்து கொண்ட உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகின்றனர்.
 
 துரித உணவுகளில் உப்பு, காரம் அதிகமாக காணப்படும்.  பால் சாப்பிட்டால் சிறுநீரகத்தில் கல் உருவாகும் என்று நம்புகின்றனர். இதற்கு ஆதாரம் எதுவும் கிடையாது. உண்மையில் பால் அதிகம் குடித்து வந்தால், சிறுநீரக கல் உருவாவதை தவிர்க்க முடியும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Be Active at Workplace: சுறுசுறுப்பாக வேலை செய்ய ஒரு சில வழிகள்!

0 comments
நம்முடைய பணியிடங்களில் சரியாக வேலை செய்ய முடியாமல் இருப்பதற்கு இரவில் சரியான தூக்கம் இல்லாமை, சத்துள்ள உணவு வகைகளை உட்கொள்ளாமை , உடற்பயிற்சிகளை தவிர்ப்பது போன்றவை முக்கிய காரணமாக அமைகின்றன. இதனால் மன உளைச்சல், மன அழுத்தம், அதிக கோபம், போன்ற பல பிரச்சனைகளுக்கு உள்ளாகிறார்கள்.

இங்கே நீங்கள் ஒரு பணியிடத்தில் சுறுசுறுப்பாக இருக்கவும் , உங்கள் உடல் நலத்தை பேணவும் உதவும் சில குறிப்புகள் கொடுக்க முயற்சிக்கிறோம்.

நல்ல தூக்கம்: இரவில் நல்ல தூக்கம் இல்லாவிட்டால் மறு நாள் உங்கள் வேளைகளில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.ஒரு நாளைக்கு குறைந்தது 7 அல்லது 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும். இரவில் சீக்கிரமே உறங்கி அதிகாலை எழுந்து உடற்பயிற்சி செய்வது நாள் முழுவதும் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும்.

ஆரோக்கியமான காலை உணவு: உங்களுடைய நாளை சிறப்பாக அமைக்க நல்ல ஆரோக்கியமான காலை உணவு அவசியம். ஆற்றல் அளவை அதிகரிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானிய உணவுகள் (ஓட்ஸ் கஞ்சி அல்லது ரொட்டி ), புரத சத்துக்கள் நிறைந்த முட்டை, குறைந்த கொழுப்பு சத்துக்கள் அடங்கிய தயிர், மற்றும் வைட்டமின் சி நிறைந்த (ஆரஞ்சு அல்லது சிட்ரஸ் பழங்கள்) போன்றவைகளை உட்கொள்ளுங்கள். காலை உணவை தவிர்ப்பது பிற்காலத்தில் மிகப்பெரிய உடல் நோய்களுக்கு உள்ளாக்கும் என்பதை கவனத்தில் கொள்க.

நடக்க வேண்டும்: உட்கார்ந்து கொண்டு நீண்ட நேரம் வேலை செய்வதால் முதுகு வலி, சோம்பல் போன்றவை ஏற்படும். அதோடு உடலில் ரத்த ஓட்டம் சீராக செயல்படாது. இதனால் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அலுவலகத்தில் உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நடப்பது சிறந்தது. இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக அமைந்து உடலுக்கு புத்துணர்வு ஏற்படும்.

தண்ணீர் குடிக்க வேண்டும்: நீண்ட நேரம் வேலை செய்வதால் உடலில் அதிக அளவு நீர் சத்து செலவாகிறது. அதை பூர்த்தி செய்ய தேவையான அளவு உடலுக்கு நீர் செலுத்துவது அவசியம். குடிநீர் உங்கள் உடலில் ஆற்றல் அளவை அதிகரிக்கும். விரும்பினால் தண்ணீருடன் சத்துள்ள பழ சாறுகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

சூரிய ஒளி: சூரிய ஒளி உங்கள் உடலின் வெப்ப நிலையை இயற்கையாக சீராக்க உதவுகிறது. இதனால் மதிய வேளைகளில் சூரிய ஒளியில் சிறிது நேரம் நடப்பது சிறந்தது.

மதிய உணவு: அதிக கொழுப்பு அடங்கிய உணவு பொருட்கள் மதிய வேளையில் தூக்கம் வர காரணமாக அமையும். ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் மிக்க கோதுமை, ரொட்டி, சாலட் போன்ற உணவுகளை உட்கொள்வது சிறந்தது.

உரையாடல்: எப்போதும் வேலை செய்து கொண்டே இருக்காமல் நண்பர்களிடம் சிறுது நேரம் உரையாட வேண்டும். இதனால் உடலுக்கு தெம்பு ஏற்படும்.

மேலே கூறப்பட்ட அனைத்தையும் ஒரு நாள் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் நாள் அற்புதமாக, அமைதியாக அமைய இந்த வழிகள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

Do i Get Cancer? | நமக்கெல்லாம் கேன்சர், வருமா

0 comments
"நமக்கெல்லாம் கேன்சர், வருமா நோ, நோ- எங்க பரம்பரையில யாருக்கும் கேன்சர் கிடையாது. எங்க வீட்டில, சத்து நிறைந்த, விலை உயர்ந்த உணவைச் சாப்பிடுகிறோம், விலை உயர்த்த வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ரொம்ப சுத்த, பத்தமாக இருக்கிறோம். சினைப் பை புற்று.கேன்சர் மட்டுமல்ல, எந்த புற்றுநோயும் நெருங்காது' - இப்படி நினைப்பவரா நீங்கள்?

நீங்கள் மட்டுமல்ல; பலரும் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம், மாறிவரும் உணவுப் பழக்கம், ரசாயனங்களின் உதவியோடு விளைவிக்கப்படும் பழம், காய்கறிகள், சூழல் மாறுபாடு என, பல்வேறு அம்சங்கள் புற்றுநோய் குறித்த முந்தைய கருத்துகளை பொய்யாக்கி வருகின்றன.சுத்தமாக இருந்தால், தொற்று நோய்கள் வராது என்று சொல்லலாம்; புற்றுநோய்க்கு ( கேன்சர் ) இது பொருந்தாது.பல புற்றுநோய்களுக்கு, காரணம் இதுதான் என, இன்று வரை உறுதியாக சொல்ல முடியவில்லை. சினைப் பை புற்றும் அந்த வகையைச் சேர்ந்தது தான்.

அன்றாட வாழ்வில் இயற்கைக்கு மாறாக நாம் நடந்து கொள்வதே, பல நோய்களுக்கு காரணம். எல்லாமே இயந்திரதனமாகி விட்டதால், உடல் உழைப்பு குறைந்து, உடல் இயக்கம் மாறுபடுகிறது. இது பல நோய்களுக்கு அடிகோலுகிறது.சினைப் பை புற்றுக்கு அதிக எடை, கொழுப்பும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. பிட்சா போன்ற உணவுகள், விலை உயர்ந்ததாக இருக்கலாம்; ஆனால், ஆரோக்கியமானதா என்பது கேள்விக்குறியே.

நாக்கு ருசிக்காகவும், வாசனைக்காகவும் பல நுண்ணிய ரசாயனப் பொருட்கள் இந்த உணவு வகைகளில் சேர்க்கப்படுகின்றன.
நாளடைவில் இந்த ரசாயனங்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை. எல்லா ஐ.டி., வளாகங்களிலும், "புட் கோர்ட்' என்று அழைக்கப்படும் நவீன உணவுக் கூடங்கள் அலங்கரிக்கின்றன.

இதனால், வீட்டில் சமைத்து எடுத்துச் செல்வது குறைந்து, மெல்ல, மெல்ல ஹோட்டல் மற்றும் துரித உணவு வகைகளுக்கு அடிமையாகி வருகிறோம்.உடலை அழகுபடுத்த, மிதமிஞ்சிய வாசனைப் பொருட்களை பயன்படுத்துவதும் நல்லதல்ல. டால்கம் பவுடரில் உள்ள ரசாயனப் பொருட்கள், புற்றுநோய்க்கு ஒரு காரணி என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இப் பவுடரை பிறப்புறுப்புகளில் பயன்படுத்தும்போது, அது கர்ப்பப் பை வாய் வழியாக சினைப் பையை அடைந்து, தீங்கு விளைவிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தமும் புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று. போட்டி நிறைந்த இன்றைய காலகட்டத்தில் வீட்டிலும், வேலைக்கு செல்லும் இடத்திலும் பெண்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. எனவே, உடலை நாம் ஆரோக்கியமாக வைத்திருந்தால் மட்டும் போதாது.
மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட யோக, தியானப் பயிற்சிகளை செய்வது நல்லது.
சினைப் பை புற்றுநோய்க்கு வயிற்று வலி, அஜீரணம், வயிறு உப்புசம் தான் முக்கிய அறிகுறிகளாக சொல்லப்படுகிறது. ஆனால், இதை நம்மில் பலர் உதாசீனப்படுத்தி விடுகிறோம்.

எல்லா வயிற்று வலியும், சினைப் பை புற்றுக்கான அறிகுறி அல்ல. ஆனால், வலி, அஜீரண கோளாறு தொடர்ந்து இருந்தால், மருத்துவரிடம் சென்று பரிசோதிப்பது அவசியம்.சினைப் பையில் சாதாரண கட்டி இருந்தால் கூட வயிற்று வலி இருக்கும். எனவே பீதி தேவையில்லை. சாதாரண கட்டியா அல்லது புற்றுக் கட்டியா என்பதை ஆரம்ப நிலையிலேயே தெரிந்து கொண்டால் ஆபத்து இல்லை.
புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்தால் பூரணமாக குணப்படுத்திவிட முடியும்.

வலி, வீக்கம் உட்பட உடலில் மாறுபாடுகள் ( கேன்சர் ) தோன்றும்போது உதாசீனப்படுத்தாமல் உரிய மருத்துவரை அணுகி தெளிவு பெறுவது அவசியம்.எனவே, இயற்கை வழியில் நடந்து, நமது பாரம்பரிய உணவு முறையை தொடர்ந்து கடைப்பிடித்து, யோக, தியானம் போன்ற பயிற்சிகளை செய்து வந்தால் வாழ்க்கை வசப்படும்

நன்றி-தினமலர்

What is Eye Donation: கண்தானம்: ஏன்? எப்படி? முழு விளக்கம்

0 comments
கண்தானம்: ஏன்? எப்படி? இந்தியாவில் கண் பார்வையற்றவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? கண் பார்வையற்றவர்களில் அதிகமானவர்கள் ஆண்களா? பெண்களா?

இந்தியாவில் 1 கோடியே 50 லட்சம் பேர் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 60-70 சதவீத பார்வைக்குறைபாடு தவிர்க்க அல்லது குணப்படுத்தக் கூடியது. அதில் ஆண்,பெண் மற்றும் குழந்தைகள் அனைவரும் அடங்குவர். உலகஅளவில் ஏறக்குறைய 3 கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றவர்களாக இருக்கிறார்கள்.

தாய் வயிற்றில் சிசு உருவாகும் போது கண் எத்தனை வாரத்தில் அல்லது மாதத்தில் உருவாகும்? கண்கள் எப்படி உருவாகின்றன?

கண்களின் வளர்ச்சி கரு உருவான 22-ம் நாளிலிருந்தே தொடங்கிவிடுகிறது. கண்ணின் வெவ்வேறு பகுதிகள் கரு உருவானவுடன் ஆரம்பித்து குழந்தை பிறக்கும் வரைநீடிக் கின்றது. கண்ணில் உள்ளலென்ஸ் என்ற கண்ணாடி போன்ற உறுப்பு 27-ம் நாளி லிருந்தும், கருவிழி 40-ம் நாளிலிருந்தும் உருவாக தொடங்குகிறது. கண் தசைகள் 5-வது வாரத்திலிருந்தும், கண் நரம்பு 6-வது வாரத்திலிருந்தும், கண்ணின் இமை 2-வது வாரத்திலிருந்தும் உருவாகிறது. கண்ணின் விழித்திரை 3-வது வாரம் முதல் தொடங்கி, அதன் முக்கியமான பகுதியான மேக்குலா மற்றும் ரத்தக்குழாய்கள் குழந்தை பிறந்து 4 வாரம் வரை வளர்கின்றது. கண்ணில் இருந்து மூளைக்கு செல்லும் நரம்புமண்டலம் குழந்தை பிறக்கும் முன்னே உருவானாலும் அதன் வளர்ச்சி குழந்தை பிறந்த 4 வாரத்தில் தான் முழுமையடைகிறது. எனவேதான் பிறந்தவுடனே குழந்தைகளுக்கு பார்வை இருந் தாலும், ஒரு பொருளை சீராகவும், கூர்மையாகவும் நோக்கும் திறன் குழந்தை பிறந்த 6 முதல் 8 வாரங்களில்தான் கிடைக்கின்றது.

முதலில் பார்வையுடன் பிறந்து, பின்பு கருவிழி பாதிப்பினால் பார்வையிழப்பு ஏற்பட என்ன காரணங்கள்?

கண்களில் அடிபடுதல், கண்களில் புண் ஏற்படுதல், கண்களில் வேதிப்பொருள்கள் படுதல் போன்றவைகளால் கருவிழி பாதிப்பு ஏற்படும்.

பார்வையிழப்பு ஏற்பட்டவர்கள் தங்களுக்கு தேவைப்படும் கண்களுக்கு எங்கே, எப்படி பதிவு செய்ய வேண்டும்?

முதலில் கண் மருத்துவரை அணுகி கண் பரிசோதனை செய்ய வேண்டும். பின்பு அவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப பதிவு செய்து கொள்ளலாம். கண் வங்கியுள்ள மருத்துவமனைகளில் மட்டுமே பதிவு செய்ய முடியும்.

இந்தியாவில் ஆண்டுக்கு எவ்வளவு கருவிழிகள் தேவைப்படுகின்றன? எவ்வளவு கிடைக்கிறது?

ஒரு ஆண்டிற்கு தேவையான கருவிழிகளின் எண்ணிக்கை சுமார் 75000 முதல் 1,00,000 வரை. ஆனால் தற்பொழுது கிடைக்கும் கருவிழிகளின் எண்ணிக்கை 13000 முதல் 14000 வரை மட்டுமே!

கண்தானம் செய்ய விரும்புகிறவர்கள் அனைவரின் ஆசையும் நிறைவேறி விடுகிறதா? அல்லது அவர்களது மரண சூழலில் அது நிறைவேறாமலே போய் விடுகிறதா?

ஒருவர் கண்தானம் செய்யவிருப்பப்பட்டால் கண் வங்கியை அணுகி முதலிலேயே பதிவு செய்து கொள்ளலாம். எதிர்பாராத விதமாகஅவர்கள் இறக்க நேரிடும்போது, சிலசமயம் அந்த மரணச் சூழலில் அவர்களது உறவினர்கள் கண் வங்கியை தொடர்பு கொண்டு தெரிவிக்காவிட்டால் அவர்களின் ஆசை நிறைவேறாமல் போய்விடுகின்றது. எனவே கண்தானம் செய்ய விரும்புவோர், பதிவு செய்வது மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற் றோர் மற்றும் உறவினரிடமும் அதை தெரிவிக்கவும் வேண்டும். ஒருவர் குடும்பத்தில் இறப்பு என்பது அனைவருக்கும் வருத்தம் தருவதாகத்தான் இருக்கும். அந்தச் சூழ்நிலை யிலும் இறந்த உடனே விரைவாகச் செயல்படுவதன் மூலம் இறந்தவர்களுடைய கண்தான ஆசையை நிறைவேற்ற முடியும்.

ஒருவர் இறந்து எத்தனை மணி நேரத்திற்குள் கண்கள் எடுக்கப்பட வேண்டும்? கண்களில் இருந்து எந்த பகுதி எடுக்கப்படுகிறது? எடுப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? எத்தனை டாக்டர்கள் அதற்கான பணியினை மேற்கொள்ள வேண்டியிருக்கும்? கண் எடுக்கப்பட்ட பகுதியில் ஏதேனும் அடையாளம் தெரியுமா?

ஒருவர் இறந்த 4 முதல் 6 மணி நேரத்திற்குள் அவரது கண்கள் எடுக்கப்பட வேண்டும். முழுக்கண்களுமே எடுக்கப்படுகிறது. 20 முதல் 30 நிமிடங்களில் கண்தானம் முடிந்து விடும். கண்வங்கி குழுவில் ஒரு மருத்துவர், மற்றும் இரண்டு செவிலியர்கள் இருப்பர். இறந்தபின் கண்களை எடுப்பதினால் முகம் விகாரமாகவோ, முகத்தோற்றத்தில் மாறுதலோ ஏற்படாது.

எடுக்கப்படும் கண்களை அடுத்து என்ன செய்வீர்கள்? எப்படி பாதுகாக்கப்படுகிறது? எப்படி இன்னொருவருக்கு பொருத்தப்படுகிறது? அது எத்தனை மணிநேர ஆபரேஷன்?

எடுக்கப்படும் கண்கள் ஐஸ்பெட்டியில் வைக்கப்பட்டு கண்வங்கிக்கு எடுத்துசெல்லப் படுகிறது. கண்வங்கியில் ரசாயன திரவங்கள் மூலம் பாதுகாக்கப்படுகிறது. அங்கு கண் நிபுணர்களால் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு தரமான கருவிழிகள் அறுவை சிகிச்சைக் காக எடுத்து வைக்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்ட கருவிழிகள் ஆராய்ச்சிக்காக பயன் படுத்தப்படுகிறது. கண் மருத்து வர்களால் பரிசோதிக்கப்பட்டு கண்வங்கியில் பதிவு செய்யப்பட்ட நோயாளிகளின் பெயர்ப் பட்டியல் எடுக்கப்பட்டு தகுந்த நோயாளிகள் தொலை பேசியின் மூலமாக அழைக்கப்படுவர். பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அந்த அறுவைசிகிச்சை 1 மணி நேரத்திலிருந்து 2 மணிநேரம் வரைநீடிக்கும்.

பொருத்தப்படும் 100 சதவீத கண்களும் முழு சக்தியுடன் பார்வை தருமா? சிலருக்கு கண் பொருத்தினாலும் பார்வை கிடைக்காது என்கிறார்களே ஏன்?

கண்தானம் பெறப்படும் கண்கள் தரம் வாரியாக பிரிக்கப்பட்ட பின்னரே நோயாளிகளுக்கு பொருத்தப்படும். தரமான கண்கள் பார்வைக்காக செய்யப்படும் அறுவை சிகிச்சைக்காக பயன் படுத்தப்படும். சற்று தரம் குறைந்த கண்கள் கண்புண் ஏற்பட்ட நோயாளிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையின் மூலம் எவ்வளவு பார்வை கிடைக்கும் என்பதை கூற முடியாது. (சில சமயங்களில் பார்வைகிடைக்க வாய்ப்பு இல்லாமலும் போகலாம்)

கண் வங்கிகளின் செயல்பாடுகள் என்ன?

பயிற்சி பெற்ற மருத்துவர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் கண்களை தானமாக பெறுவதற்காக தயார் நிலையில் கண் வங்கிகளில் இருப்பார்கள். கண்தான அழைப்பு வந்தவுடன் கண் குழுவினர்களை ஒருங்கிணைத்து சரியான நேரத்திற்கு அனுப்புதல், பெறப்பட்ட கண்களை பதப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்துதல், பரிசோதனை செய்யப் பட்ட நல்லநிலையில் உள்ள கருவிழிகள் மட்டும் மருத்துவருக்கு அனுப்புதல், மாற்று அறுவைசிகிச்சைக்குப் பயன்படுத்த இயலாத கண்களை பல்வேறு புதிய ஆராய்ச்சி களுக்கும், கண்கள் பதப்படுத்துதல் குறித்த ஆராய்ச்சிக்கும் மற்றும் பயிற்சி கருவிழி மாற்று அறுவைசிகிச்சைக்கும் அனுப்பி வைத்தல், கண் நிபுணர் அல்லாத பொதுமருத்துவர் களுக்கு சரியானமுறையில் கண்களை எடுப்பது குறித்து பயிற்சி அளித்தல், இவை அனைத்தும் கண் வங்கியின் செயல்பாடுகள்.

யார் யார், எந்த வயது முதல் - எந்த வயது வரை கண்தானம் செய்யலாம்?

ஆண், பெண் இருபாலரும் எந்த வயதிலும் கண்தானம் செய்யலாம். கண் கண்ணாடி அணிந்திருப்பவர்களும் கண் தானம் செய்யலாம். ரத்த அழுத்த நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ஆஸ்துமா போன்ற நோயினால் தாக்கப்பட்டவர்களும் கண்தானம் செய்யலாம்.

ஒரே குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கண் பார்வை யற்றவர்களாக இருக்க என்ன காரணம்?

பரம்பரையாக வரும் கண் நோய்களால் ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கண் பார்வையற்றவர்களாக இருக்க லாம். சில கண் நோய்கள் பரம்பரை ரீதியாக வரக் கூடியது.

உங்கள் கண் மருத்துவமனையில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை எப்போது தொடங்கப்பட்டது. முதல் வருடத்தில் எத்தனை கருவிழிகள் கிடைத்தன? கடந்த ஆண்டில் (2010) எவ்வளவு கருவிழிகள் கிடைத்தன?

கோவைஅரவிந்த் கண் மருத்துவமனையில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை 1997-லிருந்து நடைபெற்று வருகிறது. ஆரம்பகாலத்தில் 38 கண்கள் மட்டுமே தானமாக பெறப்பட்டது. தற்பொழுது, அரிமாசங் கங்கள் மற்றும் ஊக்குவிப்பவர்களின் உதவியின் மூலமாக 2010-ல் 1410 கண்கள் பெற்று எங்களுடைய சேவையை தொடர்ந்து செய்து வருகிறோம். கண்தானம் பற்றிய விழிப்புணர்வு முன்பைவிட இப்பொழுது அதிகரித்துள்ளது. கண்தான வாரம் போன்றவைகளை கொண்டாடு வதாலும் மாணவர்கள் மற்றும் பொதுநல சங்கங்கள் உதவுவதாலும் இந்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.

கண்தானம் -  ஏன்? எப்படி? முழு விளக்கம் பதில் அளித்தவர்கள்: டாக்டர் ஆர். ரேவதி, டாக்டர் வி. ராஜேஷ் பிரபு, அரவிந்த் கண் மருத்துவமனை, கோயம்புத்தூர். 

நன்றி-தினத்தந்தி

What is Alzheimer Disease? alzheimerc medicine | அல்சைமர் | அல்சைமர் நோய் பாதிப்பு

0 comments
Alzheimer Disease
மறதி என்ற ஒன்று மட்டும் இல்லையெனில், மனித வாழ்க்கையே நரகமாகிவிடும். அவமானம், சோகம், இழப்பு, வருத்தம் போன்ற துயரங்களை, அவ்வப்போது மறந்து விடுவதால் தான், நம்மால் இயல்பாக வாழ முடிகிறது.அதே சமயம்,எல்லாவற்றையும் மறந்து விட்டாலும், வாழ்க்கை நரகமாகிவிடும். மனைவி, மக்களின் பெயரை மறக்கும் நிலை ஒருவருக்கு ஏற்பட்டால், அதைவிட கொடுமை என்ன இருக்க முடியும். அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய், அப்படிப்பட்ட கொடுமையான நோய் தான். சாப்பிட்ட 10 நிமிடம் கழித்து, என்ன சாப்பிட்டோம் என சொல்ல முடியாத பரிதாப நிலை ஏற்படும். மிக மோசமான ஞாபக மறதி நோயே, அல்சைமர் என அழைக்கப்படுகிறது. ஜெர்மன் விஞ்ஞானி அலோஸ் அல்சைமர் இந்த நோயை கண்டுபிடித்ததால், அவரது பெயரால் அல்சைமர் Alzheimer Disease என அழைக்கப்படுகிறது.

அல்சைமர் நோய் பாதிப்பு எந்த வயதில் ஏற்படும்?

பொதுவாக, அல்சைமர் நோய் Alzheimer Disease 60 வயதுக்கு மேற்பட்டவர்களையே பாதிக்கும். ஆனால், மிக அரிதாக 30 வயதிலும் வரலாம். பாரம்பரியத்தில் தாத்தா, தந்தை, சகோதரருக்கு அல்சைமர் இருந்தால், குடும்பத்திலுள்ள இளம் வயதினருக்கும் நோய் வர வாய்ப்புண்டு. ஆண்களை விட, பெண்களுக்கு இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகம்.இந்தியாவில் சராசரி ஆயுள் அதிகரித்து வருவதால், 60 வயதுக்கு மேற்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு உள்ள பாதிப்புகள் குறித்து, போதிய விழிப்புணர்வு இல்லை.


அல்சைமர் பாதிப்பு ஏற்பட காரணம் என்ன?

மூளையின் பக்கவாட்டு பகுதி, பாதிக்கப்படுவதால் டிமென்ஷியா எனும் ஞாபக மறதி நோய் வருகிறது. டிமென்ஷியா நோயில் அல்சைமர் ஒரு வகை. அல்சைமர் மறதி நோய் வருவதற்கு, மரபணு குறைபாடு முக்கிய காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபணு குறைபாடு காரணமாக, மூளையின் பக்கவாட்டு பகுதியிலுள்ள, ரசாயன பொருள் சுரக்காததால், அல்சைமர் ஏற்படுகிறது. குறைந்த படிப்பு படித்தவர்கள், அதிக குண்டாக இருப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் ஆகியோருக்கு, அல்சைமர் பாதிப்பு வரும் வாய்ப்புள்ளது. உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் மற்றும் ஹார்மோன் மாத்திரை எடுத்து கொள்பவர்களுக்கு, இந்த நோய் வரும் வாய்ப்பு மிகவும் குறைவு.

ஞாபக மறதி அல்சைமர் Alzheimer Disease நோயை, முழுமையாக குணப்படுத்தக் கூடியது, குணப்படுத்த முடியாதது என, இரண்டு வகையாக பிரிக்கலாம். வைட்டமின் பி சத்து குறைவு காரணமாக வரும் ஞாபக மறதி நோய், முழுமையாக குணப்படுத்தக் கூடியது. ஆனால், அல்சைமர் மறதி நோயை, முழுவதுமாக குணப்படுத்த முடியாது.

அல்சைமர் Alzheimer Disease அறிகுறிகள் என்ன?

எல்லோருக்கும் மறதி இருப்பது சகஜம் தான். ஆனால், மறதி இருக்கும் எல்லோருக்கும் அல்சைமர் Alzheimer Disease நோய் பாதிப்பு என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. பேச்சில் மாறுபாடு தெரியும், சிலர் திக்கி திக்கி பேசுவர். பெயர்களை மறப்பது, உறவினர், நண்பர்களை யார் என சொல்ல முடியாமல் போய், இறுதியில் தான் யார் என்றே சொல்ல முடியாத நிலை ஏற்படும். பல் துலக்குவது எப்படி என தெரியாமல் போய்விடும். உடை அணிய தெரியாது. வீட்டின் குளியலறை எங்கிருக்கிறது என்பது மறந்து விடும்.

மாய நிலை: சிலருக்கு நோய் முற்றிய நிலையில், இல்லாத ஒன்று, கண் எதிரே இருப்பது போன்று பேசுவர். காதில் ஏதோ சத்தம் ஒலித்து கொண்டிருப்பதை போன்று உணருவர். ஏதோ பிதற்றுவர். மனநோயாளி போல் நடந்து கொள்வர்.

பாதுகாப்பு தேவை: Alzheimer Disease அல்சைமர்  பாதிக்கப்பட்ட பலர், வீட்டிலிருந்து காணாமல் போய்விடுவர். எனவே, இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது அவசியமாகிறது. அவர்களை எங்கும் தனியாக அனுப்பக் கூடாது. அவர்கள் கையில் முகவரி, தொலைபேசி எண் போன்வற்றை எப்போதும் கொடுத்துவிடுவது நல்லது.

Alzheimer Disease அல்சைமர் சிகிச்சை என்ன?:

பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, அல்சைமர் நோய்க்கு சிகிச்சை கிடையாது. ஆனால், இப்போது நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே நோயை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். இதற்கு அறுவை சிகிச்சை செய்ய தேவையில்லை.

Alzheimer Disease அல்சைமர் தடுக்க வழி என்ன?: 

மூளைக்கு வேலை கொடுத்து, எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மன அழுத்தம், சோர்வுக்கு இடம் கொடுக்கக் கூடாது. கொழுப்பு நிறைந்த உணவை தவிர்க்க வேண்டும். அல்சைமர்  Alzheimer Disease ஒரு நோய் என்றே தெரியாமல், முற்றிய நிலையில் தான் சிகிச்சைக்கு வருவார்கள். ஞாபக மறதி அதிகமாக இருந்தால், ஆரம்ப நிலை யிலேயே டாக்டரிடம் சென்று பரிசோதித்து கொள்வது நல்லது.

டாக்டர் சி. முத்தரசு | நரம்பியல் பேராசிரியர் | ராஜிவ் காந்தி அரசினர் மருத்துவமனை, | சென்னை < நன்றி-தினமலர் | www.dinamalar.com/>

கொலாஜன் ஃபேஷியல்: Kolajen Facial

0 comments
கொலாஜன் ஃபேஷியல், நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும். கொலாஜன் ஃபேஷியல்: நமது சருமம் கொலாஜன்  (Collagen) என்ற புரோட்டீன் ஃபைபர்ஸ்ஆல் ஆனது. வயதாகும் பொழுது நீர், கொழுப்புச்சத்து உடலில் இல்லாததால் இந்த கொலாஜன் சுருங்கும். வயது முதிரும் போது இந்தச் சுருக்கம் அதிகரிக்கும். இந்தச் சமயத்தில் உள்ளே சாப்பிடுவதற்கும் நல்ல சத்துணவு வேண்டும். அத்துடன் முகத்தில் பூசுவதற்குக்கூட கொலாஜன் தேவையாக இருக்கிறது. 

இது கடைகளில் கொலாஜன் என்றே கிடைக்கிறது. ஜெல் டைப்பில் கிடைக்கும் கொலாஜனை முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உபயோகிக்கலாம். வயதானவர்கள் அனைவருமே கொலாஜனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகச்சுருக்கம் போய் இளமை திரும்புவது நிச்சயம்.கொலாஜன் மாஸ்க் என்றுகூடக் கடைகளில் கிடைக்கிறது. அதை அப்படியே முகத்தில் போட்டு அரைமணி நேரம் ஊறவைத்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். 

மேலும் உண்மையான ஆரஞ்சை வட்டவடிவத்தில் 'கட்' செய்த தோற்றத்துடன், ஆரஞ்சு ப்ளேவருடன் கூடிய கொலாஜன் மாஸ்க்கும் வந்திருக்கிறது. இதை முகத்தில் போடும்பொழுது 'ப்ரெஷ்ஷான லுக்' கிடைக்கும். இதை ஒரு பாக்கெட் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது உபயோகிக்கலாம்.தற்பொழுது heat maskம் புதிதாக வந்திருக்கிறது. இது வயதானவர்களுக்கு மிகவும் உகந்தது. கொலாஜன் ஃபேஷியல் முன் இந்த ஹீட் மாஸ்க்கைப் போடலாம். இது சின்னச் சின்ன ட்யூப் வடிவத்தில் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இதை ஒரு நிமிடம் மசாஜ் செய்தாற்போல் தடவி ஒரு நிமிடம் விட்டுவிட வேண்டும். இது லேசான சூடாக இருக்கும். ஆனால் உடனடி எஃபக்ட் கிடைக்கும். இது துவாரங்களின் உள்ளே போய் அழுக்கு வெளியே வந்துவிடும். தோல் நல்ல பளிச்சென்று இருப்பதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். சில நிமிடங்களிலேயே ஃபேஷியல் செய்த பலன் கிடைத்துவிடும். To Read more Beauty Tips in Tamil visit our home page . 

கொலாஜன் ஃபேஷியல் தசையை இறுகச் செய்து தோலுக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கக் கூடியது. முக்கியமாக குறிப்பிட வேண்டுமென்றால் இந்த முறையைக் கடைப்பிடித்தால் சீக்கிரமே வயதான தோற்றத்தை அடையாமல் தடுக்கப்படுவீர்கள். அப்புறம் உங்களைப் பார்த்து நாலு பேராவது, 'எக்ஸ்க்யூஸ் மீ! எந்தக் காலேஜில் படிக்கிறீங்க?' என்று கேட்கப் போகிறார்கள்!

ஆஹா ஃபேஷியல்:

ஒரு சிலருக்குத் தாங்கள் கறுப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை எப்போதும் உண்டு. இந்தத் தாழ்வு மனப்பான்மையினாலேயே வேறு எதிலும் முழுக்கவனம் செலுத்தி வெற்றிபெற முடியாமலும் போகிறார்கள். இறைவன் படைப்பில் அனைவருமே அழகுதான். ஒவ்வொருவரிடமும் அழகு ஒளிந்து கொண்டிருக்கிறது. அதை வெளியே கொணர்வதில்தான் உங்கள் கைவண்ணம் இருக்கிறது. பொதுவாகவே நிறம் அதிகமாக வேண்டும் என்ற நினைப்பில் உள்ளவர்கள் முதலில் கெமிக்கல் கலந்த சோப், க்ரீம்களை விட்டுவிட வேண்டும். சாதாரணமாக நிறத்தை மேம்படுத்த நீங்கள் உபயோகிக்கும் ஃபேர்னஸ் க்ரீமில் கூட கெமிக்கல்ஸ் உண்டு. இதை அடிக்கடி உபயோகிக்கும்பொழுது தோல் வறண்டு, உலர்ந்துவிடும். இதைத் தவிர்க்க ஊட்டச்சத்துகள் அடங்கிய க்ரீம் உபயோகிக்கலாம். முத்திலிருந்து எடுக்கப்பட்ட க்ரீம் அல்லது வைட்டமின் 'ஈ' கலந்த க்ரீம் உபயோகிக்கலாம்.

இதைத் தவிர, அழகு நிலையங்களில் மூலிகைகளைக் கொண்டு நிறத்தை இம்ப்ரூவ் செய்வதற்காக மூலிகை ஃபேஷியல்செய்யப்படுகிறது. இதை நாங்கள் எங்கள் பாஷையில் 'ஆஹா... ஃபேஷியல், என்கிறோம். பழச்சாறு... உலர் பழங்கள், ஆல்ஃபா ஹைட்ராக்ஸி ஆசிட் இந்த மூன்றும் சேர்ந்தது தான் இந்த 'ஆஹா... பேஷியல். கொலாஜன் ஃபேஷியல் இதைச் செய்யும்போது இரட்டிப்புப் பலன் கிடைக்கும். மேல்தோலை எடுத்து புதிதான தோல் உருவாகும். தோலுக்கு அதிக ஊட்டச்சத்து கொடுக்கக்கூடியது.

பெண்களுக்கு உதவும் `கிஸ்மிஸ் பழம்'

0 comments
கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.திராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பெறப்படுவதுதான் இந்த கிஸ்மிஸ் பழம். இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளது. மேலும், விட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

இனி, கிஸ்மிஸ் பழம் உலர் திராட்சையின் பயன்கள்...

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை கிஸ்மிஸ் பழம் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.
உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்சினை சரியாகும்.
இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குழந்தைக்கு பால் காய்ச்சும் போதும் அதில் இரண்டு கிஸ்மிஸ் பழம் உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.
தொண்டைக்கட்டு பிரச்சினை இருந்தால் இரவு படுக்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து, பசும்பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் விரைவில் தகுந்த நிவாரணம் பெறலாம்.
மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணம் பெறலாம்.
உலர் திராட்சைப் பழத்தை வெதுவெதுப்பான தண்ணீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வயிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 கிஸ்மிஸ் பழம் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு ஆழாக்கு தண்ணீரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வரலாம்.

சைனீஸ் இறால் வறுவல்: Chinese Shrimp Fry

0 comments
சைனீஸ் இறால் வறுவல்
சைனீஸ் இறால் வறுவல்:

சைனீஸ் இறால் வறுவல் தேவையான பொருட்கள்

இறால் - 15 எண்ணம் (ஒரு ஆள்காட்டி விரல் நீளம் மீன் இருக்க வேண்டும்)
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
நல்லமிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன்
வினிகர் - 1/2 டீஸ்பூன்
சோயாசாஸ் - 3/4 டீஸ்பூன்
வெங்காயத்தழை - 1/2 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

சைனீஸ் இறால் வறுவல் செய்முறை: சமையல் குறிப்புகள்

முதலில் இறாலின் தலை மற்றும் வால் பகுதியயை கட் செய்யவும். பிறகு இறாலின் மேல் பகுதியில் இருக்கும் கருப்பு லைன் போல இருக்குமே அதை மாற்றவும்.

மறுமுறையும் நன்றாக கழுவவும். கழுவின மீனின் தண்ணீர் போக உலர விடவும்.ஒரு பாத்திரத்தில் சோளமாவு, மிளகாய்தூள், நல்லமிளகுத்தூள், இஞ்சிபூண்டு விழுது, வினிகர், சோயாசாஸ் மற்றும் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

கலந்த கலவையினுள் இறாலை போட்டு பிசறி வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறவிடவும்.ஒரு வாணலியில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டு அது சூடு ஆனவுடன் இறாலை இரண்டு, மூன்றாகப் போட்டு பொரித்தெடுக்கவும். சைனீஸ் இறால் வறுவல் தயார்.

இறால் சுரைக்காய் மசாலா: Shrimp Suraikkai Masala

0 comments
இறால் சுரைக்காய் மசாலா

இறால் சுரைக்காய் மசாலா


இறால் சுரைக்காய் மசாலா தேவையான பொருட்கள்

இறால் – 1/2 கிலோ
சுரைக்காய் – 1/2 கிலோ
வெங்காயம், தக்காளி – 200 கிராம்
பச்சை மிளகாய் – 4
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 4 பல்
புளி – கோலியளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
கடுகு – 1 டீஸ்பூன்

இறால் சுரைக்காய் மசாலா செய்முறை: சமையல் குறிப்புகள்

இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். சுரைக்காயை நறுக்கி கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியை நறுக்கி, பச்சை மிளகாயைக் கீறிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு தட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.

பின்பு வெங்காயம், தக்காளி, தட்டிய இஞ்சி, பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.

மஞ்சள் தூள் சேர்த்து, நறுக்கிய சுரைக்காய் சேர்த்து நீர் ஊற்றி வேக வைக்கவும்,

இறாலையும், தேவையான அளவு உப்பு, தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி மசாலா திக்கான பதத்தில் வந்ததும் இறக்கி விடவும்.

சுவைக்க சுவை மிகுந்த இறால் சுரைக்காய் மசாலா தயார்.

இறால் அவரைக்காய் மசாலா: Shrimp Avaraikkai Masala | சமையல் குறிப்புகள்

0 comments
இறால் அவரைக்காய் மசாலா
இறால் அவரைக்காய் மசாலா

இறால் அவரைக்காய் மசாலா தேவையான பொருட்கள்:

இறால் – 1/4 கிலோ
அவரைக்காய் – 1/4 கிலோ
சாம்பார் வெங்காயம் – 200 கிராம்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணை – 1/2 குழிக்கரண்டி
பூண்டு – 6 பல்
புளி – கோலியளவு
கடுகு – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 4
கறிவேப்பிலை – 1 கொத்து

இறால் அவரைக்காய் மசாலா செய்முறை: சமையல் குறிப்புகள்

இறாலைச் சுத்தம் செய்து கொள்ளவும். அவரைக்காயை கழுவி நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.

பின்பு வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். இவை முக்கால் பாகம் வதங்கியவுடன் அவரைக்காயை சேர்த்து வதக்கி நீர் தெளித்து சிறிது வேகவிடவும்.

பின்பு இறாலைச் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

புளிக்கரைசல் ஊற்றி இறால் அவரைக்காய் மசாலா வெந்து, கறிக்கலவையுடன் சேர்ந்ததும் உலர்ந்த பதத்தில் இறக்கவும்.

இறால் அவரைக்காய் மசாலா சமையல் குறிப்புகள்

உள்ளாட்சி தேர்தல் 2011 : உள்ளாட்சி தேர்தல் கூட்டணி இல்லை-திமுக

0 comments
உள்ளாட்சி தேர்தல்
உள்ளாட்சி தேர்தல் 2011 :

நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தி.மு.க. தனித்து போட்டியிடுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மேலும் வருகிற உள்ளாட்சி தேர்தல் அரசியல் நோக்கிலான கூட்டணி தேவையில்லை என தி.மு.க, முடிவு செய்துள்ளதாகவும், நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் மட்டுமே கூட்டணியுடன் போட்டியிடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இறால் கபாப்: Shrimp Kabab

0 comments
இறால் கபாப்

இறால் கபாப்: தேவையானவை

இறால் - 1/2 கிலோ

கடலை மாவு - 1/2 ஆழாக்கு

அரிசி மாவு - 1 கையளவு

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - 1 கொத்து

எண்ணெய் - பொரிப்பதற்கு

ஆப்ப சோடா - 1 சிட்டிகை

எலுமிச்சம் பழச்சாறு - 1 டீஸ்பூன்

இறால் கபாப்  செய்முறை:

இறாலை தோல், குடல் நீக்கி சுத்தம் செய்யவும்.

கடலை மாவு, அரிசி மாவு, ஆப்ப சோடா, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த் தூள், தனியாத் தூள், மஞ்சள்தூள், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.

இந்தக் கலவையில் சுத்தம் செய்த இறாலை முக்கி மாவில் தோய்த்து காய வைத்த எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இறால் கபாப் தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

சன் பிக்சர்ஸ் - சக்சேனா, அய்யப்பன் கஸ்டடி சித்ரவதைகள்

0 comments
சன் பிக்சர்ஸ் (முன்னாள்) அதிகாரி சக்சேனாவையும், சினிமா விநியோகஸ்தர் அய்யப்பனையும் நீதிபதி முன் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

வீங்கிய கால்கள், அதில் வரி வரியாகத் தழும்புகளுடன் வேனில் இருந்து இறங்கிய அய்யப்பன், நடக்க முடியாமல் நொண்டி நொண்டி முன்னேற... முற்றிலுமாக கம்பீரம் தொலைத்து, வெலவெலத்து இருண்ட முகத்துடன் அவருக்குக் கைத்தாங்கலாக உடன் வந்தார் சக்சேனா. ஓடோடிப் போய் அய்யப்பனைச் சூழ்ந்து​கொண்ட நிருபர்கள், 'எப்படிக் காயம் ஏற்பட்டது?’ என்று கேட்டதுதான் தாமதம்... இருவருமே கதறி அழ ஆரம்பித்தனர். பிறகு அவர்கள் சொன்னதைக் கண்டு, 'இப்படியும்கூட நடக்குமா?’ என்பதான திகைப்புடன் பார்த்தனர் நிருபர்கள்.

தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அய்யப்பன் சில வார்த்தைகளை நிருபர்களிடம் சொன்னார். 'சி.பி.சி.ஐ.டி. போலீஸார் என்னைக் காவலில் எடுத்து விசாரித்தபோது, 'சன் குரூப் கலாநிதி மாறன் பற்றி உனக்கு என்ன தெரியும்? அவருக்கு எங்கெங்கே சொத்துகள் இருக்கு?’னு திரும்பத் திரும்பக் கேட்டாங்க. 'அவரைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் இதுவரை அவரை நேரில்கூட பார்த்தது இல்லை’னு சொன்னேன். உடனே ஆத்திரத்தோடு போலீஸ்காரங்க கண்மூடித்தனமா அடிச்சாங்க. என்கவுன்ட்டர் நடக்கப்போகுதுன்னு மிரட்டுறாங்க’ என்று பீதியோடு சொன்னார்.

தங்களை போலீஸார் தாக்கிய​தாக நீதிபதியிடமும் இவர்கள் சொன்னார்கள். அவர் மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்!சக்சேனா, அய்யப்பனின் வழக்​கறிஞர் செந்தில்குமார் இந்த விவகாரத்தை மனித உரிமை ஆணையத்திடம் கொண்டு​சென்றுள்​ளார். அவரை சந்தித்தோம்.

''கடந்த இரண்டு மாத காலமாக சக்சேனாவையும் அய்யப்பனையும் திட்டமிட்டு வேண்டுமென்றே போலீஸார் மாறி மாறி வழக்குகள் போட்டு, தொடர்ந்து சிறையில்வைத்துச் சித்ரவதை செய்து வந்தனர். ஒரு வழக்கில் ஜாமீன் பெற்றால் இன்னொரு வழக்கில் கைது என்ற ரீதியில் அவர்களின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. இறுதியாக, 'தம்பிக்கோட்டை’ படம் தொடர்பான புகாரில் இருவரை​யும் கைது செய்து இருந்தார்கள். 'தம்பிக்கோட்டை’ தயாரிப்பாளர் படத்துக்காக  5 கோடி செலவு செய்ததாகச் சொல்லி இருந்தார். ஆனால், செலவு குறித்து முறையான பில்கள் எதுவும் புகாருடன் இணைக்கவில்லை. இந்தப் பொய்ப் புகாருக்காக இருவரையும் ஏழு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. கேட்டது. இறுதியில் 5-ம் தேதி காலை முதல் 7-ம் தேதி காலை வரை அதாவது இரண்டு நாட்களுக்கு மட்டும் அனுமதி கொடுத்த நீதிபதி, 'இந்த காலகட்டத்தில் கைதிகள் இருவரையும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தூங்க அனுமதிக்க வேண்டும். அவர்களின் வழக்கறிஞர்கள் சந்திக்கவும் அனுமதிக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார். கிண்டி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில்தான் விசாரணை நடந்தது.

கடந்த 6-ம் தேதி மாலை எனது கட்சிக்காரர்களை நான் சந்திக்க வேண்டும் என்று டி.எஸ்.பி. ஜெயச்சந்திரனுக்கு போன் செய்தேன். அவரோ தொடர்ந்து மீட்டிங்... அது... இது... எனக் காரணம் சொல்லி என்னை சந்திக்க விடாமல் தடுத்து சதி செய்தார். இறுதியில் நீதிமன்ற உத்தரவு குறித்து நான் எச்சரிக்கை மெசேஜ் அனுப்பிய பிறகே, என்னால் உள்ளே நுழைய முடிந்தது. 'அய்யப்பனிடம் விசாரணை நடக்குது... சக்சேனாவை மட்டும் பார்க்க அனுமதிக்கிறோம்’ என்று அவர்கள் கூறியபோதே எனக்கு சந்தேகம். இருந்தாலும் எதையும் காட்டிக்கொள்ளாமல் சக்சேனாவை சந்தித்து, 'நேரத்துக்கு சாப்பாடு கொடுத்தார்களா? வேற ஏதாவது பிரச்னை இருக்கா?’னு கேட்டேன். 'ஒரு பிரச்னையும் இல்லை சார்’னு சக்சேனாகிட்ட இருந்து பதில் வந்தது. ஆனால் அவர் குரலில் வாட்டம் தெரிஞ்சது.

அடுத்த நாள் விசாரணை முடிந்து 20 போலீஸ் புடைசூழ ரெண்டு பேரையும் கோர்ட்டுக்கு அழைத்து வந்தார்கள். அய்யப்பன் தாங்கித் தாங்கி நடந்ததைப் பார்த்து அதிர்ச்சியான நான், 'என்ன நடந்தது அய்யப்பன்? பயப்படாமச் சொல்லுங்க’னு கேட்டேன். அருகில் இருந்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அய்யப்பனின் கையை முறுக்கிப் பிடித்துக்கொண்டு இருந்தார்கள். அப்போதைக்கு அவர் என்னிடம் எதையும் சொல்லவில்லை.

'தம்பிக்கோட்டை’ வழக்கில் ஜாமீன் கிடைத்த காரணத்தால், மறுநாளான 8-ம் தேதி அவர்கள் இருவரும் சிறையில் இருந்து விடுதலையாகி, வெளியில் வர இருந்தனர். அன்று மாலை அவர்களை சந்திக்க நான் புழல் சிறைக்குச் சென்றபோது, என்னைப் பார்த்ததும் மொத்தக் காயங்களையும் காட்டி கண்ணீர்விட்டார் அய்யப்பன். 'நேத்து கோர்ட்டுல இதை நான் சொல்லி இருந்தா... திரும்பிக் கூட்டிட்டுப் போகும்போது என்கவுன்ட்டர்ல போட்டுருப்பாங்க...’ என்று அய்யப்பன் சொன்னார். வெள்ளைச் சட்டை அணிந்த 30 போலீஸார் ஷிஃப்ட் முறையில் அய்யப்பனை அடித்து இருக்கிறார்கள். கால் பகுதி முழுவதும் வரி வரியாகத் தழும்புகள். ஆங்காங்கே சதை பிய்ந்து தொங்கிக்கொண்டு இருந்தது. 'டாய்லெட் போகக்கூட உட்கார முடியலைண்ணா...’ என்று அழுதார்.

இந்த சூழலில் இருவரையும் நித்தியானந்தா வழக்கில் மீண்டும் கைது செய்யப்போவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அதனால், 'இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களைக் கோர்ட்டுக்குக் கூட்டிட்டு வருவாங்க. நீதிபதியிடமும் மீடியாக்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தாக்கியதைப் பற்றித் தயங்காமல் சொல்லுங்கள்’ என்று சொல்லிவிட்டு நானும் கோர்ட்டுக்கு விரைந்தேன்.

எதிர்பார்த்ததுபோல, அடுத்த வழக்கில் கைது செய்தார்கள். சன் டி.வி. நிர்வாகத்தை அச்சுறுத்தவும், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனுக்குக் குடைச்சல் கொடுக்கவும் சில அரசியல் சக்திகள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர். அவர்களின் கைத்தடிகளைப்போல சி.பி.சி.​ஐ.டி. போலீஸ் நடந்து​கொள்கிறது. போலீஸ் காவலுக்கு எடுத்து விசாரிக்கும்போது கைதிகளைத் தாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தெளிவான உத்தரவு பிறப்பித்​துள்ளது. எனவே, இந்தத் தாக்குதலுக்குக் காரணமான சி.பி.சி.ஐ.டி-யின் டி.ஐ.ஜி-யான ஸ்ரீதர், டி.எஸ்.பி-யான ஜெயச்​சந்திரன், இன்ஸ்பெக்டர் காசி உள்ளிட்ட போலீஸார் இதற்குப் பதில் சொல்லியே தீர வேண்டும். அவர்களைக் கூண்டில் ஏற்றாமல், நான் ஓய மாட்டேன்!'' என்று கொந்தளித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து டி.ஐ.ஜி. ஸ்ரீதரிடம் கேட்டபோது, ''கலாநிதி மாறனை இந்த அய்யப்பன் நேரில் பார்த்தது இல்லை என்பது எங்களுக்கும் தெரியும். எனவே, விசாரணையின்போது நாங்கள் கலாநிதி மாறன் பெயரைச் சொல்லும்படி அய்யப்பனைக் கேட்கவில்லை...'' என்றார்.

''அப்படியானால் அய்யப்ப​னின் உடலில் காயங்கள் எப்படி ஏற்பட்டது?'' என்று கேட்டதற்கு, மௌனம் மட்டுமே நமக்குப் பதிலாகக் கிடைத்தது.

பொதுவாக 'போலீஸ் அடி'யில் 'காயம் வெளியில் தெரியாது’ என்பார்கள். ஆனால், சன் பிக்சர்ஸ் அய்யப்பன் தரப்பு சொல்வதையும் அவர் காயங்களையும் பார்த்தால்.... என்ன நடக்கிறது? அடுத்து என்ன நடக்கப்போகிறது?

Eye Catching Lipsticks: கண்களை‌க் கவரும் உதடுகள்

0 comments
முகத்திற்கு மேக்கப் போட நேரமில்லை என்றாலும் உதடுகளுக்கு மேக்கப் போட யாரும் மறப்பதில்லை.பார்ப்பவர் கண்களைக் கவரும் உதடுகள் பெற‌‌...

லிப் லைனர்: இது பென்சிலைப் போன்ற தோற்றம் உடையது. உதடுகள் வடிவத்தை லிப் லைனரைக் கொண்டு வரைந்து, அதன் பிறகு அதற்குள் லிப்ஸ்டிக்கால் நிறத்தை நிறப்புவது நல்லது. லிப்ஸ்டிக் உதடுகள் விட்டு வெளியே பரவுவதை இது தடுக்கும்.லிப்ஸ்டிக்கின் நிறத்திற்கு ஏற்றதாக லிப் லைனரின் நிறம் இருக்க வேண்டும். இல்லையென்றால் உதடுகள் அழகு கெட்டுவிடும். அதற்காக ஒவ்வொரு லிப்ஸ்டிக் வாங்கும் போதும் அதற்கேற்ற லிப் லைனர் வாங்க வேண்டும் என்று அவசியமில்லை. லிப்ஸ்டிக்கின் நிறத்தைச் சார்ந்த நிறமாக இருந்தாலும் போதுமானது.

உதாரணத்திற்கு சிவப்பு நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு சிவப்பு நிற லிப்லைனரும், பிரவுன் நிறத்தைச் சார்ந்த லிப்ஸ்டிக்குகளுக்கு பிரவுன் நிற லிப்லைனரும் உபயோகிக்கலாம்.தேவைப்பட்டால் லிப் லைனரைக் கூட லிப்ஸ்க்காக பயன்படுத்தலாம்.

குறிப்பு: மாய்ஸ்சுரைசர் இல்லாத லிப்லைனரை லிப்ஸ்டிக்காக பன்படுத்தினால், மறக்காமல் சிறிதளவு க்ரீம் தடவ வேண்டும். இது உதடுகள் காய்ந்து வெடிக்காமல் இருக்க உதவும்.

Egmore Railway Station | எழும்பூர் ரெயில் நிலையம்

0 comments
எழும்பூர் ரெயில் நிலையம்:

அன்று முதல் இன்று வரை தமிழ் திரைப்படங்களில், கிராமத்தில் இருந்து கதாநாயகனோ, கதாநாயகியோ சென்னை வந்தால், அவர்கள் முதலில் கால்பதிக்கும் இடம் அநேகமாக எழும்பூர் ரெயில் நிலையம்மாகத் தான் இருக்கும். சென்னையின் மையப் பகுதியில் பரந்து விரிந்து, அந்தக் கால கம்பீரத்துடன் ஓங்கி நிற்கும் இந்த ரெயில் நிலையக் கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லும் பல கதைகளை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றன.

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு இன்றும் பயன்பாட்டில் இருக்கும் மிகச் சில கட்டிடங்களில் முக்கியமானது எழும்பூர் ரெயில் நிலையம். கூவம் ஆற்றின் வட பகுதியில் அமைந்திருந்த எழும்பூர் என்ற கிராமத்தில் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்தனர். ஜார்ஜ் கோட்டையில் குடியேறிய ஆங்கிலேயர்கள், தண்டையார் பேட்டை, புரசைவாக்கம் என அருகில் உள்ள கிராமங்களை விலைக்கு வாங்கி, மெல்ல மெல்ல தங்கள் குடியிருப்பை விஸ்தரித்தனர். அந்த வகையில் அப்போதைய மெட்ராசின் ஆளுநர் எலிஹூ யேல் (அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது), நவாப் சூல்பிகர் கான் என்ற முகலாய வைஸ்ராயிடம் இருந்து 1720ஆம் ஆண்டு விலைக்கு வாங்கிய ஊர் தான் எழும்பூர். இந்த ஊரின் பெயர் ஆங்கிலேயர்களின் வாய்க்கு நுழைய மறுத்ததால், எழும்பூரை அவர்கள் `எக்மோர்' ஆக்கிவிட்டார்கள்.

இந்த ஊரில் ஆங்கிலேயர்கள் முதலில் கட்டிய பிரம்மாண்டமான கட்டிடம் எழும்பூர் அருங்காட்சியகம், அடுத்தது எழும்பூர் ரெயில் நிலையம். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தை போன்று எழும்பூரிலும் ஓர் பெரிய ரெயில் நிலையம் கட்ட வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் முடிவெடுத்ததைத் தொடர்ந்து, 1908ஆம் ஆண்டு இது கட்டப்பட்டது.

முதலில் ராயபுரம் ரெயில் நிலையத்தில் இயங்கி வந்த அப்போதைய மெட்ராஸ் மற்றும் தெற்கு மராட்டா ரயில்வேயின் தலைமையகம் பின்னர் இங்கு மாற்றப்பட்டு, 1951ஆம் ஆண்டு வரை இங்கு தான் செயல்பட்டது.இந்திய, முகலாய மற்றும் கோதிக் கட்டிடக் கலைகளை ஒன்று கலந்து உருவாக்கப்பட்ட இந்தோசாராசனிக் பாணியில் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தை கட்டியவர் சாமிநாதப் பிள்ளை என்ற தமிழ் கான்ட்ராக்டர். ராபர்ட் சிஸ்ஹோம் (Robert Chisholm) என்ற ஆங்கிலேயர் கட்டிடத்திற்கான வரைபடத்தை வடிவமைத்துக் கொடுத்தார்.

சாமிநாதப் பிள்ளை அக்காலத்தில் மெட்ராஸ் ராஜ்தானியில் மிகவும் புகழ்மிக்க காண்ட்ராக்டராக விளங்கி வந்தார். பெங்களூர் நகரில் இவர் கட்டிய பல கட்டிடங்கள் மிகவும் சிறப்பாக இருப்பதாக அங்கிருந்த அதிகாரிகள் நற்சான்றிதழ் அளித்ததை அடுத்து, இந்த பணி சாமிநாதப் பிள்ளையிடம் ஒப்படைக்கப்பட்டது. தான் கட்டும் கட்டிடங்களில் பயன்படுத்துவதற்காக பூந்தமல்லியில் தனியாக செங்கல் சூளைகளை வைத்திருந்தார் சாமிநாதப் பிள்ளை. இங்கு பிரத்யேகமான முறையில் உறுதியான செங்கல்கள் தயாரிக்கப்பட்டன.

வழக்கமான ஸ்டேஷன் மாஸ்டர் அறை, அலுவலர்களின் அறைகளைத் தாண்டி நீண்ட, காற்றோட்டம் மிக்க காத்திருக்கும் அறைகள், சிற்றுண்டி விடுதி, பயணிகளின் உடமைகளை வைக்கும் அறை என எழும்பூர் ரெயில் நிலையம் நன்கு விஸ்தீரணமாக கட்டப்பட்டது. இதற்கு அக்காலத்திலேயே 17 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவானதாம்.

அக்காலத்தில் மெரினா கடற்கரை, மூர் மார்க்கெட்டிற்கு அடுத்தபடியாக சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இந்த ரெயில் நிலையம் இருந்திருக்கிறது. மாலை வேளையில் இங்குள்ள சிற்றுண்டி விடுதியில் எதையாவது கொறித்துக் கொண்டு கதை பேச, ஒரு பெரிய கூட்டம் கூடுமாம். கொல்லங்கோடு மகாராஜா உள்பட பல மகாராஜாக்களும், ஜமீன்தார்களும், செல்வச் சீமான்களும் இங்குள்ள ஓய்வு அறையில், ரெயில் வருகைக்காக மணிக்கணக்கில் காத்திருந்திருக்கின்றனர்.

அக்கால ரெயில்களில் நான்கு வகுப்புகள் இருந்திருக்கின்றன. முதல் வகுப்பு, இந்தியப் பணக்காரர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்குமானது. அடுத்தது இரண்டாம் வகுப்பு, அதற்கடுத்தது இண்டர் கிளாஸ் எனப்படும் இடைப்பட்ட வகுப்பு. இரண்டாம் வகுப்புக்கும், இடைப்பட்ட வகுப்புக்கும் இருக்கைகள் தான் வித்தியாசம். இரண்டாம் வகுப்பில் இருக்கை குஷன் சற்று தடிமனாக இருக்கும், பிந்தையதில் மெல்லியதாக இருக்கும். கடைசியாக பெரும்பாலானோர் பயணிக்கும் மூன்றாம் வகுப்பு பெட்டி. இதில் நீளமான மரப் பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். இதுதான் அன்றைய ரெயில் பயணம்.

இங்குள்ள இரண்டு நடைமேடைகளில் மட்டும் நேராக கார்களை செலுத்திக் கொண்டு போய், தேவையான கம்பார்ட்மெண்டிற்கு அருகில் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடும் வசதி ஒரு காலத்தில் இருந்தது. இந்தியாவிலேயே ஹவுரா ரெயில் நிலையத்திற்கு அடுத்து எழும்பூர் ரெயில் நிலையம் எழும்பூரில்தான் இந்த வசதி இருந்தது. அகல ரெயில் பாதைகள் வந்த பிறகு இந்த வசதி பறிபோய்விட்டது. இப்படி கார்களில் வந்து ரெயில் களுக்கு அருகில் இறங்குபவர்களை வேடிக்கை பார்க்கவே அக் காலத்தில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஒரு கூட்டம் இருக்குமாம்.

எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரெயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டு விடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கையின் தலைமன்னாருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். தலைமன்னாரில் இருந்து கொழும்பு செல்ல ஒரு ரெயில் தயாராக காத்திருக்கும். 1964ஆம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த ரெயில் சேவை நிறுத்தப்பட்டது.

சிக்காகோவில் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக உரையை ஆற்றிய சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வந்தார். அப்போது கல்கத்தா செல்லும் வழியில் அவர் சென்னைக்கு வருகை தந்தார். எழும்பூர் ரெயில் நிலையத்தில் அவருக்கு வரலாறு காணாத உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விவேகானந்தரின் வருகையை ஒட்டி ரெயில் நிலையமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

இப்படி நிறைய வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாய் விளங்கிய எழும்பூர் ரெயில் நிலையம், இன்றுதானே ஒரு வரலாற்று பெட்டகமாய் நின்று கொண்டிருக்கிறது.

Talking Frogs | `பேசும்' தவளைகள்!

0 comments
`மொழி' என்றதுமே அது மனிதர்கள் சம்பந்தப்பட்ட ஒன்று என்ற எண்ணம்தான் நமக்கு ஓடுகிறது. ஆனால் மொழியும், மொழி சார்ந்த பிரச்சினைகளும் மனித இனத்துக்கு மட்டும் சொந்தமானதல்ல. தவளைகளும், தேரைகளும் கூட அவற்றின் சொந்த மொழியில் பேசிக்கொள்கின்றன.

சமீபத்திய உயிரியல் ஆராய்ச்சிகள் இதை உறுதிப்படுத்துகின்றன. தவளைகளும், தேரைகளும் ஒன்று ஒன்று தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் ஒலி சமிக்ஞை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.

தவளைகளும், தேரைகளும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவை தங்களுக்கே உரிய பிரத்தியேக மொழிகள் மூலம் தத்தமது இனத்துக்கு இடையே தொடர்பு கொள்கின்றன.

நூற்றுக்கணக்கான தவளைகள் ஒரே சமயத்தில் ஒலி எழுப்புவதை நாம் கேட்டிருப்போம். பொதுவாக இனச்சேர்க்கைக்காகவே தவளைகள் இப்படிக் குரல் கொடுக்கின்றன.

ஒரு பெண் தவளை இந்தப் பெரிய கூச்சலுக்கு நடுவே தனது வகையைச் சேர்ந்த ஆண் தவளையின் குரலைத் தனியாக இனங்கண்டு கொண்டு அதைத் தேடிச் சென்று இனவிருத்தி செய்கிறது என்கிறார்கள் உயிரியல் வல்லுநர்கள்.

Vegetable Cutlet | `வெஜிடபிள்' கட்லெட்

0 comments
`வெஜிடபிள்' கட்லெட் தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 4
கேரட் - 1
வெங்காயம் - 2
பச்சைப் பட்டாணி - 100 கிராம்
அம்ச்சூர் பொடி - 1/4 டீஸ்பூன்
சிவப்பு, மிளகாய்த் தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1/4 டீஸ்பூன்
தனியாத் தூள் - 1/4 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 கப்
உப்பு - 11/2 டீஸ்பூன்
பிரட் துகள்கள் - 4 டேபிள் ஸ்பூன்
சோளமாவு - 2 டேபிள் ஸ்பூன்

`வெஜிடபிள்' கட்லெட் செய்முறை:

உருளைக் கிழங்கை குக்கரில் வேக வைத்து தோலுரித்து நன்கு மசிக்கவும்.

வாணலியில் 8 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், அனைத்து தூள்கள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு துருவிய கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து எல்லாம் நன்கு வதங்கும் வரை வதக்கவும்.

இப்போது மசித்த உருளை சேர்த்து எல்லாம் ஒன்று சேர திரண்டு வரும்வரை வதக்கவும்.

ஆறியவுடன் இவற்றை விருப்பமான வடிவில் உருண்டை அல்லது இதய வடிவில் சிறு சிறு கட்லெட்களாக வடிவமைத்து, தண்ணீர் கலந்த சோளமாவில் தோய்த்து பிரட் துகள்களில் புரட்டி வைக்கவும்.

தோசைக் கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் நடுவில் மீதி எண்ணெய் முழுவதையும் ஊற்றி மிதமான தீயில் சுடவைத்து கட்லெட்களை எண்ணெயில் போட்டு திருப்பி இருபுறமும் பொன்மஞ்சள் நிறமாக வரும்வரை லேசாக வறுத்து எடுக்கவும்.

குறிப்பு

4 பிரட் துண்டுகளை எடுத்து பிரட் துகள்கள் செய்ய உபயோகப்படுத்தலாம்.

மேற்சொன்ன காய்களுடன் துருவிய பீட்ரூட் அல்லது துருவிய பன்னீர் சேர்த்து கட்லெட் செய்தால் வேறுபட்ட சுவையுடன் இருக்கும்.

How the Ship Floats | எப்படி மிதக்கிறது கப்பல்?

0 comments
ஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று பார்ப்போம்.

சிறிய கப்பல்கள், பெரிய கப்பல்கள் என்ற வித்தியாசமின்றி எல்லா கப்பல்களுக்கும் அதிக எடை கொண்டவை. ஆகவே ஒரு கப்பல் தண்ணீரில் இருக்கும்போது அதன் உடற்பகுதி ஓரளவு வரை தண்ணீரில் அமிழ்ந்திருக்கும். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும் வரை அதன் உடற்பகுதி தண்ணீரில் அமிழும்.

10 ஆயிரம் டன் எடையுள்ள ஒரு கப்பலின் உடற்பகுதி, அதே எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். எனவே ஒரு கப்பலின் எடையைக் கூறுவதற்குப் பதிலாக, அது இடம்பெயரச் செய்யும் தண்ணீரின் எடையைக் கூறுகிறார்கள். அதாவது ஒரு கப்பலின் `டிஸ்பிளேஸ்மென்ட்' 10 ஆயிரம் டன் என்று கூறுவார்கள்.

அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் கிடப்பு நிலையில் இருந்து ஏற்படும் அழுத்தங்கள் கப்பலின் உடற்பகுதியை நசுக்குகின்றன. ஆனால் அவை இந்த நடைமுறையில் ஒன்றையொன்று அமிழ்த்துச் சமநிலையை ஏற்படுத்துகின்றன. செங்குத்தான போக்கில் உள்ள அழுத்தங்களின் சக்தியே கப்பலின் எடையை ஒரு சமநிலைக்குக் கொண்டுவருவதாக ஆக்கிமிடிஸ் கருதினார்.

காற்றில் அமிழ்ந்துள்ள பொருட்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும். கியாஸ் உள்ளிட்ட எல்லா திரவங்களுக்கும் ஆக்கிமிடிஸின் கொள்கை பொதுவானதே. உதாரணமாக, பலூனை எடுத்துக்கொள்வோம். அது தனது பருமனுக்குச் சமமான எடையை விட இலேசாக இருந்தால் பறக்கும்.

Don't Get problem with Drinking: "குடிமகன்'களே! அவதி வேண்டாம்

0 comments
மாலை ஏழு மணி ஆனால், மனம் அலைபாய்கிறது. அறிவு அதைக் கட்டுப்படுத்த முயன்றாலும், மனம் கேட்க மறுக்கிறது. நேராக, "டாஸ்மாக்' சென்று, ஒயின், விஸ்கி என, ஒரு, "குவார்ட்டர்' ஆவது, முழுங்கினால் தான், உடல் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்ற நினைப்பு. "பிளேடு' போட வேண்டாம்... விஷயத்திற்கு வாருங்கள்...' என, நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், அடுத்த நாள் தலைவலிக்கு, முழு புட்டி அமிர்தாஞ்சனைத் தேய்த்துக் கொண்டாலும், தலைவலி போகாதே! "குடி'க்கும் உரிமை உங்களுடையதே; அதை யாரும் கட்டுப்படுத்தவில்லை. உங்கள் நினைப்பைச் சற்றே மாற்றிக் கொண்டால், பிரச்னை எழாது என்பதற்கு தான், கீழே உள்ள விளக்கங்கள்.

சாப்பிடுவதற்கு முன், "குடி'த்தால் தான், "கிக்' ஏறும்:

உணவு சாப்பிடும் முன், "பெக்' அடித்தால் தான், "கிக்' ஏறும் என நீங்கள் நினைப்பது உண்மை தான். ஆனால், அளவுக்கு அதிகமாக குடிக்கும்போது, அடுத்த நாள் தலைவலியுடன் சேர்ந்த அரை மயக்கத்தை சமாளிப்பது எப்படி? எனவே, உணவு சாப்பிட்ட பின், மது அருந்துவது நல்லது. இப்படிச் செய்தால், ரத்தத்துடன் மது கலப்பது தாமதப்படும். இதனால், தலைவலி ஏற்படாது. மீண்டும் ஒரு, "ஸ்மால்' அடிக்க வேண்டும் என்ற எண்ணமும் எழாது.

காக்டெய்ல் கிக்'கே தனி பிரதர்:

"காக்டெய்ல்' அருந்தும்போது, ஆல்கஹால் கலப்பு குறையும் என, பெரும்பாலோர் கருதுகின்றனர். இது தவறு. பல வகையான மதுக்களில் காணப்படும், நிறமிகளும், சுவைகூட்டிகளும், உங்கள் ரத்தத்தைப் பதம் பார்த்து விடும். ரத்தத்தில் ஆல்கஹால் வெகு வேகமாகக் கலந்து விடும்.
கவர்ச்சியாய், அடர்நிறத்தில் உள்ள மதுவின், சுவைக்கு ஈடில்லை!

நல்ல நிறம், மணம், சுவை ஆகியவற்றைக் கொண்ட மது வகைகள், அடுத்த நாள் உங்களை அசத்தி விடும்; எழுந்திருக்கவே முடியாது. அதிக சர்க்கரை கொண்ட மது வகைகளுக்கும், "தடா' போடுங்கள். விஸ்கி, ரம், பிராந்தி ஆகியவற்றை விட, வோட்கா, ஜின், மைல்டு பீர் ஆகியவற்றைப் பருகலாம்.

ஒரு காபி குடித்தால், "ஹேங்ஓவர்' வராது:

"ஹேங்ஓவரை' விரட்ட, மீண்டும், ஒரு, "ஸ்மால்' குடிப்பதோ, காபி குடிப்பதோ, வலி நிவாரணி மாத்திரை சாப்பிடுவதோ தவறு. மீண்டும் ஒரு, "ஸ்மால்' குடிப்பது, நீங்கள் மதுவுக்கு அடிமையாக வழி வகுக்கும். காபி குடித்தால், உடலில் நீர்ச் சத்து குறைந்து விடும். வலி நிவாரணி, மிகக் குறைந்த மணி நேரத்திற்கே வேலை செய்யும்.

ஹேங் ஓவரை' விரட்ட, என்ன செய்யலாம்?

எந்த வகை மதுவுமே, நம் வயிற்றில் சென்றதும், "அசிடால்டிஹைடு' ரசாயனமாக மாறுகிறது. இது விஷத்தன்மை கொண்டது. இதனால், அதிக வியர்வை, குமட்டல், வாந்தி, இதயத் துடிப்பு அதிகரித்தல் ஆகியவை ஏற்படும். உடலுக்கு சக்தி கொடுக்கும் குளூக்கோஸ் உற்பத்தியாவதைத் தடுக்கும். இதனால், மெத்தனமான செயல்திறனுடன், உற்சாகம் இழந்து, எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். அளவோடு, மது அருந்துவது நல்லது. சற்றே அதிகமானாலும், அடுத்த நாள், "ஹேங்ஓவர்' தான்! உடலில் ஆல்கஹால் அளவு முற்றிலும் குறைந்தவுடன், அதிகமாய் தலைவலி ஏற்படும். இதை விரட்ட, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்; நன்றாக தூங்க வேண்டும். மாற்று வழி ஏதும் இல்லை.

துக்கடா: "சாக்லேட், அன்னாசிப் பழத்துண்டு போன்ற, இனிப்புப் பண்டங்களைச் சாப்பிட்டுக் கொண்டே மது அருந்தினால், குட்டிக் குரங்கு போல குதியாட்டம் போடத் தூண்டும்' என, அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர். இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடும்; தவிர்த்து விடுங்கள்.

"ஹைபோகான்ட்ரியாசிஸ்' என்றால் என்ன? என்ன நோய் இது?

உடல் நலத்தைப் பற்றி, வீணாக கற்பனை செய்து, கவலை கொள்வதற்கு, "ஹைபோகான்ட்ரியாசிஸ்' என்று பெயர். இந்த பாதிப்பு கொண்டவர்கள், உடலில் தோன்றும் அறி குறிகள் குறித்து, அளவுக்கு அதிகமாக கற்பனை செய்து, தனக்கு தீவிர நோய் இருப்பதாகக் கருதி, பல மருத்துவர்களிடம் செல்வர். மருத்துவர்கள், ஐயத்தை நீக்கினாலும், மீண்டும் பயம் கொள்வர். இதனால், இவர்கள் மட்டுமின்றி, இவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுகின்றனர்.

என்ன சிகிச்சை?

உடல் மற்றும் பாலியல் ரீதியான பாதிப்பு காரணமாகவோ அல்லது மற்றவர்கள் கவனத்தை ஈர்ப்பதற்காகவோ, "ஹைபோகான்ட்ரியாசிஸ்' மனநிலைக்கு சிலர் தள்ளப்படுகின்றனர். இதோடு, படபடப்பு, மனப் போராட்டம் ஆகியவையும் ஏற்படும். பருவ வயதிலேயே இது ஏற்படக் கூடும். தனக்கு எய்ட்ஸ், புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் ஆகியவை ஏற்பட்டுள்ளதாக, இவர்கள் கற்பனை செய்து கொள்வர். இவர்களுக்கு, மன நல மருத்துவம் தேவை.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf