Venture Capital in tamil :- வென்ச்சர் கேபிட்டல்

0 comments
உங்களிடம் பிரமாதமான பிஸினஸ் ஐடியா இருக்கிறதா? அந்த பிஸினஸை எப்படி நடத்தி வெற்றி காண முடியும் என்கிற வழியும் தெரிந்திருக்கிறதா? யெஸ் எனில் உங்கள் தொழிலுக்கு தேவையான முதலீட்டை செய்யத் தயாராக இருக்கின்றன வென்ச்சர் கேபிட்டல் நிறுவனங்கள்.

பொதுவாக, எந்த வகையான தொழில்களிலும் இந்த வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு செய்துவிட மாட்டார்கள். ஓரளவுக்கு நவீன தொழில்நுட்பம் கொண்ட தொழிலாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் முதலீடு செய்வார்கள். உதாரணமாக, ஊறுகாய் தயாரிக்கப் போகிறேன் என்றால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் முதலீடு எதுவும் தராது.

ஆனால், பயோ டெக்னாலஜி தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஊறுகாய் தயாரித்து, அதை வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்யப் போகிறேன் என்று சொன்னால் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகள் உங்கள் தொழிலில் முதலீடு செய்தாலும் செய்யலாம்.

வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டு களில் பாசிட்டிவ்-ஆன விஷயம், முதலீட்டுக்கு ஒரு வரம்பே இருக்காது. ஒரு கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை எடுத்த எடுப்பிலேயே போடுவார்கள். இந்த முதலீட்டுக்கு வட்டி எதுவும் தரத் தேவையில்லை என்பது இன்னும் விசேஷம். ஆனால், தொழில் மூலம் கிடைக்கும் லாபத்தை முதலீட்டு விகிதாசாரப்படி பிரித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பது கண்டிஷன்.

ஐ.சி.ஐ.சி.ஐ. வென்ச்சர் ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட், ஐ.எஃப்.சி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் ஃபண்ட்ஸ், எஸ்.ஐ.டி.பி.ஐ. வென்ச்சர் கேபிட்டல் லிமிடெட் என பல நிறுவனங்கள் இருக்கின்றன. எனினும், நீங்கள் ஆரம்பிக்கும் தொழில் பெரிய அளவில் புதுமைகள் எதுவும் இல்லாத வழக்கமான தொழில் எனில் வென்ச்சர் கேபிட்டல் ஃபண்டுகளின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டாம்.

மற்றவர்கள் கொடுக்கும் கடனை வைத்துத்தான் தொழில் நடத்த முடியும் என்று நினைக்கிறவர்களுக்குத்தான் இதெல்லாம். கையில் பணமிருக்கு. இப்போதைக்கு கடனே தேவை இல்லை! என்று நினைப்பவர்கள் எதற்கும் காத்திருக்க வேண்டியதில்லை! நீங்கள் நேரடியாக தொழிலை ஆரம்பித்துவிடலாம்! பெஸ்ட் ஆஃப் லக்!

Poultry Farming:- கோடிகளில் பணம் சம்பாதிக்க கோழி பண்ணை

0 comments
சத்துக்களை அள்ளித் தரும் ஆரோக்கியமான உணவு முட்டை.  மாணவர்கள் சத்துணவிலும் வழங்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் கூட, மஞ்சள் கருவை தவிர்த்துவிட்டு வெள்ளைக் கருவை சாப்பிடலாம். தேவை அதிகம் இருப்பதால், கோழிப்பண்ணை அமைத்து முட்டை உற்பத்தி செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த வேப்பங்கொட்டை பாளையத்தில் கிருத்திகா கோழி பண்ணை நடத்தி வரும் வெங்கடாசலம். அவர் கூறியதாவது:

நான் ஒரு விவசாயி. பாசன நீர் பற்றாக்குறை காரணமாக முட்டைக்கோழி வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகிறேன். இதற்கு  வங்கிக் கடன் உதவி எளிதாக கிடைப்பதால், பண்ணை அமைத்து கூண்டு முறையில் 24 ஆயிரம் கோழிகளை வளர்க்கிறேன். கோழி வளர்ப்பில் முதல் வளர்பருவம் வரை உற்பத்தி செலவுக்கு முதலீடு இருந்தால் போதும். முட்டைப்பருவ காலத்தில்  கிடைக்கும் முட்டைகளை விற்று  அதன்மூலம், அடுத்தடுத்த உற்பத்தி செலவுகளை சமாளிக்கலாம். அரவை இயந்திரம் வாங்கி தீவனத்தை நாமே அரைத்து கொண்டால் செலவு மிச்சமாகும். தீவனத்துக்கு தேவையான தானியங்கள் விலை குறையும்போது வாங்கி இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

நாமக்கல், பல்லடம் ஆகிய இடங்களில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. இங்கு திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் மொத்த முட்டை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வியாபாரிகள் நேரில் வாங்கி செல்கின்றனர். சில நேரங்களில் நல்ல லாபமும், சில நேரங்களில் குறைந்த லாபமும் கிடைக்கும். முறையாக வளர்த்தால், கோழி இறப்பு, முட்டை உற்பத்தி குறைவு ஆகியவற்றை தவிர்க்கலாம். ஒரு கோழி வாரத்தில் 6 நாள் முட்டை இடுவதால், தினசரி நல்ல வருவாய் பார்க்கலாம்.

வெளிநாடுகளுக்கு சிலர் மட்டுமே ஏற்றுமதி செய்கிறார்கள். முட்டைகளை தரப்பரிசோதனை செய்து தகுதியான முட்டைகளை அனுப்பினால் ஏற்றுமதியிலும் ஜொலிக்கலாம். கோழிப்பண்ணைகளுக்கு மின் கட்டணம் வணிக கட்டண பிரிவின் கீழ் விதிக்கப்படுகிறது. கோழி வளர்ப்பை மேம்படுத்த பண்ணைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோரி வருகிறோம்.

எப்படி வளர்ப்பது?

முட்டைக்கோழிகளை வளர்க்க ஆழ்கூளம், கூண்டு வளர்ப்பு என 2 முறைகள் உள்ளன. கூண்டுகளில் வளர்ப்பதே சிறந்தது. குஞ்சு பொரித்தது முதல் 8 வாரம் வரை குஞ்சு பருவம். அதற்கடுத்த 8 வாரங்கள் வளர் பருவம், பின்னர் 56 வாரங்கள் முட்டை உற்பத்தி பருவம். 3 பருவ கோழிகளையும் தனித்தனி கூண்டுகளில் வளர்க்க வேண்டும். கூண்டுகளில் கோழிகளின் பருவத்துக்கு ஏற்ப வெப்பம், காற்றோட்டம், ஈரப்பதம் இருக்குமாறு வசதி ஏற்படுத்த வேண்டும். குஞ்சு பருவத்தில் தீவனம் வீணாவதை தடுக்கவும், ஒன்றையொன்று கொத்திக் கொள்ளாமல் இருக்கவும் அதன் அலகுகளை 7 முதல் 10 நாட்களுக்குள் வெட்ட வேண்டும்.

குஞ்சு பருவத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சுத்தமான தண்ணீரில் வைட்டமின் கே, சி மற்றும் சோடியம் சாலிசிலேட் கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகள் போட வேண்டும். சோயா, கம்பு, மக்காச்சோளம், கருவாடு, கிளிஞ்சல்கள் ஆகியவற்றுடன் நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த கலவை தீவனம் கொடுக்க வேண்டும். குஞ்சுப்பருவத்தில் குருணை தீவனம் கொடுப்பது எடையை அதிகரிக்கும்.

600 கிராம் எடையுடன் இருக்கும். குஞ்சு, வளர் பருவத்தில் 1100 கிராம் எடையை அடையும். முறையாக பராமரித்தால் 60 கிராம் எடையுள்ள முட்டைகளை கோழி இடும். ஒரு கோழி வாரத்துக்கு 6 முட்டை இடும். அதை விற்பனைக்கு அன்றன்றே அனுப்பிவிட வேண்டும்.

ஆலோசனை பெறலாம்!

கால்நடை பராமரிப்பு துறையின் மாவட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் ஆராய்ச்சி மையங்களில் முட்டைகோழி வளர்ப்பு தொடர்பான அறிவுரைகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் அளிக்கின்றனர். முட்டை கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களின் தலைமை இடங்கள் நாமக்கல், பல்லடம், பொங்கலூர் ஆகிய இடங்களில் உள்ளது. இவற்றின் கிளைகள் முக்கிய நகரங்களில் உள்ளன. அங்கு கோழிக் குஞ்சுகளை வாங்கலாம். அங்கு கோழித் தீவன உற்பத்தியாளர்கள், கூண்டு தயாரிப்பவர்கள் மற்றும் கோழி வளர்ப்பு குறித்த விவரங்களை அளிக்கின்றனர்.

கட்டமைப்பு வசதிகள்

கூண்டு முறையில் முட்டைக் கோழி வளர்க்க 42க்கு 30 அடி நீள, அகலமுள்ள 3 கட்டிடங்கள் தேவை. இவற்றில் தலா 2 ஆயிரம் கோழி வீதம் 6 ஆயிரம் கோழி வளர்க்கலாம். கட்டிடத்துக்கு மொத்தம் ரூ.4.5 லட்சம் செலவாகும். 3 கட்டிடத்துக்கும் கூண்டு அமைக்க தலா ரூ.30 ஆயிரம் வீதம், ரூ.90 ஆயிரம் செலவாகும். கட்டிடத்தில் 3 அடுக்குகளை கொண்ட 6 இரும்பு கூண்டுகள் பொருத்த வேண்டும். மொத்தம் 18 அடுக்குகள் அமையும். 2 ஆயிரம் கோழிகள் இடம்பெறும். தீவனம் இருப்பு வைக்கவும், முட்டைகளை அடுக்கவும் தனித்தனி அறைகள் அமைக்க வேண்டும். கட்டமைப்புக்கு மொத்தம் ரூ.5.4 லட்சம்.

உற்பத்தி செலவு

குஞ்சு விலை சராசரி ரூ.21 வீதம் 2 ஆயிரம் குஞ்சுகள் ரூ.42 ஆயிரம். தீவனம் ஒரு கோழிக்கு 50 கிலோ தேவை. தீவனம் கிலோ விலை ரூ.15. 2 ஆயிரம் கோழிக்கு ரூ.15 லட்சம். தடுப்பு மருந்து உள்ளிட்ட பராமரிப்பு செலவுகள் ரூ.10 வீதம் ரூ.20 ஆயிரம். ஒரு வேலையாளுக்கு தினசரி ரூ.350 வீதம் ரூ.89 ஆயிரம் சம்பளம். மின் கட்டணம் ரூ.13 ஆயிரம் என உற்பத்தி செலவுக்கு மொத்தம் ரூ.16.64 லட்சம் தேவை.  

வருவாய் எவ்வளவு?

ஒவ்வொரு கோழியும் வளர்ந்த 17வது வாரத்தில் இருந்து 72வது வாரம் வரை முட்டை இடும். முட்டையிடும் பருவமான 55 வாரங்களில் (385 நாட்களில்) 320 முட்டைகள் இடும். முட்டை சராசரி விலை ரூ.2.50. 2 ஆயிரம் கோழிகள் மூலம் முட்டை விற்பனை வருவாய் ரூ.16 லட்சம். 72 வார முடிவில் வயதான முட்டை கோழிகள் விற்பனை 2 ஆயிரம் கோழிகள்(3500 கிலோ எடை) கிலோ ரூ.50 வீதம் வருவாய் ரூ.1.75 லட்சம். கோழி எரு தலா 15 கிலோ வீதம் 2 ஆயிரம் கோழிகள் மூலம் 30 டன் கிடைக்கும். இதன் மூலம் ரூ.24 ஆயிரம் வருவாய். மொத்த வருவாய் ரூ.17.99 லட்சம். லாபம் ரூ.1.35 லட்சம். முட்டை, எரு, கோழி விலை கூடினால் லாபமும் அதிகரிக்கும்.

சந்தை வாய்ப்பு!

தமிழகத்தில் முட்டை உற்பத்தி பெரும்பகுதி நாமக்கல்லிலும், ஓரளவு கோவை, திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளது. பரவலாக முட்டை உற்பத்தி மேற்கொண்டால் அந்தந்த பகுதிக்குரிய தேவையை பூர்த்தி செய்யலாம். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். முட்டை கோழி எரு ரசாயன உரத்துக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது. ரப்பர், தேயிலை தோட்டங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. கோழி எருவை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். முட்டை பருவம் முடிந்த கோழிகளை வியாபாரிகளிடம் விற்கலாம்.

TN TET 2014 results

0 comments
TN TET 2014 results Candidates who appeared for TN TET 2014 will get the results after the announcement of the TN TET results.

TN TET 2014 results
TN TET 2014 results

TN TET 2014 results will be availabile in the following official website at www.trb.tn.nic.in To see the TNTET results 2014,

Please Log on to the official website at www.trb.tn.nic.in for more details and TNTET results 2014.


Business'es That you can do from home:- சிறந்த 10 தொழில்கள்

0 comments
 ”வீட்லதான் சும்மா இருக்கேன்” என்று அங்கலாப்பவர்கள்தான் பலபேர்.  தங்களுக்குள் இருக்கும் திறமைகளையும், ஆர்வத்தையும் சற்று அலசி யோசித்தாலே சும்மா இருக்கும் நேரத்தில் பயனுள்ள வழிகளில் பணம் சம்பாதிக்க முடியும்.  அப்படி வீட்டில் இருந்த படியே செய்யச்சிறந்த பத்து தொழில்கள் பற்றிப் பார்க்கலாம்.

1. உணவு உபசரிப்பு

உங்கள் சமையல் கை ருசி பாராட்டப்படுகிறதா... யோசிக்காமல் இந்த உணவு உபசரிப்பில் இறங்கிவிடுங்கள்.  அருகில் பாச்சிலர் மேன்ஷனோ, லேடீஸ் ஆஸ்ட்லோ இருந்தால்.. வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு உணவு செய்து தந்து லாபம் பெறலாம்.  பின்னே... உணவை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்ன?

2,புகைப்படமெடுத்தல்

புகைப்படமெடுத்தல் சிலருக்கு ஆர்வமாக இருக்கும், இன்னும் சிலருக்கு ஹாபியாக இருக்கலாம், ஆனால் இதை ஒரு தொழிலாகவும் எடுத்துக் கொள்ள தகுதியானதே..  சரியான கருவியும், புகைப்படம் மற்றும் அந்தக் கருவி குறித்த செயல்பாடுகள் பற்றிய சில அடிப்படைகளை தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.  இந்தக்கலையில் பெயரெடுத்தவிட்டால், உங்களுக்கு ஆஃபர்கள் வந்துகொண்டே இருக்கும், 

3,செல்லப் பிராணிகள் ஸ்டோர்ஸ்

ஏற்றத்தாழ்வு இல்லாமல் பலரும் செல்லப்பிரானிகள் வளர்க்கிறார்கள்.  இதுதான் சூட்சும்ம்.  செல்லப்பிரானிகளுக்குத்  தேவையான உணவு,மருந்து, ஷாம்பு... என அனைத்தையும் வாங்கி வைத்து வியாபாரம் செய்யலாம். 

அருகில் உள்ள வெட்டினரி ஆஸ்பத்திரியுடன் ஒரு டை அப் வைத்துக் கொண்டீர்களானால் பிசினஸ் வெகு சீக்கிரம் பிரபலமாகிவிடும்.  பிராணிகள் வளர்ப்பவர்கள் மட்டுமல்ல பிராணிகளும் பழக்கமாகிவிடும்

4,திருமண வடிவமைப்பு

மாப்பிள்ளை அழைப்பில் இருந்து, கட்டுசாதக்கூடை வரையான திருமணத்திற்கான சகல வேலைகளைகளையும் வடிவமைத்து நிகழ்த்திக்காட்டுவது,  இது ஆண்களுக்கு மட்டுமே ஆனது என்றகாலம் மலையேறிவிட்டது,  புதுமையும், வேகமும், செயல்திறனும், நல்லுறவும் இருந்தால் போதுமானது,  ஒரு ஃபங்ஷன் முடித்துக்கொடுத்தால் லாபம் லட்சங்களில் நிற்கும்.

5,வெப் பேஸ்டு வணிகம்

கம்ப்யூட்டரின் உதவியோடு வெப் சார்ந்த விஷயங்களில், வெப் டிசைனராகவோ, வெப் டெவலப்பராகவோ தொழில் துவங்கலாம்.  கம்ப்யூட்டர், இண்டர்நெட், ஸ்கேனர், பிரன்டர் என கட்டமைப்பிற்கு சில ஆயிரங்கள் தேவைப்படும்.  அதை விட முக்கியமாகத் தேவைப்படுவது, விடா முயற்சியுடன் கூடிய ஆர்வம் தான்.  எல்லாம் கூடி வந்தால் உங்கள் பிசினஸ் ஜெட் வேகத்தில் பயணிக்கும் இந்த வணிகத்தில்

6,தோட்டம்

பூக்கள் மீதும், புற்கள் மீதும் ஒரே அளவு பாசம் கொண்டவர்களும், செடி கொடிகள் மீது விருப்பம் கொண்டவர்களும், வீட்டிலேயே தோட்டம் போடலாம், அதோடு அதை பிசினஸாகவும் மாற்றலாம்.  சிறு செடிகளை பதியம் போட்டு, நாற்றுகளாக்கி நர்சரி போல் அமைத்து விற்பனை செய்யலாம். ஹார்டிகல்சர் தெரிந்திருந்தால் பக்கத்து அலுவலகங்களில் அவுட் சோர்ஸ் முறையில் அவர்களது தோட்டத்தை பராமறித்தும் பணம் பார்க்கலாம். மணம் வீசும் தொழில் என்பது இதுதான்.

7,ஆன்லைன் வர்த்தகம்

தனிமைப்பிரியர்களுக்கு மிகவும் ஏற்ற துறை இந்த ஆன்லைன் வர்த்தகம்.  பங்குச்சந்தை பற்றியும் அதன் போக்கு குறித்தும் அலசுபவர்களுக்கு ஏற்ற துறை.  வீட்டில் ஒரு கம்ப்யூட்டரும், வங்கியில் பணமும் இருந்து, ஆன்லைன் வர்த்தகம் குறித்து சிறிது அறிவும் இருந்தால், நீங்கள் தான் எஜமானர்.  ஜமாக்கலாம்.

8,ரியல் எஸ்டேட் கன்சல்டன்சி

மேலே சொன்னவகையருக்கு நேர் எதிரானது இந்தத்துறை.  அலைய அஞ்சாதவர்களுக்கும், எந்த ஏரியாவில் நிலத்தின் மதிப்பு உயரும் என்பதை கணிக்கத் தெரிந்தவர்களுக்கும் இது பணம்தரும் சுரங்கமான தொழில். வீட்டு வாடகை- போக்கியம்- விற்பனை முதலியவற்றிக்கு கையை காட்டிவிடுவதிலேயே  பெர்சன்டேஜ் கமிஷன் பணம்பெறலாம்.

9,மார்க்கெட்டிங் கன்சல்டன்சி

ஏதேனும் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் பணி புரிந்திருந்து, தற்போது வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த மார்க்கெட்டிங் கன்சல்டன்சி மிகவும் ஏற்றது.  முதுலில் தெரிந்தவர்களிடமிருந்து துவங்கி, உங்களது ஆலோசனைகளை தொடரலாம். உங்களுக்கு ஆர்வமும் பேச்சுத்திறனும் இருப்பின் இதில் பெரிதாய் வளர முடியும்.

10,ஆட்டோமோடீவ் பாகங்கள்

இன்றைக்கு கார் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கார் வைத்திருப்போருக்கும் மோட்டார் கார் குறித்து முழுமையாகத் தெரியாது, இந்நிலையில் கார் பாகங்கள் பற்றியும் அதன் உதிரிபாகங்களின் சிறு டீலர்ஷிப் எடுக்கலாம்.  இந்த மார்க்கெட்டிங் துறை தயாரிப்பாளருக்கும் பயனாளிக்கும் பாலமாக இருப்பதோடு, உத்தரவாதமான லாபத்தை தரக்கூடியதுமாகும்.
    
 -உங்கள் சாய்ஸ் எதுவாக இருந்தாலும், ஆர்வமும், திட்டமிடுதலும் இருந்தால் நிச்சயம் பிசினஸ் சக்சஸாகவே இருக்கும்

Hand Gloves Making:- கையுறை தயாரிப்பு தொழில்

0 comments
தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கையுறைகளுக்கு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அதிக வரவேற்பு காணப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூர் பகுதியில், பனியன் துணிகளால் ஆன கையுறைகள் அதிக அளவில் தயாரிக்கப் டுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கையுறைகள், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் தொழிற்சாலைகளில் பனியன் செய்தது போக, கழிவு பனியன் துணிகளை கொண்டு சுற்றுவட்டார பகுதியில் உள்ள குறு தொழிற்சாலைகளில் கையுறைகள் செய்யப்படுகின்றன.

இவற்றை ஓசூர் மற்றும் பெங்களூரிலுள்ள மருந்து, கைகடிகாரம் உள்ளிட்ட பல தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஒரு நாளைக்கு ஒருவர் ஒரு கையுறையை பயன்படுத்துவதால், நாள் தோறும் ஆயிரக்கணக்கான கையுறைகள் தேவைப்படுகின்றன.

இந்தப் பகுதியில் இருந்து மட்டும் மாதத்துக்கு, இரண்டு லட்சம் கையுறைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாதத்துக்கு, 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான கையுறைகள் பலதரப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கையுறைக்கு ஓசூர் மட்டுமன்றி, பெங்களூரு, புனே உள்ளிட்ட தொழிற் நகரங்களில் வரவேற்பு உள்ளதால், நாளுக்கு நாள் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. சிறப்பான ஏற்றுமதிக்கு வாய்ப்பும் உள்ளது.

Microsoft Office 2013:- எம்.எஸ்.ஆபீஸ் 2013

0 comments
அண்மையில் வெளியிடப்பட்ட எம்.எஸ். ஆபீஸ் 2013 நுகர்வோருக்கான முன்னோட்டத் தொகுப்பில் பல்வேறு புதிய சிறப்புகள் மற்றும் வசதிகள் உள்ளன.

எக்ஸெல் 2007 மற்றும் 2010 தொகுப்புகளில் உள்ள வழக்கமான ரிப்பன் இன்டர்பேஸ் இதிலும் வழங்கப்படுகிறது.

வேர்ட் புரோகிராமில் இருப்பது போலவே இதிலும் சேவ்(Save) செய்து பதிவதில் சில புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.

ஒன்லைன் ஸ்டோரேஜ், கோப்புகளை பகிர்ந்து கொள்ளல், மைக்ரோசாப்ட் க்ளவ்ட் சேவை வழியாக கோப்புகளை அப்டேட் செய்து கொள்ள வசதிகள் உள்ளன.

எக்ஸெல் புரோகிராம் திறந்தவுடன், மாறா நிலையில் நமக்குக் கிடைக்கும் ஒர்க்ஷீட் புதிய டெம்ப்ளேட் விண்டோவில் கிடைக்கிறது.

அத்துடன் புதியதாக கணனிகளில் இருக்கும் டெம்ப்ளேட்களையும், ஒன்லைன் மூலமாக கிடைக்கக் கூடிய டெம்ப்ளேட்களையும் பட்டியலிடுகிறது.

ஒன்லைன் டெம்ப்ளேட் ஒன்றை தேர்ந்தெடுத்தால், தானாக அதனைத் தரவிறக்கம் செய்து தருகிறது. அத்துடன் நாம் அண்மையில் பயன்படுத்திய ஒர்க்ஷீட்களையும் பட்டியலிடுகிறது.

இதன் மூலம் அவற்றை போல்டரில் தேடாமல் நேரடியாகவே பெற்று பயன்படுத்தலாம். இந்த வசதிகள் உடனடியாக ஒர்க்ஷீட் பணிகளைத் தொடங்க எண்ணுபவருக்கு எளிதாக அமைந்துள்ளன.

வழக்கமாகக் கிடைத்துவரும் பகுப்பாய்வு வசதியில்(quick analysis tool) பல புதிய மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. இதன் மூலம் மேற்கொள்ளக் கூடிய ஆய்வு தேடல்கள் அதிகமாக்கப்பட்டுள்ளன.

ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்களைப் பலவகைகளில் போர்மட் செய்திட முடிகிறது. இதிலேயே தகவல்களை வகைப்படுத்தி குறைந்த மற்றும் அதிக மதிப்புகளை அவற்றின் அடிப்படையில் பட்டியலிட முடிகிறது.

நெட்டு வரிசை ஒன்றில் உள்ள தகவல்களை கர்சர் மூலம் தேர்ந்தெடுத்தால், அடுத்த வரிசையில் கூட்டல், சராசரி, மொத்த மதிப்புகளின் எண்ணிக்கை, மொத்த சராசரி ஆகியவை கிடைக்கும். இதில் எதனைத் தேர்ந்தெடுத்தாலும் அது உடனே கருப்பு வண்ணத்தில் தெளிவாகப் பார்க்கக் கிடைக்கிறது.

இதில் தரப்படும் சார்ட்(Sort) தயாரிப்பதற்கான வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நாம் எளிதாகவும் வேகமாகவும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் இந்த சார்ட்களை அமைக்கலாம். இதன் சிறப்பு என்னவெனில் ஒரு மதிப்பை மாற்றினால், உடனேயே அதற்கேற்ற வகையில் சார்ட் வேகமாக மாற்றப்படுகிறது.

இது போன்ற வசதிகள் மூலம் வர்த்தகத்தில் விலை நிர்ணயம் செய்வது, பொருட்களை வாங்குவது, விற்பனை செய்வது போன்ற முடிவுகளை வேகமாக எடுக்க முடியும்.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஸ்கை ட்ரைவ், ஆபீஸ் தொகுப்புடன் இணைக்கப்பட்டிருப்பதால் எக்ஸெல் தொகுப்பிலும் ஒன்லைன் இணைப்பு கிடைக்கிறது. மாறா நிலையில் ஒர்க்ஷீட்கள் ஒன்லைனில் சேவ் மற்றும் அப்டேட் செய்யப்படுகின்றன.

எக்ஸெல் தொகுப்பில் மட்டும் ஒரே நேரத்தில் பலர் ஒர்க்ஷீட் ஒன்றை எடிட் செய்திட வசதி தரப்படவில்லை. அப்படி முயற்சிக்கையில், பைல் லாக் செய்யப்பட்டிருப்பதாக எச்சரிக்கை செய்தி ஒன்று காட்டப்படுகிறது. இதனால் ஒருவர் எடிட் செய்து கொண்டிருக்கையில் அறியாமல் இன்னொருவர் எடிட் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.

இது நல்லது தான் என்றாலும், ஒருவர் எடிட் செய்கையில் மற்றவர்கள் அதனைத் திறந்து பார்ப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆபீஸ் தொகுப்பின் மற்ற புரோகிராம்களில் (வேர்ட், பிரசன்டேஷன் போன்றவற்றில்) இந்த வசதி தடை செய்யப்படவில்லை.

எனவே ஒருவர் எக்ஸெல் 2013க்கு மாறிக் கொள்ள வேண்டுமா? என்ற கேள்விக்கு, கூடுதல் வசதிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வேலையை எளிதாகவும், விரைவாகவும் முடிக்கக் கூடியவர்களும், இதனை விரும்புபவர்களும், நிச்சயம் புதிய தொகுப்பிற்கு மாறிக் கொள்ளலாம்.

குறிப்பாக கோப்புகளை ஒன்லைனில் சேவ் செய்து கொண்டு, மற்றவர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்வது மற்றும் தகவல்களைப் புதிய கோணத்தில் உடனுடக்குடன் ஆய்வு செய்து முடிவுகளைப் பெறுவது போன்ற வசதிகளைப் பயன்படுத்த விரும்புபவர்கள் நிச்சயம் இதற்கு மாறிக் கொள்ளத் தான் வேண்டும்.
0 comments
டெஸ்க்டாப் பகுதியில் சேவ் செய்வதில் உள்ள பிரச்னைகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளலாம். இதில் பதிந்து வைப்பதனால், பயன்படுத்த எடுப்பது எளிதாகிறது.

ட்ரைவ் மற்றும் போல்டர்களைத் தேடி எடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த உடனடி அணுகுமுறையே நமக்கு டெஸ்க்டாப்பில் பைல்களை சேமிக்கும் பழக்கத்தைத் தூண்டுகிறது.

இதனால் பிரச்னைகளையும் நாம் வரவேற்கிறோம் என்பதே உண்மை. முதலில், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்படுத்துகையில், டெஸ்க்டாப்பில் உள்ள பைல்கள் உறுதியாக மீண்டும் கிடைக்காது. இந்த ஆபத்தை பலர் உணர்ந்திருப்பதில்லை.

பல பைல் பேக் அப் புரோகிராம்கள், டெஸ்க்டாப்பில் உள்ள பைல்களை கண்டுகொள்வதில்லை. தொடர்ந்து பைல்களை டெஸ்க்டாப்பில் சேவ் செய்திடுகையில், அவை குப்பையாக அமைகின்றன. தேவையான பைல் ஒன்றைத் தேடி எடுப்பது சிரமமான காரியமாகிறது.

சரி, இனி எங்கு சேவ் செய்திடலாம், செய்திடக் கூடாது எனப் பார்க்கலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்கள் உள்ள சி ட்ரைவில் நம் டேட்டா பைல்களை என்றும் சேவ் செய்திடக் கூடாது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்காமல் போனால், அதனை ரீ இன்ஸ்டால் செய்திடுகையில், நம் டேட்டா பைல்கள் அனைத்தும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.

இதற்குப் பதிலாக, சி ட்ரைவினை விடுத்து, டி அல்லது வேறு ஒரு ட்ரைவில் பைல்களைப் பதிந்தால், அவை வைரஸால் பாதிக்கப்படாமல் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். மேலும் சி ட்ரைவினை ரீ பார்மட் செய்கையில், பைல்களை இழக்கும் வாய்ப்பு இருக்காது.

முன்பு விண்டோஸ் சிஸ்டத்தில் பைல்களை சேவ் செய்திட My Documents என்னும் போல்டர் தரப்பட்டது. பின்னர், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இது Documents என பெயர் மாற்றப்பட்டது. அத்துடன் அதில் Music, Pictures, and Videos எனப் பல பிரிவுகளும் தரப்பட்டன.

இவை மொத்தமாக libraries என அழைக்கப்பட்டன. இந்த நான்கு லைப்ரேரிகளும் சில சிறப்பு தன்மை கொண்டவை. இவை டைரக்டரிகள் மட்டும் அல்ல. பல டைரக்டரிகளின் தொகுப்பாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள் உங்கள் வீடியோக்களை பல இடங்களில் சேவ் செய்து வைக்கலாம். செய்து வைத்திடுகையில், வீடியோ டைரக்டரிக்கு லிங்க் கொடுக்கலாம். அதன் பின், வீடியோ டைரக்டரியை அணுகினால், அனைத்து வீடியோ பைல்களும் ஒரே இடத்தில் காட்டப்படுவதனைக் காணலாம்.

இந்த வகையில் பைல்களை சேவ் செய்வதும் திரும்பப் பெறுவதும் எளிதாகிறது. பாதுகாப்பும் கிடைக்கிறது. இப்போதெல்லாம், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், பைல்களை ஸ்டோர் செய்திடும் பழத்தினை அனைவரும் பின்பற்றுகின்றனர். பெரும்பாலும் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் இந்த இடம் கிடைக்கிறது. இவற்றில் அதிகம் பிரபலமானவை Dropbox, G+ Drive, or Microsoft One Drive ஆகும்.

இவை கூடுதல் வசதிகளை வழங்குகின்றன. இவற்றுடன் அக்கவுண்ட் வைத்துக் கொண்டு, பைல்களை இணைக்கும் வசதியையும் (Sync) அமைத்துக் கொண்டால், பைல்கள் தாமாகவே, இணைய வசதி இருக்கும்போது, இந்த க்ளவ்ட் டைரக்டரிகளில் பதிந்து வைக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட டைரக்டரிகளில் நீங்கள் அமைக்கும் பைல்கள் தாமாகவே இவற்றுடன் இணைக்கப்பட்டு சேவ் செய்திடும் வகையில் அமைப்பினை உருவாக்கிக் கொள்ளலாம். இவ்வாறு சேவ் செய்திடும் பைல்களை எந்த இடத்தில் இருந்தும் நீங்கள் மீண்டும் பெற்றுக் கொண்டு திருத்தலாம், பயன்படுத்தலாம். நம் கம்ப்யூட்டர் முழுமையாக இயக்க முடியாமல் போனாலும், இந்த பைல்கள் நமக்கு என்றும் கிடைக் கும்.

இவ்வாறு சேவ் செய்யப்படும் பைல்களுக்கு Revision history என்ற ஒரு வசதியும் தரப்படுகிறது. அனைத்து க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதிகளிலும் இந்த வசதி தரப்படவில்லை. ஆனால், பெரும்பாலான பிரிவுகளில் கிடைக்கிறது. இந்த வசதியின் மூலம், பைல் ஒன்றில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் அனைத்தும், குறிப்பிட்ட எண்ணிக்கையில், குறிப்பில் வைத்து சேவ் செய்யப்படுகின்றன.

எனவே, நீங்கள் ஒரு பைலின், குறிப்பிட்ட திருத்தத்திற்கு முந்தைய பதிப்பு தேவை எனில், அதனை க்ளவ்ட் ஸ்டோரேஜில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் விண்டோஸ் 8 பயன்படுத்துபவராக இருந்தால், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒன் ட்ரைவின் க்ளவ்ட் ஸ்டோரேஜ் வசதி உங்களுக்கு சிஸ்டம் மூலமாகவே தரப்படுகிறது.

பைல்களை ஒருங்கிணைக்கும் சிங்க் வசதியும் கிடைக்கிறது. பைல்களை உடனே அணுகி, டபுள் கிளிக் செய்து திறக்க முடிகிறது என்ற ஒரு வசதியே, நம்மை டெஸ்க்டாப்பில் பைல்களை சேவ் செய்து வைத்திடத் தூண்டுகிறது. ஆனால், டெஸ்க்டாப் இடத்தில் பைல்களை சேவ் செய்வது சரியல்ல என்ற நிலையில், உடனுடக்குடன் டெஸ்க்டாப்பிலிருந்தே பைல்களைத் திறக்க ஏதேனும் வழி உண்டா என நாம் எண்ணலாம். வழி உள்ளது.

பைல்களுக்கான ஷார்ட் கட் (shortcuts) ஐகான்களை உருவாக்கி, டெஸ்க்டாப்பில், எளிதில் பெறும்படி அமைத்தால், அதில் கிளிக் செய்து பைல்களைத் திறக்கலாம். இந்த வகையில் ஷார்ட் கட் அமைப்பதுவும் எளிதுதான். ரைட் மவுஸ் பட்டனை பைல் பெயர் மீது அழுத்தி, எந்த இடத்தில் ஷார்ட் கட் அமைக்கப்பட வேண்டுமோ அங்கு விட வேண்டும்.

பின்னர் கிடைக்கும் மெனுவில் Create shortcut here என்பதில் கிளிக் செய்தால், ஷார்ட் கட் அமைக்கப்படும். இந்த ஷார்ட்கட் நீக்கப்பட்டாலும், பைல் நீங்கள் சேவ் செய்த இடத்தில், டைரக்டரியில் அல்லது போல்டரில், இருக்கும். ஆனால், இவற்றையும் டெஸ்க் டாப்பில் வைத்து அது குப்பைக் களமாக மாறுவதை ஏன் உருவாக்க வேண்டும்.

அதற்குப் பதிலாக, இது போல உருவாக்கப்படும் ஷார்ட் கட் ஐகான்களை அப்படியே இழுத்து வந்து டாஸ்க் பாரில் பின் அப் செய்து வைக்கலாம். இதற்கு Pin to taskbar என்பதனைப் பயன்படுத்த வேண்டும்.

மேலே சொன்ன வழிகள் அனைத்தும் பொதுவாகச் சொல்லப்பட்டவையே. இதுவரை டெஸ்க்டாப்பில் மட்டுமே அவசரமாகத் திறக்க வேண்டிய, அடிக்கடி பயன்படுத்த வேண்டிய பைல்களை சேவ் செய்து பழக்கப்பட்டவர்கள், அவர்களுடைய விருப்பத்தின் அடிப்படையில் மேலே சொல்லப்பட்ட வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பைல்களை சேவ் செய்து கொள்ளலாம்.

100 GB Free Cloud Storage

Get 100 GB Storage by Using Bing |

0 comments
க்ளவ்ட் ஸ்டோரேஜ் இப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பயன்படுத்து பவர்களைத் தன் பக்கம் இழுக்க, மைக்ரோசாப்ட் ஒரு பரிசுத் திட்டத்தினை அறிவித்துள்ளது.

அதன் தேடல் சாதனமான பிங் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, தன் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ட்ரைவ் ஒன் ட்ரைவில், 100 ஜிபி இலவச இடம் தருவதாகக் கூறியுள்ளது. நீங்கள் பிங் மட்டும் பயன்படுத்தினாலும், அல்லது கூகுள் மற்றும் பிங் தேடல் தளங்களை, மாற்றி மாற்றி பயன்படுத்தினாலும், இந்த திட்டத்தில் கலந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு முறை நீங்கள் பிங் தளம் செல்லும்போதும், மைக்ரோசாப்ட் அதனைப் பதிவு செய்து கொள்கிறது. ஒவ்வொரு முறை செல்வதற்கும் அதற்கான கிரெடிட்களைத் ("credits”) தருகிறது.

இவ்வாறு 100 கிரெடிட்கள் ஒருவரின் கணக்கில் சேர்ந்த பின்னர், அதனைப் பயன்படுத்தி அவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் க்ளவ்ட் ஸ்டோரேஜ் தளமான ஒன் ட்ரைவில், 100 ஜிபி இடம் ஓர் ஆண்டு பயன்பாட்டிற்கெனப் பரிசாகப் பெறலாம்.

இத்துடன், தங்கள் நண்பர்களை பிங் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பவர்களுக்கும் இந்த கிரெடிட் தரப்படும். இதே போல பிங் ரிவார்ட்ஸ் திட்டத்திற்கு நண்பர்களை அழைத்தாலும் கிரெடிட் உண்டு.

மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவில் புதியதாக அக்கவுண்ட் தொடங்கும் அனைவருக்கும் 7 ஜிபி இலவச இடம் தந்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

Heart proplems and T.M.T: இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால் | டிரெட் மில் டெஸ்ட்

0 comments
பெரும்பாலான நோயாளிகளுக்கு பிரதான ரத்தக்குழாயில் இல்லாமல், சிறு சிறு கிளைகளில் அடைபட்டிருந்தால், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தவிர்த்து, 80 சதவீதம், மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும்

இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தால், 50 முதல், 80 சதவீதம் பேரை மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும். பிரதான மூன்று ரத்தக் குழாய்களிலும் அடைப்பு இருந்தால் மட்டுமே, அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்.


இதய நோய்க்கு, டி.எம்.டி., பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார்களே? அப்படி என்றால் என்ன?

‘டிரெட் மில் டெஸ்ட்’ என்பதையே, சுருக்கமாக டி.எம்.டி., என்கின்றனர். இ.சி.ஜி., பரிசோதனையில், மாற்றங்கள் தெரிந்தால், அவருக்கு இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருக்கிறதா என்பதை, கண்டறியும் பரிசோதனை இது.

இன்னும் சொல்வது என்றால், அதிக வேலைகள் செய்யும் போது, எனர்ஜி தேவை. அதற்கேற்ப இதயத்திற்கு ரத்த ஓட்டம் சரியாக செல்லவில்லை என்றால், அவர்களுக்கு நெஞ்சில் வலி ஏற்படும். இந்த வலி எதனால், எந்த மாதிரியான கடின வேலை செய்யும் போது வருகிறது என, கண்டறியும் முதற்கட்ட பரிசோதனை இது.

இந்த பரிசோதனை எப்படி செய்யப்படும்?

நடைபயிற்சி இயந்திரத்தில் (டிரெட் மில்), குறைந்த வேகத்தில் நடக்க வைப்பர். படிபடியாக வேகத்தை கூட்டி, ஓட வைப்பர். 5 முதல் 10 நிமிடங்கள் வரை பரிசோதனை நடக்கும். பயிற்சியின் போது, கை, கால்கள், மார்பு பகுதி என, ஆறு, ஏழு இடங்களில், இ.சி.ஜி., லீட்கள் பொருத்தப்பட்டு, அதை, கம்ப்யூட்டருடன் இணைத்து, பதிவு செய்யப்படும். ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு அனைத்தும் பதிவாகும். எந்த நேரத்தில் அவரால் நடக்க முடியவில்லை; எப்போது நெஞ்சு வலி வருகிறது என, துல்லியமாக தெரிந்து விடும்.

உடனடியாக, பயிற்சி நிறுத்தப்பட்டு, ஓய்வு தரப்படும். அப்போதும், இ.சி.ஜி.,யின் மாற்றம் இயல்பு நிலைக்கு வரவில்லை என்றால், இதய ரத்தக்குழாயில் அடைப்பு உள்ளது என்று, அர்த்தம்.

இந்த பரிசோதனையை யார் எல்லாம் செய்ய வேண்டும்?

ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இனம்புரியாத தலை சுற்றல், மயக்கம், மார்பில் படபடப்பு, மார்பு இருக்க உணர்வு உள்ளோர், கொழுப்பு சத்து அதிகம் உள்ளோர் ஒல்லியாக இருந்தாலும், குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் பாதிப்பு இருந்தால், குடும்பத்தில் மற்றவர்களுக்கும் வர வாய்ப்புஉள்ளதால், டி.எம்.டி., பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

ரத்த குழாய் அடைப்புக்கு டிரெட் மில் சோதனை தான் இறுதியானதா; வேறு பரிசோதனைகள் உண்டா?

‘டிரெட் மில்’ பரிசோதனை என்பது, முதற்கட்ட பரிசோதனை தான். இதில், ரத்தக்குழாய் அடைப்பு என, தெரிந்தால், அடுத்த கட்டமாக, ‘குரோனரி ஆஞ்சியோ கிராம்’ என்ற பரிசோதனை செய்ய வேண்டும்.

இதில், இதய பாதிப்பை உறுதி செய்து கொள்ளலாம். இதுதான், ரத்தக்குழாய் அடைப்பை கண்டறியும் முடிவான பரிசோதனை.

குரோனரி ஆஞ்சியோ கிராம் சோதனை எப்படி செய்யப்படுகிறது?

தொடை அல்லது கையில் உள்ள தமணி வழியாக, நரம்பு போன்ற கத்திட்டரை (சோதனை கருவி) செலுத்தி, இதயம் வரை கொண்டு சென்று, இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளதாக என, கண்டறியப்படும். தற்போது, பெரும்பாலும் கை மணிக்கட்டு தமணியில் வழியாகவே அதிகம் செய்யப்படுகிறது. இது, எளிதாக கருதப்படுகிறது; எந்த சிக்கலும் இல்லை.


ரத்தக்குழாய் அடைப்பு உறுதியானால் அறுவை சிகிச்சை தான் தீர்வா?
பெரும்பாலான நோயாளிகளுக்கு பிரதான ரத்தக்குழாயில் இல்லாமல், சிறு சிறு கிளைகளில் அடைபட்டிருந்தால், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை தவிர்த்து, 80 சதவீதம், மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியும்.

ஒரே ஒரு ரத்தக்குழாயில் மட்டும், 1 செ.மீ., அளவுக்கு குறைவாக, 80 முதல் 90 சதவீதம் வரை அடைப்பு இருந்தால், அவர்களுக்கு ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ எனப்படும், நரம்பு வழியாக காற்று புகுத்தி செய்யும் பலுான் சிகிச்சை செய்யலாம். மூன்று பிரதான ரத்த குழாயில் அடைப்பு இருந்தால், அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதே தீர்வு; வேறு வழியில்லை.

‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்றால் என்ன? அதற்கான நவீன சிகிச்சை என்ன?

இதயத்தின் மூன்று ரத்தக்குழாய்களும் அடைக்கப்பட்டு, மயக்க நிலை ஏற்பட்டால், ‘கார்டியோ ஜெனிக் ஷாக்’ என்று பெயர். பாதிப்பின் தன்மை அதிகம். இதற்கு, ஐ.ஏ.பி.பி., (இண்டிரா அயோதிக் பலூன் பம்ப்) சிகிச்சை அளிக்கப்படுகிறது. நரம்பு வழியாக ஒரு பலூனை மகா தமணியின் இடது பக்கம் செலுத்தி, ‘ஹீலியம்’ என்ற வாயுவை அந்த பலூனில் செலுத்தி, இயந்திரத்தில் இணைத்து விடுவர்.

அந்த இயந்திரம் பலூனை சுருங்கி, விரிவடையச் செய்து, இதயத்துக்கான ரத்த ஓட்டத்தை சீரடையச் செய்யும். இதனால், இதயம் ஓய்வெடுப்பதால், அது நலம் பெற்று மீண்டும் சீராக இயங்க முடியும். இந்த அதிநவீன சிகிச்சையால் மட்டுமே, மிகப்பெரிய மாரடைப்பில் இருந்து ஒருவரை காப்பாற்ற முடியும். மாநகரங்களில் உள்ள ஒரு சில மருத்துவமனைகளில் தான், இந்த வசதி உள்ளது.
அதிலும், தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் மிக குறைவே. சென்னை, அரசு பொது மருத்துவமனையில் இந்த வசதி உள்ளது; இலவசமாக செய்யப்படுகிறது.

இதுபோன்று பாதிப்பு வராமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்?

உரிய நேரத்தில் அளவோடு சாப்பிட வேண்டும். எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எளிய உடற்பயிற்சிகள் செய்வது நல்லது. நேரமில்லை என்றால், இரவிலும் உடற்பயிற்சி செய்யலாம். மன அழுத்தம் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளுங்கள்; அதற்கு யோகா, தியானம் நல்ல பலன் தரும் இதோடு, சரியான தூக்கமும் இருந்தால், இதய நோய் அல்ல; எந்த நோய் பாதிப்பும் வராது.

டாக்டர் கே.எஸ்.கணேசன்,
இதய துளைவழி அறுவை சிகிச்சை நிபுணர்,
சென்னை அரசு பொது மருத்துவமனை.

நன்றி-தினமலர்

கெடுவான், கேடு நினைப்பான் - ஜெயதேவர்

0 comments
‘கெடுவான், கேடு நினைப்பான்’ என்பது பழமொழி. பொறாமை மற்றும் பேராசையின் காரணமாக, ஒருவன், அடுத்தவனை அழிக்க நினைத்தால், அது, அவனுக்கே வினையாக முடிந்து விடும்.

அதனால் தான், நம் முன்னோர்கள், ‘நல்லதே, நினை; நல்லதே நடக்கும்’ என்றனர். கடவுள் மேல், உண்மையான அன்புடன் பக்தி செலுத்துவோரை, எந்த கெடுதல்களும் ஒன்றும் செய்து விட முடியாது என்பதற்கு, ஜெயதேவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தைக் கேளுங்கள்:

ஜெயதேவர், பாண்டுரங்கன் மேல், மிகுந்த பக்தி கொண்டவர். சதா சர்வ காலமும், இறைவனின் நாமாவை சிந்தனையில் வைத்து, அவனையே துதித்துக் கொண்டிருப்பவர்; சாந்த சொரூபி.

அவருடைய தந்தை போஜதேவ். இவர், தன் நண்பர் நிரஞ்சன் என்பவரிடம், சிறிதளவு பணம், கடன் வாங்கி இருந்தார். இந்நிலையில்,போஜதேவ், அவருடைய மனைவியும் எதிர்பாராத விதமாக இறந்து விட்டனர்.

அப்போது ஜெயதேவர் சிறுவனாக இருந்தால், கடன் கொடுத்தவருக்கு, ஜெயதேவர் இருந்த வீட்டை, தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற, பேராசை தோன்றியது.

அதனால், அவர், போஜதேவ், தன்னிடம் ஏராளமாகக் கடன் வாங்கி இருப்பதாக பொய் பத்திரம் எழுதி, ஜெயதேவரிடம், கையெழுத்தும் வாங்கி விட்டார்.
கொஞ்ச காலம் ஆயிற்று. கடன் கொடுத்திருந்த நிரஞ்சன், ஜெயதேவரின் வீட்டை, ஜப்தி செய்வதற்காக வந்தார்.

அவர் வந்ததற்கான காரணத்தை அறிந்ததும், ஜெயதேவர் கவலைப்படவில்லை. கடவுள் விட்டவழி என்று இருந்து விட்டார்.
நிரஞ்சனோ, ஜெயதேவரை வீட்டை விட்டு வெளியேறும்படி நிர்பந்தப்படுத்தி, சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது நிரஞ்சனின் மகன், வேகமாக ஓடி வந்து, ‘அப்பா… நம் வீடு தீப்பிடித்து எரிகிறது… நம்ம வீடு தீப்பிடித்து எரிகிறது…’ என்று, பதறினான்.
அதைக் கேட்டதும், நிரஞ்சனுக்கு ஜப்தி மறந்து போய், தன் வீட்டை நோக்கி வேகமாக ஓடினார். ஜெயதேவரும் அவருக்கு உதவி செய்ய, அவரை பின் தொடர்ந்து ஓடினார்.

வீடு தீப்பற்றி எரிவதைப் பார்த்து, திகைத்து நின்றார் நிரஞ்சன். அவரால், ஒன்றும் செய்ய முடியவில்லை. ஜெயதேவரோ, இருக்கும் பொருட்களையாவது காப்பாற்றுவோம் என்ற எண்ணத்தில், தீப்பிடித்த வீட்டிற்குள் நுழைந்தார்.

அதே வினாடியில், தீ அணைந்தது; நிரஞ்சன் வியந்தார். ஜெயதேவனின் கால்களில் விழுந்தார், ‘அப்பா… நீ என்னை விட எவ்வளவோ வயது சிறியவன்; ஆனால், குணத்திலோ, ஆகாயம் அளவு உயர்ந்து விட்டாய். உன்னுடைய வீட்டை அபகரிக்க எண்ணிய எனக்கு, உதவி செய்ய ஓடி வந்தாயே… என்னை மன்னித்து விடு…’ என, வேண்டினார்.

ஜெயதேவர் சொன்னபடியெல்லாம், பகவான் பாண்டுரங்கன் செய்தார் என்றால், சிறுவயதில் இருந்தே, அவர், கடவுள் பக்தியும், நற்குணங்கள் நிரம்பியவராக இருந்தது தான் காரணம்.

Chrome browser tips in tamil :- குரோம் பிரவுசர் டிப்ஸ்

0 comments

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பல பிழையான குறியீடுகள் காரணமாக, அதன் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாகச் சில ஆண்டுகளாகவே இருந்து வந்தது.

இதனால், பல பயனாளர்கள் <a href="https://www.google.com/intl/en/chrome/browser/">குரோம் பிரவுசருக்கு</a> மாறத் தொடங்கினர். இன்று பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் பிரவுசராக குரோம் உள்ளது.

அதில் விரைவாகவும் எளிதாகவும் பயன் பெறும் வகையிலான சில டிப்ஸ்கள் இங்கு வழங்கப்படுகின்றன.

இணைய தளம் ஒன்றைத் திறந்தவுடன், அதில் உள்ள வீடியோக்களும் மற்ற ப்ளாஷ் பைல்களும் தாமாக இயக்கப்படும் வகையில் அமைக்கப்பட வேண்டுமா? குரோம் பிரவுசரின் அட்ரஸ் பாரில் chrome://settings/content என டைப் செய்து கிடைக்கும் தளம் செல்லவும். இங்கு கீழாகச் சென்றால், "Plugins” என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதில் "Click to play.” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது அனைத்து மல்ட்டி மீடியா பைல்களும் அதன் நிலை மறைக்கப்பட்ட (grayedout) பெட்டிகளாகத் தோற்றமளிக்கும். இதில் கிளிக் செய்தால் இவை இயக்கப்படும். சில குறிப்பிட்ட தளங்கள் தாமாக இயக்கப்படக் கூடாது என முடிவு எடுக்க விரும்பினால், "Manage exceptions” என்ற பட்டன் அழுத்தி அவற்றைத் தரலாம்.

பிரவுசரில் உள்ள டேப்களை விண்டோவின் உள்ளும் வெளியேயுமாக இழுத்து அமைக்கலாம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இன்னொரு ஷார்ட்கட் வழியும் உள்ளது. டேப் ஒன்றின் தலைப்பு பெட்டியின் நடுவே கிளிக் செய்தால், (பிரவுசர் விண்டோவின் மேல் பகுதியில்) அந்த டேப் மூடப்படும்.

நடுப்பகுதியைக் கொண்டு கிளிக் செய்வது குரோம் பிரவுசரில் பல செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. லிங்க் ஒன்றில் இவ்வாறு கிளிக் செய்திடுகையில், அந்த லிங்க்குடன் தொடர்பு உள்ள தளம் புதிய டேப்பில் பின்புலமாகத் திறக்கப்படும். இதன் மூலம், எந்த தலையீடும் இன்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்திலேயே செயல்படலாம். லிங்க் மட்டுமின்றி, கீழ்விரி மெனு பட்டியலில் உள்ளவற்றிலும் இதே போல நடுப்பகுதியில் கிளிக் செய்து புதிய செயல்பாட்டினைக் கொள்ளலாம். நீங்கள் நடுப்பகுதி கிளிக் செய்திட விரும்பவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். Ctrl கீ அழுத்தியவாறு, லெப்ட் கிளிக் செய்தால், இதே செயல்பாடு மேற்கொள்ளப்படும். இதே நிலையில், ஷிப்ட் கீ அழுத்தி, லெப்ட் கிளிக் மேற்கொண்டால், டேப்பிற்குப் பதிலாக, புதிய விண்டோவில் குறிப்பிட்ட தளம் திறக்கப்படும்.

இன்னொரு அட்ரஸ் பார் குறிப்பினையும் இங்கு பார்க்கலாம். இதில் தேடல் சொற்கள் அல்லது இணைய முகவரியினை டைப் செய்த பின்னர், Alt+Enter கீகளை அழுத்தினால், தேடலுக்கான முடிவுகள், புதிய டேப்பில் தரப்படும். நீங்கள் இருக்கும் பக்கத்தில் கிடைக்காது.

ஒன்றுக்கு மேற்பட்ட டேப்களை நகர்த்தவோ அல்லது மூடவோ விரும்பினால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, இணைய தளப் பக்கங்களைக் காட்டும் டேப்களில் கிளிக் செய்தால் போதும். அவை அனைத்தும் தேர்ந்தெடுக் கப்படும். பின்னர் இவற்றை மொத்தமாக, புதிய விண்டோவிற்கு இழுத்துச் செல்லலாம். அல்லது Ctrl+W கீகளை அழுத்தி மூடிவிடலாம்.

தவறுதலாக டேப் ஒன்றினை மூடிவிட்டீர்களா? Ctrl+Shift+T என்ற கீகளை அழுத்தினால், அவை மீண்டும் கிடைக்கும். மீண்டும் தொடர்ந்து இந்த கீகளை அழுத்தினால், ஏற்கனவே மூடப்பட்ட இணைய தளப் பக்கங்கள், பின் நிகழ்விலிருந்து வரிசையாகக் கிடைக்கும்.

Ctrl+H என்ற கீகளை அழுத்தி எப்போதும் உங்களுடைய பிரவுசிங் நடவடிக்கைகளைக் (browsing history) காணலாம். ஏதேனும் ஒரு டேப்பில் உள்ள இணைய தளத்தில் பார்த்த முந்தைய பக்கங்களையும் காணலாம். இதற்கு பிரவுசரின் மேல் இடது பக்கம் உள்ள Back பட்டனை அழுத்திப் பிடித்தவாறு அதனைக் கிளிக் செய்திட வேண்டும். டிப்ஸ் 3 மற்றும் 4ல் குறிப்பிட்ட கண்ட்ரோல் + நடு கிளிக் அல்லது ஷிப்ட்+ க்ளிக் இங்கேயும் செயல்படும். இதன் மூலம், பழைய லிங்க் ஒன்றை புதிய டேப் அல்லது விண்டோவில் திறக்கலாம்.

இணைய தளப் பக்கத்தில் உள்ள டெக்ஸ்ட் ஒன்றினை ஹை லைட் செய்தால், அதன் பின்னர், அதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு அதனைத் தேடி அறிவதற்கான விருப்பக் குறி கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டில், லிங்க்காக இல்லாமல், இணைய தள முகவரி ஒன்று இருந்தால், அதனை காப்பி/பேஸ்ட் செய்திடாமல், பெறும் வழி கிடைக்கும்.

டெக்ஸ்ட் ஹைலைட் செய்து, அதனை அப்படியே அட்ரஸ் பாருக்கு இழுத்துச் சென்று புதிய தேடல் அல்லது இணைய உலாவினை மேற்கொள்ளலாம்.

தேர்ந்தெடுத்த இணைய முகவரி டெக்ஸ்ட்டை அப்படியே இழுத்துச் சென்று பிரவுசரின் மேலாக இழுத்துச் சென்று, அதாவது வலது கோடியில் இருக்கும் டேப்பிற்கு அருகே, விட்டால், புதிய டேப்பில் அது காட்டப்படும்.

தேடல் சொற்களை குரோம் பிரவுசரில் அமைக்கையில், மாறா நிலையில், அது கூகுள் தேடல் டூலை பெற்று தேடுகிறது. இதற்குப் பதிலாக, நீங்கள் Amazon அல்லது YouTube தளங்களில் தேட வேண்டும் என எண்ணினால், அந்த தேடல் தளத்தின் பெயரை டைப் செய்து, பின்னர் டேப் கீயை ஒரு முறை அழுத்தியபின், தேடலுக்கான சொற்களை டைப் செய்திடலாம். வேறு சர்ச் இஞ்சின்களைப் பயன்படுத்த எண்ணினால், அட்ரஸ் பாரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் "Edit search engines.” என்பதனைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் விரும்பும் சர்ச் இஞ்சின் பெயர்களை அமைக்கலாம். நீங்கள் அமைக்கும் தேடல் தளங்களுக்கு கீ போர்டில் ஷார்ட் கட் கீகளை அமைக்கும் வசதியும் இங்கு கிடைக்கும்.

உங்கள் கூகுள் ட்ரைவில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பைல்களை, குரோம் பிரவுசரின் அட்ரஸ் பாரில் இருந்தே நேரடியாகத் தேடிப் பெறலாம். மேலே சொன்ன வகையில் "Edit search engines” என்ற மெனுவினைத் தேடிப் பெறவும். இங்கு புதிய சர்ச் இஞ்சினாக "Google Drive” என அமைக்கவும். இதற்கான இணைய முகவரியாக, http://drive.google.com/?hl=en&amp; tab=bo#search/%s என டைப் செய்திடவும். பின்னர் Done என்ற பட்டனை அழுத்தினால், ட்ரைவ் உங்களுக்குக் கிடைக்கும். ஷார்ட்கட் கீயாக "gd” எனக் கூட அமைக்கலாம். இவ்வாறு அமைத்த பின்னர், அட்ரஸ் பாரில் "gd” என டைப் செய்தால், நேரடியாக கூகுள் ட்ரைவில் உங்கள் பக்கத்திற்குச் செல்வீர்கள்.

மேலே டிப்ஸ் 12ல் தந்துள்ளதனை, Gmail தளத்திற்கும் அமைக்கலாம். மேலே கூறியபடி சென்று, "Gmail,” என டைப் செய்திடவும். இதற்கான ஷார்ட் கட் கீகளாக gm என அமைக்கவும். அடுத்து இணைய முகவரியாக, https://mail.google.com/mail/ca/u/0/#search/%s என அமைக்கவும்.

உங்களுடைய புக்மார்க்குகளைத் தேடிப் பெறவும் ஒரு ஷார்ட்கட் வழி உள்ளது. இதற்கு குரோம் எக்ஸ்டன்ஷன் புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்திட வேண்டும். இலவசமாகக் கிடைக்கும் இதன் பெயர் Holmes. இதனை இன்ஸ்டால் செய்தவுடன், அட்ரஸ் பாரில் ஒரு ஆஸ்டெரிக் (*) அடையாளம் ஒன்றை டைப் செய்து, பின் டேப் ஒருமுறை தட்டி, அடுத்து நீங்கள் காணவிரும்பும் புக்மார்க் சார்ந்த சொற்கள் எதனையேனும் டைப் செய்து, அதனைப் பெறலாம்.

நீங்கள் அமைத்துள்ள குரோம் புக்மார்க் அனைத்தையும் பெற எண்ணினால், Ctrl+Shift+B என்ற கீகளை அழுத்தினால், புக்மார்க் பார் காட்டப்படும். மீண்டும் அழுத்த, பிரவுசரைப் பார்ப்பீர்கள்.

Ctrl+Shift+D கீகளை அழுத்தினால், திறந்து பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து தளங்களும் புக்மார்க்காக ஒரு தனி போல்டரில் சேவ் ஆகும். மீண்டும் அவை அனைத்தையும் திறக்க, போல்டரில் ரைட் கிளிக் செய்து, "Open all bookmarks in new window.” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

Facebook beats Microsoft and Google: முதல் இடத்தில் பேஸ்புக்

0 comments
வாட்ஸ் அப் செயலியைத் தனதாக்கிக் கொண்டதன் மூலம், அதிக எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்ட உலகின் முதல் தொலைதொடர்பு நிறுவனமாக, பேஸ்புக் இடம் பெறுகிறது. 
இந்த வகையில், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
தற்போது மெசேஜ் மற்றும் போட்டோ பகிர்ந்து கொள்ள வாட்ஸ் அப் செயலியில் வசதி உள்ளது. இனி, வாய்ஸ் பகிர்வும் இதில் தரப்படும் என பேஸ்புக் அறிவித்துள்ளது. 

வாட்ஸ் அப் செயலியிடம், உலக அளவில், 50 கோடி போன் எண்கள் உள்ளன. அத்துடன் இவை, இணையத்தில் எந்த இடத்தில் உள்ளன என்ற தகவலையும் வாட்ஸ் அப் வைத்துள்ளது.
இந்த அளவிற்கு வழக்கமான தொலைபேசிகள் தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்தாலும், வாட்ஸ் அப் இந்த தொலைபேசி பயன்பாட்டிற்கு எந்த நிறுவுதல் கட்டணமோ, செயல்படுத்துவதற்கான கட்டணமோ வாங்குவதில்லை என்பது இதன் சிறப்பு. 
இதனை மைக்ரோசாப்ட், தான் வாங்கிய ஸ்கைப் வசதியுடன் சாதித்திருக்க முடியும். கூகுள் நிறுவனமும் தன் கூகுள் வாய்ஸ் மூலம் இதனை மேற்கொண்டிருக்க முடியும். 
ஏன், பேஸ்புக் இதனை அடைய முன்பே அதற்கான வசதிகள் இருந்தன. ஆனால் இவற்றால் இயலவில்லை. என்ன காரணம்?
இவ்வாறு அதிக எண்ணிக்கையில் தொலைபேசி எண்கள்,ஒரு நிறுவனத்திடன் வரக் காரணம், ஸ்மார்ட்போன்களும் இணையமும் இணைந்ததுதான். போன்கள் போன்களாகவும், கம்ப்யூட்டர்கள் டெஸ்க்டாப்புடன் இணைந்ததாகவும், தனித்தனியே இருக்கையில், தொலை தொடர்பு விரிவாக இல்லை. 
ஸ்கைப் மற்றும் மொபைல் போன்களில் கிடைக்கும் தொலை தொடர்பு வசதிகளில் பெருத்த இடைவெளி இருந்தது. ஸ்மார்ட் போன்கள் வரத் தொடங்கிய போது, இணைய கட்டணம் (அமெரிக்கா தவிர மற்ற நாடுகளில்) மிக அதிகமாக இருந்தது. 
எனவே, இரண்டிற்கும் இடையே வேறுபாடு இருந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, இந்த வேறுபாடு களையப்பட்டு, இரண்டும் இணைவாக இணைந்து புரட்சியை ஏற்படுத்தின. இதில், தற்போது ஏற்பட்டுள்ள பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் இணைப்பு சரியான தருணத்தில் உருவாகி, பேஸ்புக் நிறுவனத்திற்கு முதல் இடத்தைத் தந்துள்ளது.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf