Andhra Chicken Fry: ஆந்திரா கோழிக்கறி வறுவல்

0 comments
ஆந்திரா கோழிக்கறி வறுவல் தேவையானவை:

கோழிக்கறி - 1/2 கிலோ (சுத்தம் செய்து நறுக்கவும்)
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
காஷ்மீர் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு - 1 கையளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

ஆந்திரா கோழிக்கறி வறுவல் செய்முறை:

ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

பின் வெங்காயத்தை வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.

சிக்கனைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத் தூள், மஞ்சள்தூள், போதுமான உப்பு, நீர் சேர்க்கவும்.

சிக்கன், மசாலாவுடன் சேர்ந்து வெந்து கெட்டியானதும் குறைந்த தீயில் சிறிது நேரம் வைக்கவும்.

சிக்கன் நன்கு டிரை ஆனதும், பொட்டுக்கடலை மாவைப் போட்டுப் புரட்டவும், பொட்டுக்கடலைத் தூளில் பச்சை வாசனை போனதும் இறக்கிவிடவும்.

செப்' தாமு
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf