உடல் நலத்துக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் ?

0 comments
உடல்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றது. உடல் சீரழிந்து போய் விடுமேயானால், பிறகு மற்ற செல்வங்கள் எல்லாம் இருந்து பயனில்லை.

ராபின்சர்மா என்கிற ஒரு அமெரிக்கர் எழுதியுள்ள புத்தகம் கூடஞு எணூஞுச்tணஞுண்ண் எதடிஞீஞு என்பது. அதனுடைய தமிழாக்கம் மேன்மைக்கான வழிகாட்டி அண்மையிலே வெளிவந்திருக்கிறது. அந்தப் புத்தகத்தைப் படித்தபோது பல சின்னச் சின்னச் செய்திகள், வாழ்க்கையின் பெரிய பெரிய உண்மைகளை உணர்த்துவதாக இருந்தன. இன்றைக்கு உலகத்திலே இருக்கிற பன்னாட்டு நிறுவனங்களான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், இன்போசிஸ் முதலான பல நிறுவனங்களினுடைய மேலாளர்களுக்குப் பயிற்சி வகுப்பெடுக்கிறபோது ராபின்சர்மா பேசியது ஒரு கட்டுரையாக வெளிவந்துள்ளது.

அந்தக் கட்டுரையினுடைய தலைப்பு, செல்வத்தின் ஏழு விதங்கள் என்பது. நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய செல்வமாகவே அது இருக்கிறது. பொதுவாக யார் பணம் வைத்திருக்கிறார்களோ அவர்களைத்தான் நாம் செல்வந்தர் என்று சொல்கிறோம். ராபின்சர்மா சொல்கிறார். பணம் வைத்திருக்கிறவர்கள் செல்வர்கள்தான் செல்வத்துக்குப் பணம் ஒரு அடிப்படைக் காரணம் மறுக்க முடியாது. ஆனால் நம்மிடம் இருக்க வேண்டிய ஏழு செல்வங்களில் பணம் ஒன்று. அது ஏழில் ஒரு பகுதியே தவிர, முற்றும் அதுதான் என்று கருதுவதும், அந்தப் பார்வையும் சரியானதில்லை என்பதுதான் அவருடைய பேச்சு. அப்படியானால் மீதம் இருக்கிற ஆறு செல்வங்கள் என்ன என்பதை அவர் வரிசைப்படுத்துகிறார்.

ஒருவனைச் செல்வந்தன் என்று நாம் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவனிடத்திலே இந்த ஏழு செல்வங்களும் இருக்க வேண்டும்.

முதல் செல்வம் உடல் நலம்தான்.
இரண்டாவது செல்வம் மனநலம்.
மூன்றாவது செல்வம் குடும்ப நலம்.
நான்காவது செல்வம் தொழில் நலம்.
ஐந்தாவது செல்வம் பண நலம்.
ஆறாவது செல்வம் இலட்சிய நலம்.
ஏழாவது செல்வம் புகழ் நலம்

என்று ஏழு நலன்களை அவர் வரையறுக்கிறார்.

உடல் நலத்துக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் என்றால், இந்த உடல்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றது. உடல் சீரழிந்து போய் விடுமேயானால், பிறகு மற்ற செல்வங்கள் எல்லாம் இருந்து பயனில்லை.
மிக அழகான வரியை அவர் குறிப்பிடுகிறார். மிகப் பெரிய பணக்காரனாக இருக்கலாம். ஆனால் மருத்துவமனையிலே இருக்கிற பணக்காரனைக் காட்டிலும், சுதந்திரமாக உலவ முடிகிற உடல் நலம் உள்ள உழைப்பாளி மகிழ்ச்சியாக இருப்பான் இல்லையா என்று கேட்கிறார். எவ்வளவு கோடீசுவரனாக இருந்தாலும் மருத்துவமனையிலே படுத்திருக்கிறபோது, அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மற்ற செல்வங்கள் எல்லாம் இருக்கலாம். உடல் நலம் என்கிற ஒரு செல்வம் இல்லாம் போய் விடுமானால் மற்ற செல்வங்களை எல்லாம் அவனால் துய்க்க முடியாது.

மறைந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள்தான் ஒருமுறை மிக அழகாக ஒரு விடையைச் சொன்னார். உலகத்திலே மிகப் பெரியது எது என்று கேட்டபோது, அவர் பணம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லாமல் கண்ணதாசன் சொன்னார், உடல் நலம் மட்டும் இருந்து விடுமானால், பிறகு உலகத்திலே உள்ள எல்லாச் செல்வங்களையும் பணம் காலடியிலே கொண்டு வந்து குவிக்கும் என்று சொன்னார். நீ போக வேண்டியதுகூட இல்லை பணம் எல்லாவிதமான நலன்களையும் உன் காலடியிலே கொண்டு வந்து குவிக்கும். ஆனால் ஒரு நிபந்தனை மட்டும் இருக்கிறது அது உடல் நலம். உடல் நலம் என்பது பெரிய ஒரு செல்வம்.
அடுத்ததாக மனநலம் என்பதை அதைவிடப் பெரிய செல்வம் நமக்கு மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. அதிலே குறைபாடு இல்லை என்பது மட்டுமல்ல. அந்த மனம் அன்பினால் நிறைக்கப்பட்டிருக்க வேண்டும். நுட்பமான அறிவைக் கொண்டதாக இருக்க வேண்டும். மனிதநேயம் உடையதாக இருக்க வேண்டும். தொலைநோக்குப் பார்வை உடையதாக இருக்க வேண்டும். அமைதியை நாடுவதாக இருக்க வேண்டும். இத்தனையும் இருந்தால்தான் அது மனநலம். மனநலம் உடையவர்களால்தான் மற்ற காரியங்களை எல்லாம் செய்ய முடியும்.
மூன்றாவதாக ராபின்சர்மா சொல்கிறார், குடும்ப நலம் என்பது இன்னொரு செல்வம். அருமையான செல்வம். நீங்கள் என்னதான் அறிவாளியாக இருந்தாலும், என்னதான் செல்வாக்கு உடையராக இருந்தாலும், வீடு என்பது நிம்மதியற்றுப் போகுமேயானால், உங்களால் இயங்க முடியாது. வீடுதான் உங்களினுடைய தொடக்கம். வீடு என்பது உங்களுடைய குடும்பம் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருக்கிற உறவினர்கள், நண்பர்கள் என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம். எனவே நமக்கு உடல் நலம் வேண்டும். மன நலம் வேண்டும். உறவுகளோடு... குடும்பத்தோடு... மகிழ்ச்சியான தொடர்பு இருக்க வேண்டும். எந்த நேரமும் வீட்டுக்குள்ளே நுழைந்தால் ஒரு சிக்கலும் பிரச்சினையுமாக இருக்குமென்று சொன்னால், நம்மால் வெளியிலும்கூடச் சரியாகச் சிந்திக்க முடியாது. எனவே குடும்பத்தோடு ஆகிய தொடர்பு என்பதை நாம் எப்போதும் கவனமாய் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே வெளியிலேயே கவனம் செலுத்துகிறோம் என்பதினாலே குடும்ப உறவுகள் சிதைந்து போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு தொழில் நலம் என்று சொல்கிறார். அது ஒரு செல்வம். எந்த இடத்தில் நம்முடைய தொழில் நடக்கிறதோ அல்லது எங்கே நாம் வேலை பார்க்கிறோமோ, அங்கே நம்முடைய உறவும், அங்கே நம்முடைய மனநலமும் எப்படி இருக்கின்றன என்பது, ஏறத்தாழ வீட்டில் கழிக்கிற நேரத்திற்கு இணையாகத் தொழில் சார்ந்த இடங்களிலேயும் நம்முடைய நேரம் கழிகிறது. ஆகையினாலே தொழிலகம் என்பதும்கூட நமக்கு மிகக் கவனமாக இருக்க வேண்டிய இடம். எனவே அது நான்காவது செல்வம்.

ஐந்தாவது செல்வமாகத்தான் ராபின்சர்மா பணத்தைக் குறிக்கிறார். அது ஒரு செல்வம்தான். இல்லை என்று யார் சொல்ல முடியும். பணம் இல்லாமல் இந்த உலகத்தில் யாரால் வாழ முடியும். பணம் என்பதுதான் நம்முடைய வேட்கைகளை நிறைவேற்றுகிறது. பணம் என்பதுதான் நம்முடைய வாழ்க்கையை எளிதாக்குகிறது. பணம் இல்லை என்றால் நீங்கள் பத்து மைல் நடக்க வேண்டும். பணம் இருந்தால் மகிழ்வுந்திலே போகலாம். வாழ்க்கையை அது எளிமையாக்குகிறது. நேரத்தை மிச்சமாக்குகிறது. எனவே பணம் ஒரு செல்வம்தான் ஆனால் அது ஐந்தாவது செல்வம்.

ஆறாவதாக ஒரு செல்வத்தை அவர் குறிப்பிட்டார். எவன் ஒருவன் லட்சிய வெளியோடு இருக்கிறானோ அவன்தான் தொடர்ந்து காரியங்களைச் செய்வான். முடிந்து போயிற்று என்று கருதுகிறவன் எவனும் தொடர்ந்து பணியாற்றமாட்டான். எவரையாவது இமயம் என்றும் சிகரம் என்றும் சொன்னால் அவருடைய வேலை முடிந்துவிட்டது என்று பொருள். சிகரத்திற்கு மேலே என்ன இருக்கிறது. எனவே அதையும் தாண்டிப் போக வேண்டும் என்கிற வெறியைத் தனக்குள் வளர்த்துக் கொள்கிறபோது மட்டும்தான் நம்மாலே இயங்க முடிகிறது. எப்போது இயக்கம் என்பது அடுத்த கட்டத்தை நோக்கியதுதான். கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்ப்பது இயக்கமன்று. அடுத்த கட்டத்தை நோக்கியதான். எழுத்தாளருக்கு இன்னொரு புத்தகம் எழுத வேண்டும். ஒரு கலைஞருக்கு இன்னொரு படைப்பை உருவாக்க வேண்டும். விஞ்ஞானிக்கு இன்னொன்றைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்கிற அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வு இருக்கிறது பாருங்கள்... அதிலே இருக்கிற ஒரு வெறி இருக்கிறதே... அது ஒரு செல்வம் என்று ராபின்சர்மா சொல்கிறார். அந்த உணர்வு உந்துதல் நம்முடைய வாழ்க்கையிலே ஒரு செல்வம்.

ஏழாவதாக இருக்கிற செல்வம் என்ன என்று கேட்டால், ஏழாவது கடைசி இடத்திலே இருந்தாலும்கூட அதுதான் எல்லாச் செல்வங்களுடைய சாரமாக இருக்கிறது. புகழ் என்பது ஒரு செல்வம். ஆறு செல்வத்தைக் கொண்டுதான் இந்த ஏழாவது செல்வத்தைப் பெற முடியும். ஆனால் ஏழாவது செல்வத்தைப் பெற்று விட்டால் இந்த ஆறு செல்வங்களும் என்றைக்கும் மிஞ்சும். உடல் நலம். மனநலம்; குடும்ப நலம், தொழில் நலம்., மனநலம், லட்சிய நலம், புகழ் நலம் என்கிற இந்த ஏழு நலன்களும் ஏழு செல்வங்கள். இந்த ஏழு செல்வங்களும் யாரிடம் இருக்கிறதோ அவரை நீங்கள் செல்வந்தர் என்று அழைக்கலாம் என்பது அந்தக் கட்டுரையினுடைய சாரம்.

Article By. Suba Veera Pandiyan. 

உறவுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்!

0 comments
பாலுணர்வு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒவ்வொரு வயதிற்கு ஏற்ப மாறுபடுகிறது. டீன் ஏஜ் பருவத்தில் ஆர்வகோளாறால் ஏற்படும் ஆசையானது ஐம்பது வயதில் மருத்துவம் போல செயல்படுகிறது. எந்தெந்த வயதில் பாலுணர்வு எப்படி செயல்புரிகிறது என்பதை விலாவாரியாக எழுதியுள்ளார் டிரேஸி காக்ஸ். அவருடைய செக்டஸி என்ற நூலில் கூறப்பட்டுள்ளவைகளில் இருந்து சில பகுதிகள்

ஆர்வம் அதிகரிக்கும் இருபது

இருபது வயது என்பது டீன் ஏஜின் முடிவு. இந்த வயதில் இருக்கும் ஆண்களும் சரி, பெண்களும் சரி உறவு குறித்த கற்பனைகள், நினைவுகளில் அதிகம் மூழ்கியிருப்பராம். குறிப்பாக ஆண்களை விட பெண்களுக்கே கற்பனை உணர்வுகள் அதிகம் இருக்குமாம். நிறைய கற்பனை செய்து பார்ப்பார்களாம்.

20 வயதுகளில் உள்ள ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலுறவுப் பொசிசன்கள் குறித்து நிறைய ஆர்வம் இருக்குமாம். அதைப் பரீட்சித்துப் பார்க்கும் ஆர்வமும் இருக்குமாம். 2006ல் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி, 20 வயதைக் கடந்த பெண்களுக்கு, சக பெண்களுடன் படுத்திருக்கும்போது ஆர்கசம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 76 சதவீதம் பெண்களுக்கு இப்படி ஆர்கசம் வருமாம்.

இதுவே இந்த வயதில் ஆண்களுடன் படுக்கும் பெண்களில் 50 சதவீதம் பேருக்குத்தான் ஆர்கசம் வருமாம். அதாவது நிஜத்தை விட நிழலில் தான் இந்த வயதுப் பெண்களுக்கு செக்ஸ் ஆசை அதிகம் இருக்கும் என்கிறார் டிரேஸி.

பறக்கும் வயது முப்பது

வாழ்க்கையைப் பற்றிய அச்சம் அகன்று வேலை, திருமணம் என்று செட்டிலாகும் வயது முப்பது. இந்த வயதில் ஆண்களும், பெண்களும். வீட்டுக்குள் வைத்திருந்த செக்ஸை வெளியிலும் கொண்டு போகத் துடிப்பார்களாம். வித்தியாசமான சோதனைகளை செய்து பார்க்க விரும்புவார்களாம்

இந்த வயதில் பெரும்பாலானோருக்கு குழந்தைகள் வந்து விடும். எனவே அவர்களின் செக்ஸ் ஆசைகள் முன்பு இருந்ததைப் போல இல்லாமல் சற்று சுருங்கிப் போயிருக்குமாம். ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது கணவனும், மனைவியும் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை கூட செக்ஸ் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவார்களாம்.

30 வயதைத் தாண்டிய பெண்களில் 90 சதவீதம் பேருக்கு ஆர்கசம் அடிக்கடி வருகிறதாம். அதேசமயம், 20 வயதுகளில் உள்ள பெண்களுக்கு இது 23 சதவீதமாகவே உள்ளதாக கூறியுள்ளார் டிரேஸி காக்ஸ்.

இந்த வயதுக்காரர்கள் ஒருவரை ஒருவர் வருடிக் கொடுப்பது, முத்தமிடுவது, உள்ளிட்டவற்றை அதிகம் நாடுவார்களாம். குழந்தைச் செல்வங்கள் நடுவில் வந்து விட்டதால் சிலர் வாய்ப்பு கிடைக்கும்போது, பாஸ்ட் புட் ரேஞ்சுக்கு அவசர கதியில் செயல்படுவதும் உண்டாம். அதேபோல வார இறுதி நாட்களில் ஜோடியாக சுற்றுவது, கையைப் பிடித்தபடி உல�® ¾ வருவது, நெருக்கமாக இருப்பது போன்றவற்றிலும் முப்பது வயதுக்காரர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்குமாம்.

நாலும் தெரிந்த வயது நாற்பது

நாற்பதை கடந்த ஆண்கள் நேரடி செக்ஸ் உறவை விட படம் பார்ப்பது, செக்ஸ் சாட்டிங் செய்வது என்று வெளி வேலைகளில் அதிக ஆர்வம் காட்டுவார்களாம். ஆனால் பெண்களுக்கோ இந்த வயதில் செக்ஸ் ஆசை அதிகரிக்குமாம்.

மாதாந்திர உறவு எண்ணிக்கை இந்த வயதினர் மத்தியில் குறைவாக இருந்தாலும் மனசுக்குள் செக்ஸ் ஆசை நிறையவே இருக்குமாம். ஒரு தடவையாக இருந்தாலும் அதை நிறைவாக, நிதானமாக செய்ய வேண்டும் என்று நினைப்பார்களாம்.

டிரேஸி கூறியுள்ளதெல்லாம் அவரது மேற்கத்திய கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு தெரிவித்துள்ள கருத்துக்களாகும். ஆனால் இது நம் இந்திய தேசத்திற்கு எந்த அளவிற்கு பொருந்தி வரும் என்பது தெரியவில்லை.

திருமணத்தால் ஆண்களுக்குத்தான் மகிழ்ச்சி, பெண்களுக்கு..?!

0 comments
திருமணம் செய்துகொள்ளும்படி பெற்றோர் எவ்வளவோ நச்சரித்தாலும் சில இளைஞர் கள் பிடிவாதமாக மறுத்துவருகிறார்கள். `திருமணம், ஒரு மனிதனை அடிமையாக்கி விடும், அவனது எல்லா மகிழ்ச்சி, சுதந்திரத்தையும் பறித்துவிடும், திருமணத்தால் பலன் பெறுபவர்கள் பெண்களே' என்பது திருமணத்தை மறுக்கும் இளைஞர்களின் திடமான நம்பிக்கை.

திருமணமë என்ற பொறுப்புச் சிலுவையைத் தூக்கித் திரிவதைவிட, திருமணம் செய்துகொள்ளாமலே சேர்ந்து வாழும் `லிவ்-இன்' முறையை நாடலாம் என்ற மனோபாவம் இளைஞர்களிடம் பெருகி வருகிறது. எப்படியோ முடிந்தவரை திருமணத்தைத் தள்ளிப் போட நினைக்கிறார்கள்.

ஆனால் இளைஞர்களின் இந்த எண்ணம் சரியா?

- இல்லை என்பதே வாழ்வியல் நிபுணர்களின் கருத்து.

திருமணம் என்பது, ஆண்களின் நல்ல ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது என்பது அவர்கள் கருத்து. காரணம், மனைவிகள் கணவன்மார்களின் நலத்தைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

கணவருடன் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதால், மனைவியால் துணைவரின் இதய நோய், சர்க்கரைநோய் போன்றவற்றுக்கான ஆரம்பகட்ட அறிகுறிகளை உடனடியாக உணர்ந்துகொள்ள முடிகிறதாம்.

திருமணம், மனஅழுத்தத்தில் இருந்து ஆண்களைக் காக்கிறது, அதேநேரத்தில் மணமான ஆண்களுடன் ஒப்பிடும்போது மணமான பெண்கள் இருமடங்கு மனஅழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள். அனைத்து வயதினரிடமும் நடத்தப்பட்ட ஆய்வில், மனைவிகளை விட கணவன்மார்கள் திருமண வாழ்வில் அதிகபட்சத் திருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

திருமணமாகாத பெண்கள், திருமணமான பெண்களை விட அதிக சந்தோஷத்தை அனுபவிப்பதாகத் தெரிவிக்கிறார்கள். ஆண்கள் விஷயத்தில் இது அப்படியே நேரெதிராக இருக்கிறது.

மனைவியுடன் வாழும் ஆண்களைவிட மனைவியை இழந்த ஆண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் விதவையாவது பெண்களின் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையாம்.

1994-ம் ஆண்டில் அமெரிக்காவில் செக்ஸ் வாழ்க்கை தொடர்பாக நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், மிகவும் மகிழ்ச்சிகரமான செக்ஸ் வாழ்வை அனுபவிப்பவர்கள் திருமணமான ஆண்களே (88 சதவீதம் பேர்) என்று தெரியவந்திருக்கிறது. திருமணம் செய்துகொள்ளாமல் இரண்டுக்கு மேற்பட்ட செக்ஸ் துணையைக் கொண்டிருந்த ஆண்கள் குறைவான சந்தோஷத்தையே அனுபவிக்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

இது, ஜோடியாக வாழ்வது மனிதகுலத்தின் `டிரேட்மார்க்' என்று காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். திருமண வாழ்க்கை மீதான வெறுப்பு, மனித சமூகத்தை மிரட்டிக் கொண்டி ருக்கும் ஐந்து பெரும் அபாயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சரி, ஆண், பெண் இருவருமே திருமண வாழ்க்கையை இனிக்கச் செய்வது எப்படி?

உங்களைப் பிடிக்காத நபரைத் திருமணம் செய்யாதீர்கள். உங்களுடன் கரம் கோர்ப்பவர், உங்களை விருமëபுபவராக இருக்க வேண்டும். திருமணத்துக்குப் பின் எல்லாம் சரியாகிவிடும் என்று கற்பனைக்கோட்டை கட்டாதீர்கள்.

உங்களுக்கும், உங்கள் வருங்காலத் துணைக்கும், அவரது பெற்றோருக்கும் எந்தளவுக்குப் பொருந்திப் போகும் என்று திருமணத்துக்கு முன்பே சோதித்துக் கொள்ளுங்கள்.

ஒருவர் திருமண வாழ்வில் எப்படி இருப்பார் என்பதற்குச் சரியான அடையாளம், அவர் பிறந்த குடும்பத்தில் எப்படி இருக்கிறார் என்பது.

ஆண் செய்யும் வேலைகளைத்தான் ஆண் செய்ய வேண்டும், பெண் செய்யும் வேலைகளைப் பெண்ணே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை உதறுங்கள். மனைவியே எப்போதும் சமைத்து, வீட்டைப் பெருக்கி, கழுவித் துடைத்துக்கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. இன்று, கணவன், மனைவியின் பொறுப்புகள் மாறியுள்ளன அல்லது மாறிக் கொண்டிருக்கின்றன. இந்த நிதர்சனத்தை உணராவிட்டால் உங்களுக்கு அதிர்ச்சிதான் மிஞ்சும்.

வாழ்க்கைத் துணையுடனான உரையாடலில் வெளிப்படையாக இருங்கள்.

கணவன்- மனைவிக்கும், மனைவி- கணவனுக்கும் விசுவாசமாக இருப்பதில் மாறாத உறுதி காட்ட வேண்டும். பார்வையையும், மனதையும் அலைபாய விடுவது, நிம்மதியைக் குலைக்கும், குடும்ப அமைதியைத் தகர்க்கும். ஒரே துணையுடன் வாழ்வதுதான் ஆயுள் முழுக்க மகிழ்ச்சி தரும்.

நன்றி-தினத்தந்தி
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf