Jayalalithaa to meet Narendra Modi: ஜெயலலிதா, வரும், 3ம் தேதி, டில்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்

0 comments

J Jayalalithaa 2014
Jayalalithaa

முதல்வர் ஜெயலலிதா, வரும், 3ம் தேதி, டில்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது, தமிழக திட்டங்களுக்கு, சிறப்பு முன்னுரிமை அளிக்கும்படி, கோரிக்கை மனு கொடுக்க உள்ளார். எனவே, தமிழக திட்டங்களுக்கு சிறப்பு முன்னுரிமை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் ஜெயலலிதா, நெருங்கிய நண்பர்கள். பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி ஏற்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.

தனித்து போட்டி:

ஆனால், லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., 40 தொகுதிகளிலும், தனித்து போட்டியிடும் என, ஜெயலலிதா அறிவித்தார். எனவே, பா.ஜ., பிற கட்சிகளுடன் இணைந்து, தனி அணியாக களம் இறங்கியது.தனித்து போட்டியிட்டாலும், தேர்தல் பிரசாரத்தின் துவக்கத்தில், முதல்வர் ஜெயலலிதா, தி.மு.க., மற்றும் காங்கிரசை மட்டும் சாடினார். பா.ஜ., மற்றும் அதன் 
கூட்டணி கட்சிகள் குறித்து விமர்சிக்கவில்லை.

இதனால், தேர்தலுக்கு பிறகு, பா.ஜ., கூட்டணிக்கு, அ.தி.மு.க., ஆதரவு அளிக்கும் என்ற எண்ணம் மக்களிடம் பரவியது. தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தில், தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்ட நரேந்திர மோடி, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., மாறி மாறி ஆட்சிக்கு வந்தும், தமிழகத்திற்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை என, விமர்சித்தார்.இதற்கு பதிலடி கொடுத்த ஜெயலலிதா, நிர்வாகத்தில், மோடியை விட, இந்த லேடி தான் சிறந்தவர் என முழங்கினார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே, இடைவெளி அதிகரித்தது.

ஜெயலலிதா அதிர்ச்சி:

தேர்தல் முடிவில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காது. மாநில கட்சிகள் உதவியுடன் பிரதமராகலாம் என, ஜெயலலிதா திட்டமிட்டார். அந்த வாய்ப்பு வராவிட்டால், பா.ஜ.,விற்கு ஆதரவு அளித்து, மத்திய அரசில் அங்கம் வகிக்கலாம் என, முடிவு செய்தார். இதனால், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டவர்கள், அமைச்சர் கனவில் மிதந்தனர். ஆனால், தேர்தல் முடிவு வேறு விதமாக அமைந்தது. பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன், ஆட்சியைப் பிடித்தது.

தமிழகத்தில், 37 இடங்களை கைப்பற்றியும், மத்திய அமைச்சரவையில், இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டதும், அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர்; முதல்வர், அப்செட்டானார். அ.தி.மு.க.,வினரின் மத்திய அமைச்சர் கனவு தகர்ந்தது.அதன் பிறகு, பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடிக்கு, முதல்வர் வாழ்த்து செய்தி அனுப்பினார். 

அதில், மத்திய அரசு, தமிழக அரசுடன் நல்லுறவு பேண வேண்டும் என்றார். அதற்கு நன்றி தெரிவித்த நரேந்திர மோடி, மத்திய அரசு, மாநில அரசுடன் நல்லுறவு பேணும் என, உறுதி அளித்தார். இதனால், மத்திய அரசுடன் இணக்கமான சூழல் ஏற்படும் என, அ.தி.மு.க.,வினர் நம்பினர்; அதிகாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மோதல்:

கடந்த முறை, மத்தியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிஅரசுடன், ஜெயலலிதா மோதல் போக்கை கடைபிடித்தார். இதனால், தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகள் பாதிப்படைந்தன; நிதி ஒதுக்கீடு குறைந்தது.இந்நிலை மாற, மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் என, அதிகாரிகள் விரும்பினர். 

அதற்கேற்ப பா.ஜ., ஆட்சி அமைந்ததும், மகிழ்ச்சி அடைந்தனர்.மத்திய அரசுடனான உறவை பலப்படுத்தும் வகையில், நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில், ஜெயலலிதா பங்கேற்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்ப்பு:

ஆனால், நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்கு, சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். அதை ஏற்று, இலங்கை அதிபர் ராஜபக்?ஷே உட்பட பலநாட்டு தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர்.ராஜபக்?ஷே வருகைக்கு, தமிழர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முதல்வர் ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்து, காட்டமாக அறிக்கை விடுத்தார்.அதைத் தொடர்ந்து, அவர், பதவியேற்பு விழாவிற்குசெல்லவில்லை; அ.தி.மு.க., சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால், மீண்டும் இடைவெளி உருவானது.இதை குறைக்கும் வகையில், அடுத்த மாதம், 3ம் தேதி, டில்லி சென்று பிரதமரை சந்திக்க, முதல்வர் முடிவு செய்துள்ளார். 

டில்லியில், பிரதமர் அலுவலகத்தில் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளை செய்யும்படி, கோரிக்கை மனு கொடுக்க உள்ளார் ஜெயலலிதா

மத்திய அரசு உதவி இல்லாததால், தமிழகத்தில் முடங்கியுள்ள திட்டங்கள் குறித்தும் விளக்க உள்ளார்.பிரதமரை சந்திக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்திருப்பது, அ.தி.மு.க., வினரிடம் மட்டுமின்றி, அதிகாரிகளிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு, நரேந்திர மோடி உதவுவார் என்று நம்புகின்றனர்.

முதல்வர் Narendra Modi முன்வைக்கும் கோரிக்கைகள்:

முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்திக் கொள்ள, சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதை கண்காணிக்க, மத்திய, மாநில அரசு பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழக பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், மத்திய அரசின் பிரதிநிதி நியமிக்கப்படவில்லை; அவரை விரைவில் நியமிக்க வேண்டும்.

தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் ஒதுக்கீடை, அதிகரிக்க வேண்டும்.

தமிழகத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

ரயில்வே திட்டங்களுக்கு, கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என, முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்த உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Why we have voted for BJP -1 : Train Fare is About to Increase: பாரதீய ஜனதாவுக்கு ஏன் வாக்களித்தோம் - 1 :

0 comments
In our first post in the series of Why we have voted for BJP -1 , we are discussing the news from dinamalar about ரயில் கட்டண உயர்வு.

''அடுத்த மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பயணிகள் ரயில் கட்டண உயர்வு தவிர்க்க இயலாதது,'' என, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா D. V. Sadananda Gowda தெரிவித்துள்ளார்.

மத்திய ரயில்வே அமைச்சராக பதவியேற்ற பின், மங்களூருவுக்கு வருகை தந்த அமைச்சர் சதானந்த கவுடாவுக்கு, பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்தனர்.

பின், சதானந்த கவுடா, கூறியதாவது:முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே, இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், சரக்கு கட்டணம், 5 சதவீதம், பயணிகள் கட்டணம், 10 சதவீதம் உயர்த்தப்பட்டன.

ஆனால், அதை அமல்படுத்தவில்லை. ரயில்வே துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சியினர் செய்த தவறால், நான் பழி ஏற்க வேண்டிய நிலையில் உள்ளேன். 10 முதல், 15 சதவீதம் வரை உயர்த்தலாமா என, கருத்து கேட்டுள்ளேன். மக்களுக்கு, சுமை இல்லாத பட்ஜெட்டை கொடுக்க முயற்சித்து வருகிறேன். இவ்வாறு சதானந்த கவுடா கூறினார்.

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=988145

Please Subscripe to http://enntamilnadu.blogspot.com/ Tamil Blog to read more details about Why we have voted for BJP -1

30 Vagai Samayal: 30 Vagai Semiya Samaiyal - 30 வகை சேமியா சமையல்

0 comments
30 Vagai Samayal, this blog post is bringing you the method for 30 Vagai Semiya Samaiyal - 30 வகை சேமியா சமையல்

30 Vagai Samayal
30 Vagai Semiya Samaiyal 

சேமியா ஃப்ரூட் கீர் 

தேவையானவை:

சேமியா - அரை கப், பால் - 3 கப், சர்க்கரை - ஒன்றேகால் கப், பாதாம் பருப்பு - 8, முந்திரிப்பருப்பு - 8, பழக்கலவை - 1 கப், நெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை:

சேமியாவை சிறுதுண்டுகளாக ஆக்குங்கள். நெய்யுடன் கலந்து வறுத்துக் கொள்ளுங்கள் (வாணலியில் நெய்யைக் காயவைத்து, சேமியாவைப் போட்டு வறுத்தால் ஒரேமாதிரி வறுபடாது. முதலிலேயே சேமியாவில் நெய்யைப் பிசறிவைத்துவிட்டு வறுப்பது நல்லது). பாலை பொங்கக் காய்ச்சி, அதில் சேமியாவை சேருங்கள். பெரிய தீயில் 2 நிமிடம் வேகவிட்டு, தீயைக் குறைத்து நன்கு வேக விடுங்கள். சேமியா நன்கு வெந்தவுடன் சர்க்கரை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்கவிடுங்கள். அடுப்பிலிருந்து இறக்கி, பொடியாக நறுக்கிய பாதாம் முந்திரியை சேருங்கள். ஆறியவுடன் பழத் துண்டுகள், க்ரீம் சேர்த்து குளிர வைத்து பரிமாறுங்கள்.

கோவா சேமியா டிலைட் :

தேவையானவை:

சேமியா - அரை கப், கோவா - 50 கிராம், கேரட் - 1, முந்திரிப்பருப்பு - 10, சர்க்கரை - ஒன்றேகால் கப், நெய் - 4 டீஸ்பூன், ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன், வெள்ளரி விதை அல்லது சாரைப்பருப்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை:

கேரட்டைக் கழுவி, துருவிக்கொள்ளுங்கள். சேமியாவை சிறு துண்டுகளாக்கி நெய் சேர்த்து வறுத்தெடுங்கள் (2 நிமிடம்). ஒரு அடுப்பில் ஒன்றரை கப் தண்ணீரை கொதிக்கவிடுங்கள்.

மறு அடுப்பில் ஒரு கடாயில் நெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய முந்திரியைச் சேர்த்து, அரை நிமிடம் வறுத்து, கொதிக்கும் நீரை சேருங்கள். அதில் வறுத்த சேமியாவை சேர்த்து நன்கு வேகவிடுங்கள்.

சேமியா நன்கு வெந்த பின்னர் துருவிய கேரட்டை சேர்த்து, மேலும் சிறிது கிளறி சர்க்கரை, கோவா சேர்த்து கிளறுங்கள். சர்க்கரை சேர்ந்து நன்கு சுருண்டு வந்ததும், ஏலக்காய்தூள், வெள்ளரி விதை சேர்த்து நன்கு கிளறி சூடாக பரிமாறுங்கள்.

கொத்தமல்லி சேமியா :

தேவையானவை:

சேமியா - 1 கப், மல்லித்தழை - 1 கட்டு, தேங்காய் துருவல் - கால் கப், பச்சை மிளகாய் - 5, உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், புளி - நெல்லிகாய் அளவு, எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: 

கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

நெய்யுடன் சேமியாவை கலந்து கடாயில் வறுத்து தனியே எடுத்துக்கொள்ளுங்கள். 6 கப் தண்ணீரை காய வைத்து சேமியாவை சேர்த்து நன்கு வேக விட்டு வடியுங்கள்.

எண்ணெயைக் காய வைத்து உளுத்தம்பருப்பு சேர்த்து, சிறிது வறுத்து அதில் கீறிய பச்சை மிளகாய், தேங்காய் துருவல், சுத்தம் செய்த மல்லித்தழை, புளி சேர்த்து 2 நிமிடம் வதக்கி ஆற வைத்து அரையுங்கள்.

நெய்யை காய வைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, வறுத்து அரைத்த விழுதில் கொட்டுங்கள். இந்த விழுதுடன் உப்பையும் சேமியாவையும் கலந்து பரிமாறுங்கள்.

குறிப்பு: எப்போதுமே சேமியாவை வேகவைக்கும்போது, தண்ணீர் நன்கு கொதித்தபிறகுதான் சேமியாவைப் போடவேண்டும். அப்போதுதான் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் நன்கு வேகும்.

Read below for 30 vagai samaiyal blogpost's 30 வகை சேமியா சமையல்,

கறிவேப்பிலை சேமியா:

தேவையானவை:

சேமியா - 1 கப், கறிவேப்பிலை - 1 கப், தேங்காய் துருவல் - கால் கப், சிகப்பு மிளகாய் - 6, பச்சை மிளகாய் - 2, புளி - 1 சிறிய துண்டு, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 1 டீஸ்பூன், நெய் - 1 டீஸ்பூன்.

தாளிக்க: 

கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன்.

செய்முறை:

சேமியாவை நெய்யுடன் கலந்து சிறு தீயில் வைத்து 3 நிமிடம் வறுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதை 6 கப் தண்ணீரில் வேக வைத்து வடித்துக்கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காய வைத்து கறிவேப்பிலை, தேங்காய், மிளகாய், புளி சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள்.

ஆற விட்டு, உப்பு சேர்த்து நைஸாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து,

தாளிக்கும் பொருட்களை தாளித்து அரைத்த விழுதில் சேருங்கள். சேமியாவில் இந்த விழுதை நன்கு கலந்து பரிமாறுங்கள்.

சேமியா பாத் 

தேவையானவை:

சேமியா - அரை கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, பட்டாணி - அரை கப், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கு, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு.

விழுதாக அரைக்க: 

பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், பூண்டு - 5.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை:

சேமியாவுடன் 2 டீஸ்பூன் நெய்யை சேர்த்து பிசறி ஒரு கடாயில் 2 நிமிடம் வறுத்து வையுங்கள். மீதமுள்ள நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள்.

பின்னர் வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கி தக்காளி, பட்டாணி, அரைத்த விழுது, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும் ஒன்றரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

அதில் சேமியாவை சேர்த்து பெரிய தீயில் 2 நிமிடம் வேக விட்டு, தீயை குறைத்து மூடி போட்டு 6-8 நிமிடம் நன்கு வேக விட்டு மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.

சேமியா கிச்சடி 

தேவையானவை:

சேமியா - 1 கப், பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) - 1 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 5, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - ருசிக்கு.

தாளிக்க: 

கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை:

சேமியாவை 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்தெடுங்கள். மீதமுள்ள நெய், எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள்.

பொன்னிறமானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். பின்னர் காய்கறி, தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து காய்கறி வேகும் வரை வதக்குங்கள்.

அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் சேமியாவை சேர்த்து, பெரிய தீயில் 2 நிமிடம் வைத்து தீயைக் குறைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டு எடுங்கள்.

சேமியா பகளாபாத்

தேவையானவை:

சேமியா - 1 கப், புளிக்காத தயிர் - 2 கப், பால் - 1 கப், பெருங்காயம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 1 டீஸ்பூன், மல்லித்தழை - 1 டீஸ்பூன்.

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, திராட்சை - 12, எண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் 1 டீஸ்பூன் காய வைத்து சேமியாவை வறுத்தெடுங்கள். 6 கப் தண்ணீர் கொதிக்க விட்டு, அதில் சேமியாவை சேர்த்து வேக விட்டு வடித்து வையுங்கள்.

சூடாக இருக்கும்போதே அரைத்த விழுது, உப்பு, பெருங்காயம் சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.

நன்கு ஆறியவுடன் தயிர், பால், மல்லித்தழை, கறிவேப்பிலை சேருங்கள். எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களை தாளித்து சேர்த்து கலந்து குளிர வைத்து பரிமாறுங்கள்.

பேக்ட் சேமியா

தேவையானவை:

சேமியா -1 கப், பெரிய வெங்காயம் - 1, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 4, வெண்ணெய் - இரண்டரை டீஸ்பூன், சீஸ் - 4 கட்டி, உப்பு - ருசிக்கு, பால் - ஒன்றரை கப், மைதா - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

சேமியாவை 6 கப் கொதிக்கும் தண்ணீரில் வேக விட்டு வடியுங்கள். வெங்காயம், பூண்டு, மிளகாயை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். வெண்ணெயை உருக்கி, பூண்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின்னர் வெங்காயம், மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.

அதில் மைதாவை சேர்த்து, 1 நிமிடம் வதக்கி பால் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறுங்கள். கடைசியில் சேமியா, உப்பு சேர்த்து கிளறி, சிறிது வெண்ணெய் தடவிய பேக்கிங் பாத்திரத்தில் பரவினாற்போல் கொட்டுங்கள்.

அதன் மேல் சீஸ் கட்டியை துருவிப் போட்டு, மூடியால் மூடி, நடுத்தர சூட்டில் 15 நிமிடம் ‘பேக்’ செய்யுங்கள்.

ஓவன் இல்லாதவர்கள், குக்கருக்குள் டிரேயை வைத்து, கேஸ்கட், வெயிட் போடாமல் அடுப்பில் வைத்து, முக்கால் மணி நேரம் வைத்து ‘பேக்’ செய்யுங்கள்.

சேமியா பாயசம்

தேவையானவை:

சேமியா - அரை கப், பால் - 2 கப், பொடியாக நறுக்கிய முந்திரி - 10, ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - முக்கால் கப்.

அரைக்க: 

தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு - 6.


செய்முறை:

சேமியாவை ஒன்றரை கப் கொதிக்கும் நீரில் நன்கு வேகவிடுங்கள். வெந்ததும் சர்க்கரை, பால், அரைத்த விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து, ஏலக்காய்தூளும் சேர்த்து கிளறி பரிமாறுங்கள்.

சேமியா வாங்கிபாத்

தேவையனவை:

சேமியா - 1 கப், கத்திரிக்காய் - சிறியதாக 6, பெரிய வெங்காயம் - 1, புளி கரைசல் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

வறுத்து பொடிக்க:

காய்ந்த மிளகாய் - 8, தனியா - ஒன்றரை டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒன்றரை டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன் (ஒன்றாக வறுத்து பொடியுங்கள்).

செய்முறை:

கத்திரிக்காய், வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். 2 டீஸ்பூன் எண்ணெயில் சேமியாவை லேசாக வறுத்து 6 கப் கொதிக்கும் தண்ணீரில் வேக விட்டு வதக்குங்கள்.

நெய்யை காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து சிவந்ததும் வெங்காயம், புளி, உப்பு, மஞ்சள் தூள் கலந்து 2 நிமிடம் வதக்குங்கள். பின்னர் கத்திரிக்காய் சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கி, புளி தண்ணீர், உப்பு, அரைத்த தூள், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி சேமியாவை சேர்த்து கலந்து பரிமாறுங்கள்.

சேமியா புளியோதரை:

தேவையானவை:

சேமியா - 1 கப், சன்னா - கால் கப், புளி கரைசல் - முக்கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - ருசிக்கு, நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, முந்திரிப்பருப்பு - 6.

பொடிக்க: 

காய்ந்த மிளகாய் - 7, தனியா - 1 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், எள் - 1 டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

சன்னாவை 6 முதல் 8 மணி நேரம் வரை ஊற விட்டு, சிறிது உப்பு சேர்த்து வேக விட்டு வடியுங்கள்.

சேமியாவை 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வறுத்து, 6 கப் தண்ணீரில் வேக விட்டு வடியுங்கள். பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறு தீயில் நன்கு வறுத்து பொடியுங்கள்.

எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, அவை சிவந்ததும் புளி கரைசல், மஞ்சள்தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, உப்பு, சன்னா சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள்.

கடைசியில் சேமியா, அரைத்த மசாலாதூள் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

தக்காளி சேமியா:

தேவையானவை:

சேமியா - 1 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 4, பச்சை மிளகாய் - 4, மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது, உப்பு - ருசிக்கு.

தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், பட்டை - 1 துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

சேமியாவை 6 கப் கொதிக்கும் நீரில் சேர்த்து வேக விட்டு வடியுங்கள். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளுங்கள்.

எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். அத்துடன் நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்குங்கள்.

பின்னர் தக்காளி, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கி இறக்குங்கள். அதில் சேமியா, மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறுங்கள்.

சேமியா உப்புமா

தேவையானவை:

சேமியா - 2 கப், பெரிய வெங்காயம் - 2, கறிவேப்பிலை - சிறிது, மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவைக்கு.

தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வெங்காயத்தை நீளமாக நறுக்குங்கள்.

இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, சிட்டிகை உப்பு சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கி, 3 கப் தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். அதில் சேமியாவை சேர்த்து 2 நிமிடம் பெரிய தீயில் வேக விட்டு, பிறகு 5 நிமிடம் குறைந்த தீயில் மூடி போட்டு நன்கு வேகவிட்டு இறக்குங்கள். சூடாகப் பரிமாறுங்கள்.

சேமியா பிரியாணி

தேவையானவை:

சேமியா - 1 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, சற்று புளித்த தயிர் - அரை கப், இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 3, நறுக்கிய காய்கறி கலவை - அரை கப், புதினா, மல்லித்தழை - சிறிது, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - 1 டீஸ்பூன்.

தாளிக்க:

பட்டை, லவங்கம், ஏலக்காய் தலா - 1, எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

எண்ணெய், நெய்யைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். பின்னர் மெல்லிசாக நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள்.

வதங்கியதும் அதில் புதினா, மல்லித்தழை, அரைத்த விழுது சேர்த்து, பச்சை வாசனை போக வதக்குங்கள். தக்காளி, காய்கறி, உப்பு சேர்த்து காய் வேகும் வரை வதக்குங்கள்.

அதில் தயிர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு, பின்னர் இரண்டரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள். சேமியாவை சேர்த்து 2 நிமிடம் வேகவிட்டு, தீயை குறைத்துவைத்து மூடி 5 நிமிடம் வேக விட்டு இறக்குங்கள்.

சேமியா பிரதமன் 

தேவையானவை:

சேமியா - 1 கப், பாசிப்பருப்பு - அரை டீஸ்பூன், வெல்லம் - இரண்டரை கப், தேங்காய்ப் பால் - 1 கப், ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பாசிப்பருப்பை மலர வேகவையுங்கள். 5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை சேருங்கள். 2 நிமிடம் பெரிய தீயில் வைத்து, பிறகு தீயைக் குறைத்து நன்கு வேகவிடுங்கள்.

வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கரையவிடுங்கள். கொதித்ததும் வடிகட்டி பாசிப்பருப்புடன் சேமியாவில் சேர்த்து 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள்.

அத்துடன் தேங்காய்ப் பால், ஏலக்காய்தூள் சேருங்கள். நெய்யைக் காயவைத்து தேங்காயை சிவக்க வறுத்து சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.

கீரை சேமியா கட்லெட்

தேவையானவை:

சேமியா - 1 கப், கீரை (நறுக்கியது ) - 1 கப், உருளைக்கிழங்கு - 2, பிரெட் - 2 ஸ்லைஸ், மைதா - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது - ஒன்றரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, எலுமிச்சம்பழச் சாறு - சிறிதளவு, உப்பு - தேவைக்கு, மைதா - அரை கப், பிரெட் தூள் - தேவைக்கு ஏற்ப,
எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

கீரையை நன்கு அலசிப் பிழிந்துகொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். சேமியாவை கொதிக்கும் நீரில் வேக வைத்து வடித்துக்கொள்ளுங்கள்.

மைதா, பிரெட் தூள், எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். தேவையான வடிவங்களில் கட்லெட்டுகளாக செய்து கொள்ளுங்கள்.

மைதாவை தோசை மாவு பதத்தில் கரைத்து, அதில் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக நனைத்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சூப்பர் சுவையுடன் இருக்கும் இந்த கீரை சேமியா கட்லெட்.

சேமியா மஞ்சூரியன் பால்ஸ்

தேவையானவை:

சேமியா - 1 கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 5 பல், பெரிய வெங்காயம் - 1, கார்ன்ஃப்ளார் - 2 டேபிள்ஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு, ஆரஞ்சு ரெட் கலர் - கால் டீஸ்பூன்.

செய்முறை:

சேமியாவை கொதிக்கும் நீரில் போட்டு, வெந்ததும் வடித்து வைத்துக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்குங்கள்.

எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து, தேவையான தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். வித்தியாசமான ருசியில் மஞ்சூரியன் பால்ஸ் தயார்.

லெமன் சேமியா:

தேவையானவை:

சேமியா - 1 கப், எலுமிச்சம்பழச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1, இஞ்சி - 1, பூண்டு, கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவைக்கு.

தாளிக்க: 

கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

சேமியாவை கொதிக்கும் நீரில் வேக வைத்து வடியுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள்.

அவை பொன்னிறமானவுடன் இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து கிளறி சேமியாவில் சேருங்கள். அத்துடன் எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

சேமியா சீஸ் கிரிஸ்பீஸ்

தேவையானவை:

சேமியா - 1 கப், பனீர் - 200 கிராம், சீஸ் - 3 கட்டி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன், மிளகுதூள் - 1 டீஸ்பூன், பூண்டு - 2 டீஸ்பூன், மைதா - அரை கப், கார்ன்ஃப்ளார் - கால் கப், பிரெட் தூள் - தேவையானது, எண்ணெய் - வறுக்க, உப்பு - தேவைக்கு.

செய்முறை:

சேமியாவை 6 கப் கொதிக்கும் தண்ணீரில் நன்கு வேக விட்டு வடியுங்கள். சேமியாவுடன் துருவிய பனீர், சீஸ், பச்சை மிளகாய், மிளகுதூள், பூண்டு, உப்பு, கார்ன்ஃப்ளார் சேர்த்து நன்கு பிசையுங்கள்.

இந்தக் கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, வேண்டிய வடிவத்தில் செய்யுங்கள். மைதாவுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து கொள்ளுங்கள்.

சேமியா கிரிஸ்பீஸை அதில் நனைத்து, பிரெட் தூளில் புரட்டி காயும் எண்ணெயில் வறுத்தெடுங்கள். சூடாக பரிமாறுங்கள். குழந்தைகளின் ஃபேவரிட் ஆகிவிடும் இந்த கிரிஸ்பீஸ்.

சேமியா பக்கோடா 

தேவையானவை:

சேமியா - அரை கப், கடலைமாவு - 1 கப், பெரிய வெங்காயம் - 2, இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 5, சோம்பு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

2 கப் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை வேக வைத்து வடியுங்கள். ஆறியவுடன் அதில் கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, சோம்பு, உப்பு சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து பிசறுங்கள்.

எண்ணெயைக் காய வையுங்கள். ஒரு கரண்டி சூடான எண்ணெயை சேமியா கலவையில் சேர்த்து பிசைந்து, சிறு சிறு பக்கோடாக்களாக கிள்ளி எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

சேமியா பொங்கல்

தேவையானவை:

சேமியா - 2 கப், பாசிப்பருப்பு - அரை கப், பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கு, கறிவேப்பிலை - சிறிது, நெய் - 2 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: மிளகு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன், முந்திரி (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - 1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

1 டீஸ்பூன் நெய்யில் சேமியாவை சிறிது வறுத்தெடுங்கள். பருப்பை தண்ணீர் சேர்த்து குழைய வேகவையுங்கள். வெந்தவுடன் அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கும்போது உப்பு, 1 டீஸ்பூன் நெய் ஆகியவை சேர்த்து பெரிய தீயில் 2 நிமிடம் வேகவிட்டு, தீயை குறைத்து நன்கு வேக விடுங்கள்.

அதில் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்குங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி பொங்கலில் சேர்த்து கலந்து சூடாக பரிமாறுங்கள்.

சோயா சேமியா:

தேவையானவை:

சேமியா - 1 கப், சோயா நக்கட்ஸ் - 10, பெரிய வெங்காயம் - 2, வெங்காயத் தாள் - ஒரு கைப்பிடி, சோயா சாஸ் - 1 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

அரைக்க:
மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், பூண்டு - 6 பல்.

செய்முறை:

6 கப் தண்ணீரை கொதிக்க வைத்து சேமியாவை வேக வைத்து வடியுங்கள். கொதிக்கும் நீரில் சோயாவை போட்டு 10 நிமிடம் கழித்து பிழிந்து எடுத்து, பச்சை தண்ணீரில் இருமுறை அலசி பிழிந்துகொள்ளுங்கள். சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயத்தை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள். மிளகாய்தூள், பூண்டு சேர்த்து ஒன்றாக அரையுங்கள். எண்ணெயை நன்கு காய வைத்து அரைத்த விழுதை சேருங்கள். பச்சை வாசனை போனதும் வெங்காயம், சிறிது உப்பு, பிழிந்துவைத்திருக்கும் சோயா சேர்த்து நன்கு வதக்கி, சோயா சாஸ், சேமியா, வெங்காயத் தாள், தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

சேமியா சர்க்கரை பொங்கல்:

தேவையானவை:

சேமியா - 1 கப், பாசிப்பருப்பு - அரை கப், வெல்லம் - ஒன்றரை கப், நெய் - அரை கப், முந்திரிப்பருப்பு - 10, திராட்சை - 12, ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

பாசிப்பருப்பை மலர வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். நெய்யில் பாதியை காயவைத்து முந்திரி, திராட்சை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து 2 கப் தண்ணீர் சேருங்கள். தண்ணீர் கொதித்ததும் சேமியாவை சேர்த்து நன்கு வேகவிடுங்கள்.

வெல்லத்தை பொடித்து, அரை கப் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வடிகட்டி வெந்த சேமியாவில் சேருங்கள். அத்துடன் பாசிப்பருப்பையும் போட்டு, நன்கு சேர்ந்து வரும் வரை கிளறுங்கள். கடைசியில் ஏலக்காய்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

சேமியா உருளை பேட்டீஸ்:

தேவையானவை:

சேமியா - 1 கப், உருளைக்கிழங்கு - 3, பச்சை மிளகாய், இஞ்சி விழுது - 1 டீஸ்பூன், மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன், மாங்காய்தூள் - 1 டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கு, நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸ் - 1 கப், எண்ணெய் - வறுக்க.

செய்முறை:

சேமியாவை 6 கப் தண்ணீரில் வேக விட்டு வடியுங்கள். உருளைக்கிழங்கை வேகவிட்டு நன்கு மசியுங்கள்.
அதில் சேமியா, அரைத்த விழுது, மல்லி, மாங்காய்தூள், கார்ன்ஃப்ளார், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறிது சிறிதாக வேண்டிய வடிவத்தில் செய்யுங்கள்.

பின்னர் அதனை நன்றாக நொறுக்கிய கார்ன்ஃப்ளேக்ஸில் புரட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.

பருப்பு சேமியா:

தேவையானவை:

சேமியா - 1 கப், துவரம்பருப்பு - முக்கால் கப், தக்காளி - 3, தேங்காய் துருவல் - கால் கப், உப்பு - ருசிக்கு, கறிவேப்பிலை, மல்லிதழை - சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - சிறிது.

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயம் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: சேமியாவை 6 கப் தண்ணீரில் வேக வைத்து வடியுங்கள்.

துவரம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவையுங்கள். தக்காளியை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள்.

பின்னர் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வேக வைத்த பருப்பு, தேங்காய் துருவல், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடுங்கள். கடைசியில் மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, சேமியா சேர்த்து நன்கு கிளறி பரிமாறுங்கள்.

சேமியா இட்லி:

தேவையானவை:

சேமியா - அரை கப், ரவை - அரை கப், தேங்காய் துருவல் - கால் கப், ஆப்ப சோடா - கால் டீஸ்பூன், சற்று புளிப்பான தயிர் - 1 கப், உப்பு - ருசிக்கு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

தாளிக்க:

கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், நறுக்கிய முந்திரி - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, கறிவேப்பிலை - சிறிது, மல்லித்தழை - சிறிது, நெய் - டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

சேமியா, ரவையை 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் தனித்தனியே வறுத்து ஒன்றாக கலந்து வையுங்கள். எண்ணெய், நெய்யை காய வைத்து, கடுகு முதல் முந்திரி வரை சேர்த்து வறுத்து, பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து 1 நிமிடம் வதக்கி, ரவை சேமியா கலவையில் சேருங்கள்.

அத்துடன் உப்பு, தேங்காய் துருவல், தயிர் தேவையானால் சிறிது தண்ணீர் சோடா உப்பு சேர்த்து நன்கு இட்லி மாவு பதத்தில் கலந்துகொள்ளுங்கள். இட்லி தட்டுகளில் அல்லது சிறிய கப்புகளில் ஊற்றி நன்கு வேக விட்டு எடுங்கள். வித்தியாசமான, சுவையான டிபன் இந்த சேமியா இட்லி.

சேமியா காய்கறி கட்லெட்:

தேவையானவை:

சேமியா - அரை கப், உருளைக்கிழங்கு - 2, கேரட் - 1, பீட்ரூட் - 1, பட்டாணி - கால் கப், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - 1 துண்டு, புதினா - சிறிதளவு, மல்லித்தழை - சிறிதளவு, மைதா - அரை கப், பிரெட் தூள் - 1 கப், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன், உப்பு - ருசிக்கு, எண்ணெய் - பொரிக்க.

செய்முறை:

சேமியாவை 3 கப் கொதிக்கும் நீரில் போட்டு, நன்கு வேக விட்டு வடியுங்கள். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். 2 டீஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, புதினா, மல்லித்தழையைச் சேர்த்து 3 நிமிடம் வதக்குங்கள். பின்னர் துருவிய கேரட், பீட்ரூட்டையும், பட்டாணியையும் சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கி மசித்த உருளைக்கிழங்கு, சேமியா, கரம் மசாலா சேர்த்து நன்கு கலந்து கிளறி இறக்குங்கள்.

இக்கலவையை வேண்டிய வடிவத்தில் செய்து 1 கப் தண்ணீரில் கரைத்த மைதாவில் நனைத்தெடுத்து, பிரெட் தூளில் புரட்டி காயும் எண்ணெயில் பொரியுங்கள். சூடாக சாஸுடன் பரிமாறுங்கள்.

சேமியா தோசை 

தேவையானவை: சேமியா - 1 கப், தோசை மாவு - 4 கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 3, புதினா - கைப்பிடியளவு, மல்லித்தழை - கைப்பிடியளவு, இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், உப்பு - ருசிக்கு, எண்ணெய் - பொரிக்க.

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்.

செய்முறை:

சேமியாவை 6 கப் கொதிக்கும் நீரில் சேர்த்து நன்கு வேக விட்டு வடியுங்கள். எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள்.

அத்துடன் தக்காளி, மிளகாய்தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, சேமியா சேர்த்து கிளறி இறக்குங்கள். தோசைக் கல்லை காயவைத்து, மாவில் சிறிதளவு எடுத்து சற்று கனமாக தேயுங்கள்.

அதன் மேல் சேமியா கலவையை பரவினாற் போல் வைத்து புதினா, மல்லித்தழையை தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்கு வேக விட்டு திருப்பவும். மேலும் நன்கு வேக விட்டு எடுத்து, சூடாக பரிமாறுங்கள்.

சேமியா கேசரி: 

தேவையானவை:

சேமியா - 1 கப், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - கால் கப், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், ஆரஞ்சு ரெட் கலர் - ஒரு சிட்டிகை, முந்திரிப்பருப்பு - 10, திராட்சை - 10, ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன்.

செய்முறை:

எண்ணெய், நெய்யில் பாதி, பாதி எடுத்து, இரண்டையும் காய வைத்து, முந்திரி, திராட்சை சேர்த்து 1 நிமிடம் வறுத்தெடுங்கள். பின்னர் சேமியாவை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்துக்கொள்ளுங்கள்.

அதில் அரை கப் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள். ஆரஞ்சு ரெட் கலர் சேர்த்து, நன்கு வேக விட்டு தீயை குறைத்து, மூடிபோட்டு 2 நிமிடம் வேகவிடுங்கள். மூடியை திறந்து சர்க்கரை சேருங்கள். சர்க்கரை கரைந்து, மீண்டும் கெட்டியாகும் வரை கிளறி, கடைசியில் ஏலக்காய்தூள், மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்குங்கள்.

சேமியா நூடுல்ஸ்

தேவையானவை:

சேமியா - 1 கப், கேரட் - 1, பீன்ஸ் - 6, குடமிளகாய் - சிறியதாக 1, கோஸ் - 50 கிராம், பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 6 பல், வெங்காயத் தாள் - ஒரு கைப்பிடி, சோயா சாஸ் - அரை டீஸ்பூன், உப்பு -
தேவைக்கு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், மிளகுதூள் - 1 டீஸ்பூன்.

செய்முறை: 

6 கப் தண்ணீரை கொதிக்கவைத்து சேமியாவை வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள். காய்கறிகளை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்குங்கள் (பூண்டு, இஞ்சி, மிளகாய் உள்பட). எண்ணெயைக் காய வைத்து (புகைய), வெங்காயத் தாள் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேருங்கள். அத்துடன் உப்பு, சோயா சாஸ் சேர்த்து 5 நிமிடம் வதக்கி சேமியாவை சேருங்கள். அத்துடன், மிளகுதூள், வெங்காயத் தாள், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

Subscripe for more 30 Vagai Samayal when our it's updated in our 30 Vagai Semiya Samaiyal blog till then enjoy this 30 வகை சேமியா சமையல்.

Kerry Challenges Snowden: அமெரிக்க 'நீதியை' எதிர்கொள்ள ஸ்னோடனுக்கு கெர்ரி சவால்

0 comments

Edward Snowden
Edward Snowden
எட்வர்ட் ஸ்னோடன் அமெரிக்காவின் என்.பி.சி தொலைக்காட்சி சேனலுக்குக் கொடுத்த பேட்டியில், தன்னை ரஷ்யாவுக்கு தப்பியோடி புகலிடம் தேட வைத்தது அமெரிக்க அரசுதான் என்று கூறியிருந்ததை அடுத்து கெர்ரியின் இந்தக் கருத்துக்கள் வருகின்றன. 

Kerry Challenges Snowden to face the American Judges.

அமெரிக்க உளவுத் தகவல்களை ஊடகங்களுக்குக் கசியவிட்ட, எட்வர்ட் ஸ்னோடன், நீதியின் பிடியிலிருந்து தப்பியோடுபவர் என்று வர்ணித்த அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி, அவர் துணிந்து நாடு திரும்ப வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


தொடர்புடைய விடயங்கள் உளவுத் துறை உளவுத் துறை பகுப்பாய்வாளராக இருந்த ஸ்னோடன் கடந்த ஆண்டு பல உளவுத் தகவல்களை வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் பத்திரிகைகளுக்குக் கசியவிட்டு அமெரிக்காவுக்கு சங்கடத்தை உருவாக்கினார்.

இந்த ஆவணங்கள் மூலம், அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சி, உலகத் தலைவர்கள் பலரின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டது தெரியவந்தது. என்.பி.சிக்கு அளித்த பேட்டியில், ஸ்னோடன், தான் ஒரு பயிற்சி பெற்ற உளவாளிதான்,அமெரிக்கா கூறுவது போல கீழ் மட்டத்தில் பணிபுரியும் ஒரு பகுப்பாய்வாளர் அல்ல என்று கூறியிருந்தார்.

அமெரிக்காவின் சி.ஐ.ஏவுக்கும் தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்கும், வேறு அடையாளத்துடன் வெளிநாடுகளில் தான் பணி புரிந்ததாகவும் அவர் கூறினார். 'தேசபக்தன் நாட்டை விட்டு ஓடுவதா? -கெர்ரி எட்வர்ட் ஸ்னோடன் "குழம்பிப் போயிருக்கிறார்" என்று கூறிய ஜான் கெர்ரி, அவர் அமெரிக்காவுக்கு பெரிய சேதத்தை விளைவித்திருக்கிறார் என்றார்.

" ஒரு தேச பக்தன் நாட்டைவிட்டு ஓடக்கூடாது" என்ற ஜான் கெர்ரி, ஸ்னோடன் அமெரிக்காவுக்கு திரும்ப விரும்பினால், அடுத்த விமானத்தில் இன்றே நாம் அவரை கொண்டு வருவோம் என்றார்.

ஸ்னோடன் அமெரிக்காவை நம்புபவராக இருந்தால், அவர் அமெரிக்க நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஜான் கெர்ரி கூறினார்.

ஸ்னோடன் கடந்த ஆண்டு வெளியிட்ட தகவல்களை அடுத்து , அமெரிக்க உளவு நிறுவனங்கள் தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் முறை பற்றி பொதுத் தளத்தில் பெரும் விவாதம் ஒன்று நடந்தது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நீதிமன்றங்களின் அனுமதி இல்லாமல் தொலைபேசி நிறுவனங்களிடமிருந்து தொலைபேசி அழைப்புகள் குறித்த ஆவணங்களை உளவு நிறுவனங்கள் பெறத் தடை விதிக்க, அமெரிக்க நாடாளுமன்றத்தைக் கோரினார்.

இதையடுத்து அமெரிக்க பிரதிநிதிகள் அவை, கடந்த வாரம், இது போன்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி அதை செனட் அவைக்கு அனுப்பியிருக்கிறது.

Free Goat Tamilnadu by Jayalalitha: விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தால் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வருகிறது

0 comments
Add caption
தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 6 மாத வயதுடைய 4 ஆடுகள் (3 பெட்டை 1 ஆண்) வழங்கப்படுகிறது.மேலும் ஆடுகளுக்கு தீவனம் வாங்கவும், இருப்பிடக் கொட்டகை அமைக்கவும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. வாங்கும் இடத்தில் இருந்து கொண்டு செல்ல 150–ம், நோய் தாக்கி இறந்தால் இழப்பீடு பெறும் வகையில காப்பீடும் செய்யப்படுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் விலையில்லா வெள்ளாடு, செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள 237 கிராம ஊராட்சிகளில் ரூ.19 கோடி மதிப்பில் 14,991 பயனாளிகளுக்கு 59,964 விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வெள்ளாடுகள் 57,459 குட்டிகளை ஈன்றுள்ளன. 

உப்பிலியபுரம் ஒன்றியம், நாகநல்லூர் ஊராட்சியில் 71 குடும்பங்களுக்கு விலை யில்லா வெள்ளாடுகள் கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டுள்ளன. 

நாகநல்லூர் பயனாளி கலைச்செல்வி சுந்தர்ராஜன் கூறியதாவது:

நாங்கள் இந்த கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு எந்தவித வருமானமும் கிடையாது. எங்களுக்கு மொத்தம் 5 பெண் பிள்ளைகள் உள்ளன. நான்கு பெண்களுக்கு திருமணம் செய்து விட்டோம். மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் குழந்தை மட்டும் எங்களுடன் வசித்து வருகிறார். இந்த பெண்ணை வைத்து சிரமப்பட்டு வந்தோம். முதல்வர் எங்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கி உள்ளார். 

எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு ஆடு நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த நான்கு ஆடுகளும் நன்றாக வளர்ந்து உள்ளன. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் எங்கள் வருமானமும் இரட்டிப்பாகி உள்ளது. இன்னும் இரண்டு வருடத்தில் எங்களுக்கு 20 குட்டிகளுக்கு மேல் ஈனும் என்று எதிர்பார்க்கிறோம். ஏழைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கி பொருளாதாரம் மேம்பட வழிவகுத்துள்ளார். அதற்கு முதல்வருக்கு நன்றி. 

Narendira Modi's 10 Commandments: நரேந்திரமோடி அறிவித்துள்ள 10 முக்கிய திட்டங்கள்

0 comments
நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில், முக்கியமான 10 திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பின், இது குறித்து அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார் என டில்லி தகவல்கள் கூறுகின்றன. பிரதமராக பதவி ஏற்ற முதல் நாளில் இருந்தே நரேந்திரமோடி பரபரப்பாக செயலாற்ற துவங்கிவிட்டார்.

தனது தேர்தல் பிரசாரத்தின் போது, நாட்டு மக்களுக்கு என்னென்ன வாக்குறுதிகள் கொடுத்தாரோ, அதை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

முதற்கட்டமாக, தனது செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அமைச்சரவையை அமைத்துள்ளார். அடுத்ததாக, தற்போதுள்ள சூழ்நிலையில் நாட்டிற்கு மிக முக்கிய தேவையான திட்டங்களை தயாரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

நரேந்திரமோடி அறிவித்துள்ள 10 முக்கிய திட்டங்கள்

1. அதிகாரத்துவத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துதல்

 2. புதுமையான யோசனைகளை வரவேற்பதுடன், அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்ற அதிகாரம் அளித்தல்.

3. கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் மற்றும் சாலைகள் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை.

4. அரசின் இணைய ஏலத்தில் வெளிப்படை தன்மையை ஊக்குவித்தல்.

5. அமைச்சகங்களுக்கிடையே ஏற்படும் பிரச்னைகளை களைய புதிய அமைப்பு.

6. அரசு நிர்வாகத்தில், மக்கள் தொடர்பான விஷயங்களுக்கு தனி அமைப்பு.

7. பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை.

8. உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் சீரமைக்க நடவடிக்கை.

9. சரியான கால இடைவெளியில் கொள்கைகளை அமல்படுத்த நடவடிக்கை. 

10. அரசு கொள்கைகள், நிலைத்தன்மை மற்றும் நிலைநிறுத்தும் திறன் கொண்டதாக இருக்க ஏற்பாடு.

இந்த 10 கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என, தனது அமைச்சரவை சகாக்களை நரேந்திரமோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமரின் முதன்மை செயலாளர் நிரிபேந்திர மிஸ்ரா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், 'புதிய பிரதமரின் தலைமையில், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும் பொருட்டு. புதிய பொருளாதார கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன,' என்றார்.

Thanks to Dinamalar and you can read more about நரேந்திரமோடி அறிவித்துள்ள 10 முக்கிய திட்டங்கள் at http://www.dinamalar.com/news_detail.asp?id=986331

Todays INR Currency Rate: 29.05.2014

0 comments


As of  29.05.2014 INR Currency Rate against all the Leading Currencies has given below,


Currency UnitUnits per INRINR per Unit
GBPBritish Pound0.010298.3085
EUREuro0.012579.9894
USDUS Dollar0.01758.8438
AUDAustralian Dollar0.018354.6459
CADCanadian Dollar0.018554.1976
NZDNew Zealand Dollar0.0249.8836
CHFSwiss Franc0.015365.5224
JPYJapanese Yen1.72610.5793
INRIndian Rupee11
AEDUnited Arab Emirates Dirham0.062416.0337
BRLBrazilian Real0.03826.35
BGNBulgarian Lev0.024440.9223
DKKDanish Krone0.093310.7224
EGPEgyptian Pound0.12158.2302
HKDHong Kong Dollar0.13187.5898
HUFHungarian Forint3.79660.2634
IDRIndonesian Rupiah197.560.0051
ILSIsraeli Sheqel0.059116.9296
IQDIraqi Dinar19.7830.0505
IRRIran Rial433.640.0023
ISKIcelandic Krona1.92040.5207
KESKenyan Shilling1.4930.6698
KRWSouth Korean Won17.3390.0577
KWDKuwaiti Dinar0.0048208.6654
LKRSri Lankan Rupee2.21650.4512
MADMoroccan Dirham0.14017.1386
MURMauritius Rupee0.51521.9411
MXNMexican Peso0.21874.5733
MYRMalaysian Ringgit0.054718.2682
NOKNorwegian Krone0.10149.8613
PHPPhilippine Peso0.74621.34
PLNPolish Zloty0.051819.2982
QARQatari Riyal0.061916.1677
RUBRussian Rouble0.58841.6996
SARSaudi Riyal0.063715.6942
SEKSwedish Krona0.11298.8591
SGDSingapore Dollar0.021346.9002
THBThai Baht0.55621.7979
TRYTurkish Lira0.035728.0386
TWDTaiwan Dollar0.51141.9553
ZARSouth African Rand0.1785.6169
Subscribe for more INR Currency Rate And Exchange Rates. 

திருமதி ஸ்ம்ரிதீ இராணி: Smirthi Irani Educational Qualification Dilemma

0 comments
கடந்த இரண்டு நாட்களாக விவாதிக்கப்பட்டு வரும் ஸ்ம்ரிதீ இராணி அவர்களின் படிப்பு சம்பந்தமான விவாதங்கள் மற்றுமோர் சந்தேகத்தை என் முன் கொண்டு வருகிறது.

மனிதவள மேம்பாட்டுத் துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்ம்ரிதீ இராணி அவர்களின் வருட மற்றும் வருட தேர்தல் பிரமானப் பத்திரத்தின் பிரதிகள் இங்கே இணைக்ப்பட்டுள்ளது.

Smirthi Irani Educational Qualification

தன்னுடைய மிகப்பெரிய அரசியல் வாழ்விற்கு முகாந்திரம் தேடும் திருவாளர்.#நாமோ அவர்கள் என்ன சொல்லப்போகிறார். மனிதவள மேம்பாட்டுத் துறையின் அமைச்சர் பொறுப்பு திருமதி ஸ்ம்ரிதீ இராணி அவர்களுக்கு எவ்வாறு வழங்கப்பட்டது .திரு நாமோ அவர்கள் மட்டுமே இதற்க்கு பதிலளிக்க முடியும். செய்வாரா அவர்

க்ரேப்ஸ் ஆரஞ்ச் மில்க் ஷேக் | Grapes Orange Milk Shake

0 comments
க்ரேப்ஸ் ஆரஞ்ச் மில்க் ஷேக்

க்ரேப்ஸ் ஆரஞ்ச் மில்க் ஷேக்  தேவையானவை :

Grape-Orange Milk Shake

திராக்ஷைச் சாறு - 2 டீஸ்பூன் = ஒரு கைப்பிடி பழத்தை அரைத்து வடிகட்டவும் ஆரஞ்சுச் சாறு - 1/3 கப் ( இரண்டு பழங்களைப் பிழியவும். பால் பவுடர் - 4 டீஸ்பூன் பொடித்த ஜீனி - 4 டீஸ்பூன்

க்ரேப்ஸ் ஆரஞ்ச் மில்க் ஷேக்  செய்முறை:

இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரை கப் தண்ணீர் அல்லது கால் கப் தண்ணீரும் 4 ஐஸ்துண்டங்களும் போட்டு நன்கு அடித்து கண்ணாடி டம்ளர்களில் ஊற்றிக் கொடுக்கவும்.


நாமோ: தேர்தல் வெற்றி ஒரு சிறப்புப் பார்வை

0 comments
இந்திய அரசியல் தலைவர்களில் விதவிமான உடைகளில் அசத்தும் அரசியல்வாதி யார் என்று கேட்டால், சின்னக்குழந்தைகள் கூட சொல்லும், ‘நரேந்திர மோடி’ என்று.
ஆமாம். விதவிதமாக உடுத்துவதில் ஆர்வம் காட்டும் நரேந்திர மோடிக்கான உடைகளை வடிவமைப்பது யார் தெரியுமா? ஆமதாபாத்தை சேர்ந்த பிபின், ஜிதேந்திரா சவுகான். 25 ஆண்டுகளாக மோடிக்கு இவர்கள்தான் உடைகளை வடிவமைத்து தருகிறார்கள். சரியான அளவில், வடிவமைப்பில் உடைகள் அணிய வேண்டும் என்பதில் மோடி மிகுந்த ஆர்வம் காட்டுவாராம்.
‘‘கண்கள், குரல், உடைகள் இந்த மூன்றிலும் நான் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று ஒரு முறை மோடிஜி என்னிடம் கூறினார்’’ என்கிறார் பிபின்.


ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பிரசாரகராக இருந்தகாலம்தொட்டு, ஏறத்தாழ 30 ஆண்டுகளாக மோடிக்கு பிபின், ஜிதேந்திரா சவுகான்தான் உடைகள் வடிவமைத்து தருகிறார்கள். அரசியல், ஆட்சி என்று எப்போதுமே மோடி பரப்பாக இருப்பதால் அடிக்கடி அவரை சந்திப்பது சாத்தியமில்லை என்றாலும் வருடத்துக்கு இரண்டு முறை சந்தித்து உடை வடிவமைப்பு, மாறிவரும் பேஷன்கள், செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுத்து விடுவார்கள்.
மோடியின் ‘டிரேட் மார்க்’ உடை அரைக்கை குர்தா, சுடிதார். எப்படி இந்த உடை மீது மோடிக்கு நாட்டம் வந்தது? துறவிபோல சுற்றித்திரிந்த காலத்தில் கையில் ஒரு துணிப்பையைத்தான் மோடி எடுத்துச்செல்வார். அதில் அரைக்கை குர்தாக்கள் என்றால் கூடுதலான எண்ணிக்கையில் வைக்கலாம் என்பதாலும், அவரே உடைகளை சலவை செய்து வந்ததால் சலவைக்கும் எளிது என்பதாலும் அரைக்கை குர்தாக்களை விரும்பி அணிய ஆரம்பித்தார்.
இப்போது இந்த ‘மோடி குர்தா’ பேஷனாகி விட்டதாம். இந்த பிபின், ஜிதேந்திரா சவுகான் சகோதரர்கள் மோடியின் அனுமதியுடன் ‘மோடி குர்தா’ என்ற பெயரில் வடிவமைத்து வியாபாரம் பட்டையை கிளப்புகிறதாம். இப்போது அவர் பிரதமராகி விட்டதால் அதன் விற்பனை இரு மடங்காகி விடும் என எதிர்பார்க்கிறார்கள்.
ஒரு நாளில் எத்தனை விழாக்கள், நிகழ்ச்சிகள் என்றாலும் அத்தனைக்கும் விதவிதமான உடைகள்தான் மோடி அணிவார்.
மோடிக்கு கதர், லினன், பகல்பூர் பட்டுத்துணிகளில் உடைகள் வடிவமைத்து அணிவதில்தான் கொள்ளை ஆசை.
ஜாக்கெட், அங்கவஸ்திரம், டி சர்ட், சூட்டுகள் அணியவும் மோடிக்கு பிடிக்கும் என்கிறார்கள் பிபின், ஜிதேந்திரா சவுகான் சகோதரர்கள். தனக்கு தேவையான அங்க வஸ்திரங்களை அவரே தனிப்பட்ட முறையில் இன்றைக்கும் தேர்வு செய்வாராம்.
ஆரம்ப காலத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்ட குர்தாக்களில் ஆர்வம் காட்டிய மோடி இப்போது ஆர்வம் காட்டுவது சாதாரண குர்தா. பெரும்பாலும் காவி, வெள்ளை நிற குர்தாக்களை அணிந்து வந்த மோடி இப்போதுதான் பிற நிற குர்தாக்களையும் விரும்பி அணிகிறார். எத்தனை பரபரப்புக்கு மத்தியிலும் மோடி தான் அணிகிற உடையின் நிறம், துணி, வடிவமைப்பு என ஒவ்வொன்றிலும் அக்கறை செலுத்த தவறுவதே இல்லை என்கிறார்கள் பிபின், ஜிதேந்திரா சவுகான்.


How to Stop Pop-up's: இணையதளங்களில் பாப் அப் ( Pop-Up )விளம்பரங்களைத் தடுப்பது எப்படி ?

0 comments
இணையதளங்களில் பாப் அப் ( Pop-Up )விளம்பரங்களைத் தடுப்பது எப்படி:


ஆர்வத்துடனும் தேடும் நோக்கத்துடனும் நாம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் நமக்கு எரிச்சல் ஊட்டும் வகையில் விளம்பரங்கள் திடீர் திடீரென தலை தூக்கி அது வேண்டுமா? இது வேண்டுமா? எனக் கேட்டு நம் ஆப்ஷனையும் கேட்டு தொல்லை கொடுக்கும். ஆரம்பத்தில் இவை வரத் தொடங்கிய போது தகவல்களுடன் நாம் இவற்றையும் ரசித்தோம். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இந்த விளம்பரங்கள் அதிக எண்ணிக்கையில் வருகையில் இணைய தொடர்பை மூடிவிடும் உச்ச நிலை வரை சென்று வந்தோம்.
                                       

இதற்காகவே பல பிரவுசர்களில் இந்த பாப் அப் விளம்பரங்களைத் தடுக்கும் டூல்கள் தரப்பட்டுள்ளன. இன்றைய நிலையில் இவற்றைத் தடுக்கும் வகையில் நமக்கு என்ன என்ன வசதிகள் உள்ளன என்று காணலாம்.

1. விண்டோஸ் + சர்வீஸ் பேக் 2+ இன்டர்நெட் எக்ஸ்புளோரர்

இந்த மூன்றின் இணைப்பில் விளம்பரங்களைத் தடுக்க வசதி தரப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிலேயே தடை செய்திடும் டூல் தரப்பட்டுள்ளது. இதனை எளிதாக செட் செய்திடலாம். Tools மெனு சென்று மீது popup blocker கிளிக் செய்து பாப் அப் பிளாக்கர் எப்படி செயல்பட வேண்டும் என்பதனை செட் செய்திடலாம். சில தளங்கள் தரும் விளம்பரங்கள் மற்றும் பிற தகவல்களை நாம் விரும்பலாம். அதற்கேற்ற வகையில் popup blocker கிளிக் செய்து கிடைக்கும் டயலாக் பாக்ஸில் நம் விருப்பம் போல எந்த தளங்களுக்கான தடைகளை நீக்கலாம் என்பதனையும் செட் செய்திடலாம். இது சர்வீஸ் பேக் 2 நீங்கள் உங்கள் சிஸ்டத்தில் டவுண்லோட் செய்து இயக்கி இருந்தால் மட்டுமே கிடைக்கும். இந்த சர்வீஸ் பேக் தரும் அருமையான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வசதி இதுவாகும்.

2. வேறு பிரவுசர்கள்

இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் சர்வீஸ் பேக் 2 மூலமாக மைக்ரோசாப்ட் நிறுவனம் பாப் அப் பிளாக்கர் டூலினைத் தருவதற்கு முன்பே பல பிரவுசர்களில் பாப் அப் பிளாக்கர்கள் தரப்பட்டன. எனவே அந்த பிரவுசர்களையும் நீங்கள் பயன்படுத்தலாம். இந்த வகையில் அதிகம் புகழப் பெற்ற மொஸில்லாவின் பயர்பாக்ஸ் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பயர்பாக்ஸ் வெளிவந்த போது இதன் பல புதிய வசதிகளுக்காக பலரின் பாராட்டைப் பெற்றது. பாப் அப் பிளாக்கர், டேப் பிரவுசிங் ஆகியவை மிக அதிகமாகப் பேசப்பட்டன. அவற்றின் செயல்பாடும் நிறைவைத் தருகின்றன. 2002 ஆம் ஆண்டு வெளியான கிரேஸி பிரவுசர் (Crazy Browser) தொகுப்பும் திறமையாகச் செயல்படும் பாப் அப் பிளாக்கரைக் கொண்டுள்ளது. இதிலும் இந்த டூல் மிகத் திறமையாகச் செயல்படுகிறது.

3. பிரவுசர் டூல்பார்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புடன் இணைந்து செயல்படும் வகையில் பல டூல் பார்களைத் தருவது இன்றைய இணைய தளங்களின் ஒரு செயலாக உள்ளது. அந்த வகையில் பல தளங்களில் பாப் அப் பிளாக்கர்கள் கிடைக்கின்றன. கூகுள், எம்.எஸ்.என். மற்றும் யாஹூ இவற்றில் குறிப்பிடத்தக்கன. இவற்றை எளிதாக இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் இணைத்துவிடலாம்.

இவற்றை இணைக்கையில் இந்த தளங்கள் லைசன்ஸ் ஒப்பந்தம் என்று சொல்லி நீளமான ஒரு டாகுமெண்ட் ஒன்றைத் தருவார்கள். அதனைச் சிரமப்பட்டுத்தான் படிக்க வேண்டும். படித்த பின் கண் டாக்டரிடம் நிச்சயம் செல்ல வேண்டும். அவ்வளவு சிறிய அளவிலான எழுத்துக்களில் இவை இருக்கும்.இவை விளம்பரங்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்பட்டாலும் இன்னொரு சின்ன பிரச்சினை உள்ளது. இந்த டூல்பார்கள் உங்களின் இணையத் தேடல் குறித்த தகவல்களைச் சேர்த்துக் கொண்டே இருக்கும். மேலும் உங்கள் பெர்சனல் தகவல்களையும் எடுத்து தனக்குப் பயன்பட வைத்துக் கொள்ளும். இந்த விபரங்கள் தான் அந்த லைசன்ஸ் ஒப்பந்தத்தில் இருக்கும். பரவாயில்லை என்றால் இந்த டூல்களை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

4. பாப் அப் பிளாக்கர் சாப்ட்வேர்

பல சாப்ட்வேர் நிறுவனங்கள் கூடுதல் வசதிகள் பலவற்றுடன் பாப் அப் பிளாக்கர் சாப்ட்வேர் புரோகிராம்களைத் தயாரித்து இணையம் வழியே விற்பனை செய்கின்றன. குறிப்பிட்ட காலத்திற்கு, ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள், இவற்றை இலவசமாகப் பயன்படுத்தும் உரிமையும் வழங்கப்படும். எனவே இவற்றைக் கட்டணம் செலுத்தி வாங்காவிட்டாலும் இலவச காலத்தில் பயன்படுத்தி இவற்றின் தன்மையைப் பார்க்கலாம்.

5. இணைய சேவை நிறுவனம் தரும் வசதிகள்

இன்டர்நெட் சர்வீஸ் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவும் கூடுதல் கட்டணம் பெற்றும் இத்தகைய பாப் அப் பிளாக்கர் புரோகிராம்களைத் தருகின்றன. இவற்றையும் பயன்படுத்தலாம். இவ்வாறு தடைகளை ஏற்படுத்திய பின்னர் குறிப்பிட்ட தளங்களைப் பார்க்கையில் அவை தரும் பாப் அப் விண்டோவினை அப்போது மட்டும் பார்க்க வேண்டும் என விரும்பினால் அதற்கும் பிரவுசர்களில் வசதி தரப்படுகிறது. சில பிரவுசர்கள் இந்த தளம் ஒரு பாப் அப் விண்டோவினைத் தருகிறது. அதனை அனுமதிக்கவா? என்று கேள்வி எழுப்பும். பார்க்க விரும்பினால் அப்போதைக்கு மட்டும் அனுமதிக்கலாம்.

முடியாது என்று தோன்றும் அபிப்பிராயத்திற்கு அடி பணியாதீர்கள். பார்வையை விரிவுபடுத்துங்கள்

0 comments
முன்னொரு காலத்தில் சீனா வில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர் மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதி க அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன்தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவி த்தான்.

மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபார மா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒ ரு சீப்பைக் கூட விற்க முடியா தே என்று நினைத்தனர். ஆனா ல் பின் மூவரும் முயற்சி எடுப் பது என்று முடிவு செய்தனர். அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கொடுத்த அந்த வியா பாரி அது முடிந்தவுடன் மகன்களை அழைத்து அவர்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்று கேட்டான்.

ஓரு மகன் சொன்னான். “நான் இரண்டு சீப்புகள் புத்த மடால யத்திற்கு விற்றேன்” வியாபாரி கேட்டான். “எப்படி?” “புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோ கிக்கலாம் என்று சொ ல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குக ளுக்கு அது சரியென் றுபட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வா ங்கினார்கள்:”

இன்னொரு மகன் சொன்னான். “நான் பத்து சீப்புகள் விற் பனை செய்தேன்” வியாபாரி ஆச்சரியத்துடன் கேட்டான். “எப்படி?” “வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடால யத்திற்குப் போபவர்கள் தலைமுடியெல்லாம் பெ ரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்ப டிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்த ருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத் தில் சொன்னேன். ஒரு பெரிய க ண்ணாடியும் சில சீப்புகளும் வை த்தால்அவர்கள் தங்கள் தலை முடியைச் சரி செய்து கொண்டு புத்தரை தரிசிக்க செல்வது நன் றாக இருக்கும் என்ற ஆலோச னையும் சொன்னேன். ஒத்துக் கொண்டு பத்து சீப்புகள் வாங்கி னார்கள்” வியாபாரி அந்த மகனைப் பாராட் டினான்.

மூன்றாம் மகன் சொன்னான். “நான் ஆயிரம் சீப்புகள் விற்ப னை செய்தேன்” வியாபாரி ஆச்சரியத்தின் எல் லைக்கே சென்றான். “எப்படி?” “அந்த புத்த மடாலயத்திற்கு ஏராளமானோர் வந்து பொரு ளுதவி செய்கிறார்கள். அவர்க ள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத் தும் வண்ணம் அவர்களுக்கு ஏ தாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் அது மேலும் பல ரும் புத்த மடாலயத்திற்கு உத வி செய்யத்தூண்ட உதவும் என் றேன். அந்த மடாலயத் தலைவ ர் என்ன நினைவுப் பரிசு தரலா என்று மடாலயத் தலைவர் கேட்டார்.

நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப் புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உப யோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தி னமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும், அந்த உபதேச ங்கள் அவர்களைத் தின மும் வழிநடத்துபவையாக வும் இருக்கும் என்று தெரி வித்தேன். அது நல்ல யோ சனை என்று நினைத்த மடாலயத் தலைவர் உடனடி யா க அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்” அந்த வியாபாரி எந்த மகனிடம் தன் வியாபாரத்தை ஒப்படைத்தார் என் று சொல்ல வேண்டியதில்லை.

மொட்டை பிக்குகளிடம் சீப்பு விற்கப் போவது கண்டிப்பாக ஆகாத வே லை என்று நினைப்பது தான் பொது வாக நாம் காணக்கூடிய மனோபா வம். விதி சில சமயங்களில் நம்மை க் கொண்டு சேர்க்கும் சூழ்நிலையும் கிட்டத்தட்ட இதே போலத் தான் இருக்கும். அதிலிருந்து மீள் வதற்கு வழியே இல்லை என்று முதலில் தோன்றும். ஆனால் அதை ஒப்புக் கொண்டு முடங்கி நிற்போமானால் நாம் தோ ல்வியை ஒப்புக் கொண்டு விட்டோம் என்பது பொருள்.

அந்த வியாபாரியின் மகன்கள் ஏதாவது முயற்சி செய்ய வேண்டும் என்று தீர்மானித்தது புத்திசாலித்தனமான செயல். நாமும் நாம் இருக்கும் அந்த மோசமான சூழ்நி லைக்குத்தீர்வே இல்லை என்று ஆரம்பத்தில் தோ ன்றினாலும் ஏதாவது செய்து நல்ல தீர்வைக் காண வேண்டும் என்று தீர்மானிப்பதுவே அறிவு.

முயற்சிகளிலும் பல வகை உண்டு என்பதற்கு வியாபாரி யின் மூன்று மகன்கள் முயற்சிகளே உதாரணம். ஒரு மகன் புத்த பிக்குகளிற்குத் தலை வார சீப்பு பயன்படாவிட் டால் வேறெதற்காவது பயன் படுமா என்று யோசித்ததன் ப லனாக இரண்டு சீப்புகள் அவ னால் விற்க முடிந்தது.

புத்த பிக் குகளுக்கு சீப்பு பயன்படாமல் போனாலும் அவர்களைச் சார் ந்தவர்களுக்கு சீப்புபயன்படுமா என்று இன்னொரு மகன் யோசி த்ததால் அந்த புத்த மடாலயத் தின் முன்புறம் சில சீப்புகள் வைத்து பக்தர்கள் தலைமுடியை முறையாக வாரிக் கொண்டு உள்ளே நுழைய உதவியாக பத் து சீப்புகள் விற்க முடிந் தது. ஆனால் இந்த இரண்டு மகன்களுடைய முயற்சி யாலும் தொடர்ந்து அந்த புத்த மடாலயத்திற்கு சீப் பு விற்க வழியில்லை. அ வர்களுடைய விற்பனை ஒரு முறையோடு முடிந்து போய் விட்டது.

மூன்றாம் மகன் கூட இரண்டாம் மகன் போலவே புத்த பிக்கு களுக்குப் பயனில்லா விட்டா லும் அவர்களுடன் சம்பந்தப் படும் மற்றவர்களுக்குப் பயன் படுமல்லவா என்கிற சிந்தனை யைத் தான் செய்தான். அந்த வெறும் சீப்பை புத்தரின் உபதே சங்களைச் செதுக்கி அதை அவ ர்கள் விரும்பும் வண்ணம் உயர் த்தி அதை நன்கொடை வழங்கு ம் பக்தர்களுக்கு புத்தரின் ஆசி யாக மாற்றி விற்பனை செய்தா ன். அவனுடைய வித்தியாசமான சிந்தனை அதற்காக அவன் எடுத்துக்கொண்ட உழைப்பு எல் லாம் மற்றவர்களை மிஞ்சும் வ ண்ணம் வெற்றி பெற்றது.

மேலு ம் மற்ற இருவரைப் போல் இவ னுடைய விற்பனை ஒருமுறை யோடு முடிகிற விற்பனை அல்ல . புத்த மடாலயத்திற்கு நன்கொ டைகள் தருகிறவர்கள்அதிகரிக்க அதிகரிக்க இவன் விற்பனையும் அதிகரிக்கும். ஒரு சூழ்நிலையை ஒரே நேர் கோணத்தில் பார்ப்பது இரண்டு சீப்பு விற்ற மகனைப் போல அற்ப விளைவுகளையே ஏற்படுத்தும். பார்வையை சற்று வி ரிவுபடுத்தி வேறு கோணங் களிலும் சிந்தித்து செயல்ப டுவது பத்து சீப்பு விற்றவன் முயற்சி போல நல்ல வி ளைவுகளை அதிகரிக்கும்.

மேலும் பல கோணங்களி லும் சிந்தித்து, தன் திறமை யையும் உழைப்பையும் சே ர்த்து முயற்சி செய்பவன் அடையும் நன்மைகள் ஆயிரம் சீப்புகள் விற்பனை செய்தவன் முயற்சியைப் போல பல மட ங்கு அதிகரிக்கும். ஆரம்பத் தில் வழியே இல்லை என் று தோன்றியது போய்புதிய பிரதேசங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும் வாய் ப்பாக அமையும்.

எனவே எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் ம னம் துவண்டு விடாதீர்கள். முடியாது என்று தோன்றும் ஆரம்ப அபிப்பிராயத்திற்கு அடிபணியாதீர்கள். பார் வையை விரிவுபடுத்துங்க ள்.

புதிய புதிய கோணங் களில் சிந்தி யுங்கள். சில சிறிய மாற்றங்க ளால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியுமா என்று யோசியுங்கள். பொறுமை யுடனும், நம்பிக்கையுடனு ம், துடிப்புடனும் முயன் றால் அந்தக் கடினமான சூழ்நிலையே நீங்கள் அடையப் போ கும் அளப்பரிய வெற்றிகளுக்கு அஸ்திவாரமாக அமையக் கூடும்.

Tamilnadu Directorate of Technical Education: TDTE Results

0 comments
Tamilnadu Directorate of Technical Education announced Diploma Technical courses examination results at the official website of  Tamilnadu Directorate of Technical Education in http://www.tndte.org.in/.

More details in the results of Tamilnadu Directorate of Technical Education can be directly accessed from the below given link,

http://www.tndte.info/2014/05/tndte-diploma-results-april-2014.html

The Tamilnadu Directorate of Technical Education is no way connected with http://www.tndte.info/2014/05/tndte-diploma-results-april-2014.html and the official website for results is  http://www.tndte.com/result/

இந்தியப் பொருளாதாரம்: மோடி இதை சரி செய்வார்

0 comments
மனித வாழ்வுக்கு  அடிப்படையாக விளங்குவது  பொருளாதாரமே ஆகும்.  எனவே நாட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கும், முன்னேற்றத்துக்கும் ஏதுவான  சூழ்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது அரசின் தலையாய கடமையாகிறது. மேலும் அதற்குத் தேவையான அடித்தளங்களை அமைத்து, பொருத்தமான கொள்கைகளை வகுத்துக் கொடுப்பது ஒவ்வொரு அரசும் செய்ய வேண்டிய  அத்தியாவசியப் பணியாகும்.

இந்தியப் பொருளாதாரத்துக்கென ஒரு நீண்ட பாரம்பரியம் உள்ளது. உலகின் முதல் பொருளாதார நூலான அர்த்த சாஸ்திரத்தில், பொருளாதாரம் வலிமையாக இருக்க வேண்டியது ஒரு நாட்டுக்கு எவ்வளவு அவசியம், பொருளாதாரம் நன்கு செயல்படுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம்  தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது.Indian economy



காலனி ஆதிக்கக் காலத்தில் தான் இந்தியாஉள்ளிட்ட பல பொருளாதாரங்கள் பெரும் சிதைவுகளுக்கு உள்ளாயின.  எனவே பத்தொன்பதாவது நூற்றாண்டிலேயே  இந்தியப் பொருளாதாரம் பெருமளவு நசிந்து போனது. அதனால் சுதந்திரம்  வாங்கும் முன்னரே  மிகவும் ஏழை நாடாக ஆகியிருந்தது.

சுதந்திரத்துக்குப் பின்னர் கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி மக்கள் கடுமையாக உழைக்கத் தொடங்கினர். பலவிதமான சிரமங்களுக்கிடையிலும் முடிந்த வரை அதிக அளவில் சேமிப்புகளை மேற்கொண்டனர். வெவ்வேறு  புதிய தொழில்களில் நுழைந்தனர்.

இந்தியக் கலாசாரத்தில் நமது நாட்டுக்கெனப் பல தனித்தன்மைகள் உள்ளன. அவையே பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏதுவாக அமைகின்றன. நம்முடைய குடும்ப அமைப்பு, எளிய வாழ்க்கை முறை, சேமிக்கும் குணம், உறவுகள் சார்ந்த வாழ்க்கை,  தொழில் முனையும் தன்மை எனப் பாரம்பரியமான குணங்கள் பலவும் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவும் வகையிலேயே  அமைந்துள்ளன.

இந்தத் தன்மைகளால் மக்கள் சுய கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து, தங்களின் குடும்பங்கள் முன்னேற எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கின்றனர். அதனால் நாட்டின் சேமிப்புகள் மொத்த பொருளாதார உற்பத்தியில்  கடந்த சில வருடங்களாக முப்பது விழுக்காட்டுக்கும் அதிகமாக இருந்து வருகின்றன. சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கின்ற உந்துதலால், மக்கள் பலவிதமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.  எனவே உலகின் பணக்கார நாடுகளை விட சொந்தத் தொழில் செய்பவர்கள் நமது நாட்டில் தான் மிக அதிகமாக உள்ளனர்.

இந்தியாவில் எட்டரை கோடி பேர் தொழில் முனைவோராக உள்ளதாக லண்டன் மேலாண்மை நிறுவனம்  சொல்கிறது.  இது உலக அளவில் அதிகமானதாகும்.  அப்படித் தான் நாடு முழுவதும் பல விதமான சிறு, குறு மட்டும் நடுத்தரத் தொழில்கள் பரவிக் கிடக்கின்றன. அவை பெரும்பாலும் சாதாரண மக்களால் ஆரம்பிக்கப்பட்டு, அரசு மற்றும் நிதி நிறுவனங்களின் உதவிகள் அதிகமின்றி நடத்தப்படுபவை.

அதனால் தான் அரசுகளின் அணுகுமுறைகளிலும் செயல்பாடுகளிலும் பலவிதமான குறைபாடுகள் இருந்த போதும், இந்தியப் பொருளாதாரம் சமூகங்களால் பெருமளவு முன்னெடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பலன்களைப் பெறும் வகையில் நாட்டுக்குப் பொருத்தமான கொள்கைகளை அரசாங்கங்கள்  வகுக்கத் தவறிவரும் போதும், நாடு முன்னோக்கிச் சென்று கொண்டுள்ளது. ஆகையால் சுதந்திரம் பெற்று ஒரு அறுபது வருட காலத்தில் இந்தியா உலக அளவில் ஒரு முன்னணிப் பொருளாதாரமாக மாறியது. மேலும் எதிர்காலத்தில் உலக அளவில் மிக அதிகமாக வளருவதற்கு வாய்ப்புகள் நிறைந்த இரண்டு நாடுகளில் ஒன்றாக இருக்கும் என நிபுணர்களால் ஒருமனதாகக் கணிக்கப்படுகிறது.

சென்ற 2008 ஆம் ஆண்டு மேற்கு நாடுகளில் தோன்றிய நிதி நெருக்கடி, பின்னர் உலகப் பொருளாதார நெருக்கடியாகப் பரிணமித்தது.  அதனால் உலகின் மிக வளர்ச்சியடைந்த நாடுகள் உள்ளிட்ட  பல பகுதிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. அவற்றில் பல நாடுகள் இன்று வரைக்கும் சிரமங்களிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியாமல் தவித்துக் கொண்டுள்ளன. உலகின் பல நாடுகளையும் சிரமப்படுத்திய அந்த நெருக்கடிகளால் அதிக   பாதிப்புகள் இல்லாமல்  செயல்பட்டு வந்த நாடுகளில் முக்கியமானதாக இந்தியா உள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் செயல்பாடுகள் இருபத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதலே உலகின் கவனத்தை அதிகமாக ஈர்க்கத் தொடங்கின. இந்தியாவைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள மேற்கத்திய நிபுணர்கள், உலகளாவிய ஆய்வு நிறுவனங்கள் , சர்வதேச அளவில் புகழ் பெற்ற  பல்கலைக்கழகங்கள் எனப் பல பிரிவினரும் முயற்சிகளை  மேற்கொண்டனர். அதனால் இந்தியப் பொருளாதாரம், அதன் வலிமைகள், அவற்றால்  நாட்டுக்குள்ள வாய்ப்புக்கள் ஆகியவை பற்றி விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன. எனவே சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் முக்கியத்துவம் பெற ஆரம்பித்தது.

அந்தக் காலகட்டங்களில் இந்தியத் தொழில் நிறுவனங்கள் உலக அளவில் பங்கு பெறுவதும் அதிகரித்தது. அதிகம் படிக்காத மக்களால் நடத்தப்படும் திருப்பூர்,  சூரத் போன்ற பல இந்தியத் தொழில் மையங்கள் உலக அளவில் ஏற்றுமதியை அதிகப்படுத்தி நாட்டுக்குப் பெயர் சேர்த்தன. கூடவே அமெரிக்காவின் கணினித்  துறையில் இந்திய இளைஞர்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உலகின் கவனத்தை ஈர்த்தனர்.

அப்போதிருந்த வாஜ்பாய் அரசு  'தங்க நாற்கரச் சாலை'  போன்ற திட்டங்கள் மூலம் கட்டுமானத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆகையால் வேலைவாய்ப்புக்கள் அதிகரித்தன. பொருளாதாரச் செயல்பாடுகள் தீவிரமடைந்தன. அரசுக் கணக்கில் வழக்கமாக வருடாவருடம் தொடர்ந்து வரும் நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்குப் பதிலாக, 1970களுக்குப் பின்  முதன்முறையாக,  2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் உபரித்தொகை ஏற்பட்டது. எனவே சுதந்திரத்துக்கு அப்புறம் முதல்தடவையாக நாட்டின் பொருளாதாரம் குறித்து பெரிய நம்பிக்கையும் பெருமித உணர்வுகளும் ஏற்படத் தொடங்கின.

பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக எட்டு விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்தது. வெவ்வேறு மட்டத்திலும் தொழில் செய்தவர்களுக்கு மேலும் வளர புதிய வாய்ப்புகள் தென்பட்டன. சர்வதேச அளவில் இந்தியப் பொருளாதாரம் குறித்து உலகின் பல இடங்களில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. கல்லூரி, பல்கலைக் கழகங்களில் படித்துக் கொண்டிருந்த   இளைஞர்களுக்கு  வாய்ப்புகள் பெருகி எதிர்காலம் குறித்து எப்போதுமில்லாத உற்சாகம் தோன்றியது.Indian economy3

அதனால் இந்தியப் பொருளாதாரம் ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரித்து உலக அளவில் முதல் நான்கு இடங்களில் ஒன்றாக வருமளவு வேகமாகச் சென்றது.  தங்களின் பொருளாதார வழிமுறைகள் தான் மிகவும் உயர்வானது என மார்தட்டி வந்த பணக்கார நாடுகள் எல்லாம் இந்தியாவின் செயல்பாடுகளைப் பற்றி ஆச்சரியமாகப் பேச  ஆரம்பித்தன. எனவே சர்வதேச அரங்கில் இந்தியாவை ஒதுக்கி விட்டு எந்த நாடும் உலகப் பொருளாதாரம் குறித்துப் பேச முடியாத சூழ்நிலை  உருவானது.

ஆனால் மிகவும் துரதிர்ஷ்டவசமாக,  இதுவரை பத்தாண்டுகளாக ஆண்ட காங்கிரஸ் கூட்டணி அரசின் கைங்கர்யத்தால்,  கடந்த சில ஆண்டுகளாக நிலைமை பெருமளவு மாறி வருகிறது. அரசு மட்டங்களில் கொள்கைகளை வகுப்பதில்  பெரும் தவறுகள் நடைபெற்று வருகின்றன. வயிற்றுக்கு உணவளிக்கும் விவசாயிகள் வருடாவருடம் ஆயிரக் கணக்கில் தற்கொலை செய்து கொள்வது வாடிக்கையாகி விட்டது. மேலும் விவசாயத் துறையை விட்டு  லட்சக் கணக்கான மக்கள் வெளியேறி வருகின்றனர். உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கு மக்களைக் கொண்டுள்ள நமது தேசத்தில், விவசாயம் நசிந்து போனால் நாடுஎப்படி சுயசார்புடன் செயல்பட முடியும் என்பது குறித்து அரசு யோசித்ததாகக் கூடத் தெரியவில்லை.

அதிகம் பேருக்கு வாய்ப்புகளை அளிக்கக் கூடிய சிறு தொழில்கள் கடும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றன. இந்தியாவின் சில்லறை வணிகம் என்பது  சாதாரண மக்களால் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் நடத்தப்பட்டு மொத்த பொருளாதார உற்பத்தியில் சுமார் 14 விழுக்காடு அளவு பங்களிக்கக் கூடிய மிக முக்கியமான துறை. அதில் சுமார் நான்கு கோடி மக்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் எந்தவித அடிப்படை நியாயமும் இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வந்து பலன் பெறுவதற்காக அது திறந்து விடப்பட்டிருக்கிறது. உலகின் பல பகுதிகளில் அவை செயல்பட்டு வரும் நாடுகளில் எல்லாம் உண்டாக்கியுள்ள சீரழிவுகளைப் பார்க்கக் கூட அரசு தயாராக இல்லை.

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு மின்சாரம், சாலை வசதிகள், சமூக மேம்பாடு  உள்ளிட்ட அடிப்படையான கட்டமைப்புகள் மிகவும் அவசியமாகும். அதற்காக அவற்றில் மூலதனங்களும் தொடர்ந்த கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்பட  வேண்டும். ஆனால் கொள்கை முடிவுகளை எடுப்பதில் பெரிய சுணக்கம் நிலவுகிறது. அதனால் லட்சக் கணக்கான கோடி ரூபாய்கள் மதிக்கப்புள்ள திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

மேலும் கடந்த சில ஆண்டுகளாகவே அரசின் கொள்கைகளை வகுப்பதிலும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும் பெரும் தவறுகளும், ஊழல்களும் நிறைந்திருப்பது வெளியாகி வருகிறது. அதனால் அரசுக்கு நியாயமாக வர வேண்டிய பல  லட்சம் கோடி ரூபாய் வருமானங்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டிய சில பேருக்குச் சென்று கொண்டிருப்பது  தெரிகிறது.

நாட்டின் இயற்கை வளங்கள் எல்லாம் கொள்ளை போய்க் கொண்டிருக்கின்றன. மேலும் அவற்றை மக்களின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக நமது நாட்டில் அதிக அளவில் நிலக்கரி உள்ளது. அவற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க வேண்டியது அரசின் கடமை. அப்போது தான் பொருளாதாரம் வளர முடியும். ஆனால் தனது  தவறுகளால் அரசு அவற்றை முறையாகப்  பயன்படுத்தித் திட்டமிட முடியாத சூழ்நிலையில் சிக்கியுள்ளது.

Indian economy4நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது சம்பந்தப்பட்ட  அரசாங்கத்தின் அத்தியாவசியமான பணியாகும்.  இங்கு ஒவ்வொரு வருடமும் ஒரு கோடியே இருபது லட்சம் பேர் புதியதாக உழைக்கும் வர்க்கத்தில் இணைந்து வருகின்றனர். அதில் பள்ளி, கல்லூரிகளில் இருந்து படித்து வருபவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால் கடந்த 2004- 05 ஆம் வருடம் தொடங்கி வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மிகவும் மோசமாக உள்ளது.

1999- 2004 காலகட்டத்தில் அப்போதைய அரசு ஆறு கோடி பேருக்கு மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. அதற்கடுத்து வந்த மன்மோகன் சிங் அரசு  2004 முதல் 2009 வரை வெறும் இருபத்தேழு லட்சம் வேலைகளை மட்டுமே உருவாக்கியுள்ளதாக  மத்திய அரசின் மாதிரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இரண்டாவது முறை  மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்த பின்னரும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முன்னேற்றமில்லை.

இந்தியப் பொருளாதாரத்துக்கு அறுபது விழுக்காட்டுக்கும் அதிகமான பங்கினை அளித்து வருவது சேவைத் துறையே ஆகும். கடந்த பல ஆண்டுகளாகவே அதுவே பிற துறைகளை விட வேகமாக வளர்ந்தும் வருகிறது. ஆயினும் அந்தத் துறையில் 2005 ஆம் ஆண்டு தொடங்கி வெறும் எண்பத்தாறு லட்சம் புதிய வேலைவாய்ப்புகளே உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு மிகக் குறைவான எண்ணிக்கையில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளிலும் கணிசமான அளவு தற்காலிகமானவையாகவே உள்ளன.

கூடவே அரசின் நிதி நிர்வாகமும் மிகவும் மோசமாகிவிட்டது. 2004 முதல் 2013 வரையான காலகட்டத்தில் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் சுமார் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. சென்ற நிதியாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை ஐந்து லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிச் சென்று விட்டது.

அதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமும்  சென்ற நிதியாண்டு முதல் மிகவும் குறைந்து வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளில் முதல் முறையாக சென்ற 2012-13 ஆம்   ஆண்டில் வளர்ச்சி விகிதம் 4.5 விழுக்காடு என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. மேலும் நடப்பு நிதியாண்டிலும் வளர்ச்சி விகிதம் ஐந்து விழுக்காட்டுக் கீழ்தான் இருக்கும் என மத்திய அரசின் புள்ளி விபர அலுவலகம் கணித்துள்ளது.

எனவே அண்மைக் காலமாக  இந்தியப் பொருளாதாரம் ஒரு பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டு வருகிறது. ஒரு பக்கம் தொழில் செய்பவர்கள் மூலதனங்களை  மேற்கொள்ளப் பயப்படுகின்றனர். இன்னொரு பக்கம் சொந்தத் தொழில்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

pm-modiஅதனால் பொதுவாக பல தரப்பு மக்களும் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். இந்தியா உலகிலேயே அதிக அளவு இளைஞர்களைப் பெற்று விளங்குகிறது. வேலை செய்வதற்குப் போதுமான மக்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் திறமைகளைப் பயன்படுத்தி  நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல அரசிடம் திட்டங்கள் இல்லை.

எனவே நமது (முந்தைய) ஆட்சியாளர்கள் ஒரு பெரும் வரலாற்றுத் தவறுக்குக் காரணமாக இருந்து விட்டார்கள். இந்தியா என்னும் சக்தி மிகுந்த நாட்டினுடைய முன்னேற்றம் தடைப்பட்டு நிற்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் இந்தியப் பொருளாதாரம் மேலெழுந்து வந்து கொண்டிருந்த போது, வெளிநாட்டு நிபுணர்கள்  சிலர் ஒரு பேரரசு மீண்டும் எழத் தொடங்கி விட்டது என்று காலனி ஆதிக்க காலத்துக்கு முந்தைய நமது பழைய வரலாற்றைத் தொடர்பு படுத்திக் கூறினார்கள்.

துரதிர்ஷ்டவசமாக அந்த வார்த்தைகளைப் பொய்யாக்கும் வகையில்  மன்மோகன் அரசின் அணுகுமுறைகள் அமைந்து விட்டன. அதனால் பொருளாதார வளர்ச்சியில்  கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. முன்னேற்றத்திற்குப் பெரும் முட்டுக்கட்டைகள் போடப்பட்டுள்ளன. மேற்கத்திய பொருளாதாரங்களுக்குப் பிரச்னைகள் அதிகரித்து உலக அளவில் நமது நாட்டுக்கென வாய்ப்புகள் பெருகி வரும் இந்தச் சூழ்நிலையை நமது அரசு சரியாகப் பயன்படுத்தத்  தவறிவிட்டது.

இவற்றை சரிசெய்ய வேண்டிய பெரும் பொறுப்பு பிரதமராக புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு உள்ளது.  மோடி இதை சரி செய்வார் என்று நாடே எதிர்பார்க்கிறது.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf