Venture Capital in tamil :- வென்ச்சர் கேபிட்டல்

0 comments
உங்களிடம் பிரமாதமான பிஸினஸ் ஐடியா இருக்கிறதா? அந்த பிஸினஸை எப்படி நடத்தி வெற்றி காண முடியும் என்கிற வழியும் தெரிந்திருக்கிறதா? யெஸ் எனில் உங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டை செய்யத் தயாராக இருக்கின்றன வென்ச்சர் கேபிட்டல் நிறுவனங்கள்.

பொதுவாக, எந்த வகையான தொழில்களிலும் இந்த வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு செய்துவிட மாட்டார்கள். ஓரளவுக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட தொழிலாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் முதலீடு செய்வார்கள். உதாரணமாக, ஊறுகாய் தயாரிக்கப் போகிறேன் என்றால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு எதுவும் தராது.

ஆனால், பயோ டெக்னாலஜி தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஊறுகாய் தயாரித்து, அதை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறேன் என்று சொன்னால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் உங்கள் தொழிலில் முதலீடு செய்தாலும் செய்யலாம்.

வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டு களில் பாசிட்டிவ்-ஆன விஷயம், முதலீட்டுக்கு ஒரு வரம்பே இருக்காது. ஒரு கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை எடுத்த எடுப்பிலேயே போடுவார்கள். இந்த முதலீட்டுக்கு வட்டி எதுவும் தரத் தேவையில்லை என்பது இன்னும் விசேஷம். ஆனால், தொழில் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட்டு விகிதாசாரப்படி பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பது கண்டிஷன்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வென்ச்சர் ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட், ஐ.எஃப்.சி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் ஃபண்ட்ஸ், எஸ்.ஐ.டி.பி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் லிமிடெட் என பல நிறுவனங்கள் இருக்கின்றன. எனினும், நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் பெரிய அளவில் புதுமைகள் எதுவும் இல்லாத வழக்கமான தொழில் எனில் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகளின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டாம்.

மற்றவர்கள் கொடுக்கும் கடனை வைத்துத்தான் தொழில் நடத்த முடியும் என்று நினைக்கிறவர்களுக்குத்தான் இதெல்லாம். கையில் பணமிருக்கு. இப்போதைக்கு கடனே தேவை இல்லை! என்று நினைப்பவர்கள் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை! நீங்கள் நேரடியாக தொழிலை ஆரம்பித்துவிடலாம்! பெஸ்ட் ஆஃப் லக்!

Poultry Farming:- கோடிகளில் பணம் சம்பாதிக்க கோழி பண்ணை

0 comments
சத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை.  மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேப்பங்கொட்டை பாளையத்தில் கிருத்திகா கோழி பண்ணை நடத்தி வரும் வெங்கடாசலம். அவர் கூறியதாவது:

நான் ஒரு விவசாயி. பாசன நீர் பற்றாக்குறை காரணமாக முட்டைக்கோழி வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகிறேன். இதற்கு  வங்கிக் கடன் உதவி எளிதாக கிடைப்பதால், பண்ணை அமைத்து கூண்டு முறையில் 24 ஆயிரம் கோழிகளை வளர்க்கிறேன். கோழி வளர்ப்பில் முதல் வளர்பருவம் வரை உற்பத்தி செலவுக்கு முதலீடு இருந்தால் போதும். முட்டைப்பருவ காலத்தில்  கிடைக்கும் முட்டைகளை விற்று  அதன்மூலம், அடுத்தடுத்த உற்பத்தி செலவுகளை சமாளிக்கலாம். அரவை இயந்திரம் வாங்கி தீவனத்தை நாமே அரைத்து கொண்டால் செலவு மிச்சமாகும். தீவனத்துக்கு தேவையான தானியங்கள் விலை குறையும்போது வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

நாமக்கல், பல்லடம் ஆகிய இடங்களில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. இங்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் மொத்த முட்டை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வியாபாரிகள் நேரில் வாங்கி செல்கின்றனர். சில நேரங்களில் நல்ல லாபமும், சில நேரங்களில் குறைந்த லாபமும் கிடைக்கும். முறையாக வளர்த்தால், கோழி இறப்பு, முட்டை உற்பத்தி குறைவு ஆகியவற்றை தவிர்க்கலாம். ஒரு கோழி வாரத்தில் 6 நாள் முட்டை இடுவதால், தினசரி நல்ல வருவாய் பார்க்கலாம்.

வெளிநாடுகளுக்கு சிலர் மட்டுமே ஏற்றுமதி செய்கிறார்கள். முட்டைகளை தரப்பரிசோதனை செய்து தகுதியான முட்டைகளை அனுப்பினால் ஏற்றுமதியிலும் ஜொலிக்கலாம். கோழிப்பண்ணைகளுக்கு மின் கட்டணம் வணிக கட்டண பிரிவின் கீழ் விதிக்கப்படுகிறது. கோழி வளர்ப்பை மேம்படுத்த பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம்.

எப்படி வளர்ப்பது?

முட்டைக்கோழிகளை வளர்க்க ஆழ்கூளம், கூண்டு வளர்ப்பு என 2 முறைகள் உள்ளன. கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம். அதற்கடுத்த 8 வாரங்கள் வளர் பருவம், பின்னர் 56 வாரங்கள் முட்டை உற்பத்தி பருவம். 3 பருவ கோழிகளையும் தனித்தனி கூண்டுகளில் வளர்க்க வேண்டும். கூண்டுகளில் கோழிகளின் பருவத்துக்கு ஏற்ப வெப்பம், காற்றோட்டம், ஈரப்பதம் இருக்குமாறு வசதி ஏற்படுத்த வேண்டும். குஞ்சு பருவத்தில் தீவனம் வீணாவதை தடுக்கவும், ஒன்றையொன்று கொத்திக் கொள்ளாமல் இருக்கவும் அதன் அலகுகளை 7 முதல் 10 நாட்களுக்குள் வெட்ட வேண்டும்.

குஞ்சு பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சுத்தமான தண்ணீரில் வைட்டமின் கே, சி மற்றும் சோடியம் சாலிசிலேட் கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகள் போட வேண்டும். சோயா, கம்பு, மக்காச்சோளம், கருவாடு, கிளிஞ்சல்கள் ஆகியவற்றுடன் நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த கலவை தீவனம் கொடுக்க வேண்டும். குஞ்சுப்பருவத்தில் குருணை தீவனம் கொடுப்பது எடையை அதிகரிக்கும்.

600 கிராம் எடையுடன் இருக்கும். குஞ்சு, வளர் பருவத்தில் 1100 கிராம் எடையை அடையும். முறையாக பராமரித்தால் 60 கிராம் எடையுள்ள முட்டைகளை கோழி இடும். ஒரு கோழி வாரத்துக்கு 6 முட்டை இடும். அதை விற்பனைக்கு அன்றன்றே அனுப்பிவிட வேண்டும்.

ஆலோசனை பெறலாம்!

கால்நடை பராமரிப்பு துறையின் மாவட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களில் முட்டைகோழி வளர்ப்பு தொடர்பான அறிவுரைகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் அளிக்கின்றனர். முட்டை கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் தலைமை இடங்கள் நாமக்கல், பல்லடம், பொங்கலூர் ஆகிய இடங்களில் உள்ளது. இவற்றின் கிளைகள் முக்கிய நகரங்களில் உள்ளன. அங்கு கோழிக் குஞ்சுகளை வாங்கலாம். அங்கு கோழித் தீவன உற்பத்தியாளர்கள், கூண்டு தயாரிப்பவர்கள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த விவரங்களை அளிக்கின்றனர்.

கட்டமைப்பு வசதிகள்

கூண்டு முறையில் முட்டைக் கோழி வளர்க்க 42க்கு 30 அடி நீள, அகலமுள்ள 3 கட்டிடங்கள் தேவை. இவற்றில் தலா 2 ஆயிரம் கோழி வீதம் 6 ஆயிரம் கோழி வளர்க்கலாம். கட்டிடத்துக்கு மொத்தம் ரூ.4.5 லட்சம் செலவாகும். 3 கட்டிடத்துக்கும் கூண்டு அமைக்க தலா ரூ.30 ஆயிரம் வீதம், ரூ.90 ஆயிரம் செலவாகும். கட்டிடத்தில் 3 அடுக்குகளை கொண்ட 6 இரும்பு கூண்டுகள் பொருத்த வேண்டும். மொத்தம் 18 அடுக்குகள் அமையும். 2 ஆயிரம் கோழிகள் இடம்பெறும். தீவனம் இருப்பு வைக்கவும், முட்டைகளை அடுக்கவும் தனித்தனி அறைகள் அமைக்க வேண்டும். கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.4 லட்சம்.

உற்பத்தி செலவு

குஞ்சு விலை சராசரி ரூ.21 வீதம் 2 ஆயிரம் குஞ்சுகள் ரூ.42 ஆயிரம். தீவனம் ஒரு கோழிக்கு 50 கிலோ தேவை. தீவனம் கிலோ விலை ரூ.15. 2 ஆயிரம் கோழிக்கு ரூ.15 லட்சம். தடுப்பு மருந்து உள்ளிட்ட பராமரிப்பு செலவுகள் ரூ.10 வீதம் ரூ.20 ஆயிரம். ஒரு வேலையாளுக்கு தினசரி ரூ.350 வீதம் ரூ.89 ஆயிரம் சம்பளம். மின் கட்டணம் ரூ.13 ஆயிரம் என உற்பத்தி செலவுக்கு மொத்தம் ரூ.16.64 லட்சம் தேவை.  

வருவாய் எவ்வளவு?

ஒவ்வொரு கோழியும் வளர்ந்த 17வது வாரத்தில் இருந்து 72வது வாரம் வரை முட்டை இடும். முட்டையிடும் பருவமான 55 வாரங்களில் (385 நாட்களில்) 320 முட்டைகள் இடும். முட்டை சராசரி விலை ரூ.2.50. 2 ஆயிரம் கோழிகள் மூலம் முட்டை விற்பனை வருவாய் ரூ.16 லட்சம். 72 வார முடிவில் வயதான முட்டை கோழிகள் விற்பனை 2 ஆயிரம் கோழிகள்(3500 கிலோ எடை) கிலோ ரூ.50 வீதம் வருவாய் ரூ.1.75 லட்சம். கோழி எரு தலா 15 கிலோ வீதம் 2 ஆயிரம் கோழிகள் மூலம் 30 டன் கிடைக்கும். இதன் மூலம் ரூ.24 ஆயிரம் வருவாய். மொத்த வருவாய் ரூ.17.99 லட்சம். லாபம் ரூ.1.35 லட்சம். முட்டை, எரு, கோழி விலை கூடினால் லாபமும் அதிகரிக்கும்.

சந்தை வாய்ப்பு!

தமிழகத்தில் முட்டை உற்பத்தி பெரும்பகுதி நாமக்கல்லிலும், ஓரளவு கோவை, திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளது. பரவலாக முட்டை உற்பத்தி மேற்கொண்டால் அந்தந்த பகுதிக்குரிய தேவையை பூர்த்தி செய்யலாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். முட்டை கோழி எரு ரசாயன உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. ரப்பர், தேயிலை தோட்டங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கோழி எருவை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். முட்டை பருவம் முடிந்த கோழிகளை வியாபாரிகளிடம் விற்கலாம்.

TN TET 2014 results

0 comments
TN TET 2014 results Candidates who appeared for TN TET 2014 will get the results after the announcement of the TN TET results.

TN TET 2014 results
TN TET 2014 results

TN TET 2014 results will be availabile in the following official website at www.trb.tn.nic.in To see the TNTET results 2014,

Please Log on to the official website at www.trb.tn.nic.in for more details and TNTET results 2014.


Business'es That you can do from home:- சிறந்த 10 தொழில்கள்

0 comments
 ”வீட்லதான் சும்மா இருக்கேன்” என்று அங்கலாப்பவர்கள்தான் பலபேர்.  தங்களுக்குள் இருக்கும் திறமைகளையும், ஆர்வத்தையும் சற்று அலசி யோசித்தாலே சும்மா இருக்கும் நேரத்தில் பயனுள்ள வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும்.  அப்படி வீட்டில் இருந்த படியே செய்யச்சிறந்த பத்து தொழில்கள் பற்றிப் பார்க்கலாம்.

1. உணவு உபசரிப்பு

உங்கள் சமையல் கை ருசி பாராட்டப்படுகிறதா... யோசிக்காமல் இந்த உணவு உபசரிப்பில் இறங்கிவிடுங்கள்.  அருகில் பாச்சிலர் மேன்ஷனோ, லேடீஸ் ஆஸ்ட்லோ இருந்தால்.. வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு உணவு செய்து தந்து லாபம் பெறலாம்.  பின்னே... உணவை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன?

2,புகைப்படமெடுத்தல்

புகைப்படமெடுத்தல் சிலருக்கு ஆர்வமாக இருக்கும், இன்னும் சிலருக்கு ஹாபியாக இருக்கலாம், ஆனால் இதை ஒரு தொழிலாகவும் எடுத்துக் கொள்ள தகுதியானதே..  சரியான கருவியும், புகைப்படம் மற்றும் அந்தக் கருவி குறித்த செயல்பாடுகள் பற்றிய சில அடிப்படைகளை தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.  இந்தக்கலையில் பெயரெடுத்தவிட்டால், உங்களுக்கு ஆஃபர்கள் வந்துகொண்டே இருக்கும், 

3,செல்லப் பிராணிகள் ஸ்டோர்ஸ்

ஏற்றத்தாழ்வு இல்லாமல் பலரும் செல்லப்பிரானிகள் வளர்க்கிறார்கள்.  இதுதான் சூட்சும்ம்.  செல்லப்பிரானிகளுக்குத்  தேவையான உணவு,மருந்து, ஷாம்பு... என அனைத்தையும் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம். 

அருகில் உள்ள வெட்டினரி ஆஸ்பத்திரியுடன் ஒரு டை அப் வைத்துக் கொண்டீர்களானால் பிசினஸ் வெகு சீக்கிரம் பிரபலமாகிவிடும்.  பிராணிகள் வளர்ப்பவர்கள் மட்டுமல்ல பிராணிகளும் பழக்கமாகிவிடும்

4,திருமண வடிவமைப்பு

மாப்பிள்ளை அழைப்பில் இருந்து, கட்டுசாதக்கூடை வரையான திருமணத்திற்கான சகல வேலைகளைகளையும் வடிவமைத்து நிகழ்த்திக்காட்டுவது,  இது ஆண்களுக்கு மட்டுமே ஆனது என்றகாலம் மலையேறிவிட்டது,  புதுமையும், வேகமும், செயல்திறனும், நல்லுறவும் இருந்தால் போதுமானது,  ஒரு ஃபங்ஷன் முடித்துக்கொடுத்தால் லாபம் லட்சங்களில் நிற்கும்.

5,வெப் பேஸ்டு வணிகம்

கம்ப்யூட்டரின் உதவியோடு வெப் சார்ந்த விஷயங்களில், வெப் டிசைனராகவோ, வெப் டெவலப்பராகவோ தொழில் துவங்கலாம்.  கம்ப்யூட்டர், இண்டர்நெட், ஸ்கேனர், பிரன்டர் என கட்டமைப்பிற்கு சில ஆயிரங்கள் தேவைப்படும்.  அதை விட முக்கியமாகத் தேவைப்படுவது, விடா முயற்சியுடன் கூடிய ஆர்வம் தான்.  எல்லாம் கூடி வந்தால் உங்கள் பிசினஸ் ஜெட் வேகத்தில் பயணிக்கும் இந்த வணிகத்தில்

6,தோட்டம்

பூக்கள் மீதும், புற்கள் மீதும் ஒரே அளவு பாசம் கொண்டவர்களும், செடி கொடிகள் மீது விருப்பம் கொண்டவர்களும், வீட்டிலேயே தோட்டம் போடலாம், அதோடு அதை பிசினஸாகவும் மாற்றலாம்.  சிறு செடிகளை பதியம் போட்டு, நாற்றுகளாக்கி நர்சரி போல் அமைத்து விற்பனை செய்யலாம். ஹார்டிகல்சர் தெரிந்திருந்தால் பக்கத்து அலுவலகங்களில் அவுட் சோர்ஸ் முறையில் அவர்களது தோட்டத்தை பராமறித்தும் பணம் பார்க்கலாம். மணம் வீசும் தொழில் என்பது இதுதான்.

7,ஆன்லைன் வர்த்தகம்

தனிமைப்பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற துறை இந்த ஆன்லைன் வர்த்தகம்.  பங்குச்சந்தை பற்றியும் அதன் போக்கு குறித்தும் அலசுபவர்களுக்கு ஏற்ற துறை.  வீட்டில் ஒரு கம்ப்யூட்டரும், வங்கியில் பணமும் இருந்து, ஆன்லைன் வர்த்தகம் குறித்து சிறிது அறிவும் இருந்தால், நீங்கள் தான் எஜமானர்.  ஜமாக்கலாம்.

8,ரியல் எஸ்டேட் கன்சல்டன்சி

மேலே சொன்னவகையருக்கு நேர் எதிரானது இந்தத்துறை.  அலைய அஞ்சாதவர்களுக்கும், எந்த ஏரியாவில் நிலத்தின் மதிப்பு உயரும் என்பதை கணிக்கத் தெரிந்தவர்களுக்கும் இது பணம்தரும் சுரங்கமான தொழில். வீட்டு வாடகை- போக்கியம்- விற்பனை முதலியவற்றிக்கு கையை காட்டிவிடுவதிலேயே  பெர்சன்டேஜ் கமிஷன் பணம்பெறலாம்.

9,மார்க்கெட்டிங் கன்சல்டன்சி

ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் பணி புரிந்திருந்து, தற்போது வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த மார்க்கெட்டிங் கன்சல்டன்சி மிகவும் ஏற்றது.  முதுலில் தெரிந்தவர்களிடமிருந்து துவங்கி, உங்களது ஆலோசனைகளை தொடரலாம். உங்களுக்கு ஆர்வமும் பேச்சுத்திறனும் இருப்பின் இதில் பெரிதாய் வளர முடியும்.

10,ஆட்டோமோடீவ் பாகங்கள்

இன்றைக்கு கார் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கார் வைத்திருப்போருக்கும் மோட்டார் கார் குறித்து முழுமையாகத் தெரியாது, இந்நிலையில் கார் பாகங்கள் பற்றியும் அதன் உதிரிபாகங்களின் சிறு டீலர்ஷிப் எடுக்கலாம்.  இந்த மார்க்கெட்டிங் துறை தயாரிப்பாளருக்கும் பயனாளிக்கும் பாலமாக இருப்பதோடு, உத்தரவாதமான லாபத்தை தரக்கூடியதுமாகும்.
    
 -உங்கள் சாய்ஸ் எதுவாக இருந்தாலும், ஆர்வமும், திட்டமிடுதலும் இருந்தால் நிச்சயம் பிசினஸ் சக்சஸாகவே இருக்கும்

Hand Gloves Making:- கையுறை தயாரிப்பு தொழில்

0 comments
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கையுறைகளுக்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு காணப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் பகுதியில், பனியன் துணிகளால் ஆன கையுறைகள் அதிக அளவில் தயாரிக்கப் டுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கையுறைகள், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் பனியன் செய்தது போக, கழிவு பனியன் துணிகளை கொண்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள குறு தொழிற்சாலைகளில் கையுறைகள் செய்யப்படுகின்றன.

இவற்றை ஓசூர் மற்றும் பெங்களூரிலுள்ள மருந்து, கைகடிகாரம் உள்ளிட்ட பல தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஒரு நாளைக்கு ஒருவர் ஒரு கையுறையை பயன்படுத்துவதால், நாள் தோறும் ஆயிரக்கணக்கான கையுறைகள் தேவைப்படுகின்றன.

இந்தப் பகுதியில் இருந்து மட்டும் மாதத்துக்கு, இரண்டு லட்சம் கையுறைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாதத்துக்கு, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான கையுறைகள் பலதரப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கையுறைக்கு ஓசூர் மட்டுமன்றி, பெங்களூரு, புனே உள்ளிட்ட தொழிற் நகரங்களில் வரவேற்பு உள்ளதால், நாளுக்கு நாள் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிறப்பான ஏற்றுமதிக்கு வாய்ப்பும் உள்ளது.

Microsoft Office 2013:- எம்.எஸ்.ஆபீஸ் 2013

0 comments
அண்மையில் வெளியிடப்பட்ட எம்.எஸ். ஆபீஸ் 2013 நுகர்வோருக்கான முன்னோட்டத் தொகுப்பில் பல்வேறு புதிய சிறப்புகள் மற்றும் வசதிகள் உள்ளன.

எக்ஸெல் 2007 மற்றும் 2010 தொகுப்புகளில் உள்ள வழக்கமான ரிப்பன் இன்டர்பேஸ் இதிலும் வழங்கப்படுகிறது.

வேர்ட் புரோகிராமில் இருப்பது போலவே இதிலும் சேவ்(Save) செய்து பதிவதில் சில புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

ஒன்லைன் ஸ்டோரேஜ், கோப்புகளை பகிர்ந்து கொள்ளல், மைக்ரோசாப்ட் க்ளவ்ட் சேவை வழியாக கோப்புகளை அப்டேட் செய்து கொள்ள வசதிகள் உள்ளன.

எக்ஸெல் புரோகிராம் திறந்தவுடன், மாறா நிலையில் நமக்குக் கிடைக்கும் ஒர்க்ஷீட் புதிய டெம்ப்ளேட் விண்டோவில் கிடைக்கிறது.

அத்துடன் புதியதாக கணனிகளில் இருக்கும் டெம்ப்ளேட்களையும், ஒன்லைன் மூலமாக கிடைக்கக் கூடிய டெம்ப்ளேட்களையும் பட்டியலிடுகிறது.

ஒன்லைன் டெம்ப்ளேட் ஒன்றை தேர்ந்தெடுத்தால், தானாக அதனைத் தரவிறக்கம் செய்து தருகிறது. அத்துடன் நாம் அண்மையில் பயன்படுத்திய ஒர்க்ஷீட்களையும் பட்டியலிடுகிறது.

இதன் மூலம் அவற்றை போல்டரில் தேடாமல் நேரடியாகவே பெற்று பயன்படுத்தலாம். இந்த வசதிகள் உடனடியாக ஒர்க்ஷீட் பணிகளைத் தொடங்க எண்ணுபவருக்கு எளிதாக அமைந்துள்ளன.

வழக்கமாகக் கிடைத்துவரும் பகுப்பாய்வு வசதியில்(quick analysis tool) பல புதிய மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் மேற்கொள்ளக் கூடிய ஆய்வு தேடல்கள் அதிகமாக்கப்பட்டுள்ளன.

ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைப் பலவகைகளில் போர்மட் செய்திட முடிகிறது. இதிலேயே தகவல்களை வகைப்படுத்தி குறைந்த மற்றும் அதிக மதிப்புகளை அவற்றின் அடிப்படையில் பட்டியலிட முடிகிறது.

நெட்டு வரிசை ஒன்றில் உள்ள தகவல்களை கர்சர் மூலம் தேர்ந்தெடுத்தால், அடுத்த வரிசையில் கூட்டல், சராசரி, மொத்த மதிப்புகளின் எண்ணிக்கை, மொத்த சராசரி ஆகியவை கிடைக்கும். இதில் எதனைத் தேர்ந்தெடுத்தாலும் அது உடனே கருப்பு வண்ணத்தில் தெளிவாகப் பார்க்கக் கிடைக்கிறது.

இதில் தரப்படும் சார்ட்(Sort) தயாரிப்பதற்கான வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நாம் எளிதாகவும் வேகமாகவும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இந்த சார்ட்களை அமைக்கலாம். இதன் சிறப்பு என்னவெனில் ஒரு மதிப்பை மாற்றினால், உடனேயே அதற்கேற்ற வகையில் சார்ட் வேகமாக மாற்றப்படுகிறது.

இது போன்ற வசதிகள் மூலம் வர்த்தகத்தில் விலை நிர்ணயம் செய்வது, பொருட்களை வாங்குவது, விற்பனை செய்வது போன்ற முடிவுகளை வேகமாக எடுக்க முடியும்.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்கை ட்ரைவ், ஆபீஸ் தொகுப்புடன் இணைக்கப்பட்டிருப்பதால் எக்ஸெல் தொகுப்பிலும் ஒன்லைன் இணைப்பு கிடைக்கிறது. மாறா நிலையில் ஒர்க்ஷீட்கள் ஒன்லைனில் சேவ் மற்றும் அப்டேட் செய்யப்படுகின்றன.

எக்ஸெல் தொகுப்பில் மட்டும் ஒரே நேரத்தில் பலர் ஒர்க்ஷீட் ஒன்றை எடிட் செய்திட வசதி தரப்படவில்லை. அப்படி முயற்சிக்கையில், பைல் லாக் செய்யப்பட்டிருப்பதாக எச்சரிக்கை செய்தி ஒன்று காட்டப்படுகிறது. இதனால் ஒருவர் எடிட் செய்து கொண்டிருக்கையில் அறியாமல் இன்னொருவர் எடிட் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

இது நல்லது தான் என்றாலும், ஒருவர் எடிட் செய்கையில் மற்றவர்கள் அதனைத் திறந்து பார்ப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆபீஸ் தொகுப்பின் மற்ற புரோகிராம்களில் (வேர்ட், பிரசன்டேஷன் போன்றவற்றில்) இந்த வசதி தடை செய்யப்படவில்லை.

எனவே ஒருவர் எக்ஸெல் 2013க்கு மாறிக் கொள்ள வேண்டுமா? என்ற கேள்விக்கு, கூடுதல் வசதிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வேலையை எளிதாகவும், விரைவாகவும் முடிக்கக் கூடியவர்களும், இதனை விரும்புபவர்களும், நிச்சயம் புதிய தொகுப்பிற்கு மாறிக் கொள்ளலாம்.

குறிப்பாக கோப்புகளை ஒன்லைனில் சேவ் செய்து கொண்டு, மற்றவர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்வது மற்றும் தகவல்களைப் புதிய கோணத்தில் உடனுடக்குடன் ஆய்வு செய்து முடிவுகளைப் பெறுவது போன்ற வசதிகளைப் பயன்படுத்த விரும்புபவர்கள் நிச்சயம் இதற்கு மாறிக் கொள்ளத் தான் வேண்டும்.
0 comments
டெஸ்க்டாப் பகுதியில் சேவ் செய்வதில் உள்ள பிரச்னைகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளலாம். இதில் பதிந்து வைப்பதனால், பயன்படுத்த எடுப்பது எளிதாகிறது.

ட்ரைவ் மற்றும் போல்டர்களைத் தேடி எடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த உடனடி அணுகுமுறையே நமக்கு டெஸ்க்டாப்பில் பைல்களை சேமிக்கும் பழக்கத்தைத் தூண்டுகிறது.

இதனால் பிரச்னைகளையும் நாம் வரவேற்கிறோம் என்பதே உண்மை. முதலில், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்படுத்துகையில், டெஸ்க்டாப்பில் உள்ள பைல்கள் உறுதியாக மீண்டும் கிடைக்காது. இந்த ஆபத்தை பலர் உணர்ந்திருப்பதில்லை.

பல பைல் பேக் அப் புரோகிராம்கள், டெஸ்க்டாப்பில் உள்ள பைல்களை கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து பைல்களை டெஸ்க்டாப்பில் சேவ் செய்திடுகையில், அவை குப்பையாக அமைகின்றன. தேவையான பைல் ஒன்றைத் தேடி எடுப்பது சிரமமான காரியமாகிறது.

சரி, இனி எங்கு சேவ் செய்திடலாம், செய்திடக் கூடாது எனப் பார்க்கலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் உள்ள சி ட்ரைவில் நம் டேட்டா பைல்களை என்றும் சேவ் செய்திடக் கூடாது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்காமல் போனால், அதனை ரீ இன்ஸ்டால் செய்திடுகையில், நம் டேட்டா பைல்கள் அனைத்தும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.

இதற்குப் பதிலாக, சி ட்ரைவினை விடுத்து, டி அல்லது வேறு ஒரு ட்ரைவில் பைல்களைப் பதிந்தால், அவை வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் சி ட்ரைவினை ரீ பார்மட் செய்கையில், பைல்களை இழக்கும் வாய்ப்பு இருக்காது.

முன்பு விண்டோஸ் சிஸ்டத்தில் பைல்களை சேவ் செய்திட My Documents என்னும் போல்டர் தரப்பட்டது. பின்னர், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இது Documents என பெயர் மாற்றப்பட்டது. அத்துடன் அதில் Music, Pictures, and Videos எனப் பல பிரிவுகளும் தரப்பட்டன.

இவை மொத்தமாக libraries என அழைக்கப்பட்டன. இந்த நான்கு லைப்ரேரிகளும் சில சிறப்பு தன்மை கொண்டவை. இவை டைரக்டரிகள் மட்டும் அல்ல. பல டைரக்டரிகளின் தொகுப்பாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் வீடியோக்களை பல இடங்களில் சேவ் செய்து வைக்கலாம். செய்து வைத்திடுகையில், வீடியோ டைரக்டரிக்கு லிங்க் கொடுக்கலாம். அதன் பின், வீடியோ டைரக்டரியை அணுகினால், அனைத்து வீடியோ பைல்களும் ஒரே இடத்தில் காட்டப்படுவதனைக் காணலாம்.

இந்த வகையில் பைல்களை சேவ் செய்வதும் திரும்பப் பெறுவதும் எளிதாகிறது. பாதுகாப்பும் கிடைக்கிறது. இப்போதெல்லாம், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், பைல்களை ஸ்டோர் செய்திடும் பழத்தினை அனைவரும் பின்பற்றுகின்றனர். பெரும்பாலும் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் இந்த இடம் கிடைக்கிறது. இவற்றில் அதிகம் பிரபலமானவை Dropbox, G+ Drive, or Microsoft One Drive ஆகும்.

இவை கூடுதல் வசதிகளை வழங்குகின்றன. இவற்றுடன் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு, பைல்களை இணைக்கும் வசதியையும் (Sync) அமைத்துக் கொண்டால், பைல்கள் தாமாகவே, இணைய வசதி இருக்கும்போது, இந்த க்ளவ்ட் டைரக்டரிகளில் பதிந்து வைக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட டைரக்டரிகளில் நீங்கள் அமைக்கும் பைல்கள் தாமாகவே இவற்றுடன் இணைக்கப்பட்டு சேவ் செய்திடும் வகையில் அமைப்பினை உருவாக்கிக் கொள்ளலாம். இவ்வாறு சேவ் செய்திடும் பைல்களை எந்த இடத்தில் இருந்தும் நீங்கள் மீண்டும் பெற்றுக் கொண்டு திருத்தலாம், பயன்படுத்தலாம். நம் கம்ப்யூட்டர் முழுமையாக இயக்க முடியாமல் போனாலும், இந்த பைல்கள் நமக்கு என்றும் கிடைக் கும்.

இவ்வாறு சேவ் செய்யப்படும் பைல்களுக்கு Revision history என்ற ஒரு வசதியும் தரப்படுகிறது. அனைத்து க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதிகளிலும் இந்த வசதி தரப்படவில்லை. ஆனால், பெரும்பாலான பிரிவுகளில் கிடைக்கிறது. இந்த வசதியின் மூலம், பைல் ஒன்றில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் அனைத்தும், குறிப்பிட்ட எண்ணிக்கையில், குறிப்பில் வைத்து சேவ் செய்யப்படுகின்றன.

எனவே, நீங்கள் ஒரு பைலின், குறிப்பிட்ட திருத்தத்திற்கு முந்தைய பதிப்பு தேவை எனில், அதனை க்ளவ்ட் ஸ்டோரேஜில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் விண்டோஸ் 8 பயன்படுத்துபவராக இருந்தால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒன் ட்ரைவின் க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதி உங்களுக்கு சிஸ்டம் மூலமாகவே தரப்படுகிறது.

பைல்களை ஒருங்கிணைக்கும் சிங்க் வசதியும் கிடைக்கிறது. பைல்களை உடனே அணுகி, டபுள் கிளிக் செய்து திறக்க முடிகிறது என்ற ஒரு வசதியே, நம்மை டெஸ்க்டாப்பில் பைல்களை சேவ் செய்து வைத்திடத் தூண்டுகிறது. ஆனால், டெஸ்க்டாப் இடத்தில் பைல்களை சேவ் செய்வது சரியல்ல என்ற நிலையில், உடனுடக்குடன் டெஸ்க்டாப்பிலிருந்தே பைல்களைத் திறக்க ஏதேனும் வழி உண்டா என நாம் எண்ணலாம். வழி உள்ளது.

பைல்களுக்கான ஷார்ட் கட் (shortcuts) ஐகான்களை உருவாக்கி, டெஸ்க்டாப்பில், எளிதில் பெறும்படி அமைத்தால், அதில் கிளிக் செய்து பைல்களைத் திறக்கலாம். இந்த வகையில் ஷார்ட் கட் அமைப்பதுவும் எளிதுதான். ரைட் மவுஸ் பட்டனை பைல் பெயர் மீது அழுத்தி, எந்த இடத்தில் ஷார்ட் கட் அமைக்கப்பட வேண்டுமோ அங்கு விட வேண்டும்.

பின்னர் கிடைக்கும் மெனுவில் Create shortcut here என்பதில் கிளிக் செய்தால், ஷார்ட் கட் அமைக்கப்படும். இந்த ஷார்ட்கட் நீக்கப்பட்டாலும், பைல் நீங்கள் சேவ் செய்த இடத்தில், டைரக்டரியில் அல்லது போல்டரில், இருக்கும். ஆனால், இவற்றையும் டெஸ்க் டாப்பில் வைத்து அது குப்பைக் களமாக மாறுவதை ஏன் உருவாக்க வேண்டும்.

அதற்குப் பதிலாக, இது போல உருவாக்கப்படும் ஷார்ட் கட் ஐகான்களை அப்படியே இழுத்து வந்து டாஸ்க் பாரில் பின் அப் செய்து வைக்கலாம். இதற்கு Pin to taskbar என்பதனைப் பயன்படுத்த வேண்டும்.

மேலே சொன்ன வழிகள் அனைத்தும் பொதுவாகச் சொல்லப்பட்டவையே. இதுவரை டெஸ்க்டாப்பில் மட்டுமே அவசரமாகத் திறக்க வேண்டிய, அடிக்கடி பயன்படுத்த வேண்டிய பைல்களை சேவ் செய்து பழக்கப்பட்டவர்கள், அவர்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் மேலே சொல்லப்பட்ட வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பைல்களை சேவ் செய்து கொள்ளலாம்.

100 GB Free Cloud Storage

Get 100 GB Storage by Using Bing |

0 comments
க்ளவ்ட் ஸ்டோரேஜ் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்து பவர்களைத் தன் பக்கம் இழுக்க, மைக்ரோசாப்ட் ஒரு பரிசுத் திட்டத்தினை அறிவித்துள்ளது.

அதன் தேடல் சாதனமான பிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, தன் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ட்ரைவ் ஒன் ட்ரைவில், 100 ஜிபி இலவச இடம் தருவதாகக் கூறியுள்ளது. நீங்கள் பிங் மட்டும் பயன்படுத்தினாலும், அல்லது கூகுள் மற்றும் பிங் தேடல் தளங்களை, மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும், இந்த திட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு முறை நீங்கள் பிங் தளம் செல்லும்போதும், மைக்ரோசாப்ட் அதனைப் பதிவு செய்து கொள்கிறது. ஒவ்வொரு முறை செல்வதற்கும் அதற்கான கிரெடிட்களைத் ("credits”) தருகிறது.

இவ்வாறு 100 கிரெடிட்கள் ஒருவரின் கணக்கில் சேர்ந்த பின்னர், அதனைப் பயன்படுத்தி அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் க்ளவ்ட் ஸ்டோரேஜ் தளமான ஒன் ட்ரைவில், 100 ஜிபி இடம் ஓர் ஆண்டு பயன்பாட்டிற்கெனப் பரிசாகப் பெறலாம்.

இத்துடன், தங்கள் நண்பர்களை பிங் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பவர்களுக்கும் இந்த கிரெடிட் தரப்படும். இதே போல பிங் ரிவார்ட்ஸ் திட்டத்திற்கு நண்பர்களை அழைத்தாலும் கிரெடிட் உண்டு.

மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவில் புதியதாக அக்கவுண்ட் தொடங்கும் அனைவருக்கும் 7 ஜிபி இலவச இடம் தந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Heart proplems and T.M.T: இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால் | டிரெட் மில் டெஸ்ட்

0 comments
பெரும்பாலான நோயாளிகளுக்கு பிரதான ரத்தக்குழாயில் இல்லாமல், சிறு சிறு கிளைகளில் அடைபட்டிருந்தால், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தவிர்த்து, 80 சதவீதம், மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும்

இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால், 50 முதல், 80 சதவீதம் பேரை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும். பிரதான மூன்று ரத்தக் குழாய்களிலும் அடைப்பு இருந்தால் மட்டுமே, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்.


இதய நோய்க்கு, டி.எம்.டி., பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன?

‘டிரெட் மில் டெஸ்ட்’ என்பதையே, சுருக்கமாக டி.எம்.டி., என்கின்றனர். இ.சி.ஜி., பரிசோதனையில், மாற்றங்கள் தெரிந்தால், அவருக்கு இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்பதை, கண்டறியும் பரிசோதனை இது.

இன்னும் சொல்வது என்றால், அதிக வேலைகள் செய்யும் போது, எனர்ஜி தேவை. அதற்கேற்ப இதயத்திற்கு ரத்த ஓட்டம் சரியாக செல்லவில்லை என்றால், அவர்களுக்கு நெஞ்சில் வலி ஏற்படும். இந்த வலி எதனால், எந்த மாதிரியான கடின வேலை செய்யும் போது வருகிறது என, கண்டறியும் முதற்கட்ட பரிசோதனை இது.

இந்த பரிசோதனை எப்படி செய்யப்படும்?

நடைபயிற்சி இயந்திரத்தில் (டிரெட் மில்), குறைந்த வேகத்தில் நடக்க வைப்பர். படிபடியாக வேகத்தை கூட்டி, ஓட வைப்பர். 5 முதல் 10 நிமிடங்கள் வரை பரிசோதனை நடக்கும். பயிற்சியின் போது, கை, கால்கள், மார்பு பகுதி என, ஆறு, ஏழு இடங்களில், இ.சி.ஜி., லீட்கள் பொருத்தப்பட்டு, அதை, கம்ப்யூட்டருடன் இணைத்து, பதிவு செய்யப்படும். ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு அனைத்தும் பதிவாகும். எந்த நேரத்தில் அவரால் நடக்க முடியவில்லை; எப்போது நெஞ்சு வலி வருகிறது என, துல்லியமாக தெரிந்து விடும்.

உடனடியாக, பயிற்சி நிறுத்தப்பட்டு, ஓய்வு தரப்படும். அப்போதும், இ.சி.ஜி.,யின் மாற்றம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்றால், இதய ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளது என்று, அர்த்தம்.

இந்த பரிசோதனையை யார் எல்லாம் செய்ய வேண்டும்?

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இனம்புரியாத தலை சுற்றல், மயக்கம், மார்பில் படபடப்பு, மார்பு இருக்க உணர்வு உள்ளோர், கொழுப்பு சத்து அதிகம் உள்ளோர் ஒல்லியாக இருந்தாலும், குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வர வாய்ப்புஉள்ளதால், டி.எம்.டி., பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ரத்த குழாய் அடைப்புக்கு டிரெட் மில் சோதனை தான் இறுதியானதா; வேறு பரிசோதனைகள் உண்டா?

‘டிரெட் மில்’ பரிசோதனை என்பது, முதற்கட்ட பரிசோதனை தான். இதில், ரத்தக்குழாய் அடைப்பு என, தெரிந்தால், அடுத்த கட்டமாக, ‘குரோனரி ஆஞ்சியோ கிராம்’ என்ற பரிசோதனை செய்ய வேண்டும்.

இதில், இதய பாதிப்பை உறுதி செய்து கொள்ளலாம். இதுதான், ரத்தக்குழாய் அடைப்பை கண்டறியும் முடிவான பரிசோதனை.

குரோனரி ஆஞ்சியோ கிராம் சோதனை எப்படி செய்யப்படுகிறது?

தொடை அல்லது கையில் உள்ள தமணி வழியாக, நரம்பு போன்ற கத்திட்டரை (சோதனை கருவி) செலுத்தி, இதயம் வரை கொண்டு சென்று, இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாக என, கண்டறியப்படும். தற்போது, பெரும்பாலும் கை மணிக்கட்டு தமணியில் வழியாகவே அதிகம் செய்யப்படுகிறது. இது, எளிதாக கருதப்படுகிறது; எந்த சிக்கலும் இல்லை.


ரத்தக்குழாய் அடைப்பு உறுதியானால் அறுவை சிகிச்சை தான் தீர்வா?
பெரும்பாலான நோயாளிகளுக்கு பிரதான ரத்தக்குழாயில் இல்லாமல், சிறு சிறு கிளைகளில் அடைபட்டிருந்தால், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தவிர்த்து, 80 சதவீதம், மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும்.

ஒரே ஒரு ரத்தக்குழாயில் மட்டும், 1 செ.மீ., அளவுக்கு குறைவாக, 80 முதல் 90 சதவீதம் வரை அடைப்பு இருந்தால், அவர்களுக்கு ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ எனப்படும், நரம்பு வழியாக காற்று புகுத்தி செய்யும் பலுான் சிகிச்சை செய்யலாம். மூன்று பிரதான ரத்த குழாயில் அடைப்பு இருந்தால், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதே தீர்வு; வேறு வழியில்லை.

‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்றால் என்ன? அதற்கான நவீன சிகிச்சை என்ன?

இதயத்தின் மூன்று ரத்தக்குழாய்களும் அடைக்கப்பட்டு, மயக்க நிலை ஏற்பட்டால், ‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்று பெயர். பாதிப்பின் தன்மை அதிகம். இதற்கு, ஐ.ஏ.பி.பி., (இண்டிரா அயோதிக் பலூன் பம்ப்) சிகிச்சை அளிக்கப்படுகிறது. நரம்பு வழியாக ஒரு பலூனை மகா தமணியின் இடது பக்கம் செலுத்தி, ‘ஹீலியம்’ என்ற வாயுவை அந்த பலூனில் செலுத்தி, இயந்திரத்தில் இணைத்து விடுவர்.

அந்த இயந்திரம் பலூனை சுருங்கி, விரிவடையச் செய்து, இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும். இதனால், இதயம் ஓய்வெடுப்பதால், அது நலம் பெற்று மீண்டும் சீராக இயங்க முடியும். இந்த அதிநவீன சிகிச்சையால் மட்டுமே, மிகப்பெரிய மாரடைப்பில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும். மாநகரங்களில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் தான், இந்த வசதி உள்ளது.
அதிலும், தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் மிக குறைவே. சென்னை, அரசு பொது மருத்துவமனையில் இந்த வசதி உள்ளது; இலவசமாக செய்யப்படுகிறது.

இதுபோன்று பாதிப்பு வராமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்?

உரிய நேரத்தில் அளவோடு சாப்பிட வேண்டும். எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. நேரமில்லை என்றால், இரவிலும் உடற்பயிற்சி செய்யலாம். மன அழுத்தம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்; அதற்கு யோகா, தியானம் நல்ல பலன் தரும் இதோடு, சரியான தூக்கமும் இருந்தால், இதய நோய் அல்ல; எந்த நோய் பாதிப்பும் வராது.

டாக்டர் கே.எஸ்.கணேசன்,
இதய துளைவழி அறுவை சிகிச்சை நிபுணர்,
சென்னை அரசு பொது மருத்துவமனை.

நன்றி-தினமலர்

கெடுவான், கேடு நினைப்பான் - ஜெயதேவர்

0 comments
‘கெடுவான், கேடு நினைப்பான்’ என்பது பழமொழி. பொறாமை மற்றும் பேராசையின் காரணமாக, ஒருவன், அடுத்தவனை அழிக்க நினைத்தால், அது, அவனுக்கே வினையாக முடிந்து விடும்.

அதனால் தான், நம் முன்னோர்கள், ‘நல்லதே, நினை; நல்லதே நடக்கும்’ என்றனர். கடவுள் மேல், உண்மையான அன்புடன் பக்தி செலுத்துவோரை, எந்த கெடுதல்களும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு, ஜெயதேவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்:

ஜெயதேவர், பாண்டுரங்கன் மேல், மிகுந்த பக்தி கொண்டவர். சதா சர்வ காலமும், இறைவனின் நாமாவை சிந்தனையில் வைத்து, அவனையே துதித்துக் கொண்டிருப்பவர்; சாந்த சொரூபி.

அவருடைய தந்தை போஜதேவ். இவர், தன் நண்பர் நிரஞ்சன் என்பவரிடம், சிறிதளவு பணம், கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில்,போஜதேவ், அவருடைய மனைவியும் எதிர்பாராத விதமாக இறந்து விட்டனர்.

அப்போது ஜெயதேவர் சிறுவனாக இருந்தால், கடன் கொடுத்தவருக்கு, ஜெயதேவர் இருந்த வீட்டை, தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற, பேராசை தோன்றியது.

அதனால், அவர், போஜதேவ், தன்னிடம் ஏராளமாகக் கடன் வாங்கி இருப்பதாக பொய் பத்திரம் எழுதி, ஜெயதேவரிடம், கையெழுத்தும் வாங்கி விட்டார்.
கொஞ்ச காலம் ஆயிற்று. கடன் கொடுத்திருந்த நிரஞ்சன், ஜெயதேவரின் வீட்டை, ஜப்தி செய்வதற்காக வந்தார்.

அவர் வந்ததற்கான காரணத்தை அறிந்ததும், ஜெயதேவர் கவலைப்படவில்லை. கடவுள் விட்டவழி என்று இருந்து விட்டார்.
நிரஞ்சனோ, ஜெயதேவரை வீட்டை விட்டு வெளியேறும்படி நிர்பந்தப்படுத்தி, சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது நிரஞ்சனின் மகன், வேகமாக ஓடி வந்து, ‘அப்பா… நம் வீடு தீப்பிடித்து எரிகிறது… நம்ம வீடு தீப்பிடித்து எரிகிறது…’ என்று, பதறினான்.
அதைக் கேட்டதும், நிரஞ்சனுக்கு ஜப்தி மறந்து போய், தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடினார். ஜெயதேவரும் அவருக்கு உதவி செய்ய, அவரை பின் தொடர்ந்து ஓடினார்.

வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்து, திகைத்து நின்றார் நிரஞ்சன். அவரால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயதேவரோ, இருக்கும் பொருட்களையாவது காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில், தீப்பிடித்த வீட்டிற்குள் நுழைந்தார்.

அதே வினாடியில், தீ அணைந்தது; நிரஞ்சன் வியந்தார். ஜெயதேவனின் கால்களில் விழுந்தார், ‘அப்பா… நீ என்னை விட எவ்வளவோ வயது சிறியவன்; ஆனால், குணத்திலோ, ஆகாயம் அளவு உயர்ந்து விட்டாய். உன்னுடைய வீட்டை அபகரிக்க எண்ணிய எனக்கு, உதவி செய்ய ஓடி வந்தாயே… என்னை மன்னித்து விடு…’ என, வேண்டினார்.

ஜெயதேவர் சொன்னபடியெல்லாம், பகவான் பாண்டுரங்கன் செய்தார் என்றால், சிறுவயதில் இருந்தே, அவர், கடவுள் பக்தியும், நற்குணங்கள் நிரம்பியவராக இருந்தது தான் காரணம்.

Chrome browser tips in tamil :- குரோம் பிரவுசர் டிப்ஸ்

0 comments

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பல பிழையான குறியீடுகள் காரணமாக, அதன் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாகச் சில ஆண்டுகளாகவே இருந்து வந்தது.

இதனால், பல பயனாளர்கள் <a href="https://www.google.com/intl/en/chrome/browser/">குரோம் பிரவுசருக்கு</a> மாறத் தொடங்கினர். இன்று பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் பிரவுசராக குரோம் உள்ளது.

அதில் விரைவாகவும் எளிதாகவும் பயன் பெறும் வகையிலான சில டிப்ஸ்கள் இங்கு வழங்கப்படுகின்றன.

இணைய தளம் ஒன்றைத் திறந்தவுடன், அதில் உள்ள வீடியோக்களும் மற்ற ப்ளாஷ் பைல்களும் தாமாக இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட வேண்டுமா? குரோம் பிரவுசரின் அட்ரஸ் பாரில் chrome://settings/content என டைப் செய்து கிடைக்கும் தளம் செல்லவும். இங்கு கீழாகச் சென்றால், "Plugins” என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதில் "Click to play.” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அனைத்து மல்ட்டி மீடியா பைல்களும் அதன் நிலை மறைக்கப்பட்ட (grayedout) பெட்டிகளாகத் தோற்றமளிக்கும். இதில் கிளிக் செய்தால் இவை இயக்கப்படும். சில குறிப்பிட்ட தளங்கள் தாமாக இயக்கப்படக் கூடாது என முடிவு எடுக்க விரும்பினால், "Manage exceptions” என்ற பட்டன் அழுத்தி அவற்றைத் தரலாம்.

பிரவுசரில் உள்ள டேப்களை விண்டோவின் உள்ளும் வெளியேயுமாக இழுத்து அமைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இன்னொரு ஷார்ட்கட் வழியும் உள்ளது. டேப் ஒன்றின் தலைப்பு பெட்டியின் நடுவே கிளிக் செய்தால், (பிரவுசர் விண்டோவின் மேல் பகுதியில்) அந்த டேப் மூடப்படும்.

நடுப்பகுதியைக் கொண்டு கிளிக் செய்வது குரோம் பிரவுசரில் பல செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. லிங்க் ஒன்றில் இவ்வாறு கிளிக் செய்திடுகையில், அந்த லிங்க்குடன் தொடர்பு உள்ள தளம் புதிய டேப்பில் பின்புலமாகத் திறக்கப்படும். இதன் மூலம், எந்த தலையீடும் இன்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்திலேயே செயல்படலாம். லிங்க் மட்டுமின்றி, கீழ்விரி மெனு பட்டியலில் உள்ளவற்றிலும் இதே போல நடுப்பகுதியில் கிளிக் செய்து புதிய செயல்பாட்டினைக் கொள்ளலாம். நீங்கள் நடுப்பகுதி கிளிக் செய்திட விரும்பவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். Ctrl கீ அழுத்தியவாறு, லெப்ட் கிளிக் செய்தால், இதே செயல்பாடு மேற்கொள்ளப்படும். இதே நிலையில், ஷிப்ட் கீ அழுத்தி, லெப்ட் கிளிக் மேற்கொண்டால், டேப்பிற்குப் பதிலாக, புதிய விண்டோவில் குறிப்பிட்ட தளம் திறக்கப்படும்.

இன்னொரு அட்ரஸ் பார் குறிப்பினையும் இங்கு பார்க்கலாம். இதில் தேடல் சொற்கள் அல்லது இணைய முகவரியினை டைப் செய்த பின்னர், Alt+Enter கீகளை அழுத்தினால், தேடலுக்கான முடிவுகள், புதிய டேப்பில் தரப்படும். நீங்கள் இருக்கும் பக்கத்தில் கிடைக்காது.

ஒன்றுக்கு மேற்பட்ட டேப்களை நகர்த்தவோ அல்லது மூடவோ விரும்பினால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, இணைய தளப் பக்கங்களைக் காட்டும் டேப்களில் கிளிக் செய்தால் போதும். அவை அனைத்தும் தேர்ந்தெடுக் கப்படும். பின்னர் இவற்றை மொத்தமாக, புதிய விண்டோவிற்கு இழுத்துச் செல்லலாம். அல்லது Ctrl+W கீகளை அழுத்தி மூடிவிடலாம்.

தவறுதலாக டேப் ஒன்றினை மூடிவிட்டீர்களா? Ctrl+Shift+T என்ற கீகளை அழுத்தினால், அவை மீண்டும் கிடைக்கும். மீண்டும் தொடர்ந்து இந்த கீகளை அழுத்தினால், ஏற்கனவே மூடப்பட்ட இணைய தளப் பக்கங்கள், பின் நிகழ்விலிருந்து வரிசையாகக் கிடைக்கும்.

Ctrl+H என்ற கீகளை அழுத்தி எப்போதும் உங்களுடைய பிரவுசிங் நடவடிக்கைகளைக் (browsing history) காணலாம். ஏதேனும் ஒரு டேப்பில் உள்ள இணைய தளத்தில் பார்த்த முந்தைய பக்கங்களையும் காணலாம். இதற்கு பிரவுசரின் மேல் இடது பக்கம் உள்ள Back பட்டனை அழுத்திப் பிடித்தவாறு அதனைக் கிளிக் செய்திட வேண்டும். டிப்ஸ் 3 மற்றும் 4ல் குறிப்பிட்ட கண்ட்ரோல் + நடு கிளிக் அல்லது ஷிப்ட்+ க்ளிக் இங்கேயும் செயல்படும். இதன் மூலம், பழைய லிங்க் ஒன்றை புதிய டேப் அல்லது விண்டோவில் திறக்கலாம்.

இணைய தளப் பக்கத்தில் உள்ள டெக்ஸ்ட் ஒன்றினை ஹை லைட் செய்தால், அதன் பின்னர், அதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு அதனைத் தேடி அறிவதற்கான விருப்பக் குறி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டில், லிங்க்காக இல்லாமல், இணைய தள முகவரி ஒன்று இருந்தால், அதனை காப்பி/பேஸ்ட் செய்திடாமல், பெறும் வழி கிடைக்கும்.

டெக்ஸ்ட் ஹைலைட் செய்து, அதனை அப்படியே அட்ரஸ் பாருக்கு இழுத்துச் சென்று புதிய தேடல் அல்லது இணைய உலாவினை மேற்கொள்ளலாம்.

தேர்ந்தெடுத்த இணைய முகவரி டெக்ஸ்ட்டை அப்படியே இழுத்துச் சென்று பிரவுசரின் மேலாக இழுத்துச் சென்று, அதாவது வலது கோடியில் இருக்கும் டேப்பிற்கு அருகே, விட்டால், புதிய டேப்பில் அது காட்டப்படும்.

தேடல் சொற்களை குரோம் பிரவுசரில் அமைக்கையில், மாறா நிலையில், அது கூகுள் தேடல் டூலை பெற்று தேடுகிறது. இதற்குப் பதிலாக, நீங்கள் Amazon அல்லது YouTube தளங்களில் தேட வேண்டும் என எண்ணினால், அந்த தேடல் தளத்தின் பெயரை டைப் செய்து, பின்னர் டேப் கீயை ஒரு முறை அழுத்தியபின், தேடலுக்கான சொற்களை டைப் செய்திடலாம். வேறு சர்ச் இஞ்சின்களைப் பயன்படுத்த எண்ணினால், அட்ரஸ் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் "Edit search engines.” என்பதனைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விரும்பும் சர்ச் இஞ்சின் பெயர்களை அமைக்கலாம். நீங்கள் அமைக்கும் தேடல் தளங்களுக்கு கீ போர்டில் ஷார்ட் கட் கீகளை அமைக்கும் வசதியும் இங்கு கிடைக்கும்.

உங்கள் கூகுள் ட்ரைவில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பைல்களை, குரோம் பிரவுசரின் அட்ரஸ் பாரில் இருந்தே நேரடியாகத் தேடிப் பெறலாம். மேலே சொன்ன வகையில் "Edit search engines” என்ற மெனுவினைத் தேடிப் பெறவும். இங்கு புதிய சர்ச் இஞ்சினாக "Google Drive” என அமைக்கவும். இதற்கான இணைய முகவரியாக, http://drive.google.com/?hl=en&amp; tab=bo#search/%s என டைப் செய்திடவும். பின்னர் Done என்ற பட்டனை அழுத்தினால், ட்ரைவ் உங்களுக்குக் கிடைக்கும். ஷார்ட்கட் கீயாக "gd” எனக் கூட அமைக்கலாம். இவ்வாறு அமைத்த பின்னர், அட்ரஸ் பாரில் "gd” என டைப் செய்தால், நேரடியாக கூகுள் ட்ரைவில் உங்கள் பக்கத்திற்குச் செல்வீர்கள்.

மேலே டிப்ஸ் 12ல் தந்துள்ளதனை, Gmail தளத்திற்கும் அமைக்கலாம். மேலே கூறியபடி சென்று, "Gmail,” என டைப் செய்திடவும். இதற்கான ஷார்ட் கட் கீகளாக gm என அமைக்கவும். அடுத்து இணைய முகவரியாக, https://mail.google.com/mail/ca/u/0/#search/%s என அமைக்கவும்.

உங்களுடைய புக்மார்க்குகளைத் தேடிப் பெறவும் ஒரு ஷார்ட்கட் வழி உள்ளது. இதற்கு குரோம் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திட வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இதன் பெயர் Holmes. இதனை இன்ஸ்டால் செய்தவுடன், அட்ரஸ் பாரில் ஒரு ஆஸ்டெரிக் (*) அடையாளம் ஒன்றை டைப் செய்து, பின் டேப் ஒருமுறை தட்டி, அடுத்து நீங்கள் காணவிரும்பும் புக்மார்க் சார்ந்த சொற்கள் எதனையேனும் டைப் செய்து, அதனைப் பெறலாம்.

நீங்கள் அமைத்துள்ள குரோம் புக்மார்க் அனைத்தையும் பெற எண்ணினால், Ctrl+Shift+B என்ற கீகளை அழுத்தினால், புக்மார்க் பார் காட்டப்படும். மீண்டும் அழுத்த, பிரவுசரைப் பார்ப்பீர்கள்.

Ctrl+Shift+D கீகளை அழுத்தினால், திறந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தளங்களும் புக்மார்க்காக ஒரு தனி போல்டரில் சேவ் ஆகும். மீண்டும் அவை அனைத்தையும் திறக்க, போல்டரில் ரைட் கிளிக் செய்து, "Open all bookmarks in new window.” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

Facebook beats Microsoft and Google: முதல் இடத்தில் பேஸ்புக்

0 comments
வாட்ஸ் அப் செயலியைத் தனதாக்கிக் கொண்டதன் மூலம், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்ட உலகின் முதல் தொலைதொடர்பு நிறுவனமாக, பேஸ்புக் இடம் பெறுகிறது. 
இந்த வகையில், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
தற்போது மெசேஜ் மற்றும் போட்டோ பகிர்ந்து கொள்ள வாட்ஸ் அப் செயலியில் வசதி உள்ளது. இனி, வாய்ஸ் பகிர்வும் இதில் தரப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. 

வாட்ஸ் அப் செயலியிடம், உலக அளவில், 50 கோடி போன் எண்கள் உள்ளன. அத்துடன் இவை, இணையத்தில் எந்த இடத்தில் உள்ளன என்ற தகவலையும் வாட்ஸ் அப் வைத்துள்ளது.
இந்த அளவிற்கு வழக்கமான தொலைபேசிகள் தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்தாலும், வாட்ஸ் அப் இந்த தொலைபேசி பயன்பாட்டிற்கு எந்த நிறுவுதல் கட்டணமோ, செயல்படுத்துவதற்கான கட்டணமோ வாங்குவதில்லை என்பது இதன் சிறப்பு. 
இதனை மைக்ரோசாப்ட், தான் வாங்கிய ஸ்கைப் வசதியுடன் சாதித்திருக்க முடியும். கூகுள் நிறுவனமும் தன் கூகுள் வாய்ஸ் மூலம் இதனை மேற்கொண்டிருக்க முடியும். 
ஏன், பேஸ்புக் இதனை அடைய முன்பே அதற்கான வசதிகள் இருந்தன. ஆனால் இவற்றால் இயலவில்லை. என்ன காரணம்?
இவ்வாறு அதிக எண்ணிக்கையில் தொலைபேசி எண்கள்,ஒரு நிறுவனத்திடன் வரக் காரணம், ஸ்மார்ட்போன்களும் இணையமும் இணைந்ததுதான். போன்கள் போன்களாகவும், கம்ப்யூட்டர்கள் டெஸ்க்டாப்புடன் இணைந்ததாகவும், தனித்தனியே இருக்கையில், தொலை தொடர்பு விரிவாக இல்லை. 
ஸ்கைப் மற்றும் மொபைல் போன்களில் கிடைக்கும் தொலை தொடர்பு வசதிகளில் பெருத்த இடைவெளி இருந்தது. ஸ்மார்ட் போன்கள் வரத் தொடங்கிய போது, இணைய கட்டணம் (அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில்) மிக அதிகமாக இருந்தது. 
எனவே, இரண்டிற்கும் இடையே வேறுபாடு இருந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, இந்த வேறுபாடு களையப்பட்டு, இரண்டும் இணைவாக இணைந்து புரட்சியை ஏற்படுத்தின. இதில், தற்போது ஏற்பட்டுள்ள பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் இணைப்பு சரியான தருணத்தில் உருவாகி, பேஸ்புக் நிறுவனத்திற்கு முதல் இடத்தைத் தந்துள்ளது.

Meenakshi Kalyanam: மீனாட்சி கல்யாணம்

0 comments
கந்தர்வ லோகத்தில் வசித்த விச்வாவஸு என்பவன் சிவனருளால், வித்யாவதி என்ற குழந்தையைப் பெற்றான்.

ஒரு சமயம், வித்யாவதிக்கு, அம்பாள் அருள் பாலிக்கும், பூலோக புண்ணிய தலங்களுக்கு செல்ல வேண்டும் என, விருப்பம் ஏற்பட்டது.

தன் விருப்பத்தை தந்தையிடம் தெரிவித்தாள். விச்வாவஸு அவளிடம், ‘கடம்பவனம் எனப்படும் மதுரையில், ‘சியாமளா’ என்ற பெயரில், அம்பாள் அருள்பாலிக்கிறாள். அவளை வழிபட்டு வா…’ எனக் கூறினான்.

அதன்படி அம்பாளைத் தரிசிக்க, வித்யாவதி கடம்பவனம் வந்தாள். சியாமளா தேவி சன்னிதி முன் நின்று, மனமுருக வழிபட்டாள்.

அந்த தலம், அவளுக்கு மிகவும் பிடித்துப் போகவே, கந்தர்வ லோகத்துக்கு திரும்ப மனமின்றி, அங்கேயே தங்கி, அன்னைக்கு சேவை செய்தாள்.

அவளுக்கு மூன்று வயது சிறுமியாக காட்சி தந்த அம்பிகை, ‘என்ன வரம் வேண்டும் கேள்…’ என்றாள். அம்பாளை குழந்தை வடிவில் பார்த்த வித்யாவதி, ‘குழந்தையாகக் காட்சி தந்த நீ, எனக்கு மகளாகப் பிறக்க வேண்டும்…’ என்று, வேண்டிக் கொண்டாள்.

அவளது விருப்பம், அடுத்த பிறவியில் நிறைவேறும் என்று, அம்பாள் வாக்களித்தாள்.

அதன்படி, மறு பிறப்பில், சூரசேனன் என்னும் மன்னனின் மகளாக அவதரித்தாள் வித்யாவதி. அவளுக்கு காஞ்சனமாலை என, பெயரிட்டனர். ‘காஞ்சனம்’ என்றால், தங்கம். தங்கம் போல் ஜொலிக்கும் அழகுடன் திகழ்ந்த அவளை, மதுரையை ஆண்ட மலையத்துவச பாண்டிய மன்னனுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

இவர்களுக்கு குழந்தை இல்லை. மன்னன் குழந்தை பேறுக்காக, புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினான். அந்த யாகத்தில், மூன்று வயது குழந்தையாகத் தோன்றினாள் அம்பிகை. அப்போது காஞ்சனமாலைக்கு, முற்பிறவியில் அம்பிகை வாக்களித்தது நினைவுக்கு வந்து, மகிழ்ந்தாள்.

யாகத்தில் தோன்றிய அக்குழந்தைக்கு, தடாதகை என, பெயர் சூட்டினர்.
ஆண் வாரிசு இல்லாத மன்னன், தடாதகைக்கு சகல கலைகளையும் கற்றுக்கொடுத்து, ஒரு ஆண் மகனைப் போல் வளர்த்து, பின், மதுரையின் ஆட்சி பொறுப்பையும் ஒப்படைத்தான்.

இவள் மீன் போல, எப்போதும் விழிப்புடன் இருந்து, ஆட்சி செய்ததால், மீனாட்சி என்ற பெயரைப் பெற்றாள். இதன் பிறகு, அம்பாளுக்கு சியாமளா என்ற பெயர் மாறி, இறுதியில், மீனாட்சி என்ற பெயரே நிலைத்து விட்டது. ‘சியாமளம்’ என்றால், பச்சை. மீனாட்சி, பச்சை வண்ண மேனியளாக இருந்தாள்.

சியாமளா தேவி, கல்விக்குரிய தெய்வம். இதனால் தான், மதுரை கல்விக்குரிய கிரகமான புதன் ஸ்தலமாக விளங்குகிறது. தன்னை வேண்டிய பக்தைக்கு அருளியவளாக மீனாட்சி இத்தலத்தில் அருளுகிறாள்.

இதனால் தான், பெண்களின் தெய்வமாக போற்றப்படுகிறாள். உலகையே வென்ற அவள், சுந்தரேஸ்வரரை மணம் முடித்து, இன்றும் நல்லாட்சி புரிகிறாள்.

அன்னையின் திருக்கல்யாண நன்னாளில், அவளது நல்லாசியைப் பெறுவோம்.

Understanding Pramma: பிரம்ம தத்துவம்

0 comments
பணம், பதவி, அதிகாரம் இம்முன்றும், எப்பேர்பட்ட மனிதருக்கும், ‘நான்’ எனும், ஆணவத்தை கொடுத்து விடுகிறது. அதன் விளைவாக, நாம் செய்யும் ஆணவ செயல்கள், பாவ வினைகளை பரிசாக கொடுத்து, பிறவிதோறும் அப்பாவ கர்மத்தை அனுபவிக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது. 

மேலும், இறை தன்மையை உணர, கர்வம், ஆணவம் இரண்டும் மிகப் பெரிய தடை கற்கள். அதனால் தான், ‘நான்’ எனும் ஆணவத்தை கடக்காமல், இறைவனை உணர முடியாது என்கின்றனர் மகான்கள். 

விநாயக பெருமான், ஜனக மகாராஜனுக்கு பிரம்மம் குறித்து ஏற்பட்டிருந்த ஆணவத்தை சுட்டிக் காட்டி, ஞானத்தை உபதேசித்த கதை இது: 

நாரதர், மிதிலையில் ஜனக மன்னன் சபைக்குள் நுழைந்தார். மன்னன், நாரதரை அலட்சியப்படுத்துவது போல், பார்க்கவும் இல்லை; ஆசனத்தில் இருந்து எழுந்திருக்கவும் இல்லை. ஆனால், அவன் செய்த அவமானத்தை, பொருட்படுத்தாத நாரதர், ‘ஜனக மன்னா… நலம் பெறுவாயாக…’ என்று, வாழ்த்தினார். 

இதைக் கேட்டதும், மன்னன் ஏளன சிரிப்புடன், ‘முனிவரே, அனைத்தும் பிரம்ம மயம் என, நம்புபவன் நான். அப்படி இருக்கும் போது, இதில் வாழ்த்துவது யார், வாழ்த்தப்படுவது யார்; பிரம்மம், பிரம்மத்தை வாழ்த்துமா, வாழ்த்தத்தான் முடியுமா?’ என்றார். 

ஜனகனின் பேச்சால், மனம் வருந்திய நாரதர், கவுண்டன்ய முனிவரின் ஆசிரமத்திற்குப் போனார். அங்கு பூஜையில் இருந்த, விநாயகர் திருவுருவை வணங்கி, ‘விநாயகா, ஜனகனுக்கு நல்லறிவைக் கொடு…’ என, வேண்டினார். 
அதே நேரத்தில், ஜனகனின் அரண்மனை வாயிலில், வெண் குஷ்டம் பிடித்த ஒருவர், பசிக்கு உணவு கேட்டார். மன்னன் உத்தரவுப்படி, அவரை ஓரமாக உட்கார வைத்து, உணவு கொடுத்தனர் பணியாளர்கள். 

வந்தவரோ, போடப் போட உண்டு கொண்டே இருந்தார். சற்று நேரத்திற்குள், அரண்மனையில் இருந்த அத்தனை உணவுப் பொருட்களும் தீர்ந்து போயின. 
பணியாளர்கள் உணவுப் பொருள் தீர்ந்து போன விஷயத்தை சொன்னதும், மன்னன் ஓடி வந்தான். ‘ஐயா, சற்று நேரம் தாமதியுங்கள். 

வெளியில் இருந்து பொருள் வரவழைத்து, உணவு போடுகிறேன்…’ என, வேண்டினான். 
வந்தவரோ, ‘மன்னா… இப்போது எனக்கு இருக்கும் பசியையே உன்னால் தீர்க்க முடியவில்லையே… இன்னும் சிறிது நேரம் தாமதித்தால், பசி அதிகமாகுமே… பசித்த வயிற்றுக்கு உணவிட முடியாத நீ எப்படி பிரம்மம் ஆக முடியும்? பிரம்மம் என்பது, ஒரு ஜீவராசியை, சிருஷ்டி செய்வதற்கு முன், அந்த உயிருக்கான உணவைப் படைத்த பின் தான், அந்த ஜீவனையே படைக்கும். அப்படியிருக்கையில், உன்னை எப்படி பிரம்மத்துக்கு ஒப்பிடுகிறாய்?’ என்று கேட்டு, வெளியேறினார். 

வெளியேறிய அந்த மனிதர், திரிசிரன் என்ற ஏழை வீட்டுக்குச் சென்று, அருகம்புல்லும், தீர்த்தமும் உண்டு, பசி தணிந்தார். அப்போது அந்த மனிதரின் வெண் குஷ்ட நோய் நீங்கி, அங்கே, விநாயகர் நின்றார். திரிசிரனின் ஏழ்மை நீங்க, அவர் இல்லத்தில், செல்வங்கள் நிறைந்தன. 

ஜனகனின் ஆணவ பக்திக்கு, அகப்படாத ஆண்டவன், ஒரு சாதாரண ஏழையின் அன்பிற்கு கட்டுப்பட்டு, அவர் தந்த, அருகம்புல்லை உண்டான். பக்திக்கு பணிவு அவசியம். பிறரை அவமதித்து, கடவுளை துதிப்பதில் பயனில்லை. 

பின் குறிப்பு: அருகம்புல், வெண் குஷ்டத்திற்கு தலைசிறந்த மருந்து என்று, தற்போதைய ஆராய்ச்சி கூறுகிறது. இதை, நம் முன்னோர்கள் ஏற்கனவே அறிந்திருக்கின்றனர்.

H.T.C Desire 616 tamilnadu: ஹெச்.டி.சி டிசையர் 616

0 comments
ஸ்மார்ட் போன் உலகில் தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ள ஹெச்டிசி நிறுவனம், தனது புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனான 'ஹெச்டிசி டிசையர் 616’-ஐ கடந்த வாரம் சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தியது.

இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் ஆபரேட்டிங் சிஸ்டத்தைக் கொண்டு இயங்குகிறது. ரூ.14,335 விலையில் இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட் போன், டூயல் சிம்  வசதிகளோடு வருகிறது.

5  இன்ச் அகலமான 720X1,280 பிக்ஸல் ஹெச்டி அளவு மிகத் துல்லியமான டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன், மீடியாடெக் MT6592 1.7GHz ஆக்டோ கோர் (Octo core) பிராசஸரைக் கொண்டு இயங்குகிறது.

ஹெச்.டி.சி டிசையர் 616
ஹெச்.டி.சி டிசையர் 616
மேலும், 'மாலி 450MP4’ என்ற கேமிங் பிராசஸரைக் கொண்டுள்ள ஹெச்டிசி டிசையர் 616, 1ஜிபி ரேம்மை கொண்டு இயங்குகிறது. விலை அதிகம் கொண்ட சில ஸ்மார்ட் போன்களில்கூட இந்த வசதிகள் இல்லை.

4 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியோடு வரும் ஹெச்டிசி டிசையர் 616 எஸ்டி கார்டு மூலம் 32 ஜிபி வரை விரிவுபடுத்தலாம். ஹெச்டிசி டிசையர் 616, 8 மெகா பிக்ஸல் பின்புற கேமராவை எல்இடி ஃப்ளாஷ் வசதியோடு பெற்றுள்ளது.

2 மெகா பிக்ஸல் முன்புற கேமராவையும் பெற்றுள்ளது. 3T, GPRS/EDGE, WiFi,  ப்ளூடூத் 4.0 போன்ற வசதிகளோடு வரும் இந்த போன், 2000mAh  பேட்டரியைக் கொண்டு இயங்குகிறது.

14 மணிநேரம் வரை டாக்டைம் தரும் என ஹெச்டிசி நிறுவனம் உறுதி தந்துள்ளது.



தனது பிரத்யேகமான ஓஎஸ் டிசைன் மற்றும் மொபைல் லுக்குக்குப் பெயர்போன ஹெச்டிசி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Business with subsidies in India,Tamilnadu: மானியம் வழங்கப்படும் தொழில்கள்

0 comments
Business with subsidies in India,Tamilnadu: மானியம் வழங்கப்படும் தொழில்கள்

1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
3. கன உதிரிபாகங்கள் தயாரிப்பு
4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி
5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
6. ஏற்றுமதி ஆபரணங்கள்
7. மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
8. விளையாட்டுப் பொருட்கள்
9. சிக்கன கட்டுமானப் பொருட்கள்
10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

Business with subsidies in India,Tamilnadu: மானியம் வழங்கப்படும் தொழில்கள் சரி, அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?

15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.

சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.

உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன.

1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மானியம் வழங்கப்படும் தொழில்கள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.

Sipcot parks are here in the below districts,

Cheyyar
Cuddalore
Dharmapuri
Erode
Gangaikondan
Gummidipoondi
Irungattukottai
Manamadurai
Nilakottai
Pudukkottai
Ranipet
Siruseri
Sriperumbudur
Tuticorin

Subscribe to our mailing list for more about Starting a Business and other interesting articles in Tamil apart from this Business with subsidies in India,Tamilnadu: மானியம் வழங்கப்படும் தொழில்கள்.

Instant Tomoto Soup recipe Business: உடனடி தக்காளி சூப் மிக்ஸ் தயாரிக்கும் முறை - சுய தொழில்

0 comments
முழுவதுமாக பழுத்த கெட்டியான தக்காளிப் பழங்களை குழாயில் ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவவும்.

பின் இதனை சிறு துண்டுகளாக  வெட்டி தனி அறை உலர்த்தியில் 80 0 செல்சியஸில் 10 மணி நேரம் உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட துண்டுகளை மின் அம்மியில் அரைத்து பொடியாக்க வேண்டும்
.
தக்காளி சூப் மிக்ஸ் தயாரிக்கும் முறை:

உடனடி தக்காளி சூப் மிக்ஸ் தேவையான பொருட்கள்

தக்காளிப் பொடி 5.0 கிராம்
வெங்காயப் பொடி 0.5 கிராம்
சோள மாவு 2.0 கிராம்
சீரகத் தூள் 0.5 கிராம்
மிளகுத் தூள் 0.3 கிராம்
உப்பு 1.5 கிராம்
அஜினமோட்டோ 0.5 கிராம்

உடனடி தக்காளி சூப் மிக்ஸ் செய்முறை:

அனைத்து தேவையான பொருட்களை நன்கு கலக்கி பாலித்தீன் பைகளில் மூட்டை கட்டவேண்டும்.

வெங்காயப் பொடியை தயாரிக்கும் முறை:

பெரிய வெங்காயத்தை தேர்வு செய்து தோலை உறிக்கவும். பின் இதனை குழாயில் ஓடும் நீரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கவும்.

இதனை தனி அறை உலர்த்தியில் 60 0 செ 7 மணி நேரம் வரை வைத்து உலர்த்த வேண்டும். நீர் நீக்கம் செய்யப்பட்ட செதில்களை அரைத்து பொடியாக்கி பாலித்தீன் பைகளில் மூட்டைகட்டவும்.

10 கிராம் செய்து வைத்திருந்த தக்காளி சூப் மிக்ஸை 150 மில்லி கொதிக்கும் தண்ணீரில் சேர்த்து நன்கு கிளறவும்.

puliyodharai recipe Business: உடனடி புளியோதரை மிக்ஸ் - சுய தொழில்

Subscribe to our newsletter to get more Instant recipe business tips.

கார்ப்பரேட் விவசாய பட்ஜெட்! | 2014 Budget of india aligns with corporate agriculture

0 comments
கார்ப்பரேட் விவசாய பட்ஜெட்! | 2014 Budget of india aligns with corporate agriculture

விவசாயத்தில் 4% வளர்ச்சி என அறிவித்திருக்கிறார் மத்திய நிதி அமைச்சர். இந்த பட்ஜெட் அதற்கு உதவுமா என விவசாயத் துறை நிபுணரான நெல்லிக்குப்பம் கோதண்ட ராமனிடம் கேட்டோம்.

''விவசாயத்துக்கு 8 லட்சம் கோடி ரூபாய் கடன் அளிக்கப்படும் என்கிறார் அமைச்சர். ஆனால், இந்தக் கடனுதவியை யார், எப்படி பெறப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

பாரம்பரிய விவசாயத்துக்கு கடனுதவி தரப்படுமா அல்லது கார்ப்பரேட் விவசாயம் செய்பவர்களுக்குச் சென்று சேருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

அதுபோல, விவசாயிகளுக்கு மண்பரிசோதனை செய்துகொள்ள ஸ்மார்ட் கார்டு திட்டத்துக்கு ரூ.100 கோடி, வேளாண் துறைக்கு என்று தனித் தொலைக்காட்சி, நிலமில்லாத விவசாயிகளுக்கு நபார்டு வங்கி மூலம் கடனுதவி என பல திட்டங்களை அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டங்கள் விவசாய வளர்ச்சிக்கு எந்த அளவு பயன்படும் என்பது தெரியவில்லை.  விவசாய விளைபொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதாகச் சொல்லி, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய விலையைக் கிடைக்காமல் செய்துவிடக்கூடாது. இந்த பட்ஜெட்,  கார்ப்பரேட் விவசாயம் செய்பவர் களையே ஊக்குவிக்கும்'' என்றார்.

கார்ப்பரேட் விவசாய பட்ஜெட்! | 2014 Budget of india aligns with corporate agriculture

கட்டுரையாளர் தூரன்நம்பியிடம் பேசினோம். ''விளைபொருட்களின் விலையை நிர்ணயம் செய்து கட்டுக்குள் வைத்திருக்க ரூ.500 கோடி என்பது ஏமாற்றுவேலை.

சென்ற ஆண்டு உணவு தானிய உற்பத்தி 263 மில்லியன் டன். இதற்கு வெறும் 500 கோடி ரூபாய் ஒதுக்கினால் போதுமா? கங்கை மட்டுமல்ல, அனைத்து நதிகளுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.

பால் உற்பத்தி குறித்து ஒருவார்த்தையும் பட்ஜெட்டில் இல்லை. விவசாயிகளுக்கு நேரடியாகப் பயன்படாத பட்ஜெட் இது'' என்றார்.
அடுத்த பட்ஜெட்டிலாவது விவசாயிகளை மத்திய நிதி அமைச்சர் திருப்திப்படுத்த வேண்டும்!

Subscribe to our blog for more news letters like கார்ப்பரேட் விவசாய பட்ஜெட்! | 2014 Budget of india aligns with corporate agriculture.

Romance ragasiyangal: earth will not revolve if no love is here - ரொமான்ஸ் ரகசியங்கள்! காதல் மட்டும் இல்லைனா பூமி இங்கு சுத்தாது

0 comments
Romance ragasiyangal: earth will not revolve if no love is here - ரொமான்ஸ் ரகசியங்கள்! காதல் மட்டும் இல்லைனா பூமி இங்கு சுத்தாது.

மனித வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத விஷயம்... காதல். கற்கால மனிதர்களின் குகை ஓவியங்களில் இருந்து... லேட்டஸ்ட் இணையதளங்கள் வரை காதல் எங்கேயும் இடம் பிடித்திருக்கிறது.

இலக்கியம், புராணங்கள், இசை, ஓவியம், சிற்பம் என்று காதலைப் பற்றிப் பேசாத கலைகளே இல்லை. 'கலைகளிலேயே உன்னதமான கலை... சினிமா' என்பார் ரஷ்யப் புரட்சிக்காரர் லெனின்.

அந்த சினிமாவிலும் காதலே கதையின் தளம். டைட்டானிக் கப்பல் மூழ்கிய சம்பவத்தை ஒரு காவியமாக எடுத்த ஹாலிவுட், அதன் பிரதான அடிப்படையாக ஒரு காதலைத்தானே சொன்னது!

காதலைப் பற்றி ஆயிரக்கணக்கான படங்கள் உலகின் அநேக மொழிகளில் வெளிவந்து அழியாப் புகழைப் பெற்றிருக்கின்றன. அப்படிப்பட்ட  உன்னதமான படங்களில் ஒன்றுதான் பிரபல இரானிய இயக்குநர் மஜீதி மஜீத் இயக்கிய 'பரன்’!

'பரன்’ என்கிற வார்த்தைக்கு 'மழை’ என்று பொருள். இது ஒரு கவிதைத்துவமான காதல் கதை. ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்ட படம். இரான் நாட்டு தலைநகரான டெஹ்ரானின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் ஆப்கன் அகதிகளின் முகாம்கள் இருக்கும். தலிபான் அரசாங்கத்தின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், அங்கேதான் பல சிரமங்களிடையே வாழ்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்பவர்கள். அதிகாரப்பூர்வமான அனுமதி அட்டை இல்லாமல் சட்டவிரோதமாக வேலை செய்பவர்கள்.

டெஹ்ரான் நகரத்தில் குறைந்த கூலிக்கு இப்படி கட்டடப் பணியில் ஈடுபட்டிருக்கும் அகதிகளுக்கு... டீ, சாப்பாடு தரும் வேலையில் இருப்பான் உள்ளூர் குர்தீஷ் இளைஞனான லத்தீஃப். சுலபமான வேலை என்பதால் ஜாலியாகப் பொழுதை ஓட்டுவான்.

எல்லோரையும் கலாட்டா செய்தபடி இருப்பான். கட்டட வேலையில் இருக் கும் ஆப்கன் அகதி ஒருவர் விபத்தில் சிக்கி, காலில் அடிபட்டதால், தனக்குப் பதிலாக தன் இளம் மகனை வேலைக்கு அனுப்புகிறார். ரஹமத் என்னும் அந்தப் பையன் மிகவும் மென்மையாக இருக்கிறான்.

கடினமான வேலைகளை அவனால் செய்ய முடியாது என்று நினைக்கும் முதலாளி, டீ கொடுக்கும் வேலையில் அவனை போட்டுவிட்டு, லத்தீஃபை கட்டட வேலைக்கு மாற்றுகிறார்.

சுலபமான வேலை பறிபோனதால் கடுப்பான லத்தீஃப், ரஹ்மத்தை வம்பு செய்து கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில்... ரஹ்மத் ஆண் அல்ல பெண் என்பதும், அவளுடைய உண்மையான பெயர் பரன் என்பதும் அவனுக்குத் தெரிய வருகிறது.

பெண்கள் இதுபோல் வேலைக்குச் செல்ல அனுமதி இல்லை. ரஹ்மத்திடம் முறையான அனுமதி அட்டையும் இல்லை. இதெல்லாம் வெளியே தெரிந்தால் அவளுக்குப் பெரிய பிரச்னை ஆகிவிடும் என்பதால்தான் ஆண் வேடமிட்டிருக்கிறாள். இது தெரிந்த பிறகு, லத்தீஃபுக்குப் பாவமாகிவிடுகிறது. இன்ஸ்பெக்டர்களிடமிருந்தும் மற்ற ஆண்களிடமிருந்தும் அவளைக் காப்பாற்றுவதே அவனுக்கு வேலையாகிறது.

ஒரு பிரச்னையில் எல்லா ஆப்கன்காரர்களையும் வேலையைவிட்டே நீக்கி விடுகிறார் முதலாளி.  பரனைத் தேடி அவளுடைய அகதி முகாமுக்குப் போகிறான் லத்தீஃப். அங்கே காணும் காட்சிக ளும், பரனின் மேல் அவன் காதல் வயப்படும் காட்சிகளும் அற்புதமாக படம்பிடிக்கப்பட்டிருக் கின்றன. மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பரனின் குடும்பம். ஆனால், அவர்களிடம் பணம் இல்லை. தன்னுடைய அனுமதி அட்டையை விற்று, அந்தப் பணத்தை அவர்களிடம் தருகிறான் லத்தீஃப்.

பரன், லத்தீஃப்பிடம் விடைபெறும் கடைசி காட்சி கவிதை போல் எடுக்கப்பட்டிருக்கும். வெளியே சொல்லாத காதலுடன், ஒரு டிரக்கில் பரன் கிளம்ப, லத்தீஃப் கையசைக்க, அவளுடைய பெயரைச் சொல்வது போல் அப்போது மழை பொழிய ஆரம்பிக்கும். அரசியல் மற்றும் சமூக இன்னல்களிடையே ஒரு காதல் சத்தமின்றி நசுக்கப்படுவதை அதிக வசனம் இன்றி வெறும் விஷ§வலாகவே அழுத்தமாகச் சொன்ன அருமையான படம்... 'பரன்’.

காதல், நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. பழைய குடிசையில் வாழும் ஏழை விவசாயிக்கும் காதல் உண்டு. அம்பிகாபதி - அமராவதி, லைலா - மஜ்னு, ஷாஜகான் - மும்தாஜ், ஜென்னி -  மார்க்ஸ் என்று புகழ் பெற்ற ஜோடிகள் சரித்திரத்தில் இருந்தாலும், பாடப்படாத காவிய காதல்கள் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருக்கின்றன.

காதல் என்பதற்கு திட்டவட்டமான தியரி கிடையாது. மனிதனின் ஆதார இனப்பெருக்கத்துக்காக ஆண் - பெண்ணிடையே இயற்கை தோற்றுவிக்கும் இனக்கவர்ச்சிதான்... காதல். அறிவியல், காதலைப் பற்றி என்ன சொல்கிறது? ஒரு ஆணும் பெண்ணும் சந்திக்கும்போது காதல் தோன்றுவதற்கு முன்னால் அட்ரினலின் போன்ற ரகளையான நரம்பு வழி ரசாயனம், ஒரு பூகம்பம் போல் வெடித்துக் கிளம்புகிறது (இதைத்தான் 'ஒரு வித்தியாசமான ஃபீலிங்’ என்கிறார்கள் காதலர்கள்).

ஃபினைல்தைலமைன் என்கிற ரசாயனம் (காதலர்களின் ஃபேவரைட்டான சாக்லேட்டில் இது நிறைய உண்டு), அப்போது நரம்பு செல்களுக்கிடையே ரொமான்டிக்கான செய்திகளைப் பரப்புகிறது. இதனுடன் டோபோமைன் மற்றும் நோர்பைன்ஃபரைன் போன்ற உற்சாக ரசாயனங்களும் கைகோத்துக் கொள்ள, அட்ரினலின் சுரந்து, இதயம் ஏகாந்தமாக உணர்ந்து, படபடவென்று அடித்துக்கொள்கிறது.

ஆண் - பெண்ணுக்கிடையே காதல் தொடர்ந்து நீடிக்க ஆக்ஸிடோசின் என்கிற ரசாயனம் பெரும் உதவி செய்கிறது.
இதெல்லாம் அறிவியல் பார்வை. இதைத் தாண்டி இலக்கியப்பூர்வமான, கவிதைத்தனமான, இதிகாசத்தனமான காதல்கள் உண்டு. எந்தவித விளம்பரமும் இல்லாத சாதாரண மனிதர்களின் காதல்தான் உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை!

''நீங்கள் காதல் வயப்பட்டிருக்கும்போது உங்களால் தூங்க முடியாது. ஏனென்றால், காதலின் நிஜம் என்பது நீங்கள் தூக்கத்தில் காணக்கூடிய கனவுகளைவிட சுகமானது, ஆச்சர்ய மானது!'

'காதலுக்கு இனிமையான முடிவு என்பது கிடையாது. ஏனென்றால் காதலுக்கு முடிவு என்பதே கிடையாது!'

- இப்படி காதலைப் பற்றி எத்தனை எத்தனையோ பார்வைகள் இங்கே கொட்டிக் கிடக்கின்றன!

ஆகவே தோழிகளே... வாழ்க்கையின் அடிப்படை சூட்சமம் என்னவென்று தெரிகிறதா? ரொமான்ஸ்! அது இல்லாமல் வாழ்க்கை இல்லை. அது உங்கள் கண்ணீரில் ஆனந்தத்தை வரவழைக்கும்.

இதயத்தின் ரத்த ஓட்டத்தைச் சரிப்படுத்தும். துன்பங்களை விரட்டியடிக்கும் துணிவைத் தரும். தனிமையை தலைதெறிக்க ஓடவிடும். உங்கள் மனம் மற்றும் உடல் பிரச்னைகளை அற்புத மருத்துவமாகிக் காப்பாற்றும்.

காதலில்லாத மனித சரித்திரம் இல்லை. இலக்கியம், கலைகள் இல்லை.
உலகத்தின் அச்சு சுழல்வதே காதல் என்னும் அச்சாணியில்தான்.

Subscribe to our mailing letter for more articles like this Romance ragasiyangal: earth will not revolve if no love is here - ரொமான்ஸ் ரகசியங்கள்! காதல் மட்டும் இல்லைனா பூமி இங்கு சுத்தாது.

Curvy hip's for ladies: பெண்கள் அழகான உடலமைப்பைப் பெற முடியும்

0 comments
கொடி போல் இடை என்பது சில பெண்களுக்கு எட்டாக்கனிதான். பலர் குனிந்து, கால் விரல்களைத் தொட முடியாத அளவுக்கு தொப்பை விழுந்து  நடப்பதற்கே கஷ்டப்படுகின்றனர்.

முறையற்ற உணவுப்பழக்கமும், சரியான உடற்பயிற்சியின்மையும்தான் இதற்குக் காரணம்.

''நேரம் கிடைக்கும்போதெல்லாம், வீட்டிலிருந்தபடியே சின்ன சின்ன உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைத்து பெண்கள் அழகான உடலமைப்பைப் பெற முடியும்'' என்கிறார் 'ஃபிட்னெஸ் ஹப்’ உடற்பயிற்சி மையத்தின் உரிமையாளர் சாரதி. அப்படி சில எளிய பயிற்சிகள் இவை...

க்ரஞ்சஸ் (CRUNCHES)

தரையில் நேராகப் படுத்துக்கொண்டு இரண்டு கைகளையும் தலையின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும்.



பிறகு மெதுவாக கால்களை மடக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது தலை மற்றும் உடலின் மேற்பகுதியை நேராக முன் நோக்கி எழுந்து, திரும்பவும் பழைய நிலைக்கு வர வேண்டும்.

இதுபோல், 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: மேல் வயிறும் கீழ் வயிறும் சுருங்கி விரிவதனால், கொழுப்பு கரையும்.

பைசைக்கிள் க்ரஞ்சஸ் (BICYCLE CRUNCHES)

தரையில் நேராகப் படுத்து கைகளை மடக்கி தலைக்கு அடியில் வைத்துக்கொள்ள வேண்டும்.



கால்களை மடங்கிய நிலையில் தரையில் பதிக்க வேண்டும். இப்போது வலது கால் முட்டியும், இடது கை முட்டியும் தொடும் வகையில் உடலை  மேலே உயர்த்த வேண்டும்.

ஓரிரு விநாடிகளில் பழைய நிலைக்குத் திரும்பி,  இடது கால், வலது கைக்கு அதேபோல் செய்ய வேண்டும்.  இதுபோல் 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: நடு வயிற்றுப் பகுதி மற்றும் கீழ் வயிற்றுப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.

லெக் ரெய்சஸ் (LEG RAISES)

நாற்காலியில் அமர்ந்துகொண்டு கால்களை ஒன்றாகச் சேர்த்துவைத்து, மேலே நேராக உயர்த்தி, பிறகு மெதுவாக கீழே இறக்க வேண்டும். இதுபோல் 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.



பலன்கள்:: அடி வயிற்றில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு மற்றும் சதைப் பகுதி குறையும்.

சிட்டிங் ட்விஸ்டர் (SITTING TWISTER)

நாற்காலியில் நேராக அமர்ந்துகொண்டு கால்களை அகட்டிவைத்துக்கொள்ளவும்.

ஒரு கம்பை, தோள்பட்டைக்கு மேலாக வைத்துக்கொண்டு இரண்டு கைகளையும் தோள்களுக்கு நேராக நீட்டிவைக்க வேண்டும். இந்த நிலையிலேயே,  வலது மற்றும் இடது புறமாகத் திரும்ப வேண்டும். இந்த பயிற்சியை 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்:தொடை, இடுப்புப் பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும்.


சைடு டம்பிள்ஸ் (SIDE DUMBBELL)  

தரையில் நேராக நின்றுகொண்டு ஒரு கையை சல்யூட் அடிப்பது போல் நெற்றியிலும், மற்றொரு கையில் கனமான ஒரு பொருளையும் வைத்துக்கொண்டு, இடது மற்றும் வலது புறமாக மாறி மாறி சாய வேண்டும். இந்த பயிற்சி 15-20 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: தொடை, இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்க உதவும்.


ஹைபர் எக்ஸ்டென்ஷன் (HYPER EXTENSION)

தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு கைகள் இரண்டையும் தலையின் பின்புறம் வைத்துக்கொள்ள வேண்டும்.


இரண்டு கால்களையும், தலையையும் தரையில் இருந்து சற்று மேலே உயர்த்த வேண்டும். உடல் எடை வயிற்றில் தாங்கியபடி பார்ப்பதற்கு படகு போல் இருக்கும்.

இதை 10 முதல் 15 முறை செய்ய வேண்டும்.

பலன்கள்: முதுகுத் தசைகள் வலு பெறும். வயிற்றுப் பகுதியில் உள்ள தேவை இல்லாத கொழுப்பு கரையும்.

Thanks: Vikatan

Subscribe to our mailing list for more articles like Curvy hip's for ladies: பெண்கள் அழகான உடலமைப்பைப் பெற முடியும்

Increase sales through websites: வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி

0 comments
Increase sales through websites: வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி

தங்களை பற்றி சொல்ல, தங்களுக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள, செய்திகளை மக்களுக்கு கொண்டு செல்ல, நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் கொண்டுசெல்ல மற்றும் பணம் சம்பாதிக்க என்று பலரும் பலவிதமாக வெப்சைட்டுகளை அமைத்து பராமரித்து வருகின்றனர்.

மக்கள் இப்போது போன் மற்றும் டிவியை விட இன்டர்நெட்டை அதிகம் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டனர் என்பதே இதற்கு காரணம். ஏனென்றால் நீங்கள் தேடும் மற்றும் எதிர்பார்க்கும் அனைத்தும் இன்டர்நெட்டில் சில நொடிகளில் கிடைக்கிறது.

உதாரணமாக இப்போது கிரிக்கெட் நடந்து கொண்டு இருக்கிறது. உங்கள் டிவியில் அந்த சானல் வரவில்லை என்றால் அந்த போட்டியை உங்களால் காண இயலாது.

ஆனால் இன்டர்நெட்டில் அப்படியில்லை, அந்த போட்டியை நீங்கள் நேரடியாக அதுவும் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

Increase sales through websites: வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி

டிவி ஒளிபரப்புகள் மட்டும் இன்டர்நெட் வளர காரணமல்ல. மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கவும், வேண்டாத பொருட்களை விற்கவும், ஒரு செய்தியை தெரிந்து கொள்ளவும் மற்றும் பலவற்றையும் அமர்ந்த இடத்திலேயே இன்டர்நெட் மூலம் பெற்று விடுவதால்தான் இந்த வளர்ச்சி.

அதனால்தான் அனைவரும் தங்களுக்கென்று ஆளாளுக்கு வெப்சைட் ஆரம்பித்து வருகிறார்கள்.

நீங்களும் உங்களுக்கென ஒரு வெப்சைட் தொடங்கினால் உங்களைப்பற்றியும் உங்களின் தொழிலைப் பற்றியும் உலகம் முழுதும் உள்ளவர்களால் தெரிந்து கொள்ள முடியும்.

நிச்சயம் உங்கள் தொழில் வளர நீங்கள் உழைப்பதைப்போல் உங்கள் வேப்சைட்டும் உழைக்கும். தொழில் மட்டுமில்லைங்க உங்களின் சாதனைகள், உங்கள் ஊரில் நடந்த நிகழ்ச்சிகள் பற்றியும் உலகத்தாருக்கு தெரியப்படுத்த ஒரு கருவியாகவும் உபயோகப்படுத்தலாம்.

வெப்சைட்டை பற்றி இன்னும் சொல்ல வேண்டும் என்றால் இந்த பக்கம் பத்தாது, இன்னும் நூறு பக்கங்கள் எழுதவேண்டும்.

உங்களுக்காகவோ அல்லது உங்களின் நண்பர்களுக்காகவோ வெப்சைட் ஆரம்பிக்க வேண்டுமெனில் தொடர்புகொள்ளவும், 07305847197

Read more about Business Websites in tamil: விற்பனைக்கு கைகொடுக்கும் வியாபார வலைதளம்

Subscribe to our email newsletter to get more articles like Increase sales through websites: வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி

Business Websites in tamil: விற்பனைக்கு கைகொடுக்கும் வியாபார வலைதளம்

0 comments
Business Websites in tamil: விற்பனைக்கு கைகொடுக்கும் வியாபார வலைதளம்

பிட் நோட்டீஸை விநியோகித்து பிசினஸை வளர்த்தது அந்தக் காலம். சிறு நிறுவனமாக இருந்தாலும் அதை வெப்சைட் (Website) மூலம், அதாவது வலைதளங்களின் மூலம் உலகம் முழுக்கக் கொண்டுசெல்வது இந்தக் காலம்.

வெப்சைட்டை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் பிசினஸில் நல்ல லாபம் பார்க்க முடியும் என்கிற நிலையில், நாம் செய்துவரும் தொழிலுக்கான வெப்சைட்டை எப்படித் தொடங்குவது?

ஆரம்பித்தபிறகு அதை எப்படிக் கையாள்வது, வெப்சைட்களின் மூலம் வாடிக்கையாளர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்கிற கேள்விகளுக்கு விரிவான விளக்கம் தந்தார் பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் சமூக வலைதளங் களுக்கான பிரிவின் தலைவர் கே.எஸ்.ராஜசேகர்.

உங்களுக்கென ஒரு வெப்சைட்டை  உருவாக்கும்போது நம்பகமான டொமைன் பதிவாளர்களை அணுக வேண்டும்.

முதலில், வெப்சைட் ஹோஸ்டிங் (தங்களுக்குத் தேவையான வெப்சைட்டை டிசைன் செய்யும் முறை) செய்ய யாஹூ ஸ்மால் பிசினஸ், சென்னை ஆன்லைன் மற்றும் வேர்டுபிரஸ் ஹோஸ்டிங் வலைதளங்களை அணுகலாம்.

பாலமாகச் செயல்படுகின்றன!

''பிசினஸ் வெப்சைட்கள் வியாபாரத்துக்கும் வாடிக்கையாளர் களுக்கும் இடையே பாலமாகச் செயல்படுகின்றன.

தொழில் செய்துவருகிறவர்களில் பெரும்பாலானவர்கள் இதுகுறித்த தொழில்நுட்ப அறிவு தங்களுக்கு இல்லை என்பதால் இந்தப்பக்கமே வராமல் இருக்கிறார்கள்.

ஆனால், இன்றைய நிலையில், வெப்சைட் தொடங்குவதற்குப் பெரிய அளவில் டெக்னிக்கல் விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை.
சரியான தேர்வு முக்கியம்!

இந்த வலைதளங்களே டெக்னிக் சார்ந்த அத்தனை விஷயங்களையும் பார்த்துக்கொள்கின்றன. வெப் ஹோஸ்டிங் செய்ய ஒரு மாதத்துக்கு 250 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

Business Websites in tamil: விற்பனைக்கு கைகொடுக்கும் வியாபார வலைதளம் வெப்சைட் வடிவமைப்பு செய்யும்முன்

எதற்காக இந்த வெப்சைட் வடிவமைக்கிறோம் (பொருட்களை விற்பதற்காகவா, புதிய வாடிக்கையாளர் களைக் கவர்வதற்காகவா, தொழிலை வளர்த்துக்கொள்வதற்காகவா) என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.

அவரவர்களின் தொழில் சார்ந்த மற்ற வெப்சைட்டைப் பார்த்து எது தேவை, எது தேவையில்லை என்பதைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அதன்பின்னர் நமக்கான வெப்சைட்டை  வடிவமைப்பது நல்லது.

வெப்சைட் வடிவமைப்பின்போது

வெப்சைட்டை வடிவமைக்கும் போது டொமைன் பெயரை (உதா: www.tamilnews.com) தேர்வு செய்வதுதான் மிக முக்கியம்.

இந்த டொமைன் பெயர் வாடிக்கையாளர்கள் எளிதில் நினைவில் வைத்திருக்கும்படி, தொழில் சார்ந்த வார்த்தையாக (மக்களிடம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தை), ஒன்று அல்லது இரண்டு வார்த்தைகளை மட்டுமே கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டு வார்த்தைகள் என்றால் அவை இணைந்தே இருக்க வேண்டும். இரண்டுக்கும் இடையில் சிறப்புக் குறியீடுகளோ எண்களோ இடம்பெறக் கூடாது.

டொமைன் பெயரை தேர்வு செய்து பதிவு செய்ய ஆரம்பக் கட்டணமாக ரூ.600 வசூலிக்கப்படும். டிமாண்ட் கொண்ட டொமைன் பெயர்களுக்கு ஏற்றபடி கட்டணங்கள் மாறுபடலாம்.

டொமைன் பதிவாளர்களைத் தேர்வு செய்யும்போது மிக எச்சரிக்கையுடன், நம்பகமான ஆட்களையே தேர்வு செய்யவேண்டும்.

வெப்சைட்களில் போடும் தகவல்கள் (தமிழ், ஆங்கிலம் எதுவாக இருந்தாலும்) தெளிவாக இருக்க வேண்டும்.

வெப்சைட் குறித்தும், அதனை நிர்வகிப்பவர் குறித்தும், உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் குறித்த விவரம், சலுகை விவரம் மற்றும் வாடிக்கையாளர் சேவை குறித்த விவரம் போன்றவற்றை வலைதளங்களில் தரும்போது வாடிக்கையாளர்களிடமிருந்து முழுமையான நம்பிக்கையைப் பெற முடியும்.

வெப்சைட்களை வடிவமைக்கும் போது, அதிலேயே பொருட்களை ஆர்டர் செய்து வாங்கும்படியான 'பே கேட்வே’ (Pay gateway)  ஆப்ஷன் இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்வது அவசியம்.

இன்றைய நிலையில் ஸ்மார்ட் போன்களில் வெப்சைட்களைப் பார்க்கிறவர்கள் அதிகம் இருப்பதால், அதற்கேற்றமாதிரி தயார் செய்ய வேண்டும்.

வடிமைக்கும் வலைதளத்தை 5-10 ஆண்டுகள் வரையாவது பதிவு செய்யவேண்டும். இதற்குக் குறைவாகப் பதிவு செய்யும்பட்சத்தில் அந்த வெப்சைட்டின் மீது வாடிக்கையாளர் களும், ரேட்டிங் ஏஜென்சிகளும் நம்பிக்கை இழக்கலாம்.

வெப்சைட் வடிவமைத்தபிறகு..!

வெப்சைட்களை உருவாக்கியபிறகு அதை உடனே 'லோக்கல் லிஸ்ட்டிங் சர்வீஸ்’-க்கு (உதா: கூகுள் லோக்கல், யாஹூ லோக்கல், பிங்க் (Bing)) சென்று பதிவுசெய்ய வேண்டும். அதேபோல கிளாஸிஃபைடு சைட்களிலும் வெப்சைட் பெயர்களைப் பதிவு செய்வது அவசியம்.

லோக்கல் லிஸ்ட்டிங் மற்றும் கிளாஸிஃபைடு சைட்கள்தான் வாடிக்கையாளர்கள் தேடும்போது யார் வெப்சைட்களை லிஸ்ட் செய்திருக்கிறார்களோ, அதையே முதலில் காட்டும்.
புதுமையைத்தான் அனைவரும் விரும்புகின்றனர்.

அடிக்கடி புதிய தகவல்களைக் கொண்டு உங்கள் இணையதளத்தைப் புதுப்பித்துக்கொண்டே இருப்பது அவசியம்.  முழுமையாக மாற்றாமல், சிறு  மாற்றங்களைச் செய்தாலே போதும்.

வெப்சைட் உருவாக்கியபிறகு அதைக் கட்டாயம் விளம்பரப்படுத்தியே ஆக வேண்டும். உங்களது பிசினஸ் கார்டுகளில் (விசிட்டிங் கார்டு) அச்சிட்டுக்கொள்வதன் மூலம், வெப்சைட் பெயரில் இ-மெயில் ஐடி-ஐ உருவாக்கிக்கொள்வதன் மூலம், சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்துவதன் மூலம் அதைச் சாத்தியப்படுத்தலாம்.

வாடிக்கையாளர் சேவை! Business Websites in tamil: விற்பனைக்கு கைகொடுக்கும் வியாபார வலைதளம்

வெப்சைட் வடிவமைக்கும்போது அதனுள் பிளாக்குகளை அமைத்து, தொழில் சார்ந்த பல தகவல்களை வாடிக்கையாளர்களுக்குத் தரலாம். இந்த பிளாக்குகள் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சேவைகளை வாரி வழங்கவேண்டும். தகவல்களை எழுத்து வடிவில் மட்டுமல்லாமல், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்தும் போடலாம்.

வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள இ-மெயில் ஐடி-யை வெப்சைட்டில் குறிப்பிடச் சொல்லலாம். மெயில் ஐடியை தெரிவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதம் ஒருமுறை தங்களின் வெப்சைட்கள் குறித்தும், புதிய தகவல்களை மெயில் மூலமும் அனுப்பி அவர்களைக் கவரலாம்.

இப்போது வெப்சைட்டை பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெப்சைட் நிறுவனத்துடன் பேசும்படியான ஆப்ஷன்கள் வந்துவிட்டன. அந்த வெப்சைட்டில் 'கிளிக் தி கால்’ என்கிற ஆப்ஷன்கள் இருக்கும்பட்சத்தில் அப்போதே வெப்சைட் நிறுவனத்துடன் போனில் உரையாடி, சந்தேகங்களை நிவர்த்திச் செய்து கொள்ளலாம். இதனால் வாடிக்கையாளர்கள் காத்திருக்காமல், உடனுக்குடன் பதில் பெறமுடிகிறது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்!

வெப்சைட் பயனாளர் பெயர் (User Name), பாஸ்வேர்டு (Password)  போன்ற தகவல்களை ரகசியமாக வைத்திருத்தல் அவசியம். கூகுள் அனலடிக்ஸ் (google analytics)   என்ற ஃபைலை உருவாக்கும் வெப்சைட்டுக்குள் இன்ஸ்டால் செய்துவைத்துக் கொண்டால், அந்த வெப்சைட்டுக்கு வரும்

வாடிக்கையாளர் எங்கிருந்து வந்தார், எத்தனை மணிக்கு வெப்சைட்டை பார்வையிட்டார், எந்தப் பக்கத்தைப் பார்வையிட்டார் என்கிற தகவல்களைப் பெற முடியும்.

கூகுள் வெப்மாஸ்டரில்  (Webmaster)  தங்களின் வெப்சைட்டை பதிவு செய்து, பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்ளலாம்.

கவனிக்கவேண்டிய விஷயங்கள்!

ஒரு வெப்சைட்டின் முகப்புப் பக்கம் வழியாகவே பலரும் நுழைவார்கள். இதனை அமைப்பதில் அதிகக் கவனம் செலுத்தவேண்டும்.

முகப்புப் பக்கம் லோடு ஆக அதிக நேரம் எடுத்துக்கொண்டால் பார்ப்பவர்கள் எரிச்சல் அடைவார்கள். தவிர, உங்களைப் பற்றிய தகவல்கள் நேரடியாக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எளிமையாக இருப்பது நல்லது!

தளத்தைப் பார்க்க வருபவர்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்கும் வசதி இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும்.

உங்கள் வெப்சைட் உங்களுக்குப் பிடித்த பிரவுஸரில் மட்டுமில்லாமல்,  மற்ற பிரவுஸர்களிலும் சரியாக இயங்க வேண்டும்.

நீங்கள் பதித்துள்ள படங்கள் சரியாக இருக்கின்றனவா, நீங்கள் எதிர்பார்க்கும் தோற்றத்தைத் தருகின்றனவா என்பதை அடிக்கடி நீங்கள் சோதித்து அறியவேண்டும்.

வெவ்வேறு வேகத்தில் இயங்கும் இணைய இணைப்புகளில் இந்தப் படங்கள் எப்படி இறங்கி இயங்கு கின்றன என்று சோதித்துப் பார்க்க வேண்டும்.

அனைவருக்கும் தெரிந்த மொழிகளில் உங்கள் தளத்தை அமைப்பது நல்லது. அப்போதுதான் பார்ப்பவர்கள் அந்த வெப்சைட் தங்களுக்கானது என்பதை உணர்வார்கள்.''

தொழில் செய்கிறவர்கள் இனி இணையம் மூலமும் கலக்கலாமே!

Read more about Increase sales through websites: வெப்சைட் மூலம் வியாபாரத்தை பெருக்க வழி


Romance ragasiyangal: Start loving oh people of the world - ரொமான்ஸ் ரகசியங்கள்: காதல் செய்வீர் உலகத்தீரே

0 comments
Romance ragasiyangal: Start loving oh people of the world - ரொமான்ஸ் ரகசியங்கள்: காதல் செய்வீர் உலகத்தீரே

பருவங்களில் இனிமையானது வசந்தகாலம் என்பார்கள். மனிதனுடைய வாழ்க்கையையும் பருவங்களாகப் பிரித்தால், அதில் வசந்தகாலம் என்பதும் ஒரு பகுதியாக இருக்கும். அதுதான் காதல் செய்யும் பருவம்.

வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி சிறகசைப்பது, உலகமே சங்கீதமயமாக ஒலிப்பது, நகரம் மழையில் நனைந்து அழகாகப் பூத்திருப்பது, மன வானில் பறப்பது... இதெல்லாம் காதல் செய்யும் பருவத்தில் தோன்றும் கவித்துவமான எண்ணங்கள்.

காதல்... எப்போது, எதனால் ஏற்படுகிறது என்பதற்குத் தீர்மானமான வரையறைகள் இல்லை. கண்ணும் கண்ணும் நோக்கும்போதும், வார்த்தைகளால் கலந்து உரையாடும்போதும், நண்பர்களாகப் பழகும்போதும்... காதல் எப்போது வேண்டுமானாலும் பூக்கலாம்.

நிறைய ஜோடிகளிடம், 'உங்களுக்குக் காதல் மலர்ந்த கதையைச் சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்கிறேன். உறையூரைச் சேர்ந்த சந்திரசேகரின் அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது.

அவர் கல்லூரியில் படிக்கும்போது கூடப் படிக்கும் விமலாவைக் காதலித்திருக்கிறார். அந்தப் பெண் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. சந்துருவுக்குத் தூது போனது, விமலாவின் தோழி அருணா. அவர், காதல் கடிதத்தை விமலாவிடம் கொடுக்க, ''அந்த ஆளுக்கு ஏற்கெனவே இதயம் வீக் (சந்துரு சிறு வயதில் இருந்தே ஹார்ட் பேஷன்ட்).

அவரை லவ் பண்ண எனக்கு என்ன பைத்தியமா? அவரை முதல்ல ஒழுங்கா ட்ரீட்மென்ட் எடுக்கச் சொல்லு'' என்று கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டாள். இதை அருணா சந்துருவிடம் சொல்ல, மனமுடைந்தவன் விஷம் குடித்துவிட்டான்.

நண்பர்கள் பதறிப்போய் ஆஸ்பத்திரியில் சேர்க்க, கூடவே இருந்து கவனித்துக் கொண்டாள் அருணா. அவனுக்காகக் கடவுளிடம் மனமுருகி பிரார்த்தித்தாள். மருந்து, உணவுகளை வேளாவேளைக்குக் கொடுத்து தாயுணர்வுடன் கவனித்துக் கொண்டாள்.

''உன்னுடைய தீவிரமான காதலை விமலா புரிந்து கொள்ளவில்லையே...'' என்று அவனிடம் அழுதாள். அப்போதுதான் சந்துருவிடம் அந்த மாற்றம் நிகழ்ந்தது. தனக்குக் கிடைக்காத ஒரு பெண்ணுக் காக ஏங்கி வாழ்க்கையையே வீண் செய்வது என்னவொரு முட்டாள்தனம் என்று தோன்றியது. அருகேயே இருக்கும் அருணாவின் கவனிப்பு அவனுக்கு ஒரு புது உலகத்தைக் காட்டியது. இவளைப் போன்ற பெண்ணைக் கவனிக்காமல் போனோமே என்று மனம் வருந்தியவன், சற்றும் தாமதிக்காமல், ''நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?'' என்று நேரடியாகவே கேட்டுவிட்டான்.

Romance ragasiyangal: Start loving oh people of the world - ரொமான்ஸ் ரகசியங்கள்: காதல் செய்வீர் உலகத்தீரே

சந்துருவின் காதல் உள்ளத்தைப் பற்றி நன்கு அறிந்த அருணாவுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ''என்னைக் கடைசி வரை விட்டுப் பிரியாமல் காப்பாற்றினால்... உங்களை மணம் புரியத் தயார்’' என்றாள் அவள். இருவரின் வாழ்க்கையிலும் வசந்தகாலம் எனும் பருவம் தென்றலாக வீச ஆரம்பித்தது.


விரைவில் குணமடைந்த சந்துருவுக்கு வாழ்வில் முன்னேற வேண்டும் என்கிற உத்வேகம் ஏற்பட, நன்றாகப் படித்து ஒரு வேலையில் சேர்ந்தான். அருணாவும் ஆசிரியை பணியில் சேர்ந்தாள். இருவரும் திருமணம் செய்தார்கள். மணியான இரு குழந்தைகளோடு... இன்று மிக நல்ல நிலைமையில் காதல் சற்றும் குறையாமல் குடும்பம் நடத்தி வருகிறார்கள்.

காதல் என்பது யார் மீதும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வரலாம். அந்தக் காதலின் உண்மைத் தன்மையை உணர்ந்து கொள்வதும், அதை அழகாகப் பயன்படுத்திக் கொள்வதும்தான் அடிப்படையான 'ரொமான்ஸ் ரகசியம்' என்பதற்கு, சந்துரு - அருணா... ஓர் அழகு உதாரணம்!


தியாகம், வீரம், சோகம், உருக்கம், சந்தோஷம், தன்னம்பிக்கை, அன்பு, காமம் எல்லாம் நிறைந்த அற்புதம்தான் காதல். அதனால்தான் பாரதி உணர்ச்சி மிகுதியுற்று இப்படிப் பாடிக் கூத்தாடினான்....

காதலினால் மானுடர்க்கு கலவியுண்டாம்
கலவியிலே மானுடர்க்கு கவலை தீரும்
காதலினால் மானுடர்க்கு கவிதை உண்டாம்,
கானமுண்டாம், சிற்ப முதற் கலைகளுண்டாம்;
ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!

Join in our mailing list for more articles like this Romance ragasiyangal: Start loving oh people of the world - ரொமான்ஸ் ரகசியங்கள்: காதல் செய்வீர் உலகத்தீரே.

Google values 200 ranking factors for their SE Listings

0 comments
Google values 200 ranking factors for their SE Listings, Here you’ll find about the Google’s 200 Ranking Factors in an  list an info graphic manner.

Infograbic on Google values 200 ranking factors
Google values 200 ranking factors info-graphics
This info-graphic is not an official one or recognized one from Google, but the makers of this info-graphic about Google values 200 ranking factors for their SE Listings are some what close to Google's way of the search engine listings.

Impact of domain factors in Google ranking factors
Impact of domain factors in Google ranking factors

Impact of page level factors in Google ranking factors
Impact of page level factors in Google ranking factors

Impact of site level factors in Google ranking factors
Impact of site level factors in Google ranking factors

Impact of back-link factors in Google ranking factors
Impact of back-link factors in Google ranking factors

Impact of user interaction in Google ranking factors
Impact of user interaction in Google ranking factors

Impact of Special Algorithm Rules in Google ranking factors
Impact of Special Algorithm Rules in Google ranking factors

Impact of social signals in Google ranking factors
Impact of social signals in Google ranking factors

Impact of brand signals in Google ranking factors
Impact of brand signals in Google ranking factors

Impact of on-site webspam in Google ranking factors
Impact of on-site webspam in Google ranking factors

Impact of Off-site webspam in Google ranking factors

Sponsors of Google values 200 ranking factors for their SE Listings
Sponsors of Google values 200 ranking factors for their SE Listings
Sponsors of Google values 200 ranking factors for their SE Listings are http://backlinko.com/ and http://www.singlegrain.com/ and i came to know about this through http://doseoyourself.com/google-ranking-factors/ about this Google values 200 ranking factors for their SE Listings.

Subscribe to our mailing list for more SEO updates.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf