Billa 2: Mp3 Songs, Lyrics, Download Links

0 comments

Billa 2 Song Details

Gangster - Yuvan Shankar Raja and Stefny
Idhayam - Shweta Pandit
Yedho Mayakkam - Yuvan Shankar Raja, Tanvi Shah and Suvi Suresh
Madurai Ponnu - Andrea Jeremiah
Unakkulle Mirugam - Ranjith
Theme Music

Billa 2 Track Details



MovieBilla 2
Release Dare1 May 2012
GenreTamil film soundtrack
LanguageTamil
Released BySony Music Entertainment
ComposerYuvan Shankar Raja

The Links for Downloading the song's will be ubdated soon with the Billa 2 Lyrics in our blog page.

Indonesian Mutual Funds: Positive Sentiment Spurs on 2012

0 comments
Indonesian total assets under management in the Indonesian Mutual Funds industry rose 28 percent to Rp 193.1 trillion ($21 billion) in the January-March period from a year earlier, according to data from Indonesia Mutual Fund Managers Association (APRDI). 

The economy last year grew 6.5 percent, the fastest pace since 1996, and that helped to lift average per capita income to $3,500 from $3,000 in 2010 — elevating many of the country's 240 million people into the middle class. 

"Per capita income has increased to more than $3,000 now, so there are more people wanting to invest," Abiprayadi Riyanto, the APRDI chairman, said on Tuesday. Investments in Indonesian Mutual Funds start as low as Rp 100,000, he added. 

Assets in the Indonesian Mutual Funds industry may rise by 10 percent to 15 percent this year, "as long as the conditions in Europe are improving," Abipriyadi said.

Read more about this Indonesian Mutual Funds here.

Orkut Proxies for 25.04.2012

0 comments

Facebook Proxies for 25.04.2012

0 comments

மனைவிக்கு, கணவர் கொடுக்கும் பரிசு

0 comments
மனைவிக்கு, கணவர் பரிசுகள் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். மனைவிக்கு மனப்பூர்வமாக தரும் பரிசுகள் மரியாதைக்குரியதாகவும், நேசிப்பின் சின்னமாகவும் என்றும் அவள் நினைவில் நிறைந்திருக்கும்.

அந்த பரிசு எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்?

- உபயோகப்படுத்தக்கூடிய பொருளாக இருக்கலாம்.

- நேரடியாக உபயோகம் இல்லாவிட்டாலும், அழகான பொருளாகவும் இருக்கலாம்.

மனைவிக்கு தேவையான உபயோகப் பொருளை வாங்கிக்கொடுத்தால், அதை உபயோகப் படுத்தும்போதும் கணவரின் நினைவுவரும். அதனால் மனைவி எப்போதும் தன்னை நினைவில் வைத்திருக்கவேண்டும் என்று விரும்பும் கணவர்கள், அவள் அடிக்கடி பயன்படுத்தும் செல்போனை பரிசாக வாங்கிக்கொடுத்துவிடுவார்கள். ஆனால் அடிக்கடி உபயோகப் படுத்தும் பொருட்கள் சீக்கிரமே பழையதாகி, நாளடைவில் செயலற்றதாக ஆகி விடும். அதனால் தான் வாங்கிக்கொடுக் கும் பரிசு, செயலற்றதாகவே ஆகக்கூடாது என்று கருதும் கணவர்கள், கலைப் பொருட்களை வாங்கி பரிசாக வழங்கி விடுகிறார்கள். அழகான அந்த பொருட்கள் எப்போதும் கணவரை பளிச்சென நினைவில் வைத்துக் கொள்ள உதவும்.

மனைவியை மகிழ்வித்துப் பார்ப்பதுதான் தங் கள் கொள்கை என்று நினைக்கும் கணவர் கள் அழகிய புடவையோ, நகையோ பரிச ளித்து நல்ல பெயர் வாங்கி விடுகிறார்கள்.

பரிசுகள், திருமண பந்தத்தை கவுரவித்து மரி யாதை செலுத்துவதாக இருக்கிறது. மனை விக்கு முதன் முதலாக கொடுக்கப்படும் பரிசு கள் இன்ப அதிர்ச்சிகளை கொடுத்து, நீண்ட நாட்கள் மகிழ்விக்கும் தன்மை கொண்டது. இந்த பரிசுகளை சம்பிரதாயமானது, சராசரி யானது என்று இரண்டு வகையாகப் பிரிக் கலாம்.

சம்பிரதாய ரீதியாக தரப்படும் பரிசுகள் விலை உயர்ந்ததாகவும், குடும்ப கவுரவத்தை வெளிப் படுத்தும் அம்சமாகவும் இருக்கும். அந்த பரிசுகள் தொடக்கத்தில் அதிக ஆச்சரியத் தையும், மகிழ்ச்சியையும் தந்தாலும், அந்த பரம்பரை பரிசுகளை பாதுகாக்கும் பெட்டகம் மாதிரியே அந்த பெண் ஆகிப்போவாள். அந்த பரிசுகளும் பெரும்பாலும் அந்த பெண்ணால் தனிப்பட்ட முறையில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்காது. சம்பிர தாய பரிசுகள் பெரும்பாலும் பெட்டகத்தில் வைத்து பூட்டக் கூடியதாகத்தான் இருக்கும். சம்பிரதாயம் இல்லாமல் தனிப்பட்ட முறையில் தரப்படும் பரிசுகள், பயன்பாட்டு அடிப் படையில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. சம்பிரதாய பரிசு எப்போதாவது ஒருசில முறை தான் கிடைக்கும். தனிப்பட்ட பரிசுகள் அடிக்கடி கிடைக்கும். அதனால் இந்த தனிப்பட்ட பரிசுகள் மீது பெண்களுக்கு ஆர்வம் அதிகம். அடிக்கடி அவர்களை சிரிக்கவைக்க இந்த பரிசுகள் உதவும்.

வாழ்க்கையின் வெகுதூரத்தை கடந்த பிறகும் மலரும் நினைவுகளாக, பல பரிசு பொருட்கள் நிலைத்து நிற்கின்றன. பெரும்பாலான நேரங்களில் சாதாரண பரிசு பொருட்கள் கூட, காலங்கடந்து நின்று பெண்களை மகிழ்ச்சியடையச் செய்யும். மிகப்பெரிய பரிசுகள் கிடைத்தபின்பும், அந்த சாதாரண பரிசுகள் பெண்கள் மனதில் நிலைத்து நிற்பதும் உண்டு.

சில பரிசுகள் என்ன பரிசு என்பதைவிட, யார் கொடுத்தது என்பதைவைத்து சிறப்பு பெறும். பிற்காலத்தில் ஏற்படும் சில கசப்பான நினைவுகளை மாற்றியமைக்கும் ஆற்றல்கூட அந்த பரிசுகளுக்கு உண்டு.

முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே பெண்களுக்கு பரிசுகளை கொடுத்துக்கொண்டிருந் தார்கள். பெண்கள் உழைப்பதில்லை என்பதால் அந்த நிலை. இப்போது பெண்கள், ஆண்களைவிட அதிகம் சம்பாதிக்கும் நிலை இருந்துகொண்டிருக்கிறது. அதனால் ஆண் களுக்கு நிகராக பெண்களும் அன்புப் பரிசுகளை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பழைய காலத்தில் பெரிய பெரிய சமஸ்தானங்களில்கூட மனைவிக்கு பரிசு கொடுக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. மன்னர் ஒருவர் தன் மனைவிக்கு அன்னப்பறவையின் இறகை பரிசாக கொடுத்தார். வியந்து போன அரசி, அவரை ஆச்சர்யத்துடன் பார்க்கையில், "இதை நீ எத்தனை காலம் பத்திரமாக வைத்திருக்கிறாய் என்பதைப் பொறுத்துத்தான் என் மீது நீ வைத்திருக்கும் அன்பை நான் புரிந்து கொள்வேன்'' என்றார். அரசி அதனை வாழ்நாள் முழுவதும் தங்கப் பேழையில் வைத்துப் பாதுகாத்தார். அன்னப் பறவையின் இறகு என்பது அந்த காலத்தில் பெரிய விஷயம் இல்லை. ஆனால் அந்த மெல்லிய இறகில் அந்த மன்னர் தன் அன்பையும் கலந்துவிட்டதால் அது தங்க பேழைக்கு செல்லும் உயர்ந்த பரிசாகிவிட்டது. நீங்கள் உங்கள் மனைவிக்கு வழங்கும் பரிசும் அன்பு கலந்ததாக இருக்கட்டும். அவள் அதை தங்க பேழை போன்ற தன் மனதுக்குள் வைத்து பாது காப்பாள். அதன் மூலம் உங்கள் ஆத்மார்த்த உறவு மேம்படும்.

வங்காளதேசத்து மீனவர் ஒருவர் தன் மனைவிக்கு வெண் சங்கு ஒன்றை அன்பு பரிசாக அளித்தார். அதை பத்திரமாக வெகுகாலம் பாதுகாத்து வந்தாள் மனைவி. மனைவி இறக்கும் தருவாயில் மீனவர் அந்த வெண் சங்கை வீடு முழுவதும் தேடினார். எங்கும் கிடைக்காமல் போகவே, மனைவியிடம் வந்து நான் கொடுத்த அன்பு பரிசை தொலைத்து விட்டாயா என்று கேட்டார். அவளோ தொலைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அதில் வளையல் செய்து கைகளில் அணிந்திருக்கிறேன் இதோ பாருங்கள் என்றாள்.

அன்றிலிருந்து வங்காளதேசத்தில் மணமகளுக்கு மணமகன் வெண் சங்கு வளையல் அணிவிக்கும் வழக்கம் உருவானது. இன்றும் அது தொடர்கிறது!

Balance Transfer on Credit Card's: கிரெடிட் கார்டு `நிலுவை மாற்றம்’ பற்றித் தெரியுமா?

0 comments
`கிரெடிட் கார்டு' பயன்படுத்தும் பலருக்கே அதன் அனைத்து வசதிகளும் தெரிவதில்லை. அந்தவகையில், `நிலுவை மாற்றம்' (`பாலன்ஸ் டிரான்ஸ்பர்') குறித்து அறிந்தவர்கள் வெகு சிலராகத்தான் இருப்பார்கள்.

அதென்ன நிலுவை மாற்றம்?

கிரெடிட் கார்டு நிறுவனங்களால் கிரெடிட் கார்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வசதியாகும் இது. இதன்படி, ஒரு கார்டில் உள்ள நிலுவைத் தொகையை, அதிகம் பயன்படுத்தாத இன்னொரு கார்டு அல்லது ஒரு புதிய கார்டுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

நிலுவை மாற்ற வசதியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறைந்த வட்டி அல்லது வட்டியில்லாத காலம் போன்ற சலுகைகளை அளிக்கின்றன.

அதிகம் பயன்படுத்தாத அல்லது புதிய கார்டுக்கு ஒருவர் நிலுவை மாற்ற வசதியில் தொகையை மாற்றும்போது, அந்த கார்டின் `கிரெடிட் லிமிட் அளவு', மாற்றும் தொகைக்கு ஏற்பக் குறையும்.

உதாரணமாக, உங்களின் `கிரெடிட் அளவு' 1 லட்ச ரூபாய் என்ற நிலையில் நீங்கள் ரூ. 40 ஆயிரம் அளவுக்கு நிலுவை மாற்றம் செய்ய நினைக்கிறீர்கள் என்றால், உங்களின் கிரெடிட் அளவு 60 ஆயிரமாகக் குறையும். அத்துடன், கிரெடிட் அளவில் 80 சதவீதத் தொகைக்கு மேல் நிலுவை மாற்றம் செய்ய முடியாது.

நிலுவை மாற்ற வசதி, எப்போது பயனுள்ளதாக இருக்கும்?

அதிக வட்டி விதிக்கப்படும்போது: உங்களின் நடப்பு கிரெடிட் கார்டு தொகைக்கு விதிக்கப்படும் வட்டி, புதிய கார்டு ஒன்றுக்கு விதிக்கப்படும் வட்டியை விட அதிகமாக இருக்கும்போது, நிலுவைத் தொகையை புதிய கார்டுக்கு மாற்றிக்கொள்வதன் மூலம் வட்டியைக் குறைத்துக்கொள்ளலாம்.

சேவை சரியில்லாதபோது: நடப்பு கிரெடிட் கார்டு நிறுவனத்தின் சேவை, குறிப்பாக சரியாக `பில்' அனுப்பாமல் இருப்பது, பில் தொகைக்கு ரசீது அனுப்பாதது போன்றவற்றின்போது நிலுவை மாற்ற வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அப்போது, நடப்பு கார்டில் இருந்து புதிய கார்டுக்கு தொகையை மாற்றம் செய்து, நடப்பு கார்டு சுமையில் இருந்து விடுதலை பெறலாம்.

நிலுவைத் தொகையைச் செலுத்த முடியாதபோது: ஒருவருக்குத் தனது கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகை அதிகமாகி, பண நெருக்கடி காரணமாக அதை உடனடியாகச் சரிசெய்ய முடியாதபோது, நிலுவை மாற்றம் ஒரு தற்காலிகமான நிவாரணமாக அமையும். ஆம், நீங்கள் `மூச்சு விட்டுக்கொள்ள' ஒரு வாய்ப்புதான் இது.

Post Delivery: பிரசவத்திற்குப் பிறகும் அக்கறை தேவை!

0 comments
குழந்தை பிறந்த பிறகு ஒவ்வொரு தாயும், உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார். அவர்கள் உணவு விஷயத்தில் தனிக் கவனம் செலுத்தினால், உடல் தொடர்பாக ஏற்படும் பல பிரச்சினைகளை தவிர்த்து விடலாம்.

அதற்கு என்ன செய்யலாம்?

* சாதாரணமாக தேவைப்படும் கலோரிகளை விட அதிகமாக 500 கலோரிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த அளவு, ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ப மாறுபடும். வேலை செய்யாதவர்களுக்கு தினசரி கலோரி 1800 என்றால், வேலை செய்பவர்களுக்கு 2 ஆயிரம் கலோரிகள் தேவையாக இருக்கும். பொதுவாக சுகப்பிரசவமோ அல்லது சிசேரியனோ, ரத்த இழப்பு அதிகமாக இருக்கும். அதை அவர்கள் கண்டிப்பாக ஈடுசெய்ய வேண்டும். அதற்கு கீரைகள், பேரிச்சம்பழம், கேழ்வரகு, கம்பு, கறிவேப்பிலை பொடி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதாவது தினமும் ஒரு கீரை அவசியம்.

* பிரசவத்திற்கு பிறகான உடல் பராமரிப்பில் பிறந்த குழந்தையின் மீதும் அக்கறை செலுத்த வேண்டும். அந்தக் காலக்கட்டத்தில் குழந்தையின் உணவு தாய்ப்பால்தான் என்பதால், தாய்மார்கள் தங்கள் உணவு விஷயத்தில் தனிக் கவனத்துடன் இருக்க வேண்டும். கிடைத்த உணவுகளை எல்லாம் சாப்பிடக் கூடாது. கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்த்து புரத, நார்ச்சத்து, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் இதர சத்துள்ள உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு பால் புகட்டுவதால், கால்சியம் மற்றும் புரதச் சத்து அவர்களுக்கு அதிகமாக தேவைப்படும். அதனால், பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், நண்டு, இறால், சோளம் ஆகிய அதிக கால்சிய சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது.

* தினமும் குறைந்தபட்சம் 2 டம்ளர் பால் குடிப்பது அவசியம். புரதச் சத்துக்கள் அதிகம் கொண்ட பாதாம், பிஸ்தா, அக்ரூட், பச்சை வேர்க்கடலை, மீன், முட்டை ஆகியவற்றை உணவாக எடுத்துக்கொண்டு வந்தால், அவை சீராக பால் சுரக்க உதவும்.

* தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இது மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் முன் முடிந்தவரை நிறைய தண்ணீர் குடித்துவிட்டு பால் புகட்டலாம். இதனால் பால் நன்றாக சுரக்கும்.

* கர்ப்ப காலத்தில் கருவில் குழந்தை இருப்பதால், வயிறு நன்றாக விரிந்திருக்கும். குழந்தை பிறந்த பிறகு அவை மெதுவாக சுருங்கும். இந்த சமயத்தில் அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகள், கிழங்கு வகைகள் மற்றும் தேங்காய் போன்ற உணவுகளை சாப்பிட்டால் வாயு, மலச்சிக்கல், அஜீரண கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். எனவே பிரசவத்துக்கு பிறகு ஒரு மாத காலம் இந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அஜீரணத்தை தவிர்க்க இஞ்சி, பூண்டு, மிளகு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடலாம்.

* சில பெண்கள் தாய்ப்பால் சுரப்பு அதிகம் இல்லாமல் அவதிப்படுவார்கள். அவர்கள் சுறாபுட்டுடன் சோம்பு கீரை சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

For a nice Body கட்டுடலுக்கு…

0 comments
திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் ஆணுக்குள்ளும், பெண்ணுக் குள்ளும் தங்கள் உடலைப் பற்றிய ஆவேசம் எட்டிப்பார்க்கிறது. அதுவரை கண்டதையும் தின்று உடல் பெருத்துப் போயிருந்தால் ரொம்பவே கவலைப் படுகிறார்கள். ஜிம் எங்கே இருக்கிறது என்று தேடிப்போகிறார்கள். உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசகர்களை நாடிச் செல்கிறார்கள். நேரத்திற்கு தூங்கவும் முயற்சி செய்கிறார்கள்.

திருமணத்திற்கு தயாராக இருக்கும் அனைவரும் தங்கள் உடலில் அக்கறை கொள்வது மிக அவசியம். திருமணத்திற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அவர்கள் கவனம் செலுத்தினால், தங்கள் உடலை கட்டுடல் ஆக்கிவிடலாம். அதற்கு என்ன செய்யவேண்டும் தெரியுமா?

உணவில் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி கிடந்துவிடக்கூடாது. உடல் எடையைக் குறைக்கவேண்டும் என்று பட்டினி இருந்தால், அது மோசமான பின்விளைவுகளை உருவாக்கிவிடும். உடல் சோர்ந்து, சுறு சுறுப்பு நீங்கி, இருக்கிற அழகும்போய் வருந்தும் நிலை உருவாகிவிடும். தசை நெகிழ்ந்து, சருமமும் சுருங்கிவிடும். அதனால் முறையான உணவுக்கட்டுப்பாட்டோடு உடலுக்கு தேவை யான உடற்பயிற்சியையும் செய்யவேண்டும்.

உடற்பயிற்சி செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

உடற்பயிற்சியில் இரண்டு வகை உண்டு. ஒன்று: ஸ்டென்ர்த்தனிங் டிரைனிங். இரண்டு: கார்டியோ எக்சசைஸ். தசைகளை வலுப்படுத்துவதற்கானது முதல் வகை உடற்பயிற்சி. உடலில் இருக்கும் கொழுப்பை அகற்றுவதற்காக செய்யும் பயிற்சிகள் இரண்டாவது வகை யாகும். ட்ரெட் மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல் போன்றவை கார்டியோ பயிற்சியாகும். இவைகளை தினமும் செய்தால் உடலில் இருக்கும் கொழுப்பு குறையும். கட்டுடல் கிடைக்கும். தசையும் பலமாகும். இரண்டு வகை உடற் பயிற்சி களையும் அவரவருக்கு தேவையான அளவில் தொடர்ந்து செய்துவர வேண்டும்.

உடல் குண்டாக இருப்பவர்கள், `பரவாயில்லை. என் உடல் எடையும் குறைந்துவிட்டது' என்று சொல்லும் நிலையை அடையவேண்டும் என்றால் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். காலை எழுந்தவுடன் சோம்பேறித்தனத்துடன், `நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்று நினைக்காமல், தினமும் உடற்பயிற்சிக்கு செல்லவேண்டும். திருமணத்திற்கு இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது என்ற நிலையில் இருப்பவர்களும், உடற்பயிற்சி மேற்கொண்டால் அந்த அளவிற்கு அவர்கள் உடலில் நல்ல மாற்றம் ஏற்படத்தான் செய்யும்.

சிலர் ஒல்லியான உடல்வாகுடன் காணப்படுவார்கள். அவர்களுக்கு தங்கள் உடல் எடையை சற்று அதிகரித்தால் நல்லது என்ற எண்ணம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் `வெயிட் டிரைனிங்' போன்ற கண்டிசனிங் பயிற்சிகளை பெறவேண்டும். நிபுணரின் ஆலோ சனையை பெற்று அதற்கு தகுந்தபடி உணவையும் உண்டால், சில மாதங்களில் அவர்கள் உடல் பூசி மெழுகினாற்போல் ஆகி விடும்.

குண்டான உடல் எடையை குறைக்க பயிற்சி பெறும்போது சிலருக்கு இரண்டு மாதத்திலே நல்ல மாற்றங்கள் தெரிந்துவிடும். அதனால் தானும் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜிம்முக்கு போனால் போதும் என்று நினைத்து விடக்கூடாது. ஒவ்வொருவர் உடலுக்கு தக்கபடி பயிற்சி பெறவேண்டும். அவரவர் உடல்வாகுக்கு தகுந்தபடியே, உடலில் மாற்றங்கள் ஏற்படும்.

புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள், சுய பயிற்சிகளை தவிர்த்து ஜிம்முக்கு சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ளவேண்டும். அதுதான் சரியான வழிமுறையாக இருக்கும்.

ஜிம்முக்கு போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்ற பயிற்சி கருவிகளை வாங்கி வீட்டிலே வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது போன்றவைகளும் நல்ல உடற்பயிற்சிகளே. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்களில் இரண்டு வாங்கி, இரண்டு கைகளிலுமாக பிடித்துக்கொண்டு ஸ்டென்ர்த் எக்சசைஸ் செய்வதும் நல்ல பலன்தரும்.

ஜிம் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சி கருவி கள் இருக்கவேண்டும். தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது. மன துக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்க வேண்டும்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பு மணமகனும், மணமகளும் பிசியாகிவிடுவார்கள். அதனால் அவர்கள், `காலை முழுவதும் வேலை இருக்கிறது. மாலை நேரத்தில் வந்து பயிற்சி பெறுகிறோம்' என்று தள்ளிப்போடக்கூடாது. அதிகாலையில் பயிற்சி பெறுவதே சிறந்தது. உடற்பயிற்சிக்கு பிறகுதான் மற்ற வேலைகள் என்று, அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். காலையில் பயிற்சி செய்தால் அன்று முழுவதும் உடல் உற்சாகமாக இருக்கும்.

பத்து நிமிடம் முதல் நாள் பயிற்சி பெற்று விட்டு, பின்பு நாளுக்கு நாள் நேரத்தை அதிகரிக்கவேண்டும். வாரத்தில் ஐந்து, ஆறு நாட்கள் ஒரு மணி நேரத்திற்கு குறையாத அளவிற்கு பயிற்சி பெற வேண்டும். கார்டியோ பயிற்சி பெறும்போது முதல் ஐந்து நிமிடங் கள் உடலில் உள்ள சக்தி வெளியேறும். அதன் பிறகுதான் உடலில் அதிகமாக இருக்கும் கொழுப்பின் சக்தி செலவாகத் தொடங்கும். அவர்கள் தினமும் ஒன்றேகால் மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது.

Be Cool in Summer: கோடையில் `கூல்’ ஆகலாம்!

0 comments
கோடை காலம் வந்தாலும்தான் வந்தது, எல்லா இடங்களிலும் அக்னி நட்சத்திர தகிப்பு மக்களை பாடாய்படுத்துகிறது. அதில் இருந்து தப்பிக்க வேண்டுமா? அப்படியென்றால், தர்ப்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரிக்காய் சாப்பிடுங்கள். கோடையை கூல் ஆக்கிவிடலாம்.

தர்பூசணி : தாகத்தைத் தணிக்கும் தர்ப்பூசணிக்கு பசியை போக்கும் சக்தியும் உண்டு. வயிற்றுப் பொருமலைக் குறைக்கும். பித்தச் சூட்டை விரட்டும். வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரிசெய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் கற்கள் சேருவதைத் தடுக்கும்.

ஆரஞ்சு : பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும், பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் உதவுவது இது. ஒருவர் தொடர்ந்து ஆரஞ்சு சாப்பிட்டு வந்தால் அவரது வாய் சுத்தமாகிறது. காய்ச்சலுக்கும் இது அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற்புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்தும்.

காய்ச்சலின்போது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் உடலுக்குத் தெம்பு அதிகரிக்கும். அதோடு, செரிமானத்தைச் சரியாக்கி, பசியைத் தூண்டும். குடல்களின் பாதையில் தொற்று நேராமல் பராமரிக்கும். குடல்களின் இயக்கத்திற்கு வலுச் சேர்க்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் குமட்டலுக்கு ஆரஞ்சு சிறந்த மருந்து. செரிக்காத உணவால், வயிற்றில் பொருமலுடன் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறை குடிக்க உடனடி நிவாரணம் கிடைக்கும். ஜலதோஷம் உள்ளவர்கள் ஆரஞ்சுச் சாறுடன் வெந்நீர் கலந்து குடிப்பது நல்லது.

சாத்துக்குடி : குளிர்ச்சியான இனிப்பு சுவை கொண்ட சாத்துக்குடி தாகத்தைத் தணிக்கக் கூடியது. வயிற்றுப் பொருமல், வாயு, இருமல், வாந்தி, தண்ணீரற்றுப் போகும் வறட்சி நிலை, ரத்தத்தில் கழிவுப்பொருள் சேர்தல், செரிமானமின்மை போன்ற கோளாறுகளுக்கு இது உதவுகிறது. வயிற்றில் அமிலத்தன்மை சேர்வதை இதில் உள்ள காரத்தன்மை குறைத்து, வயிறு எரிச்சலைக் கட்டுப் படுத்துகிறது. நமது நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான ஆற்றல் இதில் நிறைய உள்ளது.

சளியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள், சாத்துக்குடி பழச்சாற்றை வெந்நீரில் கலந்து அல்லது இஞ்சிச் சாறுடன் சேர்த்துக் குடித்தால் நல்லது.

வெள்ளரிக்காய் : வெள்ளரியில் பிஞ்சாகவும், காயாகவும் இரண்டு வகை உண்டு. வெள்ளரிப்பிஞ்சு பித்தத்தைத் தணித்து, குடல்களுக்குக் குளிர்ச்சியை தருகிறது. சிறுநீரகக் கோளாறுகளைச் சரிசெய்கிறது. எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. தலைசுற்றலைத் தடுக்கிறது. வெள்ளரியில் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்கள் இதை சாப்பிடுவது நல்லது. வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் அதிகப் பலன்கள் கிட்டும். நீரிழிவு நோய் பாதிப்பு உள்ளவர்களும் இதை சாப்பிடுவது நல்லது

Spicy Vegetable: ஸ்பைசி வெஜிடபிள்

0 comments
பிரைட் ரைஸ், நூடுல்ஸ், வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றுக்கு சுவையான சைடு டிஷ் தேவை. அதற்கு ஸ்பைசி வெஜிடபிள் தயாரித்துக் கொடுத்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

ஸ்பைசி வெஜிடபிள் தேவையானவை:

காரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர் சேர்த்து-1/4 கிலோ
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்த்தூள்- 1 டேபிள் ஸ்பூன்
சோளமாவு-ஒரு டேபிள் ஸ்பூன்
மைதா மாவு-ஒரு டேபிள் ஸ்பூன்
வெண்ணெய்- ஒரு டீஸ்பூன்
அஜினோமோட்டோ- 1 சிட்டிகை
தக்காளி கெச்சப்- 1 டீஸ்பூன்
லெமன் ஜூஸ்- 1/4 டீஸ்பூன்
எண்ணைய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு
உப்பு-தேவைக்கேற்ப

ஸ்பைசி வெஜிடபிள் செய்முறை:

காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி தேவையான உப்பு சேர்த்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். சோளமாவு, மைதா மாவு தூவிப் பிசிறி சூடான எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய்த்தூள், அஜினோமோட்டா, தக்காளி கெச்சப் சேர்த்து கிளறவும். தேவையான உப்பு சேர்த்து கிளறி அத்துடன் வெண்ணைய் சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும் பொரித்த காய்கறிகளைச் சேர்த்து புரட்டி கடைசியில் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கி விடவும். மொறுமொறுவென நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த ஸ்பைசி வெஜிடபிள் சைடு டிஷ்சை மாலை நேர சிற்றுண்டியாகக் கூட செய்து சாப்பிடலாம்

Summer Vacation Tips: கோடை விடுமுறையில் ஊருக்குப் போகிறீர்களா?

0 comments
கோடை விடுமுறைக்காலம் வந்தாயிற்று. படிப்பு படிப்பு என்று எந்நேரமும் அறைக்குள் அடைபட்டுக் கிடந்த இளந்தளிர்கள் இப்போது கொஞ்சம் காற்றாட ஹாயாக எங்காவது சுற்றுலா போய் வர விரும்புவார்கள். பெற்றோர்கள் மட்டுமென்ன, இந்த கோடை விடுமுறை நேரத்திலும் அவர்கள் வீட்டுக்குள்ளே அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்பது கட்டாயமா? அவர்களும் பிள்ளைகளை முந்திக் கொண்டு சுற்றுலாத் திட்டம் போட்டு வைத்திருப்பார்கள்.

இதுவரை சரிதான். எத்தனை நாள் வீட்டை விட்டுப் போகிறீர்களோ, அத்தனை நாட்களுக்கும் வீட்டு பாதுகாப்புக்கு என்ன செய்யலாம் என்பதை திட்டமிட்டீர்களா?

அது தான் பெரிய பூட்டாகப் போட்டு பூட்டி விட்டுத் தானே போவோம் என்பீர்கள். அது மட்டும் போதுமா? இன்னும் சில ஜாக்கிரதைகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த திருட்டும் திட்டமிடாமல் நடத்தப்படுவதில்லை. வீடு கட்டுபவர்கள் பந்தாவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பாதுகாப்புக்கு கொடுப்பதில்லை. ஐம்பது லட்ச ரூபாயை கொட்டி தாம்தூம் என்று பகட்டாக வீடு கட்டுபவர்கள், பெரிய ஜன்னல், பெரிய கதவு, வென்டிலேட்டர், ஏ.சி..க்காக பெயர்த்தெடுத்த ஜன்னல் என்று ஆரம்பத்திலேயே திருடர்கள் விசிட்டுக்கு வசதி பண்ணிக் கொடுத்து விடுகிறார்கள். அதோடு வீட்டு பாதுகாப்புக்கு காயலான் கடையில் கால்வாசி விலைக்கு வாங்கிய பூட்டு வாசலில் தொங்கும். இம்மாதிரி பூட்டுக்கள் திருடர்களை பார்த்த மாத்திரத்தில் அதுவாகவே திறந்து கொள்ளும்.

வெளியூர் போவதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் தம்பட்டம் அடித்து விட்டுப் போவது நல்லதல்ல. அதுமாதிரி பயண தினத்தில் ஆட்டோ, அல்லது டாக்சியை வீட்டுக்கு வரவழைத்து ஒட்டுமொத்த குடும்பமும் ஏறிச்செல்வதும் சரியல்ல. ஆளில்லா வீடு என்பது அப்போதே உறுதிப்படுத்தப் பட, திருடர்களுக்கு கொண்டாட்டமாகி விடுகிறது. குறைந்த பட்சம் தெருமுனை வரை வந்தாவது ஆட்டோ பிடிக்கலாம்.

நீங்கள் வெளியூரில் எத்தனை நாட்கள் தங்கப் போகிறீர்கள் என்பதையும் அதுவரை பாதுகாப்பு அவசியம் என்பதையும் ஒரு மனுவாக குறிப்பிட்டு அருகாமையில் உள்ள போலீஸ் நிலையத்தில் கொடுக்கலாம். நள்ளிரவு ரவுண்ட்ஸ் வரும் நேரங்களில் உங்கள் வீட்டீன் மீது போலீசாரின் விசேஷப் பார்வை படும். இதுவே வசதியானவர்கள் என்றால் தனியார் செக்யூரிட்டி உதவியையும் நாடலாம்.

ஊருக்குப் போகும்போது நகைகளையோ பெரிய தொகையையோ வீட்டில் வைத்து விட்டுப் போவது சரியல்ல. ஊரில் இருந்தாலும் உங்கள் கவனம் முழுக்க அவற்றின் மீதே இருக்கும். அதிக நகைகள் இருந்தால் வங்கியில் உங்கள் பெயரில் ஒரு சேப்டி லாக்கர் வாங்கி அதில் வைக்கலாம்.

நீங்கள் பிளாட்டுகளில் வசிப்பவர்களாக இருந்தால், ஒன்று அல்லது இரண்டு செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஆனால் அது போதாது. உங்கள் அருகாமை வீடுகளில் உள்ள பிளாட்டில் இருப்பவர்களிடம் அவர்கள் போன் நம்பரை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஊருக்குப் போனதும் நட்பு ரீதியில் தினமும் ஒருமுறையாவது அவர்களுடன் பேசி விடுங்கள். அப்போது வீட்டுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என்பதை அவர்கள் இயல்பாக பேசுவதில் இருந்தே உணர்ந்து கொள்வீர்கள்.

சிலர் வீடுகளுக்கு பேப்பர் பையன்கள் பால் போடுபவர்கள் அனுதினமும் வருவார்கள். இவர்களிடம் ஊருக்குப் போகும் ஒரு வாரத்துக்கு முன்பே இத்தனை நாட்களுக்கு பால், பேப்பர் வேண்டாம் என்பதை தெளிவுபடுத்தி விடுங்கள். இவர்களில் யார் ஒருவரிடம் சொல்ல மறந்தாலும் வீட்டுவாசலில் நீங்கள் கட்டி வைத்திருக்கிற பை நிரம்பி நீங்கள் வீட்டில் இல்லை ஊருக்கே உரக்கச் சொல்லி விடும்.

இதையெல்லாம் சரியாக செய்து விட்டீர்களானால் உங்கள் டூர் நிச்சயம் கொண்டாட்டம் நிறைந்ததாய் அமையும்.

Are you a Sentiment Women: `சென்டிமென்ட்’ பெண்ணா நீங்கள்?

0 comments
பெண்கள் எப்போதுமே சென்சிடிவ் டைப் ஆனவர்கள். மனம் கஷ்டப்படும்படியாக யாரேனும் ஏதாவது சொல்லிவிட்டால் பொசுக்கென்று கண்ணீர் விட்டு விடுவார்கள்.

நீங்களும் அதுபோன்று அடிக்கடி கண்ணீர் விட்டு அழும் சென்டிமென்ட் பெண்ணா? அப்படியென்றால், உங்கள் கணவர் அல்லது காதலர் விலகி செல்வதுடன் உங்களது முகத்தின் அழகும் குறைந்து போகலாம் என்று எச்சரிக்கிறது ஓர் ஆய்வு.

இஸ்ரேலைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டார்கள். ஆண்கள், பெண்கள் 60 பேர் இதில் பங்கேற்றனர். அவர்களில் பெண்களை மாத்திரம் ஒரு குழுவாக பிரித்து பரிசோதனையைத் துவங்கினர்.

சோகமான அழுகைக் காட்சிகள் கொண்ட படத்தை தனியறையில் அவர்கள் முன்பு சுமார் அரை மணி நேரம் ஓடவிட்டனர். பெண்கள்தான் சென்டிமென்ட் ஆசாமிகள் ஆயிற்றே... வழக்கம்போல் அவர்களது கண்களில் கண்ணீர் பெருக ஆரம்பித்து விட்டது.

அப்போது அறைக்குள் நுழைந்த ஆராய்ச்சியாளர்கள், படம் பார்த்தே கண்ணீர் வடித்த பெண்களின் கண்ணீரை ஒரு சோதனைக் குழாயில் சேகரித்தனர். இன்னொரு சோதனைக் குழாயில் உப்பு கலந்த நீரை தயார் செய்தனர்.

உண்மையான கண்ணீரை சில பெண்களின் முகத்திலும், உப்பு நீரை மற்ற பெண்கள் முகத்திலும் பேஷியல் போன்று அப்ளை செய்தனர். யாருக்கு கண்ணீர், யாருக்கு உப்பு நீர் அப்ளை செய்யப்பட்டது என தெரியாத நிலையில், ஆண்கள் சிலரை அந்தப் பெண்கள் அருகே வரவழைத்தனர். அவர்களை, அந்தப் பெண்களின் முகம் அருகே நின்று பேசச் செய்தனர்.

அப்போது ஆண்களின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை பதிவு செய்த ஆய்வாளர்கள், அடுத்த நிமிடம் அவர்களது ரொமான்ஸ் `மூடு'க்கு அவசியமான டெஸ்ட்ரோஸ்டிரான் ஹார்மோன் அவர்களது உடலில் எந்த அளவுக்கு சுரந்துள்ளது என்பதை ஆய்வு செய்தனர். அப்போது, உண்மையான கண்ணீர் பூசப்பட்ட பெண்களின் முகத்துக்கு நேர் எதிராக நின்று பேசிய ஆண்களிடம் டெஸ்ட்ரோஸ்டிரான் சுரப்பு மிகக்குறைவாகவும், உப்புநீர் அப்ளை செய்யப்பட்ட பெண்களுக்கு நேர் எதிராக நின்று பேசிய ஆண்களிடம் அந்த ஹார்மோன் சுரப்பு நார்மலாகவும் இருந்தது.

இதில் இருந்து ஒரு முடிவுக்கு வந்த ஆராய்ச்சியாளர்கள், தாரை தாரையாக கண்ணீர் விடும் பெண்ணால் ஆணின் தாம்பத்ய ஆசை குறையும் என்று தெரிவித்தனர். அத்துடன், முகத்தில் கண்ணீர், உப்பு நீருடன் இருந்த பெண்களை போட்டோ எடுத்து ஆராய்ந்ததில் கண்ணீர் விட்ட பெண்களின் அழகு குறைந்திருந்ததாகவும் கூறினர்.

ஸோ... நீங்களும் சென்டிமென்ட் பெண் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள்!

அபாயம் : உங்கள் அந்தரங்கம் படமாகிறது..

0 comments
அதென்னவோ தெரியவில்லை, தற்போது பலருக்கும் தங்கள் துணை அல்லது காதல் ஜோடியுடன் நெருக்கமாக இருக்கும் தருணத்தை படம்பிடிக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. இது, பெரும்பாலும் பெண்களை தீராத மனவேதனைக்கும், சோகத்திற்கும் உள்ளாக்குகிறது.

23 வயதான அழகுப் பாடகி துலிசியா இப்போது அந்த `அந்தரங்க படப்பிடிப்பு' சோகத்தில் சிக்கித் தவிக்கிறார். இந்தியாவைச் சேர்ந்த இவர், தனது 17 வயதிலிருந்தே ஜஸ்டின் எட்வர்ட்ஸ் என்பவரை காதலித்து வந்தார். துலிசியா வாழ்க் கையில் ஆறு ஆண்டுகள் கதாநாயகனாக இருந்த அவர், இப்போது வில்லனாகி துலிசியாவை ஏமாற்றிவிட்டார். இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த படுக்கையறைக் காட்சிகள் சமீபத் தில் இணைய தளத்தில் வெளியாகி, பார்ப்பவர்களை கண்கூசச் செய்தன.

``நான் ஏறக்குறைய அவருடன் மனைவி போலவே வாழ்ந்தேன். அவரை ஆழமாக நேசித் தேன். திருமணம், குழந்தைகள் பற்றியெல்லாம் கூட நாங்கள் பேசி முடிவெடுத்திருந்தோம். அந்த சூழ்நிலையில் எங்களுக்குள் இருந்த அந்த அந்தரங்கம் அனைத் தும் வெளியாகி, இப்படி ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்று நான் கனவில்கூட நினைத்திருக்கவில்லை.'' என்று புலம்புகிறார் துலிசியா. அந்த அந்தரங்க காட்சிகள் வெளியாக, தன் காதலன் தான் காரணம் என்றும் கண்கலங்குகிறார்.

இவரைப் போலவே தாங்கள் உயிருக்குயிராக நேசித்தவரை கண்மூடித்தனமாக நம்பி, தன்னை ஒப்படைத்ததன் எதிர் விளைவை இன்று பலரும் அனுபவித்துக் கொண்டிருக் கிறார்கள். பெண்கள் மட்டுமல்ல, பெண்களால் படம்பிடிக்கப்பட்டு பழிவாங்கப்பட்ட ஆண் களும் இந்த சோகப்பட்டியலில் இணைந்திருக்கவே செய்கிறார்கள்.



பிரபலமான பெண்மணியின் மகன் அவர். உயர்ந்த துறை படிப்பு ஒன்றை நிறைவு செய்து கொண்டிருந்தபோது, அவருக்கும், அதே துறையில் இருக்கும் பெண்ணுக்கும் காதல் வந்தது. சில மாதங்களிலே கட்டில் வரை சென்றுவிட்டது. அதை அவள் படம்பிடித்தது அவருக்கு தெரியாது. `எல்லாம்' நடந்து முடிந்த பின்பு அவர் எச்சரிக்கையாகி, காதலி எப்படிப்பட்டவள் என்று விசாரிக்கத் தொடங்கினார். ஏற்கனவே ஒன்றிரண்டு காதலர்கள் இருந்ததும், அவர்களிடமும் அவள் எல்லைமீறி பழகி இருப்பதும் அவருக்கு தெரியவந்தது. அதனால் அவளது தொடர்பை துண்டித்துவிட ஆர்வம் காட்டினார். அவளோ தன்னை திருமணம் செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்திக் கொண்டிருந்தாள்.

இந்த நிலையில் அவருக்கு வேறு திருமண ஏற்பாடு நடந்தது. பெண் மிக வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்தவள். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருப்பதை அமைதியாக கவனித்து வந்த அந்த காதலி, திருமணத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பு திடீரென்று களத்தில் இறங்கினாள். தான் படம் பிடித்து வைத்திருந்ததை அப்படியே பெண் வீட் டாருக்கு போட்டுக்காட்டி ஒரு மணி நேரத்திலே பூகம்பத்தை ஏற்படுத்தி, திருமணத்தையே தடுத்து நிறுத்திவிட்டாள். `அவள் படம் பிடித்தது தனக்கு தெரியவே தெரியாது' என்று தலையில் அடித்துக்கொண்டார், அந்த நபர்.

"அந்தரங்கத் தருணங்களை காமிராவில் பதிவு செய்யும் ஆசை ஆண்களிடம் அதிகரித்து வருகிறது. அது தங்கள் நெருக்கத்தின் அடையாளம் என்று கருதி பெண்களும் அதற்கு அனுமதித்து விடுகிறார்கள். ஆனால் பல நேரங்களில் ஆண்கள் `அதை'த் தங்கள் நண்பர்களிடம் காட்டி மகிழ்கிறார்கள். இணையத்திலும் ஏற்றுகிறார்கள். செக்ஸ் காட்சி களான அவைகளை விற்று சிலர் பணமாக்கவும் செய்கிறார்கள். காதலி தன்னைப் பிரிந்து சென்றால், அவளைப் பழிவாங்கவும் அதை பயன்படுத்துகிறார்கள்''-என்கிறார், மனநல நிபுணர் சர்மா.

பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் டி.காமராஜ் இந்த `ஆபாச படப்பிடிப்பின்' காரணங்களை இன்னொரு கோணத்தில் அலசுகிறார். அவர் சொல்கிறார்..

"ஆணும், பெண்ணும் அந்தரங்கமாக பழகுவதை ஆவணமாக்குவது ஆதிகாலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. தான் யாரை நேசிக் கிறேன். தங்களுக்குள் எப்படிப்பட்ட உறவு இருக்கிறது என்பதை பட மாக முதலில் மனிதன் குகைகளிலும், மலைகளிலும் வரைந்து வைத் தான். பின்பு எழுதி வைத்தான். நாகரீகம் வளர்ந்த பின்பு கடிதம் வாயி லாக தங்கள் அந்தரங்கங்களை பதிவு செய்து அதை அத்தாட்சியாக பாதுகாத்தனர். பின்பு நாகரீகமான உடையோடு இருவரும் நெருக்கமாக இருந்ததை படம் பிடித்து வைத்தனர். தான் விரும்புவதை சேகரித்து பாதுகாத்துவைத்து பார்த்து மகிழும் எண்ணம் இயல்பாகவே ஆண் களுக்கும், பெண்களுக்கும் உண்டு.

இப்போது கிட்டத்தட்ட எல்லோர் கைகளிலும் செல்போனிலோ, வேறு வகையிலோ கேமிரா இருக்கிறது. அதை பயன்படுத்திப்பார்க்க விரும்புகிறார்கள். அதில் நண்பர்களோடு நிற்பது, ஓடுவது, ஆடுவது போன்றவற்றை படம் பிடிப்பதைவிட, வயதுக்கு தகுந்தபடியான அந்தரங்க விஷயங்களை படம்பிடிக்கவே சிலர் விரும்புகிறார்கள்.

முதலில் வேறுயாரையாவது அந்தரங்கமாக படம் பிடிப்பார்கள். பின்பு தம்மையே படம் பிடித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றும். அதற்கு தக்கபடி தன் காதலியை அணுகு வார்கள். முதலில் அவளிடம் நெருக்கமாக பழகிவிட்டு, அவளை தன்னோடு சேர்ந்து ஆபாச படம் பார்க்கவைக்கும் அளவிற்கு ஈடுபாடுகொள்ளச் செய்வார்கள். பின்பு, `திரு மணத்திற்கு முந்தைய உறவை இப்போது பலரும் தவறாக கருதுவதில்லை' என்று வசீகர மாக பேசி, அதற்கான சம்மதத்தை பெற்றுவிடுவார்கள். அது தொடரும் போதே, `யார் யாரோ தோன்றும் அந்தரங்க படங்களை நாம் பார்க்கிறோம். அடுத்தவர்களை அந்த கோணத்தில் பார்ப்பதைவிட நாமே அப்படி இருக்கும்போது அதை படம் பிடித்துவைத்து விரும்பும்போதெல்லாம் பார்க்கலாமே. நாம் நம்மீது வைத்திருக்கும் காதலுக்கும், நம்பிக் கைக்கும் அதை ஒரு ஆவணமாக்கலாமே என்று சொல்வார்கள். இப்படித்தான் பெண் களை `படப்பிடிப்பிற்கு' சம்மதிக்கவைக்கிறார்கள்.

ஆனால் மனித மனதிற்கு ரகசியங்களை பாதுகாக்கும் பலம் கிடையாது. மனித மனம், `ஒரு ரகசியத்தை பாதுகாப்பதால் தனக்கு சுவாரஸ்யம், சந்தோஷம் அதிகமா? அதை வெளியிடுவதால் தனக்கு சந்தோஷம் அதிகமா?' என்று தனக்குள்ளே அடிக்கடி கேள்வி கேட்கும். அதில் வெளியிடுவதுதான் சந்தோஷம் என்ற முடிவை எடுத்துவிடும்போது, தான் பிடித்துவைத்திருக்கும் படங்களை தன்னோடு நட்பில் இருப்பவர்களிடம் காட்டுவார்கள்.

அந்த படத்தை அடுத்தவர்களுக்கு காட்டுவதன் மூலம், தனக்கு அழகான காதலி இருப்பது- அவளை தான் உறவு கொள்வது- அதை படம்பிடித்து தன்னை ஒரு சாதனை யாளன் போல் காட்டிக்கொள்வது போன்றதெல்லாம் ஈடேறும் என்று நினைப்பார்கள். அப்படி சிலரிடம் அந்த படம் பரிமாறப்படும்போது, அவர்கள் வேண்டும் என்றோ, அஜாக்கிரதை யாலோ அதை பலரும் பார்க்கும் அளவிற்கு இணையங்களில் சேர்த்துவிடுகிறார்கள். இதுதான் ஆபத்தாக மாறுகிறது.

நாங்கள் எங்களிடம் ஆலோசனைக்கு வரும் தம்பதிகளிடம் வெளி மாநிலங்களுக்கோ, வெளிநாட்டிற்கோ செல்லும் போது அங்கு ஹோட்டல்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளாதீர் கள். அங்கு பல இடங்களில் கேமிரா வைத்து சாதாரணமான ஊழியர்களே படம்பிடித்து, தம்பதிகள் சொந்த ஊர் வரும் முன்பே அந்த காட்சிகள் வந்துவிடுகின்றன என்று உஷார்படுத்துகிறோம்.

தற்போது ஆண்களிடம் செக்ஸ் பலகீனம் அதிகரித்து வருகிறது. அதனால் அவர்கள் `ஆக்டிவ்' செக்சில் ஈடுபடுவதைவிட, பார்த்து மகிழுவதே போதும் என்று நினைக்கிறார்கள். அதனாலும் தன் இணையோடு சேருவதை படம்பிடிக்கிறார்கள். தாங்கள் இணையும் படத்தை பார்த்தே திருப்திபடுவது அல்லது தூண்டுதல் அடைவது போன்றவை ஆரோக்கிய மான செக்ஸ் அல்ல. அவர்களை ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் செக்ஸ் பலகீனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் சிகிச்சை எடுத்து தங்கள் செக்ஸ் வாழ்க் கையை புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.

அந்தரங்கத்தை படமாக்குவது தவறான செயல். அதைவைத்து பெண்களை- ஆண்களோ, ஆண்களை- பெண்களோ மிரட்டுவது கடுமையாக தண்டிக்கவேண்டியது. அந்த பழக்கம் இருப்பவர்கள் அதிலிருந்து மீளுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்''- என்கிறார், டாக்டர் டி.காமராஜ்.

மனநல ஆலோசகர் பிரீத்தி மனோகர் சொல்கிறார்...

"ஆபாச படங்களை தம்பதிகள் சேர்ந்து பார்ப்பதும், காதலர்கள் சேர்ந்து பார்ப்பதும் அதிகரித்து வருகிறது. அதனால், அதுபோல் தங்கள் அந்தரங்கத்தையும் சிலர் கூச்சமில்லாமல் படம் பிடிக்கிறார் கள்.

என்னிடம் கவுன்சலிங்குக்கு ஒரு தம்பதியினர் வந்தனர். நடுத்தர வயது தம்பதிகளான அவர்கள் எப்போதும் பிசியாக தங்கள் வேலை யிலே மூழ்கிகிடப்பவர்கள். தங்கள் சக்தியை எல்லாம் வேலையிலே செலவிட்டுவிட்டு, சக்தியற்றவர்கள்போல் வீடு திரும்புவார்கள். அத னால் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவார்கள். மூன்று மாதத்திற்கு ஒரு முறை தான் செக்ஸ் வைத்துக்கொள்வது என்ற நிலைக்கு அவர்கள் தாம்பத்ய வாழ்க்கை சுருங்கிவிட்டது.

அதனால் இருவரும் கலந்துபேசி, தங்கள் செக்ஸ் வாழ்க்கையை புதுப்பித்துக்கொள்வதற்காக ஒரு சுற்றுலா தலத்திற்கு சென்றார்கள். அங்கு அறையில் தங்கியிருந்தபோது, சந்தோஷமான மூடில் எப்போ தும் தாங்கள் பார்த்து மகிழ, தங்கள் உறவை படம்பிடித்திருக் கிறார்கள். அதை லேப்டாப்பில் போட்டு பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.

திடீரென்று லேப்டாப் பழுதாகிவிட, அந்த படத்தை தங்களுக்கு தெரிந்த விதத்தில் அழித்துவிட்டு சர்வீஸ்க்கு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சர்வீஸ் செய்தவர், அழித்த படங்களை மீண்டும் எடுத்து பார்த்ததோடு, அதை தன் நண்பர்களுக்கும் அனுப்பிவைத் திருக்கிறார். அதெல்லாம் இந்த தம்பதிக்கு தெரிந்தபோது மிகவும் அதிர்ந்துபோனார்கள். அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டது.

திருமணமான இன்னொரு பெண் என்னை சந்திக்க வந்திருந்தார். அவருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. ஒரு குழந்தையும் இருக்கிறது. இப்போது கணவருக்கு இன்னொரு பெண்ணோடு தொடர்பு இருப்பது உறுதியாகி விட்டதால், அவரிடமிருந்து விவாகரத்து பெற விரும்புகிறார். ஆனால் திருமணமான புதிதில் இருவரும் இணைந்திருந்த படுக்கை அறை காட்சிகள் அனைத்தையும் அவள் சம்மதத்தோடு, கணவர் படம்பிடித்திருக்கிறார். அவள் என்னிடம், `நான் விவாகரத்து பெற்ற பின்பு, எதிர்காலத்தில் இன்னொரு திருமணம் செய்தால், அந்த பழைய அந்தரங்க காட்சிகளை இந்த கணவர் வெளியிட்டுவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது' என்றார். பெண்களால் கணவரையும் நம்ப முடிவதில்லை. காதலரையும் நம்ப முடியவில்லை. அதனால் அவர்கள் அந்தரங்கத்தை படம்பிடிக்க அனுமதிக்காமல் இருப்பதே நல்லது..'' என்று கூறும் பிரீத்தி மனோகர், காதலில் ஈடுபடும் பெண்கள் தங்கள் அந்தரங்கம் படமாவதை எப்படி தடுக்கவேண்டும்? என்றும் ஆலோசனை சொல்கிறார்..

"ஆண்கள் முதலில் பிரண்டாக பழகுவார்கள். பின்பு அவள் மீது தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி, உணர்வு ரீதியாக அவளை அணுகுவார்கள். அவள் மீது மிகுந்த அக்கறை இருப்பதுபோல் காட்டி, அவளை வசப்படுத்தி காதலிப்பார்கள்.

காதல் ஓ.கே. ஆனதும் சினிமா, பீச் என்று சுற்றுவார்கள். பின்பு அவளை ஆபாச படங் களை பார்க்க அழைப்பார்கள். அப்போதே பெண்கள் உஷாராகிவிடவேண்டும். அதற்கு சம்மதித்தால் அடுத்த கட்டம், உடலுறவு, பின்பு அதை படம் எடுத்தல் என்ற நிலைக்கு போய்விடும். படம் பிடிப்பதில் ஒரு காதலன் வெற்றி பெற்றுவிட்டால் அன்றே அவளது நிம்மதி, எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியாகிவிடும்.

இதை தடுப்பதில் அம்மாக்களின் பங்கு முக்கியமானது. மகள்களிடம் அவர்கள் மனம் விட்டுப்பேச வேண்டும். பெற்றோர் இருவரும் தினமும் தங்களுக்கு வெளி இடங்களில் கிடைத்த அனுபவங்களை மகளிடம் சொல்லவேண்டும். அப்போது அவள் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொல்வாள். இப்படிப்பட்ட நெருக்கமான உறவை பெற்றோர் ஏற்படுத்திக் கொண்டால் மகள்கள் அடுத்தவர்களிடம் அன்பையும், நட்பையும் எதிர்பார்த்து இப்படிப்பட்ட ஆபத்தில் சிக்கிக்கொள்ளமாட்டார்கள். பெற்றோரும், ஆசிரியர்களும், சமூகமும் இதில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் அந்தரங்கம் படமாகும் அபாயத்தை குறைக்கலாம்..'' என்கிறார்.

***

புகார் செய்வது எப்படி?

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றம் புரிபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக, சென்னை போலீசின் சைபர் கிரைம் பிரிவு இயங்கிவருகிறது. ஆணையர் திரிபாதி வழிகாட்டு தலின்படி, துணை ஆணையர் ராதிகாவின் கீழ் இந்த பிரிவு செயல் படுகிறது. டாக்டர் எம்.சுதாகர் கூடுதல் துணை ஆணையராக செயல்படுகிறார்.

2003-ல் இந்த பிரிவு தொடங்கப்பட்டபோது 35 புகார்களே பதிவாகின. வருடத்திற்கு வருடம் அதிகரித்து, 2007-ல் 702 ஆகவும், 2008-ல் 852 ஆகவும் உயர்ந்தது. கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்ட புகார்களின் எண்ணிக்கை- 1370.

கூடுதல் துணை ஆணையர் டாக்டர் எம்.சுதாகரிடம், `பாதிக்கப்பட்டவர்கள் எங்கே, எப்படி புகார் தரவேண்டும்?` என்று கேட்டபோது அவர் கூறிய பதில்:

"வருடத்திற்கு வருடம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல் தோன்றி னாலும், வேகமாக உயர்ந்துகொண்டிருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையோடு அதை ஒப்பிட்டால் குற்றங்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆனா லும் இதையும் கட்டுப்படுத்தவேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக் கிறோம்.

சைபர் கிரைமில் பதிவாகும் குற்றங்களில் மிரட்டுதல், ஆபாச படம் பிடித்தல், அவைகளை வெளியிடுதல் போன்றவை 5 சதவீதம் அளவிற்குதான் இருக்கும். அதில் பெரும்பாலும் பெண்கள் பாதிக்கப் படுபவர்களாக இருக்கிறார்கள்.

ஆணும், பெண்ணும் நட்போடு பழகிக்கொண்டிருக்கும்போது தங்களை படம் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படும்போது அந்த படங்களை பயன் படுத்தி இணையதளங்களில் தவறாக சித்தரிக்கிறார்கள். ஆபாச படங்களை வெளியிடு வதும், தவறாக சித்தரிப்பதும் கடுமையான குற்றங்கள். விளையாட்டாக படம் பிடிப்பது, பொழுதுபோக்காக அடுத்தவர்களை படம் பிடிப்பது எல்லாமே எதிர்காலத்தில் பிரச்சினை களை உருவாக்கும்தன்மை கொண்டது என்பதால், எப்போதும் எல்லோரும் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஒருவர் கெட்ட நோக்கமின்றி இன்னொருவரின் தனிப்பட்ட படங்களை எடுத்தாலும், வைத்திருந்தாலும் அது மற்றொருவர் கையில் கிடைக்கும்போது பிரச்சினைக்குரியதாக மாறக்கூடும். அதனால் அடுத்தவர்களின் தனிப்பட்ட விஷயங்களை ஒருபோதும் யாரும் படம்பிடிக்கக்கூடாது.

சைபர் கிரைம் குற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் உணரவேண்டும் என்பதற் காகவும், இதில் மக்கள் விழிப்புணர்வு பெறுவதற்காகவும் விழிப்புணர்வு பிரசாரமும் நடத்தி வருகிறோம்.

சென்னையில் இத்தகைய பாதிப்பிற்கு உள்ளாகிறவர்கள் போலீஸ் ஆணையர் அலுவலகத் தில் உள்ள `குறை கேட்பு பிரிவில்' புகார் செய்யவேண்டும். புகாரின் அடிப்படையில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்''- என்றார்.

நன்றி-தினத்தந்தி

How to get Consumer Claim: நுகர்வோர் மன்றத்தில் புகார்: நிவாரணம் பெறுவது எப்படி?

0 comments
பொதுமக்கள், தாங்கள் வாங்கும் பொருட்களில், தரம் மற்றும் சேவை குறைபாடு இருந்தால், நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் புகார் செய்து, நிவாரணம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட சில வியாபாரிகளின் முறையற்ற செயல்களுக்கு முடிவு கட்டும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

புகார் பதிவு முறை : புகார் மனுவில், புகார் தாரரின் பெயர், முழு முகவரி, எதிர் மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி, பொருள் அல்லது சேவையை பயன்படுத்திய விவரங்கள், புகாரின் தன்மை, ரசீதின் நகல் மற்றும் விவரம், நஷ்ட ஈட்டின் விவரம் ஆகியவை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.
* பாதிப்பு ஏற்பட்ட இரண்டு வருடங்களுக்குள், புகாரை பதிவு செய்ய வேண்டும். புகார் பதிவிற்கான கட்டணத்தை, டி.டி., அல்லது போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும். மேல்முறையீட்டு மனுவுக்கு, கட்டணம் செலுத்த தேவை இல்லை.
* நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மற்றும் சான்று அளிக்கப்பட்ட நபர் மூலமாகவோ புகாரை பதியலாம்.

யாரை அணுகனும்? : நுகர்வோர் வாங்கிய பொருள் அல்லது சேவையின் மதிப்பு, 20 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருப்பின், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களையும்; 20 லட்சம் முதல், 1 கோடி ரூபாய்க்கு குறைவாக இருந்தால், மாநில நுகர்வோர் குறைதீர் மன்றங்களையும்; 1 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளவர்கள், தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தையும் அணுக வேண்டும். அந்தியோதயா, அன்னயோஜனா குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள், ஒரு லட்ச ரூபாய் வரை, புகார் கட்டணம் செலுத்த தேவை இல்லை. ஏனைய புகார்தாரர்கள், தாங்கள் வாங்கிய பொருட்கள் மற்றும் சேவை மதிப்பின் அடிப்படையில், புகார் பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.
நுகர்வோருக்கு, எந்த நிலையிலும் நீதி கிடைக்காத பட்சத்தில், உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தை அணுகி, நிவாரணம் பெறலாம்.

புகார் பதிவு கட்டண விவரம்:

பொருட்களின் மதிப்பு கட்டணம்
(ரூபாயில்) (ரூபாயில்)
1 லட்சம் வரை 100
1 - 5 லட்சம் 200
5 - 10 லட்சம் 400
10 - 20 லட்சம் 500
20 - 50 லட்சம் 2,000
50 - 1 கோடி 4,000
1 கோடிக்கு மேல் 5,000

Fat Is Good: `கொழுப்பு’ நல்லது?

0 comments
`கொழுப்பு' என்றாலே பயப்படுபவர்களுக்கு ஓர் இனிய செய்தி- `கொழுப்புச் செல்களில் உள்ள ஒரு மரபணு, சர்க்கரை நோயில் இருந்து காக்கிறது' என்கிறார்கள் விஞ்ஞானிகள். சர்க்கரை நோய்க்கான சிகிச்சையில் இது ஒரு குறிப்பிடத்தக்க திருப்பமாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி தலைமையிலான ஒரு குழு இந்த ஆய்வை மேற்கொண்டது.

அதில், பொதுவான கருத்துக்கு மாறாக, உடம்புக் கொழுப்பானது நன்மையே செய்கிறது, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் உடம்பின் திறனை ஊக்குவிக்கிறது என்று கண்டறியப்பட்டது.

ஆய்வாளர்கள் கூறும் chREBP மரபணு, குளூக்கோஸ் சர்க்கரையை `பேட்டி ஆசிட்களாக' மாற்றுவதன் மூலமும், இன்சுலினுக்கான நுண்ணுணர்வை ஊக்குவிப்பதன் மூலமும் `டைப் 2' சர்க்கரை நோயை எதிர்க்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வயதில் உடல் பருமன் அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் பொதுவாக `டைப் 2' சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

``எல்லா கொழுப்பும் தீமையானது என்ற பொதுவான கருத்து உண்மையல்ல. உடல் பருமன் என்பது மோசமான உடலியல் செயல்பாடுகளுடன் தொடர்புடையது. அதுதான் ஒருவருக்குச் சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்களை ஏற்படுத்துகிறது. ஆனால், குண்டான பலருக்கு உடலியல் செயல்பாடுகள் ஆரோக்கியமாகவே இருக்கின்றன'' என்று ஆய்வுக் குழுத் தலைவர் டாக்டர் மார்க் ஹெர்மான் கூறுகிறார்.

உடல் பருமனானவர்களைப் பொறுத்தவரை, சர்க்கரையானது கொழுப்பு செல்களில் நுழைவது தடுக்கப்படுவதால் அதன் அளவு மிகவும் அதிகரிக்கிறது. ஆனால் ஆய்வகத்தில், குண்டான எலி ஒன்றில் குளூக்கோஸை கடத்தும் ஜீன் அளவை அதிகரித்தபோது, அதன் மூலம் மேலும் அதிக சர்க்கரை கொழுப்புச் செல்களில் அனுமதிக்கப்படுவதும், அதன்மூலம் சர்க்கரை நோயிலிருந்து எலி காக்கப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. குளூக்கோஸை கடத்தும் ஜீன்கள் இல்லாத சாதாரண எடையுள்ள எலிகளில் நாளடைவில் சர்க்கரை நோய் அறிகுறிகள் ஏற்பட்டதையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

கொழுப்பு குறித்த தற்போதைய கண்டுபிடிப்பு முக்கியமானது என்று உற்சாகமடைந்துள்ள ஆய்வாளர்கள், மேலும் இதுதொடர்பான தீவிர ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Pepper Paya: பெப்பர் பாயா

0 comments
பெப்பர் பாயா, ஆட்டுக்கால் பாயா என்றாலே முதலில் வந்து நிற்பது அதன் அபார ருசி தான். இதில் பெப்பர்சேர்த்து தரும்போது அதன் சுவையோடு அலாதிமணமும் இணைந்து கொள்கிறது. செய்து சுவைப்போமா, பெப்பர் பாயா..!

பெப்பர் பாயா தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் - 2
தக்காளி - ஒரு கையளவு(நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 10 கீறியது
பூண்டு - ஒரு கையளவு
மிளகு - 4 டீஸ்பூன் (குருணையாக அரைக்கவும்)
தேங்காய் - 1/4 மூடி (அரைத்து பால் எடுக்கவும்)
உப்பு - சிறிதளவு

பெப்பர் பாயா செய்முறை:

ஆட்டுக்காலை சுத்தம் செய்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும். குக்கரில் ஆட்டுக்கால், வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், போதுமான உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

10 நிடங்கள் கழித்து 10 விசில் வந்ததும் கால் வெந்ததைப் பார்த்து, அரைத்து வைத்திருக்கும் தேங்காய்ப்பாலை ஊற்றி சிறிதுநேரம் கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.

பாயாவை இறக்குமுன் குருணையாக அரைத்து வைத்திருக்கும் மிளகை சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது பெப்பர் பாயா ரெடி.

Take Care of Eyes: கண்கள் கவனம்

0 comments
நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.

1. கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண் டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2. ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு பல நம் கண்களுக்கு பலவகையில் சோதனை களைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப் படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடி வமைப்பார்கள்.

3. 20:20:20 விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட் களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.
பொதுவாக நிமிடத்திற்கு ஒருமுறை நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.
ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

4.இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண் களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

5. தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

6. தேயிலை பைகள்: பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப் பட்ட துணியை, அலுவலகத் திற்குச் செல்கை யில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்த வுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்க வும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.

7. வைட்டமின்கள்: ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும்.

Education Channel in Arasu Cable Network

0 comments
மேலும் கல்வி நோக்கங்களுக்காக அரசு நடத்தும் கேபிள் டிவி சேவைபயன்படுத்த நோக்கமாக, புதன்கிழமை தமிழ்நாடு அரசாங்கம் அதன்Arasu கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் ஒரு தனியான கல்வி சேனல்அறிமுகம் முன்மொழியப்பட்டது.

GT-I9070, GT-S5300, Samsung's new Samsung Galaxy Pocket & Galaxy S Advance has been launched

0 comments
Samsung has announced the launch of it's two new mobile models Samsung Galaxy Pocket and Galaxy S Advance today, launched at the price tag of Rs.26,900 Galaxy S Advance is the higher end model where as Galaxy Pocket is priced at Rs.8200.

Samsung Galaxy Pocket Full Specification



GENERAL2G NetworkGSM 850 / 900 / 1800 / 1900
3G NetworkHSDPA 900 / 2100
Announced2012, February
StatusComing soon
BODYDimensions103.7 x 57.5 x 12 mm
Weight97 g
- Touch-sensitive controls
DISPLAYTypeTFT touchscreen
Size240 x 320 pixels, 2.8 inches (~143 ppi pixel density)
MultitouchYes
- TouchWiz UX UI
SOUNDAlert typesVibration, MP3 ringtones
LoudspeakerYes
3.5mm jackYes
MEMORYCard slotmicroSD, up to 32 GB
Internal3 GB
DATAGPRSYes
EDGEYes
SpeedHSDPA, 3.6 Mbps; HSUPA
WLANWi-Fi 802.11 b/g/n, Wi-Fi hotspot
BluetoothYes, v3.0 with A2DP
USBYes, microUSB v2.0
CAMERAPrimary2 MP, 1600x1200 pixels
FeaturesGeo-tagging
VideoYes, QVGA@15fps
SecondaryNo
FEATURESOSAndroid OS, v2.3 (Gingerbread)
CPU832 MHz
SensorsAccelerometer, compass
MessagingSMS(threaded view), MMS, Email, Push Mail, IM, RSS
BrowserHTML
RadioStereo FM radio with RDS
GPSYes, with A-GPS support
JavaYes, via Java MIDP emulator
ColorsBlack
- SNS integration
- MP4/H.264/H.263 player
- MP3/WAV/eAAC+ player
- Organizer
- Image/video editor
- Document viewer
- Google Search, Maps, Gmail,
YouTube, Calendar, Google Talk, Picasa integration
- Voice memo/dial
- Predictive text input
BATTERYStandard battery, Li-Ion 1200 mAh
Stand-by
Talk time

Samsung Galaxy Pocket and Galaxy S Advance


Samsung Galaxy Pocket Vs Samsung Galaxy Advance


Common Samsung Galaxy Pocket and Galaxy S Advance Specs


Both the mobiles will run on Android 2.3,TouchWiz UI, 3.5mm sterio audio Jack, Stereo FM Radio with RDS function,3G,Wi-Fi 802.11 a/b/g/n and Bluetooth v 3.0 coupled with aGPS pre-installed.

Watch this comparison video of Samsung Galaxy Pocket & Galaxy S Advance



Samsung Website for Samsung Galaxy Pocket & Galaxy S Advance.

Maruti Suzuki Ertiga: Spec, Price and Models of Maruti Suzuki Ertiga

0 comments
Maruthi's new Maruti Suzuki Ertiga
Maruti Suzuki Ertiga, the latest vehicle from maruthi suzuki india limited code named Maruti Suzuki Ertiga has been launched today, analysists criticise that Maruti Suzuki Ertiga is an extrnded version of suzuki swift.

Maruti Suzuki Ertiga Price



Maruti Suzuki Ertiga LXi
1373cc Petrol Rs. 6,07,769
Maruti Suzuki Ertiga Vxi
1373cc Petrol, Manual, Rs. 6,79,772
Maruti Suzuki Ertiga Vxi ABS
1373cc Petrol, Manual, Rs. 6,87,885
Maruti Suzuki Ertiga ZXi
1373cc Petrol, Manual, Rs. 7,50,404
Maruti Suzuki Ertiga LDi
1248cc Diesel, Manual, Rs. 7,50,789
Maruti Suzuki Ertiga VDi
1248cc Diesel, Manual, Rs. 8,11,613
Maruti Suzuki Ertiga ZDi Rs. 8,66,957
1248cc Diesel, Manual,

Model Variant of Maruti Suzuki Ertiga


Ertiga Vxi
Ertiga Vxi ABS
Ertiga ZXi
Ertiga LDi
Ertiga VDi
Ertiga ZDi

Detailed Specification of Maruti Suzuki Ertiga




Dimensions and Weights
Overall Length (mm)4265
Overall Width (mm)1695
Overall Height (mm)1685
Wheel Base (mm)2740
Ground Clearance (mm)185
Front Track (mm)1480
Rear Track (mm)1490
Gross Vehicle Weight (kg)1845
No of Doors5
Fuel Economy
Mileage Highway (km/liter)
Mileage City (km/liter)
Mileage Overall (km/liter)
Capacities
Seating Capacity (person)7
Fuel Tank Capacity (liter)45
Performance
Maximum SpeedKm/Hour
0-100kmphseconds
1/4 Mileseconds
Engine
Engine Type/ModelDDiS Diesel Engine
Displacement cc1248
Power (PS@rpm)90PS @4000rpm
Torque (Nm@rpm)200Nm @1750rpm
Valve Mechanism
Bore (mm)69.6
Stroke (mm)82
Compression Ratio:1
No of Cylinders (cylinder)4
Cylinder ConfigurationIn-line
Valves per Cylinder (value)4
Fuel TypeDiesel
Fuel SystemCommon Rail Direct Injection
Transmission
Transmission TypeManual
Gears/Speeds5Gears
Clutch Type
Final Reduction Gear Ratio
Suspensions
Front SuspensionMacPherson Strut
Rear SuspensionTorsion Beam
Steering
Steering TypeRack and Pinion
Power AssistedStandard
Minimum Turning Radius (meter)5.2
Brakes
Front BrakesDisc
Rear BrakesDrum
Wheels and Tyres
Wheel TypeSteel Wheels
Wheel Size15" inch
Tyres185/65R15

Watch the test drive results,



http://marutisuzukiertiga.com/, Is the Official Maruti Suzuki Ertiga website

How to use the Refrigerator 'aka' Fridge: ஃப்ரிட்ஜில கண்டதையும் வைக்காதீங்க ! கெட்டுப்போயிடும் !

0 comments
இன்றைக்கு அனைத்து வீடுகளிலும் ஃப்ரிட்ஜ் என்பது அவசியமானதாகிவிட்டது. ஆனால் அதை பராமரிக்கும் விதம்தான் பெரும்பாலோனோருக்கு தெரிவதில்லை. அன்றாட தேவைக் கான பால், காய்கறிகள் மற்றும் கூல்டிரிங்ஸ் போன்ற உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாத்து குளிர்ச் சியைத் தந்து நம்மை மலர்ச்சி யடைய செய்யும் ஃப்ரிட்ஜ், கிட்டத்தட்ட குடும்பத்தில் ஓர் அங்கமாகவே மாறிவிட்டது. ஆனால், அத்தகைய பொருளை மாதக்கணக்கில், ஏன்... ஆண்டுக்கணக்கில்கூட பராமரிக்காமல் பலரும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பலருக்கு எது எதையெல்லாம் ஃப்ரிட்ஜில் வைப்பது என்றே வரைமுறையே கிடையாது. வைக்கக் கூடாத பொருட்களை கூட உள்ளே அடைத்து திணித்து விடுவார்கள். சிக்கனமாக இருக்கிறோம் என்ற நினைப்பில் முந்தா நாள் சாம்பார், போனவாரம் வைத்த ரசம், புளித்து போன இட்லி மாவு பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள் என சகலத்தையும் உள்ளே வைத்து ஃபிரிட்ஜை அழ வைத்துவிடுவார்கள். எனவே ஃப்ரிட்ஜினை பராமரிக்கும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

நட்சத்திர குறியீடு

ஓட்டல்களுக்கு ஸ்டார் அந்தஸ்து இருப்பதைப் போல ஃப்ரிட்ஜ்க்கும் ஸ்டார் அந்தஸ்து உண்டு. ஃப்ரிட்ஜுகளுக்காக அரசு கொடுத்திருக்கும் தர அங்கீகாரம்தான் இந்த ஸ்டார். அதாவது, மின்சாரம் குறைந்த அளவே தேவைப்படும் வகையில் தயாரிக்கப்படும் 200 லிட்டர் முதல் 400 லிட்டர் வரையிலான ஃப்ரிட்ஜ்களுக்கு இந்த ஸ்டார் முத்திரைகளை அரசாங்கம் வழங்கியிருக்கிறது.

எனவே புதிதாக ஃப்ரிட்ஜ் வாங்கும்போது நமக்கு பிடித்த கம்பெனியை செலக்ட் செய்து வாங்குவதோடு முன்பக்கம் ஸ்டார் முத்திரையிருக்கிறதா என்று கவனித்து வாங்குவதுதான் புத்திசாலித்தனம். இந்த முத்திரை சிங்கிள் ஸ்டார் துவங்கி ஃபைவ் ஸ்டார் ரேஞ்ச் வரை உண்டு.

ஃபைவ் ஸ்டார் தரச் சான்றிதழ் கொண்ட ஃப்ரிட்ஜ்கள் பார்ப்பதற்கு அழகாகவும் மிகவும் நேர்த்தியாக இருப்பதுடன், அத்தனை உள்வேலை களையும் கனகச்சிதமாக செய்யும் அளவுக்கு வடிவமைக்கப்பட் டிருக்கும். பால் பாக்கெட், ஐஸ்க்ரீம், காய்கறி, பழங்கள் என ஒவ் வொன்றுக்கும் தனித்தனி டிரேக்கள் இருக்கும். பொதுவாக ஃப்ரிட்ஜ் என்றால் பால் பாக்கெட்டை ஃப்ரீசரில் வைத்து, பிறகு தண்ணீரில் போட்டுவிட்டு காத்திருக்கவேண்டும். ஆனால், இதில் அந்த அவசியம் இருக்காது என்பதுதான் தனிச்சிறப்பு. அதாவது, ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்த சில நிமிடங்களிலேயே பாலை பயன்படுத்தும் அளவுக்கான டெம்ப்ரேச்சர் இருப்பதுபோல வடிவமைத்திருப்பார்கள்.

ஃப்ரிட்ஜ் வாங்கியவுடன், ஃப்ரீசர் கதவுக்குப் பின்னால், என்னென்ன பொருட்களை யெல்லாம் பயன்படுதக் கூடாது என்ற வழிமுறைகளை எழுதியிருப்பார்கள். முதலில் அதனை தெளிவாகப் படியுங்கள். சம்பந்தப்பட்ட கம்பெனி ஆட் களோ, சர்வீஸ் ஆட்களோகூட இதைப் பற்றி யெல்லாம் சொல்ல மாட்டார்கள். நீங்களாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டும்.

வீட்டு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பயன்பாட்டைப் பொறுத்தே தேர்வு செய்யுங்கள். இருவர் மட்டுமே புழங்கக்கூடிய வீட்டில் 165 லிட்டர் கொள்ளளவுள்ள ஃப்ரிட்ஜ் வாங்கினால் போதுமானது. ஃப்ரிட்ஜில் அதிக பொருட்களை திணிக்க வேண்டாம். இதனால் குளிர் கண்ட்ரோல் ஆவதில் குழப்பம் ஏற்படும். தேவையான அளவு பொருட்களை மட்டும் ப்ரிட்ஜில் வைக்கவும்.

தரமான ஸ்டெபிலைசர்

ஃப்ரிட்ஜ்க்கு ஸ்டெபிலைசர் அவசியம். தரமான ஸ்டெபிலைசர்கள் வாங்கி பொருத்தவேண்டும். கடைகளில் விற்பனை செய்பவர்கள் கமிஷனுக்காக பேசிப் பேசியே தரமற்ற ஸ்டெபிலைசர்களை தலையில் கட்டிவிடுவதும் உண்டு. எனவே, தரமான கம்பெனியின் ஸ்டெபிலைசர்களையே கேட்டு வாங்குங்கள்.

ஃப்ரிட்ஜை ஒரு தடவை அணைத்துவிட்டால், மறுபடியும் உடனடியாக ஸ்விட்ச் ஆன் செய்யக் கூடாது. இதனால், ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடைந்துவிடும். ஃப்ரிட்ஜ் இயங்கு வதற்கு அதன் உள்ளே இருக்கும் ஒரு வகையான கேஸ் முக்கிய காரணம். மேலும், ஃப்ரிட்ஜை அணைத்து வைக்கும்போது பைப்பில் கேஸ் அப்படியே அடைத்துக் கொள்ளும். அந்த பைப்பில் காற்றும் போகாது. எனவே, குறைந்தது மூன்று நிமிடங்கள் கழித்துதான் மீண்டும் 'ஆன்' செய்யவேண்டும். அப்போதுதான் ஃப்ரிட்ஜ் இயல்பு நிலைக்கு திரும்பி யிருக்கும்.

கூர்மையான ஆயுதங்கள் வேண்டாம்

ஃப்ரீசரில் பொருட்கள் நன்றாக உறைந்துவிட்டால், அவற்றை எடுப்பதற்காக கூரான ஆயுதங்களைப் பயன்படுத்தகூடாது. ஃப்ரீசர் அமைந்து இருக்கும் பிளாஸ்டிக் டப்பாவில் அலுமினியம் காயில் பொருந்தப் பட்டிருக்கும். கூரான பொருட்கள் பயன்படுத்தினால், இந்த டப்பாவை கீறி, அதன் கீழே இருக்கும் அலுமினியம் காயிலின் மீது படக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி படும்போது, 'டப்' என்று வெடித்து உள்ளிருந்து கேஸ் வெளியேறி, உங்கள் உடம்பில் பட்டுவிடலாம். இதனால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சுவாசிப்பதால் பாதிப்பில்லை என்றாலும், உடம்பில் படும்போது பாதிப்புகள் ஏற்படும்.

ஃப்ரீசரில் இருந்து உறைந்த பொருட்களை எடுக்கும்போது, டீஃப்ராஸ்ட் பட்டனை அழுத் துங்கள். இதனால் ஃப்ரிட்ஜில் உள்ள அதிகப்படியான ஐஸ் கரைந்து, அதன் பின்புறம் இருக்கும் டிரேவில் விழுந்து விடும். இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டீஃப்ராஸ்ட் செய்வதால் ஃப்ரிட்ஜ் சீக்கிரத்தில் பழுதடையாமல் இருக்கும்.

ஃப்ரிட்ஜ் ரிப்பேரானாலோ தொடர்ந்து மின்சாரம் தடைப்பட்டாலோ... அதனுள் இருக்கும் கெட்டுப் போகக்கூடிய பொருட்களை வெளியே எடுத்து விடுங்கள். இல்லையென்றால் அது அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கும். ரிப்பேரான ஃப்ரிட்ஜை ஈரத் துணியால் நன்றாக துடைத்து, எலுமிச்சம் பழத்தை வெட்டி ஃப்ரிட்ஜினுள்ளே ஆங்காங்கே வைத்து விடுங்கள். இதனால் துர்நாற்றம் அடிக்காது. கதவையும் திறந்து வையுங்கள்.

பாக்டீரியாக்கள் கவனம்

ஃப்ரிட்ஜ் வாங்கிய நாலைந்து வருடங்களில் அதன் கதவினுள் பொருத்தப்பட்டிருக்கும் கேஸ்கட் சற்று தளர்வடைந்துவிடும். இதனால் பாக்டீரீயாக்கள் படையெடுத்து வந்து கதவின் இடுக்கில் போய் உட்கார்ந்துவிடும். அந்த இடத்தில் குளுமையான காற்றும் வீசாததால் கிருமிகள் மெதுவாக ஃப்ரிட்ஜ் உட்பகுதியில் பரவும் அபாயமும் நேரலாம். அது பல வியாதிகளுக்கு வழி வகுக்கலாம். கேஸ்கட் சரியாகப் பொருந்தியிருக்கிறதா? இடைவெளி இருக்கிறதா என்று அடிக்கடி கவனியுங்கள்.

6 மாதத்திற்கு ஒருமுறை காயில், கம்ப்ரசரை சுத்தம் செய்யவேண்டும். இதனால் அதிக சூடு ஏற்பட்டு ஃப்ரிட்ஜ் கடினமாக வேலை செய்வது குறையும்.

சுத்தம் அவசியம்

சாதாரண சோப்புத் தண்ணீரினால் ஃப்ரிட்ஜின், உள், வெளிப்புறங்களில் துடைத்தாலே போதுமானது. எந்த பாதிப்பும் வராது. ஃப்ரிட்ஜின் வாழ்நாள் என்பது அதிகபட்சம் 12 ஆண்டுகள்தான். அதற்கு மேல் அதன் செயல்பாடுகள் தொய்வடைந்து விடும். எந்த விதத்தில் அதனால் தீங்கு ஏற்படும் என்று சொல்ல முடியாது. எனவே, 12 ஆண்டுகளாகிவிட்டால் உடனே டிஸ்போஸ் செய்துவிடுவது நல்லது.

ஃப்ரிட்ஜ் வாங்கிப் பொருத்தும்போது அதற்கான 'எர்த்' சரியாக இருக்கிறதா என்று எலெக்ட்ரீஷியனை கொண்டு பரிசோதித்து கொள்ளுங்கள்.

வெளியூர் சென்று இரண்டு நாளில் திரும்பும் பட்சத்தில் ஃப்ரிட்ஜை ஆனில் வைத்து செல்லலாம். ஆனால், 10 நாட்களாகும் என்றால் பொருட்களை வெளியே வைத்துவிட்டு, ஃப்ரிட்ஜை ஆஃப் செய்துவிட்டு போவதுதான் நல்லது.

ஃப்ரிட்ஜ் பயன்படுத்துகிறீர்கள் என்றால், குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது அதனை நன்கு சுத்தம் செய்து விடுங்கள்.

Repo Interest Rate Decreased RBI, குறுகிய கால கடனுக்கான வட்டி விகிததத்தை 8% ஆக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது

0 comments
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிததத்தை ரெபோ- 8% ஆக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதனால் வங்கிகள் வழங்கும் வாகனக் கடன் மற்றும்  வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதம் குறையும். 

ரெபோ எனப்படும் ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் வாங்கும் குறுகிய கால கடனுக்கான  வட்டிவிகிதம், இதுவரை 8.5 சதவீதமாக இருந்தது.அதனை தற்போது 8 சதவீதமாக  குறைப்பதாக ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட கடன்கொள்கைகளுக்கான அறிவிப்பில்  தெரிவித்துள்ளது.

அதேசமயம் சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தில்  மாற்றமில்லை என்றும்,அது தொடர்ந்து 4.75 சதவீதமாக நீடிக்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடுமையான பணவீக்கம் நிதிபற்றாக்குறை நிலைமைகளுக்கு இடையே,கட்ந்த மூன்று  ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக ரெபோ விகிதத்தை ரிசர்வ் வங்கி  குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ரெபோ விகிதம் குறைப்பால் வங்கிகள் வழங்கும் வாகனக் கடன் மற்றும்  வீட்டுக்கடனுக்கான வட்டிவிகிதம் குறையும்.

Dreams about Feature Husband: வருங்கால கணவர்

0 comments
வருங்கால கணவரைப் பற்றிய கனவு எல்லா பெண்களுக்கும் இருக்கவேண்டும். வயதுக்கு வந்த சில வருடங்களில் அந்த கனவு தானாகவே வந்துவிடும்.

இருபது வயதைத் தொட்ட பின்பும் அப்படி ஒரு கனவு வரவில்லை என்றால் அதை மனநிலை, உடல் நிலை கோளாறு என்கிறார்கள் மருத்துவர்கள். அந்தந்த வயதுக்கேற்ற கனவுகள் அவ்வப்போது வரவேண்டும். அந்த கனவுகள் பெண்களை திருமணம் செய்து கொள்ள பக்குவப்படுத்தும்.

ஒரு பெண் வாழும் சூழ்நிலைக்கேற்ப அவள் கனவுகள் வித்தியாசப்படும். ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் ஒரு பெண் பணக்கார கணவர் வேண் டும் என கனவு காணலாம். கொடுமை யான சூழ்நிலையில் வாழும் பெண் தனக்கு அன்பான, ஆதரவான கண வர் கிடைப்பதுபோல் கனவு காண லாம். இப்படி பெண்கள் காணும் கனவுகள் பலவிதம்.

அந்த கனவுகள் ஒருபோதும் எல்லை மீறியதாக இருந்துவிடக்கூடாது. ஏன் என்றால் எல்லோ ருடைய வாழ்க்கை யிலும், எல்லா கனவுகளும் நிறை வேறும் என்று சொல்வதற்கில்லை.

எவ்வளவு கனவுகள், கற்பனைகள் இருந்தாலும் திருமணம் ஆன பின்பு, உடனடியாக நிஜ உலகத்திற்கு வந்து விடவேண்டும். நிஜம் கண் முன் வரும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெண்களுக்கு கட்டா யம் வேண்டும். நிஜங்களை கனவுக ளோடு ஒப்பிட்டு பார்த்து மனம் பேத லித்து நிற்பது வாழ்க்கைக்கு உதவாது. நிஜங்களை ஏற்றுக்கொண்டு வாழும்போதுதான் பெண்கள் வெற்றிகரமானவர்களாக மாறுகிறார்கள்.

திரை உலகில் கனவு கன்னியாக வலம் வரும் நட்சத்திரத்திற்கு கூட நிஜவாழ்க்கை என்பது கனவுகளுக்கு மாறாகத்தான் அமைகிறது. கனவு வேறு வாழ்க்கை வேறு என்ற உண்மையை அவர்கள் உணர்ந்துகொள்ளும்போது வாழ்க்கை கசக்கிறது. அந்த கசப்பில் இருந்து விடுபட்டு வாழ்க்கையை இனிமையாக்கி கொள்வதில் தான் வாழ்க்கையின் சுவா ரசியம் அடங்கி இருக்கிறது. கனவை நினைத்து நிஜத்தை அழித்து கொள்ள நினைப்பவர் களுக்கு வாழ்க்கையே கனவாகி விடுகிறது.

இன்றைய பெண்களுக்கு அவர்களது வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளும் உரிமை தரப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள அவர்கள் காணும் கனவுகள் ஓரளவுதான் பயன்படும். அவர்களது அறிவும், அனுபவங்களும், பக்குவப்பட்டவர்களின் அறிவுரைகளுமே முழுமையாக பயன்படும்.

இந்த உலகம் மிகப் பெரியது. அதனால் சில பெண்கள் தங்களது கனவு கதாநாயகனை தேடித்தேடி களைத்துப்போகிறார்கள். அப்படியே காலத்தையும் கடத்தி வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கனவுகளுக்கு கொடுக்கும் முக்கியத் துவத்தை குறைக்கவேண்டும். நிஜவாழ்க்கைக்குள் தங்களை முன்நிறுத்தி, தங்கள் நிஜ கதாநாயகனை தேடத் தொடங்கவேண்டும்.

இன்று தெருவிற்கு தெரு திருமணத்தகவல் மையங்கள் உருவாகிவிட்டன. அங்கெல்லாம் சென்று, பெண்கள் தங்கள் கனவு கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கிறார்கள். சில திரு மண தகவல் மையங்களோ, பெண்களின் எல்லைமீறிய கனவுகளை தெரிந்துகொண்டு, அதற்கு தக்கபடி பொய் முகம் கொண்ட இளைஞர்களை அறிமுகப்படுத்துகிறார்கள். மிகைப்படுத்தப்பட்ட பொய்களைக்கூறி அவர்களுடைய கனவு கதாநாயகன்போல் `மேக்கப்' போட்டு அந்த பெண்கள் முன்பு நிறுத்துகிறார்கள்.

அந்த பெண்களும் `ஆஹா.. இவர்தான் நம் கனவு நாயகன்' என்று முடிவு செய்து, அவசர கதியில் திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள்.

சிறிது காலத்தில் உண்மையை உணரும்போது பெருத்த ஏமாற்றம் அடைகிறார்கள். அந்த ஏமாற்றம் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடுகிறது.

இன்றைய பல விவாகரத்துகளுக்கு இந்த கனவுகளே காரணமாக இருக்கிறது. நிறை வேறாத ஆசைகள் நெஞ்சின் அடித்தளத்தில் பாரமாக அழுத்தும்போது நிஜங்களின் உயர்வை மனம் ஏற்க மறுக்கிறது. விளைவு கருத்து வேற்றுமை ஆகிறது. இருமனம் ஒரு மனமானால் கருத்துகள் ஒன்றுபடும். ஆனால் அதற்கு இந்த கனவுகள் ஒத்துழைப் பதில்லை!

கனவுகள் தேவைதான். ஆனால் அந்த கனவுகளுக்கு, நிஜங்களை ஏற்றுக்கொள்ள மறுக் கும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. கனவுகளுக்கு கற்பனைகள் மட்டும் போதுமானது. ஆனால் நிஜங்களுக்கு அனுபவ அறிவும், ஆன்ம பலமும் தேவை. நிஜங்கள் நம் கண் முன்னே நிற்கும்போது கனவுகள் எங்கிருந்தோ எட்டிப்பார்த்து நம்மை கேலி செய்யும். இதனால் ஏற்படும் ஏமாற்றம் மனதில் வெறுப்பையும், சோர்வையும் உண்டாக்கும்.

சில பெண்கள் நிழலை நிஜமாக்கி தங்கள் கனவு இலக்கை அடைய முற்படுவார்கள். கல்வியறிவில்லாத கணவனை மகாகவி காளிதாசனாக்கியது அப்படிப்பட்ட ஒரு பெண் ணின் கனவுதான். இது நிஜத்தை அப்படியே இருப்பது போலவே ஏற்றுக்கொண்டு கனவை நிஜமாக்கி வாழ்க்கையை சாதனையாக்கி காட்டும் கனவு. உள்ளங்கை அளவு உண்மையை உலகளாவிய வெற்றியாக மாற்றி காட்டும் உன்னதம் இருவர் கனவிலும் இருந்தால் அவர்கள் வாழ்க்கை பிரகாசமாகிவிடும். இந்த சாதனையை புரிய துணை நின்றதும் கனவு தான். அவரவர் மனநிலையை பொறுத்து ``கனவுகள்'' செயல்படுகிறது. வருங்காலத்தை வளமாக்குவதும் கனவுதான். வாழ்க்கையை கேள்வி குறியாக்குவதும் கனவுதான்.

சிந்தித்து செயல்படவும், வாழ்க்கையை திட்டமிடவும் கனவுகள் கைகொடுக்கின்றன. லட்சியங்களை உருவாக்கும் கனவு நம்முடன் வருபவர்களை வளப்படுத்தி எதிர்காலத்தை ஒளிமயமாக்குகிறது. வருங்கால கணவரை பற்றிய கனவு காண்பது தவறில்லை. அது இருவரின் வருங்காலத்தையும் வளமாக்கும் விதமான கனவாக இருத்தல் வேண்டும். சுயநலமான கனவுகள் பெரும் சுமையாகவும், பகையாகவும் உருவெடுத்து விடும்.

How to improve the speed of FireFox: பயர்பாக்ஸ் நம் வசமாக

0 comments
பயர்பாக்ஸ் பிரவுசரின் வேகத்தை அதிகப்படுத்த ஒன்றுக்கு மேற்பட்டவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டது போல செயல்படவும்.

network.http.pipelining: இங்கே true என மாற்றவும்.

network.http.proxy.pipelining: இங்கே true என மாற்றவும்.

network.http.pipelining.maxrequests: இங்கே 8 என மாற்றவும். அடுத்து maxconnections என்பதனைத் தேடிப் பெறவும். இதில் 

network.http.maxconnections என்பதைப் பெறுவீர்கள். இதனை 96 என மாற்றவும். அடுத்து கிடைக்கும் 

network.http.maxconnectionsperserver என்பதில் மதிப்பை 32 என மாற்றவும்.

Development in Blood Pressure Treatment: ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையில் புரட்சி

0 comments
ரத்த அழுத்தம் எந்த கட்டத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சை இருக்கிறதென்றாலும், இந்த பாதிப்பை தெரிந்து கொண்ட உடனே, சிகிச்சை எடுத்துக் கொண்டால், பல தேவையற்ற விளைவுகளையும், சிக்கலையும் தவிர்க்கலாம். உலக மக்கள் தொகையில் பாதிபேர், ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 22 - 30 வயது நிரம்பியவர்களுக்குக் கூட, உயர் ரத்த அழுத்தம் இருப்பதை காணமுடிகிறது. குறிப்பாக, ஐ.டி., துறையிலுள்ள இளைஞர்கள், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதில், பெண்களும் அடங்குவர். கிடைத்த நேரத்தில், தகாத உணவு சாப்பிடும் பழக்கத்தால் இந்த நிலை.

இந்த ரத்த அழுத்த நோயின் விளைவுகள், வயது ஏற ஏற, அதிகமாகி கொண்டே வருகிறது. "ஸ்டிரோக்' என்ற, மூளையில் ரத்த கட்டி ஏற்பட்டு, தலை சுற்றல், மயக்கம், உடலின் பாதி செயலிழப்பு, இதய ரத்த குழாய் அடைப்பினால் ஏற்படும் மாரடைப்பு, மார்புவலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, இதய வீக்கம், இதயச் செயலிழப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவை, உயர் ரத்த அழுத்தத்தின், தகாத விளைவுகள். இதனால், குடும்ப அமைதி இன்மை, பொருளாதார சீரழிவு, மருத்துவ செலவு போன்றவை ஏற்படுகின்றன. இந்த ரத்த அழுத்தத்தினால், ஸ்டிரோக் ஏற்பட்டு, பக்கவாதம் வந்து தடுமாறும் முதியோருக்கு, பராமரிப்புக்கான மருத்துவச் செலவு ஏற்படுகிறது. மேலும், இவர்களை கவனிக்க, தனிநபர் தேவை. இதனால், குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது. ஆக, முதியோர் வாழ்க்கை நரகமாகிறது. இந்த பாதிப்போடு, இதய நோயும் ஏற்பட்டு விட்டால், இந்த முதியவரை, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், பாரமாக கருதுகின்றனர். இன்றைய இளைய சமூகத்தினரிடையே, முதியோர், வீட்டின் மூலையில் கிடக்கும் குப்பை போல் ஆகின்றனர்.

ஏன் உயர் ரத்த அழுத்தம் குறைவதில்லை?

நவீன வாழ்க்கையின் வேகத்தில், பரபரப்பான நிலையற்ற வேலை, ஊதிய பற்றாக்குறை, ஆகியவற்றால், மன அழுத்தம், அடிக்கடி ஓய்வில்லாமல் பிரயாணம் செய்வது, சரியாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடாமல் இருப்பது, ஆகிய காரணங்களால், ரத்த அழுத்தம் குறையாத நிலை ஏற்படுகிறது. தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்காதது தான், இதற்கு காரணம். உடற்பயிற்சி, நடைபயிற்சி, கடுமையான உணவு கட்டுப்பாடு இல்லாததும், முக்கிய காரணம்.

சிக்கலான உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கண்டறிவது?

பல ஆண்டுகளாக இருக்கும் ரத்த அழுத்தம், மேற்கூறிய காரணங்களால், மருந்துகளால் குறைக்க முடியாத நிலை ஏற்பட்டு, சிக்கலாகி விடுகிறது. ஒரு மாத்திரையின் அளவை, இரண்டு, மூன்று, நான்கு என்று கூட்டிய பிறகும், ரத்த அழுத்தம் குறைந்து, 130 / 90க்குள் வரவில்லை எனில், இது, சிக்கலான உயர் ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. விருதாசலத்திலிருந்து வரும், 58 வயதுள்ள என் நோயாளி ஒருவருக்கு, ரத்த அழுத்தம், 180/140க்கு குறைவதில்லை. இவருக்கு, எல்லாவித மருந்து மாத்திரைகள் கொடுத்தும் பலனில்லை. ஆஞ்சியோ கிராம் செய்யும் போது, மருந்து உள்ளே செலுத்திய நேரத்தில் மட்டும், ரத்த அழுத்தம் குறைந்தது. அதன் பின், அழுத்தம் பழையபடி, "எகிறி' விட்டது.

ரத்த அழுத்தத்தில் சிறுநீரக பங்கு என்ன?

சில சமயங்களில், சிறுநீரகத்தில் ரெனின் என்ற, நொதி வெளி வருகிறது. இது, ராஸ் என்ற செயல்முறையை தூண்டுகிறது. இதனால், மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தை இயக்கி, ரத்த நாளத்தை சுருங்க வைத்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த ரத்தநாள சுருக்கத்தினால் ஏற்படும் பின்விளைவு தான், ரத்த அழுத்தம். ஆக, முக்கிய காரணி சிறுநீரகத்தின் ரத்த நாளத்திலுள்ள, சிம்பதிட்டிக் நரம்புகள் தான். இதன் இயக்கத்தால் தான், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு, "ரீனல் நெர்வ்

டீனெர்வேஷன்' என்ற சிகிச்சை முறை.

"ரீனல் நெர்வ் டீனெர்வேஷன்' இந்தியாவுக்கு வருமா?

முடியாது. காரணம், இந்த முறைக்கு செலவு அதிகம். அரசும் இதை அறிமுகப்படுத்த, ஏகப்பட்ட செலவாகும். இந்தியாவிலுள்ள கார்ப்பரேட், டிரஸ்ட் மருத்துவமனைகளுக்கு இது வர முடியும். இந்த சிகிச்சைமுறை, ஆய்வுகளில் உள்ளது.
இந்த சிகிச்சையின் பலன், எப்படி, எத்தனை நாள் இருக்கும், திரும்பவும் உயர் ரத்த அழுத்தம் வருமா, நரம்பு உயிர் பெற்று எழுந்து, ரத்த அழுத்தம் மீண்டும் திரும்புமா என்பது போன்ற, ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் இல்லை!
பொறுத்திருந்து பார்ப்போம்.

"ரீனல் நெர்வ் டீனெர்வேஷன்' சிகிச்சை முறை

இது, 2011ல், பாரீசில் நடந்த, ஐரோப்பிய இதய நோய் கழகத்து ஆண்டு மாநாட்டு துவக்க உரையாக இருந்தது. சிறுநீரகத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளத்தின் உட்சுவரில், இந்த "ரீனல்' நரம்புகள், வேர்கள் போல் படர்ந்திருக்கும். இந்த நரம்புகளின் இயக்கத்தால் தான், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்த நரம்புகளை செயல் இழக்க செய்ய வேண்டும்.

எப்படி?

தொடைவழியாக, ரத்த குழாய் மூலம், ஒரு பிளாஸ்டிக் குழாயை உள்நோக்கி ஊடுருவி, சிறுநீரக ரத்த நாளத்தினுள் குழாயை செலுத்தி, இந்த சிகிச்சை முறைக்கு என, தயார் செய்யப்பட்ட கத்தீட்டரையும், உட்செலுத்த வேண்டும். குழாயின் முனையில், ஆர்.எப்., தகடு இருக்கும். இதை, ரீனல் ரத்த நாளத்தின் உட்பகுதியில் செலுத்தி, ஆர்.எப்., மெல்லிய பாட்டரி மூலம் இயக்க வேண்டும். இந்த அதிர்வு அலைகளால், நுண் நரம்புகள் துண்டிக்கப்பட்டு செயலிழக்கின்றன. இதனால், ரத்த அழுத்தம் குறைகிறது.

பேராசிரியர் சு. அர்த்தநாரி
டாக்டர் எஸ்.ஏ., ஹார்ட் கிளினிக்

Who are Angel Investors: ஏஞ்சல் முதலீட்டாளர்கள் என்பவர்கள் யார்

0 comments
ஏஞ்சல் முதலீட்டாளர்கள் என்பவர்கள் யார்?

ஆரம்ப நிலை கம்பெனிகளில், பங்குகளிலோ அல்லது அதைச் சார்ந்த பத்திரங்களிலோ முதலீடு செய்யும் பணக்கார முதலீட்டாளர்களையே 'ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ்' என்று சொல்கிறோம்.
ஏஞ்சல் முதலீட்டாளர் களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதலாவது வகையினர், பிஸினஸ் ஏஞ்சல்கள். இவ்வகை முதலீட்டாளர்கள் பரம்பரை பணக்காரர்களாக இருக்க வேண்டும் என்பதில்லை. சாதாரண நிலைமையில் பிறந்து, பின்னர் தொழில்முனைவராக உருவெடுத்து, அதில் அபார வெற்றி பெற்று, பேரும், புகழும், பணமும் சம்பாதித்தவர்கள். ஆரம்பநிலை நிறுவனங்கள் நிதி திரட்டுவது கடினம். பொருள் திரட்ட முடியாத காரணத்தால் பல இளம் தொழில்முனைவர்கள் தங்கள் முயற்சியை கைவிட்டதுண்டு. தாங்கள்பட்ட கஷ்டத்தை மற்றவர்களும் படக்கூடாது என்பதற்காக, வருங்கால தொழில்முனைபவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதே இத்தகைய பிஸினஸ் ஏஞ்சல்களின் நோக்கம்.

ஏன் இவர்கள் சிறு கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டும்?

தொழில் முனைந்து, அதை நன்கு வளர்ச்சி அடையச் செய்த ஆழ்ந்த அனுபவத்தால், பிஸினஸின் வளர்ச்சிப் பாதை யில் ஏற்படுகிற சிக்கல்களைப் பற்றியும், அதை அணுகுகிற முறை பற்றியும் இவர்கள் நன்கு அறிவார்கள். இவ்வகை முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதோடு மட்டும் நின்று விடுவதில்லை. முதலீடு செய்தபின் அந்நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு தேவையான உதவி களை முடிந்தவரை செய்ய விருப்பப்படுவார்கள். இதைப் பல தொழில்முனைவர்கள் தேவையற்ற குறுக்கீடாக நினைக்கலாம்.

ஆனால், பெரும்பாலான சூழ்நிலைகளில் அது உண்மையில்லை. பிஸினஸ் ஏஞ்சல்கள் நிஜமாகவே தாங்கள் முதலீடு செய்த கம்பெனிகளுக்கு உதவி செய்யவே நினைக்கிறார்கள். உபத்திரவமாக இருக்க விரும்புவதில்லை.  தொழில் முனைவருடன் சுமூகமான உறவு இல்லை என்றால், அதனால் யாருக்கும் பிரயோஜனம் இல்லை. முதலீட்டாளர்கள் போட்ட முதலீடு வீணாவது மட்டுமின்றி, அவர்கள் உதவி செய்ய நினைத்த நிறுவனமும் வெற்றி அடையாது.
இதனால், பிஸினஸ் ஏஞ்சல்கள் அவர்கள் முதலீடு செய்வதற்கு முன் அந்நிறுவனத்தின் பிஸினஸை பற்றி ஆராய்வதோடு, நிறுவனத்தைத் தொடங்கிய வருக்கும் தனக்கும் ஒத்து வருமா என்பதை அலசி ஆராய்ந்த பிறகே முதலீடு செய்வார்கள்.

அவர்கள் உள்நோக்கம் என்ன?

தொழில்முனை பவர்களும் ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து பணம் பெறுவதற்கு முன், தங்களுடைய மனப்பக்கு வத்தையும் சற்று சுயமதிப்பீடு செய்து கொள்வது நல்லது. முதலீட்டாளர்கள் சொல்லும் கருத்துக்களை தொழில் நன்மைக்கே என்று கருதி ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் நான் ஆரம்பித்த நிறுவனத்திற்கு 'நானே ராஜா, நானே மந்திரி' என்று கருதும் நினைப்பு இருந்தால், ஏஞ்சல் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி பெறாமலே இருப்பது நல்லது.


இரண்டாவது வகையினர், ஃபைனான்ஷியல் ஏஞ்சல்கள். இவர்கள் பெரும்பாலும் முனைப்பற்ற முதலீட்டாளர்களாகவே இருப்பார்கள். முதலீடு செய்த நிறுவனத்தில் பிஸினஸ் ஏஞ்சல்கள்  போன்று அவ்வளவு ஈடுபாடு காட்டமாட்டார்கள். அதற்கான நேரமோ அல்லது அனுபவமோ அவர்களிடம் இல்லாமல் இருக்கலாம். இவ்வகை முதலீட்டாளர்கள் உரிமையாளரின் திறனின் மேல் உள்ள முழுநம்பிக்கையின் பேரில்தான் முதலீடு செய்கிறார்கள். அதனால், நன்கு பரிச்சயமான நண்பர்கள் தொடங்கும் தொழிலிலோ அல்லது நெருங்கிய நண்பர் களின் சிபாரிசின்பேரில் வரும் கம்பெனிகளிலோ மட்டும்தான் முதலீடு செய்வார்கள்.

இப்படி உங்கள் தேவைக்கேற்ப உங்கள் முதலீட்டாளர்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பிஜுவும் அதையேதான் செய்தார். அவர் குடும்பத்தில் யாருக்கும் பிஸினஸ் அனுபவம் இல்லாததால், தன் கம்பெனியில் முதலீடு செய்பவர்கள் அவருக்கு நல்ல ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்று பிஜு விரும்பினார்.

2010-ம் ஆண்டு தன் கம்பெனிக்கென நிதி திரட்ட முடிவு செய்தபோது அவர் முதலில் அணுகியது துணிகர நிதி நிறுவனங்களைத்தான். ஆனால், அவருக்குத் தேவைப்பட்ட நிதியின் அளவு அதிகமாக இல்லாததால் துணிகர நிறுவனங்கள் அவர் நிறுவனத்தில் முதலீடு செய்ய விருப்பம் காட்டவில்லை. ஏஞ்சல் முதலீட்டாளர்களை அணுகும்படி அவர்கள் சிபாரிசு செய்தார்கள்.

அந்தச் சமயத்தில்தான் 'சென்னை ஏஞ்சல்ஸ்' என்கிற அமைப்பு வடிவம் பெற்றது. சென்னையும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல இளந்தலைமுறை தொழில்முனைபவர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்கிற ஒருமித்த எண்ணம் கொண்டோர் தொடங்கிய அமைப்புதான் இது. நிதி திரட்டும் முயற்சியில் உள்ள தொழில் முனைபவர்கள் தங்கள் பிஸினஸ் பிளானை 'சென்னை ஏஞ்சல்ஸ்' தலைமை நிர்வாகிகளிடம் கலந்தாலோசிக்கலாம். அத்தகைய ஆய்விற்குப் பிறகு முதலீட்டாளர்களின் விருப்பத்தை உணர்ந்து கொள்ளலாம்.  

அத்தகைய ஒரு பிஸினஸ் பிளான் ஆய்வுக்குப் பிறகு மெட்ரோபிளாட்ஸ்.காம் நிறுவனத்தில் முதலீடு செய்ய 'சென்னை ஏஞ்சல்ஸ்' அமைப்பில் பலருக்கு விருப்பம் இருப்பதாக பிஜு உணர்ந்தார்.

'அதில் நான்கு பேர் முதலீடு செய்வதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நால்வரும் வெற்றிகரமான தொழில் முனைபவர்களாக திகழ்ந்தவர்கள். பிஸினஸ் செய்வதில் அவர்களுக்கிருந்த ஒட்டுமொத்த அனுபவம் என் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது' என்றார் பிஜு.

'எப்படி?'

'என் பிஸினஸ் பிளானில் இருந்த ஒரு சில குறைகளை அவர்களால் எளிதில் சுட்டிக் காட்ட முடிந்தது. அதை சீர் செய்தது என் நிறுவனத்துக்கு நல்ல பயனைத் தந்தது.'

'உங்கள் முதலீட்டாளர் களிடமிருந்து நீங்கள் என்ன எதிர்பார்த்தீர்கள்? நீங்கள் எதிர்பார்த்தது கிடைத்ததா?''

'கண்டிப்பாக. தினசரி பிரச்னைகளை முதலீட்டாளர் களிடம் எடுத்துச் செல்வதும் நன்றாக இருக்காது. ஆனால், தொலைதூர கண்ணோட்டத் தினால் செயல்பட வேண்டிய விஷயங்களில் அவர்கள் அளித்த ஆலோசனைகள் எனக்கு மிகுந்த உதவியாக இருந்தது.'

'முதலீட்டாளர்களிடமிருந்து குறுக்கீடாக நீங்கள் ஏதேனும் உணர்ந்தீர்களா?'

'இல்லை. அவர்கள் எனக்கு ஆலோசனை மட்டும் கூறினார்களே தவிர, அவர்கள் சொன்னதைத்தான் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதில்லை.'        

2010 செப்டம்பரில் முதல் சுற்று நிதியை திரட்டிய பிஜு. 2012 பிப்ரவரியில் தன்னுடைய இரண்டாவது சுற்று நிதியை மறுபடியும் 'சென்னை ஏஞ்சல்ஸ்' அமைப்பிடம் இருந்தே திரட்டினார். இதைப்பற்றி கூறிய பிஜூ, 'நான் முதல் சுற்றில் நிதி திரட்டியது என்னுடைய பிஸினஸ் கருத்தாக்கத்தை நிரூபிப்பதற்காக. இரண்டாவது சுற்றில் நிதி திரட்டியது பிஸினஸ் வளர்ச்சிக்காக.  இரண்டாவது சுற்று நிதி  திரட்டியதன் மூலமே இன்று பெங்களூரு, பரிதாபாத், குர்காவ்ன் போன்ற நகரங்களில் கிளைகளை நிறுவ முடிந்தது.'

'மொத்த நிதியையும் ஒரே தடவையில் திரட்டி இருக்கலாமே? இரண்டாவது சுற்று நிதி ஒருவேளை கிடைத்திருக்காவிட்டால், உங்கள் பாடு திண்டாட்டம் ஆகி இருக்குமே?' என்றேன்.

'என்னுடைய பிஸினஸ் கான்செப்ட்டில் எனக்கு நம்பிக்கை இருந்தது. முதல் சுற்றில் நிதி பெற்ற பிறகு, முதலீட்டாளர்கள் எங்களுக்கு ஆலோசனை வழங்கியதால் இலக்கை எளிதாக அடைய முடிந்தது. அதனால், இரண்டாவது முறை 'சென்னை ஏஞ்சல்ஸ்' அமைப்பிலிருந்து நிதி திரட்டுவது அவ்வளவு கடினமாக இல்லை. மேலும், முதல் சுற்று நிதி திரட்டியதின் மூலம் அடைந்த விருத்தியின் காரணமாக எங்களுடைய நிறுவனத்தின் மதிப்பீடும் அதிகமானது. அதனால், இரண்டாவது தடவை நிதி திரட்டியபோது பங்குரிமையில் நான் குறைந்த அளவே விட்டுக் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே சுற்றில் அனைத்து நிதியையும் திரட்டியிருந்தால் பங்குரிமையில் நாங்கள் அதிக சதவிகிதம் விட்டுக்கொடுக்க வேண்டியிருந்திருக்கும்' என்றார்.

'ஏஞ்சல் முதலீட்டாளர்   களிடமிருந்து வெற்றிகரமாக நிதி திரட்ட நீங்கள் கூறும் ஆலோசனை...'

'ஏஞ்சல் இன்வெஸ்டர்ஸ் பிஸியான பிஸினஸ்மேன்கள். விடாப்பிடியாகத் தொடர்ந்து அவர்களை அணுகினால்தான் வெற்றிகரமாக நிதி திரட்ட முடியும். அளவுக்கு அதிகமாக பணம் கேட்காமல் தேவையான அளவிற்கு மட்டுமே நிதி திரட்ட வேண்டும்.

Thanks: Nanayam Vikatan 
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf