ரத்தக் கசிவை நிறுத்தும் செயற்கை ரத்த அணுக்கள்!

0 comments
விபத்துகளால் பாதிக்கப்படுபவர்கள் சந்திக்கும் முதல் மற்றும் மிகவும் ஆபத்தான பிரச்சினை வேகமான ரத்தக் கசிவுதான். இந்த ரத்தக் கசிவை உடனே நிறுத்தாவிட்டால், அதிகமான ரத்த இழப்பு ஏற்பட்டு அது உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விடும்.

இதேபோன்ற ஒரு சூழலைத்தான் காயம் அடையும் ராணுவ வீரர்களும், அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளும் சந்திக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு ஒரு முழுமையான தீர்வு என்றால் அது ரத்தக் கசிவை உடனே நிறுத்துவதுதான்.

ரத்தக் கசிவை உடனே நிறுத்த வேண்டுமானால் ரத்தம் கட்டியாக வேண்டும். அதற்கு `ப்ளேட்லெட்' எனப்படும் ஒரு வகை ரத்த அணுக்கள் அவசியம். தற்போதுள்ள மருத்துவ முறையில், இயற்கையான ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ப்ளேட்லெட் அணுக்களைக் கொண்டு ரத்தத்தை கட்டியாக்கி ரத்தக்கசிவை நிறுத்துகிறார்கள்.

ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, ரத்தத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட ப்ளேட் லெட்களின் வாழும் காலம் (ஷெல்ப் லைப்) மிகமிக குறைவு. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஒரே வழிதான் இருக்கிறது. அது, செயற்கை ப்ளேட் லெட் அணுக்களை உருவாக்குவது.

கடந்த 100 வருடங் களாக, உலகின் பல சோதனைக்கூடங்கள் இயற்கையான ப்ளேட்லெட் அணுக் களின் அளவு, வடிவம் மற்றும் செயல்பாடு ஆகியவற்றை கொண்டிருக்கும் செயற்கை ப்ளேட்லெட்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இதுவரையில் யாரும் அந்த முயற்சியில் வெற்றி பெற முடியவில்லை.

உலகில் முதல் முறையாக, இயற்கையான ப்ளேட்லெட்களை போன்ற அளவு, வடிவம் மற்றும் செயல்பாடு கொண்ட செயற்கை ப்ளேட்லெட்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள். ரத்தத்தை கட்டியாக்கி ரத்தக் கசிவை தடுக்கும் திறனுள்ள இந்த செயற்கை ப்ளேட் லெட்கள், மேலும் பல விந்தைகளையும் செய்கின்றன என்கிறார் வேதி யியல் பொறியாளர் நிஷித் தோஷி.

உதாரணமாக, உடலில் சேதமடைந்த ரத்த நாளங்களை இனம்கண்டு சொல்வது அல்லது ரத்த நாளங்களில் ஏற்படும் ரத்த கட்டுகளை உடைக்கும் திறனுள்ள மருந்துகளை தாங்கிச் சென்று, ரத்தக் கட்டுகளை உடைத்து ரத்த ஓட்டத்தை சீராக்குவது போன்றவை.

அது சரி, கடந்த நூறு வருடங்களாக சாத்தியப்படாத செயற்கை ப்ளேட்லெட் உற்பத்தி இப்போது எப்படி சாத்தியமானது?

ப்ளேட்லெட்கள் 2 முதல் 4 மைக்ரோ மீட்டர் அளவுடையவை. அதாவது, மனித மயிரிழையை விட சுமார் 50 தடவை சிறியவை. செயற்கை ப்ளேட்லெட் உருவாக்கும் முயற்சி 100 வருடங்களாக தோல்வி அடைந்ததற்கு ஒரு முக்கியமான காரணம், அவை இயற்கையான ப்ளேட்லெட்களை விட மிகவும் உறுதியானவையாக அல்லது கடினமாக இருந்தன என்பதுதான்.

இந்த நடைமுறை பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு தந்திரத்தை கையாண்டது நிஷித் தோஷியின் ஆய்வுக்குழு. அதாவது, செயற்கை ப்ளேட்லெட்கள் உற்பத்திக்குத் தேவையான புரதங்கள் மற்றும் இதர பகுதிகளை உருவாக்க பாலிமர் எனும் உறுதியான வேதியியல் பொருளை அடித்தளமாக பயன்படுத்தினர்.

செயற்கை ப்ளேட்லெட்கள் முழுவடிவம் பெற்ற பின்னர், அந்த உறுதியான பாலிமர் அடித்தளத்தை கரைத்து விட்டார்கள். இதன்மூலம் இயற்கை ப்ளேட்லெட்களைப் போன்ற மிருதுவான செயற்கை ப்ளேட்லெட்கள் உருவாயின.

மனித நோயாளிகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டு, மேலும் பல பரிசோதனைகளையும் தாண்டிய பின்னரே, இந்த செயற்கை ப்ளேட்லெட்கள் மனித பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்கை ப்ளேட்லெட்கள் மனித பயன்பாட்டுக்கு வந்த பின்னர், ரத்தக்கசிவு பிரச்சினைகளால் பாதிக்கப்படும் ராணுவ வீரர்கள், அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகள் மற்றும் ரத்தத்தில் குறைந்த எண்ணிக்கையிலான ப்ளேட்லெட்களைக் கொண்ட நோயாளிகள் என பலர் நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

முனைவர் பத்மஹரி

ப்ரான் மேங்கோ கறி

0 comments
தேவையான பொருட்கள்

இறால்-400 கிராம்
தேங்காய் எண்ணெய்- 4 டீஸ்பூன்
அரை மூடி தேங்காய்- திருவி பால் எடுக்கவும்.
வெங்காயம்-3 (நறுக்கவும்)
மாங்காய்-1
காய்ந்த மிளகாய்-2
பச்சை மிளகாய்-2
தனியா-1 டீஸ்பூன்
சீரகம்- 1/2 டீஸ்பூன்
(தனியா, சீரகம் இரண்டையும் வறுத்து அரைக்கவும்)
மஞ்சள் தூள்-1/2 டீஸ்பூன்
பூண்டு-4 பல்
இஞ்சி-சிறுதுண்டு
(பூண்டு, இஞ்சி இரண்டையும் விழுதாக்கவும்)
உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து லேசாக உப்பு தடவி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெயை காயவைத்து, காய்ந்ததும் வெங்காயத்தை வதக்கவும். அரைத்த மசாலாவை சேர்த்து பிரவுன் நிறத்தில் வரும் வரை வதக்கவும். அதில் சுத்தம் செய்து துண்டுகளாக்கிய மாங்காயை சேர்த்து ஒரு கப் தண்ணீர் விடவும். ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.

இப்போது இறாலை சேர்க்கவும். தேங்காய்ப்பால் சேர்க்கவும். மசாலாவுடன் சேர்ந்து இறாலும் வெந்து திக்கான பதத்தில் வந்ததும் இறக்கி வைக்கவும்.

இது சாதத்திற்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்.

மட்டன் வெள்ளை குருமா

0 comments
தேவையான பொருட்கள்:

மட்டன் -1/4 கிலோ
தக்காளி -1/4 கிலோ
பச்சை மிளகாய் -4 (கீறியது)
தேங்காய் -1/2 முடி
கசகசா -2 டீஸ்பூன்
தயிர் -1/2 கப்
சோம்பு -1 டீஸ்பூன்
பட்டை -2
ஏலக்காய் -2
லவங்கம் -2
வெங்காயம் -1 கப்(நறுக்கியது)
இஞ்சி -சிறு துண்டு
பூண்டு - 5 பல்
முந்திரிப்பருப்பு -4
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய், கசகசா, இஞ்சி, பூண்டு, முந்திரியை அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கவும். மட்டனை சேர்க்கவும்.

அரைத்த தேங்காயை ஊற்றி போதுமான உப்பு சேர்க்கவும். தயிரையும் சேர்த்து நன்கு கலக்கி குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். கொத்தமல்லி இலையை சிறிது கிள்ளிப் போடவும்.

இப்போது மட்டன் வெள்ளை குருமா ரெடி.

இதே முறைப்படி மட்டனுக்குப் பதிலாக காய்கறி சேர்த்து குருமா, உருளைக்கிழங்கு குருமா ஆகியவையும் தயாரிக்கலாம்.

கல்வி உதவித்தொகை பெறுவது எப்படி?

0 comments
 
தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, உயர்கல்வி படிக்க இடம் கிடைத்துள்ள ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி உதவிக்கரம் நீட்டுகின்றன அரசு அமைப்புகள். தேவையும் தகுதியும் உள்ள மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கல்வி உதவித் தொகை பெறலாம். இந்த உதவித் தொகைகள் பற்றிய தகவல்கள் இதோ...


முதல் தலைமுறை பட்டப் படிப்பு மாணவர்களுக்கு உதவித் தொகை

அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகளில் ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கை மூலம் அட்மிஷன் பெறும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தமிழக அரசே வழங்கி வருகிறது. இதுவரை பட்டதாரிகளே இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தொழில் கல்வி படிப்பதை ஊக்குவிக்கும் வகையில் சாதி வேறுபாடின்றி, பெற்றோரின் வருமானத்தைக் கணக்கில் கொள்ளாமலும் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒற்றைச்சாளர முறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தக் கல்விக் கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தையும் பல்கலைக்கழகங்கள் நடத்தும் படிப்புகளுக்கு பல்கலைக்கழகங்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் தனியார் தொழிற் கல்லூரிகளில் கட்டண நிர்ணயம் செய்வதற்காக நிபுணர் குழு நிர்ணயித்துள்ள கட்டணத்தையும் அரசு வழங்கும். இச்சலுகை பெற தங்களது குடும்பத்தில் பட்டதாரிகளே இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில் மாணவர் வசிக்கும் பகுதியின் வருவாய்த் துறையின் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகுதிக்குக் குறையாத அலுவலரிடம் சான்றிதழ் பெற்று அளிக்க வேண்டும். மாணவர்கள் தொழிற்கல்வி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போதே, குடும்பத்தில் முதன் முதலாக பட்டப் படிப்பு படிக்கும் மாணவர் என்ற சான்றிதழையும் அதற்கான உறுதிமொழிப் பத்திரத்தையும் அளிக்க வேண்டும்.


ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை...

கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகிறது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம். இந்த மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். கல்வி நிலையத்துடன் இணைந்த விடுதிகளில் தங்கி பட்ட மேற்படிப்பு, மருத்துவம், பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு உயர் கல்வித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித்தொகையைப் பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் மூலமாக அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சென்னையிலுள்ள ஆதிதிராவிடர் நல ஆணைய அலுவலத்தை அணுகலாம்.


தொலைபேசி எண்: 044-28594780


சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ, ஐடிஐ, பாலிடெக்னிக்,. நர்சிங் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ, இளநிலைப் பட்டப் படிப்பு, முதுநிலைப் பட்டப் படிப்பு, எம்பில், பிஎச்டி படிக்கும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு (முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிக்கள்) மத்திய அரசின் சிறுபான்மையின அமைச்சகம் போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் படித்த படிப்பின் இறுதித் தேர்வில் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். ஏற்கெனவே பெற்று வரும் கல்வி உதவித் தொகையை தொடர்ந்து பெறுவதற்கு தேர்வில் எந்தப் பாடத்திலும் தேர்ச்சி பெறாமல் (அரியர்ஸ் கூடாது) இருக்கக் கூடாது. அத்துடன், 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம். ஒரு குடும்பத்தில் இரண்டு பேருக்கு மேல் இந்த உதவித் தொகை வழங்கப்படமாட்டாது. பள்ளி, கல்லூரிக்கு முறையாகத் தொடர்ந்து செல்ல வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெறும் மாணவர்கள், வேறு திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற முடியாது.


இந்த உதவித் தொகை கோரி பள்ளிகளில் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 31-7-2012


விவரங்களுக்கு: www.tn.gov.in/bcmw/welfschemes_minorities.htm


இந்த உதவித் தொகை கோரி கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30-09-2012


விவரங்களுக்கு: www.momascholarship.gov.in


சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நன்கு படிக்கக் கூடிய ஏழை மாணவர்களுக்கு மத்திய சிறுபான்மை அமைச்சகம் தனியே சிறப்புக் கல்வி உதவித் தொகையை (Merit cum means based scholarship) வழங்குகிறது.


அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளிலும் இளநிலை, முதுநிலை தொழில் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொழில் அல்லது தொழில் நுட்பப் படிப்புகளில் போட்டித் தேர்வு மூலம் தேர்வு பெற்றவர்கள் மட்டுமே புதிதாக இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியும். போட்டித் தேர்வுகள் மூலம் இல்லாமல் நேரடியாக அட்மிஷன் பெற்றவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால், அந்த மாணவர்கள் பிளஸ் டூ மற்றும் பட்டப் படிப்பில் 50 சதவீதத்துக்குக் குறையாத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்குத் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் வேறு எந்த கல்வி உதவித் தொகையும் பெறக்கூடாது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு மாணவர்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும். படிப்புக் கட்டணமாக அதிகபட்சம் ரூ.20 ஆயிரம் வரை வழங்கப்படும். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டில் பத்து மாதங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க கடைசி தேதி 30-09-2012


உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பத்தின் அச்சு நகலை நிறுவனத்தில் சமர்பிப்பதற்குக் கடைசி தேதி: 5-10-2012


மேலும் விவரங்களுக்கு: www.minorityaffairs.gov.in



மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை

மாற்றுத் திறனாளி மாணவர்கள் படிப்பதற்கு மத்திய சமூக நீதி அமைச்சகம் கல்வி உதவித் தொகையை வழங்குகிறது. தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் மேம்பாட்டு கார்ப்பரேஷன் மூலம் இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தொழில் படிப்புகளைப் படிக்கும் பட்ட மற்றும் முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு டிரஸ்ட் ஃபண்ட் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் உள்ள கல்விக் கட்டணம் மாணவர்களுக்கு வழங்கப்படும். அத்துடன் இளநிலை தொழில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பாரமரிப்புச் செலவுக்காக மாதம் ரூ.2,500 வீதம் 10 மாதங்களுக்கு பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படும். அத்துடன் புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷ்னரி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். முதுநிலை தொழில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களின் பராமரிப்புச் செலவுக்காக ரூ.3 ஆயிரம் வீதமும் வழங்கப்படும். அத்துடன், அந்த மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷ்னரி செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.


பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதவர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும் நிதியுதவி செய்யப்படும். இந்தக் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளி மாணவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3 லட்சத்திற்கு மேற்படக்கூடாது என்பது விதி. இந்தக் கல்வி உதவித்தொகை கோரி, கல்வியாண்டில் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.


விவரங்களுக்கு: www.nhfdc.nci.in



அறிவியல் படிப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை

பிளஸ் டூ வகுப்பில் படித்த திறமையான மாணவர்களை அறிவியல் படிப்புகளின் பக்கம் ஈர்க்கும் வகையில் மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறை இன்ஸ்பயர் (Innovation in Science Pursuit for Inspired Research - INSPIRE)  என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இயற்கை மற்றும் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், எர்த் சயின்சஸ் போன்ற அடிப்படை அறிவியல் பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி., பி.எஸ்சி., ஆனர்ஸ், ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., எம்.எஸ். படிப்புகளைப் படிக்கும் மாணவர்களுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், அக்ரிக்கல்ச்சுரல் சயின்சஸ், எலெக்ட்ரானிக் சயின்சஸ், மெடிக்கல் அண்ட் பயோ மெடிக்கல் சயின்சஸ் பாடப்பிரிவு மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.


இந்த உதவித் தொகை பெறத் தேர்வு செய்யப்படும் அறிவியல் பட்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் உதவித் தொகை வழங்கப்படும். இந்தக் கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்கள் கோடை காலத்தில் ஆய்வு மையங்களில் திட்டங்களை மேற்கொண்டால் அந்தக் காலத்திற்குத் தனியே ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை இந்த உதவித் தொகை வழங்கப்படும். அதேசமயம், மாணவர்களின் கல்விச் செயல்பாடுகள் தொடர்ந்து கவனத்தில் கொள்ளப்படும். அதன் அடிப்படையிலேயே இந்த உதவித் தொகை தொடர்ந்து கிடைக்கும்.


மத்திய அல்லது மாநில 12ம் வகுப்புக்கான போர்டு தேர்வுகளில் முதல் ஒரு சதவீத இடங்களுக்குள் வரும் மாணவர்கள் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இதேபோல, ஐஐடி நுழைவுத் தேர்வு, ஏஐஇஇஇ., அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் முதல் பத்தாயிரம் இடங்களுக்குள் வந்து தற்போது அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். நேஷனல் டேலன்ட் எக்ஸாம், கேவிபிஒய்., ஜகதீஷ் போஸ் நேஷனல் சயின்ஸ் டேலன்ட் சர்ச் ஸ்காலர்ஸ், சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் வென்றவர்களும் ஐஐஎஸ்இஆர்., என்ஐஎஸ்இஆர்., அணுசக்தித் துறை ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த எம்.எஸ்., படிக்கும் மாணவர்களும் இந்த உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 17 வயதிலிருந்து 22 வயதுக்குள் இருக்க வேண்டும்.


இன்ஸ்பயர் ஸ்காலர்ஷிப்புக்காக அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இணையதளத்தில் விண்ணப்ப மாதிரியை டவுன்லோடு செய்துகொள்ளலாம். உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களைத் தபால் மூலம் அனுப்பலாம் அல்லது ஆன்லைன் மூலமும் அனுப்பலாம். அறிவியல் படிப்புகளைப் படிக்கும் தகுதியுடைய மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளளாம்.


விவரங்களுக்கு: www.inspire-dst.gov.in



புத்தக வங்கிகள்

கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கி வரும் புத்தக வங்கிகள் விவரம்:


ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் புக் பேங்க்
4, அட்கின்ஷன் சாலை, வேப்பேரி, சென்னை - 600 007
தொலைபேசி எண்கள்: 044-25610369, 25610978

ராமகிருஷ்ண மடம் புத்தக வங்கி
மயிலாப்பூர், சென்னை - 600 004
தொலைபேசி எண்: 044-24621110

ஜெய்கோபால் கரோடியா புத்தக வங்கி
6,7வது தெரு யு பிளாக், அண்ணா நகர், சென்னை - 600 040
தொலைபேசி எண்: 044-26206261

Chettinadu Fish Curry: செட்டி நாட்டு மீன் குழம்பு

1 comments
செட்டி நாட்டு மீன் குழம்பு தேவையான பொருட்கள்:

மீன்-1/2 கிலோ
வெங்காயம்-200 கிராம்
தக்காளி-200 கிராம்
பூண்டு (உரித்தது)-ஒரு கைப்பிடியளவு
மஞ்சள் தூள்-1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள்-2 டீஸ்பூன்
தனியாத்தூள்-2 டீஸ்பூன்
புளி-எலுமிச்சம்பழஅளவு
உப்பு, எண்ணெய்-தேவைக்கேற்ப

செட்டி நாட்டு மீன் குழம்பு தாளிக்க: 

கடுகு , கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய்

செட்டி நாட்டு மீன் குழம்பு அரைக்க: 

தேங்காய்த்துருவல்-1/2 மூடி

செட்டி நாட்டு மீன் குழம்பு செய்முறை:

மீனை சுத்தம் செய்து கொள்ளவும். புளியை கரைத்து அதிலேயே மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு போட்டு கலக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து, காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். அரைத்த தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும். குழம்பு கொதிக்கும்போது மீனைப் போட்டு இறக்கவும். இப்போது மணக்கும் செட்டிநாட்டு மீன் குழம்பு ரெடி. இந்த செட்டி நாட்டு மீன்குழம்பு இன்றளவும் மவுசு அதிகம்.

பெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா’!

0 comments
அது என்ன ஹெர்னியா? குடலிறக்கம் தான் அவ்வாறு அழைக்கப்படுகிறது. ஆண்களைவிட பெண்களே இதனால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.

பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து, வலுவிழந்து காணப்படும். அவ்வாறு வலுவிழந்து காணப்படும் பகுதி வழியே, சிறுகுடல் பிதுக்கிக் கொண்டு அல்லது துருத்திக் கொண்டு இறங்கி விடும். இதுவே ஹெர்னியா அல்லது குடலிறக்கம் என்று அழைக்கப்படுகிறது.

பெண்களுக்கு, வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்யப்படும் போது குடலிறக்கம் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, `சிசேரியன்' எனப்படும் மகப்பேறு கால அறுவைச் சிகிச்சை மற்றும் கர்ப்பப்பை நீக்கும் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

அடுத்ததாக, பெண்களுக்கு வயது ஏற ஏற, எடை கூடுவது இயற்கையான ஒன்று. இப்படி எடை கூடுவது அவர்களது வயிற்றுப் பகுதியை பலவீனமாக்குகிறது. ஒரு பெண் கருவுற்றிருக்கும் காலத்தில், மாதம் ஆகஆக அவளது வயிறு விரிவடைகிறது. இதுவும் வயிற்றுப் பகுதியை பலவீனமாக்கி வலுவிழக்கச் செய்கிறது.

இப்படித்தான் பெண்களுக்கு பெரும்பாலும் குடலிறக்கப் பாதிப்பு ஏற்படுகிறது.

ஆண்களுக்கு வருமா?

இதேபோல், ஆண்களுக்கும் சில காரணங்களால் குடலிறக்கம் ஏற்படலாம். அவர்களது இடுப்புக்கு கீழ், சிறுநீர் வெளியேறும் பகுதியை அடுத்து, விரைக்காய்கள் இருக்கும். அவை வயிற்றின் உட்பகுதியில் தொடங்கி, வெளியே நீண்டு தொங்குகின்றன. அந்த பகுதி வலுவிழக்க நேரிடும்போது அவர்களுக்கு அந்த பாதையில் குடல் இறங்கலாம். இதுதவிர, தொப்புள் பகுதியும் வலுவிழக்கும் வாய்ப்புகள் இருப்பதால் அவற்றின் வழியாகவும் குடலிறக்கம் ஏற்படலாம்.

மேலும், ஆண்கள் முதுமையடையும் காலத்தில், `புரோஸ்டேட்' சுரப்பிகள் வீங்கிப் பெரிதாகும். சிறுநீர் கழிப்பதில் அது சிரமத்தை ஏற்படுத்த... நாளடைவில் அந்த சிரமமே அவருக்கு குடலிறக்கம் ஏற்பட வழிவகுத்து விடுகிறது.

இந்த காரணங்கள் தவிர, ஆண், பெண்களுக்கு குடலிறக்கம் ஏற்பட சில பொதுவான காரணங்களும் உள்ளன.

இயற்கை கடன்களைக் கழிக்கும்போது, ஒருவர் எந்த வகையில் சிரமப்பட்டாலும் அதன் காரணமாகவும் ஒருவருக்கு குடலிறக்கம் ஏற்படும்.

ஒருவர் அளவுக்கு அதிகமாக தொடர்ந்து இருமினாலும் கூட குடலிறக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இருமல் ஏற்படும்போது, வயிற்றுக்குள் ஏற்படும் அழுத்தத்தின் அளவு அதிகரிப்பதுதான் அதற்கு காரணம்.

தடுப்பு முறைகள்

பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்படும்போது இறங்கிய குடலைத் தூக்கிப் பிடித்துத் தாங்கிக் கொள்வதற்காக சிறிய துவாரங்கள் உடைய வலை போன்ற பொருளை பயன்படுத்துகிறார்கள். இந்த வலை திசுக்களின் மீது நிலையாகப் பொருந்தி அந்த பகுதிக்கு வலுவூட்டுகிறது.

இயற்கைக் கடன்களை கழிக்கும்போது தேவையில்லாமல் சிரமப்படுவதை (முக்குவது) தவிர்த்தாலும் குடலிறக்கம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

Re: [New post] டீன் ஏஜில் அழகை பாதுகாப்பது எப்படி?

0 comments
டீன் ஏஜ் பெண்கள், உணவில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. பழம், சாலட், ஏடு நீக்கிய பால் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

சாக்லேட், கேக், பொரித்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்க்கக் கூடாது.  சருமம் பளபளப்பாக இருக்க, கிரீம் பயன்படுத்த தேவையில்லை. குளிர்ந்த நீரும், சோப்பும் போதும்.

முகப்பருவை ஒரு போதும் உடைத்து விடக் கூடாது. அப்படி உடைத்தால், அது கரும்புள்ளியாக மாறி, அழகை கெடுக்கும். 

கஸ்தூரி மஞ்சளையும், சந்தனத்தையும் அரைத்து, முகத்தில் பூசினால் முகப்பரு நீங்கும். 

வறண்ட சருமத்தை கொண்ட பெண்கள், வாரத்திற்கு ஒரு முறை ஆலிவ் எண்ணெயை முகத்தில் தேய்த்து, இளம் சுடு நீரில் சோப்பு உபயோகித்து கழுவலாம்.

டீன் ஏஜ் பெண்கள், பேபி சோப் அல்லது கிளிசரின் சோப் பயன்படுத்துவது நல்லது. டூ டீன்-ஏஜ் பெண்கள், பற்களை பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சீரற்ற பற்களின் வரிசையை சரி செய்யவும், உயர்ந்து நிற்கும் பற்களை சமன்படுத்தவும் பல் மருத்துவரை அணுகவும்.
டூ அளவுக்கு அதிகமாக மேக் - அப் போட்டுக் கொள்ளக் கூடாது.

அழகாக இருக்க வேண்டுமானால், உடற்பயிற்சியோ, நடை பயிற்சியோ அவசியம் செய்ய வேண்டும்.

Breast Feeding and Importance to Mom's: தாய்ப்பால் தாய்க்குப் புதிய நன்மை

0 comments
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் நன்மை நேர்கிறது என்று ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில், புதிய நன்மையாக, குறைந்தபட்சம் ஆறு மாதம் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் களுக்கு தங்கள் வாழ்நாளின் பின்னாளில் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புக் குறைவு என்கிறது ஒரு புதிய ஆய்வு.

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் கூறும்போது, மூன்று மாத காலத்துக்கும் குறைவாகத் தங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் களுக்கு ரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்படுவதற் கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

இந்த ஆய்வுக்காக, ஒரு குழந்தையாவது உள்ள 56 ஆயிரம் இளந்தாய்மார்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அதன் முடிவில், தங்கள் குழந்தைக்குப் பாட்டில் பால் கொடுக்கும் தாய்மார்களை விட, ஆறுமாத காலத்துக்காவது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அடுத்த 14 ஆண்டு காலத்துக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று கண்டறியப்பட்டது.

அமெரிக்க நோய்ப் பரவல் மற்றும் கட்டுப்பாடு இதழில் பிரசுரிக்கப்பட்ட இந்தக் கட்டுரையில், உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்களில் 12 சதவீதம் பேர், தங்கள் குழந்தைக்குப் போதுமான அளவு தாய்ப்பால் கொடுக்காதவர்கள் என்று தெரியவந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்குப் பின்னணியில் இருப்பது, தாய்ப்பால் கொடுப்பதே என்று இந்த ஆய்வில் எடுத்துக்காட்டப்படவில்லை என்றபோதும், தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும், சேய்க்கும் நன்மை சேர்க்கும் என்பதை சான்றுடன் நிரூபித்திருக்கிறது.

When Filling up the Insurance Paper: காப்பீட்டுப் படிவத்தை நிரப்பும்போது

0 comments
இன்று காப்பீடு குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. ஒவ்வொருவரும் காப்பீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக் கிறார்கள். அதனால், ஒவ்வொரு வீட்டிலும், ஆயுள் காப்பீடு, வாகனக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு என்று பல்வேறு காப்பீடுகளை எடுத்திருக்கிறார்கள்.

அதெல்லாம் சரி, காப்பீட்டுப் படிவத்தை நிரப்புவதில் நாம் போதுமான அக் கறை எடுத்துக்கொள்கிறோமா? இனிமேல் காப்பீட்டுப் படிவங்களை நிரப்பும்போது இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்...

1. படிவத்தை நீங்களே நேரடியாக நிரப்புங்கள். ஒரு குறிப்பிட்ட காலியிடத்துக்கான பதிலை எப்படி நிரப்புவது என்று தெரியாவிட்டால் ஏஜெண்டின் உதவியை நாடுவதில் தவறில்லை. ஆனால் படிவம் உங்களாலேயே முழுமையாக நிரப்பப்பட வேண்டும். வேறு வழியே இல்லாமல் ஏஜெண்டை படிவத்தை நிரப்பச் சொன்னாலும், கையெழுத்து இடுவதற்கு முன் ஒருமுறை முழுமையாக, நிதானமாகப் படித்துவிடுங்கள். படிவத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா? என்று கவனிப்பது மிக அவசியம். எந்த தவறான தகவலும் பின்னாளில் உங்களுக்கு தொல்லை தருவதாக அமைந்துவிடும்.

2. நிரப்பப்படாத படிவத்தில் கையெழுத்திட்டு, ஏஜெண்ட் பூர்த்தி செய்துகொள்வார் என்று விடவே விடாதீர்கள்.

3. தேவையான எல்லா தகவல்களும் அளிக்கப்பட்டிருக்கின்றனவா என்று பார்த்துக்கொள்ளுங்கள். எந்த உண்மையையும் மறைக்க முயலாதீர்கள். அது தேவையற்ற ஒன்றாக உங்களுக்குத் தோன்றினாலும்.

4. சில நேரங்களில், `பிரீமியம்' தொகையைக் குறைக்கச் சில உண்மைகளை `அடக்கி வாசிக்கும்படி' சில ஏஜெண்டுகள் சொல்லக்கூடும். அப்படிச் செய்யாதீர்கள். ஏஜெண்டுக்கு பாலிசிக்கு உரிய கமிஷன் கிடைத்துவிடும். இழப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது கஷ்டப்படப் போவது நீங்கள்தான். மருத்துவக் காப்பீட்டுப் படிவங்களுக்கு இது மிகவும் பொருந்தும்.

5. சில இடங்களில் கேட்டிருக்கும் தகவல் தேவையற்றதாக, பொருந்தாததாக இருந்தால், அங்கு கோடிட்ட இடத்தை வெற்றிடமாக விடாமல் குறுக்குக் கோடிடுங்கள் அல்லது `பொருந்தாது' என்று குறிப்பிடுங்கள்.

6. பாலிசியை பெற்ற பின்னரும், நீங்கள் கொடுத்திருக்கும் விண்ணப்பத்தில் ஏதேனும் ஒரு தகவல் தவறு என்று உணர்ந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்குத் தெரிவித்துவிடுங்கள்.

புதிதாக ஒரு காப்பீட்டைப் பெற முயலும்போதெல்லாம் இந்த விஷயங்களை எல்லாம் மறக்காமல் இருப்பதும், இவற்றைச் சரியாகப் பின்பற்றி இருக்கிறோமா என்று பார்ப்பதும் ரொம்பவே முக்கியம். அந்த முன்னெச்சரிக்கைச் செயல்பாடு, இழப்பீடு பெற முயலும்போது உங்களின் அவதிகளையும், மன உளைச்சலையும் வெகுவாகக் குறைக்கும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின்னர் அதன் நகல் ஒன்றை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது நல்லது.

Amla can Cure Heart Disease: இதய நோய் தீர்க்கும் நெல்லிக்கனி

0 comments
சிறியதாக இருந்தாலும் இதயத்துக்கு நன்மை பயக்கக்கூடியது நெல்லிக்கனி. அதியமான் இதை உணர்ந்தே நீண்டநாள் வாழத் தனக்கு அற்புதமான நெல்லிக்கனி கிடைத்தும், பெருந்தன்மையோடு அதை அவ்வைப் பிராட்டிக்கு அளித்து அவரை உண்ணச் செய்தான். இதயத்துக்கு இனிய அமுதமாக விளங்கும் நெல்லிக்கனியைப் பற்றி பல உண்மைகள் மறைந்துள்ளன.

நெல்லிக்கனியை இந்தியில் `ஆம்லா' என்கிறார்கள். இதன் தாவரவியல் பெயர் `எம்பிலிகா அபிசினாலிஸ்'.

முதிர்ந்த நெல்லிக்கனி பச்சை, மஞ்சள் கலந்த நிறத்தில் பளபளப்போடு ஆறு அழகிய துண்டுகள் அடங்கிய உருண்டைக் கனியாகக் காட்சியளிக்கும். சற்றுத் துவர்ப்பாக இருந்தாலும் இதன் சதைப்பற்றைச் சுவைத்துச் சாப்பிட்டதும் ஒரு குவளை தண்ணீர் அருந்தினால் இதன் இன்சுவையை உணரலாம்.

இதயக் கோளாறு உள்ளவர்கள் அலோபதி இதயநோய் நிபுணர்கள் கூறும் அறிவுரைகளைக் கவனிக்க வேண்டும். நெல்லிக்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் கூறும் உண்மைகள் நமக்கு வியப்பை அளிக்கும்.

நெல்லிக்கனிச் சாற்றில் `வைட்டமின் சி' சத்து அதிகம். அதாவது, ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட 20 மடங்கு. ஒரு சிறு நெல்லிக்கனியை உண்பது இரண்டு ஆரஞ்சுப் பழங்களைச் சாப்பிடுவதற்குச் சமம். தொற்றுநோய் தடுப்புச் சக்தியைப் பெற நெல்லிக்கனிச் சாற்றைப் பருகலாம். கொழுப்புப் பொருளைக் கரைக்கும் தனித்தன்மையும் இதற்கு உண்டு என்று தெரிவிக்கப்படுகிறது. ரத்தம் சீராகப் பாய்வதைத் தடுக்கும் கொழுப்புப் பொருளை நெல்லிக்கனிச் சாறு கரைத்துவிடுவதால் இதயத்துக்குப் பலம் சேர்ப்பதாக இது அமைகிறது.

ரத்த சோகையைக் குணப்படுத்தும் அருங்கனியான நெல்லி, ஆறாத ரணத்தை ஆற்றுவதுடன், எலும்பு முறிவைச் சீராக்கி, குடல் ரணத்தையும் குணப்படுத்தும்.

தாய்ப்பால் சுரக்க நெல்லிக்கனி வகை செய்கிறது. அதன் அமிலச்சத்து மலச்சிக்கலை நீக்கும். `ஹெமரேஜ்' என்ற ரத்தப் போக்குக்கும், அஜீரணத்தால் ஏற்படும் வயிற்றுப் போக்குக்கும் ஏற்ற கனி இது.

ரத்த சோகை, மஞ்சள் காமாலை, உணவில் வெறுப்பு நிலை, தீராத இருமல் ஆகியவற்றுக்கு நெல்லிக்கனி விடை கொடுக்கும்.

திரிபலா சூரணத்துக்கு நெல்லிக்கனியை அவசியம் உபயோகிக்க வேண்டும். கல்லீரலைப் பலப்படுத்திச் சரிவர இயங்கச் செய்யும் சக்தி பெற்றது நெல்லி.

ஆசியாவில் அதிகம் விளையும் நெல்லிக்கனியின் மகத்துவத்தை மேலை நாட்டினரும் உணர்ந்து மருத்துவத் துறையில் பயன்படுத்துகிறார்கள்.

இளநரையைக் குணப்படுத்தும் அற்புத சக்தி நெல்லிக்கனிக்கு இருக்கிறது. கூந்தல் தைலம், ஷாம்பூ ஆகியவற்றைத் தயாரிப்பதற்கும் இது பயன்படுகிறது. அச்சுத் துறைக்கான மை வகைகள் தயாரிக்கவும், `ஹேர் டை' தயாரிக்கவும் நெல்லி ஏற்றது.

மருத்துவர்கள் ஆஸ்துமா நோயைக் குணப்படுத்த இதன் விதைகளைப் பொடி செய்து உண்ணச் சொல்கிறார்கள்.

நெல்லியின் கனியும், கொட்டையும் பயன்படுவதோடு, பட்டையையும், இலையையும் தோலைப் பதனிடும் தொழிற்சாலைகளும் அதிகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

நெல்லிக்கனியை இந்து மதத்தினர் மிகவும் போற்றுகிறார்கள். நெல்லி மரத்தை வழிபடுவதும் உண்டு. அக்சய நவமி அன்று வன போஜனம் செய்பவர்கள் நெல்லி மரத்தின் அடியில் அமர்ந்து கூட்டமாக உணவு உண்பதைப் புனிதமாகக் கருதுகிறார்கள். இதற்கும் மேலாக, முதல்நாள் உண்ணா நோன்பு இருந்தவர்கள், மறுநாள் விரதம் முடித்து உணவு உண்ணத் தொடங்கும்போது முதலாவதாக நெல்லிக்கனியையோ அல்லது உலர்ந்த நெல்லிக்கனியையோ அரைத்து மோரில் சேர்த்துப் பருகிய பின்பே சாப்பிடத் தொடங்குகிறார்கள். நெல்லிக்கனி உடல் ஆரோக்கியம் தரும் ஊறுகாயாகவும், உலர்த்தி வைத்தும் பயன்படுத்த ஏற்றது.
Subscribe
emailSubscribe to our mailing list to get the updates to your email inbox...
Delivered by FeedBurner| Powered by Blogger Widgets
- See more at: http://www.helperblogger.com/2012/05/pop-up-email-subscription-form-with.html#sthash.jaYu4jul.dpuf