Health Insurance Tips | ஹெல்த் இன்சூரன்ஸ் டிப்ஸ்

0 comments
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். அனைவருக்கும் அப்படி ஒரு செல்வம் கிடைப்பதில்லை. இன்றைய உலகில், புதுப் புது நோய்கள் முளைத்து நம்மை பல்வேறு துன்பத்திற்கு உள்ளாக்குகின்றன.

நோய்களின் கொடுமை ஒரு புறமிருக்க, அந்நோய்களை குணப்படுத்த தேவைப்படும் மருத்துவ செலவுகளும் அதிகரித்து நம்மைப் பெரும் துன்பத்தில் ஆழ்த்திவிடுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மையும், நம் குடும்பத்தாரையும் பாதுகாத்து, சரியான மருத்துவ உதவி செய்ய உடல் நலக் காப்பீட்டு பாலிசி(ஹெல்த் இன்சூரன்ஸ்) எடுப்பது அடிப்படைத் தேவையாகிவிடுகிறது.

பல்வேறு உடல்நலக் காப்பீட்டு பாலிசிகள் சந்தையில் உள்ளது. அவற்றில், நமக்கு உகந்த பாலிசியை எவ்வாறு தேர்ந்தெடுப்பது? தேர்ந்தெடுப்பதில் நான் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்னென்ன என்பதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

செய்ய வேண்டியவை:

உடல்நலக் காப்பீட்டு பாலிசியை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை பார்க்கலாம். பாலிசி எடுத்துவிட்டால், இனி என்ன நோய் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்க கூடாது. அனைத்து பாலிசிகளிலும் ஒரு சில கட்டுப்பாடுகள், விதிவிலக்குகள் உள்ளன. அவற்றைப் படித்து தெளிந்த பிறகு முடிவெடுப்பது நல்லது. உங்களுக்காக் ஒரு சில உதாரணங்கள் இங்கே.

1. நம்மிடம், ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு, பாலிசி மூலம் பயன் பெற முடியாது.

2. உடல் நலக் காப்பீட்டு பாலிசிகளில் மருத்துவச் செலவுகளுக்கு பல விதி விலக்குகள் உண்டு. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் எவ்வளவு பணம் தர வேண்டும், எத்தனை நாள் தர வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும். மருத்துவச் செலவில் நாமும் நமது பங்கிற்கான பணத்தைத் தர சொல்வதாக கூட இருக்கலாம். எந்தெந்த மருத்துவமனைகளில் பாலிசிகள் செல்லுபடியாகும் என்பதும் இதில் அடங்கும்.

3. வருடா வருடம் பாலிசி புதுப்பிக்கப்பட வேண்டும். அதனை புதுப்பிப்பதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றனர்.

4. பாலிசி எடுப்பதற்கு வயது உச்ச வரம்பு உள்ளது. பெரும்பாலும், குறிப்பிட்ட வயதிற்கு உட்பட்டவராக இருப்பவர்களுக்கு மட்டுமே உடல் நலக் காப்பீட்டு பாலிசிகள் வழங்கப்படுகின்றன.

5. சர்க்கரை வியாதி, ரத்த சோகை போன்ற நமக்கு ஏற்கனவே உள்ள நோய்களை ஒளிவு மறைவின்றி தெரிவிக்க வேண்டும்.

6. பாலிசி எடுப்பவரின் வயதைப் பொறுத்து மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டி இருக்கும். அந்நிறுவனம் கூறும் வழிமுறைகளுக்கும், ஆவணங்களுக்கும் சம்மதம் தெரிவிக்க வேண்டும்.

7. அப்படி மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் எங்கு, எப்படி செய்து கொள்ள வேண்டும்? அதற்கான செலவை யார் ஏற்பது? போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

8. பாலிசி தொடர்பான அனைத்து விவரங்களைப் படித்து, தெளிவு பெற்ற பிறகே பிரீமியம் தொகையை செலுத்துங்கள்.

9. அந்தப் பாலிசியின் தன்மையை அறிந்து, அவர்களின் சேவையை மதிப்பீடு செய்து, வருடா வருடம் பாலிசியை புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

செய்யக் கூடாதவை;

1. எந்தத் தகவலையும் மறைக்காதீர்கள். தவறான தகவலையும் கொடுக்காதீர்கள். நோய்வாய்ப்பட்டு பாலிசியின் மூலம் பணம் பெறும் போது, இது சட்ட ரீதியான பிரச்சனையை உண்டாக்கும்.

2. சரியான நேரத்தில் பாலிசியை புதுப்பிக்க வேண்டும். கொஞ்சம் தாமதப்படுத்தினாலும் நமக்கு உபயோகப்படாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது.

3. பாலிசி தொடர்பாக வெற்று ஆவணங்களில் கையெழுத்திட வேண்டாம். பாலிசி படிவம் நிரப்பும் போது எந்த ஒரு பகுதியையும் நிரப்பாமல் விட்டுவிடாதீர்கள்.

திடீரென்று நமக்கோ, நம் பெற்றோருக்கோ நோய் வந்த பிறகு, இதை நாம் அப்பவே எடுத்திருக்கலாமே....என்று வருத்தப்படாமல், நோய் வரும் முன் நம்மை காத்துக் கொள்வோம். நமக்கு ஏற்ற உடல் நலக் காப்பீட்டுப் பாலிசியை தேர்ந்தெடுப்போம் !

கனவு வந்தால் நல்ல தூக்கம் என அர்த்தம்

0 comments
தூக்க சுழற்சி முறையின் அடிப்படையில் தான், நள்ளிரவு, அதிகாலை வேளைகளில் கனவுகள் வருகின்றன. பகலில் நினைப்பவை, இரவு உறக்கத்தில் வரும், சமகாலத்து நிகழ்வுகளாக, கனவை பார்ப்பது தான் சரி. 

அனுபவ ரீதியான நிகழ்வுகளின் அடிப்படையில், கனவுகளைப் பற்றிய பல்வேறு கற்பித்தல்கள், வழிவழியாக, நம் சமூகத்தில் உலவி வருகிறது. கனவுகள் குறித்து, பல்வேறு நம்பிக்கைகள் நிலவி வரும் நம் சமூகத்தில், அதைப் பற்றிய புரிதல்கள் அவசியமாகின்றன. கனவுகளுக்கான காரணங்கள், அவற்றின் பலன்கள் குறித்து விளக்குகிறார், மனநல மருத்துவர் ஆனந்த் பிரதாப். 

1. கனவுகள் வருவதற்கு என்ன காரணம்? 

பகலில், ஒருவரின் மனம் எதைப் பற்றி அதிகம் நினைக்கிறதோ, அந்த எண்ணங்களின் பிரதிபலிப்பு, சிதறல்கள், இரவில் அவர்களுக்கு கனவாக வருகிறது. உதாரணமாக, தெய்வ பக்தி அதிகம் உள்ளவர்களுக்கு, சாமிகளின் உருவங்கள், கோவில், கோபுரங்கள் அதிகம் கனவில் வரும். ஆறு மணி நேர தூக்கத்தில், தூக்க சுழற்சி முறைப்படி, ஒருவருக்கு, நான்கு முறை வரை கனவு வரலாம். 

2. வயதிற்கும், கனவிற்கும் தொடர்பு உண்டா? 

நிச்சயமாக தொடர்பு உண்டு. 3 முதல் 14 வயது வரையிலான பிள்ளைகளுக்கு, "கார்ட்டூன்' படங்கள் மற்றும் திரைப்படங்களில் வரும் கதாநாயகன், வில்லன் போன்ற கதாபாத்திரங்கள், அதிகம் கனவில் வரும். பயந்த சுபாவம் உள்ள குழந்தைகளுக்கு, அவர்களின் உறவினர்கள் சொல்லக் கேட்ட, பேய் கதைகளின் பாதிப்புகள் கனவில் வெளிப்படும். 

விடலைப் பருவத்தினரில் பெரும்பாலானோருக்கு, அவர்களுக்கு பிடித்தமான, எதிர் பாலினர் கனவில் வருவர். அதுவும் அவர்களுக்கு பிடித்தமான கதாநாயகர், கதாநாயகி, விளையாட்டு வீரர் போன்றோரின் சாயலில், கனவில் வந்து அசத்துவர். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம், வேலைவாய்ப்பு, திருமணம் போன்றவை பற்றி அதிகம் எண்ணும் நடுத்தர வயதினருக்கு, இவை தொடர்பான, நேர்மறை அல்லது எதிர்மறையான கனவுகள் வரும். குடும்ப பிரச்னை, பணக் கஷ்டம், வேலையின்மை போன்றவற்றுக்கு ஆட்படுவோருக்கு, வன்முறை சம்பவங்கள் அதிகளவில் கனவில் வரும். 

எதிர்காலம் மற்றும் மரணத்தை பற்றிய பயத்தால், முதியோர், அவர்களின் குடும்பத்தில் அகால மரணம் அடைந்தோர், எமதூதர்கள், இறந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறவினர்கள் என, சாவு தொடர்பான கனவுகளுக்கு அதிகம் ஆளாகின்றனர். 

3. அதிகாலை கனவுகள் பலிக்குமா? 

தூக்க சுழற்சி முறையின் அடிப்படையில் தான், நள்ளிரவு, அதிகாலை வேளைகளில், கனவுகள் வருகின்றன. பகலில் நினைப்பவை, இரவு உறக்கத்தில் வரும், சமகாலத்து நிகழ்வுகளாக, கனவை பார்ப்பது தான் சரி. 

மாறாக, கனவில் திருமணம் நடப்பது போல், யாரேனும் கனவு கண்டால், அவர்கள் வீட்டில் கெட்டது நடக்கும்; பிணம், ரத்தக்காயத்தை கனவில் கண்டால், நல்லது நடக்கும்; கனவில் கோவில் கோபுரத்தை பார்க்கக்கூடாது; பாம்பை அடித்து, அதை கொல்லாமல் விட்டாலோ, பாம்பு துரத்தினாலோ, துன்பம் வரும்; கெட்ட கனவுகளை வெளியில் சொன்னால், அவை பலிக்கும் என்பன போன்ற, ஆய்வு ரீதியாக நிரூபிக்கப்படாத, வழிவழியாக கூறப்பட்டு வரும் கற்பித்தல்கள் அனைத்தும், மூடநம்பிக்கையே. 

4. "கலர்' கனவு எல்லாருக்கும் வருமா? 

வலிப்பு நோய் உள்ளவர்களுக்கு, மற்றவர்களைவிட, மூளைச் செல்களின் அதிர்வு அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு மட்டும், கலர் கனவு சாத்தியம். மற்றவர்களுக்கு, தங்கள் கனவில் வரும் நிறங்களை விவரிக்க முடியாது. இதேபோல், தூக்க மாத்திரை உட்கொள்வோர், மனச்சோர்வு, மனதளர்ச்சிக்கு மாத்திரை சாப்பிடுவோர், ஆகியோருக்கு, கொடிய ஆயுதங்களுடன் போரிடுவது போன்ற கனவுகள் வரும். 

5. கனவுகளுக்கு ஆட்படாத நபர்கள் உண்டா? 

தொடர்ந்து, ஆறு மணி நேரம் தூங்காதவர்கள், இரவில் தூக்க தடைக்கு ஆளாகும் நீரிழிவு நோயாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டோர் போன்றோருக்கு< கனவுகள் வராது. இவர்களை தவிர, சராசரி மனிதர்கள் எல்லாருக்கும் நிச்சயம் கனவு வரும்; வர வேண்டும். மாறாக, யாராவது தமக்கு கனவே வராது என, சொன்னால், அவர்கள், பொய் சொல்ல வேண்டும் அல்லது தூக்கமின்மை பிரச்னைக்கு ஆளாகி இருக்க வேண்டும். 

ஆழ்ந்த உறக்கத்திற்கு அடையாளமான கனவு, ஒருவருக்கு வருவது நல்லது. அதற்காக, ஒருவருக்கு தினமும் கனவு வர வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இயல்பாகவோ, பணிநிமித்தம் காரணமாகவோ, சிந்தனை ஓட்டம் அதிகம் உள்ளோருக்கு, அதிகம் கனவு வரும். 

டாக்டர் ஆனந்த் பிரதாப், மனநல மருத்துவர், 
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை

Ms-Word Tips | வேர்ட் டிப்ஸ்

0 comments
வேர்டில் பக்க எண்களின் பார்மட்டுகளை மாற்ற: வேர்ட் டாகுமெண்ட்களில் பக்க எண்களை இணைப்பது எளிது. பக்க எண்களை உண்டாக்கிய பின்னர் அதனை நாம் விரும்பிய பார்மட்களில் மாற்றுவதும் எளிது. இதற்கான வழிகளை இங்கு காணலாம். 

வேர்ட் நம் பக்க எண்களை ஹெடர் மற்றும் புட்டர்களின் ஒரு பகுதியாகவே அமைக்க அனுமதிக்கிறது. இதன் பின் இதன் பார்மட்டுகளை மாற்றலாம். முதலில் என்ன வகையான பார்மட்டுகள் உள்ளன என்று பார்க்கலாம். 

1. அரபிக் எண்கள் – 1,2,3
2. அரபிக் எண்கள் சிறிய டேஷ் அடையாளத்துடன் –1, –2,–3 .. 
3. அப்பர் கேஸ் ரோமன் I, II, III
4. லோயர் கேஸ் ரோமன் i, ii, iii 
5. அப்பர் கேஸ் எழுத்துகள் A,B,C,
6. லோயர் கேஸ் எழுத்துகள் a, b, c,

இனி பார்மட்டினை மாற்றுவது குறித்துக் காணலாம்.
 
1. உங்கள் டாகுமெண்ட்டில் எந்த பகுதியில் உள்ள பக்க எண்களின் பார்மட்டை மாற்ற வேண்டுமோ அந்த பகுதியில் கர்சரைக் கொண்டு செல்லவும். 
2. வியூ மெனுவிலிருந்து ஹெடர் அண்ட் புட்டர் பகுதியைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு ஹெடர் கட்டம் கிடைக்கும். கீழாக அதனை எடிட் செய்வதற்கான டூல் பார் கட்டம் கிடைக்கும். இதில் 
3. பார்மட் பேஜ் நம்பர் ஐகானைக் கண்டறிந்து அதனைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் சிறிய பாக்ஸில் பேஜ் நம்பர் பார்மட்டுகள் தரப்படும். அதில் தேவையான பார்மட்டைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். 
4. பின் ஓகே கிளிக் செய்திடவும். 
5. பின் ஹெடர் அண்ட் புட்டர் பாக்ஸிலும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். 

வேர்டில் டேட்டா சார்ட்டிங்:

ஒரு சிலர், வேர்டில் அமைந்துள்ள தகவல்களை வகைப்படுத்த, குணிணூtடிணஞ் செய்திட, அவற்றை அப்படியே காப்பி செய்து எக்ஸெல் கொண்டு சென்று, பின் வரிசையாக்கிய பின் மீண்டும் வேர்டில் ஒட்டும் பழக்கத்தினைக் கொண்டுள்ளனர். இது தேவையே இல்லை. வேர்ட் புரோகிராம் இதற்கான வசதியைக் கொண்டுள்ளது. 
வேர்ட் டேபிளில் அமைந்துள்ளவற்றில் எந்த கட்டத்தில் உள்ள தகவல்களை வரிசைப்படி அமைக்க வேண்டுமோ அதனைத் தேர்ந் தெடுக்க வேண்டும். பின் டேபிள் மெனுவில் சார்ட் என்று உள்ளதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தகவல்கள் வரிசைப்படுத்தப்படும். டெக்ஸ்ட், எண்கள் மற்றும் நாள்களை இதன் மூலம் வரிசைப்படுத்தலாம். 

டெக்ஸ்ட்டை கீழாக அல்லது மேலாக அமைக்க:

டாகுமெண்ட் ஒன்றில் நீங்கள் முக்கியத்துவம் காட்ட விரும்பும் சொற்களை மற்ற சொற்களிலிருந்து சற்று தூக்கியோ அல்லது இறக்கியோ காட்டுவது ஒரு ஸ்டைலாகும். இதனை வேர்ட் தொகுப்பில் எளிதாக அமைக்கலாம். 
1. எந்த சொற்களை இவ்வாறு அமைக்க வேண்டுமோ அவற்றை முதலில் தேர்ந்தெடுக்கவும். 
2. பின் இதில் ரைட் கிளிக் செய்து "Font" தேர்ந்தெடுக்கவும். 
3. "Font" என்ற பெயருடைய பல டேப்கள் உள்ள விண்டோ கிடைக்கும். இதில் "Text Effects" என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும். 
4. அடுத்து "Position" என்ற இடத்திற்கு அருகே உள்ள பல ஆப்ஷன்ஸ் உள்ள பெட்டியில் "Normal", "Raised" அல்லது "Lowered". என மூன்று ஆப்ஷன்ஸ் கிடைக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் எப்படி அமைய வேண்டும் என விருப்பமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். 
5. எல்லாம் முடிந்த பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

Tamil Vijaya Year | விஜய வருடம்

0 comments
தமிழ் வருடங்கள் 60ல் விஜய வருடம் 27ஆம் ஆண்டாக வருகிறது. தமிழ் வருடப்பிறப்பின் முதல் நாளில் பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். இவை கணிதப்படி பலன்களை கூறுகின்றன. ஜயம் என்றால் வெற்றி. 

விஜயம் என்றால் மிகப் பிரமாண்டமான வெற்றி. இந்த விஜய வருடத்தில் எந்தச் செயலைத் துவக்கினாலும், அது ஆயிரம் வருடங்களைக் கடந்து நிற்கவல்லது என்கின்றன ஞான நூல்கள். சூரியன் உதயமானதும், இருள் விலகி எப்படி வெளிச்சம் பாய்கிறதோ, அதேபோல், விஜய வருடம் துவங்கியதும் மங்கல காரியங்களும் சத் காரியங்களும் வரிசைகட்டி வந்தே தீரும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். 

பஞ்சாங்கத்தின் சிறப்பு எவரொருவர் இந்தப் புத்தாண்டு தினத்தில் பஞ்சாங்கம் வாசிப்பதைக் கேட்கிறாரோ, அவருக்கு அனைத்துவிதமான நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்! அவர்கள் விரோதிகள் இல்லாதவர்களாக, தீயகனவுகள் ஏதும் இல்லாதவர்களாக வாழ்வர்; புனித கங்கையில் குளித்த புண்ணியத்தைப் பெறுவர்; பசுவை தானம் செய்த பலனை அடைவர்; 

நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. பஞ்சாங்கம் என்பது திதி, வாரம், நக்ஷத்திரம், யோகம் மற்றும் கரணம் என ஐந்து அங்கங்களை, உறுப்புகளைக் கொண்டவை. 

இந்த விஜய வருடம் பற்றி திருக்கணித பஞ்சாங்கத்தில் என்ன கூறியுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்களேன். சூறாவளி மழை உலகத்தில் அனைத்து இடங்களிலும் சூறாவளி காற்றுடன் நல்ல மழை பெய்யும். புஞ்சை தானியங்கள் அதிக அளவில் அறுவடை ஆகும். சில குறிப்பிட்ட டெல்டா பகுதிகளில் மழையால் அதிக அளவு விவசாயம் பாதித்து விவசாயிகள் கடுமையான அளவில் பாதிக்கப்படுவார்கள். 

வட ஆற்காட்டில் ஏமாற்றிய மழை தவறாமல் இந்த வருடம் பொழிய வாய்ப்புள்ளது. வடக்குப் பிரதேசம் மிக அதிக அளவில் பாதிக்கும். மருந்து வகை, இரும்பு, விலை ஏறும். வெடி வகைகளுக்கு பல புதிய சட்டங்கள் அரசாங்கம் கொண்டு வரும். சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கும். நீர்த்தேக்கத்தில் இடி விழுந்து பாதிப்பு ஏற்படும். ஊட்டி, கொடைக்கானல் கர்நாடகா, இமாச்சலம் ஆகிய பகுதிகளில் கடுமையான மூடுபனி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கும். 

கரிசல் பூமி, மணல் பூமி இவைகளில் மரம், செடி கொடிகள் செழிப்பாக வளரும். இந்த ஆண்டு ஆதாயம் 53, விரையம் 56 என கூறப்பட்டுள்ளது. ஆதாயத்தை விட விரையம் கூடுதலாக இருப்பதால் அரசுக்கு வருவாய் குறையும். எதிர்க்கட்சிகள் கூச்சல் குழப்பம் இருந்தாலும் ஆளும் கட்சியை பாதிக்காது. கருப்பு பணம் கிடைக்கும் நல்ல மழை பெய்யும்.

கருப்பு பணம் கோடிக்கணக்கில் அரசாங்க கஜானாவிற்கு வரும். பொன், வெள்ளி, இவற்றின் விலை நிலையில்லாத நிலையில் இருக்கும். மதுபான வகையில் பல புதிய மாற்றங்கள் ஏற்படும். ரசாயனம், விவசாயத்துறையில் அரசு ஆர்வம் காட்டும். இரும்பு, சிமெண்ட், மணல் உள்ளிட்டவைகளின் விலை குறையும். வெடி பொருட்களின் கிடங்குகளில் தீ விபத்து ஏற்படும். 

கடலில் ராட்சத அலைகள் உருவாகும். இந்த விஜய வருடத்தின் ராஜா குரு பகவான். குரு பார்க்க கோடி தோஷங்களும் விலகும். எனவே, இந்த விஜய வருடம் நமக்கும் நம் நாட்டுக்கும் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்று கூறப்பட்டுள்ளது

Tamil New-year Rituals | தமிழ் புத்தாண்டு: கனி காணுதலும் கை நீட்டமும்…

0 comments
ஒரு வருடத்தின் தொடக்கம் என்பது மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். தொடக்கம் சரியாக இருந்தால் அந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பது நம்பிக்கை.

சித்திரை முதல் நாளான தமிழ் வருடப்பிறப்பும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே வீட்டில் கனி காணுதலோடு புத்தாண்டை தொடங்குகின்றனர்.

தமிழ்நாட்டில் கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த கனி காணுதல் சிறப்பாக நடைபெறுகிறது. குமரி, நாகர்கோவில், திருப்பூர், கோவை போன்ற ஊர்களில் கனி காணுதல் நடைபெறுவது வழக்கம்.

12-kanikanuthal-600

வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள், மாதுளை இப்படி பலவகை பழங்களை ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து மையப்பகுதியில் புதிய ரூபாய் நோட்டுக்களை வைத்து, அதன் மேல் தங்க, வெள்ளி நகைகளை வைத்து அலங்கரிப்பார்கள்.

வருடப்பிறப்பிற்கு முதல்நாள் இரவே பூஜை அறையில் ஒரு கண்ணாடியை வைத்து அதன் முன்பாக இந்த பழத்தட்டினை வைத்து விடுவார்கள். விடிந்த உடன் குழந்தைகளின் கண்களை மூடிக்கொண்டு பூஜை அறைக்கு அழைத்து செல்லும் அம்மா அந்த பழத்தட்டிலும், கண்ணாடியிலும் விழிக்கச் சொல்வார்கள். இதுபோன்ற மங்கலப் பொருட்களைப் பார்த்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

கை நீட்டம் கொடுங்களேன்...

குளித்து முடித்து புத்தாடை உடுத்தி சாமி கும்பிட்ட பின்னர், பெரியவர்கள், தட்டில் வைத்த புது ரூபாய் நோட்டுக்களை எடுத்து வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள் இதனை கைநீட்டம் என்கின்றனர். இதன் மூலம் ஆண்டுதோறும் பணம் குறையாமல் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும். இந்த பழக்கம் மலையாள மக்களிடம் இருந்து வந்ததுதான் என்றாலும் அன்றைய தினம் கனி காணுதலையும், கை நீட்டம் நிகழ்ச்சியையும் பார்க்கும் போது புது வருட தினத்தன்று உற்சாகத்தைத்தான் தருகிறது.

மங்களங்கள் அருளும் மரகத லிங்கம்

0 comments
சப்த லிடங்கத் தலங்கள் என்று சிவ பெருமானுக்கு ஏழு தலங்கள் உண்டு. உளி
படாமல் அமைந்த சிவலிங்க திருமேனிகளை லிடங்கர் என்பர். அப்படிஅமைந்த ஏழு
தலங்களே சப்த லிடங்கத்தலங்கள்.

தியாக விடங்கர், அவனி விடங்கர், புவன விடங்கர் என்னும் அந்த வரிசையில்
ஆதி விடங்க பெருமான் எழுந்தருளியுள்ள தலம். திருக்கார வாசல் தேவாரத்தில்
இத்தலம் திருக்கார வாயில் என்று குறிப்பிடப்படுகிறது.

வெள்ளாற்றின் மேற்கரையில் அநமைசந்த ஆலயம் . இறைவன் பெரியர் கண்ணாயிர நாத
கல்வெட்டுகளில் தருக்காறாயிரம் நாயனார் என்றும் இத்தலத்து இறைவன் பெயர்
காணப்படுகிறது.

பிரம்மனுக்கு ஆயிரம் கண் காட்சியருளியது: ஆணவம் கொண்ட பிரம்மன் தன் பிழை
பொறுக்கத் தவம் செய்தததால் அவனுக்கு ஆயிரம் கண்களுடன் இறைவன்
காட்சிதந்தார். அதனால் இவ்விடத்து ஈசனுக்கு கண்ணாயிர நாதன் என்ற பெயர்
ஏற்பட்டது. ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் விசுவநாதர் பரிவாரங்க்
எழுந்தருளியுள்ளார். பிராகாரத்தில் விநாயகர், முருகன், நடராஜ பெருமான்
சந்நதிகள் உள்ளன. தெற்க பார்த்தவாறு அம்பிகை சந்நதி அம்பிகை நின்ற
திருக்கோலத்தில் மேற் நோக்கிய திருககரங்களில் அக்கமாலையும் தாமரையு ம்
துலங்க காட்சி தருகிறார்.

இவ்வாலயத்தில் உள்ள மரகத லிங்கம் பிரசித்தி பெற்றது. இதற்கும் ஆதி
விடங்கர் என்றே பெயர். இந்த சிவலிங்க திருமேனிக்கு தினமும் காலையில்
அபிஷேகம் நடைபெறுகிறது. தல விருட்சம் பலாமரம் கோயிலுக்கு அழகிய
மதில்களும், கோபுரங்களில் அழகான கதை பொம்மைகளும் உள்ளன.

கபால முனிவர் கதை: கபாலமுனிவர் அம்மையை நோக்கி தவம் இருந்தார். அவருடைய
தவ நெருப்பை தாங்க முடியாத தேவர்கள் இறைவனிடம் சென்று விரைவில் காபல
முனிவருக்கு அருள் வழங்க வேண்டியுள்ளனர்.
இறைவனும் அவ்வாறே அருள் வழங்கி இன்று முதல் இத்தலம் உன் பெயரால் கபாலவனம்
என்றே வழங்கப்படும் எனஅருளினார். இத்தலத்தில் ஆதிவிடங்கர் எழுந்தருறளி
இருப்பது வீரசிங்காசனத்தில் வீர சிங்காசனம் என்பது நான்கு பக்கங்களிலுளம்
சிங்கங்ளை பதுமைகளாக கொண்டு அமைய பெற்றது. அமாவசை, சோமவாரம், சூரிய
சந்திர கிரகணம் ஆகிய புண்ணிய காலங்களில் இத்தலத்தில் உளள தீர்த்தங்களில்
நீராஸ்ரீடுபவர்கள் பாவங்கள் நீங்கி, சிவனருள் பெறுவர்.

கடுக்காய் பிள்ளையார்
இத்தலத்தில் கடுக்காய் பிள்ளையார் சந்நதிஎன்று இங்குள்ள திருக்குலத்தின்
கரையில் உள்ளது. விநாயகரின் பெயர் தான் கடுக்காய் பிள்ளையார்.
இதற்கு ஒரு கதை உண்டு.
வணிகன் ஒருவன் சாதிக்காய் மூட்டைகளை கொண்டு வந்தான். அதற்கு வரிகட்ட
வேண்டி வந்தபோது சாதிக்காய் மூட்டைகளை கடுக்காய் மூட்டை என்று பொய் கூறி
குறைவான வரி கட்டினான். விநாயகபெருமானின் ஆணையின் பேரில் சாதிக்காய்
மூட்டைகள் அனைத்தும் உண்டமயிலேயே கடுக்காய் மூட்டைகளாக ஆகிவிட்டன.
அதிர்ச்சியுள்ள வணிகன், தன் தவறுக்கு வருந்தி பிள்ளையாரிடம் மன்னிப்பு
கோரினான். விநாயகரின் கருணையினால், கடுக்காய்கள் மீண்டும் சாதிக்காய்களாக
மாறின.
இக்காரணத்தால் இந்த பிள்ளையாருக்குகடுக்காய் பிள்ளையார் என்று பெயர் ஆயிற்று
மரகத லிங்கத்தால் மகிமை பெற்றதும், சப்தவிடங்க தலங்களுள் ஒன்றாக
விளங்குவதுமான திருக்காரவாசல் சென்று ஆதி விடங்கரை வணங்குவோர் வாழ்வில்
குறை எல்லாம் நீங்கி நிறைவாழ்வு பெருவர்.
திருவாரூரிலிருந்து 8 கி.மீ. தொலைவு. அடிக்கடி பேருந்து உண்டு. பேருந்து
செல்லும் சாலையோரமாகவே ஆலயம் அமைந்துள்ளது.

2013ல் இந்திய இணையம்

0 comments
இந்தியாவில் இணையப் பயன்பாடு 2013 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளில்,
அதன் பொற்காலத்தைக் காண இருக்கிறது எனப் பலரும் கருத்து
தெரிவித்துள்ளனர். இணைய வழி வர்த்தகம் மிக வேகமாக வளரும் என்றும், அதன்
சார்பான இணையப் பயன்பாடு தற்போது இருப்பதனைக் காட்டி லும் அதிக வளர்ச்சி
பெறும் என்றும் கணிக்கப் பட்டுள்ளது. இந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற
இருப்பதைக் கவனத்தில் கொள்ளும் முன், இந்த 2013 ஆம் ஆண்டில் எந்த எந்த
வகைகளில், பிரிவுகளில் இணைய வளர்ச்சி இந்தியாவில் இருக்கும் என்பதனைக்
காணலாம்.
ஏறத்தாழ 15 கோடி இணைய பயனாளர்களுடன், இந்தியா உலக அளவில் மூன்றாவது
இடத்தைப் பெற்றுள்ளது. 57.5 கோடி பேருடன் சீனா முதல் இடத்திலும், 27.5
கோடி பேருடன் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஜனத்தொகையுடன்
கணக்கிடுகையில், இந்தியாவில் இணையப் பயனாளர்கள் 12%. சீனாவில் இது 43%
ஆகவும், அமெரிக்காவில் 80% ஆகவும் உள்ளது. குறைவாக உள்ளதாலேயே,
இந்தியாவில் வரும் ஆண்டுகளில், மிக வேகமான அளவில் வளர்ச்சி வீதம்
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளர்ச்சிக்கான சந்தர்ப்பங்களும்
சூழ்நிலைகளும் விரிவடைந்து வருகின்றன. இணைய வழி வர்த்தகம், இணையத்தில்
விளம்பரம், சமூக ஊடக வளர்ச்சி, தேடல், இணைய வெளி தகவல்கள், இணைய வழி
வர்த்தக சேவை மற்றும் சார்ந்த நடவடிக்கைகள் என பல பிரிவுகளில் இந்த
வளர்ச்சியைக் காணலாம். குறிப்பிட்டு சில தளங்களில் 2013 ஆம் ஆண்டில்,
மேற்கொள்ளப்பட இருக்கிற வளர்ச்சி குறித்த தகவல்கள் கீழே தரப்படுகின்றன.

1. பயனாளர்கள் 15% கூடுதல்:


நடப்பு நிதியாண்டில், மேலும் 3 கோடி பேர் இணையத்தைப் பயன்படுத்தத்
தொடங்குவார் கள். மொத்த இணையப் பயனாளர் எண்ணிக்கை 18 கோடியாக உயரும்.
அதாவது, இந்திய ஜனத்தொகையில் இது 20% ஆக இருக்கும்.

2. இணைய நேரம் அதிகரிக்கும்:

இணையத்தில், இந்தியாவில் உள்ள ஒருவர் சராசரியாக வாரம் ஒன்றுக்கு 13 மணி
நேரம் செலவிடுகிறார். இது இனி 16 வாரமாக உயரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரம் பெரும்பாலும், இணைய வர்த்தகம், சமூக
தளங்கள், போட்டோ மற்றும் வீடியோ பகிர்வு, இணையப் பயன்பாடுகள், வங்கி
மற்றும் பிற நிதி பரிமாற்றங்களில் மேற்கொள்ளப்படும்.

3. மொபைல் இணையப் பயன்பாடு:

மொபைல் வழி இணையப் பயனாளர் எண்ணிக்கை, இந்த ஆண்டில் 10 கோடியாக உயரும் என
எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த எண்ணிக்கை 9 கோடியே 50 லட்சமாக
உள்ளது. உயர்வு 6% லிருந்து 10% வரை இருக்கலாம்.

4. பெண்கள் மற்றும் வீட்டில் அதிகப் பயன்பாடு:

இதுவரை இணையப் பயன்பாடு, ஆண்களே அதிகம் மேற்கொள்வதாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டில் அதிகம் பெண்களை இணையத்தில் எதிர்பார்க்கலாம். அதே போல கல்வி
நிலையங்கள் மற்றும் அலுவலகங்களில் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படும்
இணையம், இனி வீடுகளிலிருந்தும் அதிகம் பயன்படுத்தப்படும். இதற்குக்
காரணம், குறிப்பிட்ட சாரார் மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த இணையம்,
இனி, பொதுமக்கள் சாதனமாக மாற இருக்கிறது.

5. இணைய வழி வர்த்தக வருமானம் உயரும்:

இணைய வழியில் கிடைக்கும் வர்த்தக வருமானம் 2012 ஆம் ஆண்டில், 55 கோடி
டாலராக இருந்தது. இது இந்த ஆண்டில் 90 கோடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.

6. வளரும் நகரங்களில் இனி வளரும்:

தற்போது குறிப்பிட்ட சில பெரிய நகரங்களில் மட்டுமே அதிகம் காணப்படும்
இணைய வர்த்தகம் (45% முதல் 65% வரை ), இனி வளரும் நகரங்களிலும் அதிகம்
இருக்கும். இந்தியாவின் முதல் 40 நகரங்களை அடுத்து உள்ள நகரங்களே இவை.

7. இணைய விளம்பரம் அதிகரிக்கும்:

இந்திய இணையத்தில் வளர்ச்சி காண இருக்கும் துணைத் தொழில் பிரிவுகளில்,
இணைய விளம்பரம் முதல் இடம் பெறும். 2012ல், இந்த வகை வருமானம் 30 கோடி
டாலராக இருந்தது. நடப்பு ஆண்டில், இது இரு மடங்காக உயர்ந்து 60 கோடி
டாலராக வளரும்.

8. இணைய நிறுவனங்களுக்கு மூலதன நிதி:

புதிய பிரிவுகளில், பல இணைய சேவை நிறுவனங்கள் தோன்றி வருகின்றன. ஆனால்,
எப்போதும் போல இவற்றிற்கான மூலதன நிதி கிடைப்பது கடினமாகவே உள்ளது. இந்த
ஆண்டில் இது சிறிது எளிமைப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
இணையப் பயன்பாடும் வர்த்தகமும் அதிகரித்து வருவதால், இப்பிரிவில்
ஈடுபட்டு வரும் இணைய நிறுவனங்கள் இணைந்து செயல்படும் சூழ்நிலை ஏற்படலாம்.
அதே போல, மும்பை, டில்லி, பெங்களூரு, சென்னை, புனே என்று சில குறிப்பிட்ட
நகரங்களில் மட்டும் இந்த நிறுவனங்கள் செயல்படாமல், அடுத்த நிலை
நகரங்கலில் இவை தொடங்கப்பட்டு செயல்படலாம்.

புளூடூத் பெயர் வரக் காரணம்

0 comments
900 ஆண்டுகளில் ஹெரால்ட் புளுடூத் என்ற மன்னர் டென்மார்க்கை ஆண்டு
வந்தார். டென்மார்க்கையும் நார்வே நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்து பின்
கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார்.

தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச்
சின்னத்தினை உருவாக்கினார். பின் 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில்
மரணமடைந்தார். இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின்
(டென் மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான்
உருவாக்கினர்.

இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில்,
தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர்.
மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும் பெயருக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை

Fwd: [New post] இந்தியாவில் பேஸ்புக் மக்கள் 7.1 கோடி

0 comments
உலகின் மிகப் பெரிய சமூக இணைய தளமாக இயங்கும் பேஸ்புக், சென்ற டிசம்பர் வரையில், இந்தியாவில் 7 கோடியே 10 லட்சம் பதிவாளர்களைக் கொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளை அடுத்து, இந்தியாவில் தான் அதிகம் பேர் பேஸ்புக் இணைய தளத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். மொத்தத்தில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 10 முதல் 15 கோடியாக இருப்பதாகக் கணக்கிட்டாலும், இந்திய இணையப் பயனாளர்களில் பாதிப்பேருக்கும் மேலானவர்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதில் பேஸ்புக் பெருமை கொள்ளலாம். 
உலக அளவில் பேஸ்புக் நேயர்களைக் கணக்கிட்டால் இது வெறும் 7% தான். அண்மையில் பேஸ்புக் தளப் பதிவாளர் எண்ணிக்கை பன்னாட்டளவில் நூறு கோடியைத் தாண்டியது என்ற தகவல் வெளியானது. பேஸ்புக் தளத்தினைப் பொறுத்தவரை, இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேஷியா நாடுகளில் தான் வாடிக்கையாளர் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது. மொத்த வாடிக்கையாளர்களில், 84% பேர் அமெரிக்கா தவிர்த்து மற்ற நாடுகளில் உள்ளனர். பிரேசில் 2011ல், பேஸ்புக் தள நேயர்களின் எண்ணிக்கையை 81% உயர்த் தியது. மொத்த பயனாளர்கள் 6.70 கோடி பேர். இந்தோனேஷியா 25% வளர்ச்சி மேற்கொண்டு, 2012ல் 6 கோடி பேரைக் கொண்டிருந்தது. 
தினந்தோறும் பேஸ்புக் தளத்தினைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், 2012ல் 28% ஆக உயர்ந்தது. இவர்களில் அதிகம் பேர், பிரேசில், இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களாவர். 2012 செப்டம்பரில் தினந் தோறும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 58 கோடியே 40 லட்சம் ஆகும். 
ஆனால், அனைத்து நாடுகளிலும், மொபைல் சாதனங்கள் வழியாக பேஸ்புக் தளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.சென்ற டிசம்பர் முடிவில், இவர்களின் எண்ணிக்கை 15.7 கோடியாகும். மற்ற 52.3 கோடி பேர் மொபைல் சாதனங்கள் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர் களில் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத் தினார்கள். இருப்பினும் வருங்காலங்களில், மொபைல் வழி பேஸ்புக் பயன்படுத்து பவர்களே அதிகமாக இருப்பார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 
2004ல் தொடங்கப்பட்டு, பிப்ரவரி 4 முதல் தன் ஒன்பதாவது ஆண்டு இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது பேஸ்புக். ஆர்குட், யாஹூ 360 போன்றவற்றின் வாடிக்கையாளர்கள் படிப்படியாய் குறைந்துவிட, பேஸ்புக் வேகமாக வளர்ந்து, தானே முதல் இட சமூக இணைய தளம் என்ற பெயரினைப் பெற்றுள்ளது.

கணையத்தின் காவலன் – சலபாசனம்

0 comments
சலப என்றால் வெட்டுக்கிளி. இது ஒரு பூச்சியின் பெயர். இந்த ஆசனத்தின்
உச்ச நிலையில் உடல், ஒரு வெட்டுக்கிளியைப் போல தோற்றமளிக்கிறது.

தரை மீது குப்புறப்படுங்க. உள்ளங்கைகள் தரையில் படர்ந்திருக்க வேண்டும்.
அப்ப இந்த நேரத்துல கைகள் ரெண்டுமே தரை மீது உரசியபடி நீட்டியிருக்கும்.
தலையைச் சற்றே தூக்கி, முகவாயை தரையைத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.
அதே சமயத்துல கால்கள் ரெண்டும் இணைந்து ஒரே நேர்கோடு போல நீட்டி இருக்க
வேண்டும். அப்போது உள்ளங்கால்கள் மேல்நோக்கி அமைந்திருக்கணும். அதாவது
தலை முதல் கால்வரை உடல் ஒரே நேர்கோட்டில் அமைதல் வேண்டும்.

இரு கைகளின் முஷ்டியையும் இடுப்பின் கீழ்ப்பகுதியில் வைத்துக் கொள்ளவும்.
உள்ளங்கால்களை மேல்நோக்கியபடியே, இடுப்பிலிருந்து இரண்டு கால்களையும்
இணைத்தபடியே மேலே தூக்கவும். முகவாய் தரைமீது தொட்டிருக்கவேண்டும்.
மார்பு, கைகள், இடுப்புப் பகுதிவரை தரை மீது படர்ந்தும், இடுப்புக்கீழான
பகுதிகள் உள்ளங்கால்கள் வரை முக்கோணத்தின் ஒரு சாய்வு போல மேல்நோக்கித்
தூக்கியிருக்க வேண்டும். அந்த நிலையில் ஒரு நிமிடம் நீடித்திருக்க
வேண்டும்.

இதுவே சலபாசனம்.

உடல் கீழ்நோக்கிச் செல்லும் போதெல்லாம் மூச்சை வெளியேவிட்டு, மேலே
எழும்போது மூச்சை உள்ளே இழுத்தல் வேண்டும். உச்ச நிலையில் முழங்கால்கள்
நேராக இருக்க வேண்டும். இந்தச் சலபாசனம், புஜங்காசனத்தின் உபரி பலன்களைப்
பூத்தி செய்கிறது.

உடல் இலேசாக, சுறுசுறுப்பானதாக, நன்கு செயல்படக்கூடியதாக ஆகிறது.
புலன்களைக் கட்டுப்படுத்துகிறது.

மலச்சிக்கல், வாயுத் தொல்லை, நீரிழிவு, இடுப்பு வலி போன்றவற்றை
எதிர்த்துப் போராடுகிறது. பொதுவாக இடுப்பு, முதுகின் கீழ்பகுதி,
இடுப்பெலும்பு, வயிறு, தொடை, சிறுநீரகம், கால்கள் ஆகியவை ஊக்கம்
பெறுகின்றன. மிக முக்கியமாக கணையம் நன்கு செயல்படுகிறது. அதனாலே இந்த
ஆசனம், கணையத்தின் காவலன் எனப்படுகிறது.

சிறுநீரக் கோளாறுகளால் அவதிப்படுபவர்கள், குடல் வால் மற்றும் அதிக ரத்த
அழுத்தக்காரர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.

சைப்ரஸ் சிக்கல்!

0 comments
உலகப் பொருளாதாரத்தை லேசாக ஆட்டம் காண வைத்திருக்கும் சமீபத்திய நாடு,
சைப்ரஸ். ஐரோப்பிய யூனியனின் ஓர் குட்டித் தீவு, சைப்ரஸ். யூரோதான் இதன்
நாணயம்.

ஏன் இவ்வளவு சத்தம்? இத்தனை ஆண்டுகளாக, சைப்ரஸ், கிரேக்கப் பொருளாதாரத்தை
நம்பியே இருந்தது. கிரேக்கக் கடன் பத்திரங்களி" பெருமளவு முதலீடு செய்தன
சைப்ரஸின் முக்கிய வங்கிகள். சென்ற ண்டு கிரேக்கப் பொருளாதாரம் சரியத்
தொடங்கியவுடன், சைப்ரஸுக்குச் சளி பிடித்தது. அதன் முதலீடுகளின் மதிப்பு
பெருமளவு குறைந்த நிலைமை கிடுகிடுவென மோசமானது.

உடனே சைப்ரஸ், ரஷ்யாவிடம் கையேந்திப் போனது, ஏனெனில், சைப்ரஸ் வங்கிகளில்
முதலீடு செய்திருப்பவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பணக்கார
ரஷ்யர்கள்தாம். அவர்களுடைய நல்ல/அல்ல பணத்தைப் பாதுகாக்கும் இடமாக இத்தனை
ஆண்டுகளாக சைப்ரஸ் இருந்தது.

ரஷ்யா கொடுத்த 2.5 பில்லியன் யூரோ கடன் தொகையும் போதவில்லை. வேறு
வழியில்லாமல், ஐரோப்பிய யூனியனிடம் மடிப்பிச்சை ஏந்தத் தொடங்கினார்
சைப்ரஸ் அதிபர் நிகோஸ் அனஸ்டாசியடஸ்.

பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய
வங்கி, ஐ.எம்.எஃப் ஆகியவை இணைந்து பத்து பில்லியன் யூரோவை வழங்கி,
சைப்ரஸைக் காப்பாற்ற முன்வந்தன. ஆனால், அதற்கு முன் ஒரு கண்டிஷன்.
சைப்ரஸ் வங்கிகள் தம் பங்காக 5.8 பில்லியன் யூரோக்களைத் திரட்டவேண்டும்.

அதிபர், சைப்ரஸ் வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்புகள், கடன்கள்
மீதெல்லாம் வரி போடத் தீர்மானித்தார. ஒரு லட்சம் யூரோவுக்கு மேல்
சேமிப்பு வைத்திருப்போருக்கு 9.9 சதவிகித வரி. அதைவிடக் குறைவான
சேமிப்புகளுக்கு 6.75 சதவிகிதம் வரி. சாதாரண மக்கள் ஆடிப்
போய்விட்டார்கள். ஒரு லட்சம் யூரோ சேமிப்பெல்லாம் ரஷ்யர்களுடையது. அதைப்
பற்றி கவலை இல்லை. ஆனால், சின்ன சேமிப்புகளின் தலைமேல் கைவைத்ததுதான்
பெரிய அதிர்ச்சி.

ஓடு ஏ.டி.எம்.மைத் தேடி. திட்டம் அமலாவதற்கு முன், வங்கிச் சேமிப்புகளை
எல்லாம் வெளியே எடுத்துவிட வேண்டும். பரபரப்பு நாடெங்கும். உடனே வங்கிகளை
எல்லாம் மூடிவிட்டார் அதிபர். இருக்கும் பணத்தை மக்கள் எடுத்துவிட்டால்?

உலக நாடுகள் கவலை கொண்டது இங்குதான். ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த மக்கள்,
வங்கிகளில் இருந்து தம் சேமிப்புகளை எல்லாம் எடுத்துவிட்டால் என்னாவது?
மிகப் பெரிய அபாயம். ஒரே சமயத்தில் மக்களுக்கு எப்படிப் பணத்தைத்
திரும்பத் தர முடியும்? சேமிப்புகள்தானே வங்கிகளின் உயிர்நாடி. அது
நீங்கினால்?

பயம், உலகச் சந்தையைப் பற்றிக் கொண்டது. சைப்ரஸைக் காக்காவிட்டால்,
தங்கள் பொருளாதாரங்களும் குட்டிக் கரணம் அடித்தவிடும் அபாயம் உலக
நாடுகளுக்குத் தெரியாதா என்ன?
நல்லவேளையாக, சைப்ரஸ் நாடாளுமன்றம், மக்கள் மேல் வரிவிதிக்கும் திட்டத்தை
எதிர்த்து வாக்களித்தது. அதுவும் சின்ன முதலீடுகளைக் காக்க வேண்டியது
அவசியம் என்பதை அனைவரும் உணர்ந்தனர். சென்ற வாரம் முழுவதும் சைப்ரஸில்
இருந்த பதற்றம் லேசாக இப்போது தணித்தது. இப்போது ஐரேப்பிய யூனியன்,
சைப்ரஸ் வங்கிகள் மூழ்கிவிடாமல் தடுக்க, பொருளாதார உதவி செய்ய
ஒத்துக்கொண்டு இருக்கின்றன. இந்த உதவியைப் பெற 5.8 பில்லியன் யூரோக்களை
சைப்ரஸ் திரட்டித் தான் ஆக வேண்டும். ஆனால், ஒரே ஒரு மாற்றம், சைப்ரஸ்
தனது சிறிய முதலீட்டாளர்களுக்கு வரி விதிக்காது.

உலகப் பொருளாதாரம் லேசாக மூச்சுவிடுகிறது. இப்போதைக்கு சைப்ரஸ்
பொருளாதாரப் பிரச்னை மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுத்து விட்டோம் என்ற
கணநேர இளைப்பாறல். இது எவ்வளவு தூரம் தாங்கும், மீண்டும் சைப்ரஸ்
பொருளாதாரம் சரியுமா என்றெல்லாம் சொல்வதற்கு இல்லை. இப்போதைக்கு தீ
அணைக்கப்பட்டு இருக்கிறது. அவ்வளவுதான்!

நன்றி-கல்கி

டூத் பேஸ்ட் டெரர்

0 comments
அன்றாடம் நாம் பயன்படுத்தும் டூத் பேஸ்ட்டில் ப்ளோரைடு இருப்பதாக
விளம்பரங்கள் வரிசை கட்டுது. அதுவும் தெரியும். ஆனால், தெரியாதது.

புகையிலையில் புதைந்து கிடக்கும் நிக்கோட்டின் என்கிற கொடிய ரசாயனத்தை
டூத் பேஸ்ட் டூத் பவுடர்களில் சேர்க்கிறார்கள் என்பது புதுதில்லியை
சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பார்மாசூட்டிகல்ஸ் அண்ட் ரிசர்ச் நிறுவனம்
இதனை உறுதி செய்திருக்கிறது. இதில் அதிர்ச்சியான விஷயம் நாட்டில்
பிரபலமான பத்தில் ஆறு நிறுவனத் தயாரிப்புகளில் இந்த ரசாயனம்
சேர்க்கப்படுவதாக வரும் தகவல்களால் மக்களிடையே பீதி, பயம்.

சிகரெட் தயாரிப்புக்கு அடிப்படை புகையிலை புகைபிடிப்பவர்கள் அந்த
பழக்கத்துக்கு தொடர்ந்து அடிமையாக முழுமுதற் காரணமான நிக்கோட்டின் ஒரு
கொடிய விஷம். அதனால் உதடு, வாய், நுரையீரலில் கேன்சர் ஏற்படுவது ஏற்கனவே
நிரூபிக்கப்பட்டிருக்கு. பொதுவாக பற்களில் வரும் பாதிப்புகளை தடுக்க டூத்
பேஸ்ட் பவுடர்களில் அவ்வப்போது புதிய ரசாயனங்கள் சேர்க்கப்படுவது உண்டு.
அதனடிப்படையில் ப்ளோரைடு இருக்கும் டூத் பேஸ்ட், பவுடரை தொடர்ந்து
பயன்படுத்தியபோது பல்லின் மேல்பூச்சு (எனாமல்) கரைந்து, பற்களில் கூச்சம்
வருவதாக புகார்கள் வந்தன. அதானல் பேஸ்ட், பவுடர்களில் ப்ளோரைடின்
அளவுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அந்த வரிசையில் புதிதாக நிக்கோட்டின் சேர்க்கப்படுவதாக சொல்கிறார்கள்.
அந்த வரிசையில் புதிதாக நிக்கோட்டின் சேர்க்கப்படுவதாக சொல்கிறார்கள்.

இது குறித்து பிரபல டென்டிஸ்ட் ஒருவரிடம் பேசினோம். நிக்கோட்டின்
மணமில்லாத போதைதரும் ரசாயன பொருள், நிறம் கறுப்பு, ஒருவர் பிரெஷ்
பண்ணும்போது பேஸ்ட், பவுடரில் இருக்கும் நிக்கோட்டின் உதடு, வாய்,
பற்களில் படியும்.
விழுங்கும்போது குடலுக்குள் போய்விடும் ஈறுகளில் ரத்தம், பற்குழி சொத்தை
என்பதையெல்லாம் ஒப்பிடும் போது நிக்கோட்டின் ஏற்படுத்தும் பாதிப்பின்
வீரியம் கொடூரமானது என எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார். சற்றே திகில்
ரகமான இந்த ரசாயனம் அல்கலாய்ட் வகையை சேர்ந்தது. தேயிலை, காபியில்
அதிகமிருக்கும். இதனை டூத் பேஸ்ட்டில் பயன்படுத்துவதாக சொல்வது தான்
அதிர்ச்சி. காரணம்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்க முடியாத
பொருள் பேஸ்ட், பவுடர், ஒரு முறை முறை நிக்கோட்டின் சுவையை நாக்கு
உணர்ந்து கொண்டால் தொடர்ந்து அதற்கு அடிமையாகும் ஆபத்து இருக்கு.

உதாரணமாக சிகரெட் பிடிப்பவர்கள் அந்த பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல்
இருக்க நிக்கோட்டின் தான் காரணம் என்கிறார்கள். இது உண்மைதான்
நிக்கோட்டின் தொடர்ந்து உடலுக்குள் போனால் ரத்த அழுத்தம் முதல் நரம்பு
மண்டலம் வரை பாதிக்கம் ஆபத்து உண்டு என எச்சரிக்கிறார் பிரபல பயட்டீஷியன்
கௌசல்யா.

டூத் பேஸ்ட், பவுடர்களில் நிக்கோட்டின் சேர்ப்பது இரண்டு ஆண்டுகளுக்கு
முன்பே தொடங்கிவிட்டது. ஆய்வக சோதனைகள் அதனை உறுதி செய்த பின்வரும்
நிறுவனங்கள் தவிர்ப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் சொல்லப்படுகிறது.
ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவு மட்டுமே நிக்கோட்டினை பயன்படுத்துவதாக
சொல்லி நிறுவனங்கள் தப்பிக்க பார்ப்பது தான் வேடிக்கை.

இது குறித்து கான்சர்ட் நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சந்தான ராஜன்.
பொதுவாக ரசாயன சேர்மங்களை மக்களின் அன்றாட உணவுப்பொருட்களில் சேர்க்க
கூடாது. ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவு என்று சொல்லி நிறுவனங்கள்
தப்பித்துவிடும். ஆனால் டூத் பேஸ், பவுடர் குழந்தைகளும் பயன்படுத்தும்
பொருள் அப்படியிருக்க அதில் நிக்கோட்டின் சேர்ப்பது எதற்காக என்பது
புரியவில்லை. போட்டியை சமாளிக்க இப்படி செய்தால் அது தவறுதான் என்கிறார்
சந்தானராஜன்.

நன்றி - குமுதம்

பாய்பிரண்ட் தொல்லைகள்!

0 comments
பருவ வயதுப் பெண்கள் `பாய்பிரண்ட்' உடன் சுற்றித் திரிவதை இயல்பாக
பார்க்க முடிகிறது. ஆண் நண்பர்களை தங்கள் அழகுக்கு கிடைத்த அங்கீகாரமாக
அனேக பெண்கள் நினைக்கிறார்கள். பாய் பிரண்ட் இல்லையென்று வருத்தப்படும்
பெண்களும் உண்டு.

பாய்பிரண்டுகளுடன் இருப்பதே `ஜாலி` என்ற நினைப்பும் பெண்களிடம்
இருக்கிறது. இளம்பெண்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, பெற்றோருக்குள்
எப்போதுமே பிள்ளைகள் மீது உரிமையுள்ள பொறுமல் இருந்து கொண்டுதான்
இருக்கிறது.

`ஆண் பெண் நட்பால் கலாசாரமே சீரழிந்து வருகிறது` என்ற எண்ணமும்
சமூகத்தினரிடையே உள்ளது. பள்ளி – கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும்
சேர்ந்து படிக்கிறார்கள். இது குழந்தைப் பருவத்திலேயே இயல்பாக பழகும்
வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

ஆணும் பெண்ணும் சமூகத்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல்லதுதான் என்றாலும்,
இப்படி இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான்
இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம். பணத்தை வாரி இறைத்து பெண்களை
வளைக்கும் பாய்பிரண்டுகளும் பெருகி வருகிறார்கள்.

வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன்
இருப்பவர்கள் கொஞ்சப்பேர் தான். எனவே ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம்
எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும்.

அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும்,
தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

விண்டோக்களைக் கையாளும் வழிகள்

0 comments
பெர்சனல் கம்ப்யூட்டரில் பணியாற்று கையில், நிறைய விண்டோக்களைத் திறந்து
வைத்து செயல்படுவது நம் வழக்கமாகி விட்டது. இது நம் வேலைத் திறனை
ஓரளவிற்குப் பாதிக்கவும் செய்திடலாம். பல வேளைகளில், நாம் பணியாற்றும்
விண்டோ தவிர மற்றவற்றை மூடுவது நமக்கு நல்லதாகிறது. ஒரு விண்டோவினை
மட்டும் திறந்து வைத்து செயல்படுவது நமக்கும் எளிதாகிறது. விண்டோஸ் 7
இதற்கான சில வழிகளைக் கொண்டுள்ளது. இந்த வழிகளை இரண்டு பிரிவுகளாகப்
பிரிக்கலாம். முதல் செயல்பாடு, நாம் செயல்படும் விண்டோ தவிர மற்ற
அனைத்தையும் சுருக்கி வைப்பது. இரண்டாவது அனைத்து விண்டோக்களையும்
சுருக்கி வைப்பது.

1. ஏரோ ஷேக் (Aero Shake):

விண்டோஸ் 7 சிஸ்டம் தொகுப்பு தரும் ஒரு நவீன தொழில் நுட்ப வசதி இது.
நீங்கள் செயல்படும் விண்டோவினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் மேலாக உள்ள
பிரிவில், லெப்ட் கிளிக் செய்திடவும். பின்னர், உங்கள் மவுஸை சற்று
அசைக்கவும். விண்டோவும் அசையும். இப்போது, நீங்கள் செயல்பட்டு, ஷேக்
ஆகும் விண்டோ தவிர திறந்திருக்கும் மற்ற விண்டோக்கள் அனைத்து
விண்டோக்களும் மறைந்து போகும். இந்த வசதி விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம்,
ப்ரபஷனல், அல்ட்டிமேட் மற்றும் என்டர்பிரைஸ் எடிஷன் பதிப்புகளில் மட்டும்
கிடைக்கிறது.

2. விண் +ஹோம்:

உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் விண்டோஸ் 7 பதிப்பில் ஏரோ ஷேக் வசதி
இல்லையா? கவலைப்பட வேண்டாம்; இந்த விண்டோக்களை மூடும் வேலையை இரு கீகள்
மூலம் மேற்கொள்ளலாம். Win + Home கீகளை ஒரு சேர அழுத்தவும். செயல்பட்டுக்
கொண்டிருக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தும் மறைவதைப் பார்க் கலாம். விண்
ஷேக் வசதி விசேஷமாக உள்ளதே; ஆனால் உங்கள் கம்ப்யூட்டரில் அது இல்லையே
என்று கவலைப்பட்டு, அந்த வசதியினை அனுபவிக்க வேண்டும் என எண்ணினால்,
விண்ஷேக் என்ற அப்ளிகேஷன் புரோகிராமினை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி

http://members.chello.nl/h.h.j.f.beens/WinShake/Functions.htm

3. விண்டோக்களைச் சுருக்க:

திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் சுருக்கி டாஸ்க் பாருக்குக்
கொண்டு செல்ல வேண்டுமா? நீங்கள் அழுத்த வேண்டிய கீகள் Win + D. மீண்டும்
இந்த விண்டோக்கள் எழுந்து கொள்ள, அதே கீகளை மீண்டும் அழுத்தவும்.

4. டெஸ்க் டாப் காட்டும் பட்டன்:

அடுத்து இது தொடர்பான இன்னொரு வசதியையும் விண்டோஸ் 7 சிஸ்டம் தருவதனைப்
பார்க் கலாம். இதன் டாஸ்க்பாரின் முடிவில், விண்டோஸ் கடிகாரம் அருகே, ஷோ
டெஸ் க்டாப் பட்டன் இருப்பதனைக் காணலாம். இந்த பட்டன் அருகில் மவுஸின்
கர்சரைக் கொண்டு சென்று அதனைச் சற்று சுற்றவும். இப்போது திறந்திருக்கும்
விண்டோக்கள் அனைத்தும் ஒளி ஊடுருவும் தன்மையுடன் (ட்ரான்ஸ்பரண்ட்)
காட்டப்படும். இந்த வசதியில், நாம் எந்த விண்டோவினையும் மினிமைஸ்
செய்திடாமல் பார்க்கலாம். இந்த பட்டனில் கிளிக் செய்தால், அது அனைத்து
விண்டோக்களையும் உடனே மூடிவிடும். மீண்டும் கிளிக் செய்தால், திறக்கும்.

வெயில் கால நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க

0 comments
தகுந்த காலங்களில், தடுப்பூசி போடாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை
தொற்றுக்கு ஆளாகின்றனர். அதனால், பெற்றோர், குழந்தைக்கான
தடுப்பூசிகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். வெயில் காலங்களில்,
ஈரத்தன்மையுள்ள பொருட்களில், கிருமிகள் மிக வேகமாக வளரும் என்பதால்,
பழம், காய்கறி நறுக்கிய கத்திகள், சமைக்கும் பாத்திரங்களை, ஒவ்வொரு
முறையும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.


வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில், குழந்தைகளை வெளியில்
விளையாடுவதை தடுத்து, கேரம், செஸ், போன்ற விளையாட்டுக்களை, வீட்டில்
அமர்ந்து விளையாடச் சொல்லலாம். வேர்க்குருவை தவிர்க்க, ஒரு நாளில்
இருமுறை குளிப்பதும், விளையாடியபின், கை கால்களை நன்கு சோப்பு போட்டு
கழுவுவதும், உடல் தூய்மையை அதிகரித்து, நோய் தாக்கத்தை குறைக்கிறது.
வெளியில் செல்லும்போதோ அல்லது விளையாடும்போதோ, தலையில் தொப்பியும்,
குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்க, கண் கண்ணாடி (வெப்பத் தடுப்பு) அணியச்
செய்வதும் அவசியம். வெயில் காலங்களில், குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு
சிறுநீர் கடுப்பு நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

காரணம், விளையாடும் குஷியில், சிறுநீர் கழிக்கக் கூட மறந்து விடுவர்.
அதனால், அவர்களை இந்த விஷயத்திலும் கண்காணிக்க வேண்டியது பெற்றோரின்
கடமை.
உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து, பின், அதை எடுத்து
பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், அந்த உணவு வகைகளை நன்றாக
சூடாக்கி பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கும், வயிற்றுக்கும் நல்லது.
இதனால், வயிற்றுப்போக்கு பிரச்னைகளை தடுக்கலாம். அதுவும், வெயில்
காலத்தில் வயிற்றுப் போக்கு பிரச்னைகள் வந்துவிட்டால், குழந்தைகளின்
உடம்பில், நீர்ச்சத்து குறைந்து, விரைவில் சோர்ந்து விடுவர்.


வெளியில் செல்லும் போது, வணிக நோக்கத்தை மையமாகக் கொண்ட சுகாதாரமற்ற
முறையில் இருக்கும் சில கடைகளை தவிர்த்து, எலுமிச்சை ஜூசை வீட்டிலேயே
தயாரித்து எடுத்துச் செல்வது நல்லது. தண்ணீரை, மாற்றி மாற்றி குடிப்பதால்
ஏற்படும் தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம்.
வெயில் காலத்தில், குழந்தைகள் அணியும் ஆடைக்கும் முக்கியத்துவம் தந்து,
அரிப்பு ஏற்படுத்தாத, வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகளை
அணிவிக்கலாம். சாதாரண பவுடர்களுக்கு பதில், வேர்க்குருவைத் தடுக்கும்
பவுடர்களை குழந்தைகளுக்குப் பயன்படுத்துவது நல்லது.

பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!

0 comments
புதிதாக ஒரு ஃப்ளாட் வாங்கியிருந்தேன். அதில் கெய்சர், வாஷிங்மெஷின்,
வாஷ்பேஸின் ஆகியவற்றை பொருத்தவேண்டியிருந்தது. எனக்கு ப்ளம்பர் நண்பர்
ஒருவர் உண்டு. அவரை வீட்டுக்கு வரவழைத்தேன். அவர் நல்ல திறமைசாலிதான்.
ஆனால் அன்று ஏனோ கெய்சரை பொருத்தி டெஸ்ட் செய்த போது சூடு ஏறவில்லை.
பிறகு தவறை கண்டுபிடித்து மீண்டும் பரிசோதிக்க முயற்சித்தபோது மின்சாரம்
போய்விட்டது.

பொருத்துவதற்காக ட்ரில்லிங் செய்தபோது, டிரில் பிட் உடைந்து விட்டது.
வாஷிங்மெஷினில் நிப்பிள் மேட்ச் ஆகவில்லை. ஆக அவற்றை பொருத்த ஏதுவாக
என்னையும் கடைக்கு அழைத்தார். கூடச் சென்று வாங்கி கொடுத்தேன். அவரது
வீடு கடை அருகில் தான் இருந்தது. வீட்டிற்கு ஒரு நிமிடம் வாருங்கள் என
அழைத்தார். நான் மறுத்தும் மிகவும் வற்புறுத்தி அழைத்து சென்றார்.

வீட்டுவாசலில் ஒரு செடி வளர்ந்திருந்தது. அதனை ஒரு நிமிடம் தொட்டவர்,
பிறகுஉள்ளே அழைத்து சென்றார். அவரை பார்த்ததும் குழந்தைகள் ஓடி வந்தன.
ஒவ்வொன்றாக தூக்கி கொஞ்சி, இறக்கி விட்டார்.முகமலர்ச்சியுடன் வரவேற்ற
அவரது மனைவி உள்ளே சென்று சில நிமிடங்களில் சூடான காப்பி கொண்டு வந்தார்.
இதனிடையே ப்ளம்பர் நண்பர், மனைவி, குழந்தைகள் பற்றி சுவையாக கூறி
கொண்டிருந்தார்.
காப்பியை குடித்து விட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றேன். என் மனத்தில்
ஒர சந்தேகம். ஏன் பிளம்பர் வாசலில் இருந்த செடியை நின்று தொட்டு
சென்றார்?

அடுத்தநாள் அவர் வந்ததும் என் சந்தேகத்தை கேட்டேன். நேற்று நான்
எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் டென்ஷனானேன். ஆனால் அதே
பதற்றத்துடன் வீட்டுக்குள் சென்றாள் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக
இருக்க முடியாது. அதனால் என் கவலை. டென்ஷன் எல்லாவற்றையும் அந்த செடியில்
இறக்கிவிட்டு நாளை மீண்டும் எடுத்து கொள்கிறேன் எனக்கூறி இலேசான
மனத்துடன் உள்ளே சென்றேன் என்றார். நான் வியந்து நின்றேன்.

இது உணர்த்துவது என்ன?

பிரச்னைகள், எப்போதுமே நம்மை விட்டு விலகுவதில்லை. நாம்தான் சில நேரம்
அதனை விலக்கி வைக்க வேண்டும்.
ஆபீஸில் பிரச்னையா? பொது வேலைக்குசென்ற இடத்தில் பிரச்னையா? அதனை
மறந்தும் வீட்டுக்குள் கொண்டு செல்லாதீர்கள். அந்த பிரச்னைகளை, வாசலிலேயே
மாட்டி வைத்து, மனைவி, குழந்தைகளை சந்திக்கபோகிறோம் என்ற மகிழ்ச்சியில்
தினமும் மாலையில் புது மனிதராக நுழையுங்கள். இரவு நல்லபடி கழியும்.
அடுத்த நாள் புதுத்தெம்புடன் பிரச்னைகளை சமாளிக்க ஆரம்பித்து விடுவோம்.

M.S Paint Program | எம்.எஸ். பெயிண்ட் புரோகிராம்!

0 comments
படங்களை வரைய, போட்டோ பைல்களைத் திறந்து பார்க்க, போட்டோ மற்றும்
படங்களில் மாற்றங்கள் ஏற்படுத்த மைக்ரோசாப்ட் விண்டோஸ் சிஸ்டத்துடன்
தரும் பெயிண்ட் புரோகிராம் உதவுகிறது. நம் இஷ்டப்படி, கற்பனைப்படி
பெயிண்டிங், படங்களை எடிட் செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து
வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள்ளலாம்.
புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த குறிப்புகள்
தரப்படுகின்றன.

எம்.எஸ்.பெயிண்ட் என்பது இலவசமாகத் தரப்படும் கிராபிக்ஸ் புரோகிராம்
ஆகும். படங்களை எடிட் செய்திட, அளவை மாற்றிட, பெரிதாக்கிப் பார்க்க,
படத்தில் டெக்ஸ்ட் அமைக்க, சிறிய சிறிய அளவுகளில் விரும்பும் உருவத்தை
அமைக்க, அமைத்த உருவங்களில் வண்ணத்தைப் பூசிப் பார்த்து மகிழ என படம்
சம்பந்தமான எத்தனையோ வேலைகளை இதில் மேற்கொள்ளலாம். படங்களின்
பார்மட்டுகளை இதன் மூலம் மாற்றவும் முடியும். இதனை இயக்க Start menu >>
All Programs > Accessories > Paint எனச் செல்லவும். பெயிண்ட் புரோகிராம்
திறக்கப்பட்டவுடன் மேலாகவும் இடது புறமாகவும் மற்றும் கீழாகவும் பல டூல்
பார்கள் இருப்பதனைக் காணலாம்.

இவை எல்லாம் படங்களைக் கையாள நாம் பயன்படுத்தலாம். இவற்றை உங்களால்
பார்க்க முடியவில்லை என்றால் View மெனு சென்று Tool Box, Color Box
மற்றும் Status Bar அனைத்தும் டிக் செய்யப்பட்டி ருக்கிறதான் எனப்
பார்க்கவும். இல்லை என்றால் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அனைத்து டூல்
பார்களும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த டூல் பார்கள் எதற்கு என்று
தெரிய வேண்டும் என்றால் அந்த ஐகானில் மவுஸின் கர்சரை சிறிது நேரம்
வைத்தால் அதன் வேலை என்ன என்று காட்டப்படும்.

அடுத்து ஒரு புதிய படம் ஒன்றை எப்படி வரைவது எனப் பார்ப்போம். File > New
என்பதைக் கிளிக் செய்திடவும். படம் வரைவதற்கான கேன்வாஸ் அகலம் நீளம்
உங்களுக்கு போதாது என்று எண்ணுகிறீர்களா? Image > Attributes செல்லவும்.
இதில் உங்கள் கேன்வாஸின் அளவை நீட்டிக்கலாம்; சுருக்க லாம்.
கீழேயிருக்கும் கலர் பாக்ஸில் ஏதேனும் ஒரு கலரைத் தேர்ந்தெடுத்துக்
கொள்ளுங்கள். இனி நீங்கள் படம் ஒன்றை வரையலாம்.

இடது பக்கம் இருக்கும் டூல் பாக்ஸ் உங்களுக்கு படம் வரைய அனைத்து
வகைகளிலும் உதவும். எடுத்துக்காட்டாக உங்கள் படத்தில் சிறிய செவ்வகக்
கட்டம் வேண்டுமா? Rectangle tool என்னும் டூலைத் தேர்ந்தெடுத்து
கேன்வாஸில் மவுஸால் இழுத்தால் ஒரு செவ்வகக் கட்டம் கிடைக்கும். இது
நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த கலரில் கிடைக்கும்.

இனி இன்னொரு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து பின் Fill With Colour பட்டனைத்
தேர்ந்தெடுங்கள். இனி நீங்கள் ஏற்கனவே வரைந்த கட்டத்தில் எங்கு
வேண்டுமானாலும் மவுஸால் கிளிக் செய்திடுங்கள். தேர்ந்தெடுத்த வண்ணத்தால்
கட்டம் நிறைவடையும். இதே போல இடது பக்கம் உள்ள டூல் பாக்ஸில் கிடைக்கும்
கோடு, வளை கோடு, வளைவு உள்ள செவ்வகம் என அனைத்து டூல்களையும்

பரிசோதித்து பார்த்து தேவையான சாதனத்தைப் பயன்படுத்தி படம் வரையுங்கள்.
தவறாக ஏதேனும் செய்துவிட்டால் எரேசர் என்னும் அழி ரப்பர் படத்தை ஒரு முறை
கிளிக் செய்துவிட்டு நீக்க வேண்டியதை நீக்கி விடலாம். அப்படியா! என்று
ஆச்சரியப் படாதீர்கள். செய்து பாருங்கள்.

படம் வரைந்தாயிற்றா! இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் நன்றாக
வந்திருக்கிறது என்று அபிப்பிராயப்படுகிறீர்களா! அதனை மட்டும் காப்பி
செய்து இன்னொரு கேன்வாஸ் திறந்து ஒரு படமாக அமைக்கலாம்.

ஏற்கனவே உள்ள படத்தை எப்படி திருத்துவது? போட்டோக்கள், படங்கள் என
ஏற்கனவே உருவான படங்களை இந்த புரோகிராமைப் பயன்படுத்தி திருத்தலாம்.
ஒருவரின் தலைமுடியை நரைத்த முடியாக மாற்றலாம். அவருக்கு கண்ணாடி
மாட்டலாம். மீசை வைக்கலாம். இதுபோல வேடிக்கையான செயல்களையும்,

பொறுப்பான செயல்களையும் இதில் மேற்கொள்ளலாம். ஏற்கனவே
உள்ள பட பைலை இதில் திறக்க File > Open என்ற மெனு மூலம் அந்த படம் உள்ள
டைரக்டரி சென்று பட பைலின் பெயர் மீது கிளிக் செய்து இங்கு திறக்கலாம்.
ஏற்கனவே உள்ள கேன்வாஸில் ஒரு படத்தை அமைக்க Edit > Paste From என்ற மெனு
மூலம் மேற்கொள்ளலாம். படத்தின் அமைப்பை மாற்ற Image > Stretch/Skew
என்பதைப் பயன்படுத்தலாம். Image மெனுவில் Flip/Rotate பயன்படுத்தி
படங்களைச் சுழட்டலாம்.

உங்களின் விருப்பப்படி படத்தை அமைத்து விட்டீர்களா? சேவ் கட்டளை மூலம்
படத்தை சேவ் செய்திடுங்கள். சேவ் செய்திடுகையில் படத்தை எந்த பார்மட்டில்
சேவ் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து அந்த பார்மட்டைத் (.BMP,
.JPEG, அல்லது .GIF) தேர்ந்தெடுத்து சேவ் செய்திடுங்கள். பின் இதனை
பிரிண்ட் செய்திட வேண்டுமென்றால் வழக்கம்போல் பிரிண்ட் செய்திடலாம்.
அதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ மூலம் படம் எப்படி அச்சில் கிடைக்கும்
என்பதனையும் பார்த்துக் கொள்ளலாம்.

காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றும் ஆண்கள்

0 comments
தற்போது ஆண்கள் காதல் என்ற பெயரில் 2 பெண்களை காதலித்து அவர்களில் சிறந்த
ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். முதல் பெண்னை
காதலித்து அவள் அழகை, அறிவை புகழ்ந்துவிட்டு திருமணமும் செய்து கொள்வதாக
கூறுவார்கள்.

பின்னர் அதைவிட பெட்டராக நீங்கள் கருதும் மற்றொரு பெண் வந்ததும், முதலில்
காதலித்த பெண்னை விட்டுவிடுவார்கள். அடுத்தடுத்து ஆண்கள் வாழ்க்கையில் பல
பெண்களை சந்திப்பார்கள். இன்னொரு பெட்டரான பெண்ணை பார்த்தால் இரண்டாவதாக
காதலித்த பெண்னையும் விட்டு விட்டு, அந்த பெண்ணை காதலிப்பார்.

இப்படி பெட்டரைத் தேடி பெண் விட்டு பெண் பாயும் ஆண்களின் வாழ்க்கையில்
சிக்கிக்கொள்ளாமல் பெண்கள் தப்பித்துக் கொள்ள வேண்டும். . ஆண்களே முதலில்
உங்கள் மனதை பக்குவப்படுத்துங்கள். பின்பு உருப்படியான ஒரு பெண்ணை
தேர்ந்தெடுத்து மனைவியாக்குங்கள்.

அவர் மேலும், பெட்டர் ஆகவேண்டும் என்று நினைத்தால், அன்போடு அந்த
தகுதிகளையும் அவரிடம் உருவாக்க முயற்சி செய்யுங்கள்- அல்லது
தேர்ந்தெடுத்த பெண்ணிடம் இருக்கும் பெட்டர் குணங்களை பாராட்டி, அவரோடு
பெட்டராக வாழுங்கள்.

எல்லா குணங்களும், எல்லா சிறப்புகளும் கொண்ட பெண் உலகில் யாரும் இல்லை.
இதைவிட முக்கியமான விஷயம் ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். உங்களுக்கு
பெட்டரான பெண்களை தேட எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை, பெட்டரான
ஆண்களைத் தேட பெண்களுக்கும் உரிமை இருக்கிறது.

நீங்கள் இப்போது பெட்டராக நினைத்துக்கொண்டிருக்கும் பெண்னை விட்டுவிட்டு
மற்றொரு பெண்னை தேர்வு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்
நாளையே உங்களைவிட பெட்டரான ஆண், அந்த பெண்ணுக்கு கிடைத்தால் உங்கள் நிலை
என்னவாகும் நினைத்துப்பாருங்கள்.

What we brought in | என்ன கொண்டு வந்தோம்!

0 comments
"நாம் பிறக்கும் போது என்ன கொண்டு வருகிறோம்?' என்ற கேள்விக்கு, "ஒன்றும்
கொண்டு வருவதில்லை; ஒன்றையும் எடுத்துப் போவதில்லை...' என்று ஒரு
வேதாந்தமான பதிலை சொல்லி வருகிறோம். இதில் சொல்லப்பட்டது, உடமைகளைப்
பற்றிய விஷயம். ஆனால், நாம் பிறக்கும் போது பாவ, புண்ணியம் என்ற ஒரு
மூட்டையை கொண்டு வருகிறோம். அது, பலனை கொடுக்க ஆரம்பிக்கிறது. இதை,
"சஞ்சித கர்மா' என்றனர். இது, பல ஜென்மாக்களில் செய்த பாவ,
புண்ணியங்களின் மூட்டை. மற்றவர் கண்களுக்கு தெரியாது; பிறரால்
அபகரிக்கவும் முடியாது.

இது நமக்கே நமக்கு உரிமையானது.இந்த மூட்டையிலுள்ள கர்ம பலனை, ஒரே
ஜென்மாவில் அனுபவித்து விடவும் முடியாது. மூட்டையிலிருந்து ஒவ்வொரு
ஜென்மாவிலும், கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து, பல ஜென்மாக்களுக்குப் பின்
காலியாகும்.இந்த ஜென்மாவில் அந்த சஞ்சித கர்மாவின் ஒரு பாகம், பலனை
கொடுக்கிறது. இதை, பிரார்த்த கர்மா என்றனர். "என்ன சார்... உங்க பையன்
இப்படி இருக்கிறானே?' என்று கேட்டால், "என்ன சார் செய்றது? ஏதோ
பிரார்த்தம்! இப்படி வந்திருக்கு...' என்று தலையிலடித்துக் கொள்கிறார்.

இதில் சுகம், துக்கம் எல்லாம் கலந்திருக்கும். எது வேண்டும் என்று
பொறுக்கி எடுத்துக் கொள்ள முடியாது; அனுபவிக்க வேண்டும்.இந்த ஜென்மத்தில்
நாம் சும்மாவா இருக்கிறோம். எத்தனையோ பாவ, புண்ணியங்களைச் செய்கிறோம்.
இதற்கு, "ஆகாமி கர்மா' என்று பெயர். இதனுடைய பலன்கள் கொஞ்சம் காலியாக
இருக்கும் சஞ்சித கர்மா என்ற சஞ்சியில் (மூட்டையில்) போய் சேர்ந்து
விடுகிறது. இதனாலேயே தான், நாம் இப்போது செய்யும் காரியத்தின் பலனை, உடனே
அனுபவிக்க முடிவதில்லை.நாம் இப்போது அனுபவிப்பது, பிரார்த்த கர்மாவின்
பலன்.

நாம் செய்யும் நல்ல காரியத்தின் பலன் சஞ்சித கர்மாவோடு
சேர்ந்திருக்கிறது. அந்த பலனை, வரும் ஜென்மங்களில் அடையலாம். நாம்
செய்யும் காரியத்துக்கும், அனுபவத்திற்கும் சம்பந்தம் இல்லாதது போல்
தோன்றலாம். அப்படியல்ல... சஞ்சித கர்மா, பிரார்த்த கர்மா இரண்டும் வேலை
செய்யும்போது, இன்று நாம் செய்யும் கர்மாக்கள் ஒன்றும் செய்ய
முடியாது.இன்று கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்யலாம். அபிஷேக ஆராதனை
செய்யலாம். இதெல்லாம் இப்போது அனுபவிக்க வேண்டியவைகளை ஒன்றும் செய்யாது.
நல்லது, கெட்டது எது செய்தாலும், அதன் பலன், "ஸ்டாக்' செய்யப்பட்டு
விடுகிறது.

காலம் வரும் போது பலன் தரும்.பூர்வ ஜென்ம கர்மாவின் பலனாக, நம் சித்தம்
அழுக்கடைந்து விடுகிறது. கர்மத்தளைகளால் கட்டுப்பட்டிருக்கிறோம். இதை
எப்படி அறுத்து தள்ளுவது? ஞானத்தால் தான் முடியும். சித்த சுத்தி
ஏற்பட்டு ஞானத்தை அடைந்தவுடன் அந்த ஞானக் கனியானது, கர்மத்தளைகளை அறுத்து
விடுகிறது. கர்மத் தளைகள் நீங்கி, ஞானம் பிரகாசிக்க ஆரம்பித்தால்,
பிரம்மத்தைக் காணலாம். அதிலேயே லயித்து விட்டால், பிரம்மத்தை அடையலாம்.
அதை அடைந்து விட்டால் மீண்டும் பிறவியே இராது. முடியுமா என்று பாருங்கள்

Grabber Screenshot Program | கிராப்பர் – ஸ்கிரீன் ஷாட் புரோகிராம்

0 comments
தேவைப்படும் திரைக் காட்சிப் பகுதிகளை மட்டும் காப்பி செய்து, காப்பி
செய்யப்பட்ட பகுதிகளைத் தேவையான இடத்தில் ஒட்டிக் கொள்ளும் வசதியையும்,
மேலும் பல கூடுதல் வசதிகளையும் தருகிறது கிராப்பர் என்னும் ஸ்கிரீன் ஷாட்
புரோகிராம்.
திரைக் காட்சிகளை அப்படியே படமாகக் கொள்ள, நாம் பிரிண்ட் ஸ்கிரீன் கீ
அழுத்தி, பின் இமேஜ் புரோகிராம் ஒன்றைத் திறந்து அதில் பேஸ்ட்
செய்கிறோம். அதன் பின்னர், அதில் தேவைப்படும் பகுதியைத் தேர்ந்தெடுத்து,
காப்பி செய்து, மீண்டும் தனியாகப் பேஸ்ட் செய்து, பைலாக உருவாக்கு
கிறோம். பின்னர், இந்த பைலை தேவைப் படும் இன்னொரு டாகுமெண்ட் அல்லது பட
பைலில் ஒட்டி பயன்படுத்துகிறோம்.

இந்த செயல்பாட்டினை மிக எளிதாக மேற்கொள்ளும் வகையில்
நமக்குக் கிடைக் கும் புரோகிராம் கிராப்பர் (Cropper). இதனை பிரையன்
ஸ்காட் (Brian Scott) என்பவர் வடிவமைத்து வழங்கியுள்ளார்.
http://cropper. codeplex.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் இந்த
புரோகிராம் கிடைக்கிறது. மிக எளிதாக இந்த தளத்திலிருந்து கிராப்பர்
புரோகிராமினை தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ளலாம். இதனை
இன்ஸ்டால் செய்கையில் blocked என்ற செய்தி கிடைத்தாலும், "run anyway"
என்பதனை அழுத்தி செட் அப் செய்திடலாம். இதில் எந்த விதமான வைரஸ் அல்லது
மால்வேர் தொகுப்பும் இல்லை எனப் பயன்படுத்தியவர்கள் கூறி உள்ளனர்.

இன்ஸ்டால் செய்து, புரோகிராம் பட்டியலிலிருந்து இதனைத் தேர்ந்தெடுத்து
கிளிக் செய்தவுடன், டாஸ்க் பாரில் இதற்கான ஐகான், சிறிய கூட்டல்
குறியுடன் பெட்டி ஒன்றுடன் காட்சி அளிக்கும். இதில் டபுள் கிளிக்
செய்தால், கிராப்பர் இயங்கத் தொடங்கும். இப்போது, கிராப்பர் ஒரு சிறிய
பாக்ஸை உங்களுக்குக் காட்டும். இதில் மவுஸின் இடது பட்டனை அழுத்தியவாறே,
பாக்ஸை இழுத்துச் செல்லலாம். அதில் தரப்பட்டி ருக்கும் பட்டன்களை
அழுத்தில், பாக்ஸை சிறியதாகவோ, பெரியதாகவோ மாற்றிக் கொள்ளலாம்.

திரையில் எந்த இடத்தில் உள்ள காட்சி அல்லது டெக்ஸ்ட் தேவையோ அங்கு
இழுத்துச் சென்று, பின்னர் என்டர் அழுத்தினால், அந்த பாக்ஸ் அமையும்
இடத்தில் காட்டப்படுவது ஸ்கிரீன் ஷாட்டாக எடுக்கப்பட்டு பைலாக
மாற்றப்பட்டு, My Documents டைரக்டரியின் கீழ் Cropper Captures என்ற
போல்டரில் சேவ் செய்யப்படும்.

இந்த அவுட்புட் வழியை வேறு வகையில் மாற்ற வேண்டும் எனில், கிராப்பர்
பாக்ஸ் உள்ளாக ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் என்பதில் கிளிக்
செய்திடவும். பின்னர் கிடைக்கும் பட்டியலில் இருந்து தேவை யானதைத்
தேர்ந்தெடுக்க வேண்டும். கீழே காட்டியுள்ளபடி ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.

BMP:

பிட்மேப் இமேஜாக ஸ்கிரீன் ஷாட் தேவை எனில், இதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
இது பழைய இமேஜ் பார்மட்.

Clipboard:

இதனைத் தேர்ந்தெடுத்தால், குறிப் பிட்ட ஸ்கிரீன் ஷாட் பகுதி கிளிப்
போர்டுக்குச் செல்லும். இதிலிருந்து அதனை நீங்கள் விரும்பும்
புரோகிராமில் பதிந்து இயக்கலாம்.

JPEG:

இது பலரும் பயன்படுத்தும் இமேஜ் பார்மட். இதன் தன்மையை 10% முதல் 100%
வரை இருக்குமாறு அமைத்துக் கொள்ளவும் இதில் ஆப்ஷன் தரப்பட்டுள்ளது.

PNG:

இந்த பார்மட் அமைப்பைத் தற்போது அனைவரும் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர்.
ஜேபெக் பைலின் தன்மை மற்றும் பண்புகள் இதில் உள்ளன. ஜேபெக் அளவில் பரவலாக
இல்லை என்றாலும், இந்த பார்மட் டையும் அதிகமாகப் பயன்படுத்துவோர்
உள்ளனர்.

Printer:

இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தவுடன், பிரிண்டர் டயலாக் பாக்ஸ்
திறக்கப்பட்டு, கிராப்பர் காப்பி செய்த இமேஜ் அச்சடிக்கப்படும்.
இதே மெனுவின் மூலம், நாம் ஸ்கிரீன் ஷாட் போல்டரில் உள்ள மெனுவினைத்
திறந்து இயக்கலாம். கிராப்பர் விண்டோவின் வண்ணத்தினை மாற்றலாம். மேலே
காட்டப்பட்டுள்ள இதன் இணைய தளத்தில் இன்னும் நிறைய குறிப்புகள்
கிடைக்கின்றன.

Excel Tips | எக்ஸெல் டிப்ஸ்-எண் கோடு பிரிண்ட் செய்திட

0 comments
எக்ஸெல் ஒர்க் ஷீட்டினைப் பிரிண்ட் செய்திடுகையில் வரிசைகளில்
தரப்பட்டுள்ள எண்கள், எழுத்துக்கள் மற்றும் குறுக்கு நெடுக்காகச்
செல்லும் கோடுகளையும் சேர்த்து பிரிண்ட் செய்தால் நன்றாக இருக்குமே என்று
பிரியப்படுகிறீர்களா! தாராளமாக இவற்றையும் அச்சிடலாம்.

அதற்கான செட்டிங்ஸ் வழிமுறை களைப் பார்ப்போம்.
மிகப் பெரிய ஒர்க் ஷீட்டுகளில் தேர்ந் தெடுத்து பிரிண்ட் செய்கையில் இது
மிகவும் உதவியாக இருக்கும். மேலும் வரிசைகளுக்கு நாம் பெயர் கொடுக்காமல்
இருந்தாலும் இந்த ஏற்பாடு நமக்கு உதவிடும்.
இதற்கு முதலில் File மெனுவில் பேஜ் செட் அப் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Page Setup விண்டோ திறக்கப்பட்டவுடன் Sheet என்னும் டேபினைத்
தேர்ந்தெடுக்கவும்.

இதில் நடுவே உள்ள Print என்னும் பிரிவில் Gridlines மற்றும் Row and
Column Headings என வரிகள் செக்பாக்ஸுடன் இருக்கும். இதில் டிக் அடையாளம்
ஏற்படுத்தவும். இதில் எது தேவையோ அதில் மட்டும் டிக் அடையாளம்
ஏற்படுத்தலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அடுத்த முறை
பிரிண்ட் செய்திடுகையில் வரிசைகளுக்கான தலைப்பு/எழுத்து/எண் மற்றும்
கோடுகள் அச்சிடப்படும்.

Rajastan and Camels | ஒட்டகமும் ராஜஸ்தானும்

0 comments
ராஜஸ்தான் என்றதுமே, "பளிச்'சென நினைவுக்கு வருவது, பாலைவனம். பறவைகள்
கூட பறக்கத் தயங்கும் பாலை சூழலில், நம்மை பொதி சுமக்கும் ஆபத்பாந்தவன்
ஒட்டகம். அரபு நாடுகளில், தீவிர கண்காணிப்பு வளையத்தில் கொண்டு
வரப்பட்டுள்ள ஒட்டகங்கள், இந்தியாவை பொறுத்தவரை, "வேடிக்கை' பொருள்.
குறை நம்முடையதல்ல; ஆடு, மாடுகளை பார்த்துப் பழகிய நமக்கு, எங்கிருந்தோ
வரும் ஒட்டகங்கள், காட்சிப் பொருளாய் இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
"நமக்கு' என குறிப்பிட்டதில், ஒரே ஒரு மாநிலம் மட்டும், "விலக்கு'
பெறுகிறது; அது தான் ராஜஸ்தான். தார் பாலைவனம் சூழ்ந்த அழகிய மாநிலம்;
ஒட்டகம் தான், அவர்களின் பெட்டகம்.

கலாசாரத்திலும், காலநிலை யிலும் மாறுபடும் இந்திய மாநிலங்களின்
சிறப்புகளில், ராஜஸ்தானை சிறப்பு பெற வைத்த பெருமை, ஒட்டகங்களுக்கு
உண்டு.
தோற்றத்தில் அருவருப்பு இருந்தாலும், ஒட்டகத்தின் செயலில் சுறுசுறுப்பு
இருப்பதால், ராஜஸ்தானின் வடமேற்கு பகுதியில், வீட்டிற்கு ஒரு ஒட்டகம்
கட்டாயம் வளர்க்கின்றனர். 2 முதல் 3 "செல்சியஸ்' வெப்பநிலை வேறுபாட்டை
தாங்கும் சக்தி மனிதனுக்கு; 34 முதல் 41 செல்சியஸ் வரை வெப்பநிலை
தாங்கும் தன்மை ஒட்டகத்திற்கு; அதனால் தான், அவை பாலைவனத்தின், சூப்பர்
ஸ்டார்.

நம்மூரில், உழவுக்கு உதவும் மாடுகளுக்கு, பொங்கலிட்டு வழிபடுவது போல்,
ராஜஸ்தானில் ஒட்டகங்களுக்கு வேறு விதமான சிறப்பு செய்கின்றனர். "ஒட்டக
மேளா' எனப்படும் அத்திருவிழா, ஆண்டுதோறும் மார்ச் மாதம் முழுக்க
நடக்கிறது. ஜோத்பூர் - ஜெய்சால்மர் வழியில், பொக்ரான் அருகே, அகோளை
கிராமத்தில் நடக்கும் ஒட்டக மேளாவில், உரிமையாளர்கள் பலர்
பங்கேற்கின்றனர்.

கண்ணுக்கு எட்டிய தூரத்திற்கு, ஒட்டகங்களாய் காட்சி தரும் அங்கு,
"யாருடைய ஒட்டகம் சிறந்தது' என்ற போட்டி நடக்கிறது. அதற்காக போட்டி
போட்டு ஒட்டகங்களுக்கு ஒப்பனை செய்கின்றனர். பார்வையாளர்கள்
விரும்பினால், ஒட்டகங்களை விலைக்கு வாங்கிச் செல்லலாம். இருபதாயிரம்
ரூபாயில் தொடங்கி, அறுபதாயிரம் ரூபாய் வரை, தோற்றத்திற்கு ஏற்ப, விலை
நிர்ணயிக்கின்றனர்.
இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், அங்கு ஒட்டகங்களை இறைச்சிக்கு
பயன்படுத்துவது இல்லை என்பதால், வாங்குவோரும், விற்போரும், விவசாய
நோக்கில் தான், வாங்குகின்றனர். பல்லை பிடித்து பார்ப்பது, ஒட்டக சவாரி
செய்வது போன்ற சோதனைகளுக்கு பிறகே, வாங்கும் விவசாயி திருப்தி அடைகிறார்.

இடைத்தரகர்களுக்கும், மோசடி வேலைகளுக்கும் இந்த மேளாவில் இடமில்லை.
ஒட்டகத்துடன் நின்று விடாமல், அவற்றை சார்ந்த பிற பொருட்களின்
விற்பனையும், தனித்தனியே நடக்கிறது. இதனால், அகோளை கிராமம், விவசாயிகளின்
கூட்டத்தால் மார்ச் மாதத்தில் நகரமாய் மாறி விடுகிறது.

மேளாவில் பங்கேற்க வந்த ஜெய்சால்மர் தாலுகா விவசாயி, ஸ்ரீபதி கூறும்போது,
"சிறுவயதில், என் அப்பாவுடன், மேளாவில் பங்கேற்றிருக்கிறேன். பல நூறு
கி.மீ., தூரத்தில் இப்பகுதி இருந்தாலும், மேளாவில் பங்கேற்பதை, என் தந்தை
விடாமல் கடைபிடித்தார்.

"அவருக்கு பின், நானும் அதை தொடர்கிறேன். சிலர், ஒட்டகங்களை விற்க
வருவர்; சிலர், வாங்க வருவர்; சிலர், பராமரிப்பை அறிய வருவர். மேளா
தொடங்கிய, 15 நாட்களில், என் மூன்று ஒட்டகங்களும் விற்பனையாகி விட்டன.
எஞ்சியுள்ள ஒரு ஒட்டகமும் விரைவில் விற்றுவிடும்; இருப்பினும், மாதம்
முழுக்க, இங்கு இருந்து, நடப்பதை பார்த்துவிட்டு தான், ஊர்
திரும்புவேன்...' என, மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

வாழ்க்கையில் பெண்களின் பல்வேறு நிலைகள்

0 comments
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வது
இயல்பு. இதற்கு யாரும் மறுப்பு கூற முடியாது. ஏனெனில் பெண்களிடமிருந்து
ஆண்கள் நிறைய கற்றுக் கொள்கின்றனர். உதாரணமாக, அம்மாவையே எடுத்துக்
கொள்ளலாமே! அம்மா என்றால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

எந்த ஒரு ஆணும் தன் அம்மாவைப் போன்று யாரும் வர முடியாது.
அம்மாவிடமிருந்து தான் இதைக் கற்றுக் கொண்டேன் என்று பல ஆண்கள்
கூறுவார்கள். இவ்வாறு அம்மா என்று சொல்லும் ஒரு நபர் யார் என்று
பார்த்தால், அது பெண் தான். மேலும் அம்மாவிடமிருந்து மட்டும் கற்றுக்
கொள்வதில்லை, அம்மாவைப் போன்று வேறு பல உறவுமுறைகளில் உள்ள
பெண்களிடமிருந்தும் பலவற்றை ஆண்கள் கற்றுக் கொள்கின்றனர்.

உலகில் உள்ள ஒவ்வொரு ஆணும், அம்மா பையன் தான். ஏனெனில் அம்மாவின் மூலம்
உலகை பார்க்கும் ஆண், அந்த அம்மாவிடம் இருந்து தான் அனைத்தையும் கற்றுக்
கொள்கிறான். சொல்லப்போனால், ஆண்களின் ஹீரோயின் அவர்கள் அம்மா தான்.

அம்மாவிற்கு அடுத்த படியாக இருக்கும் ஒரு மறுக்க மற்றும் மறக்க முடியாத
உறவுமுறை தான் மனைவி. மனைவி என்ன தான் சண்டை போட்டாலும், ஏதாவது ஒன்று
என்றால், அடுத்த நிமிடமே வந்து எதையும் மனதில் கொள்ளாமல், அம்மாவிற்கு
அடுத்து அனுசரித்து நடப்பவள் தான் மனைவி. எனவே இத்தகைய மனைவியை உயிர்
பிரிந்தாலும், எந்த ஒரு ஆணும் மறக்கமாட்டார்கள்.

அம்மாவின் காதலுக்கு கண்ணே இல்லை என்பதை மாமியாரின் மூலம் ஒவ்வொருவரும்
கற்றுக் கொள்வோம். எனவே இந்த உறவுமுறையிலும் ஒரு நல்ல அம்மாவைக் காணலாம்.

பாட்டிக்கு பேரன்/பேத்தி என்றால் அளவு கடந்த பிரியம் இருக்கும். இந்த
பாட்டி உறவு முறையும் மிகவும் சிறப்பான மறக்க முடியாத ஒன்று.

அண்ணானாக இருக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் நிச்சயம் தங்கை என்றால் மிகவும்
பிடிக்கும். ஆண்கள் எவ்வளவு தான் பொறுக்கியாக இருந்தாலும், தங்கையை
மிகவும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வார்கள். குறிப்பாக தங்கையாக
இருக்கும் பெண், எவ்வளவு தான் அண்ணனுடன் சண்டை போட்டாலும், எந்த ஒரு
விஷயத்திலும் தனது அண்ணனை விட்டுக் கொடுக்கமாட்டார்கள். எனவே இவ்வாறு
விட்டுக் கொடுக்காத மனப்பான்மையை ஒவ்வொரு ஆணும், தங்கையிடமிருந்து
கற்றுக் கொள்கின்றனர்.

அம்பாளின் அனுக்கிரகம் வேண்டுமா?

0 comments
நம் நாடு. ஒவ்வொரு பெண்மணியையும் அம்பாள், பரமேஸ்வரியாகவே பாவித்து
மரியாதை செய்தனர். அந்தக் கால பெண்களின் தியாகமும், மகத்தானதாக இருந்தது.
இப்படிப்பட்ட பெண்மணிகளை பரமேஸ்வரியாக பாவித்து, சுவாசினி பூஜை செய்வதைப்
பார்த்திருக்கலாம். இவர்களுக்கு புது வஸ்திரம் அளித்து, புஷ்பம், மங்கல
திரவியங்கள் கொடுத்து, பலகையில் உட்கார வைத்து, பூஜை செய்து நமஸ்காரம்
செய்வர். இதில், வயது கணக்கில்லை.

சுவாசினி என்றால் நமஸ்காரம் செய்யலாம், அவர்களும் அட்சதை போட்டு
ஆசீர்வதிக்கலாம். பல இடங்களில் இந்த சுவாசினி பூஜையை ஏராளமான
பொருட்செலவில் வசதி படைத்தவர்கள் நடத்துகின்றனர். இதில், சுவாசினியாக
உட்காருவதும் அல்லது தரிசனம் செய்வதும் கூட மகத்தான புண்ணியம்.
ஸ்ரீவித்யா பாசனையில் இந்த சுவாசினி பூஜைக்கு, விஸ்தாரமாக விளக்கம்
சொல்லப்பட்டுள்ளது. ஏதோ பொம்பளைதானே என்று அலட்சியமாகப் பேசக் கூடாது.
"ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே...' என்று ஒரு வாக்கியம் உண்டு.
இதற்கு, பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்றும், அழிக்கவும் முடியும்
என்றும் விளக்கம் கூறுவர். சீதையால் ராவணனும், திரவுபதியால் கவுரவர்களும்
அழிந்தனர் என்று உதாரணம் சொல்வர். அது, அவ்வளவு பொருத்தமானதல்ல.

அம்பிகை, பராசக்தி பெண். அவள் தான் உலக மக்களை ஆக்கவும், காக்கவும்,
அழிக்கவும் வல்லமை படைத்தவள். அவள் இந்த மூன்று தொழில்களையும் திறம்பட
நடத்தி வருகிறாள். அதனால், ஆவதும், அழிவதும் பெண்ணாலே என்பது இங்கு
பொருந்தும். இதற்கான பல கதைகள் புராணங்களில் உள்ளன.

அம்பிகையையே சுவாசினியாகச் சொல்லப்பட்டுள்ளது. அதுவுமின்றி அம்பாளின்
நெற்றியிலே குங்கும திலகம் பிரகாசிக்கிறதாம்; வாக்கிலே தாம்பூலம்
கமழுகிறதாம். சிவானந்த லஹரி ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரர் இதைப் பற்றி
ஸ்லோகம் இயற்றியுள்ளார்.

பெண்கள் நெற்றியில், மஞ்சள் பூசி குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும் என்று
சொல்லப்படுகிறது. கைகளில் கண்ணாடி வளையலும், கால்களில் சலங்கையுடன் கூடிய
கொலுசும் அணிய வேண்டுமாம். கையில் உள்ள கண்ணாடி வளையல் சப்தமும்,
கால்களில் உள்ள கொலுசின் சலங்கை சப்தமும் கேட்டு, அம்பாள் மகிழ்ந்து,
கூடவே இருப்பாளாம்.

அம்பாளுக்கு எது பிரியமோ அதைச் செய்வது நல்லது. இப்படியெல்லாம் அலங்காரம்
செய்து, அம்பாளாகவே விளங்கலாமே! பெண்கள் தலையில் நேர் வகிடு எடுத்துக்
கொள்ள வேண்டும் என்று கூட சொல்லப்படுகிறது. அதற்கான காரணங்களையும்
சாஸ்திரம் சொல்கிறது.
பெண்கள் தினமும் தாம்பூலம் தரித்துக் கொள்ள வேண்டும். வாய் நிறைய
வெற்றிலை போட்டு, வாய் கோவைப் பழம் போல் சிவப்பாக இருக்க வேண்டும் என்று
கூட சொல்லப்பட்டுள்ளது. அப்போ, அம்பாளின் ஆசையை நிறைவேற்றி, பூலோக
அம்பாளாகவே மாறி விட்டால், நம்மைப் பார்த்து மகிழ்ந்து, நமக்கு வேண்டிய
அனுக்கிரகம் செய்யமாட்டாளா என்ன

2012ல் மொபைல் உலகம்

0 comments
சென்ற ஆண்டில் பல வியத்தகு மாற்றங்கள், மொபைல் உலகில் ஏற்பட்டன.
ஆண்ட்ராய்ட் இயக்கமும் சாம்சங் நிறுவனமும் மக்களிடையே பிரபலமாயின.
ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையும், அதற்கான சாதனங்களைத் தயாரித்த கூட்டாளியான
சாம்சங் நிறுவனமும், ஆப்பிள் மற்றும் ஐபோனை, அடுத்த நிலைக்குத் தள்ளின.
மொபைல் உலகில், மைக்ரோசாப்ட்,நோக்கியா மற்றும் ரிசர்ச் இன் மோஷன் ஆகிய
நிறுவனங்கள் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் உறுதியான விற்பனைச்
சந்தையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த இயலவில்லை. இந்த நிகழ்வுகளுக்கான
கூடுதல் தகவல்களை இங்கு காணலாம்.


1. ஐ.ஓ.எஸ். சிஸ்டத்தை முழுமையாக வென்ற ஆண்ட்ராய்ட்:

ஸ்மார்ட் போன் இயக்கத்தில், எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் நிலையான இடம்
பிடிக்கும் என்ற சந்தேகம், 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தது. இந்த
சந்தேகங்களை உடைத்தெறிந்து, ஆண்ட்ராய்ட் தன்னை முதல் இடத்தில்
மட்டுமில்லாமல், பெரும்பான்மையான ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் இடம்
பிடித்தது. 2012 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், உலக அளவில் 75%
ஸ்மார்ட் போன்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டமே இடம் பெற்றிருந்தது.
அமெரிக்காவில் ஐபோன் பயன்பாடு பெரிய அளவில் இருந்தாலும், உலக நாடுகளை
மொத்தமாகப் பார்க்கையில், ஐ.ஓ.எஸ். சிஸ்டம் கொண்ட போன்கள் 14.9 சதவிகிதமே
இருந்தன.
2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து, மிக வேகமாக
முன்னேறி, ஆண்ட்ராய்ட் முதல் இடத்தைப் பிடித்தது. பன்னாட்டளவில்,
ஆண்ட்ராய்ட் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் அதிகம் உள்ளது சீனாவில்தான். 78
கோடியே 60 லட்சம் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் இங்கு பயன்படுத்தப்
படுகின்றன. அமெரிக்காவில் மட்டும்தான் ஆப்பிள் இதற்குச் சரியான போட்டியை
இன்னும் தந்து கொண்டுள்ளது.

2. விண்டோஸ் மொபைல்:

மைக்ரோசாப்ட், மொபைல் உலகிலும் தன் பங்கினைப் பெரிய அளவில் பெற்றிட
திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. இந்தப் பிரிவில் இதுவரை பெற முடியாமல்
போனதை, விண்டோஸ் போன் 8 பெற்றுக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறது.
விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நவம்பரில் வெளியானது.
கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களுக்கான விண்டோஸ் 8
வெளியாகி சில நாட்களில் இது வெளியானது. என்றாவது ஒரு நாள், மொபைல்
போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டமும்
இணைந்த சிஸ்டமாக உருவாகும். எச்.டி.சி., நோக்கியா, சாம்சங் ஆகியவை
விண்டோஸ் போன் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் மொபைல் போன்களை உருவாக்கித்
தருவதால், ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் மூன்றாவது இடத்தினை மைக்ரோசாப்ட்
விரைவில் பிடிக்க இயலும்.

3. நோக்கியாவைத் தள்ளிய சாம்சங்:

ஏற்கனவே ஸ்மார்ட் போன் விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்த சாம்சங்,
தற்போது மொபைல் போன் விற்பனையிலும் நோக்கியாவை இரண்டாவது இடத்திற்கு
ஒதுக்கி, முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஏறத்தாழ 14 ஆண்டுகள், இந்த
வகையில் முதல் இடத்தை நோக்கியா கொண்டிருந்தது. இப்போது உலக அளவில்
சாம்சங் நிறுவன போன்கள் அதிகம் விற்பனையாகிறது.

பெண்கள் கில்லாடிகள்

0 comments
ஆண்கள் பொய் சொல்வதை சில அடையாளங்கள் மூலம் பெண்கள் எளிதாக
கண்டுபிடித்துவிடலாம். பொய் சொல்லும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லை.
பெண்களை கவர ஆண்கள் நிறைய பொய் சொல்வார்கள். ஆண்கள் பொய் சொல்வதை
அவர்களின் முகத்தை வைத்தே பெண்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.

பொய் சொல்பவர் தனது முகத்தைத் தொடுவார். ரத்தம் மூக்கை நோக்கிப் பாயும்
என்பதால், மூக்கு பெரிதாகும். அதை அடிக்கடி தொட ஆரம்பிப்பார். `உண்மையைச்
சொல்லணும்னா…' என்று ஒருவர் ஆரம்பித்தால், பொய் சொல்லப் போகிறார் என்று
அர்த்தம்.

ஆண்களுடன் ஒப்பிடும்போது பொய்யைக் கண்டுபிடிப்பதில் பெண்கள் கில்லாடிகள்.
(பெண்கள்தானே தமது குழந்தைகளின் சமிக்ஞைகளை சரியாக அறிகிறார்கள்? எனவே
தம் மனைவியிடம் பொய் சொல்ல முனையும் ஆண்கள், அந்த வேலையை போனில்
வைத்துக்கொள்வது நல்லது!) புதியவர் ஒருவரைப் பற்றிய `பர்ஸ்ட் இம்ப்ரஷன்'
4 நிமிடங்களில் உருவாகிவிடுகிறது.

பல வேளைகளில், பத்தே நொடிகளில் அந்த முடிவுக்கு வந்துவிட முடியும். எனவே
அதற்குள் மற்றவர்களைக் கவர்ந்துவிட வேண்டும். பொய் சொல்வதால் பல
பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. அதிக பொய் சொல்வதில் ஆண்கள் முதலிடத்தில்
உள்ளனர். பொய் சொல்லி பல பிரச்சனை ஏற்படுவதை விட உண்மையை சொல்லி பிரச்சனை
வராமல் காப்பதே நல்லது.

Mobile Virus will increase | மொபைல் போன் வைரஸ் அதிகரிக்கும்

0 comments
மொபைல் போன் பாதுகாப்பு பிரிவில் இயங்கும் ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம்,
நடப்பு 2013 ஆம் ஆண்டில், மொபைல் போன்களில் வைரஸ்கள் அதிக அளவில் பரவத்
தொடங்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆண்ட்டி வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி, அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை
உலக அளவில் விற்பனை செய்து வரும் நிறுவனங்களில், மெக் அபி மற்றும்
நார்டன் நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் ட்ரெண்ட் மைக்ரோ இயங்குகிறது.
இந்நிறுவனம் அண்மையில் விடுத்த அறிக்கையில், ஸ்மார்ட் போன்கள், குறிப்பாக
ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்கள் தற்போது இந்த
விஷயத்தில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு இணையாக இயங்கு கின்றன.

எனவே இவற்றில் பரவும் வகையில் வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்புகளை
உருவாக்குவது ஹேக்கர்களுக்கு மிக எளிதாக உள்ளது. சென்ற ஆண்டில் ஜூலை
முதல் செப்டம்பர் மாத காலத்தில் மட்டும், மால்வேர் புரோகிராம்களின்
எண்ணிக்கை மூன்று மடங்கு பெருகியுள்ளது என ட்ரெண்ட் மைக்ரோ
தெரிவித்துள்ளது. ஏற்கனவே 30,000 என்ற எண்ணிக்கையில் இருந்த இவை, இக்
காலத்தில் 1,75,000 என்றளவில் உயர்ந்தன. இவை மிகவும் ஆபத்தானவையாகவும்
உலவி வருகின்றன.

தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புதல், தொடர்ந்து எரிச்சலூட்டும்
வகையில் விளம்பரங்களைக் காட்டுதல், ஸ்பேம் எனக் கண்டறிந்து விலக்க
முடியாத வகையில், குப்பை தகவல்களைத் தருதல் என இவற்றின் செயல்பாடுகள்
உள்ளன. மொபைல் வழி பேங்க் அக்கவுண்ட் செயல்பாடுகளை மேற் கொள்வது
தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே, 2014 ஆம் ஆண்டில், இவற்றில் இடை புகுந்து நிதி மாற்றம் குறித்த
தகவல்களைத் திருடி, பயனாளர்களுக்கு நிதி இழப்பு வரை மேற்கொள்ளும்
வைரஸ்கள் நிறைய வெளியாகலாம் எனவும் ட்ரெண்ட் மைக்ரோ எச்சரித்துள்ளது.
2012 ஆம் ஆண்டு இறுதியில் ஏறத்தாழ 3,50,000 வைரஸ்கள் மற்றும் மால்வேர்
புரோகிராம்கள் இருந்தன. 2013ல் இவை மூன்று மடங்காகப் பெருகும் எனவும்
அறியப் பட்டுள்ளது.

எப்படி விண்டோஸ் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், பெர்சனல் கம்ப்யூட்டர் களில்
இடம் பிடித்ததோ, அதே போல ஆண்ட்ராய்ட் சிஸ்டம், மொபைல் போன் களில் இடம்
பிடிக்கும். எனவே, மால்வேர் புரோகிராம்கள் வடிவமைப்பவர்கள், இவற்றை
தங்கள் இலக்காகக் கொண்டு இயங்கி வருகின்றனர். மேலும், ஆண்ட்ராய்ட்
சிஸ்டம் வடிவமைப்பின் குறியீடுகள் அனைவருக்கும் கிடைக்கும் என்பதுவும்
இதில் அவர்களுக்குச் சாதகமான அடித்தளத்தைக் கொடுக்கிறது.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பினைத்
தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அப்ளிகேஷன்களை இந்த வகையில் ஸ்கேன்
செய்திட புதிய வழிகளை Bouncer என்ற முறையில் கூகுள் கொண்டு வந்தது.
தற்போது அதிகம் புழங்கும் அண்மைக் காலத்திய சிஸ்டமான ஆண்ட்ராய்ட் ஜெல்லி
பீன் பதிப்பில் இது வழங்கப்பட்டது.
புதிய அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்கையில் காட்டப்படும் எச்சரிக்கை
செய்தி பெட்டியினையும், அதில் உள்ள தகவல்களையும் தெளிவாகக் காட்டும்
வகையில் கூகுள் தந்து வருகிறது.

அனுமதி கேட்கும் வழிகள் எந்த மறைமுக செய்தியும் இல்லாமல்
அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்பவர்,
ஒருமுறைக்கு பல முறை சிந்தித்த பிறகே, அதனை இன்ஸ்டால் செய்திடுவார்.
ஆனால், வைரஸ் மற்றும் மால்வேர் வடிவமைப்பவர்கள் இதற்கெல்லாம்
தயங்குபவர்களாக இருக்கப் போவதில்லை. எனவே, நாம் தான் அதிகக்
கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் என ட்ரெண்ட் மைக்ரோ
கேட்டுக்கொண்டுள்ளது.

இல்லறம் இனிக்க

0 comments
பிறந்தது முதல் பெற்றோரின் அரவணைப்பிலும் அன்பிலும் கட்டுண்டு
இருக்கிறோம் என்பது சாதாரண விஷயம். அந்த அன்பு மற்றவர்களுக்கு
பகிரப்படும் போதோ, நம்மீதான கரிசனை குறையும் போதோ, நமது மனது
சலனப்பட்டதில்லை,குறை தேடியதுமில்லை, அதையும் மீறி....
நடக்கின்ற தப்புகளைத் தேடி சரிபண்ண முயற்சித்திருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.

இது யதார்த்தம்.. ஆனால் இடையில் வந்து ஒட்டிக்கொண்ட இந்த கணவன் மனைவி
உறவை இப்படி யோசிக்கிறார்களா என்றால்… இல்லவே இல்லை.

நம்பிக்கையும் பாதுகாப்பும் நிறைந்த இந்த உறவுக்குத்தான் எத்தனை வலிமை
பாருங்கள்….அன்பை நாடி ஆருதலை நாடி நாம் அவர்களிடத்தில் சரணடைந்த
பின்…எங்களது எதிர்பார்ப்புகள் எப்படியெல்லாம் தலை தூக்கிவிடுகிறதென்று
பார்த்தீர்களா.

ஆனாலும் பாருங்கள் இந்த உறவை தக்கவைத்துக்கொள்ள எவ்வளவெல்லாம்
போராடவேணடியிருக்கிறது….இதை யாராலும் மறுக்க முடியாது… அந்தப்
போராட்டமும் அலாதியான சுகத்தைத்தான் தருகிறது.

நமது ஆற்றல்களையும் ஆளுமைகளையும் வளர்த்துவிடுகிறது. இல்லறம் இனிக்க
கணவரின் குணம் அறிந்து மனைவி நடந்து கொள்ள வேண்டும்.

அலுவலகத்தில் இருந்து கணவர் சோர்வுடன் வரும் போது அன்று நடந்த
பிரச்சனைகளை பற்றி சொல்லி அவரை கோபப்படுத்தாதீர்கள்.

கணவர் கோபப்படும் போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். விட்டு
கொடுத்து போவதில் எந்த தவறும் இல்லை. குடும்பம் அமைதியாகவும்,
சந்தோஷமாகவும் இருக்க பெண்கள் அமைதியாகவும் சூழ்நிலையை புரிந்து கொண்டும்
நடந்து கொள்ள வேண்டும்

Relatives and relations சொந்தங்கள் & பந்தங்கள்

0 comments
கடந்து வந்த காலத்தை இப்போது திரும்பி பார்த்தால் எதையெதை
தொலைத்திருக்கிறோம் என்பது புலப்படும். சில தொலைப்புகள் ஈடுகட்ட
முடியாதவை. சிலவற்றையோ இப்போது நினைத்தாலும் முடிந்தவரை ஒட்ட வைத்துக்
கொள்ளலாம். அப்படி மீண்டும் இணைத்துக் கொள்ளக்கூடிய இடத்தில் இருப்பது,
உறவுகள். ஆமாம், நாம் விட்டுச் சென்ற உறவுகள்.

கண்டு கொள்ளாமல் போன உறவுகள். உதாசீனப்படுத்தி விட்டுப்போன உறவுகள்.
இன்றைக்கும் பல கிராமங்களில் பார்த்தால் நம்மை பிரமிப்புக்குள்ளாக்குவது
கட்டுக்கோப்பான கூட்டுக் குடும்பங்கள் தான். தாத்தா இருக்கும்வரை அவர்
வாய்ச்சொல்லே அந்த குடும்பங்களுக்கு வேதம். அவர் குரல் உயரும்போது
மற்றவர்கள் காதுகள் தான் திறந்திருக்குமே தவிர, வாய்கள் மவுனம்
பூண்டிருக்கும்.

இப்படிப்பட்ட குடும்பங்கள் வாழ்ந்த காலங்கள் இப்போது அருகி வருவது தான்
வேதனை. தங்கள் குடும்பங்களை விட்டு அவர்கள் வாரிசுகள் எப்போது வேலை
நிமித்தம் இடம் பெயர்ந்தார்களோ, அப்போது முடிவுக்கு வரத்தொடங்கியது
கூட்டுக் குடும்பங்களின் பாரம்பரியம். இப்படி இடம் பெயர்ந்து போனவர்கள்
தனித்து வாழத்தொடங்கிய கால கட்டத்தில் பாசத்தில் உயிரோடு உருகினார்கள்.

அந்த அளவுக்கு பந்தபாசம் அவர்களை பிணைத்திருந்தது. உறவுகளோடு
இணைத்திருந்தது. தொலைத்தொடர்பு வசதிகள் இன்றைக்கு இருக்கிற மாதிரி
அந்நாட்களில் இல்லை. வெறும் கடிதங்கள் மட்டுமே அவர்களுக்குள் இணைப்புப்
பாலமாய் இருந்தது. வலுவுள்ள அந்த சொந்தங்கள் இன்றைக்கு காணாதே
போய்விட்டது என்பது தான் வேதனை.

இத்தனைக்கும் விரல் நுனியில் எண்களை அழுத்தினால் அடுத்த சில
மணித்துளிகளில் உலகின் எந்த மூலையில் இருப்பவரை வேண்டுமானாலும் தொடர்பு
கொண்டு பேச முடியும். அந்த அளவுக்கு தொழில் நுட்பம் செய்து
வைத்திருக்கும் மாயம், கைவசம் செல்போன்கள் வடிவில், லேப்டாப் வகையில்,
ஈமெயில்கள் வடிவில் இருந்தும், உறவுகள் தனித்தீவு போலாகி விட்டதன்
பின்னணி தான் என்ன?
தனியாக வாழத் தொடங்கிய மனிதன், காலப்போக்கில் தன்னைப் போல் தன் உறவு
வட்டங்கள் மீதான ஈர்ப்பையும் சுருக்கிக் கொண்டு விட்டது தான் காரணம்.
தன்னைப் பற்றி மட்டுமே அவன் எப்போது யோசிக்கத் தொடங்கினானோ அப்போதில்
இருந்தே அறுபடத் தொடங்கி விட்டன, உறவுச் சங்கிலிகள்.

இதில் வேதனை என்னவென்றால், எப்பேர்ப்பட்ட உறவுகளையெல்லாம் இன்றைக்கு நாம்
இழந்திருக்கிறோம் என்பதை அவன் சிந்தித்து பார்க்கவும் நேரம் இல்லாமல்
ஓடிக்கொண்டேயிருக்கிறான் என்பது தான். இன்னொரு கோணத்தில் உறவுகள்
தொடர்கதையாக அல்லாமல் சிறுகதையாக முடிந்து போவதற்கு காரணம்,
ஏற்றத்தாழ்வுகள். சாதாரண நிலையில் இருந்த உறவினர் திடுமென தொழில்
துறையில் வளர்ந்து சில ஆண்டுகளில் கோடீசுவரனாகி இருப்பார்.

ஆனால் ஊரில் உள்ள உறவுகள் மட்டும் அப்படியே இருப்பார்கள். விவசாயம்
பொய்த்தால் இவர்கள் கடன் வாங்கித்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய
நிலை. இப்படி அனுதினமும் போராட்ட வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பவர்கள்
எப்போதாவது தங்கள் கோடீசுவர உறவினரை பார்க்கப் போனால் பெரும்பாலும்
அவர்களுக்கு அவமானம் தான் மிஞ்சுகிறது.கேட்டில் நிற்கிற காவலாளி இவர்கள்
தோற்றம் பார்த்து உள்ளேஅனுமதிக்கவே மறுக்கிறார்.
ஒருவழியாக போய் சந்தித்து விட்டாலும் கூட பெரிதாக ஒன்றும் நடந்து
விடுவதில்லை. உபசரிப்பு முடிந்து குடும்பம் பற்றி பேச்சு வந்தால் 'ஒரு
பொண்ணு மட்டும் கல்யாணத்துக்கு நிக்கிறா' என்று இவர்கள் சொல்லப் போக,
அப்போதே கோடீசுவர உறவினர் குடும்பம் 'கப்சிப்'பாகி விடுகிறது. தொடர்ந்து
அதுபற்றி பேசினால் கல்யாணத்துக்கு உதவி ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று
பயந்து அத்துடன் நிறுத்திக் கொண்டு விடுவார்கள்.

அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. உறவினர் குடும்பத்தில் ஒருவருக்கு
உதவி விட்டால் மற்ற உறவினர்களும் அவர்களை நோக்கி படையெடுத்து
விடுவார்கள். இதில் கொடுமை, ஓரளவு வசதியான உறவினர்களும் கிடைத்த வரை
லாபம் என்ற கண்ணோட்டத்தில் தங்கள் பரிவாரங்களுடன் போய் வசூல் செய்து
விடுவார்கள்.

தங்கள் தேவைகளை முடிந்தவரை தாங்களே சரி செய்து கொள்ள முடியும் என்ற
நிலையில் இருப்பவர்களும் 'சும்மா கிடைப்பதை ஏன் விட வேண்டும்' என்ற
எண்ணத்தில் இப்படி வலியப்போய் உதவி பெற்று, இருக்கிற உறவுகளை கெடுத்துக்
கொள்கிறார்கள். இது நல்லதல்ல...நாம் கட்டிக் காக்க வேண்டிய உறவை நம்
அதிகபட்ச ஆசைக்கு பலியாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை இவர்களுக்கு யார்
எடுத்துச் சொல்வது?

தொலைதூரத்தில் உள்ள உறவுகள் பலவும் தொடர்பில்லாமல் துவண்டு போய்க்
கிடப்பதும் நடக்கிறது. தென் மாவட்ட மக்கள் இதில் விதிவிலக்காக
இருக்கிறார்கள். தொலை நகரங்களில் நெல் லிக்காய் மூட்டை போல் சிதறிக்
கிடக்கிற இந்த உறவினர்கள் பலரும் தங்கள் ஊரில் திருவிழா, குடும்ப
விசேஷங்கள் என்றால் உடனே இறக்கை கட்டியாவது ஊர் போய் சேர்ந்து
விடுவார்கள்.

ஊரில் இருக்கிற கொஞ்ச நாட்களில் உறவுக் குடும்பங்களோடு தடைபட்டுப்
போயிருக்கும் உறவுகளை இப்படி அவ்வப் போது புதுப்பித்துக் கொள்கிறார்கள்.
இந்த மாதிரியான பிணைப்புகள் கூட ஒரு தலை முறையோடு முடிந்து விடுகிறது
என்பது உறவு நேசர்களுக்கு கேட்க கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும்.
அவர்கள் பிள்ளைகளின் கல்யாணம் வரை நீடிக்கும் இந்த உறவுகள், அப்புறமாய்
அவர்கள் பிள்ளைகள் மூலம் கிடைக்கும் புதிய சொந்தத்துக்குள் அடியெடுத்து
வைக்கும்போது அதுவரை கட்டிக்காத்த உறவுகள் இரண்டாம் பட்சமாகி விடுகிறது.
திருமண மான மகளை ஊர்த்திருவிழாவுக்கு அழைத்தால், 'அடுத்த மாசம் என்
வீட்டுக்காரர் ஊரில் திருவிழா. அங்கே போக வேண்டியதிருக்குமே' என்று
தயங்குவாள்.

இந்த தயக்கம் இனி அவளுக்கென்று புதிய வாழ்க்கை, புதிய சொந்தம்... அதை
நோக்கி அவள் போய்க்கொண்டிருக்கிறாள் என்பதையே காட்டுகிறது. நகர
வாழ்க்கையில் இந்த உறவுகள் இன்னும் தலைகீழ். இந்த மக்கள் பலரும்
கிடைக்கிற நட்புக்குள் இருக்கிற கொஞ்ச உறவுக்குள் தங்களை சுருக்கிக்
கொள்கிறார்கள்.

கிராமத்தில் இருந்து சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று எண்ணத்தில் ஒரு
பெரியவர் தனது நகர உறவினரின் இல்லம் தேடி வந்தார். படித்து ஊரில்
ஆசிரியராக வேலை பார்க்கும் தனது மகனுக்கு அவர்கள் வீட்டுப் பெண்ணைக்
கேட்டார். இத்தனைக்கும் அவர் நல்ல வசதியானவர். நகரக் குடும்பமோ நடுத்தர
வசதி கொண்டது தான்.

என்றாலும் நகரம் கைவிரித்து விட்டது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம்
இன்னும் அபத்தமானது. 'நகர வாழ்க்கைக்கு எங்கள் பெண் பழகி விட்டாள்.
அவளால் கட்டுப்பெட்டியாய் கிராமத்தில் வாழ முடியாது. வேணும்னா வேலையை
சிட்டி பக்கமா மாத்த முடிஞ்சா அப்ப வாங்களேன். பேசுவோம்...' சுக வாசியாய்
யோசிக்கத் தொடங்கி விட்ட இவர்களைப் போன்றவர்கள் தான் விட்டுப்போன உறவுகளை
ஒரேயடியாய் கெட்டுப்போன உறவுகளாக ஆக்குகிறவர்கள்.

எந்த சூழலிலும் விட்டுக் கொடுக்காத சொந்தங்கள் மட்டுமே கேட்காமலே வந்து
உதவும். கவ லைப்படும் நேரத்தில் அள்ளியணைத்து ஆறுதல் தரும்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு மட்டுமே இப்படி கேட்காமலே ஓடிவந்து உதவும்.
இந்த சொந்தங்களுக்குள் ஒருபோதும் பண பாகுபாடோ, மன வேறு பாடோ
இருப்பதில்லை. இந்த மாதிரியான உறவுகள் இருக்கிறவரை எத்தனை தூரத்தில்
இருந்தாலும் நீடித்து நிலைத்திருக்கும் பந்தங்கள் என்பது மட்டும் உறுதி.

Listening and the Ear | பாட்டு கேட்க மட்டுமா காதுகள்?

0 comments
காதுகள் இரண்டும் எதற்காக?'

என்று இன்றைய இளைய தலைமுறையிடம் கேட்டால் உடனே பதில் சொல்லிவிடுவார்கள்,
'இயர் போன்' மாட்டிக்கொள்வதற்காக என்று!

காதுகளில் அதை மாட்டிக்கொண்டே பாட்டு கேட்கிறார்கள்... பேசுகிறார்கள்..!
நாள் முழுக்க எங்கேயும், எப்போதும் அதோடுதான் அலைகிறார்கள்.


இளைஞர்கள் மட்டுமல்லாமல் நடுத்தர வயதினரும், வயதானவர்களும் கூட இந்த
பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அவர்கள் நம்முடைய காதுகள் பாட்டு
கேட்பதற்காக மட்டுமே படைக்கப்படவில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

காது இல்லையேல் அறிவை வளர்க்க முடியாது. சதா பாட்டு கேட்டுக் கொண்டே
இருந்தால் காதுகளின் கேட்கும் திறன் குறைந்து விடும்.


கடினமான சில பணிகளை செய்யும் போதும், ஜிம்மில் சில பயிற்சிகளை மேற்
கொள்ளும் போதும் ஓரளவு இயர் போனை பயன்படுத்திக்கொள்ளலாம். இயர்போன்
பயன்படுத்த நீங்களே சில சுயகட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டால் அது
உங்களுக்கு நல்லது.


* பாட்டின் ஓசையை கட்டுப்பாட்டுக்குள் வைத்து கேட்க பழகிக் கொள்ளுங்கள்.


* எப்போதும் ஒரே அளவோடு ஒலி இருக்கட்டும். உயர்வு தாழ்வு அடிக்கடி
வேண்டாம். நீங்கள் வண்டி ஓட்டுபவராக இருந்தால் இயர் போன்
பயன்படுத்தாதீர்கள். அக்கம் பக்கத்து ஓசைகள் உங்கள் காதுகளில்
விழுந்தால்தான் விபத்தின்றி வாகனம் ஓட்ட முடியும்.


* இசை மற்றும் ஓசை தொடர்புடைய தொழிலில் உள்ளவர்கள் தொடர்ந்து ஒலியை கேட்க
வேண்டிய கட்டாயம் இருக்கும். அவர்கள் 60 நிமிடங்கள் ஒலியை கேட்டால்
அடுத்த 60 நிமிடங்கள் காதுகளுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும். இடைவிடாமல்
காதுகளுக்குள் ஒலியை பாய்ச்சக்கூடாது.

* தரமான இயர் போன்களை பயன்படுத்துங்கள்.

* அதிக பட்சமாக ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் தொடர்ந்து பாட்டு கேட்காதீர்கள்.

* 'இயர் பட்' பொருத்தப்பட்ட போன்களை பயன்படுத்தாதீர்கள். அது சாதாரண
ஒலியை எட்டுமடங்கு பெருக்கி காதுகளுக்கு அனுப்பும். அதனால் காதுகளுக்கு
அதிக சேதம் ஏற்படும்.

* சிலர் ஒருகாதில் மட்டும் பொருத்தி பாட்டு கேட்பார்கள். இன்னொன்றை
அருகில் இருப்பவர் காதில் பொருத்திக்கொள்வார்கள். அது தவறான வழக்கம். ஒரு
காதுக்கு மட்டும் அதிக ஒலி அழுத்தம் கொடுத்தால், அந்த காது பழுதாகும்.

* அமெரிக்காவின் "ஜான் ஹோப் கிங்ஸ்" பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப்படி
இயர்போன் பயன்படுத்தும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஐந்தில் ஒருவருக்கு
காது பாதிப்பு ஏற்படு கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்காவில் வரும் ஆண்டுகளில் கேள்வித்திறன்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விடும் என்ற பகீர் தகவலை
வெளியிட்டிருக்கிறது.

Adding Ghee to the Food | நெய் சேர்ப்பதன் பயன்கள்

0 comments
தினமும் உணவில் நெய் சேர்ப்பதால் ஏற்படும் பலன்கள்.

• தினமும் நெய் சேர்ப்பது உடல் நலம் மற்றும் மன நலனுக்கு உகந்தது, இதனால்
உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

• உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றவும், கண் பார்வையை
அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.

• வெண்ணெய்யை விட உருக்கப்பட்ட சுத்தமான நெய்யில் கொழுப்பு குறைவாக
உள்ளதால், வேகமாக செரிக்கும்.

• நெய்யை பிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை, அதை கைபடாமல் வெளியில்
வைத்திருந்தாலே நீண்ட காலத்துக்கு கெடாது, அதனால் நெய்யில் மாற்றம்
ஏற்படாது.

• நெய் சாப்பிடுவது மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும், செரிமானத்தை
ஊக்குவிப்பதால் நாம் எடுத்து கொள்ளும் உணவில் எடை குறையாமல் சமநிலையில்
வைக்க உதவும்.

• விட்டமின் ஏ, டி, இ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை
சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும்,

• உடல் செயல்பாட்டுக்கு சில கொழுப்பு சத்துகள் தேவை, அதை நெய்
சாப்பிடுவதால் பெறலாம். தினம் நாம் உணவில் நெய் சேர்த்து உடல் ஆரோக்கியம்
பெறலாம்.

Fwd: [New post] பெண்கள் வாகனம் ஓட்டும் போது கவனிக்க வேண்டியவை

0 comments
பெண்கள் வாகனம் ஓட்டும் போது கவனிக்க வேண்டியவை

இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்கள் துப்பட்டா, புடவை உள்ளிட்ட ஆடைகளை
சரியாக அணிந்து அல்லது முடிச்சு போட்டுக் கொண்டு வாகனம் ஓட்டுங்கள். கார்
ஓட்டுபவரானால் சீட் பெல்ட் முக்கியம்.

வாகனத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் நடுசாலையில் இறங்கி
பார்க்காதீர்கள். சாலை ஓரமாக நிறுத்தி பரிசோதியுங்கள்.

உங்கள் கைப் பை அல்லது விலை உயர்ந்த பொருள்களை காரின் முன் இருக்கையில்
வைக்க வேண்டாம். திருடனின் பார்வையில் எளிதில் சிக்காமல் தப்பிக்க இது
உதவும்.

வாகனத்தில் செல்லும்போது நீங்கள் எங்கு செல்கிறீர்கள், எந்தப் பாதையைத்
தேர்ந்தெடுத்துச் செல்வீர்கள் என்பதை வீட்டில் இருக்கும் யாருக்காவது
தெரிவித்துச் செல்லுங்கள்.

வெவ்வேறு சிறிய பணிகளுக்காக அடிக்கடி பயணம் மேற்கொள்ளாமல், ஒரே பயணத்தில்
வேலைகளை முடித்துவிடுங்கள். எரிபொருளும் மிச்சம், உங்களுக்கு சாலையில்
செல்லும் "ரிஸ்க்'கும் மிச்சம்.

பிரேக்கில் கால் வைத்த வண்ணம் வாகனம் ஓட்டாதீர்கள். இது எரிபொருளை அதிகம்
வீணாக்கும்.

காரில் உள்ள ஏ.சி. உபயோகத்தைக் குறைப்பதால் 8 சதவீதமும், தேவையில்லாத
பொருள்கள் அல்லது எடையைக் குறைப்பதன் மூலம் 4 சதவீதமும் எரிபொருளை
சேமிக்க முடியும்.

கால சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் கோடையில் கண்களுக்கு குளிர்ச்சியாக கண்ணாடி
அணிந்துக் கொள்ளுங்கள். மழைக் காலத்தில் ரெயின்கோட் அணிந்து, மிதமான
வேகத்தில் வாகனம் ஓட்டுங்கள்.

செல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டாதீர்கள். வாகனம் ஓட்டும் போது
உங்கள் கவனம் முழுவதும் வாகனம் ஓட்டுவதில் மட்டுமே இருக்க வேண்டும்.

Bandwidth, Broadband and Latency | பிராட்பேண்ட் பேண்ட்வித் மற்றும் லேடன்சி

0 comments
Read and understand about Bandwidth, Broadband and Latency. 

படிப்படியாக இணையத்துடன் வாழத் தொடங்கிவிட்டோம். வாழ்க்கை முறையை இணையம் கொஞ்சம் கொஞ்ச மாக மாற்றி வருகிறது. இந்த தொழில் நுட்பத்தில் புழக்கத்தில் இருக்கும் சொற்களில் சிலவற்றை நாம் சரியாகத் தெரிந்து கொள்ள கீழே குறிப்புகள் தரப்படுகின்றன. 

ஏனென்றால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் பல்வேறு தொழில் நுட்ப சொற்களைக் கூறி விளம்பரப்படுத்துகின்றனர். இவற்றை நாம் தெளிவாக அறியும் வகையில் தரும் பழக்கம் இவர்களிடம் இல்லை. இந்த தொழில் நுட்ப சொற்கள், ஓர் இணைய இணைப்பு சேவையில் மிக மிக முக்கியமானவை. இணைய சேவை நிறுவனம் ஒன்றினைத் தேர்ந்தெடுக்கையில் இவற்றை நாம் தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. 


1. பேண்ட்வித் (bandwidth):


உங்கள் கம்ப்யூட்ட ரிலிருந்து அல்லது உங்கள் கம்ப்யூட்டருக்கு அல்லது மொபைல் சாதனங்களுக்கு பரிமாறப்படும் டேட்டாவின் அளவினை இது குறிக்கிறது. இதனை விநாடிக்கு இவ்வளவு கிலோ பிட்ஸ் (kilobits– kbits) என அளக்கின்றனர். சில இணைய சேவை நிறுவனங்கள், தங்கள் விளம்பரத்தில் தாங்கள் அளிக்கும் இணைப்பு என்ன வேகத்தில் இருக்கும் என்பதைக் குறிக்கையில் இந்த அளவினைக் குறிப் பிடுவார்கள். சிலர் வேகத்தினை mbit எனவும் அறிவிப்பார்கள். 1mbit என்பது 1000 kbits. இது மக்களைக் குழப்பும் வேலை எனவும் சிலர் குறிப்பிடுவார்கள். ஏனென்றால், நாம் கம்ப்யூட்டரில் தகவல் பதிவதை மெகா பைட்ஸ் (megabytes(MB)) அளவில் கூறுகிறோம். சில வேளைகளில் kilobytes (KB)என்பதனையும் பயன்படுத்துகிறோம். எனவே, இதே அளவில் இணைய சேவை வேகத்தினைப் புரிந்து கொள்ள வேண்டும் எனில், அவர்கள் தரும் அளவினை 8 ஆல் வகுத்து மெகாபைட் அல்லது கிலோ பைட் என்பதில் தெரிந்து கொள்ளலாம். 

2. பிராட்பேண்ட் (Broadband):

உங்களுடைய இணைய தொடர்பில், தகவல்கள் பரிமாறப்படுவது, இந்த குறைந்த பட்ச அளவில் தான். இந்த குறைந்த பட்ச அளவு என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும். அமெரிக்காவில் இது 256 kbits per second, (or 0.25 megabit per second) ஆக உள்ளது. இதுவே சில நாடுகளில் 768 kbit என்று தொடங்கி 30 or 40 mbits வரை செல்கிறது. 

3. அப்லோட்/டவுண்லோட் (Upload/Download):

அப்லோட் என்பது உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து இணையத்திற்கு தகவல் அனுப்பும் செயல்முறையைக் குறிக்கிறது. டவுண்லோட் என்பது இணையத்திலிருந்து கம்ப்யூட்டருக்கு இறக்கப்படும் செயல்முறையைக் குறிக்கிறது. இணைய சேவை நிறுவனங்கள், தாங்கள் அதிக வேகத்தில் டவுண்லோட் சேவையினை வழங்குவதாக அறிவிப்பார்கள். இணையத்தில் பொதுவாக, தகவல்கள் டவுண்லோட் செய்வது தான் அதிக அளவில் நடைபெறுகிறது. எனவே தான், இணைய சேவை நிறுவனங்கள் இந்த அளவினை விளம்பரப் படுத்துவதில் முக்கியத்துவம் அளிப்பார்கள். 

4. சிம்மெட்ரிக்/அசிம்மெட்ரிக் (Symmetric/Asymmetric):

இந்த சொற்களை அவ்வளவாக பொதுமக்களுக்கு இணைய சேவை நிறுவனங்கள் அளிக்க மாட்டார்கள். அதிக அளவில் தகவல் பரிமாற்றத்தினை, அதிக பட்ச வேகத்தில் மேற்கொள்ளத் திட்டமிடும் நிறுவனங்கள் மட்டுமே இந்த சொற்கள் குறிப்பிடுவதனைக் கையாள்வார்கள். ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இணையத்திற்குச் செல்லும் தகவல் வேகமும், தகவல்கள் வந்தடையும் வேகமும், ஒரே வேகத்தில் இருந்தால் அதனை Symmetric இணைய சேவை என அழைக்கின்றனர். மற்ற வாடிக்கை யாளர்களுக்கு, தகவல் பரிமாற்ற வேகம் முன்பு குறிப்பிட்டபடி ஒரே அளவில் இருக்காது. இதனை Asymmetric என அழைக்கின்றனர். 

5. லேடன்சி (latency):

இதனை இணைய சேவை நிறுவனங்கள் அவ்வளவாகப் பயன்படுத்தவில்லை என்றாலும், இதனைத் தெரிந்து கொள்வது நல்லது. இந்த சொல், உங்கள் கம்ப்யூட்டர், இணையத்தில் ஒரு குறிப்பிட்ட முகவரியில் உள்ள சர்வர் ஒன்றைத் தொடர்பு கொள்வதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தினைக் குறிக்கிறது. இது நமக்குச் சேவை தரும் நிறுவனத்தின் கட்டமைப்பு, நாம் தொடர்பு கொள்ளும் சர்வரின் திறன், நாம் பயன்படுத்தும் இணைய தொடர்பு வகை ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடும். 
இதனை எப்படி அறிந்து அல்லது அளந்து கொள்வது? இது மில்லி செகண்ட்ஸ் (ms or milliseconds) என்ற அலகில் அளக்கப்படுகிறது. உங்கள் இணைப்பின் இந்த வகை திறனை அறிந்து கொள்ள, கம்ப்யூட்டரில் கமாண்ட் ப்ராம்ப்ட் திறக்கவும். இதற்கு Windows Key + R அழுத்தி, கிடைக்கும் கட்டத்தில் cmd.exe என டைப் செய்து என்டர் தட்டவும். கருப்பு வண்ணத்தில் டாஸ் இயக்க கட்டம் கிடைக்கும். அதில் ட்ரைவ் எழுத்துடன், அருகில் கட்டளைப் புள்ளி ஒன்று துடித்துக் கொண்டிருக்கும். இந்த இடத்தில் ping http://www.dinamalar.com என டைப் செய்து என்டர் தட்டவும். உடன் ஒரு வரி காட்டப்படும். அதில் நேரம் குறிப்பிடப்பட்டு அதன் அருகே ட்ண் என இருக்கும். இத்தனை மில்லி செகண்ட் நேரத்தில், குறிப்பிட்ட இணைய தளத்திற்கான சர்வரை உங்கள் கம்ப்யூட்டரால் அடைய முடிகிறது என இணைய இணைப்பின் திறனைத் தெரிந்து கொள்ளலாம். இது 100ms வரை இருந்தால், அதனை மிகக் குறைவான திறன் எனலாம். 100>200 ms ஆக இருந்தால் அதனை சராசரியான வேகத்திறன் எனலாம். 200 ms க்கு மேலாக எனில், அது சிறப்பான வேகம் எனக் கொள்ளலாம்.   

லேடன்சி எனப்படும் இந்த இணைப்பு வேகத்திறன் நமக்கு மிக மிக முக்கியம். ஏனென்றால், சில வேளைகளில் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக, இணைய தளத்திற்கு நாம் தகவல்களை அனுப்பியாக வேண்டும். இல்லை எனில், நம் தகவல் பரிமாற்றம் முறிந்து போய், மறுபடியும் தொடக்கத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். ட்ரெய்ன் டிக்கட் போன்றவற்றை இணையம் வழி பெற முயற்சிக்கையில் வேகம் குறைவது சிக்கலை ஏற்படுத்தும்.

Reason for Divorce | விவாகரத்து ஏற்பட முக்கிய காரணங்கள்

0 comments
புகைப்பிடிப்பதால் எப்படி உடலை மெதுவாகவும், அமைதியாகவும் பாதிக்கிறதோ, அதேப் போல் திருமணத்திற்கு பின் ஒருசில குணங்களை வெளிக்கொணர்வதால், திருமண வாழ்வும் விவாகரத்தில் முடிகிறது.  விவாகரத்து எளிதில் ஏற்பட காரணம் ஒருவரின் குணங்கள் தான்.   எனவே மண வாழ்வைக் கெடுக்கும் குணங்களை முற்றிலும் தவிர்த்தால், நிச்சயம் திருமணத்திற்கு பின் நல்ல வாழ்க்கையை வாழலாம். 

நிறைய மக்கள் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணம் நாமில்லை, மற்றவர்கள் தான் என்று கருதுகின்றனர். உண்மையில் விவாகரத்து ஏற்படுவதற்கு காரணமான குணங்கள் ஒருவரது மனதில் தான் உள்ளன. அது தான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுதல், பேசும் வார்த்தைகள், கோபம், அகங்காரம் போன்றவை. 
இத்தகைய குணங்கள் தம்பதியருக்குள் இருந்தால், நிச்சயம் அந்த மண வாழ்வானது இறுதி நிலையை அடையும். எனவே திருமண வாழ்வை. விவாகரத்து என்ற நிலைமைக்கு கொண்டு வரும் குணங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.

கீழே உள்ள குணங்கள் ஏதேனும் உங்களிடம் இருந்தால் அதைப் படித்து தெரிந்து கொண்டு, அத்தகையவற்றை மனதில் இருந்து நீக்கி, சந்தோஷமான மண வாழ்க்கையை வாழுங்கள். 

எப்போதுமே தம்பதியருக்குள் தான் என்ற அகங்காரம் இருக்கக் கூடாது. இது தான் மண வாழ்விற்கு முதல் எதிரி. 

சந்தேகம் என்பது ஒரு நோய். அந்த நோய் ஒருமுறை வந்தால், அதனை குணப்படுத்த முடியாது. எனவே சந்தேகம் என்ற நோயை மனதில் வராமல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு முதலில் கணவருக்கு மனைவி மீதும், மனைவிக்கு கணவர் மீதும் நம்பிக்கை வேண்டும். 

தம்பதிகள் இருவரும் எப்போதும் மனம் விட்டு பேச வேண்டும். அதைவிட்டு எப்போதும் வீட்டில் அமைதியுடன், அவரவர் வேலையை செய்து கொண்டிருந்தால், அதுவே இருவரின் மண வாழ்விற்கு முற்றுபுள்ளி வைத்துவிடும். 

இன்றைய காலத்தில் தம்பதிகள் இருவரும் வேலைக்கு செல்ல வேண்டியிருப்பதால், இருவராலும் சரியாக பார்த்து பேச நேரம் கிடைக்காமல் போகிறது. இவ்வாறு இருவரும் சந்திக்க முடியாத அளவு நேரம் கிடைக்காமல் போனால், பின் சந்தோஷமான மண வாழ்விற்கே ஆபத்து ஏற்படும். 

இருவருக்கும் இடையில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால், அதை அப்பொழுதே பேசி சரிசெய்து கொள்ள வேண்டும். அதைவிட்டு, அதனைப் பற்றி அடிக்கடி பேசிக்கொண்டிருந்தால், அதுவே துணைக்கு வெறுப்பை ஏற்படுத்தி, பிரிவை உண்டாக்கும். 

துணை ஏதேனும் தவறு செய்து விட்டால், அப்போது அதனால் ஏற்படும் கோபத்தை அவரிடம் காண்பிக்கும் போது, அவர் மனமானது புண்படும்படியாக இல்லாதவாறு நடக்க வேண்டும். அதைவிட்டு, அவர் மனம் புண்படும் படியாகவோ அல்லது அசிங்கப்படுத்தும் படியாகவோ நடந்தால், பின் அது கெட்ட விளைவை உண்டாக்கும். மேலும் கோபத்தினால் பேசும் பேச்சை பார்த்து பேச வேண்டும். அதைவிட்டு வார்த்தையை ஒரு முறை விட்டுவிட்டால், பின் அதனால் ஏற்பட்ட காயத்தை அகற்ற முடியாது. ஆகவே இத்தகைய குணத்தை அறவே தவிர்க்க வேண்டும். 

இருவருக்குள் ஏதேனும் பிரச்சனை என்றால் அந்த பிரச்சனையில் மூன்றாம் நபரை குறுக்கிட வைக்க வேண்டாம். ஏனெனில் அவ்வாறு குறுக்கிட வைத்தால், சிறு பிரச்சனை கூட பெரிதாகிவிடும். பின் அதுவே விவாகரத்து வரை முடியும். ஆகவே எதுவாக இருந்தாலும், தம்பதியர்களே பேசி முடிக்க வேண்டும். 

சிலர் காதல் திருமணம் செய்து கொள்வார்கள். அவ்வாறு காதல் திருமணம் செய்யும் போது, வேறு மதத்தினரையோ அல்லது நாட்டினரையோ மணம் முடித்துக் கொண்டால், அப்போது சில நேரங்களில கலாச்சார பிரச்சனை ஏற்படும். எனவே இவ்வாறான திருமணம் செய்து கொண்டவர்கள், திருமணத்திற்கு முன்பே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால், எந்த பிரச்சனையும் இருக்காது. 

அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும், அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் உண்டான கோபத்தை வீட்டில் துணையிடம் வெளிப்படுத்தக் கூடாது. ஒருசில நேரங்களில் துணை நிச்சயம் புரிந்து கொண்டு நடப்பார்கள். ஆனால் அதுவே தொடர்ந்தால், பின் பிரிவை சந்திக்க நேரிடும்.

உடலே உன்னை ஆராதிக்கிறேன்

0 comments
உடல் நலம் சரியாக இருந்தால் தான், எந்த வேலையையும் செய்ய முடியும். முன்னோரின் வாழ்க்கையில், அவர்களது உணவே, மருந்தாக இருந்தது. இன்றைய உலகில் எதற்கும் அவசரம். சரியான, சத்தான உணவை பெரும்பாலானோர் எடுத்துக்கொள்வதில்லை. உடல்நலம் பற்றி அக்கறை காட்டுவதே இல்லை. நோய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 

"அதிக ரத்த அழுத்தம்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. உடலில் ரத்த அழுத்தம் அதிகரிப்பது மாரடைப்பு, பக்கவாதம், கிட்னி செயலிழத்தல் ஆகியவற்றுக்கு காரணமாக அமைகிறது. ரத்த அழுதத்தத்தை கட்டுப்படுத்தாமல் விட்டால், பார்வை குறைபாடு, இருதய செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உலகளவில் மூன்று இளைஞர்களில் ஒருவர் அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்காவில் நடுத்தர நாடுகளில் 40 சதவீத இளைஞர்களுக்கு இந்த பாதிப்பு உள்ளது. இது கட்டுப்படுத்தக்கூடியது.

என்ன செய்வது:

உப்பு பயன்படுத்துவதை குறைப்பது, சரியான அளவில் உணவு எடுத்துக்கொள்வது, ஆல்கஹால், புகையிலை பயன்படுத்தாமல் இருப்பது, உடல் எடையை சீராக வைத்தல், தினமும் உடற்பயிற்சி செய்வது ஆகியவை மூலம் இதை கட்டுப்படுத்தலாம்.

ஜப்பானில் தொழில் வளர்ச்சியை போல, சுகாதார வசதியும் சிறப்பாக உள்ளது. இதற்கு, உலகிலேயே மக்களின் வாழ்நாள் அதிகம் உள்ள நாடு ஜப்பான் என்பதே சாட்சி. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், சுகாதார வசதி குறைவு. என்னதான் அரசு சுகாதார திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், அது அனைவரையும் சென்று சேர்வதில்லை. நகரங்களில், போதிய சுகாதார வசதிகள் உள்ளன. கிராமங்களின் நிலை பரிதாபம்.குழந்தை பிரசவம், தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்தல், அவசர சிகிச்சை போன்ற பிரச்னைகளுக்கு சுகாதார மையங்கள் தவிர்க்க முடியாதவை. 10 கி.மீ., தூரத்துக்கு, ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். சுற்றுச்சூழல், நீர், காற்று போன்றவற்றை, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.முயற்சி செய்யலாம்

உடல் நலனை சீராக வைக்க சில வழிகள்:

அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். 

எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க வேண்டும். 

சரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். காலை உணவு அவசியம்.

சத்தான காய்கறிகள், பழங்கள், பயறு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

"பாஸ்ட் புட்' ÷ பான்றவற்றை தவிர்க்க வேண்டும். இது உடலுக்கு ஆற்றலை கொடுப்பதில்லை. 

உடல் எடையை சீராக வைத்திருங்கள். உயரத்துக்கு ஏற்ற எடை அவசியம். 

வேலையின் போது, சீரான இடைவெளியில் ஓய்வு அவசியம். 

உடற்பயிற்சி செய்வது, பாதி நோய்களிலிருந்து விடுதலை அளிக்கும். தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். 

மனிதனின் ஆயுளை குறைக்கும், மது, சிகரெட் பழக்கத்தை அறவே விட்டு விடுங்கள். 

கோபத்தை குறைத்து மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

முதுகுவலி - காரணங்களும், தீர்வுகளும் :

தற்போதைய எந்திரமயமான வாழ்க்கை முறையினால், உடலில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. அதில் முக்கியமானது முதுகு வலி. அலுவலக நேரம் முழுவதும் கம்ப்யூட்டர் முன் அமர்கிறோம். வீட்டிலிருக்கும் நேரத்திலும், அமர்ந்து கொண்டே "டிவி' பார்க்கிறோம். உடற்பயிற்சி செய்ய நேரமே ஒதுக்குவதில்லை. இதனால் உடலின் தசைகள் வலுவிழக்கின்றன.

உடலின் எடையை முதுகெலும்புதான் தாங்குகிறது. குறிப்பாக அடி முதுகில் அனைத்து எடையும் குவிகிறது. முறையற்ற உணவுப்பழக்கம், சத்தில்லாத உணவு, தொடர்ந்து பயணம், திடீரென தீவிரமாக வேலை செய்வது, அதிக எடை தூக்குதல் போன்ற பல காரணங்களால் முதுகுவலி ஏற்படுகிறது. 

முறையற்ற வாழ்க்கை முறையினால், பல்வேறு முதுகுப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. வயது ஆக ஆக, முதுகின் பிரச்னை அதிகரிக்கும். அடி முதுகுவலியை கவனத்தில் கொள்ளாவிட்டால், பல சிக்கல்களை உருவாக்கும். முதுகெலும்பு இடமாற்றம், கீழே இறங்குதல் போன்ற பிரச்னைகள் உண்டாகின்றன. 

இதனால் அமருவது, நிற்பது, நடப்பதில் கூட சிரமம் ஏற்படும். முதுகெலும்பு அடுக்கில் உள்ள எலும்புகள் இடம் மாறுவது, ஒரு வகை நோய். இதனால் தீவிர வலி, முதுகு, கால்களில் உணர்வின்மை ஆகியவை ஏற்படும்.முதுகெலுப்பு இருக்குமிடத்தை விட்டு சற்று கீழே இறங்குதல் மற்றொரு வகை பிரச்னை. இதில் முதுகெலும்பில் உள்ள தசைகள் கிழிவதால், வீக்கம் உண்டாகிறது. 

வயதாகும் போது, முதுகெலும்பின் வளைவு, நெகிழ்வு, அதிர்ச்சியை தாங்கக் கூடிய தன்மை ஆகியவை குறையும். இதனால் வயதானவர்களுக்கு கண்டிப்பாக முதுகுப் பிரச்னை இருக்கும்.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf