M.S Paint Program | எம்.எஸ். பெயிண்ட் புரோகிராம்!

0 comments
படங்களை வரைய, போட்டோ பைல்களைத் திறந்து பார்க்க, போட்டோ மற்றும்
படங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் சிஸ்டத்துடன்
தரும் பெயிண்ட் புரோகிராம் உதவுகிறது. நம் இஷ்டப்படி, கற்பனைப்படி
பெயிண்டிங், படங்களை எடிட் செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து
வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள்ளலாம்.
புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த குறிப்புகள்
தரப்படுகின்றன.

எம்.எஸ்.பெயிண்ட் என்பது இலவசமாகத் தரப்படும் கிராபிக்ஸ் புரோகிராம்
ஆகும். படங்களை எடிட் செய்திட, அளவை மாற்றிட, பெரிதாக்கிப் பார்க்க,
படத்தில் டெக்ஸ்ட் அமைக்க, சிறிய சிறிய அளவுகளில் விரும்பும் உருவத்தை
அமைக்க, அமைத்த உருவங்களில் வண்ணத்தைப் பூசிப் பார்த்து மகிழ என படம்
சம்பந்தமான எத்தனையோ வேலைகளை இதில் மேற்கொள்ளலாம். படங்களின்
பார்மட்டுகளை இதன் மூலம் மாற்றவும் முடியும். இதனை இயக்க Start menu >>
All Programs > Accessories > Paint எனச் செல்லவும். பெயிண்ட் புரோகிராம்
திறக்கப்பட்டவுடன் மேலாகவும் இடது புறமாகவும் மற்றும் கீழாகவும் பல டூல்
பார்கள் இருப்பதனைக் காணலாம்.

இவை எல்லாம் படங்களைக் கையாள நாம் பயன்படுத்தலாம். இவற்றை உங்களால்
பார்க்க முடியவில்லை என்றால் View மெனு சென்று Tool Box, Color Box
மற்றும் Status Bar அனைத்தும் டிக் செய்யப்பட்டி ருக்கிறதான் எனப்
பார்க்கவும். இல்லை என்றால் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அனைத்து டூல்
பார்களும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த டூல் பார்கள் எதற்கு என்று
தெரிய வேண்டும் என்றால் அந்த ஐகானில் மவுஸின் கர்சரை சிறிது நேரம்
வைத்தால் அதன் வேலை என்ன என்று காட்டப்படும்.

அடுத்து ஒரு புதிய படம் ஒன்றை எப்படி வரைவது எனப் பார்ப்போம். File > New
என்பதைக் கிளிக் செய்திடவும். படம் வரைவதற்கான கேன்வாஸ் அகலம் நீளம்
உங்களுக்கு போதாது என்று எண்ணுகிறீர்களா? Image > Attributes செல்லவும்.
இதில் உங்கள் கேன்வாஸின் அளவை நீட்டிக்கலாம்; சுருக்க லாம்.
கீழேயிருக்கும் கலர் பாக்ஸில் ஏதேனும் ஒரு கலரைத் தேர்ந்தெடுத்துக்
கொள்ளுங்கள். இனி நீங்கள் படம் ஒன்றை வரையலாம்.

இடது பக்கம் இருக்கும் டூல் பாக்ஸ் உங்களுக்கு படம் வரைய அனைத்து
வகைகளிலும் உதவும். எடுத்துக்காட்டாக உங்கள் படத்தில் சிறிய செவ்வகக்
கட்டம் வேண்டுமா? Rectangle tool என்னும் டூலைத் தேர்ந்தெடுத்து
கேன்வாஸில் மவுஸால் இழுத்தால் ஒரு செவ்வகக் கட்டம் கிடைக்கும். இது
நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த கலரில் கிடைக்கும்.

இனி இன்னொரு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து பின் Fill With Colour பட்டனைத்
தேர்ந்தெடுங்கள். இனி நீங்கள் ஏற்கனவே வரைந்த கட்டத்தில் எங்கு
வேண்டுமானாலும் மவுஸால் கிளிக் செய்திடுங்கள். தேர்ந்தெடுத்த வண்ணத்தால்
கட்டம் நிறைவடையும். இதே போல இடது பக்கம் உள்ள டூல் பாக்ஸில் கிடைக்கும்
கோடு, வளை கோடு, வளைவு உள்ள செவ்வகம் என அனைத்து டூல்களையும்

பரிசோதித்து பார்த்து தேவையான சாதனத்தைப் பயன்படுத்தி படம் வரையுங்கள்.
தவறாக ஏதேனும் செய்துவிட்டால் எரேசர் என்னும் அழி ரப்பர் படத்தை ஒரு முறை
கிளிக் செய்துவிட்டு நீக்க வேண்டியதை நீக்கி விடலாம். அப்படியா! என்று
ஆச்சரியப் படாதீர்கள். செய்து பாருங்கள்.

படம் வரைந்தாயிற்றா! இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் நன்றாக
வந்திருக்கிறது என்று அபிப்பிராயப்படுகிறீர்களா! அதனை மட்டும் காப்பி
செய்து இன்னொரு கேன்வாஸ் திறந்து ஒரு படமாக அமைக்கலாம்.

ஏற்கனவே உள்ள படத்தை எப்படி திருத்துவது? போட்டோக்கள், படங்கள் என
ஏற்கனவே உருவான படங்களை இந்த புரோகிராமைப் பயன்படுத்தி திருத்தலாம்.
ஒருவரின் தலைமுடியை நரைத்த முடியாக மாற்றலாம். அவருக்கு கண்ணாடி
மாட்டலாம். மீசை வைக்கலாம். இதுபோல வேடிக்கையான செயல்களையும்,

பொறுப்பான செயல்களையும் இதில் மேற்கொள்ளலாம். ஏற்கனவே
உள்ள பட பைலை இதில் திறக்க File > Open என்ற மெனு மூலம் அந்த படம் உள்ள
டைரக்டரி சென்று பட பைலின் பெயர் மீது கிளிக் செய்து இங்கு திறக்கலாம்.
ஏற்கனவே உள்ள கேன்வாஸில் ஒரு படத்தை அமைக்க Edit > Paste From என்ற மெனு
மூலம் மேற்கொள்ளலாம். படத்தின் அமைப்பை மாற்ற Image > Stretch/Skew
என்பதைப் பயன்படுத்தலாம். Image மெனுவில் Flip/Rotate பயன்படுத்தி
படங்களைச் சுழட்டலாம்.

உங்களின் விருப்பப்படி படத்தை அமைத்து விட்டீர்களா? சேவ் கட்டளை மூலம்
படத்தை சேவ் செய்திடுங்கள். சேவ் செய்திடுகையில் படத்தை எந்த பார்மட்டில்
சேவ் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து அந்த பார்மட்டைத் (.BMP,
.JPEG, அல்லது .GIF) தேர்ந்தெடுத்து சேவ் செய்திடுங்கள். பின் இதனை
பிரிண்ட் செய்திட வேண்டுமென்றால் வழக்கம்போல் பிரிண்ட் செய்திடலாம்.
அதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ மூலம் படம் எப்படி அச்சில் கிடைக்கும்
என்பதனையும் பார்த்துக் கொள்ளலாம்.

காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்

0 comments
தற்போது ஆண்கள் காதல் என்ற பெயரில் 2 பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த
ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். முதல் பெண்னை
காதலித்து அவள் அழகை, அறிவை புகழ்ந்துவிட்டு திருமணமும் செய்து கொள்வதாக
கூறுவார்கள்.

பின்னர் அதைவிட பெட்டராக நீங்கள் கருதும் மற்றொரு பெண் வந்ததும், முதலில்
காதலித்த பெண்னை விட்டுவிடுவார்கள். அடுத்தடுத்து ஆண்கள் வாழ்க்கையில் பல
பெண்களை சந்திப்பார்கள். இன்னொரு பெட்டரான பெண்ணை பார்த்தால் இரண்டாவதாக
காதலித்த பெண்னையும் விட்டு விட்டு, அந்த பெண்ணை காதலிப்பார்.

இப்படி பெட்டரைத் தேடி பெண் விட்டு பெண் பாயும் ஆண்களின் வாழ்க்கையில்
சிக்கிக்கொள்ளாமல் பெண்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும். . ஆண்களே முதலில்
உங்கள் மனதை பக்குவப்படுத்துங்கள். பின்பு உருப்படியான ஒரு பெண்ணை
தேர்ந்தெடுத்து மனைவியாக்குங்கள்.

அவர் மேலும், பெட்டர் ஆகவேண்டும் என்று நினைத்தால், அன்போடு அந்த
தகுதிகளையும் அவரிடம் உருவாக்க முயற்சி செய்யுங்கள்- அல்லது
தேர்ந்தெடுத்த பெண்ணிடம் இருக்கும் பெட்டர் குணங்களை பாராட்டி, அவரோடு
பெட்டராக வாழுங்கள்.

எல்லா குணங்களும், எல்லா சிறப்புகளும் கொண்ட பெண் உலகில் யாரும் இல்லை.
இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். உங்களுக்கு
பெட்டரான பெண்களை தேட எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை, பெட்டரான
ஆண்களைத் தேட பெண்களுக்கும் உரிமை இருக்கிறது.

நீங்கள் இப்போது பெட்டராக நினைத்துக்கொண்டிருக்கும் பெண்னை விட்டுவிட்டு
மற்றொரு பெண்னை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்
நாளையே உங்களைவிட பெட்டரான ஆண், அந்த பெண்ணுக்கு கிடைத்தால் உங்கள் நிலை
என்னவாகும் நினைத்துப்பாருங்கள்.

What we brought in | என்ன கொண்டு வந்தோம்!

0 comments
"நாம் பிறக்கும் போது என்ன கொண்டு வருகிறோம்?' என்ற கேள்விக்கு, "ஒன்றும்
கொண்டு வருவதில்லை; ஒன்றையும் எடுத்துப் போவதில்லை...' என்று ஒரு
வேதாந்தமான பதிலை சொல்லி வருகிறோம். இதில் சொல்லப்பட்டது, உடமைகளைப்
பற்றிய விஷயம். ஆனால், நாம் பிறக்கும் போது பாவ, புண்ணியம் என்ற ஒரு
மூட்டையை கொண்டு வருகிறோம். அது, பலனை கொடுக்க ஆரம்பிக்கிறது. இதை,
"சஞ்சித கர்மா' என்றனர். இது, பல ஜென்மாக்களில் செய்த பாவ,
புண்ணியங்களின் மூட்டை. மற்றவர் கண்களுக்கு தெரியாது; பிறரால்
அபகரிக்கவும் முடியாது.

இது நமக்கே நமக்கு உரிமையானது.இந்த மூட்டையிலுள்ள கர்ம பலனை, ஒரே
ஜென்மாவில் அனுபவித்து விடவும் முடியாது. மூட்டையிலிருந்து ஒவ்வொரு
ஜென்மாவிலும், கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து, பல ஜென்மாக்களுக்குப் பின்
காலியாகும்.இந்த ஜென்மாவில் அந்த சஞ்சித கர்மாவின் ஒரு பாகம், பலனை
கொடுக்கிறது. இதை, பிரார்த்த கர்மா என்றனர். "என்ன சார்... உங்க பையன்
இப்படி இருக்கிறானே?' என்று கேட்டால், "என்ன சார் செய்றது? ஏதோ
பிரார்த்தம்! இப்படி வந்திருக்கு...' என்று தலையிலடித்துக் கொள்கிறார்.

இதில் சுகம், துக்கம் எல்லாம் கலந்திருக்கும். எது வேண்டும் என்று
பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியாது; அனுபவிக்க வேண்டும்.இந்த ஜென்மத்தில்
நாம் சும்மாவா இருக்கிறோம். எத்தனையோ பாவ, புண்ணியங்களைச் செய்கிறோம்.
இதற்கு, "ஆகாமி கர்மா' என்று பெயர். இதனுடைய பலன்கள் கொஞ்சம் காலியாக
இருக்கும் சஞ்சித கர்மா என்ற சஞ்சியில் (மூட்டையில்) போய் சேர்ந்து
விடுகிறது. இதனாலேயே தான், நாம் இப்போது செய்யும் காரியத்தின் பலனை, உடனே
அனுபவிக்க முடிவதில்லை.நாம் இப்போது அனுபவிப்பது, பிரார்த்த கர்மாவின்
பலன்.

நாம் செய்யும் நல்ல காரியத்தின் பலன் சஞ்சித கர்மாவோடு
சேர்ந்திருக்கிறது. அந்த பலனை, வரும் ஜென்மங்களில் அடையலாம். நாம்
செய்யும் காரியத்துக்கும், அனுபவத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல்
தோன்றலாம். அப்படியல்ல... சஞ்சித கர்மா, பிரார்த்த கர்மா இரண்டும் வேலை
செய்யும்போது, இன்று நாம் செய்யும் கர்மாக்கள் ஒன்றும் செய்ய
முடியாது.இன்று கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்யலாம். அபிஷேக ஆராதனை
செய்யலாம். இதெல்லாம் இப்போது அனுபவிக்க வேண்டியவைகளை ஒன்றும் செய்யாது.
நல்லது, கெட்டது எது செய்தாலும், அதன் பலன், "ஸ்டாக்' செய்யப்பட்டு
விடுகிறது.

காலம் வரும் போது பலன் தரும்.பூர்வ ஜென்ம கர்மாவின் பலனாக, நம் சித்தம்
அழுக்கடைந்து விடுகிறது. கர்மத்தளைகளால் கட்டுப்பட்டிருக்கிறோம். இதை
எப்படி அறுத்து தள்ளுவது? ஞானத்தால் தான் முடியும். சித்த சுத்தி
ஏற்பட்டு ஞானத்தை அடைந்தவுடன் அந்த ஞானக் கனியானது, கர்மத்தளைகளை அறுத்து
விடுகிறது. கர்மத் தளைகள் நீங்கி, ஞானம் பிரகாசிக்க ஆரம்பித்தால்,
பிரம்மத்தைக் காணலாம். அதிலேயே லயித்து விட்டால், பிரம்மத்தை அடையலாம்.
அதை அடைந்து விட்டால் மீண்டும் பிறவியே இராது. முடியுமா என்று பாருங்கள்

Grabber Screenshot Program | கிராப்பர் – ஸ்கிரீன் ஷாட் புரோகிராம்

0 comments
தேவைப்படும் திரைக் காட்சிப் பகுதிகளை மட்டும் காப்பி செய்து, காப்பி
செய்யப்பட்ட பகுதிகளைத் தேவையான இடத்தில் ஒட்டிக் கொள்ளும் வசதியையும்,
மேலும் பல கூடுதல் வசதிகளையும் தருகிறது கிராப்பர் என்னும் ஸ்கிரீன் ஷாட்
புரோகிராம்.
திரைக் காட்சிகளை அப்படியே படமாகக் கொள்ள, நாம் பிரிண்ட் ஸ்கிரீன் கீ
அழுத்தி, பின் இமேஜ் புரோகிராம் ஒன்றைத் திறந்து அதில் பேஸ்ட்
செய்கிறோம். அதன் பின்னர், அதில் தேவைப்படும் பகுதியைத் தேர்ந்தெடுத்து,
காப்பி செய்து, மீண்டும் தனியாகப் பேஸ்ட் செய்து, பைலாக உருவாக்கு
கிறோம். பின்னர், இந்த பைலை தேவைப் படும் இன்னொரு டாகுமெண்ட் அல்லது பட
பைலில் ஒட்டி பயன்படுத்துகிறோம்.

இந்த செயல்பாட்டினை மிக எளிதாக மேற்கொள்ளும் வகையில்
நமக்குக் கிடைக் கும் புரோகிராம் கிராப்பர் (Cropper). இதனை பிரையன்
ஸ்காட் (Brian Scott) என்பவர் வடிவமைத்து வழங்கியுள்ளார்.
http://cropper. codeplex.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இந்த
புரோகிராம் கிடைக்கிறது. மிக எளிதாக இந்த தளத்திலிருந்து கிராப்பர்
புரோகிராமினை தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ளலாம். இதனை
இன்ஸ்டால் செய்கையில் blocked என்ற செய்தி கிடைத்தாலும், "run anyway"
என்பதனை அழுத்தி செட் அப் செய்திடலாம். இதில் எந்த விதமான வைரஸ் அல்லது
மால்வேர் தொகுப்பும் இல்லை எனப் பயன்படுத்தியவர்கள் கூறி உள்ளனர்.

இன்ஸ்டால் செய்து, புரோகிராம் பட்டியலிலிருந்து இதனைத் தேர்ந்தெடுத்து
கிளிக் செய்தவுடன், டாஸ்க் பாரில் இதற்கான ஐகான், சிறிய கூட்டல்
குறியுடன் பெட்டி ஒன்றுடன் காட்சி அளிக்கும். இதில் டபுள் கிளிக்
செய்தால், கிராப்பர் இயங்கத் தொடங்கும். இப்போது, கிராப்பர் ஒரு சிறிய
பாக்ஸை உங்களுக்குக் காட்டும். இதில் மவுஸின் இடது பட்டனை அழுத்தியவாறே,
பாக்ஸை இழுத்துச் செல்லலாம். அதில் தரப்பட்டி ருக்கும் பட்டன்களை
அழுத்தில், பாக்ஸை சிறியதாகவோ, பெரியதாகவோ மாற்றிக் கொள்ளலாம்.

திரையில் எந்த இடத்தில் உள்ள காட்சி அல்லது டெக்ஸ்ட் தேவையோ அங்கு
இழுத்துச் சென்று, பின்னர் என்டர் அழுத்தினால், அந்த பாக்ஸ் அமையும்
இடத்தில் காட்டப்படுவது ஸ்கிரீன் ஷாட்டாக எடுக்கப்பட்டு பைலாக
மாற்றப்பட்டு, My Documents டைரக்டரியின் கீழ் Cropper Captures என்ற
போல்டரில் சேவ் செய்யப்படும்.

இந்த அவுட்புட் வழியை வேறு வகையில் மாற்ற வேண்டும் எனில், கிராப்பர்
பாக்ஸ் உள்ளாக ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் என்பதில் கிளிக்
செய்திடவும். பின்னர் கிடைக்கும் பட்டியலில் இருந்து தேவை யானதைத்
தேர்ந்தெடுக்க வேண்டும். கீழே காட்டியுள்ளபடி ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.

BMP:

பிட்மேப் இமேஜாக ஸ்கிரீன் ஷாட் தேவை எனில், இதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
இது பழைய இமேஜ் பார்மட்.

Clipboard:

இதனைத் தேர்ந்தெடுத்தால், குறிப் பிட்ட ஸ்கிரீன் ஷாட் பகுதி கிளிப்
போர்டுக்குச் செல்லும். இதிலிருந்து அதனை நீங்கள் விரும்பும்
புரோகிராமில் பதிந்து இயக்கலாம்.

JPEG:

இது பலரும் பயன்படுத்தும் இமேஜ் பார்மட். இதன் தன்மையை 10% முதல் 100%
வரை இருக்குமாறு அமைத்துக் கொள்ளவும் இதில் ஆப்ஷன் தரப்பட்டுள்ளது.

PNG:

இந்த பார்மட் அமைப்பைத் தற்போது அனைவரும் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
ஜேபெக் பைலின் தன்மை மற்றும் பண்புகள் இதில் உள்ளன. ஜேபெக் அளவில் பரவலாக
இல்லை என்றாலும், இந்த பார்மட் டையும் அதிகமாகப் பயன்படுத்துவோர்
உள்ளனர்.

Printer:

இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தவுடன், பிரிண்டர் டயலாக் பாக்ஸ்
திறக்கப்பட்டு, கிராப்பர் காப்பி செய்த இமேஜ் அச்சடிக்கப்படும்.
இதே மெனுவின் மூலம், நாம் ஸ்கிரீன் ஷாட் போல்டரில் உள்ள மெனுவினைத்
திறந்து இயக்கலாம். கிராப்பர் விண்டோவின் வண்ணத்தினை மாற்றலாம். மேலே
காட்டப்பட்டுள்ள இதன் இணைய தளத்தில் இன்னும் நிறைய குறிப்புகள்
கிடைக்கின்றன.

Excel Tips | எக்ஸெல் டிப்ஸ்-எண் கோடு பிரிண்ட் செய்திட

0 comments
எக்ஸெல் ஒர்க் ஷீட்டினைப் பிரிண்ட் செய்திடுகையில் வரிசைகளில்
தரப்பட்டுள்ள எண்கள், எழுத்துக்கள் மற்றும் குறுக்கு நெடுக்காகச்
செல்லும் கோடுகளையும் சேர்த்து பிரிண்ட் செய்தால் நன்றாக இருக்குமே என்று
பிரியப்படுகிறீர்களா! தாராளமாக இவற்றையும் அச்சிடலாம்.

அதற்கான செட்டிங்ஸ் வழிமுறை களைப் பார்ப்போம்.
மிகப் பெரிய ஒர்க் ஷீட்டுகளில் தேர்ந் தெடுத்து பிரிண்ட் செய்கையில் இது
மிகவும் உதவியாக இருக்கும். மேலும் வரிசைகளுக்கு நாம் பெயர் கொடுக்காமல்
இருந்தாலும் இந்த ஏற்பாடு நமக்கு உதவிடும்.
இதற்கு முதலில் File மெனுவில் பேஜ் செட் அப் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Page Setup விண்டோ திறக்கப்பட்டவுடன் Sheet என்னும் டேபினைத்
தேர்ந்தெடுக்கவும்.

இதில் நடுவே உள்ள Print என்னும் பிரிவில் Gridlines மற்றும் Row and
Column Headings என வரிகள் செக்பாக்ஸுடன் இருக்கும். இதில் டிக் அடையாளம்
ஏற்படுத்தவும். இதில் எது தேவையோ அதில் மட்டும் டிக் அடையாளம்
ஏற்படுத்தலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அடுத்த முறை
பிரிண்ட் செய்திடுகையில் வரிசைகளுக்கான தலைப்பு/எழுத்து/எண் மற்றும்
கோடுகள் அச்சிடப்படும்.

Rajastan and Camels | ஒட்டகமும் ராஜஸ்தானும்

0 comments
ராஜஸ்தான் என்றதுமே, "பளிச்'சென நினைவுக்கு வருவது, பாலைவனம். பறவைகள்
கூட பறக்கத் தயங்கும் பாலை சூழலில், நம்மை பொதி சுமக்கும் ஆபத்பாந்தவன்
ஒட்டகம். அரபு நாடுகளில், தீவிர கண்காணிப்பு வளையத்தில் கொண்டு
வரப்பட்டுள்ள ஒட்டகங்கள், இந்தியாவை பொறுத்தவரை, "வேடிக்கை' பொருள்.
குறை நம்முடையதல்ல; ஆடு, மாடுகளை பார்த்துப் பழகிய நமக்கு, எங்கிருந்தோ
வரும் ஒட்டகங்கள், காட்சிப் பொருளாய் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
"நமக்கு' என குறிப்பிட்டதில், ஒரே ஒரு மாநிலம் மட்டும், "விலக்கு'
பெறுகிறது; அது தான் ராஜஸ்தான். தார் பாலைவனம் சூழ்ந்த அழகிய மாநிலம்;
ஒட்டகம் தான், அவர்களின் பெட்டகம்.

கலாசாரத்திலும், காலநிலை யிலும் மாறுபடும் இந்திய மாநிலங்களின்
சிறப்புகளில், ராஜஸ்தானை சிறப்பு பெற வைத்த பெருமை, ஒட்டகங்களுக்கு
உண்டு.
தோற்றத்தில் அருவருப்பு இருந்தாலும், ஒட்டகத்தின் செயலில் சுறுசுறுப்பு
இருப்பதால், ராஜஸ்தானின் வடமேற்கு பகுதியில், வீட்டிற்கு ஒரு ஒட்டகம்
கட்டாயம் வளர்க்கின்றனர். 2 முதல் 3 "செல்சியஸ்' வெப்பநிலை வேறுபாட்டை
தாங்கும் சக்தி மனிதனுக்கு; 34 முதல் 41 செல்சியஸ் வரை வெப்பநிலை
தாங்கும் தன்மை ஒட்டகத்திற்கு; அதனால் தான், அவை பாலைவனத்தின், சூப்பர்
ஸ்டார்.

நம்மூரில், உழவுக்கு உதவும் மாடுகளுக்கு, பொங்கலிட்டு வழிபடுவது போல்,
ராஜஸ்தானில் ஒட்டகங்களுக்கு வேறு விதமான சிறப்பு செய்கின்றனர். "ஒட்டக
மேளா' எனப்படும் அத்திருவிழா, ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுக்க
நடக்கிறது. ஜோத்பூர் - ஜெய்சால்மர் வழியில், பொக்ரான் அருகே, அகோளை
கிராமத்தில் நடக்கும் ஒட்டக மேளாவில், உரிமையாளர்கள் பலர்
பங்கேற்கின்றனர்.

கண்ணுக்கு எட்டிய தூரத்திற்கு, ஒட்டகங்களாய் காட்சி தரும் அங்கு,
"யாருடைய ஒட்டகம் சிறந்தது' என்ற போட்டி நடக்கிறது. அதற்காக போட்டி
போட்டு ஒட்டகங்களுக்கு ஒப்பனை செய்கின்றனர். பார்வையாளர்கள்
விரும்பினால், ஒட்டகங்களை விலைக்கு வாங்கிச் செல்லலாம். இருபதாயிரம்
ரூபாயில் தொடங்கி, அறுபதாயிரம் ரூபாய் வரை, தோற்றத்திற்கு ஏற்ப, விலை
நிர்ணயிக்கின்றனர்.
இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், அங்கு ஒட்டகங்களை இறைச்சிக்கு
பயன்படுத்துவது இல்லை என்பதால், வாங்குவோரும், விற்போரும், விவசாய
நோக்கில் தான், வாங்குகின்றனர். பல்லை பிடித்து பார்ப்பது, ஒட்டக சவாரி
செய்வது போன்ற சோதனைகளுக்கு பிறகே, வாங்கும் விவசாயி திருப்தி அடைகிறார்.

இடைத்தரகர்களுக்கும், மோசடி வேலைகளுக்கும் இந்த மேளாவில் இடமில்லை.
ஒட்டகத்துடன் நின்று விடாமல், அவற்றை சார்ந்த பிற பொருட்களின்
விற்பனையும், தனித்தனியே நடக்கிறது. இதனால், அகோளை கிராமம், விவசாயிகளின்
கூட்டத்தால் மார்ச் மாதத்தில் நகரமாய் மாறி விடுகிறது.

மேளாவில் பங்கேற்க வந்த ஜெய்சால்மர் தாலுகா விவசாயி, ஸ்ரீபதி கூறும்போது,
"சிறுவயதில், என் அப்பாவுடன், மேளாவில் பங்கேற்றிருக்கிறேன். பல நூறு
கி.மீ., தூரத்தில் இப்பகுதி இருந்தாலும், மேளாவில் பங்கேற்பதை, என் தந்தை
விடாமல் கடைபிடித்தார்.

"அவருக்கு பின், நானும் அதை தொடர்கிறேன். சிலர், ஒட்டகங்களை விற்க
வருவர்; சிலர், வாங்க வருவர்; சிலர், பராமரிப்பை அறிய வருவர். மேளா
தொடங்கிய, 15 நாட்களில், என் மூன்று ஒட்டகங்களும் விற்பனையாகி விட்டன.
எஞ்சியுள்ள ஒரு ஒட்டகமும் விரைவில் விற்றுவிடும்; இருப்பினும், மாதம்
முழுக்க, இங்கு இருந்து, நடப்பதை பார்த்துவிட்டு தான், ஊர்
திரும்புவேன்...' என, மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வாழ்க்கையில் பெண்களின் பல்வேறு நிலைகள்

0 comments
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வது
இயல்பு. இதற்கு யாரும் மறுப்பு கூற முடியாது. ஏனெனில் பெண்களிடமிருந்து
ஆண்கள் நிறைய கற்றுக் கொள்கின்றனர். உதாரணமாக, அம்மாவையே எடுத்துக்
கொள்ளலாமே! அம்மா என்றால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

எந்த ஒரு ஆணும் தன் அம்மாவைப் போன்று யாரும் வர முடியாது.
அம்மாவிடமிருந்து தான் இதைக் கற்றுக் கொண்டேன் என்று பல ஆண்கள்
கூறுவார்கள். இவ்வாறு அம்மா என்று சொல்லும் ஒரு நபர் யார் என்று
பார்த்தால், அது பெண் தான். மேலும் அம்மாவிடமிருந்து மட்டும் கற்றுக்
கொள்வதில்லை, அம்மாவைப் போன்று வேறு பல உறவுமுறைகளில் உள்ள
பெண்களிடமிருந்தும் பலவற்றை ஆண்கள் கற்றுக் கொள்கின்றனர்.

உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும், அம்மா பையன் தான். ஏனெனில் அம்மாவின் மூலம்
உலகை பார்க்கும் ஆண், அந்த அம்மாவிடம் இருந்து தான் அனைத்தையும் கற்றுக்
கொள்கிறான். சொல்லப்போனால், ஆண்களின் ஹீரோயின் அவர்கள் அம்மா தான்.

அம்மாவிற்கு அடுத்த படியாக இருக்கும் ஒரு மறுக்க மற்றும் மறக்க முடியாத
உறவுமுறை தான் மனைவி. மனைவி என்ன தான் சண்டை போட்டாலும், ஏதாவது ஒன்று
என்றால், அடுத்த நிமிடமே வந்து எதையும் மனதில் கொள்ளாமல், அம்மாவிற்கு
அடுத்து அனுசரித்து நடப்பவள் தான் மனைவி. எனவே இத்தகைய மனைவியை உயிர்
பிரிந்தாலும், எந்த ஒரு ஆணும் மறக்கமாட்டார்கள்.

அம்மாவின் காதலுக்கு கண்ணே இல்லை என்பதை மாமியாரின் மூலம் ஒவ்வொருவரும்
கற்றுக் கொள்வோம். எனவே இந்த உறவுமுறையிலும் ஒரு நல்ல அம்மாவைக் காணலாம்.

பாட்டிக்கு பேரன்/பேத்தி என்றால் அளவு கடந்த பிரியம் இருக்கும். இந்த
பாட்டி உறவு முறையும் மிகவும் சிறப்பான மறக்க முடியாத ஒன்று.

அண்ணானாக இருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் நிச்சயம் தங்கை என்றால் மிகவும்
பிடிக்கும். ஆண்கள் எவ்வளவு தான் பொறுக்கியாக இருந்தாலும், தங்கையை
மிகவும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள். குறிப்பாக தங்கையாக
இருக்கும் பெண், எவ்வளவு தான் அண்ணனுடன் சண்டை போட்டாலும், எந்த ஒரு
விஷயத்திலும் தனது அண்ணனை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். எனவே இவ்வாறு
விட்டுக் கொடுக்காத மனப்பான்மையை ஒவ்வொரு ஆணும், தங்கையிடமிருந்து
கற்றுக் கொள்கின்றனர்.

அம்பாளின் அனுக்கிரகம் வேண்டுமா?

0 comments
நம் நாடு. ஒவ்வொரு பெண்மணியையும் அம்பாள், பரமேஸ்வரியாகவே பாவித்து
மரியாதை செய்தனர். அந்தக் கால பெண்களின் தியாகமும், மகத்தானதாக இருந்தது.
இப்படிப்பட்ட பெண்மணிகளை பரமேஸ்வரியாக பாவித்து, சுவாசினி பூஜை செய்வதைப்
பார்த்திருக்கலாம். இவர்களுக்கு புது வஸ்திரம் அளித்து, புஷ்பம், மங்கல
திரவியங்கள் கொடுத்து, பலகையில் உட்கார வைத்து, பூஜை செய்து நமஸ்காரம்
செய்வர். இதில், வயது கணக்கில்லை.

சுவாசினி என்றால் நமஸ்காரம் செய்யலாம், அவர்களும் அட்சதை போட்டு
ஆசீர்வதிக்கலாம். பல இடங்களில் இந்த சுவாசினி பூஜையை ஏராளமான
பொருட்செலவில் வசதி படைத்தவர்கள் நடத்துகின்றனர். இதில், சுவாசினியாக
உட்காருவதும் அல்லது தரிசனம் செய்வதும் கூட மகத்தான புண்ணியம்.
ஸ்ரீவித்யா பாசனையில் இந்த சுவாசினி பூஜைக்கு, விஸ்தாரமாக விளக்கம்
சொல்லப்பட்டுள்ளது. ஏதோ பொம்பளைதானே என்று அலட்சியமாகப் பேசக் கூடாது.
"ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே...' என்று ஒரு வாக்கியம் உண்டு.
இதற்கு, பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்றும், அழிக்கவும் முடியும்
என்றும் விளக்கம் கூறுவர். சீதையால் ராவணனும், திரவுபதியால் கவுரவர்களும்
அழிந்தனர் என்று உதாரணம் சொல்வர். அது, அவ்வளவு பொருத்தமானதல்ல.

அம்பிகை, பராசக்தி பெண். அவள் தான் உலக மக்களை ஆக்கவும், காக்கவும்,
அழிக்கவும் வல்லமை படைத்தவள். அவள் இந்த மூன்று தொழில்களையும் திறம்பட
நடத்தி வருகிறாள். அதனால், ஆவதும், அழிவதும் பெண்ணாலே என்பது இங்கு
பொருந்தும். இதற்கான பல கதைகள் புராணங்களில் உள்ளன.

அம்பிகையையே சுவாசினியாகச் சொல்லப்பட்டுள்ளது. அதுவுமின்றி அம்பாளின்
நெற்றியிலே குங்கும திலகம் பிரகாசிக்கிறதாம்; வாக்கிலே தாம்பூலம்
கமழுகிறதாம். சிவானந்த லஹரி ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் இதைப் பற்றி
ஸ்லோகம் இயற்றியுள்ளார்.

பெண்கள் நெற்றியில், மஞ்சள் பூசி குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும் என்று
சொல்லப்படுகிறது. கைகளில் கண்ணாடி வளையலும், கால்களில் சலங்கையுடன் கூடிய
கொலுசும் அணிய வேண்டுமாம். கையில் உள்ள கண்ணாடி வளையல் சப்தமும்,
கால்களில் உள்ள கொலுசின் சலங்கை சப்தமும் கேட்டு, அம்பாள் மகிழ்ந்து,
கூடவே இருப்பாளாம்.

அம்பாளுக்கு எது பிரியமோ அதைச் செய்வது நல்லது. இப்படியெல்லாம் அலங்காரம்
செய்து, அம்பாளாகவே விளங்கலாமே! பெண்கள் தலையில் நேர் வகிடு எடுத்துக்
கொள்ள வேண்டும் என்று கூட சொல்லப்படுகிறது. அதற்கான காரணங்களையும்
சாஸ்திரம் சொல்கிறது.
பெண்கள் தினமும் தாம்பூலம் தரித்துக் கொள்ள வேண்டும். வாய் நிறைய
வெற்றிலை போட்டு, வாய் கோவைப் பழம் போல் சிவப்பாக இருக்க வேண்டும் என்று
கூட சொல்லப்பட்டுள்ளது. அப்போ, அம்பாளின் ஆசையை நிறைவேற்றி, பூலோக
அம்பாளாகவே மாறி விட்டால், நம்மைப் பார்த்து மகிழ்ந்து, நமக்கு வேண்டிய
அனுக்கிரகம் செய்யமாட்டாளா என்ன

2012ல் மொபைல் உலகம்

0 comments
சென்ற ஆண்டில் பல வியத்தகு மாற்றங்கள், மொபைல் உலகில் ஏற்பட்டன.
ஆண்ட்ராய்ட் இயக்கமும் சாம்சங் நிறுவனமும் மக்களிடையே பிரபலமாயின.
ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையும், அதற்கான சாதனங்களைத் தயாரித்த கூட்டாளியான
சாம்சங் நிறுவனமும், ஆப்பிள் மற்றும் ஐபோனை, அடுத்த நிலைக்குத் தள்ளின.
மொபைல் உலகில், மைக்ரோசாப்ட்,நோக்கியா மற்றும் ரிசர்ச் இன் மோஷன் ஆகிய
நிறுவனங்கள் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் உறுதியான விற்பனைச்
சந்தையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த இயலவில்லை. இந்த நிகழ்வுகளுக்கான
கூடுதல் தகவல்களை இங்கு காணலாம்.


1. ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தை முழுமையாக வென்ற ஆண்ட்ராய்ட்:

ஸ்மார்ட் போன் இயக்கத்தில், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிலையான இடம்
பிடிக்கும் என்ற சந்தேகம், 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தது. இந்த
சந்தேகங்களை உடைத்தெறிந்து, ஆண்ட்ராய்ட் தன்னை முதல் இடத்தில்
மட்டுமில்லாமல், பெரும்பான்மையான ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இடம்
பிடித்தது. 2012 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், உலக அளவில் 75%
ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டமே இடம் பெற்றிருந்தது.
அமெரிக்காவில் ஐபோன் பயன்பாடு பெரிய அளவில் இருந்தாலும், உலக நாடுகளை
மொத்தமாகப் பார்க்கையில், ஐ.ஓ.எஸ். சிஸ்டம் கொண்ட போன்கள் 14.9 சதவிகிதமே
இருந்தன.
2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து, மிக வேகமாக
முன்னேறி, ஆண்ட்ராய்ட் முதல் இடத்தைப் பிடித்தது. பன்னாட்டளவில்,
ஆண்ட்ராய்ட் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் அதிகம் உள்ளது சீனாவில்தான். 78
கோடியே 60 லட்சம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் இங்கு பயன்படுத்தப்
படுகின்றன. அமெரிக்காவில் மட்டும்தான் ஆப்பிள் இதற்குச் சரியான போட்டியை
இன்னும் தந்து கொண்டுள்ளது.

2. விண்டோஸ் மொபைல்:

மைக்ரோசாப்ட், மொபைல் உலகிலும் தன் பங்கினைப் பெரிய அளவில் பெற்றிட
திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இந்தப் பிரிவில் இதுவரை பெற முடியாமல்
போனதை, விண்டோஸ் போன் 8 பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறது.
விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நவம்பரில் வெளியானது.
கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களுக்கான விண்டோஸ் 8
வெளியாகி சில நாட்களில் இது வெளியானது. என்றாவது ஒரு நாள், மொபைல்
போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டமும்
இணைந்த சிஸ்டமாக உருவாகும். எச்.டி.சி., நோக்கியா, சாம்சங் ஆகியவை
விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் மொபைல் போன்களை உருவாக்கித்
தருவதால், ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் மூன்றாவது இடத்தினை மைக்ரோசாப்ட்
விரைவில் பிடிக்க இயலும்.

3. நோக்கியாவைத் தள்ளிய சாம்சங்:

ஏற்கனவே ஸ்மார்ட் போன் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்த சாம்சங்,
தற்போது மொபைல் போன் விற்பனையிலும் நோக்கியாவை இரண்டாவது இடத்திற்கு
ஒதுக்கி, முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏறத்தாழ 14 ஆண்டுகள், இந்த
வகையில் முதல் இடத்தை நோக்கியா கொண்டிருந்தது. இப்போது உலக அளவில்
சாம்சங் நிறுவன போன்கள் அதிகம் விற்பனையாகிறது.

பெண்கள் கில்லாடிகள்

0 comments
ஆண்கள் பொய் சொல்வதை சில அடையாளங்கள் மூலம் பெண்கள் எளிதாக
கண்டுபிடித்துவிடலாம். பொய் சொல்லும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை.
பெண்களை கவர ஆண்கள் நிறைய பொய் சொல்வார்கள். ஆண்கள் பொய் சொல்வதை
அவர்களின் முகத்தை வைத்தே பெண்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

பொய் சொல்பவர் தனது முகத்தைத் தொடுவார். ரத்தம் மூக்கை நோக்கிப் பாயும்
என்பதால், மூக்கு பெரிதாகும். அதை அடிக்கடி தொட ஆரம்பிப்பார். `உண்மையைச்
சொல்லணும்னா…' என்று ஒருவர் ஆரம்பித்தால், பொய் சொல்லப் போகிறார் என்று
அர்த்தம்.

ஆண்களுடன் ஒப்பிடும்போது பொய்யைக் கண்டுபிடிப்பதில் பெண்கள் கில்லாடிகள்.
(பெண்கள்தானே தமது குழந்தைகளின் சமிக்ஞைகளை சரியாக அறிகிறார்கள்? எனவே
தம் மனைவியிடம் பொய் சொல்ல முனையும் ஆண்கள், அந்த வேலையை போனில்
வைத்துக்கொள்வது நல்லது!) புதியவர் ஒருவரைப் பற்றிய `பர்ஸ்ட் இம்ப்ரஷன்'
4 நிமிடங்களில் உருவாகிவிடுகிறது.

பல வேளைகளில், பத்தே நொடிகளில் அந்த முடிவுக்கு வந்துவிட முடியும். எனவே
அதற்குள் மற்றவர்களைக் கவர்ந்துவிட வேண்டும். பொய் சொல்வதால் பல
பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. அதிக பொய் சொல்வதில் ஆண்கள் முதலிடத்தில்
உள்ளனர். பொய் சொல்லி பல பிரச்சனை ஏற்படுவதை விட உண்மையை சொல்லி பிரச்சனை
வராமல் காப்பதே நல்லது.

Mobile Virus will increase | மொபைல் போன் வைரஸ் அதிகரிக்கும்

0 comments
மொபைல் போன் பாதுகாப்பு பிரிவில் இயங்கும் ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம்,
நடப்பு 2013 ஆம் ஆண்டில், மொபைல் போன்களில் வைரஸ்கள் அதிக அளவில் பரவத்
தொடங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆண்ட்டி வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி, அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை
உலக அளவில் விற்பனை செய்து வரும் நிறுவனங்களில், மெக் அபி மற்றும்
நார்டன் நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் ட்ரெண்ட் மைக்ரோ இயங்குகிறது.
இந்நிறுவனம் அண்மையில் விடுத்த அறிக்கையில், ஸ்மார்ட் போன்கள், குறிப்பாக
ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் தற்போது இந்த
விஷயத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு இணையாக இயங்கு கின்றன.

எனவே இவற்றில் பரவும் வகையில் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளை
உருவாக்குவது ஹேக்கர்களுக்கு மிக எளிதாக உள்ளது. சென்ற ஆண்டில் ஜூலை
முதல் செப்டம்பர் மாத காலத்தில் மட்டும், மால்வேர் புரோகிராம்களின்
எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகியுள்ளது என ட்ரெண்ட் மைக்ரோ
தெரிவித்துள்ளது. ஏற்கனவே 30,000 என்ற எண்ணிக்கையில் இருந்த இவை, இக்
காலத்தில் 1,75,000 என்றளவில் உயர்ந்தன. இவை மிகவும் ஆபத்தானவையாகவும்
உலவி வருகின்றன.

தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புதல், தொடர்ந்து எரிச்சலூட்டும்
வகையில் விளம்பரங்களைக் காட்டுதல், ஸ்பேம் எனக் கண்டறிந்து விலக்க
முடியாத வகையில், குப்பை தகவல்களைத் தருதல் என இவற்றின் செயல்பாடுகள்
உள்ளன. மொபைல் வழி பேங்க் அக்கவுண்ட் செயல்பாடுகளை மேற் கொள்வது
தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே, 2014 ஆம் ஆண்டில், இவற்றில் இடை புகுந்து நிதி மாற்றம் குறித்த
தகவல்களைத் திருடி, பயனாளர்களுக்கு நிதி இழப்பு வரை மேற்கொள்ளும்
வைரஸ்கள் நிறைய வெளியாகலாம் எனவும் ட்ரெண்ட் மைக்ரோ எச்சரித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 3,50,000 வைரஸ்கள் மற்றும் மால்வேர்
புரோகிராம்கள் இருந்தன. 2013ல் இவை மூன்று மடங்காகப் பெருகும் எனவும்
அறியப் பட்டுள்ளது.

எப்படி விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் களில்
இடம் பிடித்ததோ, அதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டம், மொபைல் போன் களில் இடம்
பிடிக்கும். எனவே, மால்வேர் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், இவற்றை
தங்கள் இலக்காகக் கொண்டு இயங்கி வருகின்றனர். மேலும், ஆண்ட்ராய்ட்
சிஸ்டம் வடிவமைப்பின் குறியீடுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதுவும்
இதில் அவர்களுக்குச் சாதகமான அடித்தளத்தைக் கொடுக்கிறது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பினைத்
தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அப்ளிகேஷன்களை இந்த வகையில் ஸ்கேன்
செய்திட புதிய வழிகளை Bouncer என்ற முறையில் கூகுள் கொண்டு வந்தது.
தற்போது அதிகம் புழங்கும் அண்மைக் காலத்திய சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஜெல்லி
பீன் பதிப்பில் இது வழங்கப்பட்டது.
புதிய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்கையில் காட்டப்படும் எச்சரிக்கை
செய்தி பெட்டியினையும், அதில் உள்ள தகவல்களையும் தெளிவாகக் காட்டும்
வகையில் கூகுள் தந்து வருகிறது.

அனுமதி கேட்கும் வழிகள் எந்த மறைமுக செய்தியும் இல்லாமல்
அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்பவர்,
ஒருமுறைக்கு பல முறை சிந்தித்த பிறகே, அதனை இன்ஸ்டால் செய்திடுவார்.
ஆனால், வைரஸ் மற்றும் மால்வேர் வடிவமைப்பவர்கள் இதற்கெல்லாம்
தயங்குபவர்களாக இருக்கப் போவதில்லை. எனவே, நாம் தான் அதிகக்
கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என ட்ரெண்ட் மைக்ரோ
கேட்டுக்கொண்டுள்ளது.

இல்லறம் இனிக்க

0 comments
பிறந்தது முதல் பெற்றோரின் அரவணைப்பிலும் அன்பிலும் கட்டுண்டு
இருக்கிறோம் என்பது சாதாரண விஷயம். அந்த அன்பு மற்றவர்களுக்கு
பகிரப்படும் போதோ, நம்மீதான கரிசனை குறையும் போதோ, நமது மனது
சலனப்பட்டதில்லை,குறை தேடியதுமில்லை, அதையும் மீறி....
நடக்கின்ற தப்புகளைத் தேடி சரிபண்ண முயற்சித்திருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.

இது யதார்த்தம்.. ஆனால் இடையில் வந்து ஒட்டிக்கொண்ட இந்த கணவன் மனைவி
உறவை இப்படி யோசிக்கிறார்களா என்றால்… இல்லவே இல்லை.

நம்பிக்கையும் பாதுகாப்பும் நிறைந்த இந்த உறவுக்குத்தான் எத்தனை வலிமை
பாருங்கள்….அன்பை நாடி ஆருதலை நாடி நாம் அவர்களிடத்தில் சரணடைந்த
பின்…எங்களது எதிர்பார்ப்புகள் எப்படியெல்லாம் தலை தூக்கிவிடுகிறதென்று
பார்த்தீர்களா.

ஆனாலும் பாருங்கள் இந்த உறவை தக்கவைத்துக்கொள்ள எவ்வளவெல்லாம்
போராடவேணடியிருக்கிறது….இதை யாராலும் மறுக்க முடியாது… அந்தப்
போராட்டமும் அலாதியான சுகத்தைத்தான் தருகிறது.

நமது ஆற்றல்களையும் ஆளுமைகளையும் வளர்த்துவிடுகிறது. இல்லறம் இனிக்க
கணவரின் குணம் அறிந்து மனைவி நடந்து கொள்ள வேண்டும்.

அலுவலகத்தில் இருந்து கணவர் சோர்வுடன் வரும் போது அன்று நடந்த
பிரச்சனைகளை பற்றி சொல்லி அவரை கோபப்படுத்தாதீர்கள்.

கணவர் கோபப்படும் போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். விட்டு
கொடுத்து போவதில் எந்த தவறும் இல்லை. குடும்பம் அமைதியாகவும்,
சந்தோஷமாகவும் இருக்க பெண்கள் அமைதியாகவும் சூழ்நிலையை புரிந்து கொண்டும்
நடந்து கொள்ள வேண்டும்

Relatives and relations சொந்தங்கள் & பந்தங்கள்

0 comments
கடந்து வந்த காலத்தை இப்போது திரும்பி பார்த்தால் எதையெதை
தொலைத்திருக்கிறோம் என்பது புலப்படும். சில தொலைப்புகள் ஈடுகட்ட
முடியாதவை. சிலவற்றையோ இப்போது நினைத்தாலும் முடிந்தவரை ஒட்ட வைத்துக்
கொள்ளலாம். அப்படி மீண்டும் இணைத்துக் கொள்ளக்கூடிய இடத்தில் இருப்பது,
உறவுகள். ஆமாம், நாம் விட்டுச் சென்ற உறவுகள்.

கண்டு கொள்ளாமல் போன உறவுகள். உதாசீனப்படுத்தி விட்டுப்போன உறவுகள்.
இன்றைக்கும் பல கிராமங்களில் பார்த்தால் நம்மை பிரமிப்புக்குள்ளாக்குவது
கட்டுக்கோப்பான கூட்டுக் குடும்பங்கள் தான். தாத்தா இருக்கும்வரை அவர்
வாய்ச்சொல்லே அந்த குடும்பங்களுக்கு வேதம். அவர் குரல் உயரும்போது
மற்றவர்கள் காதுகள் தான் திறந்திருக்குமே தவிர, வாய்கள் மவுனம்
பூண்டிருக்கும்.

இப்படிப்பட்ட குடும்பங்கள் வாழ்ந்த காலங்கள் இப்போது அருகி வருவது தான்
வேதனை. தங்கள் குடும்பங்களை விட்டு அவர்கள் வாரிசுகள் எப்போது வேலை
நிமித்தம் இடம் பெயர்ந்தார்களோ, அப்போது முடிவுக்கு வரத்தொடங்கியது
கூட்டுக் குடும்பங்களின் பாரம்பரியம். இப்படி இடம் பெயர்ந்து போனவர்கள்
தனித்து வாழத்தொடங்கிய கால கட்டத்தில் பாசத்தில் உயிரோடு உருகினார்கள்.

அந்த அளவுக்கு பந்தபாசம் அவர்களை பிணைத்திருந்தது. உறவுகளோடு
இணைத்திருந்தது. தொலைத்தொடர்பு வசதிகள் இன்றைக்கு இருக்கிற மாதிரி
அந்நாட்களில் இல்லை. வெறும் கடிதங்கள் மட்டுமே அவர்களுக்குள் இணைப்புப்
பாலமாய் இருந்தது. வலுவுள்ள அந்த சொந்தங்கள் இன்றைக்கு காணாதே
போய்விட்டது என்பது தான் வேதனை.

இத்தனைக்கும் விரல் நுனியில் எண்களை அழுத்தினால் அடுத்த சில
மணித்துளிகளில் உலகின் எந்த மூலையில் இருப்பவரை வேண்டுமானாலும் தொடர்பு
கொண்டு பேச முடியும். அந்த அளவுக்கு தொழில் நுட்பம் செய்து
வைத்திருக்கும் மாயம், கைவசம் செல்போன்கள் வடிவில், லேப்டாப் வகையில்,
ஈமெயில்கள் வடிவில் இருந்தும், உறவுகள் தனித்தீவு போலாகி விட்டதன்
பின்னணி தான் என்ன?
தனியாக வாழத் தொடங்கிய மனிதன், காலப்போக்கில் தன்னைப் போல் தன் உறவு
வட்டங்கள் மீதான ஈர்ப்பையும் சுருக்கிக் கொண்டு விட்டது தான் காரணம்.
தன்னைப் பற்றி மட்டுமே அவன் எப்போது யோசிக்கத் தொடங்கினானோ அப்போதில்
இருந்தே அறுபடத் தொடங்கி விட்டன, உறவுச் சங்கிலிகள்.

இதில் வேதனை என்னவென்றால், எப்பேர்ப்பட்ட உறவுகளையெல்லாம் இன்றைக்கு நாம்
இழந்திருக்கிறோம் என்பதை அவன் சிந்தித்து பார்க்கவும் நேரம் இல்லாமல்
ஓடிக்கொண்டேயிருக்கிறான் என்பது தான். இன்னொரு கோணத்தில் உறவுகள்
தொடர்கதையாக அல்லாமல் சிறுகதையாக முடிந்து போவதற்கு காரணம்,
ஏற்றத்தாழ்வுகள். சாதாரண நிலையில் இருந்த உறவினர் திடுமென தொழில்
துறையில் வளர்ந்து சில ஆண்டுகளில் கோடீசுவரனாகி இருப்பார்.

ஆனால் ஊரில் உள்ள உறவுகள் மட்டும் அப்படியே இருப்பார்கள். விவசாயம்
பொய்த்தால் இவர்கள் கடன் வாங்கித்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய
நிலை. இப்படி அனுதினமும் போராட்ட வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள்
எப்போதாவது தங்கள் கோடீசுவர உறவினரை பார்க்கப் போனால் பெரும்பாலும்
அவர்களுக்கு அவமானம் தான் மிஞ்சுகிறது.கேட்டில் நிற்கிற காவலாளி இவர்கள்
தோற்றம் பார்த்து உள்ளேஅனுமதிக்கவே மறுக்கிறார்.
ஒருவழியாக போய் சந்தித்து விட்டாலும் கூட பெரிதாக ஒன்றும் நடந்து
விடுவதில்லை. உபசரிப்பு முடிந்து குடும்பம் பற்றி பேச்சு வந்தால் 'ஒரு
பொண்ணு மட்டும் கல்யாணத்துக்கு நிக்கிறா' என்று இவர்கள் சொல்லப் போக,
அப்போதே கோடீசுவர உறவினர் குடும்பம் 'கப்சிப்'பாகி விடுகிறது. தொடர்ந்து
அதுபற்றி பேசினால் கல்யாணத்துக்கு உதவி ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று
பயந்து அத்துடன் நிறுத்திக் கொண்டு விடுவார்கள்.

அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. உறவினர் குடும்பத்தில் ஒருவருக்கு
உதவி விட்டால் மற்ற உறவினர்களும் அவர்களை நோக்கி படையெடுத்து
விடுவார்கள். இதில் கொடுமை, ஓரளவு வசதியான உறவினர்களும் கிடைத்த வரை
லாபம் என்ற கண்ணோட்டத்தில் தங்கள் பரிவாரங்களுடன் போய் வசூல் செய்து
விடுவார்கள்.

தங்கள் தேவைகளை முடிந்தவரை தாங்களே சரி செய்து கொள்ள முடியும் என்ற
நிலையில் இருப்பவர்களும் 'சும்மா கிடைப்பதை ஏன் விட வேண்டும்' என்ற
எண்ணத்தில் இப்படி வலியப்போய் உதவி பெற்று, இருக்கிற உறவுகளை கெடுத்துக்
கொள்கிறார்கள். இது நல்லதல்ல...நாம் கட்டிக் காக்க வேண்டிய உறவை நம்
அதிகபட்ச ஆசைக்கு பலியாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை இவர்களுக்கு யார்
எடுத்துச் சொல்வது?

தொலைதூரத்தில் உள்ள உறவுகள் பலவும் தொடர்பில்லாமல் துவண்டு போய்க்
கிடப்பதும் நடக்கிறது. தென் மாவட்ட மக்கள் இதில் விதிவிலக்காக
இருக்கிறார்கள். தொலை நகரங்களில் நெல் லிக்காய் மூட்டை போல் சிதறிக்
கிடக்கிற இந்த உறவினர்கள் பலரும் தங்கள் ஊரில் திருவிழா, குடும்ப
விசேஷங்கள் என்றால் உடனே இறக்கை கட்டியாவது ஊர் போய் சேர்ந்து
விடுவார்கள்.

ஊரில் இருக்கிற கொஞ்ச நாட்களில் உறவுக் குடும்பங்களோடு தடைபட்டுப்
போயிருக்கும் உறவுகளை இப்படி அவ்வப் போது புதுப்பித்துக் கொள்கிறார்கள்.
இந்த மாதிரியான பிணைப்புகள் கூட ஒரு தலை முறையோடு முடிந்து விடுகிறது
என்பது உறவு நேசர்களுக்கு கேட்க கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும்.
அவர்கள் பிள்ளைகளின் கல்யாணம் வரை நீடிக்கும் இந்த உறவுகள், அப்புறமாய்
அவர்கள் பிள்ளைகள் மூலம் கிடைக்கும் புதிய சொந்தத்துக்குள் அடியெடுத்து
வைக்கும்போது அதுவரை கட்டிக்காத்த உறவுகள் இரண்டாம் பட்சமாகி விடுகிறது.
திருமண மான மகளை ஊர்த்திருவிழாவுக்கு அழைத்தால், 'அடுத்த மாசம் என்
வீட்டுக்காரர் ஊரில் திருவிழா. அங்கே போக வேண்டியதிருக்குமே' என்று
தயங்குவாள்.

இந்த தயக்கம் இனி அவளுக்கென்று புதிய வாழ்க்கை, புதிய சொந்தம்... அதை
நோக்கி அவள் போய்க்கொண்டிருக்கிறாள் என்பதையே காட்டுகிறது. நகர
வாழ்க்கையில் இந்த உறவுகள் இன்னும் தலைகீழ். இந்த மக்கள் பலரும்
கிடைக்கிற நட்புக்குள் இருக்கிற கொஞ்ச உறவுக்குள் தங்களை சுருக்கிக்
கொள்கிறார்கள்.

கிராமத்தில் இருந்து சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று எண்ணத்தில் ஒரு
பெரியவர் தனது நகர உறவினரின் இல்லம் தேடி வந்தார். படித்து ஊரில்
ஆசிரியராக வேலை பார்க்கும் தனது மகனுக்கு அவர்கள் வீட்டுப் பெண்ணைக்
கேட்டார். இத்தனைக்கும் அவர் நல்ல வசதியானவர். நகரக் குடும்பமோ நடுத்தர
வசதி கொண்டது தான்.

என்றாலும் நகரம் கைவிரித்து விட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம்
இன்னும் அபத்தமானது. 'நகர வாழ்க்கைக்கு எங்கள் பெண் பழகி விட்டாள்.
அவளால் கட்டுப்பெட்டியாய் கிராமத்தில் வாழ முடியாது. வேணும்னா வேலையை
சிட்டி பக்கமா மாத்த முடிஞ்சா அப்ப வாங்களேன். பேசுவோம்...' சுக வாசியாய்
யோசிக்கத் தொடங்கி விட்ட இவர்களைப் போன்றவர்கள் தான் விட்டுப்போன உறவுகளை
ஒரேயடியாய் கெட்டுப்போன உறவுகளாக ஆக்குகிறவர்கள்.

எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்காத சொந்தங்கள் மட்டுமே கேட்காமலே வந்து
உதவும். கவ லைப்படும் நேரத்தில் அள்ளியணைத்து ஆறுதல் தரும்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு மட்டுமே இப்படி கேட்காமலே ஓடிவந்து உதவும்.
இந்த சொந்தங்களுக்குள் ஒருபோதும் பண பாகுபாடோ, மன வேறு பாடோ
இருப்பதில்லை. இந்த மாதிரியான உறவுகள் இருக்கிறவரை எத்தனை தூரத்தில்
இருந்தாலும் நீடித்து நிலைத்திருக்கும் பந்தங்கள் என்பது மட்டும் உறுதி.

Listening and the Ear | பாட்டு கேட்க மட்டுமா காதுகள்?

0 comments
காதுகள் இரண்டும் எதற்காக?'

என்று இன்றைய இளைய தலைமுறையிடம் கேட்டால் உடனே பதில் சொல்லிவிடுவார்கள்,
'இயர் போன்' மாட்டிக்கொள்வதற்காக என்று!

காதுகளில் அதை மாட்டிக்கொண்டே பாட்டு கேட்கிறார்கள்... பேசுகிறார்கள்..!
நாள் முழுக்க எங்கேயும், எப்போதும் அதோடுதான் அலைகிறார்கள்.


இளைஞர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதினரும், வயதானவர்களும் கூட இந்த
பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அவர்கள் நம்முடைய காதுகள் பாட்டு
கேட்பதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

காது இல்லையேல் அறிவை வளர்க்க முடியாது. சதா பாட்டு கேட்டுக் கொண்டே
இருந்தால் காதுகளின் கேட்கும் திறன் குறைந்து விடும்.


கடினமான சில பணிகளை செய்யும் போதும், ஜிம்மில் சில பயிற்சிகளை மேற்
கொள்ளும் போதும் ஓரளவு இயர் போனை பயன்படுத்திக்கொள்ளலாம். இயர்போன்
பயன்படுத்த நீங்களே சில சுயகட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டால் அது
உங்களுக்கு நல்லது.


* பாட்டின் ஓசையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கேட்க பழகிக் கொள்ளுங்கள்.


* எப்போதும் ஒரே அளவோடு ஒலி இருக்கட்டும். உயர்வு தாழ்வு அடிக்கடி
வேண்டாம். நீங்கள் வண்டி ஓட்டுபவராக இருந்தால் இயர் போன்
பயன்படுத்தாதீர்கள். அக்கம் பக்கத்து ஓசைகள் உங்கள் காதுகளில்
விழுந்தால்தான் விபத்தின்றி வாகனம் ஓட்ட முடியும்.


* இசை மற்றும் ஓசை தொடர்புடைய தொழிலில் உள்ளவர்கள் தொடர்ந்து ஒலியை கேட்க
வேண்டிய கட்டாயம் இருக்கும். அவர்கள் 60 நிமிடங்கள் ஒலியை கேட்டால்
அடுத்த 60 நிமிடங்கள் காதுகளுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். இடைவிடாமல்
காதுகளுக்குள் ஒலியை பாய்ச்சக்கூடாது.

* தரமான இயர் போன்களை பயன்படுத்துங்கள்.

* அதிக பட்சமாக ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் தொடர்ந்து பாட்டு கேட்காதீர்கள்.

* 'இயர் பட்' பொருத்தப்பட்ட போன்களை பயன்படுத்தாதீர்கள். அது சாதாரண
ஒலியை எட்டுமடங்கு பெருக்கி காதுகளுக்கு அனுப்பும். அதனால் காதுகளுக்கு
அதிக சேதம் ஏற்படும்.

* சிலர் ஒருகாதில் மட்டும் பொருத்தி பாட்டு கேட்பார்கள். இன்னொன்றை
அருகில் இருப்பவர் காதில் பொருத்திக்கொள்வார்கள். அது தவறான வழக்கம். ஒரு
காதுக்கு மட்டும் அதிக ஒலி அழுத்தம் கொடுத்தால், அந்த காது பழுதாகும்.

* அமெரிக்காவின் "ஜான் ஹோப் கிங்ஸ்" பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப்படி
இயர்போன் பயன்படுத்தும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்கு
காது பாதிப்பு ஏற்படு கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்காவில் வரும் ஆண்டுகளில் கேள்வித்திறன்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும் என்ற பகீர் தகவலை
வெளியிட்டிருக்கிறது.

Adding Ghee to the Food | நெய் சேர்ப்பதன் பயன்கள்

0 comments
தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள்.

• தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது, இதனால்
உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

• உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை
அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

• வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக
உள்ளதால், வேகமாக செரிக்கும்.

• நெய்யை பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை, அதை கைபடாமல் வெளியில்
வைத்திருந்தாலே நீண்ட காலத்துக்கு கெடாது, அதனால் நெய்யில் மாற்றம்
ஏற்படாது.

• நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், செரிமானத்தை
ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில்
வைக்க உதவும்.

• விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை
சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்,

• உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை, அதை நெய்
சாப்பிடுவதால் பெறலாம். தினம் நாம் உணவில் நெய் சேர்த்து உடல் ஆரோக்கியம்
பெறலாம்.

Fwd: [New post] பெண்கள் வாகனம் ஓட்டும் போது கவனிக்க வேண்டியவை

0 comments
பெண்கள் வாகனம் ஓட்டும் போது கவனிக்க வேண்டியவை

இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் துப்பட்டா, புடவை உள்ளிட்ட ஆடைகளை
சரியாக அணிந்து அல்லது முடிச்சு போட்டுக் கொண்டு வாகனம் ஓட்டுங்கள். கார்
ஓட்டுபவரானால் சீட் பெல்ட் முக்கியம்.

வாகனத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் நடுசாலையில் இறங்கி
பார்க்காதீர்கள். சாலை ஓரமாக நிறுத்தி பரிசோதியுங்கள்.

உங்கள் கைப் பை அல்லது விலை உயர்ந்த பொருள்களை காரின் முன் இருக்கையில்
வைக்க வேண்டாம். திருடனின் பார்வையில் எளிதில் சிக்காமல் தப்பிக்க இது
உதவும்.

வாகனத்தில் செல்லும்போது நீங்கள் எங்கு செல்கிறீர்கள், எந்தப் பாதையைத்
தேர்ந்தெடுத்துச் செல்வீர்கள் என்பதை வீட்டில் இருக்கும் யாருக்காவது
தெரிவித்துச் செல்லுங்கள்.

வெவ்வேறு சிறிய பணிகளுக்காக அடிக்கடி பயணம் மேற்கொள்ளாமல், ஒரே பயணத்தில்
வேலைகளை முடித்துவிடுங்கள். எரிபொருளும் மிச்சம், உங்களுக்கு சாலையில்
செல்லும் "ரிஸ்க்'கும் மிச்சம்.

பிரேக்கில் கால் வைத்த வண்ணம் வாகனம் ஓட்டாதீர்கள். இது எரிபொருளை அதிகம்
வீணாக்கும்.

காரில் உள்ள ஏ.சி. உபயோகத்தைக் குறைப்பதால் 8 சதவீதமும், தேவையில்லாத
பொருள்கள் அல்லது எடையைக் குறைப்பதன் மூலம் 4 சதவீதமும் எரிபொருளை
சேமிக்க முடியும்.

கால சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கோடையில் கண்களுக்கு குளிர்ச்சியாக கண்ணாடி
அணிந்துக் கொள்ளுங்கள். மழைக் காலத்தில் ரெயின்கோட் அணிந்து, மிதமான
வேகத்தில் வாகனம் ஓட்டுங்கள்.

செல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள். வாகனம் ஓட்டும் போது
உங்கள் கவனம் முழுவதும் வாகனம் ஓட்டுவதில் மட்டுமே இருக்க வேண்டும்.

Bandwidth, Broadband and Latency | பிராட்பேண்ட் பேண்ட்வித் மற்றும் லேடன்சி

0 comments
Read and understand about Bandwidth, Broadband and Latency. 

படிப்படியாக இணையத்துடன் வாழத் தொடங்கிவிட்டோம். வாழ்க்கை முறையை இணையம் கொஞ்சம் கொஞ்ச மாக மாற்றி வருகிறது. இந்த தொழில் நுட்பத்தில் புழக்கத்தில் இருக்கும் சொற்களில் சிலவற்றை நாம் சரியாகத் தெரிந்து கொள்ள கீழே குறிப்புகள் தரப்படுகின்றன. 

ஏனென்றால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் பல்வேறு தொழில் நுட்ப சொற்களைக் கூறி விளம்பரப்படுத்துகின்றனர். இவற்றை நாம் தெளிவாக அறியும் வகையில் தரும் பழக்கம் இவர்களிடம் இல்லை. இந்த தொழில் நுட்ப சொற்கள், ஓர் இணைய இணைப்பு சேவையில் மிக மிக முக்கியமானவை. இணைய சேவை நிறுவனம் ஒன்றினைத் தேர்ந்தெடுக்கையில் இவற்றை நாம் தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. 


1. பேண்ட்வித் (bandwidth):


உங்கள் கம்ப்யூட்ட ரிலிருந்து அல்லது உங்கள் கம்ப்யூட்டருக்கு அல்லது மொபைல் சாதனங்களுக்கு பரிமாறப்படும் டேட்டாவின் அளவினை இது குறிக்கிறது. இதனை விநாடிக்கு இவ்வளவு கிலோ பிட்ஸ் (kilobits– kbits) என அளக்கின்றனர். சில இணைய சேவை நிறுவனங்கள், தங்கள் விளம்பரத்தில் தாங்கள் அளிக்கும் இணைப்பு என்ன வேகத்தில் இருக்கும் என்பதைக் குறிக்கையில் இந்த அளவினைக் குறிப் பிடுவார்கள். சிலர் வேகத்தினை mbit எனவும் அறிவிப்பார்கள். 1mbit என்பது 1000 kbits. இது மக்களைக் குழப்பும் வேலை எனவும் சிலர் குறிப்பிடுவார்கள். ஏனென்றால், நாம் கம்ப்யூட்டரில் தகவல் பதிவதை மெகா பைட்ஸ் (megabytes(MB)) அளவில் கூறுகிறோம். சில வேளைகளில் kilobytes (KB)என்பதனையும் பயன்படுத்துகிறோம். எனவே, இதே அளவில் இணைய சேவை வேகத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும் எனில், அவர்கள் தரும் அளவினை 8 ஆல் வகுத்து மெகாபைட் அல்லது கிலோ பைட் என்பதில் தெரிந்து கொள்ளலாம். 

2. பிராட்பேண்ட் (Broadband):

உங்களுடைய இணைய தொடர்பில், தகவல்கள் பரிமாறப்படுவது, இந்த குறைந்த பட்ச அளவில் தான். இந்த குறைந்த பட்ச அளவு என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும். அமெரிக்காவில் இது 256 kbits per second, (or 0.25 megabit per second) ஆக உள்ளது. இதுவே சில நாடுகளில் 768 kbit என்று தொடங்கி 30 or 40 mbits வரை செல்கிறது. 

3. அப்லோட்/டவுண்லோட் (Upload/Download):

அப்லோட் என்பது உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து இணையத்திற்கு தகவல் அனுப்பும் செயல்முறையைக் குறிக்கிறது. டவுண்லோட் என்பது இணையத்திலிருந்து கம்ப்யூட்டருக்கு இறக்கப்படும் செயல்முறையைக் குறிக்கிறது. இணைய சேவை நிறுவனங்கள், தாங்கள் அதிக வேகத்தில் டவுண்லோட் சேவையினை வழங்குவதாக அறிவிப்பார்கள். இணையத்தில் பொதுவாக, தகவல்கள் டவுண்லோட் செய்வது தான் அதிக அளவில் நடைபெறுகிறது. எனவே தான், இணைய சேவை நிறுவனங்கள் இந்த அளவினை விளம்பரப் படுத்துவதில் முக்கியத்துவம் அளிப்பார்கள். 

4. சிம்மெட்ரிக்/அசிம்மெட்ரிக் (Symmetric/Asymmetric):

இந்த சொற்களை அவ்வளவாக பொதுமக்களுக்கு இணைய சேவை நிறுவனங்கள் அளிக்க மாட்டார்கள். அதிக அளவில் தகவல் பரிமாற்றத்தினை, அதிக பட்ச வேகத்தில் மேற்கொள்ளத் திட்டமிடும் நிறுவனங்கள் மட்டுமே இந்த சொற்கள் குறிப்பிடுவதனைக் கையாள்வார்கள். ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இணையத்திற்குச் செல்லும் தகவல் வேகமும், தகவல்கள் வந்தடையும் வேகமும், ஒரே வேகத்தில் இருந்தால் அதனை Symmetric இணைய சேவை என அழைக்கின்றனர். மற்ற வாடிக்கை யாளர்களுக்கு, தகவல் பரிமாற்ற வேகம் முன்பு குறிப்பிட்டபடி ஒரே அளவில் இருக்காது. இதனை Asymmetric என அழைக்கின்றனர். 

5. லேடன்சி (latency):

இதனை இணைய சேவை நிறுவனங்கள் அவ்வளவாகப் பயன்படுத்தவில்லை என்றாலும், இதனைத் தெரிந்து கொள்வது நல்லது. இந்த சொல், உங்கள் கம்ப்யூட்டர், இணையத்தில் ஒரு குறிப்பிட்ட முகவரியில் உள்ள சர்வர் ஒன்றைத் தொடர்பு கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தினைக் குறிக்கிறது. இது நமக்குச் சேவை தரும் நிறுவனத்தின் கட்டமைப்பு, நாம் தொடர்பு கொள்ளும் சர்வரின் திறன், நாம் பயன்படுத்தும் இணைய தொடர்பு வகை ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடும். 
இதனை எப்படி அறிந்து அல்லது அளந்து கொள்வது? இது மில்லி செகண்ட்ஸ் (ms or milliseconds) என்ற அலகில் அளக்கப்படுகிறது. உங்கள் இணைப்பின் இந்த வகை திறனை அறிந்து கொள்ள, கம்ப்யூட்டரில் கமாண்ட் ப்ராம்ப்ட் திறக்கவும். இதற்கு Windows Key + R அழுத்தி, கிடைக்கும் கட்டத்தில் cmd.exe என டைப் செய்து என்டர் தட்டவும். கருப்பு வண்ணத்தில் டாஸ் இயக்க கட்டம் கிடைக்கும். அதில் ட்ரைவ் எழுத்துடன், அருகில் கட்டளைப் புள்ளி ஒன்று துடித்துக் கொண்டிருக்கும். இந்த இடத்தில் ping http://www.dinamalar.com என டைப் செய்து என்டர் தட்டவும். உடன் ஒரு வரி காட்டப்படும். அதில் நேரம் குறிப்பிடப்பட்டு அதன் அருகே ட்ண் என இருக்கும். இத்தனை மில்லி செகண்ட் நேரத்தில், குறிப்பிட்ட இணைய தளத்திற்கான சர்வரை உங்கள் கம்ப்யூட்டரால் அடைய முடிகிறது என இணைய இணைப்பின் திறனைத் தெரிந்து கொள்ளலாம். இது 100ms வரை இருந்தால், அதனை மிகக் குறைவான திறன் எனலாம். 100>200 ms ஆக இருந்தால் அதனை சராசரியான வேகத்திறன் எனலாம். 200 ms க்கு மேலாக எனில், அது சிறப்பான வேகம் எனக் கொள்ளலாம்.   

லேடன்சி எனப்படும் இந்த இணைப்பு வேகத்திறன் நமக்கு மிக மிக முக்கியம். ஏனென்றால், சில வேளைகளில் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக, இணைய தளத்திற்கு நாம் தகவல்களை அனுப்பியாக வேண்டும். இல்லை எனில், நம் தகவல் பரிமாற்றம் முறிந்து போய், மறுபடியும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ட்ரெய்ன் டிக்கட் போன்றவற்றை இணையம் வழி பெற முயற்சிக்கையில் வேகம் குறைவது சிக்கலை ஏற்படுத்தும்.

Reason for Divorce | விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்

0 comments
புகைப்பிடிப்பதால் எப்படி உடலை மெதுவாகவும், அமைதியாகவும் பாதிக்கிறதோ, அதேப் போல் திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை வெளிக்கொணர்வதால், திருமண வாழ்வும் விவாகரத்தில் முடிகிறது.  விவாகரத்து எளிதில் ஏற்பட காரணம் ஒருவரின் குணங்கள் தான்.   எனவே மண வாழ்வைக் கெடுக்கும் குணங்களை முற்றிலும் தவிர்த்தால், நிச்சயம் திருமணத்திற்கு பின் நல்ல வாழ்க்கையை வாழலாம். 

நிறைய மக்கள் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணம் நாமில்லை, மற்றவர்கள் தான் என்று கருதுகின்றனர். உண்மையில் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணமான குணங்கள் ஒருவரது மனதில் தான் உள்ளன. அது தான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும் வார்த்தைகள், கோபம், அகங்காரம் போன்றவை. 
இத்தகைய குணங்கள் தம்பதியருக்குள் இருந்தால், நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை அடையும். எனவே திருமண வாழ்வை. விவாகரத்து என்ற நிலைமைக்கு கொண்டு வரும் குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.

கீழே உள்ள குணங்கள் ஏதேனும் உங்களிடம் இருந்தால் அதைப் படித்து தெரிந்து கொண்டு, அத்தகையவற்றை மனதில் இருந்து நீக்கி, சந்தோஷமான மண வாழ்க்கையை வாழுங்கள். 

எப்போதுமே தம்பதியருக்குள் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. இது தான் மண வாழ்விற்கு முதல் எதிரி. 

சந்தேகம் என்பது ஒரு நோய். அந்த நோய் ஒருமுறை வந்தால், அதனை குணப்படுத்த முடியாது. எனவே சந்தேகம் என்ற நோயை மனதில் வராமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் கணவருக்கு மனைவி மீதும், மனைவிக்கு கணவர் மீதும் நம்பிக்கை வேண்டும். 

தம்பதிகள் இருவரும் எப்போதும் மனம் விட்டு பேச வேண்டும். அதைவிட்டு எப்போதும் வீட்டில் அமைதியுடன், அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தால், அதுவே இருவரின் மண வாழ்விற்கு முற்றுபுள்ளி வைத்துவிடும். 

இன்றைய காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், இருவராலும் சரியாக பார்த்து பேச நேரம் கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க முடியாத அளவு நேரம் கிடைக்காமல் போனால், பின் சந்தோஷமான மண வாழ்விற்கே ஆபத்து ஏற்படும். 

இருவருக்கும் இடையில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால், அதை அப்பொழுதே பேசி சரிசெய்து கொள்ள வேண்டும். அதைவிட்டு, அதனைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால், அதுவே துணைக்கு வெறுப்பை ஏற்படுத்தி, பிரிவை உண்டாக்கும். 

துணை ஏதேனும் தவறு செய்து விட்டால், அப்போது அதனால் ஏற்படும் கோபத்தை அவரிடம் காண்பிக்கும் போது, அவர் மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும். அதைவிட்டு, அவர் மனம் புண்படும் படியாகவோ அல்லது அசிங்கப்படுத்தும் படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட விளைவை உண்டாக்கும். மேலும் கோபத்தினால் பேசும் பேச்சை பார்த்து பேச வேண்டும். அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின் அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற முடியாது. ஆகவே இத்தகைய குணத்தை அறவே தவிர்க்க வேண்டும். 

இருவருக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையில் மூன்றாம் நபரை குறுக்கிட வைக்க வேண்டாம். ஏனெனில் அவ்வாறு குறுக்கிட வைத்தால், சிறு பிரச்சனை கூட பெரிதாகிவிடும். பின் அதுவே விவாகரத்து வரை முடியும். ஆகவே எதுவாக இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க வேண்டும். 

சிலர் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். அவ்வாறு காதல் திருமணம் செய்யும் போது, வேறு மதத்தினரையோ அல்லது நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால், அப்போது சில நேரங்களில கலாச்சார பிரச்சனை ஏற்படும். எனவே இவ்வாறான திருமணம் செய்து கொண்டவர்கள், திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால், எந்த பிரச்சனையும் இருக்காது. 

அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும், அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் உண்டான கோபத்தை வீட்டில் துணையிடம் வெளிப்படுத்தக் கூடாது. ஒருசில நேரங்களில் துணை நிச்சயம் புரிந்து கொண்டு நடப்பார்கள். ஆனால் அதுவே தொடர்ந்தால், பின் பிரிவை சந்திக்க நேரிடும்.

உடலே உன்னை ஆராதிக்கிறேன்

0 comments
உடல் நலம் சரியாக இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய முடியும். முன்னோரின் வாழ்க்கையில், அவர்களது உணவே, மருந்தாக இருந்தது. இன்றைய உலகில் எதற்கும் அவசரம். சரியான, சத்தான உணவை பெரும்பாலானோர் எடுத்துக்கொள்வதில்லை. உடல்நலம் பற்றி அக்கறை காட்டுவதே இல்லை. நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 

"அதிக ரத்த அழுத்தம்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. உடலில் ரத்த அழுத்தம் அதிகரிப்பது மாரடைப்பு, பக்கவாதம், கிட்னி செயலிழத்தல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது. ரத்த அழுதத்தத்தை கட்டுப்படுத்தாமல் விட்டால், பார்வை குறைபாடு, இருதய செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உலகளவில் மூன்று இளைஞர்களில் ஒருவர் அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்காவில் நடுத்தர நாடுகளில் 40 சதவீத இளைஞர்களுக்கு இந்த பாதிப்பு உள்ளது. இது கட்டுப்படுத்தக்கூடியது.

என்ன செய்வது:

உப்பு பயன்படுத்துவதை குறைப்பது, சரியான அளவில் உணவு எடுத்துக்கொள்வது, ஆல்கஹால், புகையிலை பயன்படுத்தாமல் இருப்பது, உடல் எடையை சீராக வைத்தல், தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை மூலம் இதை கட்டுப்படுத்தலாம்.

ஜப்பானில் தொழில் வளர்ச்சியை போல, சுகாதார வசதியும் சிறப்பாக உள்ளது. இதற்கு, உலகிலேயே மக்களின் வாழ்நாள் அதிகம் உள்ள நாடு ஜப்பான் என்பதே சாட்சி. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், சுகாதார வசதி குறைவு. என்னதான் அரசு சுகாதார திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், அது அனைவரையும் சென்று சேர்வதில்லை. நகரங்களில், போதிய சுகாதார வசதிகள் உள்ளன. கிராமங்களின் நிலை பரிதாபம்.குழந்தை பிரசவம், தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்தல், அவசர சிகிச்சை போன்ற பிரச்னைகளுக்கு சுகாதார மையங்கள் தவிர்க்க முடியாதவை. 10 கி.மீ., தூரத்துக்கு, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். சுற்றுச்சூழல், நீர், காற்று போன்றவற்றை, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.முயற்சி செய்யலாம்

உடல் நலனை சீராக வைக்க சில வழிகள்:

அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். 

எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும். 

சரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். காலை உணவு அவசியம்.

சத்தான காய்கறிகள், பழங்கள், பயறு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

"பாஸ்ட் புட்' ÷ பான்றவற்றை தவிர்க்க வேண்டும். இது உடலுக்கு ஆற்றலை கொடுப்பதில்லை. 

உடல் எடையை சீராக வைத்திருங்கள். உயரத்துக்கு ஏற்ற எடை அவசியம். 

வேலையின் போது, சீரான இடைவெளியில் ஓய்வு அவசியம். 

உடற்பயிற்சி செய்வது, பாதி நோய்களிலிருந்து விடுதலை அளிக்கும். தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். 

மனிதனின் ஆயுளை குறைக்கும், மது, சிகரெட் பழக்கத்தை அறவே விட்டு விடுங்கள். 

கோபத்தை குறைத்து மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

முதுகுவலி - காரணங்களும், தீர்வுகளும் :

தற்போதைய எந்திரமயமான வாழ்க்கை முறையினால், உடலில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அதில் முக்கியமானது முதுகு வலி. அலுவலக நேரம் முழுவதும் கம்ப்யூட்டர் முன் அமர்கிறோம். வீட்டிலிருக்கும் நேரத்திலும், அமர்ந்து கொண்டே "டிவி' பார்க்கிறோம். உடற்பயிற்சி செய்ய நேரமே ஒதுக்குவதில்லை. இதனால் உடலின் தசைகள் வலுவிழக்கின்றன.

உடலின் எடையை முதுகெலும்புதான் தாங்குகிறது. குறிப்பாக அடி முதுகில் அனைத்து எடையும் குவிகிறது. முறையற்ற உணவுப்பழக்கம், சத்தில்லாத உணவு, தொடர்ந்து பயணம், திடீரென தீவிரமாக வேலை செய்வது, அதிக எடை தூக்குதல் போன்ற பல காரணங்களால் முதுகுவலி ஏற்படுகிறது. 

முறையற்ற வாழ்க்கை முறையினால், பல்வேறு முதுகுப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. வயது ஆக ஆக, முதுகின் பிரச்னை அதிகரிக்கும். அடி முதுகுவலியை கவனத்தில் கொள்ளாவிட்டால், பல சிக்கல்களை உருவாக்கும். முதுகெலும்பு இடமாற்றம், கீழே இறங்குதல் போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. 

இதனால் அமருவது, நிற்பது, நடப்பதில் கூட சிரமம் ஏற்படும். முதுகெலும்பு அடுக்கில் உள்ள எலும்புகள் இடம் மாறுவது, ஒரு வகை நோய். இதனால் தீவிர வலி, முதுகு, கால்களில் உணர்வின்மை ஆகியவை ஏற்படும்.முதுகெலுப்பு இருக்குமிடத்தை விட்டு சற்று கீழே இறங்குதல் மற்றொரு வகை பிரச்னை. இதில் முதுகெலும்பில் உள்ள தசைகள் கிழிவதால், வீக்கம் உண்டாகிறது. 

வயதாகும் போது, முதுகெலும்பின் வளைவு, நெகிழ்வு, அதிர்ச்சியை தாங்கக் கூடிய தன்மை ஆகியவை குறையும். இதனால் வயதானவர்களுக்கு கண்டிப்பாக முதுகுப் பிரச்னை இருக்கும்.

Medicinal Properties of Fig Fruit | அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்…

0 comments

Here are the medicinal Effects of Fig fruit

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்:

அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்கும். 

1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். 
உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். 

2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். 

3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். 

4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். 
அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம். 

5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்தி பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது. 
மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. 
இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். 
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf